Sunday, December 21, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.6

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5

அந்த கம்பெனியில் நான் சேர்ந்து முப்பத்திநான்கு நாட்கள் இரண்டுமணி நேரம் தான் ஆகியிருக்கும். போன புதிதில் அலுவலக வண்டவாளங்கள் வெளிவராதால் அது சொர்கபுரியாய் இருந்தது. எப்போ வேணா வரலாம் போகலாம். முதல் நாள் ஒன்பது மணிக்கே போய் தேவுடு காத்து, பதினோரு மணிக்கு டிப்பார்ட்மெண்ட் ஹெட் வந்து, நான் குட்மார்னிங் சொல்லி அவர் குட் ஆப்டர்நூன் சொல்லி, எத்தனை மணிக்கு வந்தேன்னு கேட்டு, ஒன்பது மணிக்கு வந்தேன்னு சொல்லி, ஒம்போது மணிக்கா...அதெல்லாம் ஆபீஸ் வர்ற நேரமான்னு நாளைலேர்ந்து பதினோரு மணிக்கு...வான்னு அறிவுரை சொல்லி, நீங்க தான் சார் என் குலதெய்வம்ன்னு கால்ல விழுந்து...அடுத்த நாள்லேர்ந்து பன்னிரெண்டு மணிக்கு ஆபீஸ் போய்...இந்த சொட்டத்தலையன் தொல்லை தாங்கல...அதான் லேட்டா வந்தாலும் லேட்டா தான் போறோம்ல..அப்புறம் ஏன் ஒருமாதிரி பார்க்கிறான்"னு அப்போது தான் அலுவலகத்தில் சௌஜன்யமாகிக் கொண்டிருந்தேன்.

சீட்டில் செட்டிலாகி முதல் அரைமணிநேரம் ஆர்யபட்டா சொன்னார்,அப்துல் கலாம் சொன்னார், நாரயணமூர்த்தி அவர் வீட்டு கக்கூஸை இன்னுமும் அவரே கழுவுகிறார்ன்னு வந்திருக்கும் மெயில் பார்வேர்ட்டையெல்லாம் படித்துவிட்டு, எத்தனை பார்வேர்டு மெயில் வருகிறது/அனுப்புகிறோம் என்பதற்கேற்ற மாதிரி தான் சம்பளம் என்ற நம்பிக்கையில், வந்த மெயிலை எல்லாம் நாமும் சகட்டு மேனிக்கு சி.இ.ஓ தவிரதலாக நமக்கு அனுப்பியவன் உள்பட(இப்படி கடுப்பேதுவதே ஒரு பெரிய சுகம்) மத்த எல்லாருக்கும் மாஸ் பார்வேர்ட் விட்டு இந்தப் பக்கம் திரும்பினால் சாப்பாட்டுக்கு மணியடித்திருப்பார்கள். கல்யாணமான புதிதில் ஆரம்பித்த பழக்கத்தில் தங்கமணி மூன்று அடுக்கு கேரியரில் லெவெல் காட்டியிருப்பார். முன்வினை பின்வினை தெரியாமல் முன்னால் செய்த வழிப்பறிக்கு, கூட இருக்கும் பஞ்சத்தில் அடிபட்ட கூட்டம் பதில் மரியாதை செய்தது போக மிச்சத்தை தொண்டைக்குழியில் அடைத்துவிட்டு வந்து உட்கார்ந்தால் மானிட்டர் - மானிட்டர் அடித்தது மாதிரி சொக்குப் பொடி போட்டு கண்ணைச் சொருகும்.

