Sunday, June 18, 2006

தி டாவின்சி கோட்

பொதுவாக நல்ல படங்கள் என பேசப்படும் படங்களைப் பார்ப்பதற்கு முன் விமர்சனஙகள் எதையும் படிக்க மாட்டேன். கதை தெரிந்துவிடும் அபாயம் இருந்தால் அந்தப் பக்கமே தலைவைக்க மாட்டேன். "நல்ல பிரிண்ட் தானா?? கொஞ்சம் போட்டுக் காடுங்க" என்று வழக்கமாக தொனதொனக்கும் நச்சரிப்பு இந்தப் படங்களுக்கு இருக்காது. இந்தப் படத்துக்கு இதையெல்லாம் சமாளிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் சமாளித்துவிட்டேன். யேசுவுக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதைத் தவிர ரொம்ப விஷயம் தெரியாமல் பார்க்க ஆரம்பித்தேன்.


கிறுத்துவர்களையும், கத்தோலிக்க குருமார்களையும் பற்றி இந்த கதைக் கரு அவதூறு பரப்புகிறது என்ற சீரியஸான வாதங்களுக்குள் போகாமல் அண்ட்ராயர் தெரிய லுங்கி கட்டிக் கொண்டு பீடி வலித்துக் கொண்டு ஃபீலீங்காய் படம் பார்க்கும் சராசரி "C" சென்டர் குடிமகனாகவே எனது விமர்சனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக வெகுசில கதைக் களம் மற்றும் முடிச்சுக்களே (ஸ்டோரி நாட்) "அட இன்னமா யோசிச்சிருக்கான்பா" என்று சொல்ல வைக்கும். இந்த கதையும் என்னைப் பொறுத்த வரை அந்த ரகம். பொய் சொன்னாலும் கிரியேட்டிவிட்டியோடு சொன்னால் தான் ரசிக்க முடியும். அதில் கதாசிரியர் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் சில இடங்களில் அதுவே சறுக்கியதாகவும் உணர்ந்தேன். மேரி மெடலினின் தொடர்புகளை நம்ப வைப்பதற்காக காட்டும் ஆதாரங்களும் சம்பவங்களும் எனக்கு அத்தனை கன்வின்ஸிங்காக இல்லை. ஆனால் இவை கதையை தொய்யவிடாமல் திரைக்கதையை நன்றாக அமைத்திருக்கிறார்கள். டாம் ஹேன்க்ஸின் நடிப்பு பற்றி சொல்லவேண்டியதே இல்லை. மனுஷன் வழக்கம் போல் படம் நெடுக கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படத்தில் எனக்கு ஒளியமைப்பும் மிகவும் பிடித்தது. ஒளியமைப்பு காட்சிகளுக்கு கூடுதல் வெயிட் தருகிறது.(நோண்டி நொங்கெடுக்கும் சங்கம் மன்னிக்கவும்.. இப்படி எதாவது சொன்னாத் தான் பந்தாவா இருக்கும்).

டேன் ப்ரவுன் கதை எழுதும் போதே ஹாலிவுட்டுக்கு என்று மனதில் நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். உதவுதாக நடிக்கும் இயன் மெக்லீனும் அவரது கையாளும் அக்மார்க் ஹாலிவுட் ரகம். படத்தில் முதலில் ஹூட் எல்லாம் போட்டுக்கொண்டு கொலையெல்லாம் செய்யும் சிலாஸ் வெறும் திகில் பங்களிப்புக்காவே கதை முழுவதும் வருகிறார். கேப்டனாக வரும் ஜீன் ரெனோவின் நடிப்பு எனக்கு பிடிக்கும் (காட்ஸில்லா). ஆனால் அவர் நடிப்புக்கு இந்தப் படத்தில் ரொம்ப தீனியில்லை.

