Thursday, December 15, 2005

இங்கிலாந்துப் பிரதாபங்கள்...2

for previous part click here

எனக்குப் பிடித்த இங்குள்ள இன்னொரு விஷயம்...மக்களிடம் உள்ள நட்புடன் சகஜமாக பழகும் ஸ்னேக பாவம். தெருவில் நடந்து போகும் போது முன்னப்பின்ன தெரியாத நபர்கள் அதிகாலையாய் இருந்தால் காலை வணக்கங்கள் சொல்லுவார்கள்.
நானும் சொல்லிப்பார்போமே என்று நிறைய தடவை முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொள்ளாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு சினேகமான புன்னகையாவது பரிமாற்றிக்கொள்வார்கள். குற்றமாகச் சொல்லவில்லை நம்மூரில் டிப்டாப்பாக ட்ரெஸ் பண்ணிக்கொண்டாலும் இப்பிடி யாராவது செய்தால் கடன் கேக்க வந்திருக்கானோ அல்லது ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பானோ என்ற சந்தேகம் வரலாம். இங்கே வந்த புதிதில் எனக்கும் இருந்த்து. இல்லை இங்கெல்லாம் இது சகஜம் என்று உரைக்க சிறிது நாளாயிற்று. நம்மூரிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

வேறு சில பேரிடம் இந்த சினேகபாவம் அதீதமாக இருக்கும். விட்டால் மடியில் ஏறி உட்கார்ந்துவிடுகிற நட்பு இருக்கும். நேரம் தெரியாமல் இப்பிடி மாட்டிக்கொண்ட அனுபவமும் உண்டு. ஒரு முறை தங்கமணி(அதாங்க வீட்டு அம்மணி சும்மா அக்னிநட்சத்திரம் பாணியில் இப்பிடி தான் சொல்லிக்கொள்வேன்) பக்கத்துக் கடைக்குப் போயிருக்க நான் வெளியில் பையுடன் காத்துக்கொண்டிருந்தேன். ஏடாகூடமான் பெண்மணி ஒருவர் என்னைப் பிடித்துக்கொண்டு பேச்சுக் குடுக்க ஆரம்பித்துவிட்டாள். வானிலைப் பற்றி பேசாமல் ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டாள். எனக்கு அந்தப் பெண்ணைடமிருந்து விடுபட்டால் போதும் என்று ஆகிவிட்டது. "பலான பெண்ணுடன் பாகவதமா பேசுவான்" என்று நாக்கிலே பல்லைப் போட்டு யாரும் பேசிவிடக்கூடாது பாருங்கள். தங்கமணி வேறு செருப்புக் கடைக்குப் போயிருந்தார், அவர் பார்த்து டென்ஷனாகி விட்டால் என்னாவது. அப்புறம் அந்த பரதேவதையை "நெக்கு கல்யாணமாயிடுத்து போயிட்டு வாடியம்மா" என்று அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

