Saturday, September 27, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.4

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3

மினி ப்ராஜெக்டை சொத்து பிரித்ததில் அது மைக்ரோ மினியாகிவிட்டது. எங்க ஊரில் மளிகைக் கடை அண்ணாச்சி காதில் சொருகியிருக்கும் பென்சிலை எடுக்காமலேயே போடும் கணக்கை கம்ப்யூட்டர் படுத்தச் சொல்லியிருந்தார்கள். மளிகைக் கடை பெயரை மட்டும் "ஏடிபி கார்ப்பரேஷன்"ன்னு பந்தா படுத்தியிருந்தார்கள். "என்னா பாஸூ இப்படி சொதப்பறாங்க...இப்படியே மளிகைக் கடை கணக்கெல்லாம் போட்டுக்கிட்டிருந்தா எப்போ தான் சின்ன வயசு குஷ்பூ போட்டாவ குடுத்து கண்டுபிடிக்கச் சொல்லுவாங்க" என்பதே அம்மாபட்டியின் கவலையாக இருந்தது. அதெல்லாம் பைனல் இயர்ல தான்ன்னு அவனைப் பேக்கப் செய்துவிட்டு கிளியோடு ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பித்தேன். விண்டோஸ் 3.0 அப்போது தான் (என்)ஐ.ஐ.டிக்கு வந்திருந்த காலமது. டாஸ் - பாக்ஸ்ப்ரோவில் தான் இந்த ப்ராஜெக்ட் செய்யவேண்டும் என்று வாத்தியார் சொல்லியிருந்தார்.

ஓப்பனிங் ஸ்கீனில் கம்பெனி பெயரை எங்கே போடலாம், எந்த டிசைனில் எந்த ஃபாண்ட்டில் போடலாம் என்று ப்ராஜெக்ட்டுக்குத் தேவையான மிக முக்கியாமான விஷயங்களில் நான் தீவிரமாக செலுத்தி வந்தேன். கிளியோ கணக்குக்குத் தேவையான அல்காரிதமை தான் முதலில் பார்க்கனும்ன்னு அல்பமான விஷயங்களில் கவனத்தை சிதறவிட்டுக்கொண்டிருந்தது. சரி சரி அதெல்லாம் இடது கையால அசால்ட்டா செய்வோம்லன்னு உதார் விட்டு கம்ப்யூட்டர் ட்ரோமுக்கு போய் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து வேலையை ஆரம்பித்தால் ஆரம்பமே சவாலாக இருந்தது. கிறுக்குப் பயலுங்க ட்ரோமில் வேறெதோ மேக் கீபோர்ட் வைத்திருந்தார்கள். பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு கிலி பிடித்து இங்கே ஐ.ஐ.டியில் செய்த கீ போர்ட் எக்ஸர்சைலாம் மறந்து போய் "ஏ" எங்க இருக்கும் "கே" எங்க இருக்கும்ன்னு உதற ஆரம்பித்து விட்டது. அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரத்தெட்டு அருவாளாம்ன்னு ஜம்பமாக கீபோர்ட்டை வேறு என் பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் மோவாக்கட்டையில் கையை வைத்துக் கொண்டு யோசிக்கிற மாதிரி கிழக்கே ஒரு தரம் பார்த்து மேற்கே ஒருதரம் பார்த்து அப்புறம் கீழே கீப்போர்ட்டை உத்துப் பார்த்து கண்ணால் துளாவி "கே" கண்ணில் தட்டுப்பட்டவுடன் "ஆங்...கரெக்ட் அதான் சரி...இந்த அல்காரிதம் லாஜிக் தான் யோசிச்கிட்டு இருந்தேன்...இப்போ எப்படி பண்ணனும்ன்னு ஒரு ஐடியா கிடைச்சாச்சு"ன்னு சமாளித்து அப்புறம் திங்க்கிங் ப்ராசஸ் தடை படுகிறதென்று கீபோர்ட்டை கிளியிடம் மாற்றிவிட்டேன்.

வேலையை முடித்துவிட்டு டெய்லி ட்ரோமில் மத்த பையன்களெல்லாம் யுவதிகளோடு உலக நன்மையைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள், வடநாட்டு கிளி மட்டும் வேலை இருக்கிறதென்று சந்தைக்கு கிளம்பிவிடும். அது சரி நமக்கு இந்தியாவிலேயே முதல் மாணவனாய் வருகிற யோகம் மட்டும் தான் இருக்கு போலவென்று மனதை தேற்றிக் கொண்டு 11இ க்கு நானும் 47டிக்கு அம்மாபட்டியும் தேவுடு காக்க ஆரம்பித்துவிடுவோம். "ஏன் பாஸு நமக்கு மட்டும் செட்டு செட்டாக மாட்டேங்குதுன்னு"ன்னு அம்மாபட்டி 47டி வரும் வரை செட்டு கவலைப் படுவான்.