டேன் ப்ரவுனின் நாவலை இன்னும் படிக்கவில்லை ஆனால் முடிவு ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது. அது தான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. சோபி தான் அந்த ஆதாரம் என்று சொல்லும் போது ஆச்சரியத்துக்கு பதில் தஙவேலு பட "அதான் எனக்குத் தெரியுமே" டயலாக் தான் வருகிறது. திரைகதையில் உள்ள மிகப் பெரிய ஓட்டை அதற்கப்புறம் வரும் மேரியின் சடலம் எங்கிருக்கிறது என்ற கடைசிக் காட்சி. சில விஷயங்களை என் பெண்டாட்டி பாத்திரம் தேய்ப்பது போல் ஓவராய் தேய்க்கக் கூடாது, என்னைப் போல் மேம்போக்காய் தேய்த்து விட்டு மீதியை பார்ப்பவர்களின் கற்பனைக்கு விட்டு விட வேண்டும். "நட்சத்திர கூரையின் கீழே" என்று உணர்ந்து டாம் கீழே பார்ப்பதாக முடித்திருந்திருக்கலாம்...அதை விடுத்து கிராபிக்ஸை தினித்து...ஹார்பிக் விளம்பரம் மாதிரி கீழே இருக்கும் பிரமிட்டுக்குள் நுழைந்து...அது சரி படத்துக்கு கொஞ்சம் திருஷ்டி வேண்டாமா?

நாவலை இன்னும் படிக்கவில்லை. படத்துக்காகவும் ஓஸி பார்ட்டிக்காவும் காத்திருந்தேன்..இனிமேல் கூடிய சீக்கிரம் படித்துவிடுவேன்.

20 comments:

துளசி கோபால் said...

நானும் எந்தப் படமும் பார்க்கறதுக்கு முன்னே விமரிசனம் படிக்க மாட்டேன்.
மனசு க்ளீன் ஸ்லேட்டா இருக்கணும்.

ஆனா........... இந்த விமரிசனத்தைப் படிச்சு(தொலைச்சு)ட்டேனே.

இப்ப நான் படம் பார்க்கறதா? வேணாமா?......

Balaji S Rajan said...

Yen paiyanum yemantha Da Vinci Code..nnu aarambichudaran....Book padikara alavukku porumai, time illai... atleast padam pakalamnu ninaikarane... Parkalam... Yenna vimarsanathula irangiteenga...

Jeevan said...

naan firstu Booka finish pannanum, apparam thaan padam pakknum. naan padiche mudikarathukkula yavathu, Tamil Nadu government ban'a release pannanum. Nalla vimarsanam.

ambi said...

//நோண்டி நொங்கெடுக்கும் சங்கம் மன்னிக்கவும்.. இப்படி எதாவது சொன்னாத் தான் பந்தாவா இருக்கும்).//

hahaaa.. LOL :)

//என்னைப் போல் மேம்போக்காய் தேய்த்து விட்டு//
superrrr. vera enna velai ellaam anga nadakuthuu nu konjam solli irukkalaam.. :) ROTFL..

Anonymous said...

naanum padam pathen controversiala romba ellai,neenga Omen padam pathutengala,pakalaina antha pakam pogathenga,nama oor janma natchathram kathai than,oru scene vidama apdiye copy

expertdabbler said...
This comment has been removed by a blog administrator.
expertdabbler said...

naan bok padichen. padam parkara madhiri idea illai

Actualla, Book kadhai arambam ellam pramaadham...knots um supera irukkum.. kadasila ending dhaan hindi masala padam madhiri irukum...i was a bit put off by that in the book

மு.கார்த்திகேயன் said...

அம்பியின் (உங்கள் விளம்பர பிரிவில் ஒரு ஆள் போல :-)) ) வழி காட்டுதலில் இங்கே..உங்களின் பதிவுகள் நகைச்சுவை உணர்வுகள் மிகுதியாக இருந்தாலும் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி விடுகின்றன

//நோண்டி நொங்கெடுக்கும் சங்கம் மன்னிக்கவும்.. இப்படி எதாவது சொன்னாத் தான் பந்தாவா இருக்கும்).//

ரொம்ப ரசிக்கக் கூடிய வார்த்தைகள்..

Ananthoo said...

actually book was sooper..movie is no patch on the book..and some compromises in the movie too have reduced the creativity..iam told the prequel(but came after da vinci code) - angels n demons is better..
still a good movie to watch..
ofcourse ur vimarsanam vimarisayai illatalum was good..

SLN said...

I havent seen the movie yet, but enjoyed the book very much. The freedom to build the characters and develop the plot available in a novel is not available in a movie. When you read the novel, you will probably get the answers for the flaws you pointed out.

