Wednesday, February 01, 2006

Alma மேட்டர் - 4

For previous parts --> part1   part2   part3


முதலில் கொஞ்ச நாட்களுக்கு நாங்கள் மட்டும் பஸ்ஸில் வருதற்கு ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. அப்புறம் பழகிவிட்டது. அந்த மூன்று சீனியரில் ஒரு பெண் எனக்கு முந்திய ஊரிலிருந்து வருவாள். அவள் அணிந்திருக்கும் கொலுசில் வழக்கத்தை விட கூட கொஞ்சம் சலங்கைகள் இருக்கும். நடனம் வேறு பயின்றிருந்ததால் ஜில் ஜில் என்று நடையே கொஞ்சம் ஒய்யாரமாகத் தான் இருக்கும். அதனாலேயே சீனியர் பசங்கள் அவளுக்கு "ஜில் ஜில் ரமாமணி" என்று நாமகரணம் சூட்டி "ஜில்லு" என்று செல்லமாக வழங்கப் பட்டு வந்தாள். இரண்டாவது பெண் எனக்கு அடுத்த ஸ்டாப்பில் ஏறுவாள். இந்தப் பெண் எனக்கு எந்த முன்னறிவிப்பும் குடுக்காமல் திடீரென்று நடுவில் இருந்து ஒரு நாள் பஸ்ஸில் வர ஆரம்பித்ததால் கொஞ்ச நாளைக்கு நான் கவனிக்கவே இல்லை. மூன்றாவது பெண் அவ்வப்போது தான் பஸ்ஸில் வருவாள். நான் சொல்லப் போகும் கதைக்கு அவ்வளவு முக்கியம் அல்ல அதனால் அவளை விட்டுவிடுவோம்.

ஏற்கனவே நானும் என் நண்பனும் ரொம்ப சமத்து..இதில் இருப்பதிலேயே(பையன்களில்) சீனியர் வேற.. கேட்கவா வேண்டும்? சமத்து பஸ்ஸெல்லாம் ஆறாக பெருக்கெடுத்து ஓடும். போகிற நண்டு சிண்டுகளையெல்லாம் ரவுசு கட்டிக் கொண்டு இருப்போம். திருவிளையாடல் முருகன் மாதிரி பஸ்ஸில் எங்களுக்கு என்று ஒரு தனி இடம், ஜால்ரா போட நாலு ஜூனியர் பையன்கள் என்று ஜமாய்த்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் நாங்கள் உட்காரும் இடத்தில் ஜில்லு நான் மேலே சொன்ன ரெண்டாவது உருப்படியை சேர்த்துக் கொண்டு உட்கார்ந்து விட்டது. எனக்கு உண்மையிலேயே ரொம்ப கோபம். ஆனால் 'ஜில்லு'வின் வாய் துடுக்குக்கும் தைரியமும் ஸ்கூல் அறிந்தது. அதனால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் என் நண்பன் இருக்கானே அவன் உன்மையிலேயே தளபதி. "போய் அடிடா" என்றால் அடித்துவிடுவான். அதற்கப்புறம் பிரின்ஸிபாலிடம் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன் என்றால் அங்கேயே மூச்சா போய்விட்டு "காய்ச்சல்" என்று மூன்று நாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிடுவான். நண்பனின் உளறல்களும் எங்கள் க்ளாஸில் பிரசித்தம். இருந்தாலும் அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஜில்லுவிடம் வீரவேசமாக சண்டை போட்டு விட்டு வந்தேன். ஜில்லு அதற்கெல்லாம் அசரவில்லை. அசால்டாக எங்களை சமாளித்து போய்ட்டு வாங்கடா என்று பெப்பே காட்டிவிட்டாள். அதனால் நாங்களே அவர்களுக்குப் பெருந்தன்மையாக அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு வேறு இடத்திற்கு குடித்தனத்தை மாத்திவிட்டோம்.

வந்ததுக்கப்புறம் தான் நண்பன் மெதுவாக கேட்டான்.."டேய் அவளப் பார்த்தியா?"

"யார ஜில்லயா?"

