Thursday, October 10, 2013

கற்றதும் பெற்றதும் - Dubukku 10.0

இந்தப் பதிவு இந்த வலைத்தளத்தின் பத்தாவது அனிவெர்சரி அன்று பதிவதாய் இருந்தது. ஹீ ஹீ வழக்கம் போல....

2001ம் ஆண்டு  - இங்கிலாந்து வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று எழுத்துரு எல்லாம் நிறுவி இடுப்பழகி சிம்ரன் ஆப்பிள் சூஸ் குடிக்கும் போது செகெண்ட் ஹீரோயினை என்ன சொல்லி திட்டினார் என்று இணையத்தில் கிசு கிசு படித்த காலம். அப்போது தமிழ் யுனிகோட் வரவில்லை (வந்திருந்தாலும் என்னைப் போன்ற பாமரர்களிடையே பிரபலமடையாத ஒரு காலம்). எங்கிருந்தோ ஒரு தமிழ் நிரலி கிடைக்க, நாய் கையில் (அதாவது காலில்) கிடைத்த தேங்காய் மாதிரி உருட்டிக் கொண்டிருந்தேன். அப்படியே பிரவாகமாய் வருவதையெல்லாம் எழுதி யாருக்காவது எப்படியாவது காட்டவேண்டும் என்று ஒரு உத்வேகம்.  "எனது பக்கத்து வீட்டுக்காரர் பல்லே தேய்க்காமல் டெய்லி வந்து குட்மார்னிங் சொல்கிறார் அவரை திருத்த நீங்கள் தான் ஒரு வழி காட்டவேண்டும்" என்று அன்புள்ள அல்லிக்கு எழுதி போடுவது வரை யோசித்திருக்கிறேன்.

2003ல் நெருங்கிய நண்பன் சக்ரா ஆங்கிலத்தில் ப்ளாக் என்ற உலகத்தை அறிமுகப் படுத்தினான். அவனுடைய பதிவுகள் எல்லாம் படித்துக் கொண்டிருந்த போது தான் நாம் ஏன் அன்புள்ள அல்லியை இங்கே அரங்கேற்றம் செய்யக் கூடாது என்று பல்பு எரிந்தது. அப்போதெல்லாம் என்ன பதிவுகள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள திரட்டிகள் கிடையாது. முகவரி தெரிந்தால் மட்டுமே ஒருவர் பதிவிற்குப் போக முடியும். அதனால் ஆபிஸில் முக்கிய வேலையே தெரிந்தவர் பதிவுகளுக்குப் போய் அங்கே கமெண்டியிருக்கும் மற்றவர்களின் (முக்கியமாய் பெண் பதிவர்) பதிவுக்குப் போய் "Excellent post, very nice, keep it up" என்று கமெண்ட் போட்டுவிட்டு வருவது தான். மூன்று நான்கு தரம் இவ்வாறு செய்தால் (பெண்களுக்குப் பத்து தரம்) அவர்களும் நம் பதிவில் வந்து "உங்க ப்ளாக் தீமே நன்றாக இல்லை கண்ணை உறுத்துகிறது please change it" என்று விளக்கேற்றி வைத்து விட்டுப் போவார்கள். அப்போது பதிவு பெயர்களெல்லாம் ஆங்கிலத்தில் மிரட்டு மிரட்டு என்று மிரட்டுவார்கள். ப்ளாக் பெயரைப் பார்த்தாலே பத்து ஆஸ்கர் வாங்கிய படம் மாதிரி கேராக இருக்கும், அத்தோடு ஆங்கிலப் படங்கள் மாதிரி "The whole world is a bathroom" என்று ஒரு ஒன் லைன் டேக் வேறு உண்டு. ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் இப்படித் தான் கற்றுக் கொண்டேன். எனக்கு தமிழில் தான் எழுத வரும் என்று நன்றாகத் தெரியுமாகையால் தமிழ்ப் பெயராகவே வைக்கலாம் என்று எண்ணம். சங்கத் தமிழில் லொடுக்குப் பாண்டி என்று வைக்கலாமா இல்லை டுபுக்குன்னு வைக்கலாமா என்று இங்கி பிங்கி போட்டு டுபுக்கு என்ற பெயரே அழகாக இருக்கிறது என்று ஆரம்பித்துவிட்டேன்.  வைகறையில் வைதேகி, புல்வெளியும் பனித்துளியும் என்று கவித்துவமான பெயர்களுக்கிடையே "What is this name Dubukku ya very funny " என்று பெண்கள் கேட்கவும் "Planning makes Perfect" அப்பாடா பட்ட கஷடம் வீண்போகவில்லை என்று எனக்கு திருப்தியாகிவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது யாராவது வந்து "யோவ் அது ஒரு கெட்ட வார்த்தைய்யா உடனே மாத்து" என்று அன்பாய் எச்சரிப்பார்கள். போங்கண்ணே நான் லத்தீன் மொழியில் உள்ள சாமி பெயர் டுபுக்குல்லா வச்சிருக்கேன் என்று சொல்லிவிடுவேன்.

