Thursday, April 14, 2011

Musical Sprint

கீழே காணும் ப்யூஷன் ம்யூசிக் ஆல்பம் அடியேன் எடிட் செய்தது. ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் எனது இனிய நண்பர். ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் பெரிய பெரிய இசை நிகழ்ச்சிகளில் பிரபலம். வயலின் மேஸ்ட்ரோ. தற்போது ராயல் பில்ஹார்மோனிக்குடன் சேர்ந்து ஒரு இசை முயற்சிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஐந்து காமிராக்கள் வைத்து ஸ்டுடியோவில் ஷூட் முடித்து என்னிடம் வந்த அளவில் சில பல டெக்னிகல் சிக்கல்களுக்கு நடுவில் (சில முக்கிய காட்சிகளில் எல்லா கேமிராக்களுமே அந்த நொடியில் வாசிக்கும் இசைக்கலைஞரை படம் பிடிக்க கோட்டை விட்டிருந்தன; இது போக நிறைய ட்ராப் ப்ரேம்ஸ் ) எடிட் செய்வதென்பது கொஞ்சம் சேலஞ்சிங்காகவே இருந்தது. எடிட்டிங்கை விட்டுத் தள்ளுங்கள் இசையைக் கேளுங்கள். இந்த ஆல்பத்தில் இதுவும் இன்னும் இருக்கும் பல ட்ராக்குகளும் மனதை மயக்கும் விதத்தில் இருக்கின்றன. (எடிட்டிங் பற்றி உங்கள் கருத்துகளை தாராளமாக தெரிவிக்கலாம் :) )

அடுத்த பதிவிலிருந்து மொக்கை வழக்கம் போல தொடரும் :)

பி.கு - இதில் வரும் பிரமாதமான இசைக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இசை நல்லா இருக்கும் போதே இது உங்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் :))

30 comments:

Anonymous said...

First comment is itself an anonymous one. Good work.

Anonymous said...

I did not allow anyone from the Jodhiyil Aikyamanor Sangam to post the first comment. I am so happy. I started reading your blog only recently. I almost finished reading all the posts. Excellent job. Keep it up. You are most welcome to Canada/Coimbatore.

Chitra said...

அருமையான பகிர்வு..... இசையை ரசித்தேன்.

ராம்ஜி_யாஹூ said...

இசை, சினிமா எல்லாம் ஓகே
உங்களின் வழக்கமான பதிவுகளுக்க்காகக் காத்திருக்கிறேன்

Paavai said...

Initially konjam it was a strain on the eye because of the speed at which the frames changed ( I am a luddite as far as any techhnology goes), this is a very lay person's point of view. Once I got used to the speed at which the images change it was a pleasure to watch. Music is good :)

மனம் திறந்து... (மதி) said...

//பிரமாதமான இசைக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.//

ஓகே! அப்படீன்னா, உங்களை டிசம்பர், 2011 இசைக் கோலாகலத்தில மியூசிக் அகாடமி முதல் மிந்தா நேத்து ஆரம்பிச்ச சபா வரை எல்லா மேடையிலும் பாக்கலாம்னு சொல்லுங்க! மூணு வருஷம் தொடர்ந்து இப்படிப் பண்ணிட்டீங்கன்னா, கலைமாமணியும் கட்டாயம் குடுத்தாகணுமே உங்களுக்கு! :)))

மனம் திறந்து... (மதி) said...

//தற்போது ராயல் பில்ஹார்மோனிக்குடன் சேர்ந்து ஒரு இசை முயற்சிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.//

பேச்சு வார்தையிலேயே இன்னும் Harmony கிடைக்கலை! அப்போ, Hard Money கிடைக்கறதுக்கு ரொம்பவே நாளாகும் போல! ஹா...ஹா....(just kidding)! :)))

Anonymous said...

Great work...

சேலம் தேவா said...

தொழில்நேர்த்தியான எடிட்டிங்...கொன்னக்கோல் வாசிக்கறவரு ஒரு சாயல்ல உங்கள மாதிரியே இருக்காரு தல.. :)

மனம் திறந்து... (மதி) said...