"இல்லடா அவ பக்கத்தில புதுசா "

கூச்சமே படாமல் திரும்பிப் பார்த்தேன். அழகாய் இருந்தாள். "இது யாருடா புதுசா? "

"டேய் நான் அவள சைட் அடிக்கப் போறேன்டா.." நண்பன் காவிரியைத் திறந்துவிட்ட மாதிரி சத்தம் போட்டு உளற ஆரம்பித்தான். "சைட்" என்ற வார்த்தை அந்த வருடம் தான் எங்களுக்குப் பரிச்சயம். அந்த வயதில் அது கெட்ட வார்த்தை மாதிரி. மெதுவாக சொல்லிப் பார்த்துக் கொள்வோம், கிளுகிளுப்பாக இருக்கும். "என்னடா இன்னிக்கு சைட் அடிச்சியா" என்று ஒருவருக்கொருவர் பெருமையாக விசாரித்துக் கொள்வோம். முக்கல்வாசி பேருக்கு விவரம் தெரியாமல் வீம்புக்காக சொல்லவேண்டுமே என்று சைட் அடிப்பதாக சொல்லுவார்கள். சில பேர் "சே சே...நான் இல்லைப்பா" என்று நல்ல பையன்களாகப் படம் போடுவார்கள். "சைட்" என்ற இந்த வார்த்தையை உபயோகப் படுத்துவதில் அந்த வயதில் என்னவோ அப்பிடி ஒரு ஆனந்தம்.

"டேய் என்னடா சொல்லற...?"

"ஆமாண்டா நான் அந்த பெண்ணை சைட் அடிக்கலாம்ன்னு இருக்கேன்..."

"உண்மையாவா?...சரி என்னம்மோ பண்ணிக்கோ..."

நான் திரும்பவும் அந்தப் பெண்ணைப் பார்த்த போது என்னை அவள் குறு குறுவென்று பார்த்துக் கொண்டிருந்த மாதிரி எனக்கு தோன்றியது. லேசாக சிரித்தாள்.

அப்புறம் ஸ்கூல் பஸ் பயணம் எங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாகிவிட்டது. அப்பிடியே எட்டாவதிலிருந்து ஒன்பதாவது வந்துவிட்டோம் ஆனாலும் பஸ்ஸில் தான் வந்து கொண்டிருந்தோம். வீட்டில் சைக்கிள் எல்லாம் கேட்டு அடம் பிடிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஜில்லும் 'அவளும்' சிரித்துப் பேசும் அளவுக்கு நல்ல பழக்கமாகிவிட்டார்கள்.

-தொடரும்

19 comments:

Unknown said...

Ennamo +1 +2 padikumbodhu nadandha kadhainnu nenechaa, 8th padikumbodhu nadandhudhaaaaaaa? Yamaadiyov!

இலவசக்கொத்தனார் said...

நாங்கள் எல்லோரும் படித்துக்கொண்டிருக்கிறோம். படித்து விட்டு கலந்துரையாடவும் செய்கிறோம். ரொம்ப ஓவரா போச்சுனா அடி வாங்குவீங்க. பொண்ணு எங்க ஊரு. அது ஞாபகம் இருக்கட்டும். :)

நிறைய பழைய விஷயங்கள் மறந்து போச்சு. பெயருக்கெல்லாம் கொஞ்சம் க்ளூவாவது தரலாமில்ல. :)

[ 'b u s p a s s' ] said...

நீங்க என்ன தினமும் திருநெல்வேலியில போய் படிச்சீங்களா? இல்ல டவுன் பஸ்ல போவீங்களா?? அஞ்சு நிமிஷ பயணத்துல இவ்ளோ அலம்பலா?? அடேங்கப்பா..

ஆனாலும் உங்களுக்கு மச்சம் தான் :)

Anonymous said...

Hey, I like this though I didn't read the first three...

You know what, I really feel like commenting in tamil at times.. but I'm so shyyyy... okay, so I'm afraid to make mistakes, yea, scared to lose face.. haha. You guys are the experts man. Hats off!

Usha said...

Tamizh cinema le ippadi school le ellam love duet paadarangale pasanga kettu popiduvangalennu naan kavalai pattundiruken. Kadaiseela patha ellam erkanave nadakkara vishayam daana. Ellam kalidaan vere enna solla?
apram inda dubukku slang le illada inda maadiri "sadai" maadiri vaarthaigalai prayogipadai naan vanmaiyaga kandikaren. Suthama puriyalai. sadai na sight ah? 13 vayasilaya....inda aniyayathi enge poi sollikaradu....hmmmmmmm.
micha kadaiyum sollidunga mothamma kavalai pattudaren.

Anonymous said...

மறுபடியும் டெல்லியிலிருந்து ராமகிருஷ்ணன்!!
ஆஹா டுபுக்கு!...கதை இப்பதான் கள கட்டுது...
அல்மா மேட்டர் கதை இப்ப திசை திரும்பி கில்மா மேட்டரா போகுது!!!..
சூப்பர்..கதையில வர்ர 'ஜில்லு' கதாபாத்திரம் மாதிரி இப்ப கதை கேட்க சும்மா 'ஜில்ல்'னு இருக்கு...
இன்த 'ஜில்ல்' கதை முடியும் வரை இருக்க வேன்டும் என்பது என்னுடைய கோரிக்கை...

