சென்னையில் மாலை ஏழுலிருந்து ஒன்பது வரை முழுநேரமாய் (என்) ஐ.ஐ.டியில் மாலை படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், பார்ட்டைமாக காலை ஒன்பதிலிருந்து மாலை ஏழு வரை என்ன செய்ய என்று குழப்பமாக இருக்கும். அப்புறம் நண்பர்களோடு சேர்ந்து ஏதாவது ப்ராஜெக்ட் செய்யலாம் என்று ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து அப்போது மிகப் பிரபலாய் இருந்த ஸ்பென்சர் ப்ளாசாவில், ஆர்.பி.ஜி அலுவலகத்தில் கூலியில்லா பட்டதாரியாக ஏற்றுக்கொள்ளப் பட்டேன்.
இன்டர்வியூவில் "ஓப்பனிங் சீனில் நேரா நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் போய், கடை கடையா ஏறி இறங்கி பிட்ஸா வாங்கித் திங்கிறோம்"ன்னு நான் போட்ட கம்ப்யூட்டர் சீனில் ஆபீஸ் மேனேஜர் விழுந்துவிட்டார். "தம்பீ ஏ.சி கார், ப்யூட்டிபுல் பி.ஏவோட எங்க கம்பெனில எம்.டியா வந்து சேர்ந்துக்கிறியா"ன்னு கேட்பார் என்று நான் மிதந்து கண்டுகொண்டிருந்த வேளையில் "ஏம்பா ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலம்பற ஏழுலேர்ந்து எட்டு வரைக்கும் எனக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தரியா...முடிச்சுட்டு அப்பிடியே என்னோட ஸ்கூட்டர்ல ஆபிஸ் வந்துடலாம்"ன்னு மனுஷன் வாய் விட்டுக் கேட்கவும், பஸ் சார்ஜ் மிச்சமே என்று ஒத்துக்கொண்டேன். போனஸாய் அவர்கள் வீட்டில் ரெண்டாம் டிகாக்க்ஷனில் காப்பியும் குடுத்தார்கள். கே.கே நகரிலிருந்து கிளம்பி, பனகல் பார்க்கில், பல்லவன் ட்ரைவர்களையும் ஆட்டோகாரர்களையும் அரசியல்வாதிகளையும் ஆயிரத்தெட்டு "...தா"வுக்கு திட்டிவிட்டு மவுண்ட்ரோடில் ஸ்பென்சர் வாசலில் என்னை இறக்கிவிட்டு விட்டு, "சந்துரு கேட்டா வண்டியில சின்ன பிரச்சனை...பார்த்துக்கிட்டு இருக்கேன்...வந்துருவேன்னு சொல்லு"ன்னு சொல்லிவிட்டு தம் அடிக்கப் போய்விடுவார்.
இன்டர்வியூவில் "ஓப்பனிங் சீனில் நேரா நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் போய், கடை கடையா ஏறி இறங்கி பிட்ஸா வாங்கித் திங்கிறோம்"ன்னு நான் போட்ட கம்ப்யூட்டர் சீனில் ஆபீஸ் மேனேஜர் விழுந்துவிட்டார். "தம்பீ ஏ.சி கார், ப்யூட்டிபுல் பி.ஏவோட எங்க கம்பெனில எம்.டியா வந்து சேர்ந்துக்கிறியா"ன்னு கேட்பார் என்று நான் மிதந்து கண்டுகொண்டிருந்த வேளையில் "ஏம்பா ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலம்பற ஏழுலேர்ந்து எட்டு வரைக்கும் எனக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தரியா...முடிச்சுட்டு அப்பிடியே என்னோட ஸ்கூட்டர்ல ஆபிஸ் வந்துடலாம்"ன்னு மனுஷன் வாய் விட்டுக் கேட்கவும், பஸ் சார்ஜ் மிச்சமே என்று ஒத்துக்கொண்டேன். போனஸாய் அவர்கள் வீட்டில் ரெண்டாம் டிகாக்க்ஷனில் காப்பியும் குடுத்தார்கள். கே.கே நகரிலிருந்து கிளம்பி, பனகல் பார்க்கில், பல்லவன் ட்ரைவர்களையும் ஆட்டோகாரர்களையும் அரசியல்வாதிகளையும் ஆயிரத்தெட்டு "...தா"வுக்கு திட்டிவிட்டு மவுண்ட்ரோடில் ஸ்பென்சர் வாசலில் என்னை இறக்கிவிட்டு விட்டு, "சந்துரு கேட்டா வண்டியில சின்ன பிரச்சனை...பார்த்துக்கிட்டு இருக்கேன்...வந்துருவேன்னு சொல்லு"ன்னு சொல்லிவிட்டு தம் அடிக்கப் போய்விடுவார்.
