Wednesday, June 21, 2006

ஆறு

நண்பர் சிலந்திவலை ரமணி “ஆறு” விளையாட்டுக்கு அழைத்திருந்தார். அது சமபந்த்தப்பட்ட பதிவு இது. ஒன்று, இரண்டு, மூன்று… என்று ஆறு வரை எழுதவேண்டும். (நம்மைப் பற்றித் தான் எழுதவேண்டும் என்று எங்குமே சொல்லலையே ரமணி...அதான் ஜல்லியடித்துவிட்டேன் :) )

ஒன்று, இரண்டு - இந்த நம்பர்களை தமிழர்கள் உபயோகப்படுத்துவது மாதிரி யாருமே உபயோகப்படுத்தி இருக்க மாட்டார்கள்.இதை இப்போது நினைக்கும் போதெல்லாம் இதற்கு எப்படி இந்த உபயோகம் வந்திருக்கும் என்று அளவில்லாத வியப்பு வரும். ஒன்றுக்கு போய் விட்டு வருகிறேன். இரண்டிற்கு போய்விட்டு வருகிறேன் என்று விரலில் சின்ன வயதில் ஸ்கூலில் நிறைய சைகை பாஷை பேசி இருக்கிறேன். அதிலும் விரலை கொக்கி மாதிரி வைத்துக்கொண்டு சைகை காட்டினால் ரொம்ப அவசரம் என்று அர்த்தம். போரடிக்கும் க்ளாசிலிருந்து தப்பிக்க பையன்கள் அடிக்கடி கொக்கி குமாராகிவிடுவார்கள். ஆனால் இதிலும் சில டீச்சர்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட். மணியடித்தால் சோறு என்பது போல் மணியடித்தால் தான் ஒன்றும் இரண்டும். அவர்களை ஏமாற்ற கண்ணைச் சுறுக்கிக் கொண்டு லேசாக குதித்துக் கொண்டே கொக்கி குமாராக வேண்டும்.அப்போ தான் கருணை பிறக்கும். இப்படியாவது ஏமாற்றி அங்கே போய் சுத்திப் பார்த்துவிட்டு வருவதிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது. இப்போது உள்ள கான்வென்ட் குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. குழந்தைகள் ரொம்பத் தான் மிஸ் பண்ணுகிறார்கள். இப்பொதெல்லாம் இதற்கு வெவ்வேறு வழக்குச் சொல் வழங்கப்பட்டு வருகிறது என்று நினைக்கிறேன். எங்க வூட்டுக்காரி சொந்தக்கார வட்டதில் இதற்கு "லண்டன்" என்று நாமகரணம் செய்திருக்கிறார்கள். ஒரு தரம் இந்தியா போயிருந்த போது அந்த வீட்டுப் பெரியவர் "மாப்பிள்ளை எந்த ஊரில் வேலை பார்க்கிறார்" என்று கேட்க, நான் ரொம்பப் பெருமையாக "லண்டனில் வேலை பார்க்கிறேன்" என்று சொல்ல...அந்த விட்டுக் குழந்தைகள் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தன.

மூன்று - திருநெல்வேலி பக்கம் "முக்கா முக்கா மூனு தரம்" என்று ஒன்று உண்டு. சாட் பூட் திரீ(அப்பிடின்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு?), க்விஸில் கேள்விக்கு பதில் சொல்வதாகட்டும், சீட்டு குலுக்கி போட்டு பார்ப்பது வரை நினைத்தது வரவில்லை என்றால் இந்த ரூலை உபயோகப் படுத்தி விடுவோம். திருநெல்வேலிக் காரர்களாக இருந்தால் விஷயம் தெரிந்து கொஞ்சம் உஷாராகிவிடுவார்கள். மற்ற ஜில்லாக்காரர்கள் "அப்படீன்னா?" என்று முழிப்பார்கள். கிரிக்கெட் டாஸ் போடும் போது "எங்க ஜில்லாவில மூனாவது தரம் தான்" என்று இந்தப் பழமொழியை மேற்கோள் கட்டி கதை விட்டு நிறைய தரம் மெட்ராஸ்காரர்களை ஏமாற்றி இருக்கிறேன். மூன்றாவது தரமும் நினைத்தது வரவில்லை என்றால்....???? வேறென்ன வேறெதாவது டகால்டி வேலை தான்.