எனக்கு இந்த ஊரில் பிடிக்காத ஒரு விஷயம் (இப்பிடித் தான் சொல்லிக்கறது) சபையில் சொல்வதற்கு கொஞ்சம் லஜ்ஜையாகத்தான் இருக்கிறது.(அடேங்கப்பா) ஏடாகூடாமாக் இருந்தால் மன்னித்துவிடுங்கள். இரவு பகல் என்று பார்க்காமல் ஆண்களும் பெண்களும் ரோட்டிலேயே எல்லாவற்றையும் அரங்கேற்றுவது. மேற்கத்திய கலாச்சார நாடுகளில் குழந்தைகளுடன் இருக்கும் யாருக்கும் இதிலுள்ள கஷ்டம் தெரியும். என் குழ்ந்தை டி.வியில் வாயில் முத்தம் குடுப்பதைப் பார்த்தாலே பேட் என்று சொல்லுவாள். பஸ்ஸில் ஒரு முறை பக்கத்தில் இது அரங்கேற...நான் சுதாரிப்பதற்குள் அவனைப் பார்த்தே "பேட் பாய்.." என்று சொல்லிவிட்டாள். அப்புறம் காக்கா பாரு குருவி பாரு என்று சமாளித்தேன்.
இது இப்போயெல்லாம் ரொம்ப ஓவராகத் தான் போய்விட்டது. செய்தித் தாளில் படித்த ஒரு விஷயம். இரவு 8 மணிக்கு லண்டனிலிருந்து நெடுந்தூரம் போகும் ஒரு ரயிலில் ரொம்பக் கூட்டமில்லாத ஒரு கம்பார்ட்மென்ட்டில் இரு காதலர்கள் அமர்ந்திருந்தார்களாம். அடிக்கிற குளிரில் ஐய்யோ பத்திக்கிச்சு என்று எல்லமீறி எல்லாவற்றையும் அங்கேயே அரங்கேற்றி விட்டார்கள். அங்கே இருந்த மற்றவர்கள் யாரும் எதுவுமே சொல்லவில்லையாம்...எல்லா ஆட்டமும் ஆடி முடிந்து ஒய்யாரமாக இருவரும் சிகிரெட்டைப் பத்த வைத்தார்களாம். இருக்கிறவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து..."ஏன்டா என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்...ட்ரெயினில் சிகிரெட் பிடிக்கக் கூடாதென்று தெரியாது உங்களுக்கு?" என்று ரோஷமாகக் கேட்டார்களாம். எப்பிடியிருக்கு கதை. கொஞ்சம் பணம் சம்பாதித்துக்கொண்டு ஊருக்கு ஓடிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

இங்குள்ள மற்றொரு சுவாரசியமான விஷயம் பேய்கள். உலகத்தில் எல்லா நாடுகளையும் விட இங்கிலாந்து தான் பேய்களுக்குப் பெயர் போன நாடு. இங்கு "கெண்ட்" என்ற பகுதி, பேய்களின் சரணாலயமாகத் திகழ்கிறது. இங்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக 12 பேய்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்த வல்லுனர்களின் ஜோலி என்ன? "கண்டேன் பேயை" என்று யாராவது ஆனந்தக் கூக்குரலிட்டால்...யாரு எந்தப் பேய்...இது புதுசுதானா இல்ல முன்னாலேயெ அட்டென்டென்ஸ் போட்ட பேய் தானா...தனியா வந்துச்சா..இல்ல கூட்டமா வந்து ரவுசு விட்டுச்சா.. என்ன சேட்டை பண்ணிச்சு இதெல்லாம் அலசி ஆராய்ந்து பதிவு பண்ணி புஸ்தகம் போட்டு சம்பாதிக்கிறார்கள்.(என்னடா இது பேய்ப் பொழப்புடா இது இதுக்கு நாண்டுக்கிட்டு செத்து பேயா அலையலாம்).

