Friday, February 23, 2007

The Minute - நான் நடித்த பட ரிலீஸ்

நான் ஒரு படத்தில் நடித்தைப் பற்றி முன்னம் பதிந்திருந்தேன். அப்பிடியே சந்தடி சாக்குல மறந்துவிடுவீர்கள் என்று நினைத்தேன். கரெக்டாக நியாபகம் வைத்துக்கொண்டு தர்ம அடிக்கு போன பதிவில் ஒருவர் பின்னூட்டம் போட்டு அடிபோட்டுவிட்டார்.

இது சேனல் ஃபோர் போட்டிக்கு எடுத்த படம். போட்டியின் தலைப்பு "The Minute". படம் மொத்தமே ஒரு நிமிடத்துக்குள் தான் இருக்கலாம். என்னுடைய நடிப்பை விட்டுத் தள்ளுங்கள்.(அது என்னிக்குமே ஆஸ்கார் ரேஞ்ச் தான் :) ) இந்த சவாலுக்கு என்னுடைய முந்தைய அனுபவப் பதிவை கருவாக எடுத்துக்கொண்டு புரொடக்க்ஷன் வேலைகளில் டைரக்டர்கள் திறமையாக செயல் பட்டிருக்கிறார்கள் என்பது என் கருத்து. பின்னனி இசையும் பிரமாதம். என் நடிப்பை விட டைரக்க்ஷனை, எடிட்டிங்கை பாராட்டுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.

படம் பார்க்க.. --> The Minute


இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு மூன்று முன்னனி டைரக்டர்கள் கூப்பிட்டர்கள். ஒன்று பூக்கடை பஜாரில் பயங்கர கூட்டத்துக்கு நடுவே எல்லாரையும் தள்ளிக் கொண்டு எங்கேயோ அவசரமாக போக வேண்டிய நல்ல சேலஞ்சிங் ரோல். இன்னோன்று ஒரு ஊர்வலத்தில் ஊரில் உள்ள எல்லோரும் கிழக்கேயிருந்து மேற்க்கு நோக்கி சென்று கொண்டிருக்க நான் மட்டும் எதிர் திசையில் ஆடு திருடின கள்ளன் மாதிரி முழித்துக் கொண்டே பதுங்கிப் பதுங்கி வருகிற மாதிரி நடிக்கும் வித்தியாசமான ரோல். மூன்றாவது ஒரு சாவு ஊர்வலத்தில் வாயில் துண்டை கடித்துக் கொண்டே நடந்து நடித்து வருவது மாதிரி பட்டையக் கிளப்புகிற ரோல்.

வித்தியாசமான பாத்திரங்களாக இருந்தாலும் கதைக்களம் ஒரே மாதிரியாக இருக்கிறதே என்று வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
என்னுடைய நடிப்பைப் பற்றியும் உங்களுக்கு சொல்லுவதற்கு ஆயிரம் இருக்கும். (குறிப்பக அந்த கடைசி ஷாட்டில் ஃபீலிங்காய் ஸ்லோ மோஷனில் லுக் விடுகிறேனே :))) ) ஓ.கே விதி யார விட்டது. தர்ம அடி ரெடி ஸ்டார்ட் மீசிக்....

48 comments:

Anonymous said...

நான் தான் பர்ஸ்டா! அருமையான நடிப்பு, குறிப்பாக முகத்தை காட்டாமல் படியிலிருந்து இறங்கி வரும் காட்சீ... சீ.. சீ (சாரி, தும்மல்) அருமை.

Anonymous said...

சூப்பர் நடிப்பு. அதுவும் அந்த படிகட்டுல இறங்கி வருவது. சான்ஸே இல்ல ம்ம்ஹீம் யாரலைய்ம் அப்படி பண்ணமுடியாது.
ஆஸ்கார் அவார்டுக்கு நான்வேணா நாமினேட் பண்ணவா?..

Meenapriya said...

ம்ம்ம்... நல்லா இருக்கு...

ஜி said...