செஞ்சோற்றுக் கடனுக்கு ரெண்டு மூனு ஆபிஸ் மெயிலை "எஸ் ஆபிஸர்...ஓ.கே. ஆபிஸர்...டன் அந்தக் கப்பலை அஞ்சு கோடிக்கு முடிச்சிடலாம்"ன்னு விவரமா மெயில் அனுப்பிவிட்டு திரும்பவும் கடிகாரத்தைப் பார்த்தால் டீ.க்கு நேரமாகியிருக்கும். விவரம்கெட்ட ஆபீஸில் டெஸ்க்கில் கொண்டு வந்து குடுக்காமல் காண்டீனுக்கு வந்து குடிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். "துன்ன சாப்பாடே இன்னும் செரிக்கலை..அதுக்குள்ள டீயா..ஏகப்பட்ட வேலை இருக்கு.."ன்னு அலம்பலுக்கு நடுவில் கவர்மெண்ட் ஆபீஸில் எப்படி வேலையே பண்ணுவதில்லை என்பதையும் பேசிக்கொண்டே டீயைக் குடித்துவிட்டு வந்தால் டிப்பார்ட்மெண்ட் ஹெட், அமெரிக்காவில் சாட்டிலைட் விட்டு படியளக்கும் பகவானிடம் டெலிகான் அரெஞ்ச் பண்ணியிருப்பார். டெலிகானில் தோராயமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு மணி நேரத்தில் ஆன்சைட் மேனேஜர் கூப்பிட்டு இங்கிலீஸ் டு இங்கிலீஸ் ட்ரான்ஸ்லேஷன் பண்ணி பகவான் என்ன சொன்னார்ன்னு சொல்லுவார். 'அட அப்படியா சொன்னான் அந்த கம்மனாட்டி'ன்னு என்னம்மோ புரிந்தது மாதிரி காட்டிக்கொண்டு அந்த கோட் கமெண்ட் பண்ணி கம்பைல் பண்ணுவெதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு இங்கி பின்கி பாங்கிபோட்டு தோராயமா நாலு நாளாகும் என்று கணக்குப் போட்டு சொன்னால் ஆன்சைட் மேனேஜர் ஒரு வாரம் என்று ரவுண்ட் செய்து பகவானிடம் ஆட்டையப் போட்டு ஓக்கே வாங்கிவிடுவார்.

இந்த மாதிரி நிறைய அமெரிக்கா பகவான்களிடம் ஆட்டையப் போட்டு போட்டு ஆபிஸில் சாயங்காலம் ஆறு மணிக்கு அடையாறு ஆனந்தா பவனிலிருந்து இலவச ஸ்வீட் காரம் காபி ஏற்பாடு செய்திருப்பார்கள். 'அடுத்தாப்புல முந்திரி பக்கோடா என்னிக்கு"ன்னு விவராமாய் விசாரித்துகோண்டே மேய்ந்துவிட்டு அங்கே இருக்கும் டேபிள் டென்னிஸோ, பாஸ்கெட் பாலோ இருக்கிற பக்கமா ஒரு ரவுண்டு வந்து "இப்படி இப்படி விளையாடனும்...நான் சொல்லிக்குடுத்ததெலாம் ஞாபகம் இருக்கில்ல...? ஸ்டெப்பு ஸ்டெப்பு...."ன்னு போகிற போக்கில் தின்னது செரிக்க நாலு இலவச டிப்ஸை அள்ளிவிட்டு வந்து உட்கார்ந்து யாகூ ஹாட்மெயில்ன்னு மத்த மெயிலெல்லாம் பார்த்துமுடிக்கும் போது ஹெட் கிளம்பிபோயிருப்பார். இன்னிக்கு ரொம்ப வேலை...எல்லாத்தையும் டீபக்(கமெண்ட்) பண்ணிட்டேன் நாளைக்கு மிச்சத்தை பார்த்துக்கலாம்ன்னு அப்படியே அப்பீட்டு.

பக்கத்து டீமிலிருந்தாலும் அவர் மட்டும் சாப்பாடு நேரத்தில் "சாப்பிட வர்றீங்களா"ன்னு கலயாணவீட்டில் சம்பந்தியைக் கூப்பிடுவது மாதிரி என்னை எப்போதும் மரியாதையாய் அழைப்பார். நூத்துக்கு தொன்னூறு முறை நான் போகவில்லை என்றாலும் கூப்பிட மறக்க மாட்டார். ஒரு நாள் அவர் தனியாய் உட்கார்த்து சாப்பிடுவதைப் பார்த்து பாவமாகி, தங்கமணி ஊருக்கு போய் காண்டினில் சாப்பாடு என்று இருந்த ஒரு வாரம் முழுவதும் அவர் கூட சாப்பிட போனேன். ரொம்ப மிருதுவான சுபாவம். பேச்சுவாக்கில் அவர் காலேஜ் ப்ரெஷர் என்று தெரிந்தது. அப்புறம் நண்பர் ஆபிஸ் மெயிலில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது க்ளையன்ட் கிட்ட பேசும் போது எப்படி பேசனும் என்று அங்கே இங்கே என்று பேசி டாபிக் கடைசியில் லவ்வுக்கு மாறியது. பார்ட்டி நம்ம சினிமா முரளிக்கு நெருங்கின சொந்த ரகம். காதல் தெய்வீகமானது, அதையும் தாண்டி புனிதமானது என்று பழுத்த காதல் பக்திமான். ஒரு நாள் பக்திமானின் காதல் கலாட்சேபத்தைக் கேட்டுக்கொண்டிருந்து கேண்டீனில் கொத்தமல்லி சட்னி காலியாகிவிட்டது.

