Friday, February 17, 2006

டீ.வி

வழக்கம் போல் முந்தாநாள் ஆபிஸில் வேலை செய்து ப்ளாகி களைத்து வீட்டுக்குள் நுழைந்த போது கோலங்களில் வழக்கம் போல் அபி அழாமல், அபியின் மாமனார் அழுது கொண்டிருந்தார். (இப்போவெல்லாம் சீரியலில் ஆண்களும் அழ ஆரம்பித்து இருக்கிறார்கள்). அவர் அழ ஆரம்பித்த முஹூர்த்தம் எங்கள் வீட்டு டீ.வி எல்லாவற்றையும் பச்சை பச்சையாக காட்ட ஆரம்பித்தது. அந்த கால ஈஸ்ட்மென்ட் கலரில் பார்ப்பது மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்தில் சொட்டு நீலம் போட்டது மாதிரி நீல கலருக்கு மாறியது. அப்புறம் கொஞ்ச நேரம் சிகப்பு கலர் சிங்கிச்சா..அப்புறம் திரும்பவும் பச்சை. அப்புறம் நான் எதோ டி.வி.யில் கையை வைக்க ஊமையாகி விட்டது.

அதோட சும்மா இருந்திருக்கமாட்டேனோ...ஒன்றரையணாவுக்கு வாங்கிய ஸ்குரூ ட்ரைவர் உபயோகமே இல்லாமல் இருக்கிறதே என்று எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். அரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் பிரித்து மேய்ந்துவிட்டேன். என் மூத்த மகளுக்கு ஒரே ஆச்சரியம். "டாடி டிட் யூ டூ இட் அலோன்?" அவ அப்பா இதனையும் பிரித்துப் போட்டேன் என்று அவளுக்குப் பெருமை. எங்கம்மாவும் இப்படித் தான். ஊரில் ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தினாலே "எம் பையன் பெரிய இன்ஞ்சினியரா வரவேண்டியவன் " என்று பெருமிதம் குரலிலேயே தெரியும். இரண்டாவது பெண்ணுக்கு அவளுக்குப் போட்டியா நான் வீடெல்லாம் குப்பையாக்கி இருக்கிறேனே என்று குழப்பம்.

"செல்விக்கு ஆரம்பிக்கப் போறான் சீக்கிரம்" மேலிடத்துப் பிரஷர் வேற.

"இரும்மா என்ன பிரச்சனைன்னு பார்க்கட்டும் " - உண்மையிலேயே பழைய பாடாவதி டீ.வி. என்பதால் சும்மா ஒரு குருட்டுத் தைரியத்தில் பிரித்துப் போட்டுவிட்டேன். எதாவது ஒயர் அறுந்து இருந்தால் முறுக்கி விடலாம் என்று பார்த்தால் அந்த மாதிரி எதையும் காணோம்.

"அனேகமா பி.சி.பில எதாவது பிரச்சனையா இருக்கும்ன்னு நினைக்கறேன்" - சும்மா ஜார்கனெல்லாம் போட்டு உண்மையிலேயே உள்ளே தூசி அடித்துக் கொண்டிருந்தேன்.

மகளும் சேர்ந்து கொண்டாள்.

"அப்பா இதென்னப்பா?..."

"அதாண்டா கபாஸிட்டர், இது ட்ரான்ஸிஸ்டர்"

"நீங்க படம் போட்டது போறும் டீ.விய மாட்டி போடுங்கோ அதுல எதாவது பார்கலாம்"

"இரு..குழந்தை கேக்கறா நாளைக்குப் பெரிய இன்ஞ்சினியரா வருவா"

"அதனால தான் சொல்லறேன் நீங்க சொல்லிக்குடுக்காதீங்கோ...தூசியடிச்சது போதும் திரும்ப மாட்டி ஆன் பண்ணுங்கோ.."

மாட்டிப் போட்டால்....தெளிவாக வெத்து ஸ்கிரீன் தான் தெரிந்தது.

"செல்வி ஊமைப் படமாகவாவ்து பார்த்திருப்பேன்...இப்படி டீ.விய உடச்சுட்டேளே..."

"என்னது நானா..." திரும்ப கழட்டி மாட்டியதில் கொஞ்சம் விட்டு விட்டு தெரிந்தது. அப்புறம் தான் உரைத்தது...பிரச்சனை ஸ்கார்ட் சாக்கெட்டில்(ஏரியல் சாக்கெட் மாதிரி ஐரோப்பாவில் இது தான் ஸடாண்டேர்ட்) இருக்கலாம் என்று.

அப்புறம் அதை வி.சியாரில் குடுத்து வி.சி.ஆரிலிருந்து நார்மல் ஏரியல் சாக்கெட்டில் போட்டால் படம் தெளிவாக ப்ளாக் அண்ட் ஒயிட்டில் தெரிந்தது.