அய்யய்யோ... இப்படி மார்னிங்ல போட்டுட்டீங்களே... ஆஃபிஸ்ல வச்சி பட்ம்லாம் பாக்க முடியாதே....

நான் நைட் வீட்டுக்குப் போய் பாத்துட்டு திரும்பி வந்துக் குத்துறேன் :))))

ACE !! said...

Ennanga, mugathula train-a miss panna paraparappe kaanom...

Sari venam, atleast oru releif-avathu irukkum-nu paatha etho confused expression kodukareenga..

Anonymous said...

அது எந்த ட்யுப் ஸ்டேஷன்னு சொல்லுங்க.

Syam said...

குருவே...நீங்க சூப்பரா நடிப்பீங்கனு தெரியும் நிரூபிச்சுட்டீங்க...நீங்க எண்ட்ரி குடுக்கர சீனுக்கு லாட்டரி சீட் எல்லாம் கிளிச்சு ரெடியா வெச்சு நீங்க வந்த உடனே தூவி இங்க ஆபிஸே ரனகளம் ஆயிடுச்சில்ல :-)

இராமச்சந்திரன் said...

தல..படம் ஸூப்பர்....என்ன நடை ...என்ன லுக்கு...(கதை தான் புரியல). எனக்கென்னவோ மீசையும்...ஃபுல்லா எடுத்திருந்திருக்கலாம்னு தோணுது? லுக் ஹாலிவுட் ரேஞ்ச்சுக்கு எகிரியிருக்கும்ல.

எல்லாருக்கும் முதல் டூர், முதல் வேலை, முதல் காதல், முதல் முத்தம் எப்படி மறக்காதோ அதேமாதிரி இந்த முதல் நடிப்பு-ங்கற வகைல இதுவும் உங்களுக்கு மறக்காது.

சரி உங்க முதல் நடிப்ப பாத்தாச்சு. எப்போ முதல் முத்தம், முதல் காதல்...இத்யாதி..இத்யாதி எல்லாம் சொல்லப் போறீங்க ?

Porkodi (பொற்கொடி) said...

hihihi actually rotfl :) edhukkuna last scenela neenga nimmadhi perumoochum vidala train pochenum peel pannala! :) matha padi padam concept, mudhal shots ellam super!

adhu seri nee vandhu camera munnadi ninna therium latchanam nu solla koodadhu! :)

சேதுக்கரசி said...

உங்க ஆசைப்படி இலியானா, கௌஷா எல்லாம் இருந்திருந்தா பட்டையக் கிளப்பியிருப்பீங்க, சரிதானே? ;-) (மனசாட்சி: இந்தப் படத்துக்கு இலியானாவும் கௌஷாவும் ரொம்ப அவசியம்!! :-D)

SLN said...

ஆஸ்கார் வேந்தன் டுபுக்கு வாள்க

SLN

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

வாவ்... சும்மா கலக்கியிருக்கீங்க....
மிரட்டியிருக்கீங்க.... என்னமா ஓடியிருக்கீங்க... என்ன STYLE ஆ நிக்கிறீங்க... என்னம்மா போஸ் குடுக்கறீங்க.. சூப்பர் போங்க...
இது மட்டும் நம்ம ஊர் டைரக்டர்ஸ் கண்ணுல சிக்கிச்சு... ம்ம்ம்ம்ம்...நீங்க தான் அடுத்த ஹீரோ...அவன் அவன் அரண்டுடுவான்ல...காரண்டி..ம்ம்ம்ம்...

MeenaArun said...

உங்க ப்லாக்கு அடிக்கடி வருவேன்,ஆனா இது தான் ஃப்ர்ஸ்ட் டைம் கமெண்ட் செய்யதது.அது யாரு அபி அரும்பாக்கம்,அது நம்ம ஏரியா .ச்சும்மா தெரிஞ்க்கலாம் தான்


மீனாஅருண்

k4karthik said...

அவ்வ்வ்வ்வ்.........
அவ்வ்வ்வ்வ்.........

Anonymous said...

varungaala british pradhamarae...!!!,english ina maana thalaivarae, patti thotti ellam vetri nadai podum "the minute"-n pokkishamae.....good work.