Cheers
SLN

Anonymous said...

D'oh. Neither have I read the book nor watch the movie. Not going to either. I'd rather read your blog and look at the pictures you post :P Hehehe.

Missed being here. Have a nice day.

Anonymous said...

Kitta thaati paadhi review padichadhukkapram, "Enna innum nakkal vidama romba chamatha ezhudhirukkare?" nu nenaichen.

"சில விஷயங்களை என் பெண்டாட்டி பாத்திரம் தேய்ப்பது போல் ஓவராய் தேய்க்கக் கூடாது, என்னைப் போல் மேம்போக்காய் தேய்த்து விட்டு மீதியை பார்ப்பவர்களின் கற்பனைக்கு விட்டு விட வேண்டும். "

:)

Book - ellarum padikkarangalenu vena padikkalam. Nothing special.

Oliamaippu, sorry, nichayam solliye theeranum, museum-la periya periya lighting equipmentellam artwork kitta allow panna mudiyadhunnu sollitaangalam. Andhan konjam dull!

Dubukku said...

துளசி கோபால் -அட நீங்களும் நம்மள மாதிரி தானா? ஆமா இத எப்படி படிச்சீங்க....இதுக்காகவே நான் ரொம்ப கதைய சொல்லமாட்டேன்... :)

Balaji - haha padam oru tharam parkalam nalla irukku. vimarsanam - summa thaan en bore adikutha? ;p

Jeevan - ban thevai illathathunu ennoda karuthu. Book romba nalla irukkunu neraya per inga solli irukanga...naanum padikanum

ambi - //vera enna velai ellaam anga nadakuthuu nu konjam solli irukkalaam.// - :)) all in the game mate

anonymous - I though Omen (original) was before Janma natchathram. Janma natchathram thaan Omen parthu copy nenaichen
I am talking about the original one not the latest one.

PK - book padikanum. Yes ending was a bit very cinematic enakkum romba pidikala.

Karthikeyan - Welcome here.வாங்க வாங்க...அம்பி சொன்னாரா...

//சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி விடுகின்றன// - ஹீ ஹீ இந்த விஷயம் எனக்கே இப்போத் தான் தெரியும் :P

Ananthoo - Angels n demons - danks will try to watch that as well.
///ofcourse ur vimarsanam vimarisayai illatalum was good.// - ungalukaga thane oliamaipu patthilam solli irukken...kavuthiteengale thala

Dubukku said...

SLN - yes you are right visualisation is a bit difficult. thanks. will certainly try to read that book.

thewoman - ///Missed being here/// - haiyooo you made my day...kalasiteenga ponga...have a great day

Babble - நீங்க எல்லாரும் சொல்லியிருக்கறத்ப் பார்த்தா நாவல் நல்லாயிருக்கும்ன்னு நினைக்கிறேன். அந்த பாப்பப் தொல்லை ஸ்டேட் counternala வருதுனு நினைக்கிறேன். சீக்கிரம் எடுத்திடறேன்


Krithiga - :) ada unmaiyava...anaa andha lightingum nalla thaan irundhathu...enakku romba pidichathu :)))

Anonymous said...

Da Vinci Code book padicha piraghu padham avalavu nalla illai... book padikubodhu namba neraya imagine panna vendi irrukku.. adhai ellam screen-la paakumbodhu avalavu impressive-aagha illai.. anyway, padham paakum munnadi book padikaradhu nalladhu....

Anonymous said...

Indha padathukku munnadi "National Treasure" vandhadhu - idhe ragam thaan, neraiya similarities - aana by comparison, N.Treasure DVC-a vida rombave nalla irundhadhu (Oliamaippu, etc :))

Anonymous said...

The Da vinci code Tamil Dubbed Movie ( தி டாவின்சி கோட் திரைப்படம் )

Anonymous said...

The Da vinci code Tamil Dubbed Movie ( தி டாவின்சி கோட் திரைப்படம் )

Anonymous said...

The Da vinci code Tamil Dubbed Movie ( தி டாவின்சி கோட் திரைப்படம் )

Anonymous said...

The Da vinci code Tamil Dubbed Movie ( தி டாவின்சி கோட் திரைப்படம் )

Post a Comment

Related Posts