அதிலிருந்து "எப்பா ராசா...சித்த பொறு...அங்க சட்டிய தேய்ச்சு கவுத்திருவானுக...இன்னிக்கு வத்தக் குழம்பு வேற சூப்பரா இருக்குன்னு" நழுவிவிடுவேன். பக்திமான் மனம் தளரமாட்டார் கலாட்சேபத்தை பாஸ் பண்ணிவிட்டு மீண்டும் ரெஸ்யூம் செய்வார். அப்புறம் இதெல்லாம் சரிபட்டு வராது என்று "ரெண்டாவது ப்ளோர்ல உன்னை மாதிரி காதலிக்காக மூக்கை வெட்டிக்கிறவன் ஒருத்தன் இருக்கான் அவன நாளைக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்"ன்னு சொல்லி வைத்தேன். "நீங்க காதலை ரொம்ப கேவலப்படுத்தறீங்க"ன்னு பக்திமான் வீறு கொண்டு எழுந்துவிட்டார்.

"எப்பா கேவலமெல்லாம் படுத்தல...நானும் லவ்ஸ் விட்டிருக்கேன்...என்ன என் லவ்ஸ் ட்ராஜடில முடிஞ்சிடிச்சு....அதான் வித்தியாசம்..."

"ஓ சாரி..அதான் காதல் பத்தி வெக்ஸாகியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்..."

"இல்ல பரவாயில்ல...இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க...எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சிருச்சின்னுங்கிறதத் தான் அப்படி சொன்னேன்"

அதுக்கப்புறம் பக்திமான் பேஜாராகி என்னை காதல் துரோகியாய் பாவித்து கொஞ்ச நாள் காதல் பத்தி அடக்கியே வாசித்தார். இருந்தாலும் எனக்கு அவரை சீண்டுவதே கொள்ளை இன்பமாக இருந்தது. அப்புறம் உங்க காதல் ஜோதி எந்த மட்டுக்கும் எரியுதுன்னு டெய்லி ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்பேன். (கவுண்டமணி) செந்தில் "போங்கண்ணே..."ரேஞ்சுக்கு பக்திமான் வெட்கப்படுவார். எத்தன நாளைக்குத் தான் நானும் இதையே வெச்சு ஓட்டறது..உங்க ஒயிட் டவ்வ கொஞ்சம் அடையாளம் காட்டினா நானும் நாலுபேர் கிட்ட கிசுகிசுக்க வசதியா இருக்கும்லன்னு டெய்லி கிண்டுவேன். "நீங்க வேற நானே இன்னும் லவ்வ சொல்லலை...சக்சஸான முதல் ட்ரீட் உங்களுக்குத் தான்"ன்னு பக்திமான் சத்தியம் செய்தார். ஆஹா ஆன் சைட் மேனேஜர் வந்தா ஆட்டையப் போடலாம்ன்னு ரிசர்வ் பண்ணி வைச்சிருந்த அந்த திரி ஸ்டார் ஓட்டல்ல பக்திமானுக்கு இலாகா மாத்திடலாம் போல இருக்கேன்னு "நீ அழகான பெண்ணை காதலிக்கவில்லை...நீ காதலித்ததால் அவள் அழகானாள்"ன்னு அங்க இங்கேர்ந்து தேத்தி தேத்தி கே.ஏ.ஏஸ் சேகர் கடையில லாட்டரி விற்பது மாதிரி அவனுக்கு டெய்லி கோடீஸ்வரன் ஃபீலிங்க்ஸை ஏத்தினேன்.

