Wednesday, December 11, 2013

பதிற்றுப் பத்து

பதின்ம வயது(டீன் ஏஜ்) போய் the so called யூத்தாகிக் கொண்டிருக்கிறேனோ என்பதற்கு ஏகப்பட்ட அறிகுறிகள் தென்படுகின்றன கவலையாய் இருக்கிறது.
a. பேஸ்புக் மற்றும் சாட்டில் ஹார்ட் படம் போட்டு நடுவில் அம்புக்குறி துளைத்த படம் எப்படிப் போடுவது என்பது இன்னும் பிடிபடவே இல்லை. அதே போல் கட்டை விரலைத் தூக்கிக் காட்டி லைக் போடும் படமும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. கொடுமை என்னவென்றால் கண்ணடிக்கும் ஸ்மைலி தவிர எந்த ஸ்மைலி பட ஷார்ட்கட்டும் மனதில் நிற்பதே இல்லை.
b. எப்பேற்பட்ட அரதப் படத்தையும் கடைசி கிரெடிட்ஸ் போடுவது வரை பார்த்த காலம் போய், இப்போதெல்லாம் மொக்கைப் படம் போட்ட பத்து நிமிஷத்திலேயே தூக்கம் வந்துவிடுகிறது
c. ROFLMAXXXX என்பதையாவது ஊகிக்க முடிகிறது. மற்ற சேட் சிலாங்ஸ்லாம் முழி பிதுங்கிறது. LOL, கொல்-ன்னு சிம்பிளாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
d. பொண்டாட்டி கூட ஷாப்பிங் போனா அடிக்கடி உச்சா வந்துவிடுகிறது.
e. எல்லாவற்றையும் சுருக்கி எழுதுகிறேன் பேர்வழின்னு come என்பதை cum என்று எழுதினால் கூப்பிட்டு காதைத் திருகத் தோன்றுகிறது
f. நல்ல முருகலா வார்த்துப் போடு என்று வக்கணையாய் நாக்கு கேட்கிறது. இன்னிக்கு என்ன சமைக்க என்ற தங்கமணித் தருணங்களில் டாண் டாணென்று விதவிதமாய் விவரிக்க முடிகிறது.
g. அட இன்னும் ஒரு முடி கூட நரைக்கலையே காத்ரேஜ் டையான்னு கேட்டால் கோபம் வருகிறது. நான் ஒன்லி shampoo basedன்னு கத்தத் தோன்றுகிறது
h. இப்போவெல்லாம் அடிக்கடி வீக்கெண்டுகளில் குளிக்கத் தோன்றுகிறது. டிபன் சாப்பிட்டால் டீக்கு மனம் ஆலாய் பறக்கிறது. Self-reliance-ஐ முன்னிருத்தி அட்டகாசமான டீ போடும் கலை கைவசமாகிக் கொண்டிருக்கிறது. ஊரில் வீட்டிற்கு யார் வந்தாலும் காப்பி குடிக்கிறேளா, சூப்பராய் போடுவேன் குடிக்காம போகக் கூடாது என்று உபசரிக்கும் டிகாக்க்ஷன் மாமாக்கள் நினைவுக்கு வருகிறார்கள்.
i. ஜிம்முக்கு போகவேண்டிய நாட்களில் எப்படியாவது சுண்டுவிரலில் சுளுக்கு வந்து தொலைத்துவிடுகிறது. கொடுமை என்னவென்றால் தங்கமணி அதை நம்ப மறுக்கிறார். ஜிம்மில பெருசு பெருசா டிவி வைச்சிருக்கீங்களேடா இப்படி ஐயோ ராமான்னு கத்தற இங்கிலீஷ் பாட்டப் போடாம, நல்ல படமும், கால நீட்டி உட்கார்ந்து பார்க்கிறதுக்கு ஒரு பென்ச்சும் போட்டா குறைஞ்சா போயிடுவீங்க, காசு வாங்குறீங்களே தவிர கஸ்டமர் சர்வீஸ் இல்லையேப்பான்னு கம்ப்ளைண்ட் பண்ணத் தோன்றுகிறது.
