மை டியர் டார்லிங் என்று மல்லிகா அன்பாய் கூப்பிடும் சனிக்கிழமை அதிகாலை ஒன்பது மணி (மிட்நைட்) தூக்கத்தில் கண்ணை மூடி தேமேன்னு படுத்துக் கிடவாமல், “ஐயையோ...இன்னிக்கு வீட்டைக் க்ளீன் பண்ணனுமே” என்று ஜெர்க் ஆகி எழுந்தால் அன்றைக்கு வீட்டிற்கு யாரோ விருந்துக்கு வருகிறார்கள் என்று அர்த்தம். “வைச்சது வைச்ச இடத்தில் கலையாம நீட்டா இருக்கிறதுக்கு இதென்ன மியூசியமா? குடியிருக்கிற வீடு அப்பிடி இப்பிடி தான் இருக்கும்” என்ற பார்த்திபன் கனவு டயலாகை மேற்கோள் காட்டி ஹால் கதவை திறந்தால் வீடு மியூசியத்துக்கு வெகுதூரத்தில் சாக்கிசான் சண்டைக் காட்சி நடந்த லொக்கேஷன் மாதிரி கந்த கோளமாய் இருக்கும்.
“அலாவுதீனும் அற்புத விளக்கும்” கதையில் வரும் “ஆலம்பனா” பூதத்தை வீட்டு வைலைக்கு வைக்கலாமா என்று நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, தங்கமணி ஒரு டீ ஒன்றை போட்டு குடுத்து விட்டு “தம்பி டீயை குடிச்சிட்டு தீயா வேலை செய்யணும். கம்பேனி உன்கிட்டேர்ந்து நிறைய எதிர்பார்க்குது”ன்னு ‘ஆலம்பனா’ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை என் கையில் குடுத்துவிடுவார். முதல்வன் அர்ஜூன் மாதிரி வீட்டோடு எல்லோருக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் ரெடியாக வைத்திருப்பார். கிச்சனும் கிச்சன் சார்ந்த இடங்களும் தங்கமணி அண்ட் கோவிற்கும், டாய்லெட்டும் டாய்லெட் சார்ந்த இடங்களும் எனக்கும் என்று நியாய பாகப்பிரிவினை எல்லாம் முதலிலேயே அரங்கேறிவிடும்.
சினிமாவில்/விளம்பரங்களில் இளம் கதாநாயகிகள் அழகாக குளித்துவிட்டு தலைமுடியை முன்னால் லேசாக கலைத்து விட்டுக் கொண்டு இன்னும் கொஞ்சம் அழகாய் காட்டன் புடவையை இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். வீடும் சமத்தாய் பாஸ்ட் ஃபார்வேட் மோடில் பதினாறு வினாடிகளில் பள பளவென்று ஆகிவிடும். நாயகியும் சுடச் சுட காப்பி போட்டு குடித்துவிட்டு ஜன்னல் கர்டன்களை விலக்கி விடுவார். ஆனால் இந்த நிஜம் இருக்கிறதே நிஜம், ஸ்ப்ப்பா நொங்கெடுத்து நோக வைத்துவிடும். இருக்க வேண்டியது இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது இல்லாதது இருக்கவே இருக்காது.கோப்பில் எடுத்து வைக்காத கடுதாசிகள் 5E பஸ் மாதிரி லெட்டர் ஹோல்டரில் புட்ஃபோர்டில் தொங்கிக் கொண்டிருக்கும்.
“இதான் அன்னன்னிக்கு வந்த லெட்டர அப்பவே எடுத்து வைச்சிருந்தா இப்போ இப்படி முழிக்க வேண்டாம். சொன்னதக் கேட்டா தானே எல்லாம் நான் பார்த்துக்குறேன் நான் பார்த்துக்கிறேன்னு. யாரு வேண்டாம்னா..நல்லா நிறுத்தி நிதானமா பாருங்க” - தங்கமணி தீவிரமான ராஜ்கிரண் ரசிகர். சமயம் பார்த்து ஆர்பாட்டம் இல்லாமல் அடிக்கிற அடியில் ‘களுக்’ன்னு எலும்பு முறியும் சத்தம் மட்டும் தான் வரும் மிச்சமெல்லாம் இண்டர்னல் ப்ளீடிங் தான்.
“அப்பா நீங்க ரொம்ப நாளா தேடின டார்ச் லைட் இங்க வாஷிங் மெஷின் பின்னாடி விழுந்து இருக்கு” என்று மகள் வேறு சமய சந்தர்ப்பம் தெரியாமல் எடுத்துக் குடுப்பார். “தெரியும்டா செல்லம் ஆத்திரம் அவசரம்னா எடுக்கறதுக்கு வசதியா இருக்குமேன்னு நான் தான் வாஷிங் மிஷின் பின்னாடி பத்திரமா வைச்சிருக்கேன்”- ஒரு மனுஷன் ஒரே நேரத்துல எவ்வளவு பேரைத் தான் சமாளிப்பான்?