தமிழ் யுனிகோடு இல்லாததால் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் பதிவேற்ற ஆரம்பித்தேன். கொஞ்ச நாளிலேயே "There is no use of playing violin at the back of the buffalo"ன்னு புரிந்தது. நல்லவேளை 2004ல் யுனிகோடு தமிழ் எனக்கு அறிமுகமாகியது. ஆனால் அப்போது தமிழ் யுனிகோடு விண்டோஸ் இண்ஸ்டலேஷனில் கட்டாயமாக்கப் படவில்லையாதலால் அந்த யுனிகோடு எழுத்துருவை நிறுவினால் தான் பதிவு தெரியும் இல்லையென்றால் செங்கல்பட்டு நம்ம சிட்டி லேஅவுட் மாதிரி கட்டம் கட்டமாய்த் தான் தெரியும். முதலில் இரண்டு ஆம்பிளைப் பசங்க வந்து கட்டம் கட்டமாய் தெரியுது என்றார்கள். வீட்ல யாரும் இல்ல ரெண்டு வீடு போய்ட்டு வாங்கப்பான்னு அனுப்பிவிட்டேன். அப்புறம் இரண்டு பெண்கள் வந்து "ஹே நத்திங் விசிபிள் யா ஒன்லி பாக்சஸ்" என்றார்கள். ஆஹா கோவில்ல கச்சேரி சாமிக்கா வாசிக்கிறோம், இது பெரிய பிரச்சனையாச்சே என்று ரூம் போட்டு யோசித்து பதிவை பிக்கசர் வடிவிலும் ஏற்றி வர ஆரம்பித்தேன். பெண்களும் LOLன்னு ஆதரவளிக்க ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் தமிழ்ப் பதிவர் கூட்டம் ரொம்பக் குறைய என்பதால் எங்கே போனாலும் சொந்தக்காரங்க கல்யாணத்திற்கு போன மாதிரி திரும்பத் திரும்ப தெரிந்தவர்களையே பெரும்பாலும் பார்க்க நேரிடும்.

ப்ளாகரில் ஆரம்பத்தில் கமெண்ட் வசதி கிடையாது. ரொம்ப நாள் கழித்து கூகிள் வாங்கிய பிறகு தான் அதெல்லாம் வந்தது. ஆரம்பகாலத்தில் backblog  போன்ற வேறு plugins தான் பின்னூட்டத்திற்கு உபயோகப் படுத்த வேண்டும். அவர்களும் "தம்பி கல்லால காசு போட்டா நீ கடலை போட்ட அத்தனை கமெண்டயும் வைச்சிக்கிறோம் இல்லாட்டி மொத்தம் ஐம்பது கமெண்ட் தான் மிச்சமெல்லாம் காணாமப்பூடும்" என்று பிச்சையெடுக்க,  "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் கேக்கிறியேடா, எங்ககிட்டயேவா"ன்னு கையை விரிக்க அப்புறமென்ன அந்த கம்பெனிகள் காலப்போக்கில் திவாலாகி ஆரம்பகால கமெண்டுகள் எல்லாம் அவர்களோடு அப்படியே காணாமல் போய்விட்டது - இது ஒரு பெரிய சோகம். இன்றளவும் திடீரென்று பழைய பதிவை நோண்டி ஏன் இந்த பதிவுக்கெல்லாம் ஒருத்தருமே கமெண்ட் போடவில்லை என்று கேட்பவர்களுக்காக இந்த விளக்கம்.

- தொடரும்

24 comments:

துளசி கோபால் said...

வெல்கம் பேக்கு டுபுக்கு! பத்து ஆயிருச்சா? இனியபாராட்டுகள்.

மனம் நிறைந்த வாழ்த்து(க்)களும்.

கல்யாணசுந்தரம் (மயிலை ஃபாண்ட்) வச்சுப் பாண்டி விளையாடலையா அப்போ? அச்சச்சோ!!!!

Anonymous said...

We came to US in 1999,I do remember crawling/surfing/.... through the WWW searching for Tamil sites,except dailythanthi,kumudham nothing was there,
After some years came vikatan and others,then came blogs,Still those are good old days...
Nice post,
Regards,
Vikram Balaji

இராஜராஜேஸ்வரி said...

பத்தாவது அனிவெர்சரி ...
பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

சுசி said...

