Wednesday, March 01, 2006

Alma மேட்டர் - 6

For previous parts --> part1   part2   part3   part4   part5

அது நட்பு இல்லை ஆனால் அதை என்னவென்று சொல்லுவது. நீல கலர் சாயம் போட்டு, ஆனும் பெண்ணும் சில்க் ஜிப்பா அணிந்து வீட்டுக்கு நீல நிற பெயிண்ட் அடித்து "மயிலிறகே மயிலிறகே" என்று பாட்டுப் பாடும் காதல் இல்லை. வயசுக் கோளாறு. ஆனால் காமம் தெரியாத வயது அது. காமம் கலக்காத இன்பாக்ஷுவேஷன் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு இந்த வயதில் சிலபேரை பிடிக்கும். எனக்கு அவளைப் பிடித்திருந்தது. ஜில்லை அல்ல "அவளை". இருந்தாலும் அவளிடம் ரொம்ப பேசமாட்டேன். ஜில்லிடம் தான் பேசுவேன். சொல்லுகிற ஜோக்கெல்லாம் இவளுக்காகத் தான் என்றாலும் ஜில்லிடம் தான் சொல்லுவேன். இவளும் சேர்ந்து சிரிப்பாள். சினேகமாக சிரிப்பாள். நானும் பதிலுக்கு சிரிப்பேன் (=வழிவேன்). பஸ்ஸில் அவர்களும் நாங்களும் எதிர் எதிர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு ஜாலியாக கலாய்த்துக் கொள்வோம். எங்கள் ஸ்கூல் ஜூனியர் ஸ்கூல், சீனியர் ஸ்கூல் என்று ரெண்டு பில்டிங்கில் இருந்தது. ரெண்டும் வெவ்வேறு இடங்களில் இருந்தது. பஸ் 'ஜூனியர் ஸ்கூல்' பக்கத்தில் ஒரு சாராயக் கடை பக்கத்தில் ஒரு ஸ்டாப்பில் நிற்கும். அங்கே ஒரு வடைக் கடை உண்டு. அந்தக் கடையில் எல்லோரும் வடை வாங்குவார்கள். அவள் எங்களுக்கு அடிக்கடி வடை வாங்கித் கொடுப்பாள். நானும் வீட்டிலிருந்து என்னுடைய உண்டியலில் இருந்து அடிக்கடி லவட்டி வந்து வடை வழங்கும் வள்ளலாவேன்.

நாளொரு ஸ்டாப்பும் பொழுதொரு வடையுமாய் போய்க்கொண்டிருந்த பஸ் வாழ்கையில் ஒரு நாள் ஜூனியர் பையன் ஒருத்தன் எங்களுக்கு முன்னாடி வந்து நாங்கள் உட்காரும் இடத்தில் வந்து டேரா போட்டு விட்டான். ஜில்லு சும்மா இருக்காமல் வெறுப்பேத்த என்னுடைய தளபதிக்கு பொறுக்காமல் அந்தப் பையனை சண்டைக்கு இழுத்துவிட்டான். அந்தப் பையன் ஒரு வருஷம் தான் ஜூனியர். பையன் ரொம்ப சூட்டிப்பு வேறு. தளபதிக்கு நல்ல முறைவாசல் மரியாதை நடந்தது. ஜில்லு சும்மாயிராமல் என்னையும் வம்பில் மாட்டிவிட்டு விட்டது. தேமேன்னு உட்கார்ந்திருவனுக்கு அவள் பார்க்கிறாளே என்று இல்லாத ரோஷமெல்லாம் வந்து சிலிர்த்து எழுந்து தளபதியும் நானும் சேர்ந்து அந்தப் பையனை பொளந்து கட்டி விட்டோம். அந்தப் பையன் ராஜ்கிரண் வம்சத்து வீரப் பரம்பரை போல, ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களாடான்னு சவால் விட, பதிலுக்கு நானும் எப்பவேனா எங்கவேணா வரேன் ஆனா இப்போ பஸ்ல இவங்க முன்னாடி வேண்டாம் ரத்த பூமியாயிடுமென்று சொல்லிவிட்டு அவனுக்கு முந்தின ஸ்டாப்பிலேயே இறங்கி வீட்டுக்குப் போய்விட்டேன். அந்தப் பையன் வீடு இரண்டு தெரு தள்ளி இருந்தது. கடைக்குப் போகும் போது மீண்டும் ரணகளமாகிவிடக் கூடாதே என்று சுத்தித் தான் போவேன். அந்தப் பையன் அடுத்த நாள் ஸ்கூலுக்கு வரவில்லை. அடுத்த நாள் அந்தப் பையனின் அண்ணன் நாலு பேரோடு எங்கள் தெருவிற்கு வந்து இங்க டுப்புக்கு யாருடான்னு என்னிடமே கேட்டான். "டுபுக்கு என்னும் மகாவீரன் இங்க தான் இருக்கான் நான் போய் கூட்டி வர்றேன்"னு கம்பி நீட்டி விட்டேன். அதற்கடுத்த நாள் அந்தப் பையன் தலையில் ஒரு ப்ளாஸ்திரியோடும் அவ அப்பாவோடும் வந்து ஸ்கூலில் பிரின்ஸ்பாலைப் பார்த்தான். பிரின்ஸ்பால் என்னையும் தளபதியையும் ப்யூனை விட்டு க்ளாசிலிருந்து கூப்பிட்டு காதைத் திருகி பிரம்பால் ஆளுக்குத் தலா இரண்டு அடியும் குடுத்தார். நான் பிரின்ஸ்பால் அருகில் நின்று கொண்டிருந்ததால் திரும்பிப் போகும் போது பிட்டத்தில் எனக்கு கூட ஒரு அடி கிடைத்தது. தளபதிக்கு அதில் ஒரு அல்ப சந்தோஷம்.

