சுமார் இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னால் நான் இரண்டு மாத குழந்தையாய் இருந்த போது, குண்டு குண்டுன்னு பார்த்தாலே தூக்கிக் கொள்ளும் மாதிரி இருப்பேன் என்று வீட்டில் உள்ள இளம்பிராய ஃபோட்டோக்கள் சொல்லிக் கேள்வி. அப்படி குண்டு குண்டுன்னு இருந்தவன், அப்புறம் பூசின மாதிரி ஆகி அப்புறம் ரொம்பவே ஸ்லிம ஆகி காலேஜ் படிக்கும் போதெல்லாம் ரெண்டு மூனு சட்டையைப் போட்டுத் தான் உடம்பை தேற்றி இருக்கிறேன்.
ஊரில் கன்னுக்குட்டி கணேசன், முந்தின நாள் ராத்திரி ஊற வைத்த கொண்டக் கடலையை வாயில் போட்டு ப்ரீத்தி மிக்ஸி மாதிரி பதினைந்து செகண்டில் நைஸாய் அரைத்து விட்டு தீர்த்தபதி பள்ளி க்ரவுண்டில் பத்து தரம் ஓடி வருவான். அதற்கப்புறம் மஸ்தான் ஜிம் என்று போர்டு போட்டிருக்கும் இடத்தில் இவனை மாதிரியே நாலு பேர் கொண்டக் கடலையை அரைத்து விட்டு பெரிய பெரிய கர்லா கட்டைகளை சுத்திக் கொண்டிருப்பார்கள். அந்த இடம் வழியாகப் போனாலே எனக்கு சினிமாவில் "மச்சி இன்னிக்கு முடிச்சிருவோமா" என்று வத்தக் குச்சிப் பெண்ணை நாலு பேர் வசனம் பேசி, தடிமாடு மாதிரி விழுந்து புடுங்கும் காட்சி தான் நியாபகத்துக்கு வரும்.
"அவாளுக்கெல்லாம் குஷ் குஷ்ன்னு உடம்பிருக்கு, எக்சர்சைஸ் பண்றா. உனக்கு சதைப் பத்தே இல்லியே இதுல என்னத்த கட்டை சுத்த போற? மாமிட்ட சொன்னா கொண்டக் கடலைய பேஷா சுண்டல் பண்ணித் தருவா முதல்ல சாப்பிட்டு உடம்ப தேத்து " என்று மஸ்தான் ஜிம் பத்து ரூபாய் கட்டணத்திற்காக மாமா தடா போட்டுவிட்டார். ஊர்ல அவன் அவன் நாட்டுக் கட்டையா பார்த்து சுத்துறான் ஒரு கர்லா கட்டைய சுத்தறதுக்கு இத்தனை அடக்குமுறையா என்று சோகமாகி விட்டது.
என் ஆதங்கதைப் பார்த்த மாமி "ஏண்டா கட்டைய தான் சுத்தனமா...கல்ல சுத்தப் பிடாதான்னு" வழிகாட்ட...விட்டால் வயசான பாட்டிகளுடன் ஆலமரத்தை சுத்தச் சொல்லிவிடுவார்கள் என்று நானும் "கண்ணா எத சுத்தறோங்கிறது முக்கியமில்ல எப்படி சுத்தறோங்கிறது தான் முக்கியம்" என்று தூணிடம் டயலாக் பேசிவிட்டு ஆட்டுக் கல்லை தூக்கி தோளை சுற்றி சுத்த ஆரம்பித்தேன். இந்த உடற்பயிற்சியில் பெரிய பிரச்சனையே முதல் நாள் இருக்கும் ஆர்வக் கோளாறு தான். அடுத்த நாளே ஆர்னால்டுக்குப் போட்டியாய் களத்தில் இறங்கவேண்டும் என்று நான் ஆட்டுக் கல்லை சுத்திய சுத்தில் உளுந்தைப் போட்டிருந்தால் ரெண்டு ஊருக்கு தோசை வார்த்திருக்கலாம் அவ்ளோ சுத்து.
அடுத்த நாள் உடம்பை சுத்தமாக அசைக்க முடியவில்லை. கண்ணாடியைப் பார்க்கக் கூட கையை தூக்க முடியவில்லை. தோள் பட்டை போயே போயிந்தி.
கதக்களி மாதிரி கண்ணை மட்டுமே சுத்த முடிந்தது. "சொன்னதக் கேக்காம ஆட்டுக் கல்ல சுத்தினா இப்படித் தான் ஆட்டுக் குட்டி மாதிரி பம்ம வேண்டி இருக்கும்" என்று கண்ணுக்குட்டி கணேசனுக்கு ஒரே கெக்கலிப்பு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு திரும்ப ஆட்டுக்கல்லை சுத்தலாம் என்று ஒரு வாரம் ஒத்திவைப்பு தீர்மானம் போட்டு, திரும்ப ஆரம்பித்தது, ஒரேடியா எக்சர்சைஸ் பண்ணிணா உடம்புக்கு ஆகாது என்று ஒரு நாள் விட்டு ஒரு நாளாகி, அப்புறம் வாரம் ஒரு முறையாகி இருவாரத்திற்கு ஒரு முறையாகி கடைசியில் ஆயுத பூஜைக்கு சந்தன குங்குமப் பொட்டு இட்டு பூஜை செய்யுமளவுக்கு உடற்பயிற்சி ரொம்ப அன்யோன்யமாகிப் போனது.
இருந்தாலும் அவ்வப்போது டீ.வியில் ஒரு கட்டுமஸ்தான இளைஞ்ர் ஷேவ் செய்த படி ஆர்ம்ஸ் காட்டுவார், அவர் பக்கத்திலேயே அழகான ஸ்லீவ்லெஸ் யுவதி ஒருவர் இளைஞரின் கன்னத்தோடு கன்னம் இழைத்து எனக்கு அடிக்கடி உடற்பயிற்சியின் தாத்பரியத்தை உணர்த்துவார். நானும் "சொக்கா சொக்கா எனக்கில்லை எனக்கில்லை"ன்னு ஏக்கத்தோடு ஆட்டுக்கல்லைப் பார்ப்பேன்.
அதற்கப்புறம் நான் உடற்பயிற்சி கொஞ்சம் செய்தது - கல்யாணத்திற்கு கொஞ்ச நாட்கள் முன்பு. "சட்டையக் கழட்டி மண்டபத்துல உட்காருனும்ல" என்று நான் வெளி உலகுக்கு சமாதானம் சொன்னாலும், உண்மையான காரணம் பெண்ணோடு சித்தப்பா யாராவது "மாப்ள பொண்ண தூக்கிண்டு மண்டபத்தை மூனு தரம் சுத்தி வாங்கோ நம்ம சம்பிரதாயத்துல அது உண்டு"ன்னு தேரை இழுத்து தெருவில் விட்டுவிடுவார்களோ என்ற பயம் தான்.
