Monday, August 25, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.1

ஜொள்ளித் திரிந்த காலம் - முதல் பாகம் படிக்க --> இங்கே

ரொம்ப நாளாக கையை அரித்துக்கொண்டு இருந்தது. ஜொள்ளித் திரிந்த காலம் முடித்த போது...சே கொஞ்சம் அவசரப்பட்டு முடித்துவிட்டோமோ...கேவலம் பதினொன்று அத்தியாயங்களில் முடித்துவிடுகிற அளவுக்கா ஜொள்ளு விட்டிருக்கிறோம்...வற்றாத ஜீவ நதியை கேவலப் படுத்திவிட்டோமோ. என்றும்..இல்லை இல்லை அலுத்துப் போயிருக்கும் கரெக்டாய் முடித்ததினால் தான் நிறையபேருக்கு பிடித்தது என்று மனசுக்குள் பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருந்தாலும், ஓரமாய் நெருப்பு எரிந்து கொண்டே இருந்தது. இந்த வலைப்பதிவு மூலமாக வந்த நண்பர்களும் வேறு அதற்கு அப்போ அப்போ நெய் ஊத்திக் கொண்டிருந்தார்கள். அப்பாடா பழியை அவர்கள் மேல் போட்டு விட்டு நைஸாக ஆரம்பித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எலியன், தி ரிங், போன்ற sequel பெயிலியர்கள் நினைவுக்கு வந்து பயமுறுகின்றன என்றாலும் மனதில் பட்டதை தான் முக்கால் வாசி இந்த வலைப் பக்கத்தில் எழுதியிருக்கிறேன் அது தான் இதுவரை எனக்கு நிறைய நண்பர்களை ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்பதால் அவ்வழியையே கடை பிடிக்கிறேன். வாரத்திற்கு ஒரு பதிவாவது போடவேண்டும் என்று கொப்புரானே சத்தியமாய் சொல்கிறேன் நானும் முயன்று பார்க்கிறேன். வரப்பு கட்டனும் வாய்க்கால் வெட்டனும்ன்னு ஏதாவது வேலை வந்து விடுகிறது. அத்தோடு அந்த வேலைகள் சம்பந்தமான டென்ஷன் வேறு. மனது டென்ஷனில்லாமல் சந்தோஷமாக இருந்தால் தான் எழுதுவது இயல்பாக வருகிறது இல்லையென்றால் எழுதிவிட்டு படித்தால் பிடிக்கமாட்டேங்கிறது இதில் அதை வேறு போட்டு உங்களிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டுமா?

ஊரில் உள்ளவர்கள், இங்கே படிப்பவர்கள் என்று உங்கள் எல்லார் மேலும் பழியைப் போட்டுவிட்டு ஜொள்ளித் திரிந்த காலத்தை மீண்டும் ஆரம்பிக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் வழக்கம் போல் காறித் துப்புவதற்கு தடை ஏதுமில்லை...:)
************************************************************

நவராத்திரி வந்தாலே ஊர்ப்பக்கம் கோலாகலம் தான். சாயங்காலம் நாலு மணிக்கே அல்லோலப் பட ஆரம்பித்துவிடும். அரும்பு மல்லீஈஈஈ என்று பூக்காரர் உதிராய் மல்லிகைப் பூவை உழக்கில் அளந்து விற்க ஆரம்பித்துவிடுவார். வயசுப் பெண்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் உழக்கு உழக்காய் வாங்குவார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் அப்பாவி அப்பாவும், உழக்கை விட ஓரடி உசரமாய் இருக்கும் கடைக்குட்டி தம்பியும் தையல்காரர் மாதிரி ஊசி நூல் வைத்துக்கொண்டு பூவைத் தொடுக்க ஆரம்பிப்பார்கள். ஐந்தரை மணிக்கு வயசுப் பெண்களெல்லாம் அழகாக அலங்காரம் செய்து கொண்டு அம்சமான கலரில் பட்டுப்பாவாடை/ பாவாடை தாவணியணிந்து கொண்டு கோவிலுக்கு போவார்கள். சும்மா போக மாட்டார்கள்.