இந்தப் பேய்ப் பிரியர்கள் இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியையும் இதில் உபயோகப்படுத்தி ஆதாரமெல்லாம் சேகரிக்கிறார்கள். கொஞ்ச நாள் முன்னாடி ஒரு புகையான உருவத்தோடு போட்டோவை பேப்பரில் போட்டு இது பேயா இல்லைப் போர்வையைப் போட்டுக் கொண்டு உலாத்தும் ஏதாவது தெனெவெடுத்த நாயா..என்று பட்டிமன்றமெல்லாம் வைத்தார்கள்.
இதுல டமாசு என்னவென்றால் ஒரு பணக்காரப் பேய்...குதிரைவண்டி பூட்டிய சாரட்டு வண்டியில வலம் வருதாம். பேய்க்கு வந்த வாழ்வப் பாருடா...பேயானாலும் இப்பிடியில்ல பேயானும். இன்னொரு பேய் என்னடான்னா நம்ம தமிழ் சினிமாவில் வர்ற மாதிரி காரில் சாவாரி கேட்டு பின்னாடி உட்கார்ந்துட்டு அப்புறம் பாதி வழியில் மறைஞ்சுடுதாம். பேயானாலும் ஓசி சவாரி புத்தி போகல போல. நம்மூர்ல இருக்கற மாதிரி கோழிப் பிரியாணி கேக்கற பேய்கள் எதுவும் இங்கே இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் வசதியான பேய்கள் போல. பேயோட்டுறவங்களும் இந்த்ப் பேய்களோடு கதாட்சத்தால கிடா மீசையும் கொடுவா பார்வையும் பார்காமல் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு நாசூக்காய் திரிகிறார்கள். ஏன் தான் மக்கள் பேயப் பார்த்து பயப்படறாங்களோ...நாங்களெல்லாம் கல்யாணம் பண்ணி குடித்தன்மே நடத்தலையா?
இதெல்லாம் உண்மையோ பொய்யோ...கின்னெஸ் புஸ்தகத்துல போட்டு...இதையும் சுற்றுல்லா பக்கங்களில் போட்டு அரசாங்கம் நல்ல துட்டு பார்க்குது. (ஹூம் பணம் பணம்ன்னு ஏன் தான் இப்பிடி பேயா அலையறாங்களோ)
சரி சரி பேய்க்கதை போதும். உங்களுக்கு இன்னும் தெரிஞ்சிக்கனும்ன்னா இங்கே போய்ப் பாருங்கள். ஒருவேளை நீங்க கல்யாணமாகத பிரம்மச்சாரியா இருந்து இதெல்லாம் படிச்சுட்டு பயந்துட்டீங்கன்னா ராத்திரி உம்மாச்சிய கும்பிட்டுட்டு தாச்சிக்கோங்க...இல்லைன்னா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க...பழகிடும்.

26 comments:

Premalatha said...
This comment has been removed by a blog administrator.
Premalatha said...

you are featured in desipundit.

-------
கலாச்சார மோதல்கள், நல்லதும் கெட்டதும். நீங்க என்ன நினைக்கிறீங்க?

Culture clash, good and bad, what do YOU think?

Premalatha said...

Dubukks,

couple of things.

first of all, I love that touch in the last sentence. (இல்லைன்னா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க...பழகிடும்.
lol.

secondly and seriously,
public display of love is something we should learn, rather than thinking it is a bad thing. one of the serious issues tamil girls are facing is the way they feel "bad" about sex. because of that, many tamil girls have turned into asexuals. it is a fact. it is bad that your daughter thinks kissing is bad. instead, she can learn that it is an adult thing, like drinking, driving etc.. (I know you have started packing your bags to leave to india the moment you saw this comment of mine.)

think about it. it is a serious issue. i know many girls who live asexual life simply because of our upbringing. or, they might just "give in" to their husband's demands. it is a serious issue dubukks.

I agree, it shouldn't go to that extent as the one in the train scene you have described. but, let us not project that bad as it will only scare people. I agree it does exist, and believe me, all parents including westerners, do not like it when it is their children. many of my colleagues and friends are very conservative kind and they absolutely hate it and feel ashamed whenever such thing is pointed out. Children from "good family" do not go to the extent as the one described in train scene. it is mostly children from disturbed families. that is an entirely different situation and psychological set-up, very less to do with culture.

Maravandu - Ganesh said...

Amma Thaye..."$" podunga saami


:-)))))))))

Paavai said...

In US when a couple smooched in the car in front of the office, my colleague an American, said yucks and I asked her isnt it acceptable and she said no it is vulgar. Like Premalatha says I think it is more a personality kind of an issue rather than a cultural stuff..

Ippo namma oorlayum idhellam arambichachu. Anyways my personal belief is there is a time and place for everything and would like people to remember that always.

சங்கரய்யா said...