அப்புறம் ஜிம் கலாசாரம் வந்த பிறகு ஒரு நாள் ஷோக்காய் போய் சுத்திப் பார்த்துவிட்டு வந்ததோடு சரி, அந்தப் பக்கமே போகவில்லை. அப்புறம் எங்க ஊரில் ஒரு வாரம் ஓசி ட்ரயல் குடுத்தார்கள். தங்கமணி அரி அரியென்று நச்சரித்ததில் அந்த ஒரு வாரம் போய்விட்டு வந்தேன். இந்த லட்சணத்தில் முதல் நாள் ட்ரெயினர் வேறு. எப்படி நிற்கவேண்டும் உட்காரவேண்டும் என்பதிலிருந்து ஆரம்பித்தார். ரெண்டு மணி நேரம் எல்லாதையும் விளக்கு விளகென்று விளக்கி விட்டு ஏதாவது டவுட்டு இருக்கிறதா என்று கேட்டார். "நாலு பேர் வந்து புழங்குகிற இந்த மிஷினெல்லாம் இப்படி பள பளன்னு வைச்சிருக்கீங்களே..டெய்லி எண்ணை போட்டு துடைப்பீங்களா" என்று நான் கேட்ட டவுட்டு அவரை விட தங்கமணிக்குப் பிடிக்கவில்லை. சரி நான் பாட்டுக்கு ஸ்விம்மிங் பூல் ஜன்னல் பக்கமா ஒரு சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதுவும் பிடிக்கவில்லை. எனக்கு என்னடா பெரிய ஜிம் என்றாகிவிட்டது.
சமீபத்தில் ஒரு நாள் சும்மா என் ஆர்ம்ஸை தொட்டு பார்த்த என் சின்ன மகள் ஆஹா ஓஹோ என்று பாராட்ட நானும் என்னுடைய ஆட்டுக்கல் புராணத்தை எல்லாம் ஜம்பம் விட்டு தற்போது நிலமை விபரீதமாகி நான் மீண்டும் சிக்ஸ் பாக்ஸ் காட்ட வேண்டும் என்று மகள்கள் கெடு விடுத்திருக்கிறார்கள். என்னம்மோ முன்னாடி ஏழெட்டு பாக் இருந்த மாதிரி நானும் சில பல உபகரணங்கள் வாங்கி கையைக் காலை சுத்திப் பார்க்கிறேன், கண்ணாடியில் ஃபாமிலி பாக் தான் தெரிகிறதே தவிர சிக்ஸ் பாக்ஸ் வருகிற வழியக் காணும். தேவுடா...இன்னும் எத்தனை நாளோ..
ஊரில் கன்னுக்குட்டி கணேசன், முந்தின நாள் ராத்திரி ஊற வைத்த கொண்டக் கடலையை வாயில் போட்டு ப்ரீத்தி மிக்ஸி மாதிரி பதினைந்து செகண்டில் நைஸாய் அரைத்து விட்டு தீர்த்தபதி பள்ளி க்ரவுண்டில் பத்து தரம் ஓடி வருவான். அதற்கப்புறம் மஸ்தான் ஜிம் என்று போர்டு போட்டிருக்கும் இடத்தில் இவனை மாதிரியே நாலு பேர் கொண்டக் கடலையை அரைத்து விட்டு பெரிய பெரிய கர்லா கட்டைகளை சுத்திக் கொண்டிருப்பார்கள். அந்த இடம் வழியாகப் போனாலே எனக்கு சினிமாவில் "மச்சி இன்னிக்கு முடிச்சிருவோமா" என்று வத்தக் குச்சிப் பெண்ணை நாலு பேர் வசனம் பேசி, தடிமாடு மாதிரி விழுந்து புடுங்கும் காட்சி தான் நியாபகத்துக்கு வரும்.
"அவாளுக்கெல்லாம் குஷ் குஷ்ன்னு உடம்பிருக்கு, எக்சர்சைஸ் பண்றா. உனக்கு சதைப் பத்தே இல்லியே இதுல என்னத்த கட்டை சுத்த போற? மாமிட்ட சொன்னா கொண்டக் கடலைய பேஷா சுண்டல் பண்ணித் தருவா முதல்ல சாப்பிட்டு உடம்ப தேத்து " என்று மஸ்தான் ஜிம் பத்து ரூபாய் கட்டணத்திற்காக மாமா தடா போட்டுவிட்டார். ஊர்ல அவன் அவன் நாட்டுக் கட்டையா பார்த்து சுத்துறான் ஒரு கர்லா கட்டைய சுத்தறதுக்கு இத்தனை அடக்குமுறையா என்று சோகமாகி விட்டது.
என் ஆதங்கதைப் பார்த்த மாமி "ஏண்டா கட்டைய தான் சுத்தனமா...கல்ல சுத்தப் பிடாதான்னு" வழிகாட்ட...விட்டால் வயசான பாட்டிகளுடன் ஆலமரத்தை சுத்தச் சொல்லிவிடுவார்கள் என்று நானும் "கண்ணா எத சுத்தறோங்கிறது முக்கியமில்ல எப்படி சுத்தறோங்கிறது தான் முக்கியம்" என்று தூணிடம் டயலாக் பேசிவிட்டு ஆட்டுக் கல்லை தூக்கி தோளை சுற்றி சுத்த ஆரம்பித்தேன். இந்த உடற்பயிற்சியில் பெரிய பிரச்சனையே முதல் நாள் இருக்கும் ஆர்வக் கோளாறு தான். அடுத்த நாளே ஆர்னால்டுக்குப் போட்டியாய் களத்தில் இறங்கவேண்டும் என்று நான் ஆட்டுக் கல்லை சுத்திய சுத்தில் உளுந்தைப் போட்டிருந்தால் ரெண்டு ஊருக்கு தோசை வார்த்திருக்கலாம் அவ்ளோ சுத்து.
அடுத்த நாள் உடம்பை சுத்தமாக அசைக்க முடியவில்லை. கண்ணாடியைப் பார்க்கக் கூட கையை தூக்க முடியவில்லை. தோள் பட்டை போயே போயிந்தி.
கதக்களி மாதிரி கண்ணை மட்டுமே சுத்த முடிந்தது. "சொன்னதக் கேக்காம ஆட்டுக் கல்ல சுத்தினா இப்படித் தான் ஆட்டுக் குட்டி மாதிரி பம்ம வேண்டி இருக்கும்" என்று கண்ணுக்குட்டி கணேசனுக்கு ஒரே கெக்கலிப்பு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு திரும்ப ஆட்டுக்கல்லை சுத்தலாம் என்று ஒரு வாரம் ஒத்திவைப்பு தீர்மானம் போட்டு, திரும்ப ஆரம்பித்தது, ஒரேடியா எக்சர்சைஸ் பண்ணிணா உடம்புக்கு ஆகாது என்று ஒரு நாள் விட்டு ஒரு நாளாகி, அப்புறம் வாரம் ஒரு முறையாகி இருவாரத்திற்கு ஒரு முறையாகி கடைசியில் ஆயுத பூஜைக்கு சந்தன குங்குமப் பொட்டு இட்டு பூஜை செய்யுமளவுக்கு உடற்பயிற்சி ரொம்ப அன்யோன்யமாகிப் போனது.
இருந்தாலும் அவ்வப்போது டீ.வியில் ஒரு கட்டுமஸ்தான இளைஞ்ர் ஷேவ் செய்த படி ஆர்ம்ஸ் காட்டுவார், அவர் பக்கத்திலேயே அழகான ஸ்லீவ்லெஸ் யுவதி ஒருவர் இளைஞரின் கன்னத்தோடு கன்னம் இழைத்து எனக்கு அடிக்கடி உடற்பயிற்சியின் தாத்பரியத்தை உணர்த்துவார். நானும் "சொக்கா சொக்கா எனக்கில்லை எனக்கில்லை"ன்னு ஏக்கத்தோடு ஆட்டுக்கல்லைப் பார்ப்பேன்.
