Wednesday, December 28, 2005

Alma மேட்டர் - 2

for previous parts --> part1

முதல் நாள் ஸ்கூல் அனுபவம் நியாபகம் இல்லை. ஆனால் அந்த ஸ்கூல் எல்.கே.ஜி யூ.கே.ஜி நியாபகங்கள் கொஞ்சம் இருக்கின்றன. முதல் ஸ்கூல் அப்பிடி ஒன்றும் பெரிய ஸ்கூலில்லை. கொஞ்சம் நீளமான வீட்டில் நடத்தி வந்தார்கள். அடுத்த தெருவில் இருந்ததால் அம்மாவுக்கு கொண்டு விடுவதற்கு வசதியாக இருக்கும் என்று சேர்த்தார்கள் என்று நினைக்கிறேன். தனியார் பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு வரை தான் இருந்தது. இளங்கலை முடித்து விட்டு வரும் பெண்களே டீச்சர்கள். அவர்களுக்கும் வீட்டில் கல்யாணம் பார்த்துக் கொண்டிருப்பார்கள் அதுவரைக்கும் சும்மா இருக்கவேண்டாமே என்று இங்கு வேலைக்கு சேர்ந்திருப்பார்கள். கையில் பிரம்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை பார்ப்பவர்கள், மற்றவர்களெல்லாம் மர ஸ்கேல் வைத்திருப்பார்கள்.

நான் பள்ளிக்குப் போவதற்கு ரொம்ப அழமாட்டேனாம். ஆனால் அழாமல் அடிக்கடி மட்டம் போட்டுவிடுவேனாம் அம்மா சொல்லி இருக்கிறார்கள். அடுத்த தெரு தானே, மத்தியானம் சாப்பாட்டுக்கு அம்மா இடுப்பில் வைத்துக் கொண்டுவருவார்கள். முதலில் எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டு விடுவார். பிறகு அம்மா சாப்பிட்டு வேலையெல்லாம் முடித்து விட்டு வருவதற்க்குள் சமத்தாக தூங்கிவிடுவேன். அவர்களும் எழுப்பிப் பார்ப்பார்கள்...சில நாள் குழந்தையை எழுப்ப மனசு வராமல் சின்ன க்ளாஸ் தானே என்று அப்பிடியே தூங்க விட்டுவிடுவார்கள். என்னவோ இந்த டெக்னிக் நன்றாக மனதில் பதிந்து விட்டது. இப்பவும் மனைவி ஷாப்பிங்க்கு கூப்பிடும் போது சில சமயம் இந்த உத்தி கை கொடுக்கும்...முதலில் கட கடவென்று சாப்பிட்டு விட்டு தங்கமணி வேலையை முடித்துவிட்டு வருவதற்கு முன் நான் உட்கார்ந்து கொண்டே தூங்கிவிடுவேன். ஒரு இருமுறை பச்சாதாபம் ஒர்க் அவுட் ஆச்சு அதற்கப்புறம் உதை தான் என்றான பின்...குழந்தைகளை தூக்கம் பண்ண முயற்சி செய்ய..இப்போதெல்லாம் ஷப்பிங் போய்விட்டு வந்தப்புறம் தான் சாப்பாடே போடுகிறார் தங்கமணி.

அந்த முதல் ஸ்கூலில் ரொம்ப பிடித்த விஷயமே "ஸ்கூல் டே" தான். வெளியே கல்யாணம் மாதிரி பந்தல் போட்டு ஒலிபெருக்கியை அலற விட்டு கோலாகலாமாக நடக்கும். இடுப்பில் கை வைத்துக் கொண்டு தலையை இடமும் வலமுமாக ஆட்டிக் கொண்டு ஒரு அரத இங்கிலீஸ் ரைம்ஸ் ஆட்டம் கண்டிப்பாக இருக்கும். இது போக "எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தா" பாட்டுக்கு ஆணகளும் பெண்களுமாக க்ருப் ஆட்டமும் கண்டிப்பாக இருக்கும். பாட்டின் நடுவில் இரண்டு பேருக்கு வேஷ்டி அவிழ்ந்து திரு திருவென்று முழித்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களை மிஸ் வந்து தர தரவென்று இழுத்துக் கொண்டு போவார்கள். மிஸ் டான்ஸ் சொல்லிக் குடுப்பது அழகாக இருக்கும். "கையில காசு வாயில தோசை" என்ற பாடலுக்கு கையைக் காட்டிவிட்டு காசு மாதிரி சுண்டிக் காட்டவேண்டும். அப்புறம் வாயை ஆ காட்டி விட்டு கையால் தோசை வார்க்கவேண்டும். நான் "கட்டித் தங்கம் வெட்டி எடுத்து" என்ற பாடலுக்கு ஆடினேன். கட்டிக்கு கையை பாறாங்கல் மாதிரி வைத்து விட்டு தங்கதிற்க்கு காதில் தோடைக் காட்டிவிட்டு மம்பட்டியால் கஷ்டப்பட்டு வெட்டி எடுத்தேன்.