நாலு - "எதுக்கும் ஒன்னுக்கு நாலு தரம் யோசிச்சு சொல்லு என்கிறார்களே"...எதற்காக? முதல் மூன்று தரம் பிடிபடாதது நாலாவது தரம் யோசித்தால் வந்துவிடுமா? நாலாவது தடவையா யோசிப்பது தான் கரெக்டாக இருக்குமா? யாமறியேன் பராபரமே. ஆனால் இப்படி சொல்லும் போதெல்லாம் நாலாவது தடவை நிறைய குழம்பியிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் ரொம்ப குழப்பமாக இருந்தால் விஷயத்தை அப்படியே மூடிவிட்டு ஒரு தூக்கமோ வேறு வேலையோ பார்க்க போய்விடுவேன். அப்புறம் திரும்ப வந்து பார்க்கும் போது ஒரு தெளிர்ச்சி கிடைத்திருக்கும்.

ஐந்து - உளவு பார்ப்பவர்களை ஐந்தாம் படை வேலை என்றிகிறார்களே..ஏன்? இது ஏதாவது குறிச் சொல்லா? தெரிந்தவர்கள் கூறுங்களேன். இதுவும் ரொம்ப நாளாக மண்டையின் ஓரத்தில் குடைந்து கொண்டிருக்கிறது. (ஹீ ஹீ ஐந்துக்கு எதுவும் உருப்படியா தோன்றவில்லை பையன் சமாளிக்கிறான் என்றி நீங்கள் நினைக்கலாம்... தப்பே இல்லை)

"ஆறு" - ஆறு என்றால் தமிழகத்தில் அது தாமிரபரணி தான் அடிச்சுக்க ஆளே இல்லை. காவிரி, வைகைன்னு சொல்றவங்களெல்லாம் மே மாசம் உங்க ஊர்ல ஓடுகிற மணலாற்றை ஒரு தரம் சுத்தி பார்த்துவிட்டு அப்படியே ஓடிப்போயிடுங்க. தாமிரபரணிக்கு எப்போ வேண்டுமானாலும் வாங்க நல்லா தண்ணி காட்டுறோம். "வற்றாத ஜீவ நதி"ங்கிறதையும் தாமிரபரணிக்கு மட்டும் தான் என்று பட்டயம் போட்டு வைக்கனும். லீவு நாட்களில் காலை ஆறு மணிக்கு எழுந்து நண்பர்களோடு கூட்டமாக போனால் பத்து பதினோறு மனிக்கு வீட்டிலிருந்து கம்போடு ஆள் வரும். பயங்கரமாக ஆட்டம் போட்டிருக்கிறேன். அது பற்றி தனிப் பதிவு போடவேண்டும். மழைத் தண்ணி தேங்கியிருக்கிற மாதிரியான ஆறில்லை தாமிரபரணி...காட்டாறு..அதுவும் பொதிகை மலை அடிவாரம் என்பதால் என்ன வேகத்தில் ஓடும் என்று சொல்ல வேண்டியதில்லை. சுழலுடன் ஓடும் நதியில் நண்பர்களோடு தொட்டு பிடிக்கும் போட்டி விளையாடுவதென்பது தனி சுகம். இந்த முறை இந்தியா போகும் போது கண்டிப்பாக மகள்களை அழைத்துப் போவதாக சொல்லியிருக்கிறேன்.

ஆர்வமிருக்கும் நண்பர்கள் இந்த ஆறு விளையாட்டை தொடரலாம்.

Update - ஐய்யைய்யோ...சொல்ல மறந்துட்டேனே....தேன்கூட்டில் வாக்களிப்பு ஆரம்பிச்சாச்சு....ஒட்டக் குத்துறவங்களும் முதுகுல குத்துறவங்களும் குத்தலாம்....அங்கே மேலேயே "வாக்களிக்க இங்கு சுட்டுங்கள்..."ன்னு லிங்க் இருக்கும்.

30 comments:

யாத்ரீகன் said...

>>> கொக்கி மாதிரி வைத்துக்கொண்டு
>>> கொக்கி குமாராகிவிடுவார்கள்
>> ரொம்பத் தான் மிஸ் பண்ணுகிறார்கள்<<<

ஹாஹாஹாஹா !!!