//அப்போதெல்லாம் தமிழ்ப் பதிவர் கூட்டம் ரொம்பக் குறைய என்பதால் எங்கே போனாலும் சொந்தக்காரங்க கல்யாணத்திற்கு போன மாதிரி திரும்பத் திரும்ப தெரிந்தவர்களையே பெரும்பாலும் பார்க்க நேரிடும்.// :)))

// "தம்பி கல்லால காசு போட்டா நீ கடலை போட்ட அத்தனை கமெண்டயும் வைச்சிக்கிறோம் இல்லாட்டி மொத்தம் ஐம்பது கமெண்ட் தான் மிச்சமெல்லாம் காணாமப்பூடும்" என்று பிச்சையெடுக்க, "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் கேக்கிறியேடா, எங்ககிட்டயேவா"ன்னு கையை விரிக்க அப்புறமென்ன அந்த கம்பெனிகள் காலப்போக்கில் திவாலாகி ஆரம்பகால கமெண்டுகள் எல்லாம் அவர்களோடு அப்படியே காணாமல் போய்விட்டது - இது ஒரு பெரிய சோகம். இன்றளவும் திடீரென்று பழைய பதிவை நோண்டி ஏன் இந்த பதிவுக்கெல்லாம் ஒருத்தருமே கமெண்ட் போடவில்லை என்று கேட்பவர்களுக்காக இந்த விளக்கம்.// ooooooooooooo.....nambitom

சுசி said...

நல்லவேளை 2004ல் யுனிகோடு தமிழ் எனக்கு அறிமுகமாகியது. ஆனால் அப்போது தமிழ் யுனிகோடு விண்டோஸ் //இண்ஸ்டலேஷனில் கட்டாயமாக்கப் படவில்லையாதலால் அந்த யுனிகோடு எழுத்துருவை நிறுவினால் தான் பதிவு தெரியும் இல்லையென்றால் செங்கல்பட்டு நம்ம சிட்டி லேஅவுட் மாதிரி கட்டம் கட்டமாய்த் தான் தெரியும்.// enakku innamum sariyaaga pazhagaamal thadavikonduthaan irukkiren. nirayaper paranthu paranthu posts sum, comments sum podukiraargale athu maathiri oru flow innamum varavillai.


nice post as usual.

ஜீவன் சுப்பு said...

டுபுக்கு இன்னும் நல்லா வளர வாழ்த்துக்கள் .....!

K Sivaranjini said...

unga blog a namakku therincha oru 10 peruku suggest pannalam nu oru nalla ennathala "dubukku blog vasinga"......apdinu chonna....ellarum bathiluku...iva nalla ponnu nu la nenachom...iva enna loosu mathiri etho oru loosu blog per ellam solranu reaction vanthuthu....Athu la irunthu...."Think Tank nu blog iruku atha padinga' apdinu mathikiten.....THEIVAMEY....nalla vela...."think tank" inoru pet name um unga blog uku vachathuku kodanukodi nanrikal....(sorry for typing in eng-tanglish...intha tamil la type panrathuku inimey than practice pannanum)

Gopikaa said...

// "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் கேக்கிறியேடா, எங்ககிட்டயேவா"ன்னு கையை விரிக்க அப்புறமென்ன //
இது அல்டிமேட்! சாண்ஸே இல்லே! :)

இணையம் தோன்றி ப்லாக் தோன்றா காலத்தே, முன் தோன்றி எழுந்த மூத்த குடிமகன் நீர்! தாங்கள் வாழ்க! வாழ்க! :)

paavai said...

பசுமை நிறைந்த நினைவுகளே ... எல்லாருக்கும் எல்லாரையும் தெரிந்து இருந்த நாட்கள்...

Unknown said...

// "டேய் ஆஞ்சநேயர் கோயில்ல வந்து ஆஃப் பாயில் கேக்கிறியேடா, எங்ககிட்டயேவா" dubukku trade mark punch

தக்குடு said...

2006 ல பெண்களூர் கம்பெனில வேலைக்கு சேர்ந்த நாள்லேந்து உங்களோட காமெடிக்கு கரகோஷம் பண்ணிகிட்டு கிடக்கேன் அண்ணாச்சி! சங்கம் வச்சு வளர்த்த தமிழை ப்ளாக் வச்சு வளர்த்த மவராசன்யா நீரு! வாழ்த்துக்கள்! :)

Sh... said...

10 வருஷத்தில ஒரு 8 வருஷம் பாலூட்டி சீராட்டி வளர்த்திருக்கிங்க. இன்னும் கொஞ்சம் அக்கறை வேணும். மத்தபடி மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

Manamarntha vaazthukkal!! Meendum ungal blog!! Enne oru santhosham!! Eppavoum ungal ezuthudan commentsm migavoum attagasam!!
Vaazhga valarga ungal Blog pani.............Revolver Rita

மனம் திறந்து... (மதி) said...

