எந்தப் படுபாவி கண்ணப் போட்டானோ...எல்லாம் கிடக்க கிழவியத் தூக்கி மனையில வைன்னு என்ன நட்டநடு இடத்துக்கு ஆபிஸில இடம் மாத்திவிட்டார்கள். அப்பப்போ பார்க்கும் ப்ளாகை கூட (??!!) இப்போயெல்லாம் பார்க்கமுடியவில்லை. ட்ரெயினில் வேறு இரண்டு நாளாக இடம் கிடைக்கவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக யெக்கோவ் புண்யத்தில் யவன ராணி படித்து வருகிறேன். சாண்டில்யன் சும்மா கலக்கு கலக்குன்னு கலக்கியிருக்கிறார். படித்து முடித்துவிட்டு விரிவாக எழுதுகிறேன். கண்டிப்பாக ஒரு காதல் கதை எழுத முயற்சிக்கவேண்டும் என்று இருக்கிறது.
"தவமாய் தவமிருந்து" பார்த்தாகிவிட்டது. ரசித்து எடுத்திருக்கிறார் சேரன். ஆனால் சில இடங்களில் வேண்டுமென்றே ரொம்ப இழுத்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஹீரோயின் பாத்திரத்துக்கு படு பாந்தமாய் இருக்கிறார். சேரனை விட ராஜ்கிரண் நடிப்பு தான் மிகப் பிடித்தது. சரண்யாவும் நன்றாக நடித்து இருக்கிறார். லேசாக தொண்டை கட்டின மாதிரி இருக்கும் அவருடைய குரல் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக இருக்கிறது. "பேரு வைக்கிறான்பாரு குசுப்பூ கூரப்பூன்னு" சொல்லும் போது இயல்பாக இருக்கிறது.
ஏ.பி.சி.டி படமும் பார்த்தாகிவிட்டது. ஆரம்பித்த வேகம் எதிர்பார்ப்பை கிளப்பி விட ஆனால் படம் அப்புறம் தொய்வடைந்துவிடுகிறது. படத்தில் ஷ்யாம் நன்றாக நடித்திருந்தாலும் , படத்தில் எல்லாரும் எப்பவும் என்னம்மோ கடன் கேக்கிற மாதிரி மிகவும் தாழ்வான குரலிலேயே பேசுகிறார்கள். சில இடங்களில் சகிக்கல. மற்றபடி படம் தேவலை ரகம்.
சிவகாசி வேற பார்த்துத் தொலைத்தேன். ஒரு பவுண்டு போன ஜென்ம கடனாயிருக்கும். மத்தபடி படம் தெண்டம். விஜய் படத்தின் சம்பிரதாயப் படி இந்தப் படத்திலும் ஹீரோயின் அசின் காலை கோணலாக வைத்துக் கொண்டு ஒரு குத்தாட்டம் ஆடுகிறார். கஜினியில் ஆடிய குட்டியா இதுன்னு தலையில அடிச்சிக்கலாம் போல இருக்கிறது.
கண்ட நாள் முதல் படமும் பாட்டும் நல்லாயிருக்கு. லைலா நன்றாக நடித்திருக்கிறார். பிரசன்னா நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. அனேகமாக இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு வில்லனாகிவிடுவார் என்று நினைக்கிறேன். வூட்டுல கொஞ்சம் ஜொள்ளிங்ஸ்.(இன்னும் ஒத்துக்கலை) அய்யோ பாவம் அலைபாயுதே யு.யெஸ் மாப்பிள்ளை இதிலும் அதே யூ.யெஸ் அதே மாதிரி பெண் பார்த்து இந்த தரமும் கோட்டை விடுகிறார். அடுத்த படத்திலாவது கல்யாணமாக வேண்டும் என்று வீட்டில் தங்கமணி வேண்டிக் கொண்டிருக்கிறார்.
மொத்தத்தில் தமிழ் சினிமாவில் தரம் கொஞ்சம் இறங்கி இருக்கிறது. இவ்வளவு படத்திலும் ஒரு ஹீரோயின் கூட மனதில் தங்கவில்லையே...சே என்னைய்யா படம் எடுக்கறீங்க...
Tuesday, December 20, 2005
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
padupaaviya romba dhooram thedavendaam...dho...naan inge iruken...
i loved kanda naal mudhal and prasanna....aaagaaa...tamil cinema theriduchu...prasanna, surya...enga manasula ivanga ellam thangitaanga...