>>> லண்டனில் வேலை பார்க்கிறேன்
ஒரு நண்பர் ஒரு குழந்தைகிட்ட பாரின் போய்ட்டு வர்றேன்னு சொல்லீட்டு அவர் பட்ட பாடு மாதிரி இருக்கு :-)))

>>> ஐந்தாம் படை

காலாற்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை.. அடுத்து ஐந்தாவது..

>>> அப்படியே ஓடிப்போயிடுங்க

ஊருப்பக்கம் வருவீகல்ல.. அப்ப வச்சுக்கலாம் வீச்ச.. எலேய் நம்ம ஆத்தப்பத்தி தப்பா பேசிட்டாங்கல்லே !!! ;-)

இலவசக்கொத்தனார் said...

இப்படி எல்லாம் கும்மி அடிச்சிட்டு, இதுல கற்பனை வளம் குறைஞ்சு போச்சுன்னு கம்பிளெண்ட் வேறையா.

நல்லா இருங்கடா சாமீ.

ramachandranusha(உஷா) said...

டுபுக்கு, சிரிச்சிக்கிட்டு இருக்கிறனா, பின்னுட்டம் போட முடியலை
:-))))))))))))))))))

நாகை சிவா said...

//"லண்டனில் வேலை பார்க்கிறேன்"//
பாரீன் போவது வழக்கத்தில் உள்ள சொல் தான். நம்ம காலேஜில் 1 மேட்டருக்கு கையெழத்து போட போறேன் சொல்லுவாங்க. இங்க வந்த பிறகு இந்த வட இந்தியர்க்கள் இந்த மேட்டருக்கு போறதா இருந்தா பாகிஸ்தானுக்கு போறத சொல்லுறாங்க.

வற்றாத ஜீவ நதியாம். அப்பு, ஒசியில் கிடைக்குற தண்ணிக்கே இந்த அலம்பல்னா.
எங்கள மாதிரி சண்டை போட்டு, சூப்ரிம் கோட்டில் கேஸ் போட்டு தண்ணி வாங்குற எங்களுக்கு எம்புட்டு இருக்கும்.

SLN said...

ஏழு(மலையானே) என்னை காப்பாத்து :)

SLN

Unknown said...

இதை இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். இதுக்குதானு உங்களை ஆட்டைல சேத்தது.. உங்களைப்பத்தி எழுதலைன்னா என்ன.. லண்டன் ஜோக்கை வெச்சு எல்லாரையும் சிரிக்க வெச்சாச்சில்ல.. நல்லவேளை நான் லண்டன்ல வேலை செய்யலப்பா..ஆனா லண்டனுக்கு டெய்லி போயிட்டுதான் இருக்கேன்..ஆனாலும் நீங்க கூப்பிடற ஆறுபேர் யாருன்னு சொல்லியிருக்கலாம்ல..

Anonymous said...

சூப்பர் போஸ்ட் சூப்பர் போஸ்ட்டுன்னு சொல்லி சொல்லி போர் அடிக்குது. Capri வந்தாலாவது கொஞ்சம் நல்லா பொழுது போகும். ஆளையே காணும் இப்ப எல்லாம் :(

Anonymous said...

Nice said..

Enjoyed...Thanks!

Jeevan said...

முக்கா முக்கா மூனு தரம், சாட் பூட் திரீ, intha mathiri varthaiellam naan china pothula friends kuda velaiyadum pothu pasuvanga. Nenima yaaru kettalum naan Londonla irukkanu solla mattinga la:)) Nenga antha Murugar Kovilla irunthu Aathu thannila guthuchi irukkengala, naanum pothigai mallai poierukkan, Karaiyar dam thanithaan thamirabaranila oduthula.

ambi said...

//அதிலும் விரலை கொக்கி மாதிரி வைத்துக்கொண்டு சைகை காட்டினால் ரொம்ப அவசரம் என்று அர்த்தம்//

he hee.. neengalumaaa? same blood..
Jala greedai ellam angeyum balamaa irunthathu polirukku. intha karaiyila naanga Aatam poduvoom..
thambra barani karaiyila ungalluku kalvettu pathikkanum anna. namma Oru thanni kuduchaa ippadi thaan nakkal vida thonum..

Anonymous said...

இன்னிக்கு தான் ஒங்க ப்ளாக் பக்கம் வந்தேன்! ஒண்ணு இரண்டுனு கலக்கலா எழுதிருக்கீங்க!!!
இனி அடிக்கடி வந்து பாக்குறேன்!!! சுப்பரா இருக்கு படிக்கிறதுக்கு...
திருநெல்வேலியா? 1974 வேறயா? ஆஹா ...
Dubukks, sorry about the comment you had left in my front page ... It got deleted due to my "technology crisis" ... Whenever I add a new blog, I replace the front page, the comment was gone with it! Really sorry about that. I was happy you had fun reading!

kuttichuvaru said...