இசை ரசிக்கும்படி இருந்தது! இந்த வீடியோ எடிட்டிங் ரொம்ப தூரத்து உறவுங்க ... அதனால வாயத்தொறந்து ஒண்ணும் சொல்ல முடியலே! ஆனா தமிழ் எடிட்டிங் நம்ம ஏரியாதாங்க! நீங்க கோவிச்சுக்கலைன்னா சொல்றேன், கேளுங்க: என் மகன், என் நண்பர், என் தந்தை என்று சொல்வதே சரி...எனது வீடு, எனது அலுவலகம், எனது புகழ் என்றாலும் சரியே!

Sh... said...

//அடுத்த பதிவிலிருந்து மொக்கை வழக்கம் போல தொடரும் :) //

En ippadi koosama poi mela poi-a solreenga? unga mela irukkara mariyathai naalukku naal kurayuthu.

Mathi - idu pudusa irukke? enadu usage agrinaikku mattum thaana?. padicha nyabagame illainga.

மனம் திறந்து... (மதி) said...

Sh: ஆமாங்க, நமக்கெல்லாம் இது புதுசு தான் ! அம்மணீ, நானும் உங்க கட்சி தாங்க! இதைப் படிச்சதா நினைவு இல்லை! ஆனால் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் எடு(இடி)த்துரைத்துக் கேட்டிருக்கிறேன்!

மனம் திறந்து... (மதி) said...

ஹலோ, மகா ஜனங்களே! இந்த ஆய்த எழுத்து (நீங்க வேற...கத்தி, அருவால்லாம் இல்லீங்க!), அதாங்க அந்த மூணு புள்ளி வெச்சு எழுதுவோமே, ஐயோ... மறுபடியும் வம்பு பண்றீங்க....! அடடா, எம் பேருக்கு அப்புறம் வர்ற மூணு புள்ளி இல்லீங்க "அக்கு" ன்னு சொல்லுவோமே, "ஔ" க்கு அடுத்த எழுத்து, அதை, இந்த கூகிள் தமிழ் ஒலிவழி உருமாற்ற முறையில் எப்படி எழுதுவது என்று தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன், உங்களுக்கு புண்ணியமாப் போகும்!

மனம் திறந்து... (மதி) said...

Sh: //En ippadi koosama poi mela poi-a solreenga? unga mela irukkara mariyathai naalukku naal kurayuthu.//

தல, தேர்தல் முடிஞ்சு போன நினைப்பு கூட இல்லாமல் இப்படிப் பொய்யான வாக்குறுதியை அள்ளி வீசிக்கொண்டிருக்காருங்கோ! :)))

பத்மநாபன் said...

எடிட்டிங் பற்றியே சிந்தனை வராமல் படத்தை ஈடுபட்டு பார்க்க வைப்பது தான் சிறந்த எடிட்டிங்...தெளிவாக இருந்தது....

இசையின் இனிமை டவுன்லோட் செய்யவைத்து விட்டது....

Akhila said...

Amazing editing! Nalla musical comphrehension theriyaradhu :) Great going sir!

மனம் திறந்து... (மதி) said...

பத்மநாபன் said: //எடிட்டிங் பற்றியே சிந்தனை வராமல் படத்தை ஈடுபட்டு பார்க்க வைப்பது தான் சிறந்த எடிட்டிங்...தெளிவாக இருந்தது....//

:)))

Dubukku said...

அனானி - மிக்க நன்றி தங்கள் பாராட்டுக்கு. தன்யனானேன். கோயமுத்தூர் குசும்பா இல்லை முதல் கமெண்ட் பரவசமா தெரியவில்லை ..பெயரக் கூட சொல்லாம கோயமுத்தூருக்கு வாங்க, கனடாக்கு வாங்கன்னு வாய் நிறைய கூப்பிட்டிருக்கீங்க. :)))) (சும்மா டமாசு டமாசு கோச்சிக்காதீங்க)

சித்ரா - மிக்க நன்றி மேடம்.