Ippadikku : "Dubuks Dagulmama" (rajini babu, rajini sankar maadhiri "Dubuks dagulamama" )...

கைப்புள்ள said...

ஆஸ்கார் வேந்தன் டியூப் திலகம் எங்கள் அண்ணன் டுபுக்கு காந்துக்கு க்ளோசப் ஷாட் வைக்காததை வன்மையாகக் கண்டித்து இந்தப் படம் ஓடும் எல்லா பிரவுசர்களிலும் பிளேடு போடப்படும் என எச்சரித்துக் கொள்கிறேன்.

லாங் ஷாட்டா இருந்தாலும் அந்த ஏத்த எறக்கமும், அந்த ஸ்டைலான ஓட்டமும் வேற யாருக்கு வரும்? எங்கேயோ போயிட்டீங்க போங்க. அடுத்த படம் வார்னர் பிரதர்ஸுக்கு குறைச்சலா யாருக்கும் குடுக்காதீங்க தல.

Anonymous said...

>> இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு மூன்று முன்னனி டைரக்டர்கள் கூப்பிட்டர்கள்

- ரேப் சீன் எதுக்கும் எந்த டைரக்டரும் கூப்பிடலையா?

திறமைய காட்ட நல்ல சான்ஸ் ஆச்சே.... நான் சொல்றது நடிப்புத் திறமையை. :)

அபி அப்பா said...

குருநாதா!!!கூட நெறய பூ வாங்கி வச்சு மானிட்டர் மேல தூவலாம்ன்னு பாத்தா கையவுட்டு பூவ எடுக்கு முன்னே படம் முடிஞ்சு போச்சு தலீவா!! ஒரு வேள இது டிரைலரா????

Anonymous said...

தல அருமையான நடிப்பு :-))

டுபுக்கு ரசிகர் மன்றம்
சிங்கை

ஜி said...

இப்பத்தான் படத்தப் பாத்தேன்... ஒன்னுமே புரியல.. ஏன்னா, அவுங்க போட்ட சப்-டைட்டிலப் பாக்கல... சைட்ல ஏதாவது ஃபிகர் வருதான்னு பாத்துக்கிட்டு இருந்தேன் :D....

திருப்பிப் பாக்கும்போது புரிஞ்சிடிச்சு.. :P

[ 'b u s p a s s' ] said...

எனகென்னவோ நீங்க உங்க முகத்த காட்ற shot தவிர மீதியெல்லாம் டூப் போட்டு எடுத்தா மாதிரி இருக்கு.

:)

BGM கலக்கிட்டாங்க!!

good work.

Anonymous said...

ஹலோ டுபுக்கு...
படம் ஸூப்பர்...நல்ல நடிப்பு..படத்துல நீங்க படியில நடந்து வரும்போது..கீழ Rakhee Sawant/Disco shantiயோட ஒரு 30secக்கு ஒரு சின்ன Item number இருந்திருந்தா ஒரு களை கட்டிருக்கும்.
Good work!...அடுத்த படம் எப்போ?

இப்படிக்கு,
டெல்லியிலிருந்து ராமகிருஷ்ணன்..

இலவசக்கொத்தனார் said...

இப்போ என்ன? சரியான டயத்துக்கு ஆபீஸ் கிளம்பாதீங்க. எப்பவுமே லேட்டா போங்க. இதுதானே மெசேஜு?

இந்த படம் வரதுக்கு முன்னாடியே நாங்க அப்படித்தானே போறோம், வந்துட்டாங்க பெரூசா சொல்லலற்துக்கு...

Deekshanya said...

enna solunga, enga thanga thamilan, thalaivan dubukku vanthalay padam sogamanatha irunthalum kalai katidum!! kalakuringa ponga! good one.

லங்கினி said...

Aamam.... annikku train-la bomb irukkara matter munnadiye theriyuma?!! Ippadi train miss pannittu assault-a nikkareenga?!! Yengayo idikkudhe?!!!