நான் படித்து வந்த நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில் இருக்கும் எங்கள் ஐ.ஐ.டி தலமை அலுவலகம் மிக கலர்புல்லான இடம். எனக்கும் அம்மாபட்டிக்கும், ரெமோ பைக்கில் ஸ்டையிலாக சாய்ந்து கொண்டு நிறைய பாடம் எடுத்திருக்கிறான். குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு பின்னாளில் ஹீரோயினான ஷாலினியும் அங்கு தான் படித்தார். அப்போது அவர் ஹீரோயினாகவில்லையாதலால் யாரும் ரொம்ப கண்டுகொள்ள மாட்டார்கள். எனக்கும் அம்மாபட்டிக்கும் ஷாலினியை பார்த்து அவர் நடிப்பைப் பற்றி ரெண்டு வார்த்தை பெருமையாக பேசவேண்டும் என்று கொள்ளை ஆசை. ரெமோ அதற்க்கு தடை போட்டுவிட்டான். "சுத்த காட்டான்களா இருக்கதீங்கடா ரொம்ப ஓவரா ஊத்தினீங்கன்னா யாருமே திரும்பக் கூட பார்க்க மாட்டாங்க"ன்னு ரெமோ சொன்னது அம்மாபட்டிக்கு சமாதானம் ஆகவில்லை. "அதெல்லாம் இல்ல பாஸு அந்தப் புள்ள நம்ம செட்டுல சேர்ந்திருமோன்னு இவனுக்கு பயம்"ன்னு அம்மாபட்டியின் நம்பிக்கை சில நேரங்களில் எனக்கு தலையே சுற்றும்.

நுங்கம்பாக்கம் ஹை ரோடு ஐ.ஐ.டி மூன்று மாடிக் கட்டிடம். நாலாவது மாடி டெரஸில் ரூப் கார்டன் மாதிரி செடியெல்லாம் வைத்து பெஞ்ச் டேபிளெல்லாம் மாணவர்கள் படிக்கட்டும் என்று போட்டிருப்பார்கள். ஆனால் மாணவர்கள் படிக்காமல் மானாவாரியாக கடலை சாகுபடி செய்து கொண்டிருப்பார்கள். எல்லா செட்டும் கலர்புல்லாக இருக்கும். ரெமோ வந்து எங்கள் செட்டில் ஐய்க்கியமாவதற்கு முன்னால் நானும் அம்மாபட்டியும் மட்டும் வெத்தாக "பாஸ் பாஸ்"ன்னு கொஞ்சிக்கொண்டிருப்போம். ரெமோ எங்க செட்டில் ஐய்க்கியமாகி அவனோடு நாலு நண்பிகளை கூட்டிக் கொண்டு வந்ததுக்கப்புறம் தான் நானும் அம்மாபட்டியும் "ஏ...எல்லரும் பார்த்துக்கோங்க நாங்களும் ரவுடி நாங்களும் ரவுடி..நாங்களும் ரவுடின்னு" சவுண்டு விட ஆரம்பித்தோம்,

ஆனால் அம்மாபட்டி என்னை விட கில்லாடியாக இருந்தான். ரொம்பவே தேறி கம்ப்யூட்டர் ட்ரொமில் பட்டயைக் கிளப்ப ஆரம்பித்தான். கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட மேகசினெல்லாம் வைத்துக் கொண்டு கம்ப்யூட்டரின் எதிர்காலமெல்லாம் கிளி ஜோஸ்யம் சொல்லுவது மாதிரி சுத்தி நாலு யுவதிகளை வைத்துக் கொண்டு கதை சொல்லுவான். அவன் கூட ப்ராஜெக்ட் பண்ணிக்கொண்டிருத ரெமோவின் நண்பி அம்மாபட்டியுடன் சிரித்து சிரித்து பேசும். எனக்கு வெளியே ஆல் இந்தியா லட்சியம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தாலும் உள்ளே அம்மாபட்டியே கலக்குறானேன்னு புகையும். "பாஸு பார்த்தீங்கள்ல...வடநாட்டு கிளி கூட உங்க செட்டா இருந்தாலும் கண்ணு இங்க தான் என்னை சுத்தி நோட்ட்ம் விடுதுன்னு" அடிக்கடி என்னையும் அலெர்ட்டாக்குவான். போகிற போக்கைப் பார்த்தால் இவன் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவாய் ரெமோவுக்கே டிப்ஸ் குடுப்பான் என்று ரெமோ அவனுக்கு டிப்ஸ் குடுப்பதை நிப்பாட்டி விட்டான்.

ஒரு நாள் கிளி முன்னதாகவே முடித்து விட்டு வெளியில் புதிதாய் யாரோ- வுடன் நின்று பேசிக்கொண்டிருந்தது. நான் வழக்கம் போல மத்த பேக்கப் பார்மலிட்டியை எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்தால் "மீட் மை ஹஸ்பண்ட் அபிஜித்"ன்னு என் மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள். அம்மாபட்டி சிவாஜி பாதி ஜே.கே ரித்தீஸ் மீதின்னு என்னல்லாமோ ஃபீலிங்க்ஸ் முகத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.

ரெமோ பல்லவர் காலத்து மஹாபலிபுர சிலையாய் உறைந்துவிட்டான். அந்தாளை எங்கேயோ பார்த்த மாதிரி எனக்கு இருக்க கேட்டேவிட்டேன். அபிஜித் நல்ல மாதிரி பட் படென்று விஷ்யத்தை தெளிவாகச் சொல்லிவிட்டார். போலிஸ் இன்ஸ்பெக்டர் செலக்க்க்ஷனாகி ட்ரெயினிங்கில் இருப்பதாகவும், நான் இருந்த அதே கே.கே.நகரில் இரண்டு தெரு தள்ளி தான் அவர் அப்பா இருப்பதையும் சொன்னார். அவர் அப்பா ரிட்டையர்ட் போலீஸ் சென்னை எஸ்.பீ. நல்ல வெள்ளியில் பூண் போட்ட ஒரு தடியுடன் நல்ல கொளு கொளு நாயைக் கூட்டிக் கொண்டு டெய்லி வாக்கிங் போவார். நானும் பார்த்திருக்கேன் நல்ல மனிதர் என்று அபிஜித்திடம் சொல்லி எதற்க்கும் ஒரு சேப்டிக்கு இருக்கட்டும்ன்னு ஆல் இந்தியா முதல் மாணவன் மாமாவின் லட்சியத்தையும் அவர் காதில் போட்டுவைத்தேன்.

