Monday, June 05, 2006

புதுப்பேட்டை

நாராயணின் நிழலுகக்த்தைப் பற்றிய பதிவைப் படித்ததிலிருந்தே "புதுப்பேட்டை" படத்தை ரொம்ப எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். செல்வராகவனின் ஸ்கிரீன் ப்ளே அலுக்காமல் இருக்கும் என்ற நம்பிக்கை வேறு. ஒரு படம் பார்ப்பதற்குண்டான எந்த ஆம்பியன்ஸும் இல்லாமல் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு பஸ்ஸில் போகும் போது பார்ப்பது மாதிரி பார்த்துத் தொலைத்தேன். நல்ல படங்களையெல்லாம் ஒரிஜினல் டி.வி.டியில் தான் பார்ப்பது என்ற கொள்கையை காலி செய்து, சொத்தை டி.வி.டியில் பார்த்தது அடுத்த தப்பு. எனக்குப் படம் பார்க்கும் போது காட்சியில் பேக்கிரவுண்டில் கூடையில் காய்கறி விக்கும் அம்மணி முதற்கொண்டு எல்லோரும் என்ன சொன்னார்கள் என்று புரிந்து பார்க்கவேண்டும் இல்லாவிட்டால் ர்ரிப்பீட்டு தான். இதனாலேயே இரண்டு மணி நேர படம் மூனேமுக்கால் மணி நேரம் ஓடும் எங்கள் வீட்டில். என் நேரம் இந்த டி.விடியில் ரீவைண்ட் வேலை செய்யவில்லை.

நல்ல படமா, சரி போடுங்கள் பார்ப்போம் என்று தங்கமணி மிக்ஸியில் தோசைக்கு அரைக்கப் போய்விட்டார். பேக்கிரவுண்டில் மிக்ஸி சத்தத்தில் வீட்டிலிருந்த வாண்டுகள் குறுக்கேயும் நெடுக்கேயும் ஓட குடும்பஸ்தனாய் படம் பார்ப்பதே சூப்பர் அனுபவம். நல்ல படமும் வெறுத்து போய்விடும். நடு நடுவே போய் சாம்பாருக்கு உப்பு பார்ப்பது, கேஸை அணைத்துவிட்டு வருவது, துணி காயப் போட்டிருப்பதால் மழை வருதா என்று அடிக்கடி ஒரு லுக்கு விடுவது, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடுவது என்று ஏகப்பட்ட அடிஷனல் டியூட்டிகளை எடுத்துக் கொண்டு படம் பார்ப்பது இன்னும் விசேஷம்.

ஸ்கெட்சு போடுவது, போட்டுத் தள்ளுவது, மற்றும் இன்ன பிற தாத்பரியங்களை நாராயணின் பதிவிலிருந்து புரிந்து கொண்டு பார்த்ததால் இத்தனை இம்சைகளுக்கும் நடுவில் விஷயங்கள் முதலிலிருந்தே புரிந்தது. கதையை எதார்த்தமாக ஆரம்பித்து கொண்டு செல்வதே நன்றாக இருந்தது. ஸ்க்ரீன்ப்ளே நன்றாக இருந்தாலும் கொஞ்சம் ஓவர் காரமாக இருந்தமாதிரி தோன்றியது -அல்லது அது பட்டியல், தலைநகரம், சித்திரம் பேசுதடி என்று ஒரே ரவுடிகளைப் பற்றிய படமாய் பார்த்ததினால் வந்த அலுப்பாக இருக்கலாம். யுவன் வழக்கம் போல் தூள் கிளப்பியிருக்கிறார். படத்தை விட பாடல்கள் தான் மிகப் பிடித்தது. ஒரே ஒரு பாட்டில் மட்டும் "காசு மேலே காசு வந்து" சாயல் லேசாக வருகிறது. பாதி வரை படம் எப்படி போகும் என்று ஈ.ஸியாக ஊகிக்க முடிகிறது. எதிர் கோஷ்டியாயிருந்தாலும் ரவுடிகள் எல்லோரும் ஹோல்சேலில் கத்தி வாங்கி வந்தமாதிரி எல்லோரும் ஒரே விதமான கத்தியை வைத்துக் கொண்டிருப்பது...ராஜா கால சண்டையில் வருவது மாதிரி இருக்கிறது. தனுஷ் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். "தொண்டையில் ஆப்ரேஷன் காசு கொடு" என்று சொல்வது கலக்கல் :)