“நீ வாங்கி வைச்சிருக்கிற அந்த ப்ளூ பிரஷ் அவ்வளவு போறலை. என்ன பிரஷ் வாங்கியிருக்க..அத வைச்சு எவ்வளவு தேய்ச்சாலும் பாத்ரூம க்ளீனே ஆக மாட்டேங்குது. உன்னை கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான்னு நினைக்கிறேன்”
“என்னது ப்ளூவா...ஓ மை காட் அது பெடிக்க்யூர் பிரஷ்...அது காலுக்கு வாங்கி வைச்சது..அத வைச்சா பாத்ரூம க்ளின் செஞ்சீங்க”ன்னு தங்கமணி பதறிக் கொண்டு வரும் போது “அதானே பார்த்தேன் இதப் பார்த்தா பாத்ரூம் பிரஷ் மாதிரி இல்லையேன்னு எனக்கு அப்பவே டவுட்டு. நல்ல வேளை யூஸ் பண்றதுக்கு முன்னாடியே உன் கிட்ட கேட்டேன்..நான் காட் ப்ராமிஸா இத வைச்சு க்ளீன் செய்யலமா” உபயோகித்த சுவடே தெரியாமல் ப்ரஷ் இருந்த இடத்திற்கு போய்விடும்.
எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருவதென்றால் சில பல கண்டிஷன்கள் உண்டு. விருந்தினர் அதை உணராமல் செயல்படுத்த கம்பெனி எல்லாவிதமான முயற்சிகளும் எடுக்கும் . வருவதற்கு ஒரு வாரம் முன்னமே எங்களுக்கு தகவல் சொல்லி விட வேண்டும். “கண்டிப்பா நம்ம வீட்டுக்கு நீங்க வரணும். ஆனா முந்தின வாரமே சொல்லிட்டு வாங்க, ஏன்னா முக்கால்வாசி வாரக் கடைசி நாங்க வீட்டுலயே இருக்க மாட்டோம்.எங்கேயாவது போய் விடுவோம். நீங்க வந்து அப்புறம் நாங்க இல்லாம கதவ தட்டிக்கிட்டு நின்னீங்கன்னா எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும் பாருங்க அதான்”
நடுவில் ஒரு வாரக் கடைசி இருப்பது நலம் பயக்கும். “ஓ..நாளைக்கா...அடடா ரொம்ப சாரிங்க அனுஷ்கா வூட்டுல அவல் சாப்பிட வரச் சொல்லி ஒரே அடம், நீங்க அதுகடுத்த வாரம் கண்டிப்பா வரனும் ப்ளீஸ், இல்லைன்னா நாங்க வேணா அனுஷ்கா வூட்டு அப்பாயிண்மெண்ட கேன்சல் பண்ணிடறோம்”ன்னு ஒரு பிட்ட போட்டால் “சேச்சே...அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை நாங்க அடுத்த வாரம் வரோம், நீங்க அனுஷ்கா வூட்டுல அவல் சாப்பிட்டுவிட்ட வாங்க”ன்னு நீங்களே கண்டிஷனுக்கு டிக் போட்டு விடுவீர்கள்.