Anonymous said...

//ஒரு சாவு ஊர்வலத்தில் வாயில் துண்டை கடித்துக் கொண்டே நடந்து நடித்து வருவது மாதிரி பட்டையக் கிளப்புகிற ரோல்.
//
ROTFL :) ungala antha kaatchila ninachu paarthen. sirippa adakka mudiyala!

LOL on ramachandran and You know who? comments. (i think it's chakra)
koluthi pottachu! shtart mejic! :)

Rajavel said...

Nalla padam .. nalla concept ... 1 nimishammna vazhkaila meethi irukkura 1000000000000 nimishamnu niroobichiteenga !

Anonymous said...

Enna koduma Saravanan Ethu
-Venkat

dubukudisciple said...

guruve!!
en guruva closeup liye kamikala .. adu romba mosam...
andha nadai steps irangara style ellam jooper!!!
aduthathu enna James Cameroon padam??? illa maniratnam padama???

Unknown said...

Guru

Sooper Guru..

I really wanted to appreciate thangamani mami.. She is a real dheergadharisi... illena the day you were preparing for the show and during the alambal..how did she get to know that you are going show your back for "Sirrr.. Post" Scene... Yedho avangala maadiri punniyavadhinala thaan engala maadhiri aalungalukku unga innoru pakka udansu moonji vetta velichamaagudhu..

Vaazhga Thaaikulam...

Ms Congeniality said...

enna oru nadippu, kadasila andha look..chance e illa..thiruvizha la tholanji pona kozhandhai muzhikaraa maadhiriye irundhudhu :p
Oscar kadaika vendiya nadipa waste panniteengale ivlo varsham..cha..cha..inimelum time waste pannaadheenga..Do accept offers from big directors like perarasu and kandipa ore varushathula thirupaachi aruvaaloda ellaarum ongala adika vara gilli maadhiri oduveenga :-p


On a serious note, it is a valid point that a single minute sometimes make a huge difference

Munimma said...

aduthaathu ambi padatha, aathukku poi thaan paakanum. Dubukku narpani mandram thodangalamnu irukken. ithey ratela poneengana, 5 varushathula neenga thaan next CM.

Dubukku said...

அப்பாவி - அப்பாவின்னு பெயர வெச்சிக்கிட்டு முதல் போணியே கவுத்திட்டீங்களே :))

இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களே பெயர சொல்லாம்ல...அப்பிடியே கடன்பட்டிருப்பேனே

நல்லா இருக்கா? என் நடிப்பத் தானே சொல்றீங்க? ரொம்ப டேங்க்ஸ்...

ஜி- இப்போ படம் புரிஞ்சிடிச்சா? நான் ஒரு நிமிஷம் லேட்டா போனதுனால லண்டன் குண்டு வெடிப்புலேர்ந்து தப்பிச்சிட்டேன்..(ஹூம் நான் தப்பிச்சிட்டேன் நீங்களெல்லாம் மாட்டிக்கிட்டீங்க)

Dubukku said...

Ace - பெரிய மனசு பண்ணி மன்னிசிடுங்க...அடுத்த தரம் கரெக்டா செய்யறேன் :)

மு.உமாசங்கர் - ada Paddington thaan :)

Syam - அது....அப்படி போடு அருவாள...நீங்க தான் தளபதி :) (இது வகைக்கு செலவு கணக்கு ஏதும் அனுப்பிறமாட்டீங்களே?)

Dubukku said...

இராமச்சந்திரன் -கதை புரியலையா...மேல ஜிக்கு அடிச்ச ரிப்ளைல பாருங்க.
இத்யாதியா யோவ் வம்புல மாட்டிவுடாதீங்கப்பா.. :))

பொற்கொடி- ஒரே சிரிப்பா போச்சு போல உங்களுக்கு ஹூம்

சேதுக்கரசி - அதே அதே உங்களுக்கு தெரிஞ்சிருக்கு இலியானா கௌஷா எல்லாரும் அவசியம்ன்னு நானும் டைரக்டர் கிட்ட சொன்னேன் அவங்க அவ்வளவா ரசிக்கல

SLN - ரேஞ்சாத் தான் இறங்கியிருக்கீங்க :))

Sumathi - ஹீ ஹீ ரொம்ப புகழாதீங்க கூச்சமா இருக்கு (ஆனாலும் நீங்க அநியாயத்துக்கு நல்லவங்கன்னு இதுலேர்ந்து தெரியுது :)))

Dubukku said...