அப்போது தான் திறந்திருந்ததால் பளபளவென்று ஸ்பென்சர் ப்ளாசா ஒரே கலர்புல்லாக இருக்கும். பெண் செக்யூரிட்டியிலிருந்து கடை சிப்பந்திகள் வரை எல்லா யுவதிகளுமே அழகாய் இருக்கும் மாயாலோகமாய்த் திகழும். சென்ட்ரலைஸ்ட் ஏசி, பவுண்டன், எஸ்கலேட்டர், ஃபாரின் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் என்று நுழைந்த மாத்திரத்திலேயே மிரட்டி "மை டேட் இஸ் பீட்டர், மதர் இஸ் மேரி"ன்னு ஆங்கிலம் தானாக நாக்கில் ஒட்டிக்கொள்ளும். முக்கால் கால்ட்ராயரும் சுருக்கம் சுருக்கமாய் கை இல்லாத மேல் சொக்காயும்,காதில் வளையலும், காலுக்கு ரப்பர் செருப்புமாய் வளைய வரும் நவநாகரீக நங்கையர்களை எனக்கு அறிமுகப் படுத்தியது ஸ்பென்ஸர் தான். "மச்சி நேத்து போர்த் ப்ளோர்ல ஒரு ஃபாரின் ஜோடி...இன்னிக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்"ன்னு ஜோடி இல்லாத பசங்கள் கிரவுண்ட் ப்ளோரில் உட்கார்ந்து ஊத்திக்கொண்டிருப்பதை நிறைய கேட்கலாம். சென்னையிலிருக்கும் முக்காலேவாசி மெடிகல் ரெப்ரசென்டேட்டிவ்களுக்கும், சேல்ஸ் மக்களுக்கும் அப்போது ஸ்பென்சர் தான் அக்னி நட்சத்திர சரணாலயம். "க்ளையன்ட்டோட ஆபிஸ்ல தான் சார் இருக்கேன்..அவருக்காத் தான் வெயிட்டிங், உள்ளே மீட்டிங்க்ல இருக்கார்" என்று கூசாமல் சொல்லிவிட்டு கீழே உட்கார்ந்து மேலே நோக்கி பராக்கப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அப்பேற்பட்ட ஸ்பென்சரில் ஆறாவதோ ஏழாவதோ மாடியில் ஆர்.பி.ஜீக்கு அருமையான அலுவலகம். "என் கம்ப்யூட்டர் வொர்க் செய்யி மாட்டுது பார்த்து குடுக்குமா ப்ளீஸ்.."ன்னு கொஞ்சி கொஞ்சி கொச்சைத் தமிழ் பேசும் சேட்டு வீட்டு பைங்கிளிகள் புழங்குகிற இடம். "தோ வரேண்டா செல்லம்"ன்னு சர்விஸ் டெஸ்க் பேர்வழி வருவதற்க்குள் ஓடிப் போய் கம்ப்யூட்டரை ரீ-பூட் செய்வேன். "ஹீ இஸ் அ Geek-யா"ன்னு வாய் நிறையப் புகழ்வார்கள். மைக்ரோசஃப்ட் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டுக் கொள்வேன். ஐ.டி சர்விஸ் டெஸ்க் பேர்வழிகளுக்கு என்னுடைய முந்திரிக் கொட்டைத்தனம் பிடிக்காது. "டேய் நீ உன்னோட ப்ராஜெக்ட் வொர்க் மட்டும் பாரு கம்ப்யூட்டர ரீபூட் பண்ணுவதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்"ன்னு ஒடுக்குவார்கள்.