அப்புறம் கிளி மேடமும் நானும் அப்புறம் அந்த மைக்ரோ பிராஜெட்டை ஒரு வழியாக முடித்தோம். கிளி மேடம் கரெக்ட்டாய் வருவார், சில நாட்களில் மேடமிற்க்கு வேலை இருக்கும். நான் இன்ன இன்ன செய்திருக்கிறேன் என்று சொன்னால் சரி பார்ப்பார்...ப்ரோக்கிராமில் அங்கங்கே மானே தேனே பொன்மானே போட்டு மிச்சத்தை என்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்புவார். அம்மாபட்டி அபிஜித் சாரிடம் ரொம்ப கேட்டதாகச் சொல்லச் சொலுவான், மேடமும் வாஞ்சையாக எங்களைப் பார்த்து சிரிப்பார். "பார்த்தீங்களா பாஸு...மேடமுக்கு நம்ம மேல எப்பவும் ஒரு தனி நட்பு"ன்னு அம்மாபட்டி ஃபீலிங்ஸ் காட்டுவான். நானும் ஆமாம்ன்னு மண்டையை ஆட்டுவேன். ரெமோ வழக்கம் போல தலையிலடித்துக் கொள்வான்.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்

50 comments:

Anonymous said...

நான் தான் first ஆ.

படிச்சிட்டு வர்ரேன்.


Kathir

Anonymous said...

//"மீட் மை ஹஸ்பண்ட் அபிஜித்"ன்னு என் மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள். //

இதெல்லாம் அரசியல் ல ஜகஜம் பாஸ்.....

//அப்புறம் கிளி மேடமும் நானும் அப்புறம் அந்த மைக்ரோ பிராஜெட்டை ஒரு வழியாக முடித்தோம். கிளி மேடம் கரெக்ட்டாய் வருவார், சில நாட்களில் மேடமிற்க்கு வேலை இருக்கும். நான் இன்ன இன்ன செய்திருக்கிறேன் என்று சொன்னால் சரி பார்ப்பார்...ப்ரோக்கிராமில் அங்கங்கே மானே தேனே பொன்மானே போட்டு மிச்சத்தை என்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்புவார். அம்மாபட்டி அபிஜித் சாரிடம் ரொம்ப கேட்டதாகச் சொல்லச் சொலுவான், மேடமும் வாஞ்சையாக எங்களைப் பார்த்து சிரிப்பார். "பார்த்தீங்களா பாஸு...மேடமுக்கு நம்ம மேல எப்பவும் ஒரு தனி நட்பு"ன்னு அம்மாபட்டி ஃபீலிங்ஸ் காட்டுவான். நானும் ஆமாம்ன்னு மண்டையை ஆட்டுவேன். ரெமோ வழக்கம் போல தலையிலடித்துக் கொள்வான்.//

இத படிச்சிட்டு விழுந்து புரண்டு சிரிச்சிட்டு இருக்கேன்.......
:))))

ரொம்ப நல்லா இருந்தது தல....


Kathir.

ஆயில்யன் said...

//அதெல்லாம் இல்ல பாஸு அந்தப் புள்ள நம்ம செட்டுல சேர்ந்திருமோன்னு இவனுக்கு பயம்"ன்னு அம்மாபட்டியின் நம்பிக்கை சில நேரங்களில் எனக்கு தலையே சுற்றும்.
////

:))))))

நம்பிக்கையோட இருந்திருக்காரு மனுசன்!!!!

ஆயில்யன் said...

//அப்புறம் கிளி மேடமும் //


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கிளி பறந்துப்போச்சு :((((

குப்பன்.யாஹூ said...

மென்பொருள் வல்லுநர் , மென்பொருள் மேல பறக்குது ன்னு சொல்லி சொல்லியே இப்போ மென்பொருள் வணிகத்தை கீழா இறக்கிடிங்க்லே.

அமெரிக்கால விழுந்த அடி ஆதம்பாக்கதுல வலிக்குது.

சென்னைல வாடகை, வார இறுதி நாட்கள் வணிகம் குறைய ஆரம்பித்து விட்டது.

Anonymous said...

அதெல்லாம் இல்ல பாஸு அந்தப் புள்ள நம்ம செட்டுல சேர்ந்திருமோன்னு இவனுக்கு பயம்.thanmambikai venunga."மீட் மை ஹஸ்பண்ட் அபிஜித்"ன்னு என் மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள்.arasiyalla ithellam satharanamappa.ரெமோ வழக்கம் போல தலையிலடித்துக் கொள்வான்.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்
naan ungaluku"muyarchiyil sarrum manam thalaratha vikramathithiyan"pattam koodukuren- isthri potti

Anonymous said...

கிளி மேடமும் ha haa haa innum sirichitrukken. ithan dubuku
touch ngrathu super sir kalakunga

Anonymous said...

