Tuesday, April 05, 2011

TamilNadu Election - Short film


தமிழ்நாடு தேர்தல் பற்றி டாக்குமென்ட்ரி ஸ்டைலில் என்னுடைய குறும்படம். இந்த குறும்படம் எந்தக் கட்சியையும் சாராமல், பொதுமக்களின் "சோத்துக் கட்சி"யை சார்ந்தே எடுக்கப்பட்டுள்ளது.

ஃபிலிம் ஸ்கூலுக்குப் பிறகு நான் தமிழில் எடுத்திருக்கும் முதல் குறும்படம் உங்கள் பார்வைக்கு. இந்த படத்தில் என்னுடன் உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

குறும்படம் குறித்த உங்கள் கருத்துகளை அறிய வழக்கம் போல் மிக ஆர்வமாய் காத்திருக்கிறேன்.

(இங்கு சில காலம் சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுத்ததிற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இனிமேல் அடிக்கடி வருவேன் :) )

இந்த குறும்படத்தை (யூ-ட்யூப் லிங்குடன்) உங்கள் தளத்திலோ பதிவிலோ பேஸ்புக்கிலோ (வீடியோவில் மாற்றம் செய்யாமல்) இணைக்க விரும்புவர்கள் தாராளமாக இணைத்துக் கொள்ளலாம். (மார்க்கெட்டிங்கிற்கு உதவியாயும் இருக்கும் :) ).


58 comments:

Philosophy Prabhakaran said...

என்னுடைய கணினி கோளாறா உங்கள் காணொளி கோளாறா என்று தெரியவில்லை... 2:40 க்கு அப்புறம் பார்க்க முடியவில்லை... பார்த்தவரைக்கும் பிரமாதமாக இருந்தது... ஆங்காங்கே நகைச்சுவை இழையோடி ரசிக்க வைத்தது... க்ளைமாக்சில் ஒரு நல்ல கருத்தை வலியுறுத்தியிருப்பீர்கள் என்று புரிகிறது... அது என்னவென்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்...

Chitra said...

Simply Superb! I am sharing this video in my Facebook page. :-)

எல் கே said...

தல ரொம்ப அருமையா இருந்தது,. இதை நான் குழுமங்களுக்கு அனுப்புகிறேன்

Akhila said...

I cud see it at last.. romba nalla video... was refreshing it for the past 1 hr repeatedly to get it buffered fully. Amazing conceptualisation, great dialogues, crisp editing.. back ground score dhan konjam jarring for me, at places.. kojam konjam aaa build up aayirukalamo momentum nnu thonithu... mathapadi suuuuperroo super!sending group emails to all I know :)

Ippadikku, Silent reader of this blog,
Akhila

Prabu M said...

ரொம்ப அழகான Initiative...
மேக்கிங் ரொம்ப‌ க‌வ‌ர்ந்த‌து....
ந‌டிச்ச‌வ‌ங்க‌ ந‌டிக்க‌வேயில்ல‌ :-))) அத்த‌னை ய‌தார்த்த‌ம்...
ஜ‌ஸ்ட் சில‌ க‌ருத்துசொல்லுற‌ மாதிரியே விருவிருப்பா நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ளை அல‌சியிருக்கீங்க‌....
ட‌ய‌லாக்ஸ் ய‌தார்த்த‌மா ந‌ம் ம‌க்க‌ள் பேசுகிற‌ ஸ்டைலிலேயே ரொம்ப‌ ருசிக‌ர‌மா ப‌ண்ணியிருக்கீங்க‌....
கான்செப்ட் டைம்லி ம‌ட்டுமில்ல‌ ரொம்ப‌ ந‌ல்ல‌விஷ‌ய‌மும்கூட‌....
நான் எப்ப‌டியும் வோட்டு போட்டுட‌ணும்னு சொல்லுற‌ அன்ட் செய்யுற‌ டைப்தான்... ப‌ட் என‌க்கு வோட்டே இல்ல‌ க‌ட‌ந்த‌ ரெண்டு எல‌க்ஷ‌னா!!! இந்த‌ எல‌க்ஷ‌ன்ல‌ கொஞ்ச‌மும் ஆர்வ‌மில்லை கார‌ண‌ம் வேட்பும‌னு தாக்க‌ல் முடிஞ்சுபோச்சு ந‌ம்பிக்கைய‌ளிக்கிற‌மாதிரி ஒரு ம‌னுகூட‌ தாக்க‌ல் செய்ய‌ப்ப‌டவில்லை.... மாற்ற‌த்தை ம‌க்க‌ள் வெளிப்ப‌டையா விரும்பி நின்றாலும் மாற்றாக‌ யாரும் வ‌ர‌வில்லை...... வ‌ந்தாலும் பிர‌பல‌மான‌ ஒரு ந‌ல்ல‌ ம‌னித‌ர்தான் வ‌ந்தாக‌ணும்... ஆனா ந‌ம்ம‌ ஊர்ல‌ பிர‌ப‌ல‌ம்னா அது சினிமாதான்..... மற்ற துறைகளிலும் ஜொலிச்ச‌ சில‌ ந‌ல்ல‌ ம‌னுஷ‌ங்க‌ வ‌ர‌லாம்தான் ஆனா ம‌க்க‌ளுடைய‌ வோட்டு விழாதுன்னு ப‌ர‌வ‌லா ஒரு க‌ருத்து இருக்கு... சும்மா "நாங்க‌ ந‌ல்ல‌வ‌ங்க‌"ன்னு சொல்லிக்கிட்டு சுயேச்சையா ட்ராஃபிக் ராம‌சாமி மாதிரி ரெண்டுபேர் நின்னு 110 வோட்டு வாங்குற‌தஎல்லாம் சொல்ல‌ல‌.... எந்த‌த் துறையானாலும் ப‌ர‌வாயில்ல‌ த‌ன்னுடைய‌ துறையில் த‌ன்னுடைய‌ ஆளுமையை நிரூபித்துவிட்டு ம‌க்க‌ள் சிந்த‌னையுள்ள‌ வெற்றியாள‌ர்க‌ள் ஓர் இம்பாக்டோட‌ வ‌ந்து நின்று ம‌க்களோட‌ ஆத‌ர‌வுகோரி அதையும் ம‌க்க‌ள் ஏற்றுக்கொள்ள‌வில்லை வாக்க‌ளிக்க‌வில்லையென்று சொன்னால்.... "இந்த‌ நாடும் நாட்டும‌க்க‌ளும் நாச‌மாய்ப் போக‌ட்டும்!!"னு பி.எஸ் வீர‌ப்பா ஸ்டைல்ல‌ சிரிச்சிட்டுப்போக‌வேண்டிய‌துதான் ம‌னசுக்குள்ள‌ அழுதுட்டு...