அப்புறம் தான் தெரிந்தது பையன் லவ்விக் கொண்டிருந்தது ஹெச் ஆர் எக்ஸிக்யூட்டிவ்வ. அவங்க கல்லூரி காம்பஸ்ஸில் கண்ட நாள் முதலாம். அடங்கொக்க மக்கா விவரமாத்தேன் இருக்கான்...நாமளும் ஒருதரம் ஏர்லைன்ஸ் மேனேஜரை கம்ப்ளையிண்டுக்காக பார்த்தோம்...ஹும்ம்ம்ம் டிக்கெட்டுக்காவது மிச்சமாயிருக்கும்ன்னு எனக்கு ஏப்பம் வந்து, அப்புறம் ஒரு படத்தில் கோர்ட் சீனில் வக்கீல் சுஜாதா "குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவனுக்குத் தான் தண்டனை அதிகம்"ன்னு பாயிண்ட்டாய் ஒரு டைகர் தயாநிதியை மாமாவூட்டுக்கு அனுப்பியது நியாபகம் வந்து, "எய்யா ராசா...டீம்ல பிரச்சனைன்னா மேனேஜர் கிட்ட சொல்லலாம்...மேனேஜர் கிட்ட பிரச்சனைன்னா ஹெச் ஆர்ல சொல்ல்லாம்..நீ ஹெச் ஆர்லயே பிரச்சனை பண்ற..இன்ஸ்டண்ட் சங்கு தான்...பார்த்துக்கோ"ன்னு நழுவி விட்டேன்.

அப்புறம் நான் அந்தக் கம்பெனியில் இருந்த அடுத்த நாலு மாதமும் பக்திமான் தூணுக்கு பின்னால் மறைந்து மறைந்து பிலீங்க்ஸாய் எக்ஸிக்யூடிவ்வை பார்த்துக் கொண்டிருப்பார். ஹெச் ஆர் மேடம் குடுத்த வேலை கன்பேர்மேஷன் ஆர்டரை ரூமில் ப்ரேம் போட்டு மாட்டியிருந்ததாக அவன் ரூமேட் தெய்வம் அசரீரி சொன்ன்னது. அப்புறம் நான் கம்பெனி மாறிவிட்டேன். சொல்ல முடியாது ....அவனிடம் இருந்த கடமையுணர்ச்சி சில சமயம் யோசிக்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும். கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.

62 comments:

Vijay said...

உடனடியாக ஒரு வயிற்றுவலியைப் போக்கும் மாத்திரை இருந்தால் அதை கூரியர் செய்யவும். சிரிச்சு சிரிச்சு வயிறு கிழிந்து விட்டது.

ச.சங்கர் said...

///கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.///

உங்க லவ்ஸ் சக்ஸஸ்ஃபுல்லா ட்ராஜடில முடிஞ்சிருச்சுல்ல? அந்த நக்கலு...:) இருக்கட்டும் ,இருக்கட்டும்

ச.சங்கர் said...

///கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.///

உங்க லவ்ஸ் சக்ஸஸ்ஃபுல்லா ட்ராஜடில முடிஞ்சிருச்சுல்ல? அந்த நக்கலு...:) இருக்கட்டும் ,இருக்கட்டும்

Mahesh said...

நல்லா ஜொள்ளு வுடறீங்கய்யா.... பின்னால வந்தவனுக்கெல்லாம் வழுக்குப்பாறைதான்... :)))

Anonymous said...

//"எப்பா கேவலமெல்லாம் படுத்தல...நானும் லவ்ஸ் விட்டிருக்கேன்...என்ன என் லவ்ஸ் ட்ராஜடில முடிஞ்சிடிச்சு....அதான் வித்தியாசம்..."//

//"இல்ல பரவாயில்ல...இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க...எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சிருச்சின்னுங்கிறதத் தான் அப்படி சொன்னேன்"

அதுக்கப்புறம் பக்திமான் பேஜாராகி என்னை காதல் துரோகியாய் பாவித்து கொஞ்ச நாள் காதல் பத்தி அடக்கியே வாசித்தார்.//

//கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.//

:-)))
தல உங்களுக்கு தைரியம் அதிகம்தான்

அன்புடன்
கார்த்திக்

Anonymous said...