ப்ரச்னை தீர்ந்து போச்சு போல இருக்கு....... திரும்பவும் பழைய சரக்கு பார்க்க சந்தோஷம்.... நானும் ப்ரச்னை தீர்க்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்........

Dubukku said...

யாத்திரீகன் - ஆஹா ஐந்தாம் படைன்னா இதான் அர்த்தமா...கொண்டாடா ஆயிரம் பொற்காசுகளை..யாத்திரீகனுக்கு...

//ஊருக்கு வருவீங்கல்ல// - சவுண்டு வுடறதையாவது உங்க ஊர் பாஷையில "அவைங்க..இவைங்க..."ன்னு விடுங்கைய்யா..அதுக்கும் எங்கூர் "ல"வ ஏன் உயயோகப் படுத்திறீங்க??:)))))) . .வலைப்பதிவுல எங்காட்கள் அதிகம் தெரியுமில்ல....(எங்கைய்யா போனாங்க...நெல்லை சிங்கங்களெல்லாம்..ஒரு பயலையும் காணல...)

கொத்ஸ் - நூத்துக் கணக்குல பின்னூட்டம் வாங்குறவங்களுக்கு இம்புட்டு வயித்தெரிச்சல் ஆகாது சாமி...:))

RamachandranUsha - டாங்கஸ்...(இப்படி கூட பின்னூட்டம் போடலாம்னு இப்போத் தான் தெரிஞ்சிக்கிட்டேன் ;P)

Dubukku said...

நாகை சிவா - பிச்சையெடுக்கிறதையும் இவ்வள்வு கெத்தா உங்க ஊர்காரனால தான் சொல்லமுடியும்... (எலேய்...நெல்லை மக்கா...சீக்கிரம் வாங்கலே..இங்கே ஏகப்பட்ட ரகளை பண்ணிக்கிட்டிருக்கேன்)

SLN - அட நீங்க வேற...எடுத்துக் குடுக்காதீங்க...அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சுறும் அப்புறம் :)))

Venkatramani - யோவ் அதுக்கு பேர மாத்துங்கைய்யா...லண்டன் நல்ல ஊருங்கோவ்...
ஆறு பேரு - மன்னிச்சுக்கோங்க...ஏற்கனவே எப்படா அடிக்கலாம்னு காத்துக்கிட்டிருக்காங்க அதான் :)

WA - ஹா ஹா...காப்ரி திருந்திட்டாங்க...கூட்டணி புட்டுக்கிச்சா...

Dubukku said...

Anonymous - danks...peru podalamla (summa oru nick nameaavathu )

Jeevan - neenga endha murugan kovil sollareenga? naan engoorla nerya paarailerndhu kuthichirukken. Yes Karaiyar damlerndhu thaan aarambam

Uma - "முக்கா முக்கா மூனு தரம் " - உங்களுக்கும் தெரியுமா? ஹீ ஹீ ஒருவேளை திருநெல்வேலி மதுரையெல்லாம் பக்கம்ங்கிறதால இருக்கும். சாட் பூட் திரீ எங்கூர் சொத்துன்னு சொல்லலையே..??வைகை - ஹீ ஹீ வேற வழி??

Dubukku said...

Ambi - seekiram kalvettu pathikka erpadu pannu. Aana andha vaihaikkum enkitta kaasu kekatha ;P
Lovely memoirs of Thamirabarani hmmm

Uma Krishna - ரொம்ப ரொம்ப நன்றி..சே என்ன தான் கமெண்டுல காலவாரிவிட்டாலும் வோட்டுப் போட்டு கலக்கிட்டீங்க...அங்க நிக்கிறீங்க நீங்க ரொம்ப டேங்க்ஸ் !!!

Dubukku said...

Madura - ரொம்ப நன்றி நம்ம பேட்டை பக்கம் வந்ததுக்கு. உங்க "Strangers who haunt my memories" உண்மையிலேயே ரொம்ப பிடிச்சது எனக்கு. அதுல எல்லாமே ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!

Kuttichuvaru - டேங்கஸ்..சீக்கிரம் நீங்களும் வெளிய வாங்க....