அருமையான‌ முய‌ற்சி... உங்க‌ள் அறிமுக‌ம் கிடைத்த‌தில் ம‌கிழ்ச்சி...லிங்க் கொடுத்து இங்கு அனுப்பிவைத்த‌ சித்ரா அக்காவுக்கு ந‌ன்றி! :-)

Ananth Kaliannan said...

Good one.

Ananth,
Chicago

Akhila said...

Excellent! Sharing it on my FB.

I am a long time reader. Found you through Usha of 'Agelessbonding'. Love your style of writing. Have read all your posts, some of them multiple times:) Wish you would write often.

Thamira said...

டெக்னிகலா ரொம்ப நல்லா இருந்தது. ஒலி, ஒளிப்பதிவு, எடிடிங் மிகச்சிறப்பாக இருந்தது.

கருத்தில்தான்..

ஓட்டுப்போடுங்கள் என்று வலியுறுத்துகையில் அதனால் ஏற்படும் நன்மைகளை அல்லவா சின்னச்சின்னதாக இருந்தாலும் கூட எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும். தவிர்த்து லஞ்சம், ஊழல், மோசமான அரசியல் நடவடிக்கைகளை வசனமாகச் சொல்லிவிட்டு ‘நீங்களும் ஓட்டுப்போட தவறாதீர்கள்’ எனச் சொல்வது எந்த விதத்தில் சரியாகும்.? 49ஓ போடுங்கள் போன்ற மொக்கை கான்செப்டுக்கு ஆதரவு தெரிவித்திருப்பீர்கள் என்றால் ஒருவேளை இந்த கிளிப்பிங்ஸ் பொருத்தமாக இருந்திருக்கலாம். ஸாரி நண்பரே.. இது என் கருத்து மட்டுமே.!

ராம்ஜி_யாஹூ said...

மாலையில் முழு காணொளி ஒலியுடன் காண்கிறேன்
முயற்சிக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.
அப்புறம் உங்க ஊர்ல ஆவுடையப்பன் அண்ணாச்சி கரை சேருவாரா

CS. Mohan Kumar said...

நன்றாக இருந்தது. திரையில் வரும் வார்த்தைகளில் "வோட்டளிக்க" என்பதை வாக்களிக்க என மாற்றலாம். ஒரு வேளை அது அரசியல் வாதி பேச்சு போல இருக்கும் என நினைத்தீர்களோ?

தக்குடு said...

டுபுக்கு சார், உங்களுக்கு எதுக்கு சார் மார்கெட்டிங் எல்லாம்? வெட்டின பலாபழத்துக்கு ஈ பிடிச்சு விடனுமா என்ன??? என்னோட மூஞ்சி புஸ்தகத்துல இதை share பண்ணியிருக்கேன் சரியா!!!...:)

@ கழக கண்மணிகள் - தலைவர்(பாஸ்டன் நாட்டாமை),கொடியக்கா,அனன்யாக்கா,சுபாமேடம், அப்பாவியோட தங்கமணி எல்லாரும் எங்கடே போனீங்க?

ராம்ஜி_யாஹூ said...

படம் தொழில் நுட்ப ரீதியாக மிக அருமை.
ஆனால் நடித்திருக்கும் எல்லாரும் அமெரிக்காவில் பணி புரிந்து கொண்டு அயனாவரம் அரசியல் வாதி சரி இல்லை என்று சொல்வது செயற்கையாக இருக்கிறது.
அதுவும் கருத்துச் சொல்பவர்கள் எல்லாரும் மடிக்கணினி, பெரிய திரை தொலைக்காட்சிப் பெட்டி, விலை உயர்ந்த சமயல் அறையில் சௌகர்யமாக இருந்து கொண்டு தமிழ்நாட்டு குடிசை, மின்சார ரயில்ப் பயண சம்பள வர்க்கத்தினரை குறை கூறுவது மிகவும் அன்னியமாகப் படுகிறது.


சுருங்கச் சொல்லின் செக்கச் செவேல் கமல ஹாசனை பாசவலை என்ற படத்தில் கிராமத்து மீனவனாகக் காட்டி இருக்கும் அன்னியம் இருக்கிறது

இருந்த பொழுதும் முயற்சிக்கு, எண்ணங்களுக்கு படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Director Sir, Saw this in FB... simply superb...:) Looking forward to see more of this kind in future...
(Mega Serial edhunaa direct panra plan irundhaa naangellam irukkom enbadhai...sari vidunga boss...you know it.....:))))))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//தக்குடு said... டுபுக்கு சார், உங்களுக்கு எதுக்கு சார் மார்கெட்டிங் எல்லாம்? வெட்டின பலாபழத்துக்கு ஈ பிடிச்சு விடனுமா என்ன???//

One in thousand words I say... (adhaanga aaiyiratthil oru vaarthai...:))

Dubukku said...