அன்னியாரை விட்டு போட்டி பிளாக் ஆரம்பிதான் நிங்க அடங்குவிங்க போல இருக்கு

அகில உல‌கத்தையும் அன்ன‌ன் டுபுக்கையும் காக்கும் அன்னையே
அன்ன‌னின் கொட்ட‌த்தை அட‌கிட வ‌ருக‌ வ‌ருக!!!

அன்னியார் த‌ற்கொலை ப‌டை
சென்னை

அன்புட‌ன்
கார்த்திக்

நாகை சிவா said...

/////கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.///

நினைத்தீர்கள் ஆனா செய்யல ஏன்... யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற பரந்த மனபான்மை தான் காரணம் :)

Anonymous said...

எத சொல்றது, எத விடறது ன்னு தெரியல....

ROTFL

:)))

//நாமளும் ஒருதரம் ஏர்லைன்ஸ் மேனேஜரை கம்ப்ளையிண்டுக்காக பார்த்தோம்...ஹும்ம்ம்ம் டிக்கெட்டுக்காவது மிச்சமாயிருக்கும்ன்னு எனக்கு ஏப்பம் வந்து,//

தல,
இத படிச்சதும் எனக்கு நீங்க 2006 Aug ல எழுதியது நியாபகம் வந்தது....


//வழக்கமாய் அங்காலாய்க்கும் "பேசாமல் நல்ல ஏரோப்பிளேன் கம்பெனி முதலாளி பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்கலாம்" என்ற டயலாக்கில் ஏரோப்பிளேன் காரனை தூக்கி விட்டு ஹோட்டல்காரன் பொண்ணுக்கு மாறிவிட்டேன். தங்கமணியும் " கடவுளே அடுத்த ஜென்மத்தில் ஏரோப்ப்ளேன்காரன் பொண்ணா மட்டும் பிறக்கக் கூடாது" என்ற டயலாக்கை ஹோட்டல்காரனுக்கு மாற்றிவிட்டார்.//


;-))

Kathir

Anonymous said...

instant sangu thaan... how do you come up with such expressions ??? when is the next post? - Paavai

ஜொள்ளுப்பாண்டி said...

//பஞ்சத்தில் அடிபட்ட கூட்டம் பதில் மரியாதை செய்தது போக மிச்சத்தை தொண்டைக்குழியில் அடைத்துவிட்டு வந்து உட்கார்ந்தால் மானிட்டர் - மானிட்டர் அடித்தது மாதிரி சொக்குப் பொடி போட்டு கண்ணைச் சொருகும்.//

தல... லெவலக் காட்டீட்டீங்க தல... சிரிச்சுகிட்டே இருக்கேன் கேபினுகுள்ள...

ஜொள்ளுப்பாண்டி said...

//அப்புறம் உங்க காதல் ஜோதி எந்த மட்டுக்கும் எரியுதுன்னு டெய்லி ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்பேன். (கவுண்டமணி) செந்தில் "போங்கண்ணே..."ரேஞ்சுக்கு பக்திமான் வெட்கப்படுவார்.//

:))))))))))))))))

ILA (a) இளா said...

:))

Anonymous said...

great,i couldnt control my laughter.innemum thangamani thara saapatai perumaya madhyanam saapitttuvittu ippedilam sonna ummachi kanna kutthum,
tragedyaa !!!!!enga thangamani,
idheellam neenga padikardhillaya!!!!madhyanam kodukkara lunch box naalu nall kodukatheenga.dubukku sir unga vazhikku vandhduvaru.
nivi.

Anonymous said...

great,i couldnt control my laughter.innemum thangamani thara saapatai perumaya madhyanam saapitttuvittu ippedilam sonna ummachi kanna kutthum,
tragedyaa !!!!!enga thangamani,
idheellam neenga padikardhillaya!!!!madhyanam kodukkara lunch box naalu nall kodukatheenga.dubukku sir unga vazhikku vandhduvaru.
nivi.

Anonymous said...