ஆனால் ஆபிஸில் நிறைய சேட்டு வீட்டு பையன்களும் எனக்கு ஃபிரண்டு. "சாப்பாடுக்கு வெளியே சேர்ந்து போகலாமா"ன்னு ஹிந்தியில் எப்படி கேட்பது என்று அவர்களும், "நீ ரொம்ப அழகா இருக்க"ன்னு தமிழில் சொல்வது எப்படின்னு நானும் ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கொடுத்து மொழி வளர்ப்போம்.
அதில் ஒரு சேட்டு வீட்டுப் பிள்ளை மட்டும் என்னிடம் அடிக்கடி "அப்படியே ஜாலியா படுத்துக்கப் போலாம் வர்றியா"ன்னு கேட்டு கலங்கடிப்பான். சீனாதானா மாமா கேட்டார்னா நாக்குல வசம்ப வைச்சு தேய்த்துவிடுவார்..."பிரகஸ்பதி...அது படுத்துக்க இல்லைடா..படத்துக்கு"ன்னு திருத்துவேன். "படத்துக்கு கூப்பிடுவதற்கும் படுத்துக்க கூப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...தமிழ் தெரிஞ்ச பொம்மனாட்டிகள் கிட்ட இப்படி கேட்டுவைக்காத"ன்னு எச்சரித்தாலும் ரொம்ப பட்டுக்கொள்ள மாட்டான். "அரே எல்லாம் தெரியும் ரே"ன்னு ஈ.சியாய் எடுத்துக்கொள்வான். இப்படியே அரே அரேன்னு போய் அறை வாங்கி...தானா பாஷை கத்துக்கும்ன்னு விட்டுவிடுவேன்.
ஆனால் இந்த சேட்டு வீட்டு பேட்டாக்களின் "ஜி" தொல்லை மட்டும் சொல்லி மாளாது. அதை விட கொடுமை என்னவென்றால் சேட்டூஸ் கா பேட்டாஸ் கூட பழகும் பச்சை தமிழர்களும் மரியாதை குடுக்கிறேன் பேர்வழி என்று “ஜி” கலாசாரத்திற்கு மாறிவிடுவார்கள். பாலா வை பாலாஜியாக்கிவிடுவார்கள், ராஜாவை ராஜாஜியாக்கிவிடுவார்கள். என்னையும் அதுவரைக்கும் "நீங்க நாங்கன்னு" விளித்துக்கொண்டிருந்த தமிழ் நண்பர் ஒருவர் திடீர்ன்னு "டுபுக்குஜி..டுபுக்குஜி"ன்னு கூப்பிட ஆரம்பிக்க, "தம்பி இங்கன வா. உனக்கு என்ன மரியாதையா கூப்பிடனும்னா பெருமதிப்பிற்குரிய ஸ்ரீமான் டுபுக்கு அவர்களேன்னு ஒழுங்கா கூப்பிடு ...இல்லியா டேய் டுபுக்குன்னு கூப்பிடு எனக்கு ஆட்சேபணையே இல்ல...ஆனா அதுக்காக சேட்டு வீட்டு பேட்டிஸ் முன்னாடி சீன் போடறதுக்காக எங்கப்பா இன்ஷியலையெல்லாம் தாறுமாறா மாத்தாத...எனக்கு ஹிந்தியில பிடிக்காத ஒரே எழுத்து இந்த ‘ஜி’ தான்"ன்னு ஆட்காட்டி விரலை காட்டி க்ளோசப்பில் வியஜகாந்த் மாதிரி செல்லமாய் மிரட்டியதும் தான் நண்பர் பழகத்தை விட்டார்.