பிலாசபி பிரபாகரன் - அண்ணாச்சி காணொளில தகராறு ஏதும் இருக்கிற மாதிரி தெரியலையே..திரும்ப முயற்சி செய்து பாருங்களேன்

சித்ரா - மிக்க நன்றி மேடம்

எல்.கே - தல மிக்க நன்றி ஹை

அகிலா - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. எனக்கு இசையும் மிக மிக பிடித்திருந்தது. ஆனால் உங்கள் கருத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன். உங்கள் மௌனத்தை இந்த வீடியோ உடைத்தது பற்றி மிகுந்த மகிழ்ச்சி

பிரபு - வாங்க உங்க விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நீங்க சொன்ன நாடும் நட்டு மக்களும் கருத்துக்கு தான் இந்த விட்டியோவின் உட்கருத்தே. வோட்டு என்பது தனிப்பட்ட முறையில் அல்லாமல் பெரும்பான்மை மக்கள் பொறுப்பாய் செயல் படும் போது பல விஅயக்கத்த்டக்க நன்மைகளை கொணர வலியது. ஒரு தரம் வோட்டு போட போனா போனால் அப்புறம் உங்களைப் பார்த்து நாலு பேர் அப்புறம் இன்னும் நாலு பேர்ன்னு இப்படியே மாற்றம் நிகழும்ன்ங்கிறது தான் இந்த வீடியோவின் நம்பிக்கை.

ஆனந்த் - மிக்க நன்றி நண்பரே

அகிலா - இந்த மாதிரி வீடியோக்கள் மிகந்த தனிப்பட்ட நேரத்தை எடுத்துவிடுவதால் எழுத முடியவில்லை. இது போக இன்னோரு விடேயோ பிராஜெக்ட்டிலும் எடிட்டிங் வேலை செய்து வருகிறேன். அதான். இனிமேல் கொஞ்ச நாள் அடிக்கடி வருவேன் என்று நினைக்கிறேன்.

Dubukku said...

ஆதி - அன்பின் ஆதி உங்கள் டெக்னிகல் பாராட்டிற்கும் மாறுபட்ட கருத்தை முன் வைத்ததற்கும் மிக்க நன்றி. உங்கள் மாற்றுக் கருத்தை நான் மதிக்கிறேன். நம்மில் படித்த பல பேர் அது சரியில்ல இது சரியில்லைன்னு நிறைய புலம்புகிறோம். ஏகப்பட்ட வருத்தங்கள் ஏகப்பட்ட ஏக்கஙகள். இதில் நிறைய பேர் பார்த்தீகளானால் அனாலிசிசிஸ் செய்வதர்க்கும் நெகட்டிவ் தர்க்கம் செய்வதற்க்கும் மட்டும் தான் தயாராய் இருக்கிறோம். வோட்டு போட வரும் போது க்யூ நேரமாகிறது, கேர்ல் ப்ரெண்ட் பர்த்டே (இது மிகையய் கூட இருக்கலாம்) போன்ற சில்லறை தடைகளை காரணமாக்கி தப்பித்துக் கொள்கிறோம் - இந்தக் கூட்டத்தில் நான் என்னையும் சேர்த்துக் கொள்கிறேன். ஆனால் ஓட்டு என்ற ஒன்றை உபயோகப் படுத்தாமலேயே சும்மா புலம்பிக் கொண்டிருப்பதில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? முதல்ல வோட்டு போட போகலாம். பிறகு மாற்றம் தானாய் தொடரும். இது தான் இந்த வீடியோவின் உட்கருத்து. ஏன் அங்கேயே நிப்பாடிவிட்டேன் ஏன் அதற்கு மேல் போய் விளக்கவில்லை என்று கேட்பீர்களேயானால் இவ்வளவு தர்கம் செய்கிற இந்த படித்த கூட்டம் மனமாறி ஒட்டு போட போகுமேயானால் கண்டிப்பாக அங்கு யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பதையும் அறிவுப் பூர்வமாகவும் தகவல்பூர்வமாயும் முடிவு செய்து கரெக்ட்டாய் போடுவார்கள். எனவே தான் நீங்கள் யாருக்கு வேண்டுமானும் உங்கள் வோட்டைப் போடலாம் ஆனால் முதல் ஸ்டெப் வோட்டு போட தயாராகுவது. ஒருததரில் ஆரம்பிக்கும் இந்த மாற்றம் படிப் படியாக ஒரு பெரும்பாண்மை கூடம் சேரும் போது அங்கே நன்மை விளையும் என்று நான் நம்புகிறேன்.
நிற்க மேற்சொன்ன கருத்தை வீடியோவில் சரி வர கூறியிருக்காவீட்டால் ஒரு டைரக்க்டராய் அது எனது குற்றம் :) அது டெக்னிகல் சைடில் வரும் :)))

Dubukku said...

மோகன் குமார் - வாக்களிக்க என்பது பொருத்தாய் இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. :))) மிக்க நன்றி சுட்டிக் காடியதற்கு :)

தக்குடு - டேய்....சரி சரி பேசி தீர்த்துக்குவோம் :)) மிக்க நன்றி முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்கு

ராம்ஜி - மிக்க நன்றி தங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு. நண்பரே வீடியோவின் உட்கருத்து குற்றம் சொல்லுவதில்லை. ஆதிக்கு அளித்திருக்கும் பதிலில் எனது கருத்தை சொல்லியிருக்கிறேன். இதில் நான் சாடியிருப்பது படித்த கூட்டத்தை. குறிப்பாய் சொல்லுவதானால் ப்ளாகர், பேஸ்புக்க், டிவிட்டரிலும் எல்லாவற்றிலும் இருக்கும் நான் உட்பட உள்ள கூட்டத்தை.:)) என்ன செய்வது இங்கிலாந்தை படத்தில் மறைக்க சிறிய முயற்சியே எடுத்தேன். சரியான ப்ளானிங்க் இல்லாமல் -ஷூட்டிங் அவசர அவசரமாய் செய்ததில் சில குறைகள் இருக்கலாம் :))

அப்பாவி - மிக்க நன்றி மேடம் உங்கள் ஊக்கமான பாராட்டுக்கு. மெகா சீரியல் புரிஞ்சுது புரிஞ்சுது :))))) கண்டிப்பாய் :)))))))

கானகம் said...