ஸ்னேகா கலக்கியிருப்பார் என்று ரொம்ப எதிர்பார்த்தேன். வரும் நாலைந்துக் காட்சியில் சும்மா பல்லைக் கடித்துக் கொண்டு அழுகிறார். சே இவ்வளவு தானா என்று அலுத்துக் கொள்ளும் போது சோனியா அகர்வால் நுழைகிறார். சும்மாவே சோனியா சிரிக்க மாட்டார் அதுவும் செல்வராகவன் படத்தில் சிரிக்கவா போகிறார் என்று நினைத்தது தப்பவே இல்லை. இரண்டு பேரும் என் இரண்டாவது பெண் சாப்பிட அழுவதைவிட அழுகிறார்கள்.

அடப் போங்கடா நானே பெரிய ரவுடி நிறையபோட்டுத் தள்ளியிருக்கேன் என்று ரவுசு விட்டதில் சாயங்காலம் வாஷிங் மிஷினில் நிறைய போட்டுத் தள்ளவேண்டிய டியூட்டி சேர்ந்து கொண்டது தான் மிச்சம். படம் ஓ.கே. ரகம். நான் எதிர்பார்த்த அளவு தீனியில்லை. இப்போதைய திரைப்பட ட்ரெண்டின் படி கடைசியில் ரவுடியைப் போட்டுத் தள்ளிவிடப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அந்த ரவுடி இப்போது நிறைய கல்வி நிறுவனங்களை நடத்திவருகிறார் என்று ஸ்லைடு போடுகிறார்கள். நாராயணன் சொன்ன ஆள் தானா அது?

18 comments:

SnackDragon said...

டுபுக்கு,
எனக்கென்னவோ முதல் பாதி ஓகே-ங்குறமதிரியும் இரண்டாம் பாதி முழுச்சொதப்பல் என்றும் பட்டது. எல்லாமே வித்தியாசமாய் எடுக்கலாம்தான், அதற்கான திரைக்கதையில் கவன் செலுத்தவில்லை என்று பட்டது. மொத்தமாய் பார்த்தா, தனுஷ்-க்கு பாட்ஷா கேரக்டர் கொஞ்சங்கூட செட் ஆகலை, குறிப்பா இரண்டாம் பாதியில்.

Anonymous said...

ஆகா பட விமர்சனங்கற பேர்ல, ஆரம்பத்தில மிக்ஸி சத்தம் அது இதுன்னு கொஞ்சம் ஒவரா மூக்கால அழுதுருக்கா மாதிரி இருக்கே. தங்கமணி படிச்சுட்டாங்களா இதை?

லதா said...

இந்தப் பதிவில் வழக்கமான டுபுக்கு டச் மிஸ்ஸிங்.
நான் இன்னும் அந்தப் படம் பார்ர்கவில்லை
பதிவும் படம் போலவே இருந்தது என்று எழுதலாமா ?

:-)

ambi said...

review konjam detailaa irunthrukalaame..? ethoo miss aaguthu...

Anonymous said...

dubukku,
ungalku enn padam pidikavilainu theriyalai,ennai porutha varai padam romba nalla erunthathu,second half konjam eluthutu ponalum padam nallave erunthuthu

Jeevan said...

Hi Dubukku eppadi irukkenga, Balaji sonnaru nenga ennodaiya videova parthinganu.

Vara vara intha roudyinga thollai thanga mudiyala, entha pakkam thirubinalum ora roudyinga. Nalla pottu thalierukenga vemarsanatha.

நெல்லைக் கிறுக்கன் said...