//ஒருவேளை நீங்க கல்யாணமாகத பிரம்மச்சாரியா இருந்து இதெல்லாம் படிச்சுட்டு பயந்துட்டீங்கன்னா ராத்திரி உம்மாச்சிய கும்பிட்டுட்டு தாச்சிக்கோங்க...இல்லைன்னா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க...பழகிடும்.
//

நான் இப்பத்தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன், பயமுறுத்துறீங்களே!

expertdabbler said...

As premalatha says, idellam oru periya vsayam illa dubukks. idhukku aaga ellam neenga India vara poradillai.nekku nanna theriyum:)

idhuvum kalyanam panninavanga padara kashtam madhiri daan - pazhagidum:) appuram illena bore adikkum:)

naan indha culture pathi oru post eludhittu adukku adai vida periya comments reply pannitu .. idhukku inneram kadhai neram paadhi eludhirkalaam:(

but then kadhai yosikanum idhellam summa just like that varum:)

யாத்ரீகன் said...

எங்க ஊரிலயும், நான் வந்த புதுசுல.. தீடிரென சைட்ல போர வர்ரவுங்க.. "ஹாய், ஹவ் ஆர்யூ, ஹவ் இஸ் இட் கோயிங்னு " கேட்டுட்டு.. அந்த கேள்விக்கும் அவுங்களுக்கும் சம்பந்தமே இல்லாம விலகிடுவாங்க.. ஆரம்பத்துல என்னட லூசா இவனுங்கனு நெனப்பேன்.. இப்போ.. அவங்க சொல்றதுக்கு முன்னாடி முந்திகிட்டு நான் சொல்லீட்டு ஓடிறேன் :-))

>>நம்மூரிலும் இருந்தால் எவ்வளவு >>நன்றாக இருக்கும்.

டுபுக்ஸ்.. இந்த ஊர்ல இருக்குற பாப்புலேஷன் என்ன, தெருவில நடமாடுற பாப்புலேஷன் என்ன, நம்மூரோட கம்பேர் பண்றீங்களே..

கொஞ்சம் யோசிங்க.. வீட்ல இருந்து, கொஞ்சம் காபிபொடி வாங்க மளிகை கடைக்கு போய் வர்ரதுக்கிடையில நீங்க வணக்கம் வந்தனம் சொல்லிக்கிட்டிருந்தீங்கன்னா.. காச லவட்டீடு எங்க நழுவீட்டீங்கனு Mrs.டுபுக்ஸ் தேட ஆரம்பிச்சிருவாங்க :-)) என்ன
நாஞ்சொல்றது


என்ன, கொஞ்சம் சிறிச்ச மொகத்தோடயாவது இருக்கலாம்.. சரி நம்மூர்ல அவன் அவனுக்கு வாழ்க்கையே பிரச்சனை, இங்க.. internet வேலை செய்யாததே பெரிய பிரச்சனை இவுங்களுக்கு ;-)

பிரேமலதா.. நீங்க சொன்னது வேணா... தம்பதியர் கைகோத்துட்டுப்போறது, குழந்தைகள் முன்னாடி அணைத்துக்கொண்டு அன்பை வெளிப்படுத்துறதுல தான் இருக்கனுமே தவிர.. வேறெதுலயும் இருந்துட்டா அது புர்ரட்சி கிடையாதுன்றது என் கருத்து..

-
செந்தில்/Senthil

Premalatha said...

புரட்சினு பெரிசா பேரெல்லாம் சொல்லாதீங்க செந்தில். இப்படி label கொடுத்துதான் நாம எதையும் தெளிவா தெரிஞ்சுக்காம விட்டுடறோம். சின்ன வயசுல என் கண் முன்னாடி யாராவது (couple, including my parents) கட்டிப்புடுச்சா வர்ஷா (டுபுக்குவோட daughter) நினைக்கிறமாதிரிதான் bad boyனு கடுப்பாயிடுவேன். அது இன்னமும் ஞாபகம் இருக்கு. எனக்கு ஏற்கனவே "அது" badனு பதிஞ்சிட்டதால அப்படி uncomfortableஆ feel பண்ணினேன்.
where do you want to draw the line is upto you. As long as you get the idea of what I am talking, I am happy.