"கலர் டீ.விய ப்ளாக் அண்ட் ஒயிட் டீ.வியா மாத்தறதுக்கும் ஒரு திறமை வேண்டும் அது உங்க கிட்ட தான் இருக்கு" என்று ஒரே புகழாரம் தான் அப்புறம்.

"எல்லாம் இந்த ஸ்க்ரூ டிரைவர்னால தான்...ஒத்த ரூபாய்க்கு வாங்கினா இப்படித் தான் இருக்கும். அடுத்த தரம் பி அண்ட் க்யூவில நல்லதா வாங்கணும்"

இப்போதைக்கு பிரச்சனை தக தக தக தங்கவேட்டை ரம்யாகிருஷ்ணனின் புடவைக் கலரை பார்க்க முடியாதே என்று வந்து நிற்கிறது. வீகெண்டில் டி.வீ வாங்க போகனும்.

இன்றைக்கு ஹாரி பாட்டர், கிங்காங், நார்னியா, வார் ஆப் த வேல்ட்ஸ் என்று கலக்கலாக பத்து டி.வி.டிகளை ...ஆபிஸில் மேனேஜர் கொடுத்திருக்கிறார் (பொய்யில்லை எல்லாம் க்ரிஸ்டல் க்ளியர் டி.வி.டி நல்ல பிரிண்டாம்)

கொட்டும் மழைக் காலம் உப்பு விக்கப் போனேன்...காற்றடிக்கும் நேரம்......

22 comments:

சீமாச்சு.. said...

//ஊரில் ரிமோட்டுக்கு பேட்டரி மாத்தினாலே "எம் பையன் பெரிய இன்ஞ்சினியரா வரவேண்டியவன் " என்று பெருமிதம் குரலிலேயே தெரியும்//
:)))
Hi Dubukku, normally it is not advisable to open a TV set without proper pre-cautions. The static content on the picture tube may lead to fatal accidents.
Just beware and let your kids know. Just to be cautious.
you scared me by your description. Thank God you are back writing this post funny...

endrendrum anbudan,
seemachu..

Boston Bala said...

Office-il ippadi sirikka vaikkaringaley :-)))

Anonymous said...

perisa ennatha kazhati irukkengannu adutha murai thangamani ketkamudiyadhallava ini...

anbudan
thang-aachi
(inimel aachi)

Anonymous said...

Vaanguradhu vaanga poreenga oru rendu aayiram pound-a otti nalladhaa oru 42 inches plasma screen vaangirunga.

Balaji S Rajan said...

டுபுக்ஸ் கொஞ்ச நேரத்துல டிக்கெட் வாங்கி இருப்பீங்க... ஜாக்கிரதை.. டிவி விஷயம் தெரியாம கழட்டிடாதீங்க.... நல்ல சோனி மாடல் பார்த்து வாங்குங்க... சன் மூன் எல்லா சேனலும் பார்க்கறீங்களா... குடுத்து வெச்சிருக்கீங்க... நடக்கட்டும்....

aruna said...

உங்க கதை படிச்சா எனக்கு சதிலீலாவதி வசனம் தான் ஞாபகம் வருது. எப்பவும் screw driver வச்சு ஏதாவது நோண்டிட்டே இருக்கிற பையனை பார்த்து கோவை சரளா, "பய பெரிய engr-a வருவான்"..கமல், " மெக்கானிக்கா கூட வரலாம்"

Paavai said...

seekrama pudhu tv vangunga - pirichu meyardellam vendam

Anonymous said...

Hi Dubuks, how you only write so funny like this? Great. keep up this good work. thanks for keeping us laughing everytime.

Anonymous said...

Nalla tv-ya paathu vaangunga, Narnia maadhiri padam ellam visual effects super-a irukkum, miss pannidadheenga. (Inga Feb 24th thaan release :( )

ambi said...

Hi dubukku anna,

plug ellam pudungittu thanee tv yee kazhlatenel..? kozhantheel vera pakathulee erukku.. usaruuuu!

enna muzhikerel..? naan thaaan kallidai govinda mamavaathu moothaa paiyen..

sonypsp said...

Hi dubukku,

Enna software engineer nu sonnenga, yeppo electronics and communication engineer aaneenga?

Parthu...so, its time to shop for a tele...Nalla tesco vila 50% off pootu irrukkan. 28 inch bush tv ippo 99.99 than...

or else for a bigger and better tv, i prefer Argos as their customer service is good...when you buy, but with extented gurantee.

It saved my day last month.. as they now resplaced my old tv with a brand new model :)

bharat said...

I've been trying to get to you. Thot you should see this

www.theebyencore.com

Usha said...