அதற்கப்புறம் நான் உடற்பயிற்சி கொஞ்சம் செய்தது - கல்யாணத்திற்கு கொஞ்ச நாட்கள் முன்பு. "சட்டையக் கழட்டி மண்டபத்துல உட்காருனும்ல" என்று நான் வெளி உலகுக்கு சமாதானம் சொன்னாலும், உண்மையான காரணம் பெண்ணோடு சித்தப்பா யாராவது "மாப்ள பொண்ண தூக்கிண்டு மண்டபத்தை மூனு தரம் சுத்தி வாங்கோ நம்ம சம்பிரதாயத்துல அது உண்டு"ன்னு தேரை இழுத்து தெருவில் விட்டுவிடுவார்களோ என்ற பயம் தான்.
அப்புறம் ஜிம் கலாசாரம் வந்த பிறகு ஒரு நாள் ஷோக்காய் போய் சுத்திப் பார்த்துவிட்டு வந்ததோடு சரி, அந்தப் பக்கமே போகவில்லை. அப்புறம் எங்க ஊரில் ஒரு வாரம் ஓசி ட்ரயல் குடுத்தார்கள். தங்கமணி அரி அரியென்று நச்சரித்ததில் அந்த ஒரு வாரம் போய்விட்டு வந்தேன். இந்த லட்சணத்தில் முதல் நாள் ட்ரெயினர் வேறு. எப்படி நிற்கவேண்டும் உட்காரவேண்டும் என்பதிலிருந்து ஆரம்பித்தார். ரெண்டு மணி நேரம் எல்லாதையும் விளக்கு விளகென்று விளக்கி விட்டு ஏதாவது டவுட்டு இருக்கிறதா என்று கேட்டார். "நாலு பேர் வந்து புழங்குகிற இந்த மிஷினெல்லாம் இப்படி பள பளன்னு வைச்சிருக்கீங்களே..டெய்லி எண்ணை போட்டு துடைப்பீங்களா" என்று நான் கேட்ட டவுட்டு அவரை விட தங்கமணிக்குப் பிடிக்கவில்லை. சரி நான் பாட்டுக்கு ஸ்விம்மிங் பூல் ஜன்னல் பக்கமா ஒரு சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதுவும் பிடிக்கவில்லை. எனக்கு என்னடா பெரிய ஜிம் என்றாகிவிட்டது.
சமீபத்தில் ஒரு நாள் சும்மா என் ஆர்ம்ஸை தொட்டு பார்த்த என் சின்ன மகள் ஆஹா ஓஹோ என்று பாராட்ட நானும் என்னுடைய ஆட்டுக்கல் புராணத்தை எல்லாம் ஜம்பம் விட்டு தற்போது நிலமை விபரீதமாகி நான் மீண்டும் சிக்ஸ் பாக்ஸ் காட்ட வேண்டும் என்று மகள்கள் கெடு விடுத்திருக்கிறார்கள். என்னம்மோ முன்னாடி ஏழெட்டு பாக் இருந்த மாதிரி நானும் சில பல உபகரணங்கள் வாங்கி கையைக் காலை சுத்திப் பார்க்கிறேன், கண்ணாடியில் ஃபாமிலி பாக் தான் தெரிகிறதே தவிர சிக்ஸ் பாக்ஸ் வருகிற வழியக் காணும். தேவுடா...இன்னும் எத்தனை நாளோ..
63 comments:
//சுமார் இருபத்தி ஓரு வருடங்களுக்கு முன்னால் நான் இரண்டு மாத சின்னக் குழந்தையாய் இருந்த போது,//
இது உங்களுக்கே அநியாயமா தோணலை?
appada, coimbatore/canada anony illa! adhu varaikum sandosam! :D
rofl!!!! எதை சொல்லுவேன் எதை விடுவேன்.. சீ பாவம் தங்கமன்னிக்கு தான் எத்தனை ஆசை ஆர்னால்டு மாதிரி அதிரிபுதிரியா ஒரு ரங்கு வேணும்னு.. ஹும்ம்ம்ம்!
தல, லண்டன் தியேட்டரிலும் இதே படம்தான் ஓடுதா?? பாஸ்டனிலும் படம் பிச்சிக்கிட்டு தாறுமாறா ஓடுது, பாப்போம் எத்தினி நாளைக்குன்னு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
/சுமார் இருபத்தி ஓரு வருடங்களுக்கு முன்னால் நான் இரண்டு மாத சின்னக் குழந்தையாய் இருந்த போது,//
நாற்பத்தி ஒரு வருடம் என்று வரவேட்னும் யுவர் ஹானர்
//தல, லண்டன் தியேட்டரிலும் இதே படம்தான் ஓடுதா?? பாஸ்டனிலும் படம் பிச்சிக்கிட்டு தாறுமாறா ஓடுது, பாப்போம் எத்தினி நாளைக்குன்னு//
சென்னையிலும் இதுதான்
:-))
//சுமார் இருபத்தி ஓரு வருடங்களுக்கு முன்னால் நான் இரண்டு மாத சின்னக் குழந்தையாய் இருந்த போது, //
Hம்ம்ம்... நான்லாம் அப்ப பொறக்கவே இல்லை.... கஷ்டப்பட்டுதான் கற்பனை பண்ணிப் பாக்கணும்...
@ badhu,
Repeatu
@ karthi sir,
ha ha. Thanks for the info
@ Mahesh,
same blood :D
அப்புறம் ஜிம் கலாசாரம் வந்த பிறகு ஒரு நாள் ஷோக்காய் போய் சுத்திப் பார்த்துவிட்டு வந்ததோடு சரி, அந்தப் பக்கமே போகவில்லை. அப்புறம் எங்க ஊரில் ஒரு வாரம் ஓசி ட்ரயல் குடுத்தார்கள்
மீண்டும் கலக்கல் பதிவு
புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் விழா வாழ்த்துக்கள்
//சுமார் இருபத்தி ஓரு வருடங்களுக்கு முன்னால் நான் இரண்டு மாத சின்னக் குழந்தையாய் இருந்த போது, குண்டு குண்டுன்னு பார்த்தாலே தூக்கிக் கொள்ளும் மாதிரி இருப்பேன் என்று வீட்டில் உள்ள இளம்பிராய ஃபோட்டோக்கள் சொல்லிக் கேள்வி.//
இதப் படிச்ச உடனே...டுபுக்கு தலையோட புனைவு' ன்னு நெனச்சிகிட்டே கீழப் பாத்தா காமிடின்னு இருக்கு...! "நான் அப்டியே ஷாக்காயிட்டேன்...!" பொய் சொல்லுறதுக்கு ஒரு அளவு இல்லையா, எங்க கொள்ளுத் தாத்தா "ரிப்பீட்டு சுந்தர்ராஜன் (மேஜர்)" க்ளாஸ்மேட்டு தானே தல நீங்க...! ஆப்டர் எ லாங் டைம், தலகிட்டேயிருந்து ஒரு சூப்பர் டண்டணக்கா போஸ்ட்...!