நட்புடன்,
ராமகிருஷ்ணன்

Dubukku said...

WA/Usha - neenga nenaikara maadhiri illa ithu :). thodarum podarathukku munnadi adutha postla podalamnu ezhuthi vechirundha first para vaiyum pottirukanum. This is not love, not jollu , not kaamam...its a different feeling.(just favourite thats it) you might probly understand what I mean in my next post :)


இலவசக்கொத்தனார்-யோவ் ஜில்லு தெரியாதா...இல்ல நடிக்கிறீங்களா...நம்ம தாமிரபணி அண்ணன் கிட்ட கேளுங்க டாண்ன்னு சொல்லுவாரு
என்னய்யா சீனியர் பந்தா காட்டுறீங்களா :))

Buspass - திருநெல்வேலிலாம் போய் படிக்கல...ஸ்கூல் பஸ்ங்க அது. அது ஸ்டாப் ஸ்டாபா நிப்பாட்டி போகும் போகும் போய்கிட்டே இருக்கும் :)

the woman - Ithukellam yen vetkap padureenga...tamilla summa type pannunga...mistake irundha ok. No worries orutharum onnum solla mataanga

Usha - pls. read my first reply to you and WA.
'sadai' yaa? - enga use panni irukken? **confused** I am not able to spot it?

Usha said...

okok...accepted...inda system le tamil font ellame oru maadiri varadu.. sight nu neenga adichirukkengala adu sa appuram anda vellikombu apram anda da appadi theriyuda ...naan sadai nu padichutten...adu sight polirukku!

neighbour said...

dubuku-- sumaar 40 varudathu munnaadi nadantha samabvangala nyabhagapaduthi paakareengalooo...

Unknown said...

HAHAHAHAHA Neighbour's comment made my day :D

இலவசக்கொத்தனார் said...

அட. ஜில்லு தெரியுமப்பா. மத்தவங்களத்தான் சொல்லறேன். படிக்கம்போதுதான் சினீயர் பந்தா காட்ட விடலை. இப்போவாவது ....

Anonymous said...

THE WOOD TIGER 1914 AND 1974

The Wood Tiger is more adaptable to working with others and therefore does not demonstrate the typical "take charge" attitude of other Tigers. The Wood element adds stability, giving him warmth of character that draws people in and makes the Tiger a popular person. They are not selfish creatures and will give their time, attention or possessions to anyone in need. These Tigers bring a solid practicality to any problem. They can control their urges to completely take over, letting others do the work. They must be aware of their slightly volatile tempers and short attention spans, and not let those characteristics get the best of them or cause them or their loved ones undue pain.

Jeevan said...

Dubukku i cant read on PDF also, i think, i can read u r blog with in 2 or 3 days, my service man said he will do some thing to read tamil words. take care.

Paavai said...

Jilllaaaa ?? avalaaa? seekram sollunga

CVA said...

This is very interesting... Please write the remining story baasu :-)

Dubukku said...

ராமகிருஷ்ணன் - வாங்க வாங்க என்ன ஆள கொஞ்ச நாள் பார்க்கமுடியலை? ஜில்லு கற்பனை இல்லைங்க...உண்மை...அதோட அவங்க முழுதும் வரலைங்க..பொறுத்துக்கோங்க..

Usha - seri nambaren. periya mansu panni ethavathu thappu irundhalum manchirunga...:)

neighbour - unga kathaiya sonna appidi irukalamnga...ithu ennoda kathai so 15 varushama kuraichukonga..

இலவசக்கொத்தனார் - உங்க ரீபஸ் மாதிரி கொஞ்சம் அடுத்த பதிவுல க்ளூ குடுக்கறேன்...கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க...

Dubukku said...

Anonymous - Danks very much for the info on wood tiger. I may be also interested in knowing whether they take bath daily and brush the teeth regularly. Is the wood tiger anyway related to Tiger Woods?

WA- indha commetlam enna parthu sonna joke ungalukku sonna fact aayidum :P

Jeevan - Ohh no the pdf is also not working isit? sorry abt that. Take care.


Paavai - sollaren sollaren :)

CVA - danks for dropping by. Sollaren baasu :)

Anonymous said...

Dubukkus,

I vaguely remember Jil Jil. so it is likely to be True.

BTW I was in London, sorry i could not contact you. I stayled at the Hilton paddington (friday night) and left on Saturday. However i will be back in April again .
Muthusamy

Sujatha said...

:)

Post a Comment

Related Posts