நாடகத்தில் கட்டப்பொம்மன் கண்டிப்பாக வருவார். ஜாக்ஸன் துரைக்கும், ராஜா ராணியாக நடிக்கும் சீனியர் ஆர்டிஸ்டுகளுக்கு மட்டும் தான் ரோஸ் பவுடர். மற்றவர்களுக்கெல்லாம் வீட்டில் போடும் அதே பான்ட்ஸ் பவுடர் தான். எனக்கு ஒரு முறை கூட ரோஸ் பவுடர் கிடைக்கவில்லை.

இந்த ஸ்கூலில் எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம் நெல்லிக்காய் மரம். மிக புளிப்பான அருநெல்லிக்காய். ஆனால் ஸ்கூல் வாட்ச்மேன் அந்த மரம் பக்கமே போக விட மாட்டார். கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்கும் கீழே விழுந்த நெல்லிக்காய்களை யாரும் பார்க்காத போது ஓடிப் போய் பொறுக்கிவருவதே மிகத் துணிச்சலான விஷயம். ஆனால் இந்த ஸ்கூலிலிருந்து வெளியே வந்து வாலு முளைத்த அப்புறம் வானரப் படையோடு போய் வாட்ச் மேனையும், மரத்தையும் பாடாய் படுத்தி இருக்கிறேன்.

இந்த ஸ்கூலில் படித்தது இரண்டு வருடங்களே ஆனாலும் ரொம்ப சமத்தாக இருந்தேன்.ஒரே ஒரு முறை மட்டும் எல்லாரையும் ஒரு சினிமாவுக்கு அழைத்துப் போய்விட்டு வரும் போது வழியில் வீடு வந்துவிட்டதே என்று க்யூவிலிருந்து வீட்டிற்க்குள் நழுவிவிட்டேன். அங்கே ஸ்கூலில் என்னை தேடு தேடுவென தேடி விட்டு வாட்சுமேன் வீட்டில் லபோ திபோவென்று அப்பா அம்மாவிடம் குற்றப் பத்திரிக்கை படித்தார். அடுத்த நாள் ஸ்கூலில் மிஸ் காதைப் பிடித்து திருகினார்.

இந்த கால கட்டத்தில் தான் எஙகள் ஊரில் இன்னொரு பள்ளி கொஞ்சம் பிரபலமாக ஆரம்பித்தது. கான்வென்ட் டைப்பில் ஆரம்பித்து ஸ்கூல் ஷூ, சாக்ஸெல்லாம் போட்டுக் கொண்டு பையன்கள் வேனில் போவதைப் பார்த்து எனக்கும் ரொம்ப ஆசையாக இருந்தது. அப்பா அம்மாவும் பையன் இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்தால் இங்கிலீஸில் பொளந்து கட்டி ப்ளாக் ஆரம்பித்துவிடுவான் என்று நம்பியதால் என்னை சேர்க்க ஆசைப் பட்டார்கள். அப்பா சென்று விசாரித்து வந்து தலையில் குண்டைப் போட்டார். அந்தப் பள்ளியில் சேருவதற்கு டெஸ்ட் எழுத வேண்டுமாம். அதுவும் இங்கிலீஸ் மற்றும் மேத்ஸ் பரீட்சைகள் வேறு. வீட்டில் அக்கா பெண்டை நிமிர்த்தி விட்டார். நம்ம பெயரில் ஆங்கில எழுத்துக்களில் ரெண்டு மட்டும் குறையும் அவ்வளவு தான். ஆங்கில எழுத்துக்களில் ஒழுங்கான வரிசை ஒன்று, பெயருக்கு ஒரு வரிசை என்று எழுதப் படிப்பதற்குள்ளே எனக்கு அந்த ஸ்கூல் மோகம் குறைய அரம்பித்துவிட்டது. தேர்வுப் பரீட்சையில் பக்கத்திலிருந்து மண்டையில் குட்ட அக்கா இல்லையாதலால் மானாவாரியாக தோன்றியதை எழுதினேன்.