j. பெண்டாட்டி ட்ரஸ் செலெக்ட் செய்தது போய் எனக்கு இப்போது மூத்த பெண்ணும் ட்ரெஸ் செலக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார், டைட்டன் வாட்ச் டாடி ஏனோ நினைவுக்கு வருகிறார். ஹூம்ம் இனிமேல் தான் ஸூடுலில் உட்கார்ந்து கொண்டு பியானா வாசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்
ஆனால் அதே சமயம் curious case of Benjamin Button மாதிரி இளமை திரும்பிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளும் நிறையவே தெரிகின்றன.
1. பிடிக்கவே பிடிக்காத இங்கிலீஸ் பாப் இசை ரகம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கிறது. வீடியோவில் ஷகிரா யாரு ரியானா யாரு பியான்ஸே யாருன்னு டக்கு டக்குன்னு சொல்லி விடுகிறேன்.
2. யாராவது ஊஞ்சலில் ஆடுவதைப் பார்தாலே தலை சுற்றுவது போய் இதெல்லாம் ஜுஜுபி லெஃப்ட் ஹேண்டால அசால்டா சுத்துவேன்ன்னு இப்போதெல்லாம் தீம் பார்க் ரைடுகளில் தெகிரியமாய் ஏறி மனம் குதூகலிக்கிறது.
3. சாயம் போன ஜீன்ஸெல்லாம் போடப் பிடிக்கிறது. அதுவும் நன்றாக இருப்பதாக நிறைய பேர்கள் (அதாவது பெண்கள்) கூறுகிறார்கள்.
4. ராக்கோழி மாதிரி எத்தனை மணி வரை வேண்டுமானாலும் முழிக்க முடிகிறது ஆனால் இந்த மிட்நைட் காலை ஆறரை மணிக்கு எழுந்திரிப்பதற்குத் தான்...ம்ஹூம்.. இன்னும் ஒரு பத்து நிமிஷம் ப்ளீஸ், அப்பவே எழுந்தாச்சுமா இன்னிக்கு என்னல்லாம் வேலைன்னு அப்படியே ப்ளான் பண்றேன்... சனியன் பிடிச்ச கடிகாரம், காலையில் மட்டும் ஒரு பத்து நிமிஷம் லேட்டா ஓடினாத் தான் என்ன.
9. சமந்தா போய் இப்போதெல்லாம் நஸ்ரியாவைப் பிடிக்கிறது. ஆனா நஸ்ரியாக்கு உங்களப் பிடிக்கனுமே என்று கேட்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்னால் நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று கேட்கணும்ன்னு எம்ஜியார் சொல்லியிருக்கிறார்.
10. ஆபிஸ் பார்ட்டியில் "ஹே..." என்று செளஜன்யமாய் தோளை தட்டிக் கூப்பிட்டு பெண்கள் கடலை போடுகிறார்கள்.
(இதையெல்லாம் முதல் பத்தியில் சேர்க்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு மேலே சொன்ன ஐந்து ஆறு ஏழு- காரணங்கள் தெரியாமல் போகக் கடவது. சிரிப்பவர்களுக்கு காரணம் நம்பர் எட்டும் கூடுதலாய் காணாமல் போகக் கடவது)