என்னம்மோ முன்னாடி ஏழெட்டு பாக் இருந்த மாதிரி நானும் சில பல உபகரணங்கள் வாங்கி கையைக் காலை சுத்திப் பார்க்கிறேன், கண்ணாடியில் ஃபாமிலி பாக் தான் தெரிகிறதே தவிர சிக்ஸ் பாக்ஸ் வருகிற வழியக் காணும். தேவுடா...இன்னும் எத்தனை நாளோ..
.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சிரிச்சு முடியல....
//கண்ணாடியில் ஃபாமிலி பாக் தான் தெரிகிறதே தவிர சிக்ஸ் பாக்ஸ் வருகிற வழியக் காணும்//
ஷாப்பிங் போயி மெட்டல்லயோ ப்ளாஸ்டிக்லயோ வாங்கிட்டு வர வழியை பார்க்காம, கண்ணாடியையே பாத்துட்டுருந்தா சிக்ஸ் பாக்ஸ் எப்படி வரும்?? :-)))))
அஞ்சு பாக்ஸ் வாங்கினா, ஒண்ணு ஃப்ரீயா தரமாதிரி ஸேல் போட்டிருக்கும் கடைகள் உங்கூர்ல இல்லியா :-))))
ROTFL:))))
21 years ago when u were 2 months old??? How can you over estimate? Is it not 16 years ago? Are you getting amnesia?? Oh no...
Just read "How to convert rice packs to six packs - The easy answer to fitness" :)
டுபுக்கு அண்ணாச்சி, உடம்பை ஏத்தர்துக்காக எதோ லேகியம் எல்லாம் முயற்சி பண்ணினேளே அதையும் சேர்த்து சொல்லி இருக்காலாம். இருந்தாலும் நீங்க மனசை தளரவிடாதீங்கோ, வாரம் ஒரு தடவை நம்ப கனடா/கோவை அனானி வீட்டுக்கு போய் சாப்பிட்டேள்னா 10 பேக்கே வந்தாலும் வரலாம்...:) (மிச்சத்தை சுபா வந்து சொல்லுவாங்க)
//அவன் அவன் நாட்டுக் கட்டையா //.adhenna sir "Naattu kattai" unga thangamani unga word usage a gavanikka mattaargala..Neenga oru family man..you have daughters..adha manasula vechu ganniyamaa refer pannaa nalla irukkum..
How come women folk out here have not even made a note of it? andha alavukku sensitivity illama pochaa..
simply super
Absolutely hilarious!! Hello, I'm a new entrant (is there such a word?)- love your 'mokkais' but the comments are great!! They are sometimes more hilarious than the posts themselves........bravo everybody!
Loved the lines about rolling the eyes as in Kathakali.....ha ha ha............
நல்ல பதிவு. டுபுக்கார் நல்ல form -க்கு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் போலும். மூன்று இடங்களில் டுபுக்கின் டச் உள்ளது.
செரி இனி நாம வந்த வேலைய பாப்போம். நானும் எவ்ளோ சிரமப்பட்டு, செய்யற எக்ஸ்பெரிமென்ட்க்கு நடுவுல இருக்கிற incubation டைம்ல, வாத்தியார்க்கு தெரியாம, வரிசில நிக்குற patient களுக்கு தெரியாம, ப்ளாக் முழுக்க படிச்சு மொத ஆளா வந்து அனானியா கமெண்ட் எழுதினேன். இந்த 21 வயது 6-pack குழந்தைய பாராட்டாம, ஒரு காமெடி பீசா ஆக்கிபுட்டிங்களே. ஆனா ஒன்னு. நமக்கொரு புது அடைமொழி கெடைச்சிருக்கு. கோவை/கனடா அனானின்னு. இருந்தாலும் Porkodi போர்க்கொடி காண்பித்ததால் இன்றிலிருந்து அவர் கோவை/கனடாக்கு முதல் எதிரி ஆகிறார். சுபா அவர்களை கண்காணிக்க உளவுப்பிரிவு தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆயினும் தக்குடு அவர்களின் பெயரை இந்த ப்ளாக்-இன் வெளி விவகாரத்துறை அமைச்சர் பதவிக்கு கோவை/கனடா முன்மொழிகிறது (நமக்குன்னு ஒரு ரெண்டு பேர் வேணும்ல). தக்குடு அவர்கள் என் வீட்டில் உணவுண்டால் 10-pack கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார். நானே தற்போது packed food தான் விழுங்கிக்கொண்டு இருக்கிறேன் என்பதை இந்த ப்ளாக் தெரிந்து கொள்ளட்டும்.
நான் ஆட்டுக் கல்லை சுத்திய சுத்தில் உளுந்தைப் போட்டிருந்தால் ரெண்டு ஊருக்கு தோசை வார்த்திருக்கலாம்
மனதார ரசித்தேன்...................
மனம்விட்டு இரசித்தேன்.. வாழ்த்துக்கள்.. :-)
@ கனடா/கோவை அனானி - அனானி, வாங்கோ! வாங்கோ!செளக்கியமா இருக்கேளா? எங்க நீங்க வராமபோயிடுவேளோனு கவலைபட்டுண்டு இருந்தேன். நீங்களும் நம்ப டுபுக்கார் மாதிரி யூத்தா இல்லைனா நெஜமாவே யூத்தா?..:P நம்ப மாத்தி மாத்தி பதில் சொல்லிக்கலாம் சரியா, டுபுக்காரோட ப்ளாக் ஏற்கனவே 'கிழக்கே போகும் ரயில்' மாதிரிதான் அதனால அவர் கோச்சுக்கமாட்டார்...:))
என்றும் வம்புடன்,
தக்குடு
//கடைசியில் ஆயுத பூஜைக்கு சந்தன குங்குமப் பொட்டு இட்டு பூஜை செய்யுமளவுக்கு உடற்பயிற்சி ரொம்ப அன்யோன்யமாகிப் போனது.// :)))
//தேரை இழுத்து தெருவில் விட்டுவிடுவார்களோ என்ற பயம் தான்.//
கடைசீல, தேரையை எடுத்து வீட்டுக்குள்ள விட்டுட்டாங்களோ? :)))
//நான் பாட்டுக்கு ஸ்விம்மிங் பூல் ஜன்னல் பக்கமா ஒரு சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதுவும் பிடிக்கவில்லை.//
இதைப் பண்ணினால், சதை பிடிக்காதே இடுப்பு முறிந்திருக்கும் அல்லது முதுகு தானே வீங்கிப் போயிருக்கும்? :)))
முப்பது வருஷம் முன்னாடியே எழுதுனதா????
முதல் வரிய படிச்சவுடனேயே இது மீள்பதிவுன்னு கண்டுபுடிச்சுட்டேன்.
\கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு திரும்ப ஆட்டுக்கல்லை சுத்தலாம் என்று ஒரு வாரம் ஒத்திவைப்பு தீர்மாணம் போட்டு, திரும்ப ஆரம்பித்தது, ஒரேடியா எக்சர்சைஸ் பண்ணிணா உடம்புக்கு ஆகாது என்று ஒரு நாள் விட்டு ஒரு நாளாகி, அப்புறம் வாரம் ஒரு முறையாகி இருவாரத்திற்கு ஒரு முறையாகி கடைசியில் ஆயுத பூஜைக்கு சந்தன குங்குமப் பொட்டு இட்டு பூஜை செய்யுமளவுக்கு உடற்பயிற்சி ரொம்ப அன்யோன்யமாகிப் போனது.\
Pathivum ithae frequency ....