MeenaArun - அவங்களும் ஒரு பேமஸ் இங்லிபிஸ் ப்ளாகர் தான். அவஙகளப் பத்தி அவக்ன்க சொல்லல வேணாம்ன்னு இந்த படம் எடுக்கும் போதே சொல்லிட்டாங்க...இல்லைன்னா இதுக்குள்ள சொல்லிடுவேன். தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.
எல்லாம் சரி நம்ம நடிப்ப பத்தி ஒன்னும் சொல்லலையே நீங்க ;P

k4karthik - யோவ் நான் ட்ரெயின விட்டதுக்கா இந்த அழுகை? மனச தேத்திக்கோங்க...வேற என்ன பண்றது...

dagulmama - British Prathamara...சரிதான் ஒரு முடிவோட தான் இருக்கீங்க...ஓவரா ஓட்டாதீங்க... :)))

கைப்புள்ள - வாங்க வாங்க...நீங்களும் ஜோதில ஐய்க்கியமாகிட்டீங்களா...20th Century Fox - ஓகேவா?


//அடுத்த படம் வார்னர் பிரதர்ஸுக்கு குறைச்சலா யாருக்கும் குடுக்காதீங்க தல//
இப்படி நடிச்சு எங்கள இம்சைபடுத்தாதீங்கன்னு டீசன்டா சொல்றீங்க சரி புரிஞ்சிகிட்டேன் :))))

Dubukku said...

YOU KNOW WHO - dei Chakra - வாடா நல்லவனே :)))இன்னா கரிசனம்டா சாமி :P

அபி அப்பா - இங்க வீட்டுலயும் இதே பல்லவி தான்...ஒரு டிரெயலெர்ல நடிச்சிட்டு இந்த அலம்பல்ன்னு....ஒரு உலகக் கலைஞன... ஹூம்

ஆமா அதென்ன குருநாதா?...யோவ் ஒரு க்ரூப்பா கிளம்பியிருக்கீங்க போல?...என்னைய வெச்சு மடம் கிடம் ஆரம்பிச்சு கலெக்க்ஷன் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா? ஒழுங்கா ஷேர் அனுப்பிருங்க சொல்லிப்புட்டேன்

Dubukku said...

Anonymous - அய்யோ உங்க பேர சொல்லித் தான் இந்த போஸ்டே போட்டேன்...நீங்க சொன்ன சரிதான். ரசிகர் மன்றமா???...எதாவது படத்துக்கு ப்ரீ டிக்கெட் குடுத்தா என்னய விட்டுராதீங்கப்பூ :)

Buspass - ஏன் இப்பிடி....ஏற்கனவே நான் நடிச்சதுன்னா மண்டபத்துல ஒருபயலும் நம்பமாட்டேங்கிறான்...இதுல நீங்க வேற கிளப்பிவிடனுமா? :)))

Ramakirshnan - என்னய்யா இப்படி சொதப்பிட்டீங்களே..Disco Shanti-..வேற ஆளே கிடக்கலையா உங்களுக்கு....அதுக்கு பேசாம 54ன்னு ஒரு நம்பர் ப்ளேட் வைச்சிருலாம்...:)))

Dubukku said...

Uma - Oscaraa?? - amaa naane thaan :)) Karupula 1 vellaila 7 (baniyana thaane solreenga? ithukkellam tax poda arambichutanagala enna?

கொத்ஸ் - ஆமாண்ணே...மன்னிசிருங்கண்ணே...அடுத்த தரம் உங்ககிட்ட கேட்டுட்டு படம் எடுக்கறோம்ணே...