:-)

(Please please please do not label this as "puratchi". this is just an "understanding" topic. thanks.)

Anonymous said...

dubukku, neenga india thirumbi poga poreengala..andha point mathram oththu varla..

i totally agree with premalatha's opinion..instead of educating about sex indians create an impression that it is something bad..i dont think that is a healthy thing..

TJ said...

Seriousa london Europaa kandam oru culture shock dhaan, more than US.

Adhuvum mudhal dhadavai The Sun papera thorandhu [Trainla OC la kidachudhaan :P]padichappa kannu koosinadhu. College hostella katiulu adeela olichu vechu padikkara matter ellam, UK largest selling tabloid la sarva sadharanama arangerindru iruku.

Though i strongly belive that awareness has to be created among children abt sex and safe sex, Premalatha akka solra matter la enakku konjam difference. Imbibing value in kids that, 'public display of affect is not right' is something, which we need not be ashamed of.

That is my set of values, and my culture and i am proud of it and preserve it for my next generation. Thats all.

In Saudi women showing their face is unacceptable. In india, that is acceptable but public display of love is unacceptable. In UK and US, public display of affection is acceptable, but open prostitution is not acceptable. In Netherlands prostitution is acceptable and official.
So, every culutre and its own set of values there is no right or wrong as long as individuals are respected. Donot advocate, Saudi to be an India, or India to be a US/UK or US/UK to be a Netherlands.

Anonymous said...

this hi to stranger thingy really helps to log-in easily ;-))

Anonymous said...

Hi people !
I have a post here. Its related to this topic. DO read it completely.

Jeevan said...

India’l, yaru siruchi pasranga, apadiya pasenalum kadaisela sundailathan mudiuthu. Enga oru ponna parthu siricha pothum, Evetesingnu ulla pudichi poduranga.

Rally it is very difficult to grow children in that culture, but in some situation, it is hard to avoid this.

Paiiyavathu pisasavathu, naan athalam namma mattan, athulam suma purali

Dubukku said...

Premalatha - danks for the desipundit link :)
vogay coming to what you have said about sex awareness
I completely agree with your points on that and some women being asexuals bcos of brough up reasons.
Coming to my daughter terming kissing as bad there is a huge story behind that and I can't go into that here. And you know what self and wife already have discussed and agreed on making somethings clear to our daughters BUT the timing for that is important. At the age 3 or 4 or 5 we don't think Varsha will be able to understand or comprehend what we say. We are not expecting maturity to think on what we say, but just able to understand what we say. To be precise even the term Adult needs lots of explanation. So we are just waiting for that right time to explaing things to her.

குழந்தைகளை கொஞ்ச நாள் குழந்தைகளாக அவங்க குழந்தைப் பருவத்த அனுபவிக்கவிடுவொம் ...அப்புறம் இதெல்லாம் அவங்க மண்டையில் போட்டு குழப்பலாம்ன்னு காத்திக்கிட்டு இருக்கோம் :)
Hope you will agree with this :)
But I salute the openness you have shown in your reply.

Dubukku said...

Maravandu Ganesh - சிரிக்கறதோடு ரெண்டு க்ளிக் பண்ணுனீங்களா? :)

Paavai - I was mentioning about the the acceptance or reaction from people. May be these thins are not a shock and this being so common is a cultural acceptance I feel.

சங்கரய்யா- என்னத்த பயந்தாலும் ஒரு நாள் வாக்கப்பட்டு புளியமரம் ஏறித்தான் ஆகனும். மனச தைரியமா வைச்சுக்கோங்க.. :)))

Dubukku said...