தேர்வுப் பரீட்சை முடிவுகள் வெளிவந்து, குட்டியாகப் பெயர் வைத்துக் கொண்டிருந்த தெருவிலிருந்த மற்ற இரண்டு நண்பர்களும் தேர்வாகி இருக்க, நான் மட்டும் எங்கம்மா சொல்லுகிற மாதிரி பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல். "அதென்ன பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் ...ஃபெயில் சொல்லுங்கோம்மா" என்று இன்றளவும் என் மனைவி மாமியாரிடம் இந்த விஷயத்தில் தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறார். என் அம்மாவும் "ஃபெயில் இல்லைடி ...குழந்தை நன்னாத் தான் படிச்சான்...பரக்கப் பார்த்ததுல பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் அவ்வளவு தான்" என்று விட்டே குடுக்காமல் சமாளித்துவருகிறார். ஹூம் எங்கம்மா மட்டும் எனக்கு டீச்சராக வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

-தொடரும்

17 comments:

Anonymous said...

I like your writing style. Similar experiences here too.

யாத்ரீகன் said...

நெல்லிக்காய் மரம்ன்றது அந்த வயசு ஸ்கூல்ல எல்லா இடத்துலயும் இருக்குமா என்ன :-)

>> பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல்

அதுவும் Argument Continues-ஆ :-))

-
செந்தில்/Senthil

Sundar Padmanaban said...

நல்லா இருக்கு நினைவலைகள்.

ரொம்ப நாள் முன்னாடி நான் எழுதினது இது: http://agaramuthala.blogspot.com/2005/03/blog-post_19.html

நேரமிருந்தா படிச்சுப் பாருங்க :)

அன்புடன்
சுந்தர்

Anonymous said...

I liked your writing style very much.

Usha said...

aarambame kalai katti aachu. Inimel kacheri amarkalamathaan pogum.
Looking forward to rest of the thulli thirinda kaalam a.k.a alma matter!

Jeevan said...

Ennaium, enga amma 1st standard varaikum eduppil vaithukkondu thaan schooluku kuteketu povanga. nan 5th aparam, vara schoola sarthanga, anna enaku testta vaikala:)

You have a great Knowledge Friend.

Enakku ennodaiya LKG missa romba pedikkum, adikava matanga, anna somu'nu oru payan, yenna killeketa iruppan, avana samalikartha periya kastam.

Premalatha said...

first time I ever did something close to "preparing" was for BSRB. but we enjoyed the "group study" and planned different locations and were not serious. Second time I did which could be called as "preparing" was for the GATE. Somehow I scored a good-enough percentile in the first attempt itself and didn't have any opportunity to "really prepare". That has made me a very bad "preparer" in anything I do.:(

Anonymous said...

நல்ல ஆரம்பம். பின்னூடத்தில் சுந்தர் அவருடைய பள்ளி அனுபவம் பற்றிய சுட்டியை தந்திருக்கிறார். அங்கு சென்று படித்தால், அங்குள்ள பின்னூடத்தில் இளவஞ்சியின் சுட்டி!

மூன்று இடங்களிலும் 'அட! இது என்னுடைய பள்ளி அனுபவங்கள் போலவே இருக்கிறதே' என்பது போன்ற பின்னூட்டங்கள்.