Surayavukku vayasu kooda irunthirukkalam or enakku konjam koraichchu irunthirukkalam. I prefer the later. :-)
athanala enna, namakku irukkuve irukkaar Mel Gibson, namma age-kku thahunthapadiyum irukkum, konjam peter parammparaiyila serthukkavum vasathiyaa irukkum. I love "What woman want". I love when he dances for Frank Sinatra (I won't dance, don't ask me, I won't dance, madam with you. My heart won't let my feet to do, they should do.):-)
Next time unga thangamaniya corrupt pannidaren. varattum.:-)
//ஒரு பவுண்டு போன ஜென்ம கடனாயிருக்கும். //
திருட்டு பிரிண்டை இப்படி காட்டிக் கொடுத்திட்டீங்களே... அடுதத தடவை கடைப் பக்கம் போகும் போது கவனமா போங்க:-)
all your archive links are broken :(. i didn't see your email anywhere and so posting here...
காதல் படத்துக்கப்புறம்.. தவமாய் தவமிருந்தும், கண்ட நாள் முதலும் அருமையா இருந்துச்சு..
ABCD செம ராவு.. மென்மையான ஹீரோ ரோல் செய்யும்போது, வாய்க்குள்ளயே, மெதுவா, slowmotion-ல பேசனும்னு யாரு ஷாம்க்கு சொல்லித்தந்தாங்கனு தெரியல.. எல்லோரும் சொல்லி வச்ச மாதிரியே slowmotion-ல நடிக்கிறாங்க..
கண்ட நாள் முதல் லைலா மனசுல தங்கவில்லை யென்ற டுபுக்குவுக்கு கண்டனம் ;-) என்னங்க. கோபப்படும்போது எவ்ளோ க்யூட்டா இருந்தாங்க.. நந்தாவுக்கப்புறம்.. நல்லாவே perform பண்றாங்க..
-
செந்தில்/Senthil
Indha maadhiri dhaan kazhuthu vali kaadhu valinu solli, computer screena floor la vechu yaarukku theriyama konjam naal velai parthundu, illaina, CtrlC, CtrlV panni, winword/eclipse/toad aedhilayavadhu pottu padikardhunu ellam try panni parunga! work out aagum :D
BTW, oru pound koduthu Sivakasi partha neengale ivlo varutha pattu, 10pound koduthu Boleyn la poi Tirupachi paartheine, andha wound a kilari vittengha...
Neenga parava illai engeyo kankanaada desathile ukkandu athanai pudu padamum pathudareeenga. Naan inge bangalore le ukkandundu eppoda "indiya tholaikatchigalil mudan muraiyaga" poduvaangannu vayai pilandundu ukkandirukken.
anaal neenga solrathai patha onnum romba miss pannalai nu oru santhosam. amam yaar ivangelllam -prasanna, asin. Inimel badge potu vidanum appadaan ivangalellam theriyum.
Thavamaai.. heroine enga company la work pannavalaam...
neenga sonna listla kanda naal mudal than therum pola irukku - anng adhu enna tamil cinema tharam erangi irukku - oru heroinum manasula nikkalainu - thangamani enna solraanga ?
Oru nalla kadhal kadhai eluthunga dubukku. Tavamai Thamirunthu kandippa pakanum naan, oru nalla kathaiai kondu vanthuirukurar Cheran. I am a fan of Vijay, but in this movie asin dint look nice, I hate the song Ennatha soluvanugo and Deepavali. But like the song Kodambakam area. I like to see KNM, it is a decent movie.
Oru valiya kojam tamil padam parthirkal, theater poi parthingala illa thirutu VCD’a.
Naanum Jeevan sonnadhaiye echoing, Jolli thirundhaa madhiri innoru serial ezhudhunga koodiya seekiram.
Uma
minnal - neenga thaana adhu. amaam amaam ungalukkellam therudhu engalukku thaan hmmm
Premalatha - சூர்யா பத்தின உங்க ஆதங்கம் புரியுது :) மெல் கிப்ஸன் கொஞ்சம் வயசானவரா இருக்காரே :))
நிலா - :)) இதெல்லாம் திருட்டுப் பிரிண்ட் இல்லைன்னு நினைக்கிறேன்.
anonymous - Not sure why. But I am having to republish index every time. Dont know why. They are working now.