\\சீட்டில் செட்டிலாகி முதல் அரைமணிநேரம் ஆர்யபட்டா சொன்னார்,அப்துல் கலாம் சொன்னார், நாரயணமூர்த்தி அவர் வீட்டு கக்கூஸை இன்னுமும் அவரே கழுவுகிறார்ன்னு வந்திருக்கும் மெயில் பார்வேர்ட்டையெல்லாம் படித்துவிட்டு, எத்தனை பார்வேர்டு மெயில் வருகிறது/அனுப்புகிறோம் என்பதற்கேற்ற மாதிரி தான் சம்பளம் என்ற நம்பிக்கையில், வந்த மெயிலை எல்லாம் நாமும் சகட்டு மேனிக்கு சி.இ.ஓ தவிரதலாக நமக்கு அனுப்பியவன் உள்பட(இப்படி கடுப்பேதுவதே ஒரு பெரிய சுகம்) மத்த எல்லாருக்கும் மாஸ் பார்வேர்ட் விட்டு //
ஸ்ஸ் அப்படா... இதுவரைக்கும்
நான் மட்டும்தான் என்று நினைத்தேன்.

-அரசு

நாடோடி said...

//கோட் கமெண்ட் பண்ணி கம்பைல் பண்ணுவெதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு இங்கி பின்கி பாங்கிபோட்டு தோராயமா நாலு நாளாகும் என்று கணக்குப் போட்டு சொன்னால் ஆன்சைட் மேனேஜர் ஒரு வாரம் என்று ரவுண்ட் செய்து பகவானிடம் ஆட்டையப் போட்டு ஓக்கே வாங்கிவிடுவார்.//
தல, கோட் கமெண்ட் பண்ணி கம்பைல் பண்றதுக்கு ஒரு வாரம் தானா?? நீங்க பயங்கரமா வேலை பார்ப்பீங்க போலிருக்கே.. நாங்களெல்லாம் "கமெண்டிங், கம்பைலிங், unit டெஸ்டிங், integeration டெஸ்டிங், black box டெஸ்டிங், white box டெஸ்டிங்" அதுவாக்கும் இதுவாக்கும்'னு ஒரு மூனு வாரம் ஆட்டையப் போட்டுர மாட்டோம்!! :)

//அப்புறம் உங்க காதல் ஜோதி எந்த மட்டுக்கும் எரியுதுன்னு டெய்லி ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்பேன். (கவுண்டமணி) செந்தில் "போங்கண்ணே..."ரேஞ்சுக்கு பக்திமான் வெட்கப்படுவார்.//
:)))

//கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.//
தல, இப்பெல்லாம் உங்க ஆத்துல மேலிடத்துலிருந்து யாரும் கேக்குறதில்லையா :-)

பாசகி said...

பதிவு எப்பவும் போலவே அசத்தல்ங்க.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Vino said...

:)இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


அன்புட‌ன்
கார்த்திக்

Anonymous said...

Happy new year!!
Anbudan
Uma Jayaraman.

குப்பன்.யாஹூ said...

அருமை அருமை அருமை

எல்லாரும் எல்லா வார்த்தைகளும் சொல்லி பாராட்டி ஆயிற்று உங்களை. வேறு வார்த்தைகள் தேடுகிறேன்.

இந்த மாதிரி மென்பொருள் அலுவலக நிகழ்வுகள் படித்துதான் மற்ற துறை , அலுவலகங்களில் பணி புரிவோர் பொறாமை படுகின்றனர்.

அடுத்த பதிவை எதிர் நோக்கி இருக்கும் வாசகன்

குப்பன்_யாஹூ

Anonymous said...

Fantastic. I recently came to know about your blog. I have read all your blogs since 2003 at one stretch. You have filled the gap of write Sujatha as I am a big fan of him.Keep writing...

Anonymous said...

மானிட்டர் - மானிட்டர் அடித்தது மாதிரி சொக்குப் பொடி போட்டு கண்ணைச் சொருகும்.இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க...எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சிருச்சின்னுங்கிறதத் தான் அப்படி சொன்னேன். very nice as usual.eppdi adutha post pongaluku piraku thana?-isthripotti

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

next?

Anonymous said...

அறை சதம் போட்டாச்சு , அடுத்த பதிவு போடுங்க‌

Anonymous said...