என்னுடைய பதிவில் தனிப்பதிவாக உங்களின் வீடியோவை இட்டிருக்கிறேன்.. வாழ்த்துக்கள் டுபுக்கு சார்.. சும்மா என்னா சார் ஆகப்போகுது ஓட்டுப்போட்டு அப்படிங்கிறவங்க கொஞ்சப்பேர் திருந்தினாலே போது.. இந்த வீடியோ வெற்றிபெற்றதாகத்தான் அர்த்தம். நமது ஜனநாயகத்தை குறை மட்டும் சொல்லிக்கொண்டிருக்காமல் அதற்காக முயற்சி எடுத்து இப்படி ஒரு குறும்படம் எடுத்த உங்களுக்கும், உங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் எனது வணக்கங்களும், வாழ்த்துக்களும். இசை கலக்கலாய் இருந்தது.. நல்ல எடிட்டிங்.. நடித்தவர்கள் முதன்முதலாய் கேமெரா முன்னால் வருபவர்களாய் இருந்தது பார்க்க நன்றாய் இருந்தது.. சிரிக்கிற பதிவை மட்டுமே போடுபவர் டுபுக்கு என இனிமேல் யாரும் சொல்ல முடியாது.. :-)

பத்மநாபன் said...

கருத்துக்கு கருத்தாக இருந்தது.... நாமெல்லாம் சேர்ந்தாத்தான் நாடு அரசியல் எல்லாமே.. ஓட்டு போடுவது என்பதே கேவலமான செயலா பாவிக்க ஆரம்பிச்சிட்டாங்க...ஓட்டு போட்டாத்தான் நேர்மையை பற்றி பேசும் யோக்கிதை வரும் என்பதை நயமாக சொல்லியிருக்கிங்க... வாய்ப்பு கிடைத்தவன் சுருட்டுகிறான் ..கிடைக்காதவன் நியாயம் பேசுகிறான் எனும் நிலைதான்..அதை மாற்ற நினைக்க இந்த முயற்சி பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

April 06, 2011 9:57 AM

R. Jagannathan said...

I saw your short film in 'Idlyvadai' site. Congrats for a worthy effort. I see that the general public and major media are all against the present set of politicians and political situation and wish for the improvement of governance and development of the country and the people. But it seems they are a minority compared to the population of 'udan pirappugal' and ' raththaththin raththngal' who are happy with freebies once in 5 years! - R. J.

sriram said...

புரச்ச்ச்சி இயக்குனர் டுபுக்கு வாழ்க வாழ்க..

தல : படம் நல்லா வந்திருக்கு (டெக்னிகலா) - ஒளிப் பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், வசனம் , மீஜிக் எல்லாம் நல்லா இருக்கு.

Content : நானும் ஆதியைப் போலவே உணருகிறேன்

1. மலையாள கில்மா படங்களில்தான் (நீங்க நெறய பாத்திருப்பீங்க, இருந்தாலும் இந்த சப்ஜெக்ட்ல சந்தேகம் இருப்பின் தக்குடுவை தொடர்பு கொள்ளவும்) ஒண்ணரை மணி நேரத்துக்கு சீன் காமிச்சிட்டு கடைசி ஒரு நிமிஷத்தில் கருத்து சொல்வாங்க - அது போல இப்படத்திலும் அரசியலில் உள்ள எல்லா நெகட்டிவ் விசயங்களையும் சொல்லிட்டு கடேசில ஓட்டு போடுங்கன்னு சொன்னா எப்படி ? ஓட்டு போடுவதால் விளையும் நன்மைகளையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.

2. ரெண்டு குறும்படத்துக்கான விசயங்களை ஒரே படத்தில் சொல்ல ட்ரை பண்ணிட்டீங்கன்னு நினைக்கிறேன் - (அ) இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் அராஜகங்களைச் சொல்லி - மாற்றம் வேண்டும் (ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அரசியல் மாற்றம்) என்று ஒரு படமும் (ஆ) நொள்ளைக் காரணங்களைச் சொல்லிக் கொண்டு ஓட்டு போட போகாதவனெல்லாம் அது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்றான் - எல்லோரும் ஓட்டு போடணும் - கடமையைச் செய்து விட்டு உரிமையைப் பத்தி பேசணும்னு இன்னொரு படமும் எடுத்திருக்கலாம் என்பது என் கருத்து.

"Opinion differs" என்பதை நானறிவேன். இருப்பினும், ஆதிக்கு நீங்கள் அளித்த பதில் “Not So Convincing" என்பது என் கருத்து.

இன்னுமொரு சஜஷன் : எல்லோரும் பேசின பிறகு, Caption மட்டும் போடாமல், திரையில் நீங்க தோன்றி பேசியிருக்கலாம் (கருத்து கந்தசாமி ரோல் உங்களுக்கு நல்லாவே பொருந்துமே)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Nila said...

Dear Dubukku - I saw video only at office, yet to see with audio. I will comment on that later.
But as Boston Sriram said please give Guest appearance in your short films in future!

மனம் திறந்து... (மதி) said...

