மனிதனின் அடிப்படைத் தேவையான உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் பழக இண்டர்நெட் கனெக்ஷனில் மூன்றாவது கொஞ்ச நாள் முன்பு நொண்டியடிக்க ஆரம்பித்துவிட்டது. இண்டர்நெட் இல்லாவிட்டால் கக்கா கூட போகமுடியாது என்பதை கம்பரிலிருந்து திப்பிலி சித்தர் வரை எல்லாரும் ஏற்கனவே ஏகத்துக்கு பாடிவிட்டதால் அவை அப்பாலிக்கா. இந்த இண்டர்நெட் கனெக்ஷன் தொல்லை பாச்சிலரிலர் குடும்பஸ்தர் என்று பாகுபாடு பார்ப்பதில்லை என்றாலும் இந்த இம்சை வரமால் இருக்க வயரில் மச்சம் இருக்கவேண்டும் போல. நான்கு ஆண்டுகள் முன்னால் இந்த பிரச்சினை
வந்த போது டெல்லியில் இருந்து ஒரு குயில் பேசியது. நானாச்சு சார் என்று பொறுப்பாய் அப்டேட் மட்டுமாவது கொடுத்தது. இந்த தரம் புனாவில் இருந்து ஜீ போலியே என்று ஒரு குரங்கு பேசியது. அதற்கப்புறம் ஒவ்வொரு முறையும் நாய்டா, புனா, கொல்கத்தா என்று இங்கி பிங்கி பாங்கி போட்டு எங்காவது கனெக்ஷன் போகும். நான் பிறந்து வளர்ந்த கதையிலிருந்து எல்லாவற்றையும் கேட்டு விட்டு கடைசியில் இங்கேர்ந்து பார்க்கும் போது எல்லாம் கரெக்ட்டா தான் வேலை செய்யுது என்று ஒரே பல்லவி பாடுவார்கள். ஒரு முறை இன்ஜினியர் வந்து ஆமா லைன்ல ஏதோ பிரச்சினை இருக்கு நான் போய் ஸ்க்ரூ ட்ரைவர எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு போனவர் தான் ஆளே காணோம். திரும்பவும் கொல்கத்தாவிற்கு போன் போட்டால் இங்கேர்ந்து பார்த்தா என்று ஆரம்பிப்பார்கள். ஸப்பா டேய் எல்லாமே அங்கேர்ந்தே பார்த்தா...இப்போ நான் என்ன கலர் ட்ரெஸ் போட்டிருக்கேன்னு சொல்லு பார்போம் என்றால் இங்க மீனாட்சி சுந்தரம்ன்னு யாருமில்லையே சார் என்று வைத்துவிடுவார்கள். நம்மாளுங்களுக்கு நம்மாட்களைப் பார்த்தால் ஒரு இளக்காரம், ஒரு அலட்சியம். அப்படியெல்லாம் இருக்காது என்று உள்மனது அப்பப்போ சொன்னாலும் இதுவரை எனக்கேற்பட்ட போன் அனுபவஙக்ள் எல்லாமே அதற்கு மாறாகத் தான் இருக்கின்றன. இப்போது லைனையே வேறு சர்விஸ் ப்ரொவைடருக்கு மாற்றி விட்டேன். ஸ்பீட் சும்மா அதிரடியாய் பறக்கிறது. (உங்க வயத்தெரிச்சலுக்காக - 79MB download 18mb upload :))) )
இண்டர்நெட் கனெக்ஷன் மக்கர் பண்ணும் போதெல்லாம் எழுதி புக்கர் ப்ரைஸ் வாங்குமளவிற்கு புதுசு புதுசாய் எழுதுவதற்கு ஏதாவது தோன்றும். அதனால் தான் எழுதவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போ லைன் சரியாகிய பிறகு தான் புரிகிறது பிரச்சினை லைனில் இல்லை என்று. அடிக்கடி எழுதவேண்டும்...டும் டும் டும்.... ஆமென்.
அறுகத்தெரியாதவனின் ஆயிரத்தொன்னாவது அறுவாள் --> https://www.facebook.com/DubukkuTheThinkTank
Sunday, May 19, 2013
Subscribe to:
Posts (Atom)