அங்கே இருக்கும் ஆபிஸ் பணியாளர்களுக்காகவே விதவிதமாய் சாப்பாடு எடுத்து வரும் சாப்பாடு பிஸினெஸும் நிறைய உண்டு. அதில் எனக்குப் பிடித்தது பிரியாணி பொட்டலுமும், வெஜ் சாண்ட்விச்சும். ஒரு சேட்டு வீட்டுக் கிளி வாங்கிக் குடுத்து, எனக்கு வெஜ் சான்ட்விச் ரொம்பவே பிடித்துவிட்டது. நல்ல கார சாரமாய் மிளகாய் சட்னி தேய்த்து தக்காளியும் வெள்ளிரியும் வட்டமாய் நறுக்கி அடுக்கப்பட்டு மிக சுவையாய் இருக்கும். முக்காலே வாசி அதைத் தான் வாங்கித் தின்பேன். “ரெஸ்டாரண்ட் ஜாயேங்கே க்யா" என்று ஏதாவது சேட்டு வீட்டு கிளி கூப்பிடும் சுபமுஹூர்த்த நாட்கள் மட்டும் ஏதாவது ஒரு தாபா போய் காசை Curryயாக்குவோம். சில நாள் "ஐ லவ்வ்வ்வ்.....சவுத் இன்டியன் தோசா" என்று கிளி சிலாகிக்கும் போது ஏதாவது ஒரு பவனில் 'சட்னி'ஜியையும் 'சாம்பார்'ஜியையும் முக்கி முக்கி 'தோசா'ஜியை சாப்பிட்டு விட்டு வருவோம்.
இரண்டு வருடம் முன்பு இந்தியா சென்றிருந்த போது ஸ்பென்சர் போக நேர்ந்தது. மூன்று பகுதிகள் வந்துவிட்டாலும் முன்பிருந்த ஷோக்கு சுத்தமாய் இல்லாமல் சுரத்து குறைந்து காணப்பட்டது. இந்த முறை இந்தியா சென்ற போது அக்கா பையனிடம் ஸ்பென்சர் பற்றி கேட்டேன் "இப்போ அதெல்லாம் இல்லை...சிட்டி, எக்ஸ்ப்ரெஸ் மால்ன்னு ஏகப்பட்டது இருக்கு ஸ்பென்சர் குறைந்த லெவல் தான்" என்றான். ஹும்ம்ம்ம்
56 comments:
இப்படியே அரே அரேன்னு போய் அறை வாங்கி...தானா பாஷை கத்துக்கும்ன்னு விட்டுவிடுவேன்.
.......ஹ,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... இந்த பதிவை வாசித்து நல்லா சிரிச்சேன். நன்றிங்க.
ஆமா ஊருல யாரும் இப்போ ஸ்பென்சரை பத்தி பீத்திக்கறதே இல்லை! :(
ஸ்பென்சர் ஒண்ணும் ரீசன்டா திறந்தது இல்லையாமே பல வருஷமா மாறி மாறி கட்டினதாம்.. எனக்கே புது செய்தி நாணயம் விகடன்ல போட்டுருந்தாங்க. பிரியாணி சேன்ட்விச்சா???? தங்கமன்னி சிம்பு பாட்டு பாடறதுல தப்பேயில்ல.. :)))
// (என்) ஐ.ஐ.டியில் //
இதற்கு என்ன அர்த்தம்... NIIT...?
வசீகரமான எழுத்துநடை ஆங்காங்கே வெளிப்படுகிறது...
Super Spencer!
very ery enjoyable to read . very nice writting
sarasawthieswaran
பாலா ஜி, ராஜா ஜி அம்சமா இருக்கு. நல்ல நினைவுகள்.
டார்டாய்ஸ் நல்லாவே ரோல் பண்ணி இருக்கீங்க..
Dubukku is still the super star of Tamil blog world
Oor romba maari pochunnu sonnadhu poy, ippallam desam romba mari pochunu solla vendi irukku ... one of my relative when she visited us from US after a few years was surprised to hear that we had Kellogs at home ... India is catching up on consumer culture big time and losing out on its core identity in a equally big way ... Paavai
:)
முழுநேரமாய் (என்) ஐ.ஐ.டியில்
பிலாசபி பிராபகரன் பின்னூட்டமும் பார்த்தேன்
முழுநேரமாய் (என்) ஐ.ஐ.டியில்
மிக அற்புதமான சொல் பிரயோகம்
வாழ்த்துக்கள், நன்றிகள் , பாராட்டுக்கள் சகா டுபுக்கு
இன்று முழுதும் வேறு எந்த பதிவயும்/பஸ்சும் படிக்க வேண்டாம் போல.