மேற்கு அத்தத்தில்(எல்லையில்) இருக்கும் கோவிலுக்கு போவதற்கு முதலில் ஒரு ஜிகிடி கிழக்குக் கோடிக்கு போய் கோவிலுக்குப் போகலா ரெம்பாவாய் என்று செட் சேர்க்கும். முதலில் போகும் அந்த ஜிகிடி தனியாகப் போகாது, கூடவே ஒரு அல்லக்கை போகும். தெருவில் இருக்கும் வானரங்கள் எல்லாம் ஐந்து மணியோடு தெரு கிரிக்கெட்டை மூட்டை கட்டிவிட்டு ஐந்தரை மணிக்குள் வீட்டில் இருக்கும் பவுடரை கிவுடரை பூசி இல்லாத பெர்ச்னாலிட்டியை ஏத்தி தெருவில் ஸ்டாட்டிஜிக் பொசிஷனில் கூடி இருப்போம். கிங்பெல் சில சமயம் கடமை தவறிவிடுவான். "எண்பத்தி ஏழுல வெஸ்ட் இன்டீஸ் மெட்சில கவாஸ்கர் லாங் ஆன்ல ஒரு வீசு வீசுனார் பாரு"ன்னு என்னம்மோ கவாஸ்கரை கல்யாணம் பண்ணிக்கொள்கிற மாதிரி அவரைப் பற்றி ஸ்லாகித்துப் பேசிக்கொண்டிருப்பான். இதற்க்குள் "டேய் சீக்கிரம் வாடா இதுக்குத் தான் நீ வர வேண்டாம்ன்னு சொன்னேன்"ன்னு கிழக்கே போகும் முதல் ஜிகிடி அல்லக்கையிடம் பேசுவது போல் கடமையை கோடிட்டி காட்டிவிட்டுப் போகும். மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண் துஞ்சார். கருமமே கண்ணாயினார் என்று அப்புறம் எல்லாரும் கடமையில் உஷாராகிவிடுவோம்.

கிழக்கே போன (ஜிகிடி) ரயில், கூட்டம் சேர்ந்து மேற்கில் கோவிலை அடைந்தவுடன் இங்கே கடமை அதீத நிலையை அடையும். "ஓக்கேடா அப்புறம் பார்க்கலாம்...முக்கியமான வேலை இருக்கு...எங்கம்மா டெய்லி சனீஸ்வரனுக்கு அடிப்பிரத்ட்சணம் வைக்கனும்னு சொல்லி இருக்கா" என்று நைஸாக சில வானரங்கள் நழுவப் பார்க்கும். "டேய் சனீஸ்வரனே சனீஸ்வரனுக்கு அடிப்பிரதட்சணம் வைக்கிறத நாங்க பார்த்ததே இல்லைடா நாங்களும் வரோம்"ன்னு கோவிலை நோக்கி படையெடுப்போம். நாலு ஜிகிடிகள் சுத்துவட்டாரத்தில் இருந்தால் போறாதா...சரஸ்வதி சபதம் ஊமை சிவாஜி போல் ஃபீலிங் காட்டி வானரங்கள் மணியடிப்பதும், உதட்டை முனுமுனுத்துக்கொண்டு "சொல்லடி அபிராமி" ரேஞ்சுக்கு பந்தா காட்டுவதும், பக்தி உச்சிக்கேறி கருவரையில் இருக்கும் மூலவரை வேரோடு பிடுங்காமல் விடமாட்டேன் என்று உருக்கி சீன் போடுவதும் என்று சும்மா இருந்த சிரங்கை சொறிந்து விட்டாற் போல் கோவில் ஆகிவிடும். சிலதுகள் அடிப்பிரதட்சணம் வைக்கிறேன் விழுந்து கும்புடுகிறேன் என்று போடும் சீன் இருக்கே...தலையில் ஒரு குடத்தை வைத்தால் மூன்றாம் பிறை கமலஹாசனுக்கு டூப் போட்ட மாதிரி இருக்கும்.