வாழ்த்துக்கள், தலைவரே! ஒரு சின்ன வருத்தம் - நீங்களும் அரசியல்வாதி மாதிரி ஆயிட்டீங்களே! தொகுதி மக்கள் தேவையைப் பூர்த்தி செய்வதில் போதிய கவனம் செலுத்தறதில்லையே, ரெண்டு வருஷமா!? :-)

Sujatha said...

Became a fan of you boss!! Great writing..

Ambika Rajesh said...

Very nice comments. Feels like reading Sujatha's stories

Dubukku said...

துளசி - வாங்கக்கா...பாருங்க மொத கமெண்ட்டும் அந்த காலா ஆளிடமிருந்து :) ஆசிர்வாத்திற்கு மிக்க நன்றி. ஆமா எவ்ளோ இனிய நாட்கள் :)))

விக்ரம் - very true. I too did similar stuff crawling for tamil sites :)))


இராஜராஜேஸ்வரி - மிக்க நன்றிங்கோவ்

தானைத் தலைவி - அந்த கமெண்ட் மேட்டர் ஜோக் இல்லைங்க உண்மை. மொதல்ல ப்ளாகர்ல கமெண்ட் கிடையாது. Haloscan and Backblogger ஸ்கிரிப்ட் போட்டு தான் கமெண்ட் உருவாக்கனும். கூகிள் ப்ளாகரை வாங்கியதற்கப்புறமே இதெல்லாம் வந்தது.
யுனிகோட் இப்போ சகஜமாகிவிட்டதே?


ஜீவன் - மிக்க நன்றி நண்பரே

சிவரஞ்சனி - வாங்க :)))) உங்க ரெக்கமெண்டேஷனுக்கு மிக்க நன்றி. கமிஷன் அனுப்பிடறேன். பாருங்க நான் தாங்க டுபுக்கு பேசறேன்னு சில பேர்ட்ட ஃபோன்ல பேச எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா:)))

கோபிகா ரமணன் - உங்க ஆசிர்வாததிற்கு மிக்க நன்றி.

பாவை - எல்லாருக்கும் எல்லாரையும் - யெஸ் அதே அதே :)

unknown - ஏதோ சொல்றீங்க...மிக்க நன்றி

தக்குடு - :))) ..மிக்க நன்றிங்கோவ்

ஷ் - நீங்க சொல்றது உண்மைதான். வாழ்த்துக்கு மிக்க நன்றி

ரிவால்வர் ரீட்டா - மிக்க நன்றிங்கோ உங்க தொடரும் ஆதரவுக்கு

மதி - மிக்க நன்றி தலைவரே வாழ்த்துக்கு. நீங்க சொல்றது சரி தான். ஹூம்ம்ம்ம் பார்போம்... :))

சுஜாதா - வாங்க வாங்க மிக்க நன்றிங்கோவ் தேடித் தேடி பழைய பதிவுகளுக்கு கமெண்ட் போடுவதற்கு. உங்களுக்கு என்னுடைய பதிவுகள் பிடித்தது பற்றி மிக்க சந்தோஷம்.

அம்பிகா - ஹஹா நன்றி ஆனா அவரு எங்க நான் எங்க :)

Ananya Mahadevan said...

10 வருட ப்ளாகுலக சாதனைக்கு வாழ்த்துக்கள் தலைவா! யாருய்யா அது? 3 வருஷத்துக்கு ஒரு போஸ்டு போட்டு ஆண்டுவிளா வா கொண்டாடுறார்ன்னு சவுண்டு வுடுறது? எத்தனை வருஷத்துக்கு ஒரு தரம் போஸ்டு போட்டாலும் ஆண்டுவிளாவெல்லாம் சரியா கொண்டாடிடணும்! நீ நடத்து தலை! நாங்க இருக்கோம்ல?

Ananya Mahadevan said...

இனிமேலாச்சும் தொடர்ச்சியா எளுதுவீங்கல்ல?

sriram said...

ரங்கா அண்ணா, பத்துக்கு வாழ்த்துக்கள், மேலும் பத்திருபது ஆண்டுகள் எழுதவும் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

புதுகை.அப்துல்லா said...

பத்தை ஏழு வாழ்த்துகிறது :)

Unknown said...

congrads and nice to see namma ooru ezhuthalar in blog.... THENNINDHIYA CHETAN BHAGAT neenga thaangoo.... indha title yei yaaravathu periyavarkal munmozhiyanumnnu thazhmaiyudan kettukozkiren...

அமுதா கிருஷ்ணா said...

wow 10th anniversary super..LOL

butterfly Surya said...

வாழ்த்துகள். ஏழெட்டு வருடங்கள் முன் நானும் உங்க ப்ளாக்ல கமெண்டியிருக்கேன். கலக்குங்க..

Post a Comment