இந்தப் பதிவு தான் சிந்தனை முழுதும் நிரம்பி இருக்கிறது
டுபுக்கு..(G)
"காசை Curryயாக்குவோம்"
"சாப்பாடுக்கு வெளியே சேர்ந்து போகலாமா"ன்னு ஹிந்தியில் எப்படி கேட்பது என்று அவர்களும், "நீ ரொம்ப அழகா இருக்க"ன்னு தமிழில் சொல்வது எப்படின்னு நானும் ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கொடுத்து மொழி வளர்ப்போம்."
ஹய்யா, பழைய ஃபார்ம்முக்கு வந்தாச்சு...
கலக்கல்.
-அரசு
சட்னிஜி சாம்பார்ஜி சூப்பரா இருந்ததுஜி:)
இப்போல்லாம் மதுரை மக்கள் ஒருத்தரை ஒருத்தர் ஜி போட்டு தான் விளிக்கிறாங்க.
Excellent!!!
சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு . அட்டகாசம்
//இந்த முறை இந்தியா சென்ற போது அக்கா பையனிடம் ஸ்பென்சர் பற்றி கேட்டேன் "இப்போ அதெல்லாம் இல்லை...சிட்டி, எக்ஸ்ப்ரெஸ் மால்ன்னு ஏகப்பட்டது இருக்கு ஸ்பென்சர் குறைந்த லெவல் தான்" என்றான்.//
அக்கா பையன் பதில் சொல்லிட்டு ஒரு மாதிரி பாத்திருப்பானே!! [எல்லாம் நாங்க பாத்துக்கறோம். நீங்க 'ஆணியே புடுங்க வேணாம்'] சங்கம் வளர்த்த தமிழ் மாதிரி "அம்பா சமுத்திரம்" வளர்த்த ஹிந்தி ...நல்ல குடும்பம்... பல்கலை கழகம். ...பையனோட ஹிந்தி உங்க ஹிந்திய விட பெட்டர் தானே?!
அம்பைகாராளுக்கு NIIT-ல N சைலண்ட், அப்பிடிதானே அண்ணாத்தே!!
//"என் கம்ப்யூட்டர் வொர்க் செய்யி மாட்டுது பார்த்து குடுக்குமா ப்ளீஸ்.."ன்னு கொஞ்சி கொஞ்சி கொச்சைத் தமிழ் பேசும் சேட்டு வீட்டு பைங்கிளிகள்// எம்.ஸ்.சியை பாதில கழுட்டி விட்டுட்டு ஓடினதே அதுக்குத் தானே...)
//மைக்ரோசஃப்ட் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டுக் கொள்வேன்.//
// அரே அரேன்னு போய் அறை வாங்கி...தானா பாஷை கத்துக்கும்ன்னு விட்டுவிடுவேன்.//
//எனக்கு ஹிந்தியில பிடிக்காத ஒரே எழுத்து இந்த ‘ஜி’ தான்"//
கலக்கல் டுபுக்கு :-)
சூப்பர் டுபுக்குஜி :)
கலக்குறே பாஸ் சீன் போட்டது அந்த மேனஜெர் கிட்டே மட்டும் தானா. சேட்டு ஜிகிடிகள் கிட்டையும் நடத்திருப்பியே. வெறும் கம்ப்யூட்டர் ரீ-பூட் மட்டும் தான் பண்ணினியா நம்ப முடியவில்லை.........))
அன்புடன்
சுபா
//"இன்டர்வியூவில் "ஓப்பனிங் சீனில் நேரா நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் போய், கடை கடையா ஏறி இறங்கி பிட்ஸா வாங்கித் திங்கிறோம்"//
//"தம்பீ ஏ.சி கார், ப்யூட்டிபுல் பி.ஏவோட எங்க கம்பெனில எம்.டியா வந்து சேர்ந்துக்கிறியா"//
chance'e illa.. super'o super.. :)
//"அரே எல்லாம் தெரியும் ரே"//
//இப்படியே அரே அரேன்னு போய் அறை வாங்கி...தானா பாஷை கத்துக்கும்ன்னு விட்டுவிடுவேன்//
இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன் பாஸ்....!
dear dubuks
rendam decoctionil coffee
ha ha ha arumai
balu vellore
கலக்கல்... பார்ட்-2 வருமா? :-)
write more Renga . nice to read. especially during office hours.