இதில் பெரிய இம்சை என்னவென்றால் போட்ட சீன் வொர்க்கவுட் ஆச்சான்னு சீன் போடுகிற வானரம் அடுத்தவர்களிடம் கேட்டுத் தான் விபரம் தெரிந்து கொள்ளமுடியும். அவ்வளவு டெடிகேஷனோடு சீன் போட்டுக்கொண்டிருக்கும். ஒரு வேளை போட்ட சீன் வொர்கவுட் ஆனாலும் ஒருத்தரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். "டேய் அவ இன்னிக்கு என்ன பார்த்தாடா...எனக்கு கண்டிப்பா தெரியும்"ன்னு சாதித்தாலும் நடக்காது. "ஆமாண்டா பார்திருப்பா பார்த்திருப்பா நீ கழுத்துல அப்பிண்டிருக்கிற வீபூதியைப் பார்த்து அனுமாருக்கு வெண்ணைக் காப்பு சாத்திருக்கோன்னு அவளுக்கு சந்தேகம் வந்திருக்கும், கண்டிப்பா பார்த்திருப்பா" - வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி கேஸ் தான்.

இதையெல்லாம் மீறி ஒருவேளை அம்பாள் வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்கமாட்டார். "மணியடிச்சா கரெக்ட்டா வந்துருவேளே....சுண்டலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்! எல்லாம் பூஜையெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான்" என்று நேரம் பார்த்து மானத்தை வாங்கிவிடுவார். தெருவில் வானர கூட்டத்தின் ரெப்யூடேஷன் அப்படி. நவராத்திரி மற்றும் விசேஷமான காலங்களில் தெருவில் இருக்கும் பெண்மணிகள் எல்லாரும் சேர்ந்து நிறைய ஸ்லோகங்கள் ராகத்தோடு சொல்லுவார்கள். "டேய் நாமளும் அவங்களோடு சேர்ந்து கூட உட்கார்ந்து புஸ்தகத்தை பார்த்து ஸ்லோகம் சொல்லி அசத்தினோம்ன்னு வெச்சிக்கோயேன்... நம்ம பக்திய மெச்சி நாளைக்கு உங்க வீட்டிலயும் நாளக்கழிச்சி எங்க வீட்டுலயும் பொண்ணு குடுக்க வரிசையில நிப்பாங்க"ன்னு முப்பது நாளில் மாப்பிள்ளை ஆவதற்க்கு ஒரு தரம் கூட இருந்த குரங்கு ஒன்று ஐடியா குடுத்தது. ஆஹா சூப்பர் ஐடியா என்று உட்கார்ந்தால் நம்ம நேரம் - அன்று பார்த்து கொஞ்ச நேரத்திலேயே ஜிகிடிகள் கூட்டம் பொறுப்பாய் படிக்க எழுந்து போய் விட்டது.

சரி இப்ப முடிந்துவிடும் நாமும் கிளம்பிவிடலாமென்று பார்த்தால் இங்கே மாமிகள் முடிக்கிற வழியக் காணும். இந்த ஸ்லோகம் இந்த ஸ்லோகம் என்று இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் பக்கதிலிருந்த கிங்க் காங்க் மாமி வேறு சந்தேகத்தோடு அடிக்கடி பார்க்கிறாரென்று கூட இருந்த குரங்கு மண்டயை ஆட்டி ஆட்டி சீனாக்காரனுக்கு புரையேறிய மாதிரி மந்திரம் சொல்லி நடித்துக் கொண்டிருந்தது. நானும் அவ்வை ஷண்முகி நாசர் காய்த்த்ரீ மந்திரம் சொல்வது மாதிரி ஏதோ ஆக்ட் குடுத்து நழுவ ஆரம்பிக்கும் போது கரெக்டாய் சீனாதானா மாமா எங்கிருந்தோ வந்துவிட்டார். "ம்ம்ம் அப்படித்தான் ...மந்திரமெல்லாம் நல்ல ஸ்பஷ்டமாய் சொல்லனும்" என்று அவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பித்து நாங்கள் அன்று சொன்ன மந்திரத்தில் தெருவுக்கே கல்யாணம் பண்ணியிருக்கலாம்.