செந்தில் - லைலா பரவால்லங்க நல்லா நடிச்சிருந்தாங்க..எனக்கு அவங்க பிதாமகன் நடிப்பு ரொம்ப பிடிக்கும். அதுவும் அந்த "லூஸாப்பா நீ"ன்னு கேப்பாங்களே ...கலக்கல்
ராஜ் - படம் பார்த்தீங்கன்னா நான் சொல்றது புரியும். ஒரு கட்டத்துல தாங்க முடியாம இருக்கும். தலை போகற நேரத்திலயும்...இப்பிடி பேசும் போது எரிச்சல் தான் வரும்..:)
Usha - ஆமாங்க அங்க ரிலீஸாகற அன்னிக்கே இங்கயும் ரிலீஸாகிடும். பெரும்பாலன படங்களுக்கு டி.வி.டியும் வேற வந்திரும்.
"amam yaar ivangelllam" - :))) நான் கொஞ்ச நாள் இப்பிடி தான் இருந்தேன். இப்போ எல்லா படங்களையும் பார்த்து ஞானம் வந்திருக்கு.
Chakra - unga companya...appidi podu
Paavai - Kanda Naal mudhal nalla irukku. I forgot to mention one more. Kasthuri Maan - thats also nice. Thangamani thanni thelichu vittutanga (appidi thaan nenaikaren) :P
Jeevan - hehe kaathal kathai ezhutharathu avala easy illa friend. Want to take sometime to frame this properly. But will do soon. Thanks your words are encouraging:)
Uma - ezhuthanum but athula humor kalakama ezhuthanumnu me feels :) parpom.
டுபுக்கு உங்க சினிமா விமர்சனம் நல்லா இருக்கு. நான் கூட சாண்டில்யன் படிச்சு ரொம்ப நாள் ஆகிறது. பரவாயில்லை நீங்க குடுத்து வெச்சு இருக்கீங்க. நல்லா என்சாய் பண்ணுங்க.
Off topic:
Think I should read your blog often... gonna improve on my tamil real soon. I'm like soo excited whenever I visit your blog. Just felt like commenting and I did.
Have a happy day.
En thalaivar "King Kong" nu oru padam eduthurukkaram. Paatheengala?
P.S.
Enakku 15th varaikkum leave kidachadhu. Oru naalaikku average-a 5 films parthen. Ellame englibis! :)
Balaji - Aamaam Sandilyan padikarathukku kuduthu veichu irukken :)
the woman - Danks for dropping by. Yaan petra baakiyam - incase you didn't understand what this means it roughly translates to "my pleasure"
Just peeked in to your blog. Will read that fully and then comment there :) I come from a place near Tenkasi
Krithika - unga thalaivara..."namma thalaivar"nu sollunga. KingKong innum parkala. seekaram parkanum but can't go to theatre. oru naalaiku 5 padama...kuduthu vechavanga..englibis la neraya backlog irukku. one of the problems being the cassette rental is a bit costly :((((
me too watched KNM and T..T...
enna thalaiva, Laila manasula nikkalannu solliteengale?
ஹலோ டுபுக்கு!!..மீன்டும் ராமகிருஷ்ணன் டெல்லியிலிருந்து !!..
முதல் தடவயா நான் தமிழில் எழுதுகிரேன். உங்களோட சினிமா விமர்சனம் ரொம்ப நல்லா இருந்தது.
'தவமாய் தவமிருந்து' : இன்த படத்தை எல்லாரும் கண்டிப்பா பாக்கணும்.
படம் அவ்வளவு தத்ரூபமா இருக்கு. ராஜ்கிர்ண் நடிப்பு ரொம்ப இயல்பு.
முக்காவாசி படம் எனோட கண்ணுல தண்ணீர். படம் என்ன ரொம்ப பாதிச்சிடுசு.
கண்டிப்பா இன்த படத்துக்கு தேசிய விருது வரணும். உங்களுக்கு இன்த படத்த பார்த்து அழுகை வரலியா டுபுக்கு?
'கண்ட நாள் முதல்': படம் ரொம்ப இயல்பா இருந்தது. பிரசன்னா மற்றும் லைலா நல்லா நடிச்சிருந்தாங்க. படம் நல்லா சுருசுருப்பா இருந்தது. பாடல்கள் பரவாயில்லை.
'சிவகாசி': மஹா மட்டமான படம்.
Inga DVD rentals work out cheap. And a great collection too! So time irundhadhenu parthu thalitten.
ramakrishnan - நல்ல படம். எனக்கும் பிடிச்சிருந்தது. அனால் கண்ணீர் வரவில்லை. எனக்கு அழகி பார்த்து கண்ணீர் வந்தது (கடைசீ சீன்). பிரசன்னா நல்ல நடிக்கிறார். எனக்கும் பிடிச்சிருந்தது.
Krithika - boooo :((( ana naanum ippo konjam osi DVD's allitu vandhirukken. Have started watching them.
Post a Comment