Office le Blogi sari adenna pudusa "velai Panni" - eppolerndu inda ketta vazhakamellam?
Apram, kaile screwdriver kedachudunnu TV ai kazhatti potutu apram onraiyana screwdriver mele vere kutham...Enga Tanjavur pakkam idukku oru vachanam solluvanga....
aha, periya periya electronics company ellam B?W Tv ai eppadida colour ah upgrade pannalamnu research panrappo neenga reverse le saadanaiya? enna irundalum paarata vendiya muyarchidaan.
hehehe...oru chinna telefilm of an evening episode maadiri azhaga dialogues oda solli irukkenga...hm anal black and whiteledann....

Anonymous said...

pirichu mayreenga!!!!
this reminded me of madura vadivelu joke..
subbu,

Chakra said...

andha TV ivlo naal vandhadhe periya vishayam... adhai vaangum podhu andha Afghani kitta peram pesinadhai pathi thani post-e podalaam..

seri.. enna TV vangine sollu... adhaye naanum vangi tholaikaren..

Yours Truly said...

hi, first time here and was ROTFL. Appram oru Pre scriptum poattudunga - Office-il idhai padippavargaL thangaL sondha risk-il padikkavum. Monitor-ai paarthu thaniyaaga sirithu koNdirukkum pozhudhu PM-o mattravargaLo ungaLai oru maadhiriyaaga paarthaal naan poRuppalla-nu :)

Dubukku said...

Seemachu - danks for your concern. Yes am aware of that. carefulaa thaan parthen. But would be interested in knowing what sort precautions could help. So if you have some time pls. let me know.

Boston Bala - haiii ungala sirikka vechathulla romba santhosham :)

thangachi - athe athe...summa adikati naanum bandha vitukarenla...TV ya kazhatti maatina parambarai enga parambarai nu :))

WA -neenga sonna no appeal...(seekiram Dubukku TV nivarana nidhikku donate pannunga)

பாலாஜி - உங்க அன்புக்கு நன்றி. கண்ணைப் போடாதீங்க...இப்பிடி போட்டுத் தான் ப்ளாக் அண்ட் ஒயிட்டுல பார்த்துக்கிட்டு இருக்கோம். (சும்மா டமாசு)

Dubukku said...

Aruna - வாங்க வாங்க ரொம்ப எடக்குமொடக்கா உள்ளதெல்லாம் நியாபகத்துக்கு வருது உங்களுக்கு எந்த ஊர்ங்க அம்மணி...? :)

Paavai - vangtita pocchu (dubukku tv. nivarana nidhi nyabagam vechukonga) :P danks for the concern

Guru - danks for dropping by. Glad that you enjoy my post. thanks again. (rendu tharam danks solli irukken ozhunga comment pannunga inime)

Krithika - neenga sonnenganu innum Narnia pakkala ..waiting for purchasing one.

Dubukku said...

Ambi - அடப்பாவி வாடா வா...குடும்பத்துல ஒருத்தருக்கும் இந்த் ப்ளாக் பத்தி தெரியக் கூடாதுன்னு நினைச்சேன்...மூக்குல வேர்த்த மாதிரி கண்டுபிடிச்சுட்ட? (மது?)

சரி அதெல்லாம் இருக்கட்டும்..தம்ப்ரி....இப்படி டேக் லைன்லேர்ந்து எல்லாத்தையும் லவட்டிட்யே நியாயமா...பார்த்துப்பா...இவங்க குடும்பத்துல எல்லாருக்கும் ஜொள்ளுவிடறது தான் வேலைன்னு முத்திரை குத்திரப் போறாங்க (இங்க ஒருத்தன் அல்ரெடி குத்திட்டான்)


sonypsp - ECElam illenga..naan engineeryee illeenga appidi solli oora emathi kittu irukken. Hmm planning to visit tesco before finalising anything. danks for the tip.

Bharat- will visit shortly. danks.

Usha - ssshhhhh velai pathi sathama pesatheenga :P andha thanavur dialogue solli irukalam enna athu? danks for the compliments

subbu - avalavu mosam illaya naan :P

Dubukku said...

Veda - danks for dropping by. Glad that you enjoyed.

illeenga weekend was soooo busy. Ramya and her saree will have to wait for a week.

Chakra - yes but it certainly was a good one. vangittu sollaren..neeyum vangu.

Yours Truly - danks for dropping by. he he romba puhalareenga...danks. PM kitta maateneengala illaiya?

All - romba danks ellarukkum, ungala vechu rendu naal veetula (bandha vittu) ottiruven :P

Usha said...

anda thanjavur vachanamah: adaavadu
aada theriyadaval mutram konal
appadeenu solluvalam!

Dubukku said...

Usha - haii andha vasanatha romba decenta solli irukeenga... :P

Uma - scart poiye pocchu... Kolangal romba onnum marala Abi innum azhuthundu thaan irukka...:P

Post a Comment

Related Posts