நவராத்திரியில் கோவில் சின்ன அத்தியாயம் தான். தெருவில் முக்கால் வாசி வீட்டில் கொலு வைத்திருப்பார்கள். கொலு வைத்தவர்கள் வீட்டில் இந்த நாளில் இன்னார் என்று எல்லாரையும் நாள் விகிதமாக வெத்தலைபாக்கு வாங்கிக் கொள்ள தெரு முழுவதும் கூப்பிட்டிருப்பார்கள். அப்படி கூப்பிட்ட வீடுகளுக்கு ஜிகிடிகளும் அவர்கள் அம்மாக்களும் போவார்கள். ரொம்ப சின்னப் பையன்களுக்கெல்லாம் இந்த இன்விடேஷன் தேவையில்லை "மாமி கொலு இருக்கா"ன்னு கேட்டுக்கொண்டே உள்ளே போனால் சுண்டல் தருவார்கள். ஆனால் வயதுப் பையன்களுக்கு இதெல்லாம் மானப் பிரச்சனை. கூப்பிடாமல் போக முடியாது. ஆனால் ரொம்ப தெரிந்த மாமியாக இருந்தால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு ஜிகிடி போன சமயமாய் உள்ளே கேஷுவல் விசிட் அடிக்கலாம்.

தெருவில் எல்லா மாமிகளுக்கும் ஒரு வம்பான பழக்கம் உண்டு. ஜிகிடிகள் யாராவது வெத்தலைபாக்கு வாங்க வந்தால் பாட்டு பாடினால் தான் உண்டு என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அதுவும் பாட்டு கற்றுக் கொள்ளும் பெண் என்று தெரிந்துவிட்டால் போதும் பாடினால் தான் எல்லாருக்கும் சுண்டல் கிடைக்கும் அதுவரைக்கும் கொலுவையும் சுண்டலையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கனும். அதிலும் சில மாமிகள் "அலை பாயுதே" பாடுடீன்னு நேயர் விருப்பமெல்லாம் வேறு வைப்பார்கள். சில ஜிகிடிகள் நன்றாக பாடும் சிலதுகள் சுமாராய் பாடும், சிலதுகள் பாடினால் கொலை பாயுதே தான். இருந்தாலும் அந்த வீட்டு மாமி "நிம்மி எங்காத்துல நேத்திக்கு பாடினா பாருங்கோ இடமே தேவலோகமாய் ஆயிடுத்து"ன்னு வீண் ஜம்பம் விடுவார், அப்புறம் நிம்மியின் கொலைபாயுதே கானமழை தெருவெல்லாம் எல்லார் வீட்டிலும் பொழியும்.

மேலே சொன்ன மாதிரி கொஞ்சம் நல்ல பழக்கமான மாமி வீடு என்றால் ஜிகிடிகள் உள்ளே போன ஐந்தாவது நிமிஷத்தில் "கொஞ்சம் தண்ணி தாங்கோ மாமி ...அட உங்காத்துல கொலு வைச்சிருக்கேளா"ன்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி முதல் வானரம் நைஸா இடத்தைப் பிடிக்கும். பின்னாடியே "சேகர் இங்கே வந்தானா.."ன்னு கேட்டுக்கொண்டே அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் மற்ற வானரங்கள் மடத்தை பிடிக்கும்.

இப்படி ஒருதரம் சேகரை தேடிக்கொண்டு நானும் கன்னுக்குட்டி கணேசனும் போன போது உள்ளே சேகர் ஓவராய் பிலிம் போட்டுக்கொண்டிருந்தார்.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்

33 comments:

Anonymous said...

naanthane first? irunga padichitu varen-isthri potti

Anonymous said...

naanthane first? irunga padichitu varen-isthri potti

Anonymous said...

நல்ல பழக்கமான மாமி வீடு என்றால் ஜிகிடிகள் உள்ளே போன ஐந்தாவது நிமிஷத்தில் "கொஞ்சம் தண்ணி தாங்கோ மாமி ...அட உங்காத்துல கொலு வைச்சிருக்கேளா"ன்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி முதல் வானரம் நைஸா இடத்தைப் பிடிக்கும். பின்னாடியே "சேகர் இங்கே வந்தானா.."ன்னு கேட்டுக்கொண்டே அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் மற்ற வானரங்கள் மடத்தை பிடிக்கும் you are back.pona pathivula etho miss ana mathiri irunthathu.ippo double ok.ithe formla irungappa.vayala vettren vaika vettinen pathiva vettathinga-isthripotti

குப்பன்.யாஹூ said...