\சில பல உபகரணங்கள் வாங்கி கையைக் காலை சுத்திப் பார்க்கிறேன், கண்ணாடியில் ஃபாமிலி பாக் தான் தெரிகிறதே தவிர சிக்ஸ் பாக்ஸ் வருகிற வழியக் காணும். தேவுடா...இன்னும் எத்தனை நாளோ.. \
\sriram said...
தல, லண்டன் தியேட்டரிலும் இதே படம்தான் ஓடுதா?? பாஸ்டனிலும் படம் பிச்சிக்கிட்டு தாறுமாறா ஓடுது, பாப்போம் எத்தினி நாளைக்குன்னு\
Renga and Sri annankala
40 vayasukku mela aanalae ippadithann...
Covai/Canada anani nama jathi mathri theriyuthe?
அண்ணாசி, என்னதான் பிளாக் என்றாலும் முதல் வரியில் இருந்தே பிழைகள் தாண்டவம் ஆடுது.
கொஞ்சம் படித்துவிட்டு, பிழைத்திருத்தம் பார்த்துவிட்டு, பிளாககுல ஏத்துங்க :-)
//சுமார் இருபத்தி ஓரு வருடங்களுக்கு முன்னால் நான் இரண்டு மாத சின்னக் குழந்தையாய் இருந்த போது,//
ஒஹோ ஹோ ..நிங்க நம்ம செட்டா..சுமார் கொஞ்சம் பெரிய சுமார் அப்படித்தானே..
இதை படிச்சு சிரிச்சதுல ஒழுங்கா போயிட்டிருந்த ஜிம்முக்கு இன்னைக்கு கட் அடிச்சாச்சு...
ஹிஹி.. உஷா மேடம், அவர் முதல் வரின்னா நீங்க முதல் வார்த்தையிலேயேவா!! நான் அன்னாசினு வேற படிச்சு தொலைச்சுட்டேன்! :P
ஹாஹா. பத்து சார், இதை படிக்கலேன்னா நீங்க ஒழுங்கா ஜிம்முக்கு போயிருப்பீங்க, இல்லே? அடாடாடாடா..
//இருந்தாலும் Porkodi போர்க்கொடி காண்பித்ததால் இன்றிலிருந்து அவர் கோவை/கனடாக்கு முதல் எதிரி ஆகிறார்.//
அனானி நீங்க packed foodஐ ஒரு கட்டு கட்டிட்டு வாங்க, நாம நிதானமா பேசலாம். பேசி தீர்க்க முடியாத பிரச்சினையே இல்ல உலகத்துல. ஐய்யய்யோ ப்ரின்சிபால் டுபுக்கு குச்சியை சுழட்டிட்டு வாராரு ஓடுங்கோள்.
டுபுக்கு,
கடசீல வெறுத்துப் போயி தண்டாலாவது எடுக்கக் கத்துப்போம்னு முயற்சி செஞ்சதுல கிடைச்ச விளைவுதான் முகம் மேலே பதிவுத் தலைப்புல இருக்கற படமா ஆனதுங்கற ரகசியத்த மட்டும் ஏன் சொல்லல??!!!
எ.ந(எல்லாவற்றிற்கும் நடுவில்,அதாவது பெட்வீட் தட்) வி.வி.சிரிக்க வைத்த பதிவு.
பேசாம படுத்துகிட்ட சைக்கிள் ஓட்டற பயிற்சி பண்ணிப் பாக்கலாமே.. # டவுட்டு 1
||நான் அன்னாசினு வேற படிச்சு தொலைச்சுட்டேன்! :P ||
அடங்க மாட்டீங்களா கேடி மேடம்..
:))
கொடி....//இதை படிக்கலேன்னா நீங்க ஒழுங்கா ஜிம்முக்கு போயிருப்பீங்க, இல்லே?//
உடம்புக்கு பயிற்சி ஜிம்மு..
மனசுக்கு பயிற்சி சிரிப்பு... ( உடம்பு வளையறதுக்கு தப்பிக்க என்னவெல்லாம் சாக்கு தேடுது... நா..ளைக்கு ஒரு மணி நேரம் முன்னாடி போய்க்கலாம்னு சமாதானம் வேற..)
எது அநியாயம்...அந்த ரெண்டு மாசத்த சொல்றீங்களா :P
பொற்கொடி - ///பாவம் தங்கமன்னிக்கு தான் எத்தனை ஆசை ஆர்னால்டு மாதிரி அதிரிபுதிரியா ஒரு ரங்கு வேணும்னு//
- நீங்க இப்படியெல்லாம் சொன்ன வழிக்கு வர மாட்டீங்க. நான் கீபோர்ட எடுத்தாத் தான் சரிபடும் :P
ஸ்ரீராம் - அங்க உங்க ட்ரெயினர் கிட்டேர்ந்து எதாவது டிப்ஸ் தேறிச்சுனா சொல்லுங்க :P
எல்.கே - ஏங்க நீங்க எழுதும் போது வரவேண்டியதையெல்லாம் சொல்கிறீர்கள் யுவர் ஆனார்? :P
தெய்வசுகந்தி - நன்றி ஹை :))
மகேஷ் - எனக்கே இவ்ளோ தர்ம அடி விழுதே உங்கள நினைச்சா எனக்கு பாவமா இருக்கு :))))))))
அனாமிகா - நீங்க பொறக்காத குழந்தை நான் ஒத்துக்குறேன் அதே மாதிரி நீங்களும் நான் சொன்னத ஆமோதியுங்கள் :))
ராம்ஜி - மிக்க நன்றி சாரே உங்களுக்கும் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் வாழ்த்துகள்.
சதீஷ் குமார் - என்னாது சுந்தர்ராஜன் உங்க கொள்ளு தாத்தாவா...அப்போ நீங்க எனக்கு சின்ன தாத்தா முறையா :)))
சித்ரா - மிக்க நனறி மேடம்.
அமைதிசாரல் - :))) உங்க ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :))
வித்யா - மிக்க நன்றி மேடம்
பொயட்ரீ - 16 தாங்க கரெக்டு ...ஆனா உண்மையான வயச சொல்லவேண்டாமேன்னு பார்த்தேன் :)))) ரைஸ் பேக்...டு சிக்ஸ் பேக் படிக்கிறேன் படிக்கிறேன்
தக்குடு - நீ வேற இப்போ தான் கனடா அனானி ரெண்டாவது கமெண்டே போட்டிருக்காங்க.. :))
Anony - after our election thread now I see your personal agenda against me and politicising things.
இரவு வானம் - மிக்க நன்றி ஹை
ரிவால்வர் ரீட்டா - ஆஹா பெயரே மிரட்டுதே. வாங்க வாங்க வந்து ஜோதில ஐய்க்கியமாகுங்க மிக்க நன்றி.
கனடா அனானி - வந்த உடனேயே கும்மி க்ரூப்ஸ்ல சேர்ந்துட்டீங்க போலயே :))) அடேங்கப்பா போஸ்ட்லாம் வேற குடுக்குறீங்க :))
ரிவால்வர் ரீட்டா /கனடா அனானி - ரெண்டு நாளா மேலே இருக்கிற இன்னொரு அனானி கொசுத்தொல்லை தாங்க முடியலை அதுனால ப்ளாகர்ல ரெஜிஸ்டர் பண்ணிக்கோங்க ப்ளீஸ்.