கிளி மேடமும்/ கிளி மேடம் / மேடமும் / மேடமுக்கு. super sir
athu sari கிளி மேடம் "மீட் மை ஹஸ்பண்ட் அபிஜித்"ன்னு சொல்லுது .ok ஷாலினியும் அங்கு தான் படித்தார்.இப்ப அவங்க கிட்ட கேட்டா "மீட் மை ஹஸ்பண்ட் அஜித்"ன்னு சொல்வாங்க.இல்ல.கூட்டிக் கழிச்சு பாத்தா கிளி மேடமே *னி தான்னு டவுட் எனக்கு வரலப்பா.

Madhu Ramanujam said...

ம்ம்ம்..........எப்படியோ எதையோ போட்டு ஒரு கலக்கு கலக்கிட்றீங்க. இதுக்கு முந்தைய பாகத்தை படிச்சிட்டு எனக்கு என்னோட (என்)ஐஐடி கால நினைவுகள். என் சென்டரில் வேலை பார்த்த வாட்ச்மேனை காட்டிலும் அதிக நேரம் அங்கே நான் தான் இருந்திருப்பேன். அது ஒரு கனாக் காலம்! அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.

Anonymous said...

என்ன ஆணி அதிகமோ?

/* "மீட் மை ஹஸ்பண்ட் அபிஜித்"ன்னு என் மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள் */
/*அப்புறம் கிளி மேடமும் */

கலக்கல்....

-அரசு

லங்கினி said...

Pazhaiya aani pudungara velailla appo appo relaxation unga blog dhan..Thanks Dubukku...

ambi said...

//அப்புறம் கிளி மேடமும் நானும் அப்புறம் //

ROTFL :)) அடிச்சான் பாரு பல்டி. இங்க டுபுக்கு டுபுக்குனு ஒரு மானஸ்த்தன் இருந்தாரே? எங்கப்பா அவரு? :p

Anonymous said...

comedy kku ..
Dubbukku nigar dubukkae..
execellent
--Raji

Anonymous said...

kili madam ippadi kathulla parandhu poitaangannu kettapuram sogamaiduchu.indha madhiri etthana dhadava nadandhurukku?appuram sivaji madhiri sogapattelam padineengala?cha cha oru manushanukku padikkira kalathula eennna sodhanaiyeelam varudhu paaru!!!!!
keep rocking!!
nivi.

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

'என்.ஐ.ஐ.டி' யை 'ஐ.ஐ.டி' என்று எழுதி 'என்.ஐ.ஐ.டி' யை கேவலப்படுத்திவிட்டீர்கள்.
'என்.ஐ.ஐ.டி' படித்தலாவது சாப்ட்வேர் கம்பெனில வேலை கிடைக்கும்.ஐ.ஐ.டி ல படிச்சா அது கூட கிடைக்காது. தெருல தான் சுத்தனும்.
ஓழிக ஐ.ஐ.டி

இவண்
ஐ.ஐ.டி முன்னாள் மாணவன்...

Anonymous said...

Eppadi baasu indha kalakku kalakreenga.
Naangalum kitta thatta athe varusham, athe chennai la, ethir tea kadai (Aptech) la thaan padichom.
Angeyum ithe kathai thaan.
Unga nanbar baasu ippo innum touch la thaan irukkara ?
En Aptech friends ellam ippo lost connection..

Naanum ithe coovum to thames thaan.

Time kidacha ethavathu underground la sandhipom..

Anonymous said...

previous anonymous...

ellathayum sollittu ippadi pera anonymous nu poteeyennu kaekka poreenga.

senthil - send2sen@gmail.com...

Aani Pidunganum said...

Hello Dubukareh,

Good one asusual, I did in Aptech, mudinja alavuku kadalai sagupadisenjaen ;-)

Ambi,
//அப்புறம் கிளி மேடமும் நானும் அப்புறம் //

ROTFL :)) அடிச்சான் பாரு பல்டி. இங்க டுபுக்கு டுபுக்குனு ஒரு மானஸ்த்தன் இருந்தாரே? எங்கப்பா அவரு? :
Avaru kidaikamataru....:))))))))

थमिज़ ओजिका---वाज्का हिन्दी said...

'என்.ஐ.ஐ.டி' யை 'ஐ.ஐ.டி' என்று எழுதி 'என்.ஐ.ஐ.டி' யை கேவலப்படுத்திவிட்டீர்கள்.
'என்.ஐ.ஐ.டி' படித்தலாவது சாப்ட்வேர் கம்பெனில வேலை கிடைக்கும்.ஐ.ஐ.டி ல படிச்சா அது கூட கிடைக்காது. தெருல தான் சுத்தனும்.

ஓழிக ஐ.ஐ.டி

SurveySan said...

டுபுக்கு, ஒரு குறும்பட ஐடியா.

உங்க கிட்ட, தேவையான, ஏக்டர்ஸ் இருக்கரதால, உங்க ஞாபகம் வந்துச்சு ;)

அதுவும், நீங்க ஏற்கனவே, கலைப்படம் எடுத்த அனுவபசாலி வேர. :)

http://surveysan.blogspot.com/2008/09/blog-post_29.html

வீணாபோனவன் said...