டுபுக்கு
வாசகர்கள் கருத்துக்கு மதிப்பு அளித்து போஸ்டிங் போட்ட உங்கள் எண்ணத்திற்கு நன்றிகள்.

நவராத்ரி போஸ்டிங் அப்படியே கல்லிடை முதலிப்பர் (mudhaliappar) அக்ரகாரத்தை மனதிற்குள் கொண்டு வந்து விட்டது. நங்கையர்களின் போடோசும் இணைத்து இருந்தால் போஸ்டிங் கலர்புல்லாக இருந்து இருக்கும்.

ஒரு சின்ன ஆலோசனை. சொல்லி (jolli) திரிந்த காலம், கல்லிடை தெரு வாரியாக எழுதவும், பதினெட்டு அக்ரகாரம் பத்தி எழுதும் பொது பதினெட்டு volumes /versions வந்து விடும். (2.18 varai we expect), appuram mudinthaal ambai, cherai , gopala samudram, aambur, aazvaar kurichi agrahaarams navarathri also u can write.

மற்றும் ஒரு நல்ல போஸ்டிங் போட்டதற்கு நன்றிகள், வாழ்த்துக்கள்

குப்பன்_யாஹூ

sriram said...

வாங்க டுபுக்காரே!!!!
புலிக்கு பல்லு புடுங்கற வேலையெல்லாம் ஓரமா வச்சிட்டு வாரத்துக்கு பதிவு போடுற வழிய பாரும். கொஞ்ச நாள் முன்னாடி Imposition எழுதினது மறந்து போச்சா?
வழக்கம் போல பதிவு சூப்பர். மயிலாப்பூர் புடவை கடை போல எதை எடுப்பது எதை விடுவதுன்னு தெரியலை, எல்லாமே சூப்பர்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
Boston, USA

குப்பன்.யாஹூ said...

http://www.cbmphoto.co.uk/photos/LBE47.jpg

I was able to got this photo only from internet for navarathri Golu.

You might include youthful navarathri photos.

kuppan_yahoo

Munimma said...

ayya dubukks, remba naal aachu, aaLa kaanoementu nenaichen, vanduputteer. athey touch irrukku, paravalai.

kolu paatu naaley enakku konjam b(h)ayam (recently watched tenaali for the umpteenth time). ennoda friendotha amma was one of those who enjoyed my mayuradhwani. Don't know why. She compulsorily made me sing one particular song. mathavaalukku epidiyo theriyala, ennaku rombave kodumaya irunthathu. This post brought that back.

Anonymous said...

vaangga dubukku saarE,
romba naaLaikkappuRam vanththirukkingga.. nalla pOSttu.. viraivil thodarumpadi maNdi pOttu keஞ்chi kEkkuREn ;-)

-gaNEsh.
viktOriyaa, birittish kolambiyaa.
(ஞபகம் இருக்கும்னு நெனைக்கிறேன்...)

Anonymous said...

வாங்க டுபுக்கு சாரே,
ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிங்க.. நல்ல போஸ்ட்டு.. விரைவில் தொடரும்படி மண்டி போட்டு கெஞ்சி கேக்குறேன் ;-)

-கணேஷ்.
விக்டோரியா, பிரிட்டிஷ் கொலம்பியா.
(ஞபகம் இருக்கும்னு நெனைக்கிறேன்...)
Also, sorry for the double post..

Anonymous said...

தல,

Back with a bang...

கலக்குங்க.

Kathir.

Anonymous said...

Thalaiva
Welcome back. I will read and comment again.

Natty said...

கேவலம் பதினொன்று அத்தியாயங்களில் முடித்துவிடுகிற அளவுக்கா ஜொள்ளு விட்டிருக்கிறோம்...வற்றாத ஜீவ நதியை கேவலப் படுத்திவிட்டோமோ.

//

ரிப்பீட்டேய்.... கலக்கிட்டீங்க தல... எழுத்துக்கள் அருமை... தொடர்ந்து ஜொல்லவும்... ;)

Madhu Ramanujam said...

