Wednesday, December 01, 2010

ப்ளைட் ட்ரெயினிங்

சமீபத்தில் ஆபீஸில் ஒரு சக ஊழியருடன் பேசிக் கொண்டிருந்தது போது அவர் சென்று வந்த ப்ளையிங் எக்ஸ்பீர்யன்ஸ் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரம் பறந்து விட்டு வந்ததைப் பற்றி ரெண்டு மணி நேரம் படம் போட்டுக்கொண்டிருந்தார். அன்னார் பறப்பதில் கில்லாடி, ப்ளைட் ஓட்டுவதில் அசகாய சூரர், பாரா ஜம்பிங்கில் விற்பன்னர் என்று காட்டிய படத்தில் தெள்ளந்தெளிவாக விளங்கிற்று. "டுபுக்கு அத்தனை உசரத்தில் இருந்து குதித்து ரொம்ப் நேரம் பாராசூட்டை விரிக்காமல் ஃப்ரீ பாலிங் போது வயிற்றில் ஒரு பந்து உருளும் பாரு...வாழ்க்கையில் கண்டிப்பாய் இந்த த்ரில்லை எல்லாம் அனுபவிக்கனுமைய்யா"ன்னு ஸ்லாகித்துக் கொண்டிருந்தார். "அண்ணே ...இந்த வயித்துல பந்து உருளரறது, தலை கிர்ர்ருன்னு சுத்துறது, நான் இப்ப எங்க இருக்கேன்னு பேந்தப் பேந்த முழிக்கிறது - எல்லாம் கத்ரீனா கைஃப் - தங்கமணி கூட்டணியில நிறைய பார்த்தாச்சுண்ணே...செலவே இல்லாம பத்து ப்ரீ ப்ளைட் டிக்கெட் எக்ஸ்பீரியன்ஸ் குடுப்பதில் தங்கமணி கில்லாடிண்ணே"ன்னு சொன்னாலும் விடாமல் வாயால் ப்ளைட் ஒட்டிக்கொண்டிருந்தார்.

ஜோக்ஸ் அப்பார்ட். நானும் இந்த மாதிரி பைலட் ட்ரெயினிங் சென்று வந்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொண்டு இந்த மாதிரி ஷோ ஆஃப் செய்ததில்லை.  நீங்கள் ப்ளைட் ட்ரெயினிங் போயிருக்கிறீர்களா? என்னுடைய முதல் ட்ரெயினிங் ட்யூட்டர் ரொம்ப தெரிந்த தோஸ்த் என்பதால் வாரத்திற்கு ஒரு மணி நேரம் தியரி க்ளாஸ் நடக்கும். மிகவும் சுவாரசியமாக இருக்கும். பையனுக்கு பத்து வயசு தானே என்று ஏனோ தனோன்னு சொல்லிக் குடுக்காமல் சின்சியராய் பாடம் எடுப்பார். எப்பேற்பட்ட சந்தேகமானாலும் கரெக்டாய் தீர்த்து வைப்பார். ட்யூட்டர் நம்ப கன்னுக்குட்டி கணேசன் சித்தப்பா பையன். அவனுக்கு ஆறாவதோ ஏழாவதோ ஆனுவல் லீவுக்கு மெட்ராஸிலிருந்து ஊருக்கு வந்த போது, எனக்கும் இன்னும் சில அரை டிக்கெட்டுகளும் அம்மையப்பர் கோவில் பின்னாடி தியரி க்ளாஸ் நடக்கும். மீனம்பாக்கம் பக்கத்தில் தான் அவர் வீடு என்பதால் அவர் பார்க்காத ப்ளைட்டே கிடையாது. A300, 747...எந்த ப்ளைட்டானாலும் அவர் வீட்டு சைட் கக்கூஸுக்கு மேல் வழியாகத் தான் போயாகவேண்டும்.

ஒரு பைலட்டுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கோட்பாடு படி அடிஷனல் க்ளாசாக கம்பு சுத்துவதும் சொல்லிக் குடுப்பார். அவர் ஒரு முறை உத்வேகமாய் கம்பு சுற்றி, கன்னுக்குட்டி கணேசாவின் கண்ணில் பட்டு, கணேசனின் அப்பாவும் கம்பை எடுத்துக் கொண்டு கோதாவில் இறங்கியதால், கம்பு சுற்றும் டெரெயினிங் இடையிலேயே நின்று போய் விட்டது. அப்புறம் அதுவே கம்பில்லாமல், மல்யுத்தமும் கராத்தேவும் கால் கால் கிலோ கலந்து, ஒருவிதமான மார்ஷல் ஆர்ட்ஸ் டெரெயினிங்காக சிலபஸ் மாற்றப் பட்டது. எந்தப் பிரச்சினையானாலும் அப்பாவைக் கூட்டி வரக்கூடாது என்ற சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகே ட்யுட்டர் க்ளாசை ஆரம்பித்தார்.