வாங்க டுபுக்குசி நான் தஞ்சை ஜெமினி. ஜொ.தி கா. ௨.6 படிச்சேன் எல்லாரும் postla புடிச்ச வரிய ஹைலைட் பண்றதுக்கு அந்த வரிய ctrl+C, Ctrl+V பண்றாங்க சரி நாமும் அப்படி பண்ணலாமுன்னு பாத்தா ctrl+A,ctrl+C, Ctrl+V பண்றாப்ல இருக்கு. உங்க ஒவ்வொரு எழுத்தும் சிரிக்க வைக்கிது. தொடரட்டும் உமது ஜொள் பணி .

பாசகி said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!!

Anonymous said...

இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் -அன்புடன் ஜெமினி தஞ்சாவூர்

Anonymous said...

தல,

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்


அன்புடன்
கார்த்திக்

Anonymous said...

அட்டகாசம் பண்னிட்டீங்க டுபுக்கு. உங்க (படைப்பபுகள்ள...அதிகமா?) எழுத்துக்கள்ள நிறய லவங்கப்பட்ட, பெருங்காயம், போண்டா அப்படி இப்படி அது இதுன்னு எல்லாம் படிக்கறப்போ ஒரு மினி லன்ச் சாப்
பிட்ட உணர்வு வருது
டுபுக்கு சார்(பில் கேட்க மாட்டீங்களே?). உங்கக்கிட்டேயிருந்து இன்னும் நிறைய (சாம்பார் பொடி, புளி, சீரகம்னு) எதிர்ப்பார்க்கிறோம்.என்னைப்போன்ற புதுவரவுகளுக்கு உங்க சைட்(பழைய ஞாபகமா? இது வேற சார்) நல்லதொரு எடுத்துக்காட்டா இருக்கு.எல்லாத்துக்கும் மேல சிஸ்டம் சரியில்லைன்னு கம்பேனியில இருக்குற சிஸ்டம்ஸ் க்ரூப்ப கூப்பிட்டா அவங்க போடற சீனு தெலுங்கு படத்திலயே இருக்காது. இண்டெர்னல் க்ரூப்ஸும் அவங்க விடற ரொவுசும்மு ஒரு தனி ப்ளாக் எழுதலாம். பன்றி...ச்..சீ...நன்றீ (கொஞ்சம் நீண்ட)

Anonymous said...

hi,
ungaloda regular reader for more than a year...and I always recommend my friends to check your website(oosiyela ulai vaikkera velai thaane...)
enjoyed reading all your posts..and unga posts padikarapa always officela , veetla (loosu) maadiri sirichutu erupen ...

great work...

pls write frequently...

Anonymous said...

pongalellam eppadi?selipa kondadiyacha?post podungappa-isthri potti

Anonymous said...

ஆங்கில(!!) புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ஜொள்ளுகள், அதாவது ஜொள்ளு பற்றிய பதிவு, மிக அருமை. தொடர்ந்து விளாசுங்கள்.

Dubukku said...

விஜய் - உடனடியாக என்று நீங்கள் சொன்னதை கொஞ்சம் லேட்டா தான் பார்த்தேன் சாரி அனுப்பமுடியலை ;)) . உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

சங்கர் - ஹீ ஹீ அதே அதே...சாரி பாஸ் உங்க ஃபீலிங்க்ஸ்ல டச் பண்ணிட்டேன் போல? :)

மகேஷ் - பதிவ படிச்சீங்களா??...இந்த போஸ்ட்ல (கொஞ்சம் மாறுதலாக) நான் ஜொள்ளுவிடலை :)

கார்திக் - ஆமா பின்ன என்னங்க...எவ்வளவு நாள் தான் பயந்துகிட்டே இருக்கிறது. தங்கமணி இந்தப் பக்கம் கடைதெருவுக்கு போன உடனேயே போஸ்ட போட்டுட்டேன்ல. யோவ் இந்த அன்னியார் தற்கொலை படையெல்லாம் ரொம்ப ஓவரு...எத்தனை பேருக்கு தான் நானும் பயப்படறது...

நாகை சிவா- அதே அதே...இதெல்லாம் சுகமான சுமைகள் இல்லையா ;)

கதிர் - வாங்க வாங்க...ஆமா அந்த டயலாக நேரம் காலத்துகேத்த மாதிரி நானும் அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கேன்...ஹூம்ம் என்னத்த சொல்லி என்னத்த...செஞ்சி...