உங்களோட ஜொள்ளித் திரிந்த காலம் முதல் பகுதியை ரொம்ப ரசிச்சு படிச்ச பல பேர்ல நானும் ஒருத்தன். ஒரு முறைக்கு பல முறை படித்தேன். மனம் விட்டு சிரித்தேன். அப்படியொரு பதிவு மீண்டும் வருமா என எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு இது மிகவும் மகிழ்சியளிக்கும் விஷயம். தொடர்ந்து எழுதுங்கள்.

Ramya Ramani said...
This comment has been removed by the author.
Ramya Ramani said...

முதல்ல டுபுக்கு அண்ணா.. Welcome Back !

Sequel - ஜொள்ளி திரிந்த காலமா.. சுப்பரு.. மீண்டும் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தேன்..என்ன கிழே மேலே விழுந்தான்னு கேக்காதீங்க...
நவராத்திரி ..இது ஒரு கனாக்காலம்..நீங்க சொல்ற பொண்ணுங்களுக்கெல்லாம் அண்ணா தம்பி பாடிகாட்ர் எல்லாம் இல்லியோ?? எங்க ஊர்லயெல்லாம் அப்படி பாடி கார்ட் ஓட தான் சுண்டல் வாங்க போறதே!!

Anonymous said...

KATHAYA ETHU ROMBA MOKKAYA IRUKKU........ NAN LIKE PANDREN UNGA MOKKA STORY...
Make Money Online | free easy online jobs

Paavai said...

ahaaaaa. navarathri ninaipugalai nyabagapaduthiteengale...

we used to go all the houses that invite (and did not invite) us for golu and as you have said this singing bit was mandatory.. naan edho sree gana natha nu geetham ellam paadi (solli) sundal vangiduven.. my sister who was about five did something i will never forget .. when a maami asked her to sing, she sang kor kor thavalaiyare .. tamizh rhyme .. and got kuttu on her head from my me all the way to our house .....
such memorable days, i feel this generation is missing out on a lot of stuff

துளசி கோபால் said...

//எங்கள் பக்கதிலிருந்த கிங்க் காங்க் மாமி வேறு சந்தேகத்தோடு அடிக்கடி பார்க்கிறாரென்று கூட இருந்த குரங்கு மண்டயை ஆட்டி ஆட்டி சீனாக்காரனுக்கு புரையேறிய மாதிரி மந்திரம் சொல்லி நடித்துக் கொண்டிருந்தது.//

ஹைய்யோ ஹைய்யோ:-))))))))

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

தல கலக்குறீங்க...எப்பவுமே டார்டாய்ஸ் மேட்டருக்கு மதிப்பு ஜாஸ்தி

Anonymous said...

(((SINGAM KALAM IRANGIDUCHIII)))vaanga thala.romba naalaikappurom vanthurukeenga, "எங்கம்மா டெய்லி சனீஸ்வரனுக்கு அடிப்பிரத்ட்சணம் வைக்கனும்னு சொல்லி இருக்கா" என்று நைஸாக சில வானரங்கள் நழுவப் பார்க்கும்.
பக்தி உச்சிக்கேறி கருவரையில் இருக்கும் மூலவரை வேரோடு பிடுங்காமல் விடமாட்டேன் என்று உருக்கி சீன் போடுவதும்
ஆமாண்டா பார்திருப்பா பார்த்திருப்பா நீ கழுத்துல அப்பிண்டிருக்கிற வீபூதியைப் பார்த்து அனுமாருக்கு வெண்ணைக் காப்பு சாத்திருக்கோன்னு அவளுக்கு சந்தேகம் வந்திருக்கும், கண்டிப்பா பார்த்திருப்பா" - வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி கேஸ் தான்." சிலதுகள் பாடினால் கொலை பாயுதே தான். இருந்தாலும் அந்த வீட்டு மாமி "நிம்மி எங்காத்துல நேத்திக்கு பாடினா பாருங்கோ இடமே தேவலோகமாய் ஆயிடுத்து"ன்னுithellam naan vilunthu vilunthu siricha lines.(apdiye select all kuduthu copy paste pannirkalam
idam illa athan).post sema super.
KEEP IT UP

Anonymous said...