ராஜகோபாலன் - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு
சுபானு - மிக்க நன்றி ஹை உங்கள் பாராட்டுக்கு
தக்குடு - //அதனால அவர் கோச்சுக்கமாட்டார்.// டேய் அத நான் சொல்லனும் :)))
மதி - //டைசீல, தேரையை எடுத்து வீட்டுக்குள்ள விட்டுட்டாங்களோ? :)))// அண்ணாச்சி என்னம்மோ கோவம் போல எம்மேல :P
//இதைப் பண்ணினால், சதை பிடிக்காதே இடுப்பு முறிந்திருக்கும் அல்லது முதுகு தானே வீங்கிப் போயிருக்கும்?// சந்தேகமே இல்லை கோவமே தான் :))
அறிவிலி - :)))) ஹைய்யோ ஹைய்யோ ஓட்டுறாரமாம் :P
வாசகன் - பதிவு ஹீ ஹீ..நாப்பது வயசுக்கு மேலா இப்படித்தானா...நீங்க சொன்னா சரி. ஆனா அதுக்கு இன்னும் பத்தொன்பது வருஷம் இருக்கே பார்த்துக்கலாம் சார். :))
நீங்களும் ஆராய்ச்சியாளரா ??
உஷா - மிக்க நன்றி மேடம். இப்படி வெறும்ன குட்டு வைத்துவிட்டு போவது எழுத்தாளினி ஏகாம்பரிக்கு அடுக்குமா?...நானும் திரும்ப திரும வாசிச்சு பார்க்குறேன் ஒன்னு ரெண்டு தான் தட்டுப் படுது. ஆனா பாருங்க உங்க ஒத்த வரில ரெண்டு தப்பு கண்ணுல படுது. அடுத்தவங்க விடுற தப்பு தான் சீக்கிரமா கண்ணுல படுமோ :P (என்னை மட்டுமே நக்கலடித்துக் கொள்கிறேன் சத்தியமா உங்க பின்னூட்டத்தை மதிக்கிறேன் )
பத்மநாபன் - எதுக்கு வம்பு நீங்க எந்த (ஷேவிங்) செட்டுன்னு எனக்குத் தெரியாது ஆனா எனக்கு இருப்பத்தி ஒன்னு அவ்ளோதான் :P
பொற்கொடி - எனக்கு ரெண்டு :))
அறிவன் - நீங்களுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மிக்க நன்றி பாராட்டுக்கு :))
பத்மநாபன் - எப்டீங்க இப்படி சமாளிக்கிறீங்க...கத்துக்குறேன் உங்ககிட்டேர்ந்து :P
//நானும் சில பல உபகரணங்கள் வாங்கி கையைக் காலை சுத்திப் பார்க்கிறேன், கண்ணாடியில் ஃபாமிலி பாக் தான் தெரிகிறதே தவிர சிக்ஸ் பாக்ஸ் வருகிற வழியக் காணும். தேவுடா...//
classic dubukku humour! :D
@ டுபுக்கு: நான் எழுதறதெல்லாம் பதிவுங்களா? அப்படின்னா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சடலாம் போல இருக்குதே?
@ பொற்கொடி: Packed food சாப்பிடறதுக்கு சும்மா இருக்கலாங்க.
@ வாசகன்: நாம தப்பிச்சு ஓடி கனடா வந்தாலும் காப்ஸ்-கிட்ட மாட்டி விட ஆள் இருக்கும் போல இருக்குதே?!
@ தக்குடு: நல்லா இருக்கேங்க. விசாரிப்புக்கு நன்றி. நாம 250 வயசு யூத். என்ன வயசு கம்மி தான? அப்பறம் உங்க பதிவெல்லாம் கூட படிச்சங்க. இப்ப தான் பிரபல பதிவுகள் முடிச்சிருக்கேன். நல்லா வந்திருக்கு. சில இடங்களில் நகைச்சுவை பிதுங்கி வெளியே தொங்குது. இந்த உடற்பயிற்சி பதிவ போலவே. டுபுக்காரின் பழைய பதிவுகளில் முழு பக்கமும் நகைச்சுவை இயல்பாக வழிந்தோடும். அந்த இயல்பு தான் நாம கட்டுரை வாசிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் சிரிக்க வெய்க்கும். உம்மாச்சி பதிவுகள் நல்லதொரு ஆரம்பம். அப்பறம் சிவலிங்கத்துக்கு அலங்காரம் எல்லாம் பேஷா வந்திருக்கு. எங்க ஊர்ல பண்ணதா? நான் வில்வத்த மட்டும் வெச்சு காலத்த நகத்திட்டு இருக்கேன். வில்வத்துக்கு தான் 6 மாசம் தீட்டில்லையே. கழுவி பயன்படுத்த ஆகமத்தில இடமிருக்கு. அப்பறம் டோஹால அர்க்கியமெல்லாம் எந்த மாடிலிருந்து குடுக்கறேள்? இன்னொரு விஷயம். அப்பாவி தங்கமணி இன்னு ஒரு அக்கா (பாட்டி?) இருப்பாங்க போல இருக்குது. அவுகள நான் டுபுக்காரோட தங்கமணி-இன்னு நெனச்சு கன்பியுஸ் ஆயிட்டேன். கடசில அவங்க நம்ம மாறி ஒரு கோவை/கனடா போல.
This is covai/canada. I just created a google account. Profile is yet to be created. Looks like Dubukkar is not allowing anonymous comments anymore.
//உஷா - மிக்க நன்றி மேடம். இப்படி வெறும்ன குட்டு வைத்துவிட்டு போவது எழுத்தாளினி ஏகாம்பரிக்கு அடுக்குமா?...நானும் திரும்ப திரும வாசிச்சு பார்க்குறேன் ஒன்னு ரெண்டு தான் தட்டுப் படுது. ஆனா பாருங்க உங்க ஒத்த வரில ரெண்டு தப்பு கண்ணுல படுது. அடுத்தவங்க விடுற தப்பு தான் சீக்கிரமா கண்ணுல படுமோ :P (என்னை மட்டுமே நக்கலடித்துக் கொள்கிறேன் சத்தியமா உங்க பின்னூட்டத்தை மதிக்கிறேன் )//
வயிறு வலிக்குது..... தாங்க முடியலை...அய்யா சாமி ...ஆளை விடுங்க ...! நான் இந்த விளையாட்டுக்கு வரலேப்பா... இந்த வம்பு சண்டையெல்லாம் வேண்டாம்னு தான் நான் இந்த நக்கீரன் தொழிலையே விட்டுடலாம்னு பாக்கறேன்! இருந்தாலும் என்னையும் மீறி அப்பப்போ ஏதாவது வாயிலேருந்து வந்து விழுந்துடும்!:)))
கின்னஸ் புக்கிலே 350 ஆவது பக்கத்திலே போட்டிருக்கா மாதிரி டுபுக்கார் பதிவை விடவும் கும்மியும், கச்சேரியும், அவரோட நிரவலும் தான் களை கட்டுது....!
அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் பண்ணிட்டவங்க யாரும் ஒரு மாசத்துக்குள்ள என்னோட ப்ளாக் பக்கம் தலை கூட வச்சுப் படுக்கக் கூடாது ன்னு ஒரு Standing Disclaimer கொட்டை எழுத்துல பேனர்லேயே போட்டுடுங்க! இல்லேன்னா....வருஷம் பூரா கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடக்க வச்சே உங்க பாமிலி பேக்கை சிக்ஸ் பேக்கா கொறைச்சிடுவாங்க! :)))
//vmb512 said... Looks like Dubukkar is not allowing anonymous comments anymore. //
@டுபுக்கார்: சுப்ரீம் கோர்ட்டுலேர்ந்து உங்களுக்கு சம்மன் வருது...வருது..... வந்துகிட்டே இருக்கு! ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் (பின்னே என்ன, வக்கீலுங்க எல்லாம் சாப்பாடு தண்ணி இல்லாத சாவணுமா!) ஆனால் ஒரே ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்பது தானே அடிப்படை நியதி (அதுக்குத்தானே வருஷக் கணக்கிலே தீர்ப்பே சொல்லாம நாங்க வழக்கை இழுக்கிறோம்! அதுக்குள்ளே அவனாவே செத்துடறான்...எங்க மேல பழி விழலை பாருங்க!)
நீங்க எப்படி, ஒரே ஒரு அனானி வம்பு பண்ணினார் என்பதால் (அவரிடம் கூட நீங்க அளவுக்கு மீறிய மரியாதையுடனும், பண்புடனும், சுய பரிசீலனையின் பேரில், அழகாகவும் சொற்போர் செய்தீர்களே!) நிரபராதிகளான ஆயிரம் அனானிகளை அநியாயமாகத் தண்டித்து விட்டீர்களே! இதையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!
உங்களுக்குத் தெரியுமே, உங்கள் பதிவில் அனானியாக வந்து பின்னூட்டம் எழுதுகிறவர்கள், ஒரு கட்டத்துக்கு மேல் படித்து விட்டு அப்படியே போக முடியாமல், மனம் துணிந்து பதில் பேசுபவர்கள் மட்டுமல்ல.... பதிவர்களாக மாறும் துடிப்பு உடையவர்கள்... அவ்வாறு ஆகும்படி உங்களால் தூண்டப் படுகிறவர்கள்! (பதிவுலகிற்கு நீங்கள் செய்யும் இந்த துரோகத்துக்கு ஈ. பீ. கோ. வில் உங்களுக்கு ஆயுள் தண்டனையே காத்திருக்கிறது, அது வேறு விஷயம்!). நானே அப்படி வந்தவன் தானே!
அதனால் தான் சொல்கிறேன், நீங்கள் நிச்சயம் இந்த முடிவை மாற்றிக் கொண்டு தான் ஆக வேண்டும்! வேறு வழியே இல்லை! டுபுக்கு செய்யக் கூடாத, செய்வார் என்று யாரும் எதிர் பார்க்காத மிகப் பெரிய தவறு ஒன்று நடந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன்!
@ vmb512: வாங்க சார், வாங்க! நீங்க எப்ப வருவீங்கன்னு தான் ஆவலா இருந்தேன்! இனிமே தான் இந்த அப்பிரசண்டி பிரமோஷனைப் பத்தி கற்பனை பண்ணிப் பாக்க முடியும்! அது சரி...நான் கோவையில ரெண்டு வருஷம் குடித்தனம் பண்ணியிருக்கேன்... இந்தக் கனடா தான் இன்னும் பார்க்கலை, ஏதோ பெரிய மனசு பண்ணி நீங்க தான் ஏற்பாடு பண்ணணும்! :)))
//பொற்கொடி Packed food சாப்பிடறதுக்கு சும்மா இருக்கலாங்க.//
ஏதோ ஊருக்குப் புதுசாச்சே.... ஊரைச் சுத்திப் பாக்கும்போது சாப்பாட்டுக்கு அலைஞ்சு நொந்து போகக்கூடாது பாவம்னு ஒரு மனிதாபிமானத்திலே பொற்கொடி பெரிய மனசு பண்ணி சாப்பாடு கட்டிக் குடுத்தா நீங்க இப்படியா அவங்களை எல்லார் முன்னாடியும் ஒரேயடியா கலாய்ப்பீங்க...! அதுவும் புத்தம் புது அப்பிரசண்டியான நீங்க!
நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
வன்மையாகக் கண்டிக்கிறேன்!
கண்டிக்கிறேன்!
:)))
தோடா! என்னுது சொற்குற்றம். ஆனால் டுபுக்காரின் தவறு பொருட்குற்றம் அல்லவா :-) (சமாளி)
@ vmb512: //இன்னொரு விஷயம். அப்பாவி தங்கமணி இன்னு ஒரு அக்கா (பாட்டி?) இருப்பாங்க போல இருக்குது.//
ஆனாலும் உங்களுக்கு ரொம்பவே தைரியம் தான்! நீங்க ஆழம் தெரியாத காலை விடறீங்க!
இட்லி மாமியைப் பத்தி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது... பாவம்.... உம்மாச்சி...இவரை வந்து காப்பாத்து! :)))
ஆமா இட்லி மாமியை எங்கே காணோம்??
ஜில்லுன்னு ஐஸ் மோர் கதை, சூடா மசால் வடைக் கதைன்னு இலக்கியப் பணி அதிகமோ?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீரம்
Humour in its classic form.
I had a hearty laugh.
There was a good scope for
mixing some Vennira adai Murthy mix
in some points but
Dubukku has conscientiously
avoided it.
Perhaps wanted to make the entire dish
strict vegetarian
==Dubukku YOU ROCK MAN==
Thanks a ton.
நல்ல பதிவு எப்பவும் போல நெறைய பொய் (22 வருசத்துக்கு முன்ன ரெண்டு மாச கொழந்தை) கொஞ்சம் மெய்... சூப்பர்... ROFL .....:)))
// Porkodi (பொற்கொடி)said... appada, coimbatore/canada anony illa! adhu varaikum sandosam!//
அதென்ன coimbatore/canada anony ? இல்ல பொறந்த வீடும் புகுந்த வீடும் சம்மந்தபட்டு இருக்கேன்னு ஒரு ஆர்வ கோளார்ல கேட்டேன்...:)))
//sriramsaid... ஆமா இட்லி மாமியை எங்கே காணோம்?? ஜில்லுன்னு ஐஸ் மோர் கதை, சூடா மசால் வடைக் கதைன்னு இலக்கியப் பணி அதிகமோ?//
நல்ல ஐடியா எல்லாம் குடுத்து இருக்கீங்க boss? அடுத்த தொடர் கதை அதான்...ஆரம்பிச்சுட்டு சொல்லி அனுப்பறேன் நாட்டாமை...ஹா ஹா... :)))
everything is getting fun. both the posts and the comments. want to type in tamil. soon going to download it. beware.
shuba mdu
சுபா,
என்எச்எம் னு தேடி தரவிறக்குங்க..மலையாளம் கன்னடத்துல எல்லாம் எழுதலாம்..தமிழிலும் !