குழந்தை பருவங்கள் ரொம்பவும் மாறுபடுவதில்லை என்பதற்கு இதுவே சான்று. ஆனால் நகரங்களில் வளர்ந்தவர்கள் இது போன்ற அனுபவங்களை இழந்திருப்பார்களென்றே தோன்றுகிறது.

டுபுக்கு, இனி அடுத்து என்று எதிர்பார்க்க வைத்துவிட்டீர்களே!

[ 'b u s p a s s' ] said...

அடேங்கப்பா!!
மர ஸ்கேலுக்கும் பிரம்பிற்கும் உள்ள ஒளிஞ்சிட்டு இருந்த வாத்தியாரோட ஜாப் ஹிஸ்டரியையே உருவி எடுத்திட்டீங்களே...
பின்னிட்டீங்க போங்க.

Vidya said...

"Are you the Vidya whom I know? (what a silly question without any details) sorry to be bothering if not."

This is all you had to write in your comment and it is too little information for me to let you know if I know you or not !! :)

Vidya

Dubukku said...

surya - danks for the comments and dropping by. "Similar experiences" - ethu oru markla fail anatha? :P

Senthil - இப்போல்லாம் ஸ்கூல்ல நெல்லிக்காய் மரங்கள பார்க்கறதே அபூர்வமா இருக்கு..
அட ஆமாங்க...இன்னும் இந்த argument continues :))

சுந்தர் - உங்க பதிவ படிச்சேன். ரொம்ப நல்லா இருக்கு :) எல்லார் ஆரம்ப வாழ்க்கையும் கிட்டத் தட்ட ஒரே மாதிரியா இருக்குன்னு நினைக்கிறேன் :)

Suresh - danks for the compliments and dropping by.

Usha - bingo "Thullith thirindha kaalam" thaan mudhalla title a vekalamnu nenaichen...but then settled with alma mater. Danks for the encouraging words.

Dubukku said...

Jeevan - hehe neenga kuduthu vechanvanga adhan test vekala :P
LKG miss ellarukkum romba pidikuthunu nenaikaren :))

Premalatha - prepare pannamale kalakareengana prbly you are born genius :) ellarukkum prepare pannanumnu thevail illa...:))

ராஜேஷ் - ஆமாம் நானும் சென்று படித்துப் பார்த்தேன். எல்லோர் அனுபமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கிற மாதிரி தோன்றுகிறது. ஒரே பள்ளியில் படித்தோம் என்ற காரணத்தினால் நான் சொல்லும் சில விஷயங்களை நீங்களும் கவனித்திருக்கலாம். :))

Vidya said...

It is not still not fair. Your blog name is not much of a help to me. And I am not too patient reading Tamil in writing. So you have to really help me out here in case you want me to find out who you are !!

At any rate, have a great 2006

Dubukku said...

buspass - நன்றி. ஆமாங்க அவங்க அவங்க எக்ஸ்பீரியன்ஸ்க்கு ஏத்த மாதிரி அடிக்க வேற செய்வாங்க :))

Vidya - ohhh I thought you will easily figure me out if you read my about me section? okie dokie tirunelveli ambasamudram - does that sound familiar? :))
(ithukappuramum kandu pidika mudiyalanu sonna avalavu than :P )

Balaji S Rajan said...

டுபுக்கு கலக்கறீங்க.

உங்க அம்மா கமென்ட்ஸ் குட்டி பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். "பாஸ் பண்ண ஒரு மார்க் குறைச்சல்...."

எப்ப வரும் அடுத்த போஸ்ட்?

Anonymous said...

how do i comment in tamil???

shobana said...

""எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தா" பாட்டுக்கு ஆணகளும் பெண்களுமாக க்ருப் ஆட்டமும் கண்டிப்பாக இருக்கும்.".... ithu enga skoola nanga varusha varusham dance adina paatu.... :)

aparam,
"இடுப்பில் கை வைத்துக் கொண்டு தலையை இடமும் வலமுமாக ஆட்டிக் கொண்டு ஒரு அரத இங்கிலீஸ் ரைம்ஸ் ஆட்டம் கண்டிப்பாக இருக்கும்"--->intha rhymes 'johnny johnny,yes papa' thane..!!

nice blog :)

Post a Comment

Related Posts