டுபுக்கறே,
தினமும் காலையில் உங்களோட பக்கத்திற்கு தான் தினமும் வருவேன்.. அனேகமாக எமாற்றம் தான் இருக்கும் ஆனால் அடிக்கடி சந்தேஷமும் கிடைக்கும்... உங்கள் எழுத்து நடை யாரையும் சாராமல் இருக்கின்றது... வாழ்த்துக்கள்... தொடருங்கள் உங்கள் பணியை.. மற்றபடி உங்களின் தயவால் தமிழில் எழுதுகிறேன்...

மிக்க நன்றி,
-கணேஷ்.

Veera said...

//"மீட் மை ஹஸ்பண்ட் அபிஜித்"ன்னு என் மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள். //
பாலூட்டி வளர்த்த கிளி... பழம் கொடுத்து பார்த்த கிளி...
கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து... கிளி பறந்துடுத்து...

அப்புறம் நிஜமாவே ஷாலினி உங்க கூட படிச்சாங்களா???

குப்பன்.யாஹூ said...

நானும் பெரும்பாலான வலைபதிவர்கள் போல டுபுக்கு எழுத்தை படித்த பின் தான் பின்னூட்டம், வலை பதிவு என்று எல்லாம் ஆரம்பித்தேன்.

பின்பு பாலைத்திணை, யாழிசை , vaalpayyan, நானே முதல் RAAP ஆகியோர்.

I guess RAPP posted 1st comment for more than 200 postings. Let us recommend his name for guiness record.

ஆனால் சகோதரர் டுபுக்கு 2004, 2005 களில் நிறைய பயனுள்ள வேவேரானன தலைப்புகளில் பதிவு எழுதி உள்ளார். சில பதிவுகளுக்கு 1பின்னோட்டம் கூட இல்லை.

இருந்தாலும் தளராமல் எழுதிருக்கும் அவரது மனப்பாங்கு, ஆர்வம் பாராட்டுதலுக்கு உரியது.

vazthukkal rapp.

2 October, 2008 4:27 AM

(this is my comment in RAPP'S blog for our beloved friend DUBUKKU).
http://vettiaapiser.blogspot.com/2008/10/blog-post.html

மங்களூர் சிவா said...

தொடருங்க! தொடருங்க!!

கலக்கலா இருக்கு பதிவு.

Unknown said...

You are Awesome Dubukk! I Would like to recommend you a Mega serial on Jollings from you that goes non stop.

;-)
Arun.

ச.சங்கர் said...

டுபுக்கு

இந்தப் பதிவில் சுவாரசியம் "அந்தத் திடுக்கிடும் திருப்பம்தான் " என்றாலும் எப்படியோ கெஸ் பண்ன முடிந்தது :)

தொடருங்கள் ஜொள்(ளி)ன்னிங்ஸ்ஸை

Divyapriya said...
This comment has been removed by the author.
Divyapriya said...

//ரெமோ பல்லவர் காலத்து மஹாபலிபுர சிலையாய் உறைந்துவிட்டான்//

ஹா ஹா ஹா :)) விழுந்து விழுந்து சிரிச்சு அடி பட்டுடுச்சு...;)

//ப்ரோக்கிராமில் அங்கங்கே மானே தேனே பொன்மானே போட்டு //

ஹா ஹா, ஹைய்யோ செம காமடி :)

Anonymous said...

:)))...

Happy Pooja Holidays Dubukku!

Golu, vachchInGkaLA londonla?!
chunntal recipe karektaa vaNthuthaa?! :))) ... Thangamani pass mark pOttaanGkaLA?

Mahesh said...

// மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள் //

இந்த மாதிரியெல்லாம் சுஜாதா எழுதி படிச்சுருக்கேன். சாதாரண உபயோகத்தை மாத்தி எழுதினா எவ்வளவு சுவையா, நகைச்சுவையா இருக்கு !! பட்டய கெளப்பறீங்க !!!

குப்பன்.யாஹூ said...

மகேஷ் சொல்வது மிகவும் சரி.

டுபுக்கு வலை உலக சுஜாதா.

நண்பர் டுபுக்கு விற்கு வலை உலக சுஜாதா என்ற பட்டம் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை.

குப்பன்_யாஹூ

Anonymous said...

Annan dubukku, kili vishayathukke veetla maavu aattikittu irupparu. Indha nerathila, sujatha appadi ippadi-nnu potta pullanga pera sollatheengappa!

Etho ennal anathu ;) Idhu varaikkum illannaalum, ippovavathu arisi oora vachiruppanga ille ;)

Naattula naalu peru sandai podanumna, edhuvum thappilleppa!!

நாடோடி said...

வழக்கம் போல கலக்கல் டுபுக்கு! தொடர்ந்து சுத்துங்கோ!!

வள்ளி நாயகம் said...

//ரெமோ எங்க செட்டில் ஐய்க்கியமாகி அவனோடு நாலு நண்பிகளை கூட்டிக் கொண்டு வந்ததுக்கப்புறம் தான் நானும் அம்மாபட்டியும் "ஏ...எல்லரும் பார்த்துக்கோங்க நாங்களும் ரவுடி நாங்களும் ரவுடி..நாங்களும் ரவுடின்னு" சவுண்டு விட ஆரம்பித்தோம்//

Mr.டுபுக்கு உண்மைலேயே, சிரிச்சு சிரிச்சு வயிறு புடிச்சுகிச்சு. சான்சே இல்ல, உங்களோட நக்கல் ரொம்பவே கலக்கல்.

Anonymous said...