பக்தி உச்சிக்கேறி கருவரையில் இருக்கும் மூலவரை வேரோடு பிடுங்காமல் விடமாட்டேன் என்று உருக்கி சீன் போடுவதும் ithan dubukku touchngrathu.ithe maaari super posta potta 2011 la neengathan sir.

நாடோடி said...

டுபுக்கு, எப்பவும் போல கலக்கல் பதிவு..
நல்லா சிரிச்சேன்,ரசித்தேன்... தொடர்ந்து ஜொல்லுங்க!

Radha N said...

URGENT. VISIT MY BLOG http://nagaindian.blogspot.com/2008/08/blog-post.html

Anonymous said...

hmmm.... aparam?? mela solunga

மங்களூர் சிவா said...

/
"நிம்மி எங்காத்துல நேத்திக்கு பாடினா பாருங்கோ இடமே தேவலோகமாய் ஆயிடுத்து"ன்னு வீண் ஜம்பம் விடுவார், அப்புறம் நிம்மியின் கொலைபாயுதே கானமழை தெருவெல்லாம் எல்லார் வீட்டிலும் பொழியும்.
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
"ம்ம்ம் அப்படித்தான் ...மந்திரமெல்லாம் நல்ல ஸ்பஷ்டமாய் சொல்லனும்" என்று அவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பித்து நாங்கள் அன்று சொன்ன மந்திரத்தில் தெருவுக்கே கல்யாணம் பண்ணியிருக்கலாம்.
/

:)))))))))

பதிவு செம கலக்கல்!!

Dubukku said...

இஸ்திரி பொட்டி - வாங்க உங்க கமெண்ட் தான் முதல்ல...மிக்க நன்றி...என்ன பண்றதுண்ணே...வேலை வந்த மூட் செட்டாக மாட்டேங்குது...அதான்...

குப்பன் - வாங்க சார்...மிக்க நன்றி உங்க ஊக்கமான வார்த்தைகளுக்கு ஐய்யைய்யோ...நீங்க லோக்கல் மேட்டர் தெரிஞ்ச ஆளா இருக்கீங்களே...போட்டுக் கொடுத்திடாதீங்க...சின்ன கரெக்க்ஷன் நம்பள்கீ அம்பாசமுத்திரம், ஆனா நீங்க சொன்ன கல்லிடைல அத்தனை இடத்திலயும் தெருத்தெருவா ஜொள்ளிருக்கேன்:)) படங்கள் நான் கேரிகேச்சர் மாதிரியான் கார்ட்டூன் சித்திரங்கள் போட்டால் நன்றாக் இருக்கும்ன்னு நானும் நினைச்சேன் ஒன்னும் மாட்டலை...அடுத்த பதுவுல கொஞ்சம் முயற்சி பண்ணியிருக்கேன் பாருங்க. உங்க உதவிக்கு மிக்க நன்றி.

ஸ்ரீராம் - அண்னே வாங்க...திரும்ப இம்போசிஷன்லாம் சொல்லி மிரட்டாதீங்க சின்னப் பையன் ஏதோ தெரியாம பண்ணிட்டேன் பார்த்து செய்யுங்க...உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி

முனிம்மா - யெக்கா முனிம்மா...வாக்கா...சோக்கா சொன்னீக்கா...ஓ நீங்களும் கானக்குயிலா...நவராத்திரி சீசன்ல...படு பிசியா இருக்குமே?? :)) பாராட்டுக்கு ரெம்ப நன்றீக்கோவ்...

கணேஷ் - அண்ணே...என்ன இப்படி நியாபகமிருக்கான்னு கேட்டுட்டீங்க...அத்தோட பெரிய வார்த்தைலாம் சொல்லாதீங்க...போடுடான்னா போடறேன் :)) உங்கள் தொடர்ந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி ..

கதிர் - வாங்க தல..ரொம்ப டேங்க்ஸ் அண்ணாச்சி...

சபேஷ் - வாங்க அண்ணாச்சி படிச்சி முடிச்சாச்சீங்களா அப்புறம் ஆளே காணலை? (சும்ம டமாசு :))

நட்ட்ய் - மிக்க நன்றி அண்ணாத்த ...ஜொள்ளறோம்..ஜொள்ளறோம்...