1. துருதுருன்னு, சதா வால்தனம் பண்ற குழந்தை ரொம்ப நேரம் சத்தமே இல்லாம சைலெண்டா இருந்தா, எதோ வேண்டாத விஷமம் பண்ணிட்டிருக்குன்னு தானே அர்த்தம்!:)))
2. குருதட்சிணை செலுத்திவிட்டேன்: முகப்புத்தகத்தில் பகிர்ந்தாயிற்று.
3. படம்: சொல்லிய விதம் இன்னும் கூட வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன், நீங்கள் இயக்கியதால்! புதிய செய்தியோ, கோணமோ, குறும்போ தென்படவில்லையே!
4. கருப்பொருள் குறித்து நான் கொஞ்சம் மாறுபடுகிறேன்: A) Plato made me say this: One of the banalities for refusing to participate in the elections is that you have little/no choice in the ballot paper. B) And here is what Plato himself said (remember he died 2358 years ago!): One of the penalties for refusing to participate in politics is that you end up being governed by your inferiors!
5. நீங்கள் அறிவு ஜீவிகளை அரசியலில் சேரத் தூண்டுவீர்களேயானால் அது தான் மாற்றத்துக்கான முதல் படியாகும்! There is no other shortcut! If at all there is one, its purpose is to quell our own guilty conscience!
6.அப்படிப் புதிதாகச் சேரும் அறிவு ஜீவிகள் தாம் நினைத்த வண்ணம் அரசியலில் செயல்பட முடிந்து அதில் வெற்றியும் பெற்றால் அது மாற்றத்தின் அறிகுறியாகும். Otherwise, they will also realise what Will Rogers said: "Politics has become so expensive that it takes a lot of money even to be defeated."(And money does not grow on trees...and now, we don't grow more trees even)!

மனம் திறந்து... (மதி) said...

The middle class: precarious living with vicarious pleasures! :)))

மனம் திறந்து... (மதி) said...

Upper Middle Class: Less precarious living with more vicarious pleasures!
Lower Middle Class: More precarious living with less vicarious pleasures!

அமுதா கிருஷ்ணா said...

நல்லாயிருந்தது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

@RealDubukku
டுபுக்கு..உண்மையில் நல்ல முயற்சி.
ஆனால் பேசுபவர்கள் பெரும்பாலோர் கைகளில் கிளாசையோ அல்லது உணவுத் தட்டையோ வைத்துக் கொண்டிருப்பது பேசும் விதயத்திற்கான நம்பகத் தன்மையைக் குறைக்கிறது...
ஒரு இயக்குனராக நீங்கள் இதைத் தவிர்த்திருக்க வேண்டும் !
பாராட்டுக்கள்.

அறிவன்,சிங்கை.

இதைத் தமிழ்ப் பத்திரிகை உலகில் பரப்ப இயலுமா என்று பார்க்கிறேன்..

அறிவிலி said...

great...

D. Chandramouli said...

Whatever an armchair specialist, like most of us, could do, has been attempted. But the message is loud and clear - use your vote. With a lot of fanfare, the government had announced that NRIs would be given the voting rights - but in effect, it seems that NRI can vote only if he or she is currently in India. How can an NRI be in India by the very nature of his/her status abroad, except for yearly jaunts to India?

Nila said...

Nice Attempt..you have conveyed your message "pls vote!"..but it could have been more powerful and stronger..few actors seem to have a layer of inhibition may be because this is their first time..

Music is nice..
Pls do more of such good work...

Anonymous said...

என்னுடைய கருத்து:
http://pethalgal.blogspot.com/2011/04/blog-post.html

மனம் திறந்து... (மதி) said...

Hello world!

You really want to make a difference: Just don't blame it on others.
Have guts? Try this: Send your children, after education, to the Army for two years, then put them in Politics for five years. Then only allow them to come back and lead a life of their own!

I am sure you won't come back and complain!

மனம் திறந்து... (மதி) said...

The moment you say I am a decent guy and I won't do dirty jobs, you lose all the right to call the other guy, who is doing the dirty job, a Dirty Fellow!

Paavai said...

The transition from one concept to the other like "pessitte irukka poroma" is very nice.

The message is loud and clear, make a beginning with your vote. I am sure there are many many things that needs to be done.

I think it is very sensible of you to have taken one theme and done justice to it - vote podunga. Pottuduvom :)

Adutha film eppo?

Unknown said...

dear renga
proud to be your friend.
proud to be your friend .
proud to be your friend.
really dosent know any better words to express myself.
shuba

Dubukku said...

கானகம் - தங்கள் பாராட்டுக்கும் தனிப் பதிவிற்கும் மிக்க நன்றி. தங்களைப் போன்ற நண்பர்களின் உதவியால் இந்தப் படம் மின் ஊடகங்களில் பரப்ப்பாய் பகிரப் பட்டு வருகிறது. மிக்க நன்றி.

பத்மநாபன் - மிக்க நன்றி தல உங்க பாராட்டுக்கு.

ஜெகன்நாதன் - மிக்க நன்றி. //see that the general public and major media are all against the present set of politicians and political situation and wish for the improvement of governance and development of the country and the people. But it seems they are a minority // மறும் என்ற நம்பிக்கை இருக்கிறது எப்போது என்பது தான் தெரியவில்லை வருத்தமாயும் இருக்கிறது.

Dubukku said...

ஸ்ரீராம் - மிக்க நன்றி டெக்னிகல் பாராட்டுக்கு. உங்கள் பாயிண்ட் ஒன்றோடு நான் வேறு படுகிறேன். இரண்டில் நீங்கள் சொன்ன இன்றைய அராஜகங்களைப் பற்றிப் பேசும் சமூகம் விவாத்திலேயே எனர்ஜியை செலவழித்துவிடுகிறது. வோட்டு போடுவவதிலிருந்து ஆரம்பித்தால் ஒரு கூட்டு மனப்பாண்மை வந்து மாற்றம் வரலாம் என்ற நப்பாசை தான் இந்த வீடியோ :)

Having said all this I will stop now on explanations. Rather would passively start absorbing all the comments and slowly reflect on thes a couple of weeks later to immunise myself from my directorship defences. This might make me either see the points you and Aathi are saying or atleast convince on my thoughts :)

Dubukku said...