19 comments:

Gopikaa said...
This comment has been removed by the author.
Mala said...

அதோட இல்ல..2003 லேர்ந்து 60, 70, 82 ன்னு எல்லாம் போஸ்ட் போட்டுட்டு இப்ப 16 ஆயிடுத்தே..:p
உங்களுக்கு இன்னும் 11, 12 பாயின்ட் லாம் (Font அல்ல ) இப்ப தெரியலையோன்னோ// அது போதும்!
பழிக்கு பழி.. நாங்க மட்டும் என்ன சாபம் விடத்தெரியாதவாளாக்கும் :p

Anonymous said...

point no.k. achacho gnyabaga maradhi kooda sendhuduthe..u left 5,6 and 8th point :)

h ku appuram j illiyo ;)

//first time commenter :) i've read all ur blog posts many number of times
when i'm stressed or upset//

Vijay Krishnan

Anonymous said...

பெண்டாட்டி ட்ரஸ் செலெக்ட் செய்தது போய் எனக்கு இப்போது முத்த (???) பெண்ணும்... :-) who is that?

Anonymous said...

Ada KadvulE,

Who am I who am I who am I?

A - yes, you are youth:-))) naanum dhaan...
B - you have become a true movie critic only now...
C - youth:-)))
D - It is becos Thangamani takes longer to shop:-))) use it as an excuse
E - I get completely annoyed, esp. when it is from female friends:-(((
F - naakkukku pidichathai thaane ketka mudiyum, that too, when the chef is awesome:-)))
G - mathavangalukku porAmai boss, free-a vidunga:-)))
H - Idhu pucca youth dhaan (adhuvum high 30s to early 40s):-)))
I - idhu namma veettil sagajamappA, paarthu paarthu pazhagi vittathu:-))) But, one question, adhu eppadi annikki mattum correctA...
J - seekkiram atleast pose pannavavathu kathukkonga - a daughter's first hero is her dad:-)))

1 to the rest - he he, trying to think, act, behave diff and casual - Enjoy:-)))

As always, enjoyed your write-up.

Shubha

Anonymous said...

Vaalzhukkal dubukku,
For a second I thought...'Sabam palichiduchinnu'
Regads,
-Vikram Balaji

Unknown said...

பதின்ம வயது, யூத்து ? நெனப்புதான் பொழப்ப கெடுக்குது :-) வயசு மட்டும் எப்பவும் ஏறிண்டேதான் இருக்கும் டுபுக்காரே ஒண்ணும் செய்ய முடியாது. But the realisation does hit you hard. I have realised, to my horror, that I am sounding and behaving more and more like my father !! As your children become teenagers, it will become even more obvious to you. Welcome to the 40s club. Lakshmi

Nat Sriram said...

அட்டகாசம் சார்..சில பதிவு ‘ச்சே, நான் எழுதிருக்கனும்’னு தோணும். அதில் இது ஒன்னு. ஆனா உங்க அளவுக்கு..என்னால..எப்படிப்பா..(ஸ்ரீவித்யா காதலுக்கு மரியாதை க்ளைமாக்ஸ் ரியாக்‌ஷன் சேர்த்துக்கொள்ளவும்) :))

balutanjore said...

dear dubuks
romba naal kalichu vandean
ungalukku 40 vayasu ayidutha
vaazhthukkal
naan ungalai vida chinnavan(57 vayasudan aachu vrs vaangiyachu)
thodarattum ezhuthu pani

anbuban balu bangalore

Shobana VR said...

Nazriya-ku unagala pudikanume ??? ... hahaha.... kelvikku nalla padhil koduthurukeenga :) :P

Anne said...

hahahahah

UPT

சுசி said...
This comment has been removed by the author.
சுசி said...

முன்பெல்லாம் தொலைதூர பஸ் பயணங்களில், இயற்கையை ரசித்தபடி, மனதிற்குள் கவிதை பாடியபடி செல்வேன். அப்போது அவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ள ப்ளாக் எல்லாம் கிடையாது.இப்போதெல்லாம் பஸ்ஸில் உட்கார்ந்த உடனேயே தூங்கிவிடுகிறேன். அட! வயசாயிடிச்சு ன்னு சொல்லிக்கறதுல என்ன சார் வெட்கம் ? :))

uthra said...

". ஊரில் வீட்டிற்கு யார் வந்தாலும் காப்பி குடிக்கிறேளா, சூப்பராய் போடுவேன் குடிக்காம போகக் கூடாது என்று உபசரிக்கும் டிகாக்க்ஷன் மாமாக்கள் நினைவுக்கு வருகிறார்கள்." ha ha ... super :)

Anonymous said...

Add emjoi keyboard settings in your iphone to get the icons other than smiley

Dubukku said...