PK - true. Though It was more a sarcasm..there are other factors which will make you think here. Its just matter of time for us before chennai or other cities catch these hmmm

யாத்திரீகன் - "என்ன, கொஞ்சம் சிறிச்ச மொகத்தோடயாவது இருக்கலாம்.."
- அதே அதே...:))

Anonymous - That was a sarcasm in that context. But there are other 'n' no of factors like fellow NRI's which we are thinking about :) theriyala ....parpom

TJ - 'The Sun' :)) same here.
I personally feel its up the individual to set their identities and values. I see premalatha's point about making children aware of things. But whether to practise them or not is up to the individual.

Sundaresan - Yes it really does. Now a days I definetly feel a lot more comfortable in this mode.

Dubukku said...

தமாஷ் பாண்டி - யார் யாருக்கு எப்பிடி சுலபமா இருக்கோ அப்பிடி எழுதட்டுமே...வுடுங்க சார். தமாஷ்ன்னு பெயர வைச்சுக்கிட்டு ரொம்ப சீரியஸா பேசறீங்களே :))

Juvi - ஹைய்யோ நான் கொளுத்தி போடலீங்கோ...அதுவே பத்திக்கிச்சு :)


Jeevan - இன்னமும் சிரிச்சு பேசினா உள்ள தூக்கி போடறாங்களா என்ன? தப்பா பேசினா நடந்தாத் தான் அப்பிடி செய்யறாங்கன்னு நினைக்கறேன்..??
பேய் - ஆமாங்க...நானும் அதே கேஸ் தான் :)

Dubukku said...

Rajak - the link probly wrong? It doesn't seem to work.

Premalatha said...

Dubukks,

rajak illa, raajk (naanum athe thappu than panninen).
raajk.blogspot.com

(I will get back to your reply later).

Premalatha said...

Hi all,

I am very pleased to see the majority of you agree with me.

Dubukku,
As I have mentioned before, where do you want to draw the line is upto you. I am happy to see that you do agree in principle.

Thanks.

Sorry for the delayed response. Not feeling very well. so I just slept.

Usha said...

Interesting. We had similar experiences when we had gone with our 9 year old sun to England - it was tough to keep him from staring at these people.
I think it would be nice if we learnt to smile spontaneously at one another or even exchange greetings. But again it is a cultural thing I guess. I was told that in the middle east a woman smiling at a man can be construed as an invitation.
appuram adenna pallidukaale anda peiku vaazhkai patta comment? veetile innum saapadu kedaikuda ille tin channa daana?

Usha said...

aiyp Sun illai 9 year old son.. ( anda pei comment le konjam unarchi vasapattutena adaan thappaiduthu!!)

Anonymous said...

Dubukkus

Sorry i caught up with your posts just now - I was in India (Hyderabad-Chennai-Amabsamudram). This time i did slow down near the Bajania madam and (also by the panni mudukku) and all those places. Perhaps one day when you become famous we will arrange a Dubukku tour on the lines of Harrypotter tour.
BTW If you do come to chicago you can speak in Chicago Tamil sangam. :-)

I thought about taking 100 copies of your blogs and distribute it to every house in North car St. But since i enjoyed your post verymuch i decided to not to do that. I will some day talk to that "important person" in your family and share the stories ;-)

-Muthu

Anu said...

unga thangamani madam inda post-a padichaangala ;)

Dubukku said...

Premalatha - Agreed in principle...enna range katureenga :)

Usha - exchanging greetings - yeah it would be very nice. wud love that.

Muthu - Nice to see you back. Hope you had great time there. hehe andha chicago tamil sanga mattera nyabagam vechukonga...marandhura poreenga :)
(tour - hehe nalla nakkaladikareenga)

Raj - yeah same thoughts here :)

Anurama - danks for dropping by. Illa innum thanagamani padikala...padichathukku appuram Usha sonna madhiri anehama tin channa va thaan irukkum :P

Post a Comment

Related Posts