// முழுநேரமாய் (என்) ஐ.ஐ.டியில் //
//பார்ட்டைமாக காலை ஒன்பதிலிருந்து மாலை ஏழு வரை//
சீன் ஆரம்பமே சீனிங்கா இருக்கு .
//"தோ வரேண்டா செல்லம் // கம்புயுட்டர்ல அவ்வளவு ஆர்வம்
// உன்னோட ப்ராஜெக்ட் வொர்க் மட்டும் பாரு கம்ப்யூட்டர ரீபூட் பண்ணுவதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்"// ரீபூட் மட்டும் பண்றதா இருந்தா விட்டுருப்பாங்க ..
//எல்லாம் தெரியும் ரே"ன்னு// எல்லாம் தெரிஞ்சுதாண்டா சொல்றேங்கற மாதிரி இருக்கு
ஸ்பென்ஸரில் கலக்கியது கலக்கல்...
You are gifted with this great sense of humour and we are blessed to read your columns. Keep it going. - R.J.
dubukku-G, reading your trademark kusumbu after a long time.
I was going to say city centre has taken over, but your akka makka munthified.
-Munimma
சித்ரா - மிக்க நன்றிங்க :)
பொற்கொடி - ஹலோ...அது ரெண்டும் பிடிக்கும்ன்னா ரெண்டையும் சேர்த்து கலந்துகட்டி சாப்பிடுவேன்னு அர்த்தம் கிடையாது :)) பாட்டு...தோ வர்றேன்
பிலாசபி பிரபாகரன் - மிக்க நன்றி ஹை (என்)ஐ.ஐ.டின்னா என்னோட ஐ.ஐ.டியான என்.ஐ.ஐ.டின்னு அர்த்தம்...:)))
பொயட்ரீ - மிக்க நன்றி ஹை :)
சரஸ்வதி - வாங்க ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து. மிக்க நன்றி
அமுதா - மிக்க நன்றி மேடம்
முத்துலெட்சுமி - ஹீ ஹீ நன்றிங்க
பாவை - ரொம்ப கலக்கலா சொல்லியிருக்கீங்க...கலாசார மாற்றம் தான் கொஞ்சம் ஆச்சரியமாகவும் சில சமயம் அதிர்ச்சியாகவும் இருக்கு :))
சென்ஷி - நன்றி ஹை :)
ராம்ஜி - சகா நீங்க என்ன ஓவரா புகறீங்க கூச்சமா இருக்கு :)) ஆனால் உங்கள் அன்பிற்க்கு கடமைப்பட்டுள்ளேன்
அரசு - மிக்க நன்றி தல
வித்யா - நன்றி மேடம் என்னாது மதுரைலையே அப்படியா...எங்கூர்ல நல்லவேளை இன்னும் "லே" போட்டு தான் விளிக்கிறாங்க
அனானி - மிக்க நன்றி ஹை அப்படியே அடுத்த தரம் இன்ஷியலாவது போடுங்க
மோகன் - மிக்க நன்றி சாரே
டாடி அப்பா - ஹீ ஹீ நீங்க பழைய பதிவ மனசுல வைச்சிக்கிட்டு பேசறீங்கன்னு நினைக்கிறேன்...இது இன்னொரு அக்கா பையன் அதுனால பொழச்சி போகட்டும்ன்னு விட்டுட்டான்
தக்குடு - டேய் அது என்னோட ஐ.ஐ.டி இல்லையா அதத் தான் அப்படி சொன்னேன். சரி சரி கம்பெனி எம்.எஸ்.ஸி ரகசியத்தை எல்லாம் வெளில விடாத
ஆசிப் மீரான் - வாங்க தல. மிக்க நன்றி பாராட்டுக்கு
அப்துல்லா - வாங்க முதல் கமெண்டுன்னு நினைக்கறேன். மிக்க நன்றி நண்பரே பாராட்டுக்கு.