ராம்ஜி - கண்டிப்பாக சார். ஏகப்பட்ட வேலைகள் மென்னியப் பிடிக்கிறது. பட் எழுத வேண்டாம் என்றெல்லாம் இல்லை :)

பாவை - நீங்கள் சுட்டிக்காட்டியதை கவனத்தில் கொள்கிறேன். ஒரு இசை ஆல்பம் எடிட்டிங் என்பது ரொம்பவே சேலஞ்சிங் அதுவும் இது மாதிரி ஸ்டூடியோவில் எடுத்தத்டை சுவாரசியமாய் தருவதற்க்கு ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கிறது. நிறைய கற்றுக்கொண்டேன். தங்களுக்குப் பிடித்தது பற்றி மிக சந்தோஷம்.

மதி - :))) ஆமாம் சபா கேண்டீன்ல இதுவரை சாப்டதே இல்லீங்க :)

அனானி - மிக்க நன்றிங்கோவ். சும்மா ஒரு டம்மி பேராவது போட்டுக்கலாமே?

தேவா - மிக்க நன்றி பாராட்டுக்கு. ஹா ஹா இல்லீங்கோவ்..எனக்கும் இங்கே இருக்கிறவங்களுக்கும் அப்படி தெரியலையே..:)))

மதி - சரிதான். என் இனிய நண்பர் என்றே வந்திருக்கவேண்டும். எவ்வளவு தவறிருக்கிறதோ அதற்கேப்ப குறைத்துக் கொண்டு பரிசை வழங்கலாமே ;)

ஷ் - நீங்க நான் அடிக்கடி எழுதுகிறேன் என்று சொன்னதைச் சொல்றீங்களா. இங்கே நான் சில பல இல்லை நிறைய்ய்ய்ய்ய்ய பெர்சனல் ப்ராஜெக்ட்டுகளை இழுத்து தலையில் போட்டுக்கொண்டிருக்கிறேன். ரொம்ப நெருங்கியவர்களுக்கு மட்டும் இது தெரியும். இதற்கு நடுவில் குடும்பத்தை கவனிப்பதும் கொஞ்சம் குறைந்து இப்போது சரி படுத்தி வருகிறேன். நிறைய எழுதவேண்டும் என்ற ஆசை உண்மை ஆனால் ரியாலிட்டி எவ்வளவு தூரம் என்பது எனக்குமே முன்கூட்டி தெரியவில்லை. ஆனால் முயற்சிக்கிறேன். எதோ முன்னாடி மரியாதை இருந்தது என்றே எடுத்துக் கொண்டு பெருமைப் பட்டுக்கொள்கிறேன் :)))

மதி - அதற்கு q டைப் செய்யவேண்டும்.

Dubukku said...

பத்மநாபன் - அருமை. ஒரு படம் பார்க்கும் போது படம் பார்க்கிறோம் என்று உணர்வில்லாமல் பார்ப்போரை உணரச் செய்வது என்னைப் பொருத்தமட்டில் மிகச் சிறந்த டைரக்க்ஷன். அதையே இந்த விஷயத்தில் நான் ஜோத்ஸ்னாவிடம் கூறினேன். :)) பார்ப்போர் உங்கள் வாயால் அதைக் கேட்டது ரொம்ப்ப சந்தோஷமாய் இருக்கிறது மிக்க நன்றி.


அகிலா - மிக்க நன்றி மேடம். இந்த சார் வேண்டாமே.. சும்மா டுபுக்குன்னே கூப்பிடுங்க... No issues :)

மனம் திறந்து... (மதி) said...

//எவ்வளவு தவறிருக்கிறதோ அதற்கேப்ப குறைத்துக் கொண்டு பரிசை வழங்கலாமே ;)//

பாதி இதயத்தை எப்படிக் குடுக்கறது அண்ணே? (ஹலோ! யாருப்பா அது...வெயிட் வெயிட், don't rush to conclusions!.... WE ARE STRAIGHT .... perfect gentlemen!) :)))

//எதோ முன்னாடி மரியாதை இருந்தது என்றே எடுத்துக் கொண்டு பெருமைப் பட்டுக்கொள்கிறேன் :)))//

It is not so easy to beat you in your own game! :)))
அதிகமாப் பேசக் கூடாதுன்னு, அவங்க "Sh..." ன்னு சொல்லிட்டு அப்புறம் தான் கமெண்டே போட்டாங்க... அவங்களுக்கே அல்வாவா? அம்மணீ கோவிச்சுக்காதீங்க ப்ளீஸ்... நம்ம டுபுக்கு தானே?