யுவன் ரீ ரெக்கார்டிங்குல பிரிச்சு மேஞ்சிருக்காரு கேட்டீரா. அவுங்க அய்யா மாரியே சிம்பொனில கலக்கிபுட்டாரு. படத்துல ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், இசை எல்லாத்தயும் பாக்கும் போது நம்ம பயலுவ ஹாலிவுட்காரனுகளுக்கு இணையா வளந்திருக்கானுவ. ஆனா கதை தான் குப்பை. நம்ம உலக நாயகன் ஒரு பாட்டு பாடிருக்காரே கேட்டீரா..?

Anonymous said...

I remember reading in a magazine about some character writing comments in blog world in the name of others. I feel Dubukku, that character has entered this post also. when I was reveiwing the comments, I was taken aback by this particular one in the name of Doondu. Blog world is one where comments are encouraged from others unless and untill it does not cross the limits of decency. Please moderate....

Let these characters does not spoil the spirit of blogging from persons like you whom many people like me enjoy reading.. I refrain from putting my name as I dont' want this character to use my name in posting comments on my name.

Unknown said...

//அடப் போங்கடா நானே பெரிய ரவுடி நிறையபோட்டுத் தள்ளியிருக்கேன் என்று ரவுசு விட்டதில் சாயங்காலம் வாஷிங் மிஷினில் நிறைய போட்டுத் தள்ளவேண்டிய டியூட்டி சேர்ந்து கொண்டது தான் மிச்சம். //

எப்படிங்க இப்படியெல்லாம் எழுதறீங்க. உங்க ஒவ்வொரு பதிவையும் படிச்சப்பறம் மனசு லேசாயிடுது. Hats off to you!

Unknown said...

dubuks, even in these days, you don't have moderation enabled? dhillu dhan.

Anonymous said...

Dhillaa illa naiveity-aa? I wonder

Anonymous said...

offtrac. "Thenkoodu" has featured your blog as blog of the day today-07 Jun
*********
மூன்று ஆண்டுக‌ளுக்கும் மேலாக டுபுக்கு என்னும் மெட்ராஸ் மரூஉவிற்கு மரியாதைத் தேடித் தந்து கொண்டிருப்பவர். சென்னை மொழியில் டுபுக்கு என்றால் 'புத்திசாலி மடையன்', 'சமத்து அசமஞ்சம்' என்று பல பொருள்படுவது போல் வலைப்பதிவின் டுபுக்கும் நையாண்டி, விஞ்ஞானச் சிறுகதை, திரை விமர்சனம், சொந்தக் கதை, லண்டன் அனுபவங்கள் என்று பல்சுவை வித்தகர்.
வாய் விட்டு சிரிக்க வைக்கும் பதிவுகளை எழுதுவதுடன் நிற்காமல் திருநெல்வேலியின் கமகம பாயாசத்துடன் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக தற்போது வசிக்கும் இங்கிலாந்தில் விருந்துகளும் முனைப்போடு அமைப்பவர்.
'சிறந்த தமிழ்ப்பதிவிற்கான இண்டிப்ளாக்ஸ்' கருத்துக் கணிப்பில் இரண்டு முறை நூலிழையில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டவர். சென்னை பாஷைக்காகவே Tamil Slangs என்னும் அகரமுதலியைத் தொகுத்தும் வருகிறார். அவர் வணங்கும் மகராசிகளின் அருள் கைகூடியவுடன் கூடிய சீக்கிரமே டுபுக்கு உலகத்துக்குள் புகுவதாக இருந்தாலும், The Think Tankஇல் நகைச்சுவையையேப் பிரதானமான அஸ்திரமாகக் கொண்டு பூத்தொடுத்து வருகிறார்.
டுபுக்கு, தமிழ் வலைப்பதிவுகளை தேஸிபண்டிட்டில் பரிந்துரைத்து பரவலான வாசிப்புக்குப் பகிர்ந்து கொள்கிறார்.
ப‌டிக்க‌:
Dubukku- The Think Tank

**********

Kumari said...