செல்ல நிலா - மிக்க நன்றி. உண்மை தான் திரையில் தோன்றியவர்கள் அனைவரும் முதல் நடிப்பு தயக்கம் இருந்திருக்கலாம். நான் திரையில் வருவது - பார்ப்போம் :)))

ம.தி. மதி - மிக்க நன்றி தல பகிர்ந்ததுக்கு. உண்மைதான் மென்னியைப் பிடித்துவிட்டது வேலை. இதுபோக இன்னொருவருடைய ம்யூசிக் ஆல்பம் எடிட்டிங் வேலை வேறு. ப்ளாக் பக்கமே வரமுடியவில்லை. உங்கள் பக்கத்திற்கும் இந்த வாரம் வருகிறேன். பொருத்தருளவும். மேற்கோள்கள் எல்லாம் பின்னிப் பெடெலெடுக்கிறீங்க அத்தனையும் அருமை. கலக்கிட்டீங்க.


அமுதா - மிக்க நன்ரி மேடம்

அறிவன் - மிக்க நன்றி. உங்கள் கருத்துகளை ஏற்கிரேன். இனிவரும் படங்களில் கவனமாய் இருக்கிறேன் :) பத்திர்கை உதவி கிடைத்தால் மிக நன்றாய் இருக்கும். உதவ முன் வந்ததே பெரிய விஷயம். தலை வணங்குகிறேன்.

அறிவிலி - மிக்க நன்றி சாரே

சந்திரமௌலி - ரொம்ப சரி. இதே மாதிரி தான் 49ஒ வும். :)) மெஷினில் இதற்கு வசதி கிடையாது போய் பெயர் விலாசம் எல்லாம் குடுத்து ஃபாரம் பில் பண்ண வேண்டுமாம்.

பேத்தல்கள் - மிக்க நன்றி சாரே. ஆனால் உங்கள் கருத்திலிருந்து நான் வெகுவாய் வேறு படுகிறேன். தலைவர்களின் தன்னலம் என்பது கை காசைப் போடச்சொல்லவில்லை. ஒரு முதல்வருக்கு சம்பளம் வருடத்திர்கு இரண்டு கோடின்னு எடுதுக் கொள்ளட்டுமே. பெரிய நிறுவனத்தின் சேர்மன்கள் எடுத்துக் கொள்ளவில்லையா? ஆனால் சம்பளமும் வாங்கி விட்டு அதற்கு மேல் பொது மக்களுக்கு போய்ச்சேரவேண்டியதிலும் சுரண்டல் செய்வது மொள்ளமாரித்தனம். இப்பொல்லாம் எல்லா லெவெஅல்லையும் ஆகிடிச்சு. அதை ஏற்றும் கொண்டுள்ளோம். வெளிநாடுகளுக்கும் நம்ம ஊருக்கும் உள்ள ஒரேஎ பெரிய வித்தியாசம் இது தான். அங்க லஞ்சம் குடுப்பதும் வாங்குவதும் கேவலம். பத்து பவுண்டு அவர் கணவர் எக்ஸ்பென்சில் போட்டுவிட்டர் என்ப்தற்காக உள்துறை அமைச்சர் ரிசைன் செய்தார் இங்கிலாந்தில். நடக்குமா நம்மூரில்?

மதி - உண்மை தான்


பாவை - ரொம்ப நன்றி மேடம் பாரட்டுக்கும் முடிவுக்கும் :))) அடுத்த படம் விரைவில்

சுபா - மிக்க நன்ரி தன்யனானேன் :))

Paavai said...

adada .. eppavum pola vote pottuduvomnu type panna nenachu ethaiyo type pannitten..

மனம் திறந்து... (மதி) said...

கூட்டம் முடிஞ்சி போச்சி! வழக்கம் போல தல நிறைவுரையில கலக்கிட்டாரு! எல்லாரும் சேந்து பலமா ஒரு "ஓ" போடுங்க தலைவருக்கு! ம்...அப்படித்தான்! ஓகே! ஆனா, மக்களே! இந்தக் கூட்டத்திலே பேசின சமுதாய முன்னேற்றத்துக்கான கருத்துகளை மட்டும் மறந்துடாதீங்க! நீங்களும் அசை போடுங்க, மத்தவங்களுக்கும் அரசல் புரசலா சொல்லுங்க! இல்லேன்னா, இதுவும் அரசியல் பிரசாரக் கூட்டம் மாதிரியே ஆயிடுமே!

Shuba: என்னங்க இது அநியாயம்! நாங்கள்ளாம் என்னவோ தலை மேல நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, நெறைவேத்த ரெடியாயிட்ட மாதிரி, நீங்க மட்டும் ஒரே ஆளா வந்து, மூணு ஒட்டு போடறீங்க? நீங்க என்னமோ நல்லது பண்றதா நினைச்சு, ஆளுங் கட்சியிலே இருக்கிற எங்க எல்லாரையும் தொபுகடீர்னு எதிர்க் கட்சி பெஞ்சிலே உக்கார வச்சிட்டீங்களே? தப்புங்க அம்மணீ! நெம்பத் தப்புங்க! :)))

At the cost of repetition and redundancy, let me speak on behalf of all those who commented here (for once, I feel I am doing a foolish thing which sounds eminently sensible to me at least, if not for all the others): All of us have enormous appreciation for the work done by Dubukkaar through this maiden (!?) effort! But that is a given for whatever Dubukku does! And I am sure he himself would not have been flattered if all of us had made only those template comments - super, awesome...blah...blah.

That is why we(those who passed some critical/analytical comments) went one step further to analyse the film and what it said! It is pertinent to note here that any work of art/creativity, once placed in the public domain, speaks much more than and way beyond what the creator actually/originally thought or meant to convey! Most of the works of art become symbols and a very small portion only happens to be allegorical in nature, if at all! (A symbol means many things to many people and an allegory has a clear one to one relationship and means the same to everybody who sees/reads it!)

I am personally glad that this work of Dubukku has stirred sentiments, analytical viewpoints and critical appraisal of the current scene in society to a limited extent. Surprisingly(!) enough it is this - richness, depth, scope and variety of these comments and debate/heat generated by the Work - that deserves to be treated as a True Measure of the success or failure or plain and simple impact of the Work by the author who is more interested in the Work, than gauging his popularity through accolades and sweet-nothings, if he wishes to scale further heights in his mountaineering called Creativity and Communication!