என்னங்க இப்படி அநியாயத்துக்கு சுவாரசியமா, ஹாஸ்யமா எழுதறீங்க... ஒரே நாளில உங்க அனைத்து "ஜொள்ளித் திரிந்த காலம்" பாகங்களையும் படித்துவிட்டேன். அனைத்துமே அபாரம். அடுத்த பதிவிற்காக திரை மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன்...

அன்புடன்,
சக்தி

Mahesh said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டிருக்கேன். வந்து பாருங்க.

Veera said...

மேற்படிப்பு-ங்குற தலைப்புல நீங்க எழுதின பதிவுல பொண்ணுங்க கூட கடலை போடாம (N)IIT - ல படிச்சேன்-ன்னு எழுதி இருக்கீங்க... இங்க பாத்தா வேற மாதிரி இருக்கு....

அப்புறம் என்னோட கண்ணு ரொம்ப ஜாஸ்தியா பட்டுடிச்சு-ன்னு நினைக்குறேன்.. பதிவு போடற வேகம் கம்மி ஆய்டிச்சு... கண்ணு போட்டதுக்கு மன்னிக்கவும்...

ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணாத்தே... கலக்குறீய போங்க... கிளி.. கிளி மேடம் ஆனதை நெனச்சு இன்னமும் சிரிச்சுகிட்டு இருக்கேன்.. :)))))

Sakthi said...

தலை கலக்கறீங்க போங்க.. வாழ்க்கைல ஒரு தடவையாவது உங்களை சந்திக்கணும்னு ஒரு வெறியே (தப்பா ஏதும் கற்பனை பண்ணிராதிங்க, இந்தியா-ல இப்போ வேற "இதை" சடப்புர்வமக்கணும்-னு நம்ம அன்புமணி சொல்லிட்டு இருக்காரு :-) )வந்துடுச்சு....

மேல இருக்கற சக்தியும் நாந்தேன் ஹி ஹீ ...

dharma said...

enna dubukku saar,
uk le romba busyaaa,postings onnume illaye romba naala kannavillai tirunelvelli
poittingala entru thontriyathu....
dharma

Dubukku said...

கதிர் - அப்பாடா இப்படி இருங்க படிச்ச்சிட்டு வந்து கமெண்டறேன்னு சொல்றவங்க எல்லாரும் எஸ்சாகிடுவாங்க...திரும்ப வந்து உன்Mஐயிலேயே கமெண்டினதுக்கு ரொம்ப நன்றி. உங்க தொடர்ந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி

ஆயில்யன் - ஆமாங்க...ரொம்ப நம்பிக்கை மனுஷனுக்கு :)))

குப்பன் - என்ன குப்பன் சார் ரொம்ப ஃபீலிங்காகிட்டீங்க...ஒரு குட்டி விசிட் அடிச்சேன் சென்னைக்கு...விலைவாசி மட்டும் இன்னும் குறைய ஆரம்பிக்கலைன்னு நினைக்கிறேன்...??


இஸ்திரி பொட்டி - பட்டத்துக்கு ரொம்ப டாங்க்ஸ்....:))))

ஜெமினி - ஹீ ஹீ ஏதோ சொல்றீங்க கேட்டுக்கறேன்...ஆனா இந்த டச்ன்னு சொல்றீங்களே அது என்னான்னு எனக்கே பிடிபடலை...நம்ம பாட்டுக்கு எழுதுவோம்ன்னு தான் எழுதறேன்... :))


அனானி - உங்க புலன்விசாரனை திறமை புல்லரிக்குது :)) நல்லாத்தேன் யோசிச்சிருக்கீங்கா ஆனா நான் சொன்ன விண்டோஸ் அறிமுக காலத்துல ஷாலினி குழந்தை நட்சத்திர காலத்துக்கு அப்புறம் மீண்டும் நடிக்கவே ஆரம்பிக்கலை அத்தோட அஜீத் அப்போ தான் சினிமால அறிமுகமாகியிருந்தார். ஷாலினி அன்ட் அஜீத் அப்போ மிட் பண்ணிக்கவே இல்லை.. ஒரு வேளை உங்களுக்கு இந்த காரணங்களினால் சந்தேகம் வராம இருந்திருக்கலாம் :))

மதுசூதனன் - நீங்களும் ஐ.ஐ.டியா...:))) ஏகப்பட்ட நினைவலைகள் வந்திருக்குமே :)))

அரசு - ஆமாங்க.... மிக்க நன்றி.

லங்கினி - வாங்க மேடம். உங்களுக்கு இந்த ப்ளாக் ஏதோ ஒரு விதத்துல உபயோகமாக இருந்தது பற்றி மிக்க சந்தோஷம்.

அம்பி - டுபுக்கா யாருய்யா அது....அம்பி கேக்கிறாருல்ல...வாடா வெளிய...

ராஜி - ஹைய்யோ நம்மள ரொம்ப்ப்ப்ப்ப புகழறீங்க..இருந்தாலும்..படிக்கும் போது அப்பிடியே ஜிவ்வுன்னு இருந்தது...மிக்க நன்றிங்க

Dubukku said...