Padam parthu mudinjadhum, oru niraive illai :( Second half bayangara iLuvai. Enga veetu kaZhi kooda ivlo mosama irunthathu illai.

Dhanush nalla nadichiruthan but sila idangaLil, over acting :(

Padatha vida, unga nyandi superab!

Dubukku said...

KarthikRamas - எனக்கு இரண்டாம் பகுதி பதிவில் சொன்ன மாதிரி கொஞ்சம் அலுத்துவிட்டது. தனுஷ் தான் நடிச்சிருக்கார் என்பதால முதல்லயே (அவர் உடம்பை பற்றி) தகுந்த எதிர்பார்ப்போடு தான் பார்த்தேன் :)

WA- வாங்க வாங்க...இன்னிக்கு விளையாட்ட இப்படி ஆரம்பிக்கிறீங்களா...ஓ யெஸ் தங்கமணி படிச்சுட்டாங்க...

லதா - ரொம்ப சரிங்க..தாராளமா சொல்லலாம்...எனக்கும் மனசு ஒப்பவே இல்லை...பதிவு போடனுமேங்கிற பிரஷ்ஷர்ல போட்டுட்டேன்...சுட்டிக் காட்டியதற்கு ரொம்ப நன்றி இனி கவனமா இருக்க முயற்சி செய்கிறேன்.

ambi- hmm may be. But I was not aiming for a detailed review...rather the my experience of watching the movie :)

Anonymous - Naan nalla illanu sollave illaye? Overall rating padam oK. Ana indha rowdism konjam bore adikka arambichiduchu...that might be bcos I watched too many films in the same lines. But I like Selvaraghavan for his screen play in general.

Jeevan - hello mate..how are you? yes unga video parthen. Keyboard lam kalaki irukeenga :) supera irundhuthu neenga vasichathu

Dubukku said...

நெல்லைகிறுக்கன் - யுவன் பின்னிப் பெடலெடுத்திருக்கார்...தலைவர் பாட்டு கேக்காமலயா? சுப்பரப்பூ....:))

anonymous - yes its very sad to note this kind of hatred. I just wish this hatred vanishes off soon. Comment moderation through email is a bit overhead for me else would have opted for it. Will wait and watch and will go for that option if need be. Let see..

lord Labakkudoss - I was looking for Selvaraghavan's screenplay more than Dhanush. Ofcourse Selvaraghavan was not disappointing but I was a bit bored with the rowdy stuff and felt that second part could have been more interesting

Venkatramani - vanga vanga danks.
Dhillu lam illenga. Email comment moderation is a bit pain for me at the moment else would have gone for that option let me see..

WA- As mentioned above its just a overhead for me at the moment else would have gone for that option. Let me see how this goes else will choose that option. But am curious why you have not opted for it ? :P

Dubukku said...

anonymous - wow danks very much!! I didn't take a note until you told me. Thanks again

Kumari - danks. yes thats the feeling I also got. Dont know what excatly was I looking for but had the same feeling. Unga veetu kaZhi soopera irukkum pola :)

Anonymous said...

the reason me hasn't opted for it... Me not popular enough like you :D So indha kavalai ellam nahi :D

யாத்ரீகன் said...

நாரயணின் பதிவு கிடைத்தமைக்கு நன்றி...

>> அடப் போங்கடா நானே பெரிய ரவுடி நிறையபோட்டுத் தள்ளியிருக்கேன் என்று ரவுசு விட்டதில் சாயங்காலம் வாஷிங் மிஷினில் நிறைய போட்டுத் தள்ளவேண்டிய <<<<

:-))))))))

ஒவ்வொரு தியேட்டர்களிலும்.. ஒவ்வொரு ஷோக்களிலும் ஆப்பரேட்டர்களே நிறைய கட் செய்து விட்டதனால் படம் சுவாரசியம் நிறையவே இழந்துவிட்டிருந்தது.. செல்வாவின் முழு வெர்ஷன் கிடைக்க காத்திருக்கின்றேன்..

Post a Comment

Related Posts