Anonymous said...

Capri thirundheetaangalaa? Idhu periya insult, she is gonna be so hurt and upset when she find out what all you are saying :)

PS: Kootani ellam odaiyale, she will be back soon

capriciously_me said...

annen, idhu anbala thaana sendha kootani...never break! naan illadha neram paathu u kindaling uma...not nice....

uma, office-la blog padikaradhu konjam kashtam aayiduchu...neriya velai :( will ottify annen in full swing later today :)

Anonymous said...

hmm naanga madras dhan aanalum sha boo thri, kallanga, pallankuzhi, alice boys(:-)), kalla manna, regular paandi(righta rightu), aeroplane paandi ellam velayadi irukkom

anaalum neenga town pasanga mattum dhan mannin maindhargalnnu maarthatta koodadhu :p

-bt

Kumari said...

Kalakiteenga!
Tirnelveli-la irundhu Srivaikundam pogum podhu, andha chinna paalathu mela bus erum podhu, andha paalathai thottutu pora tamirabaraniai parkaradhukke naan jannal seatukku sandai poduven :p

Nadula konja naal thanni avlo odala. Ippo rendu varushama penja mazhaikku thirumba pazhaiya mathiri irukkanum.

Hmm..eppo oorukku povomo:(

[ 'b u s p a s s' ] said...

//கொக்கி குமார்//
:)

ஹம்ம்ம்..
எதுக்கு sound உடுறீங்கன்னே தெரியலையே..
நீங்க எங்க ஊரு ஆறு கிட்ட போனாலே மூக்கு மேல விரல வச்சிட்டுதான் போகனும்...

Anonymous said...

Goodness, i feel so left out. Everyone's laughing at this entry. Sigh. I read it but don't quite understand everything except the one and two.. Big sigh. Oh, never mind.

Syam said...

// "லண்டனில் வேலை பார்க்கிறேன்" என்று சொல்ல...அந்த விட்டுக் குழந்தைகள் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தன//

நான் நல்லா வாய் விட்டு சிரிச்சேன்...கொக்கி சூப்பருங்னா :-)

Geetha Sambasivam said...

டுபுக்கு,
கலக்குங்க. ஆனா இந்த "சாட்,பூட், த்ரீ" உங்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. நாங்களும் இருக்கோம். வேணும்னா அம்பியோட அம்மாவைக் கேளுங்க. அப்புறம் எங்க "வைகை" பத்திக் கமெண்ட் அடிச்சதுக்கு உங்க பேச்சு "கா"

Anonymous said...

dubukku annachi,enna pootila thothuteenga ploa eruku?en valzthukal

Anonymous said...

dubukku annachi,enna pootila thothuteenga ploa eruku?en valzthukal

Dubukku said...

WA - enna udane poi kootitu vandhuteenga pola irukku unga sanga thalaviya?

Capri - vaamma minnal..konja naala aala kanomenu parthikkitu irundhen.Habba unga officela nalla velai senjanga :P

bt- haiyooo kochikatheenga :) konjam (vazhakkam pola) over buildup aahidichu

Kumari - //Nadula konja naal thanni avlo odala// - itheyenga sabaila solreenga...kavuthiruveenga pola irukke :)
//Ippo rendu varushama penja mazhaikku thirumba pazhaiya mathiri irukkanum// - naan kettu thaanga postee pottenga ...soopera thanni odutham

Dubukku said...

buspass - வாங்க என்ன ஆளே காணோம் கொஞ்ச நாளா?
//எதுக்கு sound உடுறீங்கன்னே தெரியலையே..//:)))

கூவததைப் பத்தி சொல்லவேவேண்டாம் சரித்திரப் புகழ் வாய்ந்த ஆறாச்சே அது.

thewoman - Ohh sorry. I am amazed with your level of spirit in leavinga comment here. I am very guilty for reciprocating this gesture (with you and many others who leave comment here) **sigh**

Geetha - வாங்க...சரி சரி சொத்துல பங்கு குடுத்திருவோம் ஆனா வைகை பத்தி உங்காளே ஒருத்தர் ஒத்துக்கிட்டாங்க...நீங்க லேட்...

Dubukku said...

anonymous - danks danks...unga anba paarthu romba pullarichu poiytenga... idhukku adutha post parunga...ungala thaan special mention panni irukken :))

Post a Comment

Related Posts