நிவி - ஆமாங்க படிக்கிற காலத்துல மனுஷனுக்கு தான் எத்தனை சவால்கள் எத்தனை சோதனை...அட நீங்க வேற தாடி வளர்கிற டயத்தில அடுத்ததா நாலைஞ்சு அப்ளிகேஷனை போட்டுறமாட்டோம்...நல்ல வேளை அந்த மாதிரியெல்லாம் டயத்தை வேஸ்ட் பண்னலை :))

தமிழ் ஒழிக - வாங்க...ரொம்ப கோவமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நீங்க சொன்ன கருத்து மாதிரி முதல் முறையா கேட்க்கிறேன். ஆனா உங்க ஃப்லீங்க்ஸ் எனக்கு புரியுது. உங்கள் வருத்தங்கள் குறைய வேண்டிக்கொள்கிறேன்.


செந்தில் - வாங்க தல. இல்லை அங்கே என்.ஐ.ஐ.டியில படிக்கும் போதே நடுவுல அடுத்தடுத்த செமெஸ்டரில் வேற பாட்ச் மாறிட்டேன். அவங்களோட டச் இல்லை. கடைசி ஒரு வருஷம் மட்டும் ஒரு மூனு பேரு சேர்ந்து சுத்தினோம் அவங்களோடையும் டச் விட்டுப் போச்சு. கண்டிப்பா ஏதாவது ஒரு ஸ்டேஷன்ல சந்திப்போம். மெயிலுக்கு பதில் போடுகிறேன். நன்றி.

ஆணி - வாங்க சார். ஆப்டெக்கும் சளைச்சதில்லைன்னு தெரியும். அந்த மானஸ்தன தான் நானும் தேடறேன்...கிடைக்க மாட்டாரா?

சர்வேசன் - வாங சார். நடுவுல ரெண்டு மூனு ஊர் போக வேண்டியதாகிடிச்சு இதுல இந்தியா வேற ஷார்ட் ட்ரிப். உங்க பதிவ இன்னிகுத் தான் பார்த்தேன். ஹீ ஹீ நானும் வேற என்னோட ரெண்டாவது குறும் படத்துக்கு வேற ஒரு ஐடியாவ வெச்சிக்கிட்டு ரொம்ப நாள சுத்தறேன். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா முயற்சி செய்கிறேன்.

கணேஷ் - உங்க வாழ்த்துக்கும் தொடர்ந்த ஊக்கத்துக்கும் மிக்க நன்றி. வாங்க வலைப்பூ ஆரம்பித்தற்க்கு வாழ்த்துகள். சீக்கிரம் ரெண்டாவது போஸ்ட் போடுங்க :)))

வீரா - ஆமாங்க...ஒரு சின்ன திருத்தம் ஷாலினி என் கூட படிக்கலை...நான் படித்த கட்டத்தில் அதே பிலிடிங்கில் வேற பாட்ச்சில் படித்தார்.

குப்பன் - வாங்க. இங்கும் அங்கு நடந்த டிஸ்கஷனை சுட்டியதிற்க்கு மிக்க நன்றி. ஒரு சின்ன திருத்தம். ஒரு சின்ன விளக்கம் - ஆரம்பத்தில் ப்ளாகரில் அவர்களுடைய சொந்த கமெண்ட் சிஸ்டம் கிடையாது. அதனால் அந்த காலகட்டத்தில் எல்லாரும் haloscan,backblog போன்ற வெளி கமெண்டிங்க் சிஸ்ட்ங்களை வைத்திருந்தார்கள். நான் ஹேலோஸ்கான் வைத்திருந்தேன். அவர்கள் ஒரு கட்டத்தில் அதற்க்கு பைஸா வசூலிக்க ஆரம்பிக்க அப்பொழுது ப்ளாகர் கமெண்ட் வேறு வந்து விட்டதால் நான் சந்தா கட்டாததால் எல்லாவற்றையும் தூக்கிவிட்டார்கள். மற்றபடி தமிழ் ப்ளாகுலகம் ஆதரவு தருவதற்க்கு தயங்கியதே இல்லை அதற்கு மிகக் கடமைப் பட்டிருக்கிறேன்.

Dubukku said...

மங்களூர் சிவா - நன்றி தல

அருண் - ஹீ ஹீ அது ஓடும் ஓடும் ஓடிக்கொண்டே இருக்கும்...அது சரி...நீங்க என்னமோ ஜொள்ளே விடாத மாதிரி நைசா நழுவறீங்க :)))

சங்கர் - ஆமாங்க...எல்லாருக்கும் நடந்திருக்கும்....:)) ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு

திவ்ய ப்ரியா - வாங்க உங்க ஊக்கத்துக்கு மிக்க நன்றி . இப்போ தான் 3 இயர் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். படிச்சிட்டு கமெண்டறேன்.

மதுரா - வாங்க மேடம். இல்லை கொலு இல்லை. சுண்டல் தங்கமணி ரெண்டு நாள் பண்ணினாங்க கரெட்டா வந்தது. எனக்கு நவராத்திரி போது சுண்டல் ஸ்லாட் கிடைக்கலை இனிமே தான் கைவண்ணத்தை காட்டனும். அங்க எப்படி உங்க தங்கமணிக்கு பாஸ் மார்க் போட்டீங்களா?