I feel this peroration is slightly out of place, especially after Dubukkar has responded! But I just could not help it! And this is where matter overtakes mind! :)))

Anonymous said...

The right message at the right time.....hats off to you sir!!!!let us take the first step!!!
nivi.

Anonymous said...

டுபுக்கு, உங்களுடய முயற்சிக்குப் பாராட்டுக்கள். மீண்டும், உங்களது நோக்கம் பழுதில்லை. வாங்கும் காசுக்கு பங்கமில்லாமல் உழைக்கும் தன்மைக்கு நம் தமிழர் தனியாக ஒரு பதத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்; அதன் பெயர் 'நேர்மை' :). நான் இங்கு, தன்னலத்தை, அதையும் ஒரு உரிமையாகக் கோருவதை, அதுவும் பொதுவான (அதாவது உங்களது குரும்படத்தில் மட்டுமல்லாது) எதிர்பார்ப்பாக உள்ளதை, அறமல்ல என்று மட்டுமல்ல, அநாகரிகம் என்றும் குறிப்பிடுகிறேன். "பத்து பவுண்டு அவர் கணவர் எக்ஸ்பென்சில் போட்டுவிட்டர் என்ப்தற்காக உள்துறை அமைச்சர் ரிசைன் செய்தார் இங்கிலாந்தில். நடக்குமா நம்மூரில்?" - அடுத்த நாட்டில் உள்ள நடைமுறைகளை உள்நாட்டு மக்களின் மனோபாவத்தைக் கணக்கில் கொள்ளாமல், முற்போக்கு என்றபெயரில், நடைமுறைப் படுத்தி விட்டு அங்கு நடப்பது இங்கு நடக்கவில்லை என்று அங்கலாய்ப்பது முறையல்ல. "தக்காளி இந்தியால் விதைக்கிறார்கள், அதனால் இங்கிலாந்தில் விதைத்தோம்; ஆனால் அங்கு விளைகிறது இங்கு விளையவில்லையே" என்று அங்கு யாரும் அங்கலாய்க்கிறார்களா? (Green house - ஐ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை :)). நன்றி.

Unknown said...

Nice video. Time for a green revolution :).
Can you also propogate this site - www.indiavotes.org.in

Anonymous said...

very obvious that many of the guys are not in India. Brings a certain amount of cynicism to the viewer. Looks highly cliched...

Dubukku said...

பாவை - நோ ப்ராப்ளம் :))

மதி - அவ்வ்வ்வ்வ் உங்களுக்கு முந்திய பதிலில் ஒரு நீளமான பதில் அடித்திருந்தேன். கட் அன்ட் பேஸ்ட் சொதப்பலில் அது மிஸ் ஆகியிருக்கிறது. இப்போது தான் கவனித்தேன்.
But I agree with all your views on the critique and truely subscribe to it. I am sure you would have noted that I encourage honest feedbacks in my blog and work :) and am very glad that it works here in my blog for any creation :).

Nivi - thank you very much madam.

Dubukku said...

அனானி - அண்ணாச்சி - தன்னலம் என்னைப் பொருத்தமட்டில் தப்பே கிடையாது. ஆனால் அதில் இர்ண்டு முறை இருக்கிறது. யாரையும் ஏமாற்றாமல்/ தீங்கிழைக்காமல் இருக்கும் தன்னலம். இது தான் நான் சொல்லுவது. வேறொருவிதம் இருக்கிறது - அடுத்தவனை/ பொதுநலத்தை அடித்து உலையில் போட்டுவிட்டு கொண்டாடும் தன்னலம் எனக்கு இதில் ஒப்புதல் கிடையாது. இன்றைக்கு அரசியலில் நாம் காணுவது இந்த வகை தான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நிற்க இங்கிலாந்துக்கு நான் சொன்ன உவமானம் குறித்த உங்கள் கருத்துடன் நான் வெகுவாக வேறுபடுகிறேன். நீங்கள் சொன்ன உள்நாட்டு நடைமுறையும் மனோபாவமும் தான் நான் வருத்தப் படுவது (நான் அங்காலாய்க்க வில்லை வருத்தப் படுகிறேன்) . இங்கிலாந்திலும் மனிதர்கள் தானே இருக்கிறார்கள். நம்மூரில் இருக்கும் மனோபாவமே எனக்கு வருத்தமளிக்கிறது. திருட்டு என்பது எமாற்றும் அளவைப் பொருத்தது என்பது நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு மனோபாவம். ஒரு கோடி அடித்தால் பரவாயில்லை நூறு கோடி அடித்தால் தான் தப்பு என்பது தற்போதைய மனோபாவம். பதவியிலிருந்தும் பொதுச்சொத்தை ஏமாற்றாமல் இருக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் இன்றைய அரசியலில் இவர்கள் கைவிட்டு எண்ணிவிடமுடியும் அளவிலேயே (நான் சொல்லுவது அரசியிலில் கூட இல்லை...அரசாங்க உத்தியோகத்தில்)

என்னுடைய தனிப்பட்ட கருத்தில் இந்த மனோபாவம் பெரும்பாண்மையாக மாறும் நாள் நமது விடிவுகாலத்திற்கு அடியெடுத்து வைக்கும் முதல் நாள்.

Dubukku said...

பினு - உங்கள் தளம் மிக மிக மிக அருமை. இவ்வளவு டீட்டெயிலாக வேட்பாளர்கள் பற்றியும் அவர்கள் வேட்புமனு ஸ்கேன் செய்த டாக்குமெண்ட் குறித்தும் ஒரு வெப்சைட் பார்த்ததில்லை. மிக அருமை வாழ்த்துகள். முதலிலே தெரிந்திருந்தால் எனது வீடியோவிலேயே ஒரு குறிப்பு குடுத்திருப்பேன்.