Deekshanya - hehe en nadippe bayangara comedya irukkunu appidinu sollreenga danks danks :))

Dubukku said...

லங்கிணி - இடிக்குதா?....இல்லியே நான் பாவமா தான் நிக்கிறேன்? :P

Ambi - thambriii....nalla manatha vangura. :)))

Cheti - ada bayanagrama conceptlam pidikireenga :)

Venkat - ellam unga thalaiyelluthu thaan :)))))

DubukuDisciple - vaanga vaanga Manirathnam/James Cameroon - I am the ready :)

Ramachandran- yoooww ithellam romba over :)) thangamani MAMIYAAA??? neenga maatineenga avlovu thaan :))

Dubukku said...

Ms.Congeniality - Perarasu, thirupachiyaa...Ambiyoda annannu ippadi mudivu panniteengala? ;P

Munimma - next CMaaa thodaa...round kaati adikareengale ellarum :))

இலவசக்கொத்தனார் said...

ஏம்பா, பின்னூட்டம் போடறவங்கதான் இப்படி ஆங்கிலத்தில் தமிழை எழுதிப் படுத்தறாங்கன்னா நீயும் ஏனப்பா அப்படியே பதில் போடற??

அவங்க தமிழ்ப் பதிவை படிச்சுட்டுதானே பின்னூட்டறாங்க. அதுனால தமிழில் பதில் போடப்பா. இந்த மாதிரி ஆங்கிலத்தில் தமிழை எழுதினா படிக்க முடியலை. தலை வலிக்குது. :(

Jeevan said...

Congrats Friend. The vidoe was nice, you look handsome:)

I Wish u to do more videos.

சேதுக்கரசி said...

//ஏம்பா, பின்னூட்டம் போடறவங்கதான் இப்படி ஆங்கிலத்தில் தமிழை எழுதிப் படுத்தறாங்கன்னா நீயும் ஏனப்பா அப்படியே பதில் போடற??

அவங்க தமிழ்ப் பதிவை படிச்சுட்டுதானே பின்னூட்டறாங்க. அதுனால தமிழில் பதில் போடப்பா. இந்த மாதிரி ஆங்கிலத்தில் தமிழை எழுதினா படிக்க முடியலை. தலை வலிக்குது. :(//

ரிப்பீட்டே! :-)

Thiru said...

முன்பதிவை கொஞ்ச நாளைக்கு முன்னாடி படிச்சு சிரிச்சுருக்கேன். ஆனாலும் அதுக்கு ஒரு sequel போட்ட கதை இன்னும் சூப்பர் (overathaan poittu irukku ;-))

Thanks for linking my blog post at Desipundit.Vaazhga valamudan!

Dubukku said...

இலவசக்கொத்தனார் - கொத்ஸ்..இனிமே ஆவண செய்வோம் :)


Jeevan - ஐய்யோ ஜீவன்..நீங்க ஒருத்தர் தான் கும்முன்னு ஏத்திருக்கீங்க நம்பள...கையக் குடுங்க...
//you look handsome// you look handsome//
ஐய்யோ சொக்கா சொக்கா...தங்கமணி இல்லீயே பக்கதுல...

சேதுக்கரசி- இனிமே இது நடக்காம பார்த்துக்கறேன் மேடம் :)

Thiru - ஓவர்ங்கிறீங்க...சரி நோட் பண்ணிக்கிறேன் :)

Uma - பனியன் மேல லவ்ஸ்லாம் இல்லீங்க...நீங்க கேட்டதும் அப்பிடி தோணிச்சி அதேன் :)
என்னங்க பண்றது டசன்கணக்குல வாங்காட்டா ஊருக்குப் போயிட்டு வந்த ஃபீலிங்கே வரமாட்டேங்குது

Usha said...

And I am sooooooooooo glad for that one minute delay!
Thank god

கானகம் said...

Dubukku sir, the link is not working.. please provide me the link for Minute..Dubukku suicidal fans club.. Abu Dhabi, Qatar and Kuwait. ( Indha 3 naattukkulladhan shunting for business development)

Post a Comment

Related Posts