Shuba said: //want to type in tamil. soon going to download it. beware. //
@ ஷுபா: வாங்க அம்மணீ ! வாங்க! ஏதோ நீங்க பாட்டுக்கு அப்பப்ப வந்தீங்க, ரத்தினச் சுருக்கமா English லேயே பேசிக்கிட்டிருந்தீங்க, போனீங்க! இந்த கேடியக்கா, பிக்குணி, இட்லி மாமியெல்லாம் ரவுண்டு கட்டி அடிக்கிற மாதிரி சகட்டு மேனிக்குத் திட்டவோ, மிரட்டவோ இல்லை எங்களை எல்லாம்...அப்படீன்னு கொஞ்சம் ஆறுதலா இருந்துது. இப்ப என்னடான்னா அதுவும் போச்சே! குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி ஏதாவது நடக்குதா இப்ப? போதாக் குறைக்கு உங்க பேரை நினைச்சாலே மொதல்ல ஷு தான் கண் முன்னாடி வந்து நிக்குது! :(((
எரியிற கொள்ளியில எண்ணெய ஊத்துராறு இந்த அறிவன் வேற! இந்தப் பேரை வச்சிக்கிட்டு இந்த மாதிரி காரியம் பண்ணலாமா நீங்க, அறிவன்? அதுவும் அளவிலா அறிவு படைத்தவர் என்று காண்பிக்க வாயிலயோ, மூளையிலேயோ நுழைய முடியாத அளவுக்கு ஒரு பெரிய (அறிவின்?!) அடையாளத்தை (RAM or ROM size!?) பெயருக்குப் பின்னாலேயே காட்டிப் பயமுறுத்துற நீங்களே இப்படிச் செய்யலாமா? தப்பு ப்ரதர் , ரொம்பத் தப்பு ! இங்கே நல்லார் ஒருவர் உளறேல் , அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் வசை! :)))
அது சரி, அம்மணீ! எனக்கு ஒரு முக்கியமான டவுட்டு! நான் மேலே குறிப்பிட்ட அந்த மூணு பேரை மாதிரி நீங்களும், பொம்பளை பேரை வச்சிக்கிட்டு உலா வரும் ஆம்பளையா, இல்லை பொம்பளை மாதிரியா, இல்லை நிஜமாவே பொம்பளை தானா? மனம் திறந்து பதில் சொன்னீங்கன்னா நாங்க கொஞ்சம் சூதானமா நடந்து எங்க உயிரையும், உடம்பையும், மானத்தையும் (அப்படீன்னா இன்னான்னு தானே கேக்கறீங்க.... கேப்பீங்க...கேப்பீங்க... நீங்க இதுவும் கேப்பீங்க...இதுக்கு மேலயும் கேப்பீங்க!) காப்பாத்திக்கலாம்னு ஒரு நப்பாசையில தான் கேக்குறோம் தாயீ!
வேஷம் கட்றதுக்கு முன்னாடியே உதார் உட்டு மிரட்டறீங்களே , அதனாலதான் கொஞ்சம் பயந்து போய்ட்டான்.... இந்த சின்னப் பய! இதையெல்லாம் ஒண்ணும் பெருசா எடுத்துக்காதீங்க, மனசில வச்சுக் (கருவறுக்காதீங்க, அப்புறமா)காதீங்க. ப்ளீஸ்! பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்! அவ்வ்வ்வவ்வ்வ்வவ் :)))
@ மதி
||அடையாளத்தை (RAM or ROM size!?) பெயருக்குப் பின்னாலேயே காட்டிப் பயமுறுத்துற நீங்களே இப்படிச் செய்யலாமா? தப்பு ப்ரதர் , ரொம்பத் தப்பு !||
ப்ளாகர் கொடுக்கும் தனிப்பட்ட ஐடி இது.
பதிவுலகில் சில விதயங்கள் நான்கைந்து வருடங்களுக்கு முன் நடந்தன...
பலரின் டவுசர் கிழிந்து,பலரின் தூக்கம் கெட்டது..
அதிலெல்லாம் சிக்காமல் இருக்கத்தான் இந்த ஐடியை வாலா வச்சுருக்கேன்.
போலி டோண்டு என்று கூகிளில் டைப்பி கிடைக்கும் டன் கணக்கான குப்பையைப் படித்தால் சிறிது தெளிவு கிடைக்கலாம் !
நெம்பப் பாவமா இருக்கு உங்கள நினைச்சா..
@அறிவன்#11802717200764379909:
//ப்ளாகர் கொடுக்கும் தனிப்பட்ட ஐடி இது.//
தெரிந்ததே! "புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி...." என்று மாணிக்கவாசகர் சொன்னது போல, பதிவுலகில் இப்படி ஒரு அவதாரம் எடுத்து அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது அல்லவா? சிவ சிவா! :)
//போலி டோண்டு என்று கூகிளில் டைப்பி கிடைக்கும் டன் கணக்கான குப்பையைப் படித்தால் சிறிது தெளிவு கிடைக்கலாம் !//
தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றிங்க!
//நெம்பப் பாவமா இருக்கு உங்கள நினைச்சா..//
:)))
சார் முடியல சார்.. சரியான நக்கல் சார்.. அடிக்கடி எழுதுனா புண்ணியம்
அருமையான பதிவு..
சிரிச்சு முடியலை..HAHAHA..
அருண் - மிக்க நன்றி ஹை :)
நடத்துங்க நடத்துங்க :))
மதி - கொஞ்ச வருடங்களுக்கு முன் வலையுலகில் எக்கச்சக்கமா பிரச்சனைகள் இருந்த போதே நான் அனானி ஆப்ஷனை எடுக்கவில்லை. தமிழ்மணம் முகப்பில் காட்டமாட்டோம் என்று சொன்ன போதும் நான் அதை எடுக்கவில்லை. இப்போது அந்த ஆப்ஷனை தற்காலிகமாக தூக்கி இருக்கிறேன் என்றால் ஒரு காரண்த்திற்காக. அந்த அனானி இங்கே கமெண்ட் அடிப்பவர்களை திட்ட
ஆரம்பித்தார். அந்த கமெண்டை எடுத்துவிட்டேன் என்றாலும் அது இருக்கும் வரை சம்பந்தப் பட்டவர் பார்த்தால் அவர் மனம் வருத்தப் படும். இருத்தாலும் நான் அந்த ஆப்ஷனை எடுத்தது வேறு விஷயத்திற்காக. போலி டோண்டு விவகாரம் இப்படித் தான் ஆரம்பித்தது.ரொம்ப மோசமாகி யாரும் கண்டுபிடிக்கமுடியாது என்று ஏகப்பட்ட பிராக்சியிலிருந்து அசிங்கமாய் கமெண்டு போட்டு கடைசியில் வேலை போய் காவல் நிலையத்தில் போய் முடிந்தது. அந்த அளவிற்கில்லாவிட்டாலும் ரெஜிஸ்டர்டு ஐடி இருந்தால் ட்ரேஸ் பண்ணுவது சுலபம் அதற்காகத் தான் (அல்ரெடி அந்த அனானியில் ஐ.பிக்கள் மார்க் செய்து வருகிறேன்) எல்லாம் கொஞ்ச நாட்கள் தான்.
உஷா - சரி சரி சரி :))))
ஸ்ரீராம் - இதோ வந்துட்டாங்க பாருங்க
கண்பத் - மிக்க நன்றி நண்பரே :)))
தங்கமணி - vmb512 -தான் அந்த கோயமுத்தூர் கனடா அனானி :))
சுபா - வாங்க வாங்க சீக்கிரம் வாங்க
சர்ணா - மிக்க நன்றி சாரே. அடிக்கடி ஹூம் நான் ஒன்னியும் சொல்லல :))
யோஹன்னா யாழினி - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு
http://www.aathi-thamira.com/2008/10/blog-post_5615.html
இதப் படிச்சிருக்கீங்களா.?
"ஃபாமிலி பாக்".... Super o Super. Chirichu mudiyalai...
Post a Comment