அனானி - தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. அடுத்த முறை கவனத்தில் கொள்கிறேன். வெளிநாட்டில் எடுத்திருக்கிறது என்பதை தவிர்க்கும் எண்ணம் இருந்ததே தவிர அதற்கான முயற்சிகள் சரியாக மேற்கொள்ளவில்லை.

மனம் திறந்து... (மதி) said...

//I agree with all your views on the critique and truely subscribe to it.//

Thank you! :)))

But I thought I was speaking for you and NOT to you in my "peroration!" I am really surprised to see this:
//I am sure you would have noted that I encourage honest feedback in my blog and work :) and am very glad that it works here in my blog for any creation :). //
Anyway, if you also thought that ,it is for the others and not me, no problem! It is more of a confirmation and reinforcement from the horse's mouth! :)))

SUPRAJA KALYANARAMAN said...

ஆரம்பம் மிகவும் நன்றாக இருந்தது.புதுமையாகவும் இருந்தது.சொல்ல வரும் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன.”வோட்டு” என்பதற்கு பதிலாக “ஓட்டு” என்று உபயோகித்திருக்கலாம்.சிறு குறை ஒன்று உள்ளது... ஓட்டுக்கான அடையாளக் குறியீடு ”இடது” கையில் தான் வைக்கப்படும்.அது இங்கே “வலது” கையாகக் கடைசியில் காட்டப் படுகின்றது. உற்று நோக்கினால் தான் கண்டுபிடிக்க இயலும் :) மற்றபடி அருமை!!!!

Dubukku said...

Mathi - Its more that I just grabbed the opportunity and more of a blowing the own trumphet rather than "To you" :)

சுப்ரஜா - பாராட்டுக்கு மிக்க நன்றி. ஓட்டு - ரொம்ப சரி. அத்தோடு விரலும் கரெக்ட் இந்த வீடியோ சரியான ப்ளானிங் இல்லாமல் டைம் ப்ரஷரில் செய்தது. நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

Anonymous said...

Who needs to understand? Nobody is a kid and everybody knows their duty best. Try not to act oversmart sir..If you are that concerned leave your Multinational job/business come to your Motherland and for people sake "godhaavil irangi nalladhu seyyungal".. A simple person in India has done his duty while you sit snugly and advice from a far way place with all packed food items.. which is useless ARE YOU PEOPLE ADVICING FOR your OWN SELVES? You need not make people understand their "Prime Duty to a Country"..by filming something .We have done our duty.Have you.. ??

kalyana sappadu, moonru natkal, vadaam, vathal oorugaannu venumnaa yezudhi sirikka vainga.. otherwise.. vendaamae..

Dubukku said...

Anony2 - I do take your point on fitting the bill. I personally have decided not to take anything where I don't fit. Apart from that It pains me a lot to see we still lack the maturity to concentrate on issue being discussed and rather politicise and concentrate on "who" said. I cannot stop wondering if this video can cause so much offence to you and few others, a minuscle percentage of this same offence could be shown towards our politicians who swindle and put the public cause to shame.

//kalyana sappadu, moonru natkal, vadaam, vathal oorugaannu venumnaa yezudhi sirikka vainga//

Thank you very much for your permission.

Anonymous said...

//a minuscle percentage of this same offence could be shown towards our politicians who swindle //

adhu theriyaama yevanum illa sir..everybody has that burning inferno.. but helpless..
As a general public, I showed my anger by way of casting my vote standing in hot sun for cpl of hours on Apr 13, but adha kooda seyyadha neenga yedhukku advice panreenga ..vizipunarvu drama..DID YOU SPEND YOUR CURRENCY (to come to your country) TO SHOW YOUR MINISCULE ANGER ATLEAST BY CASTING YOUR PRECIOUS VOTE? You might have umpteen no of reasons..ask a common man in India and he will have better outlook on his duty than anybody else..

Being in an alien country out of nostalgia you just want to keep n touch with your nativity..one such is what you have chosen now.. that is it all..

Dubukku said...

Anony - You already made this point which I acknowledged. But you seem to concentrate more on me.

On your other points - As much as I value your opinion, I reserve mine too.

//Being in an alien country out of nostalgia you just want to keep n touch with your nativity..one such is what you have chosen now.. that is it all.. //
- Though it hurts, thinking nuetrally, with all honesty, I agree. But more than just keeping in touch its well wishing too.
Thanks for taking time to discuss. I take leave here.

Anonymous said...

Thala, bracket-la dubukku-nu unga pera podu thala. renga-nu po'tta neriya perukku neenga thaan-nu theriyarthilla.

சுமதி said...

ஹலோ டுபுக்கு, நான் கொஞ்சம் லேட். பரவாயில்லை.சரி நீங்க சொன்ன விதம் மற்றும் டெக்கனிக்கலும் ரெண்டும் மிக மிக அருமையாக இருந்தது. சரி ஆனா இப்பொ தான் படிச்ச எல்லாருமே ஊரை விட்டு காலியாகிட்டாங்களே.ஏதோ வேற வழியே இல்லாதவங்களும் படிக்காத சிலரும் தான் ஊருக்குள்ள இருக்காங்க. அதனால அவங்களும் இந்த இலவசம் ங்கர மாயையில மாட்டிகிட்டு ஏதோ காலத்த தள்ளிட்டு இருக்காங்க. கடவுள் தான் காப்பாத்தனும். ஆனா உங்க படைப்பு மிக அருமையாக உள்ளது.

Prabu said...

neeng en dubukku anonyku bathil sollikittu irukeenga. ithellam vayerichal case youtubela correcta than solirukanga
நல்ல நோக்கத்துடன் எதை செய்தாலும் அதிலும் நொட்டை சொல்பவனே தமிழன். அந்த இலக்கணத்துக்கிணங்க, இங்கு சிலர் கருத்து பரிமாறியுள்ளனர். நல்லா இருங்கடே

anony poi thanni kudi thanni kudi

rajan said...

That last logo shows the right hand! It shud be the left hand.

Post a Comment

Related Posts