சுபா - நன்றி ஹை. ஐய்யோ நான் நல்ல பையன்ங்க வெறும் வாய்சவுடால் மட்டும் தான்...நம்புங்க
பரத் - மிக்க நன்றி தல
சதீஷ்குமார் - மிக்க நன்றி நண்பரே
பாலு - நன்றி ஹை தல
ஒவ்வாக்காசு - பார்ட்2 ஹீ ஹீ போட்டுட்டா போச்சு வேற பெயர்ல அப்புறமா :))
சுபா - வாங்க மேடம். ஆபிஸ்ல தொழிலாளி ப்ளாக் படிச்சா முதலாளி கிட்ட சொல்லலாம்...ஆனா முதலாளியே ப்ளாக் படிச்சா :)))))
பத்மநாபன் - ஆமா எனக்கு கம்ப்யூட்டர் ஆர்வம் ஜாஸ்தீங்க...மிக்க நன்றி தல.
ஜகன்நாதன் - ஹைய்யோ என்ன சொல்ல ரொம்ப புகழறீங்க ஆனா உங்க அன்பிற்கு ரொம்ப கடமைப் பட்டிருக்கேங்க. மிக்க நன்றி
முனிம்மா - மிக்க நன்றி ஹை. ஆமாங்க இப்போல்லாம் ஸ்பென்சர மதிக்கவே மாட்டேங்கிறாங்க..பாவமா இருக்கு
வாத்தியார்.. சத்தியமா சிரிச்சு முடியல, பின்னூட்டம் டைப்பக் கூட் முடியாம சிரிப்பு வருது.. எங்கய்யா கத்துண்டீர் இப்படி எழுத
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
டேய் டுபுக்கு,
எப்பிடி உங்களுக்கு புடிச்சமாதிரி கூப்புட்டோமா.
இதுக்குதான் பெரியவங்க சொல்லிருக்காங்க. “வாயக் கொடுத்து ...............” ஹி ஹி
Sorry! பெருமதிப்பிற்குரிய ஸ்ரீமான் டுபுக்கு அவர்களே...........
மத்தபடி கலக்கல் தல.
By
Haji
Dubai
//இப்படியே அரே அரேன்னு போய் அறை வாங்கி...தானா பாஷை கத்துக்கும்ன்னு விட்டுவிடுவேன்.//
:-)))))))))))
இது தமிழ்க்காரங்க இந்தி கத்துக்கிறதுக்கும் பொருந்தும்.
If I am right, it must be IRBI (Industrial Reconstruction Bank of India) that was on the 6th floor
உங்களுடைய எல்லாப் பதிவுகளையும் ஒரு புத்தகமாகப் போடலாம். நகைச்சுவை மிகச் சாதாரணமாக உங்களுக்கு வருகிறது.வாழ்த்துக்கள்.
அண்ணாச்சி - பழைய ஸ்பென்சர் நினைவுகளைக் கிளறி விட்டுட்டீரய்யா. ஒரு பத்து வருசத்துக்கு முன்னால தென்னிந்தியாவுக்கே முன்னோடியா மால் கலாச்சாரம் ஆரம்பமானது ஸ்பென்சர் மூலமாத் தான். ஆனா இப்ப அந்த பழைய கலை இல்ல.
எனக்கு ஒரே ஒரு டவுட் தான்... உங்க ப்ளாக் உங்க வீட்டுல block ஆகற மாதிரி எதாச்சும் செட்டிங் இருக்கோ...இல்ல ஏன் கேககறேனா...மொழி வளர்த்த கதை எல்லாம் இவ்ளோ விலாவாரியா சொல்றீங்களே அதான்...ஒகே ஒகே....நான் ஒண்ணும் சொல்லலப்பா...
spencer has indeed lost its charm. I have some wonderful memories of that place too. back to form brother!! nice post.
ஸ்ரீராம் - எல்லாம் உங்க அதரவும் ஆசிவாதமும் தான் காரணம்,
ஹாஜி - ஹீ ஹீ நீங்க எப்படிவேணா கூப்பிடுங்க தல :))
அமைதிசாரல் - ஆமா இல்லியா பின்ன..நாமளும் எவ்வளவு சொதப்புறோம் :))
அனானி1 - நீங்க சொல்றது கரெக்ட் கொஞ்சம் கூகிளிட்டு பார்த்தேன் ஆர்.பி.ஜி ஐந்தாம் மாடில இருந்தது :))
அனானி2 - மிக்க நன்றி உங்க ஊக்கமான பாராட்டுக்கு. எங்கங்க நானே கைக்காச போட்டு புஸ்தகம் போட்டாத்தேன் உண்டு :)))
நெல்லைக்கிறுக்கன் - அண்ணாச்சி வாரும்வே எம்புட்டு நாளாச்சு நல்லாருக்கீயளா?? ஆமாவே ஸ்பென்சர்ல தான் ஆரம்பிச்சிச்சி
அப்பாவி தங்கமணி - உங்களுக்கு அடப்பாவி தங்கமணிங்கிற பெயர் தான் கரெக்ட்டா இருக்கும்ன்னு நானும் நினைக்கிறேன் :))))
தீக்க்ஷன்யா - ஆமாம் ஸ்பென்சர் திறந்த காலக்கட்டதுல போனவங்களுக்கு நிறைய நினைவலைகள் கண்டிப்பா இருக்கும். பாராட்டுக்கு மிக்க நன்றி சகோதரி.