மதுசூதனன் - மிக்க நன்றி நண்பரே உங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு கண்டிப்பா அடிக்கடி எழுத முயற்சி பண்ணுகிறேன்.

ரம்யா - தங்கச்சி....வாங்க வாங்க...ஹீ ஹி நாங்கள்லாம் சும்ம வெத்து பந்தா கேஸ்....அவங்க பயப்படற மாதிரி எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டோம் அதுனால பாடி கார்ட்லாம் வர மாட்டாங்க...மேலும் சுத்தி முத்தி தெரிஞ்சவங்க தானே...ரொம்ப நக்கல் விட்டா வீட்டுக்கு வந்து போட்டுக் கொடுத்திடுவாங்க...அதுனால எங்களுக்கும் பயம் இருக்கும்ல..

தமிழ் பையன் - ரொம்ப மொக்கையா இருக்குன்னு உண்மையை சொன்னதுக்கு மிக்க நன்றி...ஏதாவது பயனுள்ளதா சொல்லலாம்னு தான் எனக்கும் ஆசை...ஆனா வெறும் காத்து மட்டும் தான் வருது என்ன செய்யட்டும் :) உங்களுக்கு மொக்கை பிடித்தது பற்றி மிக்க சந்தோஷம்.

பாவை - ஆமா நீங்க சொன்னது மிக்க சரி...இந்த காலத்து பசங்க இதெல்லம் ரொம்பவே மிஸ் பண்றாங்க...ரைம்ஸ் பாடினது சூப்பர்...நானும் நிறைய வீட்டுக்கு சின்னப் பையனா இருக்கும் போது கொலு இருக்கான்னு சுண்டல் பிச்சை எடுத்திருக்கேன்.

துளை - யெக்கா வாங்க...:)))

மெட்ராஸ்காரன் - அண்ணே வாங்கண்ணே...ஆமாங்க நீங்க சொல்றது ரொம்ப சரி

அனானி - வாங்க உங்க பெயர போடலாம்ல...புனைப்பெயராவது போடலாம்ல...உங்க ஊக்கமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

அனானி - நீங்களும் உங்க பெயர போடலாம்ல...2011 ல....நாங்கதான்,..?? இப்படி சொன்னா நான் என்னான்னு நினைச்சிக்கறது அதையும் சொல்லி இருக்கலாம்ல

Dubukku said...

நாடோடி - வாங்க சார். ரொம்ப நன்றி ஜொல்றேங்க..:))

நாகு - பதில் உங்கள் பக்கத்தில் போடுகிறேன்

நித்யா -ஆங்...வாங்க மேடம் மேல பாருங்க போட்டாச்சு

மங்களூர் சிவா - வாங்க சார்...,மிக்க நன்றி...உங்க பாராட்டுக்கு..

Pradeep said...

Hi Dubukks,

I got to know about your blog from a directory that lists best indian blogs, and surprisingly, this is the only blog listed under the category 'Tamil'.

My curiosity let me start reading JTK part 1 and the series compelled me to steal some of my time out of the tight schedule to read it all in one go, although I remember that I gotta shoot out to fly hastily in a short while.

Eager to read the sequel too; will check it out in a weeks time.

Thanks for making something this huge. Consider my thanks as an ackonwledgement from my side for this recent-decent(?) good work in Tamil that enjoys this fine popularity

Regards,
Pradeep G

நாடோடிப் பையன் said...

"நாங்கள் அன்று சொன்ன மந்திரத்தில் தெருவுக்கே கல்யாணம் பண்ணியிருக்கலாம்."

"அதிலும் சில மாமிகள் "அலை பாயுதே" பாடுடீன்னு நேயர் விருப்பமெல்லாம் வேறு வைப்பார்கள்."

:-)

Anonymous said...

Got here after a search for Humor Tamil Blogs, aptly listed in IndianBloggers. Keep up the good work and please continue.

A tip though. Please check the links and add them in the head or tail of the articles so the continuation is maintained. I completed the 2nd where the "Kili called you" but couldn't find the continuation. Nyayama idhu?!!

Unknown said...

You always provide quality based posts, enjoy reading your work.

mobile repairing institute in noida
best mobile repairing institute
mobile repairing institute in noida


raju said...

very nice govt jobs 2019 list

Post a Comment

Related Posts