பாவை - என்னங்க...இதெல்லாம் யூத் பாஷைங்க...:))))

ஜொள்ளுப்பாண்டி - வாங்க சார். அங்கயும் அதே தான்னு நினைக்கிறேன் உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

இளா - :)))

நிவி - வாங்க நல்லா இருக்கீங்களா...சாப்பிட்டாச்சா..? இங்க இனிமே தான்...ஏங்க ஏங்க...வயத்துல அடிக்கிறீங்க...:))))

அரசு - நாம தனியாளு இல்ல...நம்மள மாதிரி ஒரு பெரிய கூட்டமே இருக்கு :)))

நாடோடி - அடேங்கப்பா...அப்ப உங்க கம்பெனில சாயங்கால டிபன் ஷெரெட்டனுலேர்ந்துன்னு சொல்லுங்க. ஏங்க விட்டா எல்லாரும் ஜனாதிபதிக்கு அடிக்கிற மாதிரி தங்கமணிக்கு தந்தியடிச்சு கிளப்பி விட்டுருவீங்க போல இருக்கே :)))

பாசகி / வினொ / கார்த்திக் / உமா ஜெயராமன் / - மன்னிச்சிக்கோங்க நன்றி சொல்லக்கூட தாமதமாகிடிச்சு.உங்கள் எல்லாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Dubukku said...

குப்பன் - மிக்க நன்றி ஹை. அடுத்த பதிவு மொக்கை பதிவாகிடிச்சு...நீங்க எதிர் பார்க்கிற பதிவோடு சீக்கிரமே வரேன்.

சந்திரா - வாங்க மேடம். மிக்க நன்றி. உங்க வாழ்த்து உங்க நண்பி மூலமாகவும் வந்தது. மிக்க நன்றி. உங்களை சந்தித்ததும் மிக்க மகிழ்ச்சி.

இஸ்திரிபொட்டி - நீங்க தாங்க காரணம்...உங்களுக்கு கருநாக்குன்னு நினைக்கிறேன். பாருங்க நீங்க சொன்னதுனால அடுத்த பதிவு பொங்கல் தாண்டிப் போச்சு ;P

அனானி - விட்டீங்களே ஒரு அறை. உங்க அன்புக்கும் கொலை வெறிக்கு மிக்க நன்றி. ஆனா உண்மையிலேயே பின்னூட்டததுக்காக காத்திருக்கவில்லை. கொஞ்சம் வேலையாகிடிச்சு..இதுல டைரடக்கர் ஆசை வேற. கூடிய சீக்கிரமே நீங்க எதிர்பார்க்கிற பதிவா போடுகிறேன்.

தஞ்சை ஜெமினி - வாங்க மிக்க நன்றி ஹை உங்க பாராட்டுக்கு. உங்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

கார்த்திக் / பாசகி - உங்களுக்கு முன்னால் சொன்ன வாழ்த்துக்கே நன்றி கூட சொல்லாமல் பொங்கலும் வந்துடிச்சு. உண்மையிலேயே நென்சை தொட்டுட்டீங்க...அத்தோடு இந்த பொறுப்பற்றத்தன்மைக்கு என்னை வெட்கப் பட வைத்துவிட்டீர்கள். மன்னிக்கவும். உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

விஜய்சாரதி - வாங்க. நீங்களும் பயங்கர எக்ஸ்பீரியன்ஸ் பார்ட்டின்னு நினைக்கிறேன். உங்க வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

குமார் - வாங்க. அடிக்கடி வந்து படிப்பதற்க்கும் நண்பர்களுக்கு பப்ளிசிட்டிக்கும் மிக்க நன்றி. சாரி உங்க எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுத்து அடிக்கடி பதிய முடியலை. மன்னிக்கவும். ஆனா கண்டிப்பா முயற்சி பண்ணுகிறேன்.

இஸ்திரி - அட பொங்கல் வந்துடிச்சா...நம்பவே முடியலை ;)

நவீன பாரதி- வாங்க. உங்களுக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள். உங்க பாரட்டுக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

dear k a s shekar's daugter is my friend she dosent understand wat blog site is. she misunderstood something very seriously. beware.

நாடோடிப் பையன் said...

Hilarious.

It reminds me of my humble work I did with my roommate in collage. Poor chap! He would fail math every semester so that he can borrow the notes from his girl.

Post a Comment

Related Posts