Gopika - ஆஹா உங்க கமெண்ட அழிச்சிட்டீங்களா...என்ன போட்டீங்கன்னு மறந்து போச்சே சரி எதோ நல்லதா தான் சொன்னீங்க (இல்லன்னா நியாபகம் இருக்கும் :P) நன்றி

மாலா - கரெக்ட்டுத் தான் ஆனா இப்போ பாருங்க ரெண்டு வருஷத்திற்கு முன்னாடி இருந்த பதிவு நம்பர தொட்டுட்டேன். அடுத்த வருஷம் இன்னும் அதிகமா எழுத முயற்சிக்கலாம்ன்னு ஐடியா :) நீங்கள்லாம் சாபம் போடலாமா

அனானி - அட கரெக்ட்டா நோட் பண்ணியிருக்கீங்களே :)))) கேக்க நல்லாத் தான் இருக்கு ஆனா அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் :)

சுபா - ஆஹா இப்படி வரிக்கு வரி வாரணுமா? :)) ஆனா உங்க கமெண்ட வரிக்கு வரி ரசித்தேன். ஹா ஹா உங்க வீட்டுலயும் நமக்கு போட்டி பலமா இருக்கு போல இருக்கே :)))) மிக்க நன்றி

விக்ரம் - ஐயா......இன்னும் நாப்பது தொடல....அதுக்கு இருக்கு இன்னும் ஆஆஆஆஆஆறு......மாமாமா.....தங்க்ள்ள்ள்ள்ள்ள்ள் ;)

Lakshmi - நீங்க சொன்னது வரிக்கு வரி ஒத்துப் போகிறேன்...ஆனா....ஹி ஹி ஹி இருங்க இருங்க பொறுமை...பொறுமை இன்னும் உடம்புக்கு அந்த நாற்பது வர்றதுக்கு கொஞ்ச மாதங்கள் இருக்கு...அதுவரைக்கும் ... :)))) ஹா ஹா ஹா

Dubukku said...

Nat - யோவ் நட் ;) உம்ம பதிவ நான் படிச்சு கமெண்ட்டும் போட்டிருக்கேன்...அதுனால நான் தான் இப்போ ஸ்ரீவித்யா ஒக்கேவா..."உங்க அளவுக்கு..என்னால..எப்படிப்பா......." <> :))

பாலு - சார்...இல்ல சார் அவங்க பொய் சொல்றாங்க...நாற்பதுக்கு இன்னும் இருக்கு கொஞ்ச மாதங்கள். சார் உங்க வயசு தெரியாம ஏதாவது முன்னாடி பேசியிருந்தா அடியேனை மன்னிக்கவும்.

ஷோபன - ஹீ ஹீ ஹீ நஸ்ரியா ஆமா ஆமா <>>>

anne - நீங்க நல்லவரா ஸ்பாமா?

தானைத் தலைவி - அதானே வயசானத சொல்லிக்கிறதுல என்ன வெட்கம்...நீங்க தாராளமா சொல்லுங்க..யேய் எவனாவது தானைத் தலைவிய கேட்டீங்க அப்புறம்...அவ்வளவு தான் சொல்லிட்டேன் ஆமா....ஆனா இதுல பாருங்க யுவர் ஆனர் இங்க வயசே ஆகலையே.... :)))))

உத்ரா - ஆமாங்க சிரிக்காதீங்க... :)

அனானி - கண்டிப்பாங்க...ஆனா ஐபோன் யாரு வாங்கித் தருவாங்க :P (என்கிட்ட அண்டர்வேர் போன் தான் இருக்கு...i.e. android S3)

சுசி said...

//ஐயா......இன்னும் நாப்பது தொடல....அதுக்கு இருக்கு இன்னும் ஆஆஆஆஆஆறு......மாமாமா.....தங்க்ள்ள்ள்ள்ள்ள்ள் ;)// இது எத்தனை வருஷம் முன்னாடி!? :))

Kavitha said...

40 Blues!

Post a Comment

Related Posts