நகைச்சுவை ததும்பும் நல்ல கொசுவத்தி பகிர்வு. நன்றி.
நண்பா.. உங்களின் இந்த பதிவை பற்றி என் பிளாகில் எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள்.
அச்சா ஜி..:))
எனக்கும் இந்தி கத்துக்க (கிளியிடமிருந்து) ஆசைதான்.
ஹ்ம்ம். ஸ்பென்சரில் ஒரு வேலை கிடைக்குமா என பார்க்கவேண்டும்.
//(என்) ஐ.ஐ.டியில் மாலை படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்//
உங்க ஐஐடி தான் :)
எதை எடுக்கறது எதை விடுறதுன்னே தெரியலை...பதிவு வழக்கம் போல அருமை ஜி :)
// அப்துல்லா - வாங்க முதல் கமெண்டுன்னு நினைக்கறேன். மிக்க நன்றி நண்பரே பாராட்டுக்கு
//
முதல் கமெண்டுதான்.ஆனால் முதல் வருகையில்லை, வருஷக்கணக்கா விடாம வர்றேன் :0)
வெங்கட் - மிக்க நன்றி நண்பரே
மோகன் - மீண்டும் ஒரு முறை மிக்க நன்றி உங்கள் பக்கத்தில் இந்தப் பதிவை பரிந்துரைத்ததற்கு
கேபிள் சங்கர் - அண்ணாச்சி....மிக்க நன்றி ஹை
ஆதிமனிதன் - கத்துக்கறதோ கத்துகறீங்க சிட்டி சென்டருக்கோ இல்லை எக்ஸ்பிரஸ் அவென்யூக்கோ போங்க லேட்டஸ்டா கத்துகலாம்ல :)))
கைப்புள்ள - தல ஹீ ஹீ அது என்ன மாதிரி படிக்காத பயபுள்ளேளுக்கு...உங்களுக்கு தான் நிஜ ஐ.ஐ.டி இருக்கே :))) மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு
அப்துல்லா - அண்ணாச்சி தன்யனானேன்...ரொம்ப நன்றி உங்க தொடர்ந்த ஆதரவுக்கு. நானும் உங்க பக்கத்த ரீடர்ல படிக்கிறேன்
ஸ்ரீமான் டுபுக்கு ரசனையான பதிவு.
Dear Dubukku,
It is a great relief to read your writing after a tedious and hectic work day. I sincerely thank my sister in law for introducing your work. The best thing about your writing is - it reminds me my early days. Of course everyone who reads your writing would certainly say this. Thanks a lot. me and my friends too spent lot of time in Spencer's during our college days. What a life? Then we did not know how to spend time. Now we do not find time!
V. S. Sri Krishnan
Sorry. PM called me and gave some work. Regarding your language - The narration is superb and also the stage and characters. How do you get this thing typed in Tamil. Do you know Tamil typing? Great.
VSS
I was very encouraged to find this site. I wanted to thank you for this special read. I definitely savored every little bit of it and I have bookmarked you to check out new stuff you post.
Good efforts. All the best for future posts. I have bookmarked you. Well done. I read and like this post. Thanks.
Thanks for showing up such fabulous information. I have bookmarked you and will remain in line with your new posts. I like this post, keep writing and give informative post...!
really andha spencers plaza va naanum romba miss panren
enge friends gang meeting point adhuva thaan irundhudhu
ippo evlo mall vandhalum andha spencers azhagu varuma
Post a Comment