எல்லாம் முடிஞ்சுது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த போது பி.டி. வாத்தியார் கூப்பிட்டு அனுப்பினார். அந்தப் பையனுடைய அப்பா போகிற போக்கில் பி.டி. வத்தியார் தான் நல்லா தீர்ப்பு சொல்லுவார் என்று கொளுத்திப் போட்டுவிட்டு போய்விட்டார். இந்தமுறை உஷாராக நான் பி.டி.வாத்தியார் பக்கத்தில் நிற்காமல் தளபதிக்குப் பின்னால் போய்விட்டேன். பி.டி. வாத்தியார் கேள்விகளே கேட்காமல் மண்டகப்படியை ஆரம்பித்தார். தளபதிக்கு இரண்டும் எனக்கு ஒன்றும் கண்ணத்தில் நச்சென்று கிடைத்தது. அந்த சமயத்தில் ஸார் என்று யாரோ வந்து குரல் குடுக்க திரும்பினால் "அவள்". வாத்தியார் அடிச்சது முட்டியில் இடித்த சுகமாக இருந்தாலும் முகத்தில் வலியைக் காடிக்கொள்ளாமல் இறுக்கமாக வைத்துக் கொண்டேன். அடித்ததை ஒரு வேளை அவள் பார்த்திருப்பாளோ என்று குழம்பிக் கொண்டிருந்த போது, பாழாய்ப் போன வாத்தியார் வந்தவளுக்கு என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று கேட்க வேண்டாமோ? போகிற போக்கில் பின்னால் நின்று கொண்டிருந்த எனக்கு மானாவரியாக இன்னொரு அடி குடுத்துவிட்டு போனார்.

அவளும் நேரம் காலம் தெரியாமல் 'க்ளுக்' என்று எனக்கு மட்டும் கேட்குமாறு சிரித்தாள். வடை வாங்கிக் குடுத்ததுக்கு காட்டுகிற நன்றியா இது என்று நான் கோபத்தோடு முறைக்க அவள் டக்கென்று சிரிப்பதை நிறுத்திவிட்டாள்.

--தொடரும்

17 comments:

இராமச்சந்திரன் said...

இதுலயும் கடைசில வடை நரிக்கு தான் கெடைக்கப்போகுதா ?....ச...

இதுக்கு தான்யா ஜான்ஸ் / கதீட்ரல் ஸ்கூல்ல படிச்சிருக்கணும்... வாத்தியாரோ... பிரின்ஸியோ மேல கைய வெக்க யோசிப்பாங்க...

CVA said...

Ellorum figure kku Kodai pidippanga, Neenga Vadai kuduthu irukeenga ;-)

Nice Story and a good entertainer Baasu:-)

Yours Truly said...

Mullaiku thaer koduthaan paari
Mayilukku poarvai koduthaan began
Gujili-ku vadai koduthaar dubukku

Haiii. Kavidha, kavidha. Porkizhi pls :)

Anonymous said...

Dubukkanne, you are the real bravo. indha maari visayam ellam 'koochame padama' velila solnumna "veeram" veynoom.you have got it a lot. :-)

you were the teachers' favorite in your school it seems.(for what, other than caning)appo neenga nejamauvey aiiiiiyyyoe paauvam.

neenga antha pennai moraichi pakkaracche P.T vaathi paththirukkanum(ennada morappu vendi kedakku...#$#@ %$#$%)innum veydikkaya irunthirukkum illa?

i love reading your blog, i can say i'm addicted to it. my flatmates are thinking that something had happen to me,ever since they could hear giggles from my room every now and then (pinna JTK,NDKS,TBT,AM series ellam padicha...)

for this wonderful task, peace and happiness always be with you.

யாத்ரீகன் said...