சம்பவ நாள் அன்றைக்கு காலையில் பத்து மணி வாக்கில் சுமார் எத்தனை மணிக்கு வந்து சேர்வீர்கள் என்று ஸ்கெட்சு போடுவோம். “சும்மா குட்மார்னிங் சொல்ல தான் ஃபோன் பண்ணினேன்..குட்டீஸ்லாம் எழுந்தாச்சா..இன்னும் இல்லையா, நோ ப்ராபளம் சின்னப் ‘பூ’ங்க அது ... எழுப்பிடாதீங்க. மெதுவா எந்திரிக்கட்டும் நம்ம வீடு தானே எப்போ வேணா வரலாம் ஒன்னும் பிரச்சனையே இல்லை”
“அதிதி தேவோ பவ” என்ற கோட்பாடின் படி உங்களை முதலமைச்சர் ரேஞ்சுக்கு மரியாதையாய் நடத்துவோம். “நீங்க அங்க உங்க வீட்டுலேர்ந்து கிளம்பும் போது கால் பண்ணுங்க ப்ளீஸ். ஏன்னா இங்க வீட்டுக்கு முன்னாடி பார்க்கிங் பிஸியாய் இருக்கும் நாங்க இடத்த ரிசர்வ் செஞ்சு வைச்சிடுவோம் அதுக்குத் தான் பாருங்க. அவங்க கிளம்பியாச்சு, கவலபடாத இன்னும் 30 நிமிஷம் இருக்கு அதுக்குள்ள எல்லாத்தையும் க்ளியர் பண்ணிடறேன்”
நீங்கள் வந்து கொண்டிருக்கும் போது போதும் இன்னொரு ஃபாலோஅப். “எங்க இருக்கீங்க..இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவீங்களா..இல்ல இங்க ஏ30ல ஒரே ட்ராபிக்குன்னு பக்கத்து வீட்டு வெள்ளக்கார மாமா சொன்னார் அதான் உங்கள உஷார் படுத்தலாமேன்னு. என்னது ட்ராபிக்கே இல்லையா ஓ அப்ப அவர் சொன்னது போன வாரமா இருக்கும்”
“ஒரு துணியை ஒருவர் மடித்து வைக்க இரண்டு நிமிடம்,அப்போ இருபது துணியை இரண்டு பேர் மடித்து வைக்க இன்ன நேரம் ஆகும், கண்டின்ஜென்சிக்கு அதை விட ஒன்றரை மடங்கு நேரம், சோ என்னோட துணிமணியெல்லாம் நானே மடிச்சு வைச்சிக்கிறேன், யாரும் தொட வேண்டாம், நாளை காலை பத்துலேர்ந்து பத்தேகாலுக்குள்ள எல்லாத்தையும் அயர்ன் செய்து மடிச்சு வைச்சிடுவேன்” - ஆபிஸில் கற்றுவந்த ப்ராஜெக்ட் ப்ளானிங்க கோட்பாடுகள் எல்லாம் ஏனோ எனக்கு மட்டும் வீட்டில் வொர்க் அவுட்டே ஆகாது. வீட்டில் எல்லார் துணிமணிகளும் ஒழுங்காய் மடித்து வைக்கப்பட்டிருக்க, என்னுடைய சட்டைகளுக்கு கண்டின்ஜென்சி என்னவோ போர்வையை விரித்து எல்லா துணியையும் அதில் போட்டு இருமுடி மாதிரி கட்டி பீரோவில் அடைத்து பூட்டி வைப்பதாய் தான் இருக்கும்.
"Expect the unexpected" என்று எந்த நாதாரி திருவாய் மலர்ந்தாரோ தெரியாது ஆனால் கரெக்ட்டாய் நடக்கும். தங்கமணி வாங்கி வர சொன்ன சமையல் லிஸ்டில் ஏதாவது முக்கியமாய் விட்டுப் போயிருக்கும். “என்னம்மா எந்த காலத்துல இருக்க, முட்டை இல்லாம ஆம்லெட்டே செய்யறாங்க, புளி இல்லாம புளியோதரை செய்ய முடியாதா? ” போன்ற அதிகப்பிரச்ங்கித்தனத்துக்கெல்லாம் அது வேளையில்லை. “ஓகோ...வருவாங்க.. நீங்க தான் சர்கரைக் கட்டியாய் பேசிப் பேசியே வாயால பாயாசம் விடுவீங்களே, வுடுங்க” என்று ஆபத்தில் முடிந்துவிடும்.
என்னடா சோத்த போட்டுட்டு முகம் அனிச்ச மலர் மாதிரி பூத்திருக்கா வாடியிருக்கான்னு விருந்தோம்பல் விதிகளை கடை பிடிக்காம இப்படி கண்ட மேனிக்கு கண்டிஷன் போடுகிறார்களே என்று நினையாதீர்கள். டென்ஷன் எல்லாம் நீங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் தாங்க. அதுக்கப்புறம் கலகல வென்று ஆகிவிடும். நாம் பேசிக் கொண்டிருப்போம், கேம்ஸ் விளையாடுவோம்,சினிமா பார்ப்போம், அப்புறம் முக்கியமாய் தங்கமணி செய்து வைத்திருக்கும் ருசியான சாப்பாடு சாப்பிடுவோம். நீங்களும் “எப்படிங்க வீட்ட இவ்வளவு சுத்தமா அழகா வைச்சிருக்கீங்க”ன்னு கேட்பீங்க, அப்புறம் “இந்த வெங்காய சாம்பார் ரொம்ப சூப்பர்ங்க கொஞ்சம் ரெசிபி சொல்லுங்களேன்”ன்னு கேட்பீங்க. “அட அது ரொம்ப ஈசிங்க சும்மா அசால்டா செய்யலாம்”ன்னு வாங்கி வந்த மளிகை சாமான் லிஸ்டை வைத்தே நான் ஒரு ரெசிப்பி சொல்லுவேன், அப்போ தங்கமணி கண்ணால் லேசர் விடு தூது ஒன்னு விடுவாங்க, விடுங்க பாஸூ வீரனோட வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம் பாஸு :)