மகேஷ் - அப்பாடாஆஆஆஆஆஆஆஆ...நீங்களாவது அத பார்த்தீங்களே...:))) ஆமாங்க இது எனக்கும் ரொம்ப பிடிச்ச விளையாட்டு...ஏற்கனவே முதல் பாகத்தில பத்தாம் பகுதியில் ஒன்னு என் மனசுக்கு நிறைவா வந்தது...பார்த்திருக்கீங்களான்னு தெரியலை

குப்பன் - குப்பன் சார்....உங்க பட்டத்துக்கு நான் மிகக் கடமைப்பட்டிருக்கேன்..ஆனா சுஜாதா சார் எங்க நான் எங்க....மலையும் மடுவும் :))) அவரோட ரசிகர்கள் பேஜாரகிடப்போறாங்க :))


வத்தி குச்சி - கரெக்ட்டாத் தான் பெயர வைச்சிருக்கீங்க...பத்தவைக்கிறதுல சிவகாசிங்க நீங்க...பின்னிட்டீங்க போங்க...:)) நடுவுல கொஞ்சம் அலைச்சல் அதான் எழுத முடியலை ஆன இனிமே இம்சையை தொடருவேன்

நாடோடி - வாங்க சார். மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்

வள்ளி நாயகம் - வாங்க வாங்ல மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்

சக்தி - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. நடுவில கொஞ்சம் வேலை வந்து ரெண்டு வாராமா வீட்டுல இல்லை. அதுபோக போன வாரம் இந்தியாக்கு வேற ஒரு சின்ன ட்ரிப் அதான் எழுத முடியலை. ஆனா இனிமே எழுதுவேன்னு நினைக்கிறேன்.

வீரா - யோவ் இதெல்லாம் ரொம்ப ஓவர்யா நக்கீரன் வழி பரம்பரையா நீங்க :))))...கரெக்ட்டாய் பாயிண்ட புடிச்சிட்டீங்க...ஆனா ரெண்டும் உண்மை. இந்த சம்பவம் நடந்ததெல்லாம் முதல் செமஸ்டரில். அதுக்கப்புறம் வேற வேற பாட்ச்ன்னு தாவி அங்கையெல்லம் கடலையே போடலை...கருத்தா படிச்சேங்க..அட உண்மையாத்தான் சொல்றேன்.

ஜொள்ளுப்பாண்டி- வாங்க பாண்டி..அது ஒரு சோகக் கதைங்க...:))

சக்தி - வாங்க தல. உங்களை சந்திப்பதில் எனக்கும் மிக்க சந்தோஷம் தான். கண்டிப்பாக ஒரு தரம் சந்திப்போம். போன வாரம் இந்தியா வந்திருந்தேன் ஆனா ரொம்ப சின்ன ட்ரிப் என்பதால் பயஙர ஹெக்டிகாக இருந்தது. இல்லையென்றால் இங்கே ப்ளாகில் போட்டிருப்பேன்.

தர்மா - உங்கள் யூகம் மிகச் சரி...ஏகப்பட்ட வேலை வந்தது அத்தோட இந்தியா டிரிப் வேற திருநெல்வேலி வரை வந்தேன் என்பது மிகச் சரி. இன்று தான் திரும்ப வந்தேன். இனி அடிக்கடி இங்க எழுதுவேன்.

Anonymous said...

>>>> என் மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள்
>>>> சிவாஜி பாதி ஜே.கே ரித்தீஸ் மீதி
Superb dubuks. innikku dhan time kedaichadhu.. 2nd series padichen. its come out really wonderful. Pls continue..
-- umakrishna

லங்கினி said...

Yenna Dubukku innum adhutha post-e kanum?!!

Anonymous said...

//அண்ணாத்தே... கலக்குறீய போங்க... கிளி.. கிளி மேடம் ஆனதை நெனச்சு இன்னமும் சிரிச்சுகிட்டு இருக்கேன்.. :)))))

by,
Poolisamiyar

Anonymous said...

//சக்தி - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. நடுவில கொஞ்சம் வேலை வந்து ரெண்டு வாராமா வீட்டுல இல்லை. அதுபோக போன வாரம் இந்தியாக்கு வேற ஒரு சின்ன ட்ரிப் அதான் எழுத முடியலை. ஆனா இனிமே எழுதுவேன்னு நினைக்கிறேன்.//

எழுதுவேன்னு நினைக்கறீங்களா, கண்டிப்பா எழுதுங்க...:-)

//சக்தி - வாங்க தல. உங்களை சந்திப்பதில் எனக்கும் மிக்க சந்தோஷம் தான். கண்டிப்பாக ஒரு தரம் சந்திப்போம். போன வாரம் இந்தியா வந்திருந்தேன் ஆனா ரொம்ப சின்ன ட்ரிப் என்பதால் பயஙர ஹெக்டிகாக இருந்தது. இல்லையென்றால் இங்கே ப்ளாகில் போட்டிருப்பேன்.//

நான் சின்ன பையங்க. நீங்கதான் தல... நாம சக்தி-யாவே இருக்கோம்... தல போல வருமா :-)ஹி ஹீ

Sriram said...

டாப் டக்கர் மா! சோக்கா கீது! இப்பிடியே மைண்டைன் பண்ணிக்கோ மச்சி! இன்னா சர்தானே?

viji said...

hahaha allame nice annathe,pinna enna nan vera summa athanu soli thangamani kocjikita, gavalapadatha nanu sokka seiven, wanthuko saptuko..

நாடோடிப் பையன் said...

"//"மீட் மை ஹஸ்பண்ட் அபிஜித்"ன்னு என் மண்டயை தூக்கி கல்லில் போட்டுவிட்டாள். //

இதெல்லாம் அரசியல் ல ஜகஜம் பாஸ்....."

Funny!

Post a Comment

Related Posts