"ஃ" ஐ இப்படிப் பதுக்கி வைத்திருப்பார்கள் என்று நான் கனவில் கூட எண்ணிப் பார்க்கவில்லை! நன்றி!

Porkodi (பொற்கொடி) said...

first anony, inime first vaanga - adhu thaan matter! ;D

Porkodi (பொற்கொடி) said...

//இசை நல்லா இருக்கும் போதே இது உங்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும்//

சீயக்காய் பொடி.. ஹெஹெஹெ! நீங்க மறந்த மாதிரி நடிச்சுக்கலாம், அதுக்காக நாங்க மறப்போமா? நல்லாவே நினைவு இருக்கு உங்க 'இசை'! :D

Dubukku said...

Mathy - அண்ணாச்சி இதானே வேணாங்கிறது. நானும் சும்மா அவங்க சொன்ன அதே நக்கல் பாணில தானே பதில் சொல்லியிருக்கேன் ஸ்மைலி கூட போட்டிருக்கேன். கோவிச்சுக்காதீங்க நம்ம் டுபுக்குன்னு கோர்த்துவிடுறீயளே பாஸ் :))

பொற்கொடி - ரொம்ப நக்கலாப்போச்சு உங்களுக்கு இன்னும் கீபோர்ட்ட விக்கல..இங்கன தான் இருக்கு நியாபகம் இருக்கட்டும்.

தக்குடு said...

டுபுக்கு அண்ணாச்சி, என்ன்ன்னமோ போங்கோ! எங்க ஊர் பொண்ணை ஒரு நல்ல பையனுக்கு கட்டி குடுத்து இருக்கோம்னு இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் எங்களுக்கும் நம்பிக்கை வருது...:)

@ முதல்ல வந்த அனானி - கலக்கிட்டேள் போங்கோ! ஊரும் சொல்லாம பேரும் சொல்லாம "கனடாவுக்கு வாங்கோ! கோவைல நம்ப வீட்டுலதான் சாப்பாடு!"னு சொல்லி இருக்கேள் பாத்தேளா அந்த டீலீங் ரொம்ப புடிச்சுருக்கு..:))

Unknown said...

thakkudu you just wrote what i thought. i was laughing aloud seeing that invite abt coim and cannada. see we all made the editing and directing go faded away and talking abt that comedy . but it was a real fun.
shuba

Dubukku said...

தக்குடு - :)) இப்பவாவது சந்தோஷம் வந்துதே...உங்க ஊருக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்டா

சுபா - இது எந்த சுபா (மதுரையா மெட்ராஸா) - நானும் என்னுடைய பதிலில் இதையே சொல்லி நீங்களும் வேற ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப ஓட்டாதீங்க. அவங்களே இப்போதான் வந்திருக்காங்க..பயந்துடப் போறாங்க. கல்லா கலெக்க்ஷன கெடுக்காதீங்க :))))

தக்குடு said...

@ சுபா - ரொம்ப சந்தோஷம், அண்ணாச்சியோட டைரக்ஷன்/டிக்காஷன் பத்தி எல்லாம் சொல்லர்துக்கு நிறையா விசிறிகள் இருக்கா, அதனால நாம மத்த வெளி விவகாரங்களை மட்டும் கவனிச்சா போது...:)

Mahesh said...

ஸ்வாமி... அருமையான வாசிப்பு.... ரொம்ப ரசிச்சேன். ஃப்ரேம் கப் கப்னு மாறறதுதான் ஜெர்க் அடிச்சுது. ஆனா உங்க முயற்சி அபாரம். தொப்பியைத் தூக்கறேன் !!!

Unknown said...

ha ha ha. this is shuba frm madurai.

priyamudan said...

isaiyudan kannai uruthatha olipathivu+ tholil nerthiyudan (salem theva)kodiya editing. nanri

Post a Comment

Related Posts