பலர்... இளவயசு பிரதாபங்களை சொல்லும் போது.. இமேஜ் டாமேஜ் ஆகுற சீனை எடிட் பண்ணிருவாங்க... இல்லை.. கதையவே மாத்திருவாங்க... கலக்குறீங்க தல.. அப்படியே புட்டு புட்டு.. ;-))) சரி... இதுக்கப்புறம் வீட்ல வடை கிடைக்குதானு சொல்லுங்க... ;-)

>> நீல நிற பெயிண்ட் அடித்து
>> பொழுதொரு வடையுமாய்
>> முந்தின ஸ்டாப்பிலேயே இறங்கி
>> இந்தமுறை உஷாராக நான்


அதுவும்.. இந்த வரிகள் டாப் :-))))

Anonymous said...

வணக்கம் டுபுக்கு...
டெல்லியிலிருன்து ராமகிருஷ்ணன்..
ஆஹா டுபுக்கு!..இப்ப தான் கதை சூடு பிடிக்குது...
வடைக்கு அடி வாங்கிய முதல் ஆள் நீங்களாதன் இருக்கணும்.
உங்கள் கதையில் நாங்கள் மெய் மறந்து போய்விட்டோம்....
கலக்குங்க டுபுக்கு...இந்த ஸ்வாரஸ்யம் கதை முடியும் வரை இருக்கவெண்டும் என்று வேண்டுகிரேன்...
பி.கு)..அல்மா மேட்டர் எப்ப கில்மா மேட்டரா மாற போகுதுனு Wait பண்ணரேன்.

Anonymous said...

pothu vaazhkaila ithellam sagajam thaan...
as usual good one..
subbu,

Usha said...

aha, bus le ippadi oru seat ukellama sandai podaradu? adi kuduthadu saridaan. sariyana vaalu pasanga.
anda adiye symapthy factor ku karanamaiduthu appadi daane? Maru naal bus le enna kondu vandu kudutha? kadalai mittaya??

Jeevan said...

Hi Dubukku, eppadi irukkenga? konja naal aacu unga blogga padichu. life eppadi poetuirukku, pasanga nalla irukkangala? :)

குமரன் (Kumaran) said...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

neighbour said...

hmmm...

ini school pasangalaku " kaaka-nari-vadai" kadhaiku mutru pulli vachitu "dubuku-vadai-adi" kadhaiyaa syllabus pottralaamunun Boardku parithutai seiya poraen.

enna sollarennga..

ambi said...

Hi Dubukku anna,

now i realise, why u hesitated to have vadais when u used to visit my home :)

i've planned to take 100 prints of your Alma matter postings and circulate within our family and if possible to t'veli dt. enna solrengaa? Royalty ellam ulungaa thanduven (in the form of Vadais)
:)

Dubukku said...

ராமசந்திரன் - ஹீ ஹீ ஜான்ஸ்ல கையவைச்சா என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும் :))

Sri - ada neenga enna vambula maati viturveenga pola irukke. Halwalam kudukaalainga :)

CVA - danks. sorry if I have disappointed you with my decision(latest post)

Yours Truly - ithellam appidiye varathu thaana? kalakreenga kavithaiyellam :)

Guru - ilainga that occassion was bad for me. Otherwise I am not their fav. for caning. I think I wud have certainly disappointed you too with my decision. sorry.

Dubukku said...

யாத்திரீகன் - நன்றி. வடை கேட்டா இப்போல்லாம் முறைக்கிறாங்க இதப் படிச்சதுக்கப்புறம் :)


ராமகிருஷ்ணன் - வணக்கம் ராமகிருஷ்ணன் (நீங்க சொல்ற பாணி அப்பிடியே டி.டி. ல நியூஸ் ரிப்போர்டர் சொல்ற மாதிரி இருக்கு :) ) கில்மா மேட்டரா..சரிதான். என்னுடைய முடிவு உங்களுக்கும் ஏமாற்றத்தை தந்திருக்குமானால் வருந்துகிறேன்.

Subbu - hehe yes. danks mate.

Usha - avalavu vaal kidayathunga. indha matter thaan konjam thappa ayidichu :) kadaisi varaikkum vadai thaan :)

Jeevan - Im fine thanks. How are you? ellarum nalla irukanga. unga veetulayum ellarum nalla irukanganu nenaikaren

Kumaran - welcome here. inga naanum paadi naadu thanga :)

neighbour - enga pasanga pozhaichu pohatumga ...aiyoo paavam

ambi - unakku thaniya mail adikaren. kudumbathula indha blog patthi mooche vitruratha paa...andha nalla paiyan image appidiyee maintain pannikaren :P
(mavane pottu kudutha...appuram naamam poda solli kudutha kathaiyellam maati vitruven jaakirathai)

S.SETHU RAMAN said...

visit my site
vaalpaiyyan.blogspot.com

S.SETHU RAMAN said...

visit my site
vaalpaiyyan.blogspot.com

Anonymous said...

"டுபுக்கு என்னும் மகாவீரன் இங்க தான் இருக்கான் நான் போய் கூட்டி வர்றேன்"னு கம்பி நீட்டி விட்டேன்"
sema camedi anna,romba sirichen

Post a Comment

Related Posts