"அண்ணே இதான் மேன்டிலாண்ணே" செந்தில் ரீதியில் நாங்களும் ஏகப்பட்ட டவுட்ஸ் கேட்போம். அவரும் எங்கள் அறிவுப் பசியில் தோன்றும் சந்தேகங்களை அழகாய் தீர்த்துவைப்பார்.

"டேய் ஒன்னுமே இல்லைடா பயப்படாதீங்க... அங்க மச்சிக் கதவ தொறக்கற கைப்பிடி மாதிரி ஒன்னு இருக்கும் அத மேல தூக்கினா ப்ளைட் மேலே போகும் கீழ இறக்கினா கீழ இறங்கும்.. அவ்வளவே தான்"

"அப்போ சைட்ல போகனும்ன்னா...?" என்ற என் அறிஜிவித்தனம் எடுபடவில்லை. அது அட்வான்ஸ்ட் சிலபஸ் அதுக்கு முதலில் நான் ஃபவுண்டேஷன் தாண்ட வேண்டும் என்று ட்யூட்டர் கறாராய் சொல்லிவிட்டார்.

"சரி அப்புறம் எதுக்கு தலைக்கு மேல ஏகப்பட்ட சுவிட்ச் வைச்சிருக்காங்க..?"

"டேய் ஏரோப்ப்ளேன்ல ஏகப்பட்ட பேர் இருப்பாங்க எல்லாருக்கும் தனித் தனியா ஃபேன் இருக்கும். ட்ரைவர் வண்டிய கிளப்புறதுக்கு முன்னாடி தலைக்கு மேல இருக்கிற சுவிட்ச்ச ஒன்னொன்னா போட்டு அவங்க ஃபேன ஆன் செய்வார்...அதுக்கு தான் அத்தன சுவிட்ச்"

"அவங்க காத ஏன் மூடிக்கிறாங்க?"

"அதுக்கு ரெண்டு உபயோகம் இருக்கு ...ஒன்னு வானத்துக்கு போனதுக்கு அப்புறம் டேப்ரெக்காரடர் போடுவாங்க அதுல பாட்டு கேக்கலாம், இன்னொன்னு எதுத்தாப்புல ஏரோப்ப்ளேன் வந்து ஹாரன் அடிச்சா காது செவிடாகிடும்ல அதான்"

"அண்ணே ப்ளைட்டுல ஏண்ணே கார்ல இருக்கிற மாதிரி ஸ்டியரிங் இல்ல..." பையன்களும் விட மாட்டார்கள். 

ப்ளைட் டெரெயினிங்கில் மடக்கக் கூடிய ஸ்டீல் நாற்காலி ஒரு மிக அத்தியாவசியமான உபகரணம். ஸ்டீல் நாற்காலியைத் திருப்பிப் போட்டு உட்கார்ந்து நிறைய ப்ளைட் சிமுலேஷன் க்ளாஸ் எல்லாம் எடுத்திருக்கிறேன். இப்பவும் ஸ்டீல் நாற்காலியைப் பார்த்தால் திருப்பிப் போட்டு ப்ளைட் ஓட்டத் தோன்றும். ரெண்டு மூனு நாற்காலியை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டால் சிமிலேஷன் ட்ரெயின் மோடுக்கு ப்ரோக்ராம் ஆகிவிடும். அதிலே தலைகாணியைப் போட்டு மேலே அமர்ந்தால் அதுவே லாரியாகிவிடும். கல்யாண வீடுகளுக்குப் போனால் அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்போ காலியாகும்ன்னு ஸ்டீல் நாற்காலிகளுக்கு நிறைய தேவுடு காத்திருந்திருக்கிறேன்.


பெரியவனானதும் ப்ளைட் டெரெயினிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டிவைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வேறு ஒரு பிரச்சினை தடுத்தது. எனக்கு கிறு கிறுவென உயரத்தில் சுத்தும் ராட்டினங்களைப் பார்த்தாலே வயிற்றைப் புரட்ட ஆரம்பித்துவிடும். சென்னையில் கிஷ்கிந்தா திறந்த புதிதில் சொல்லச் சொல்லக் கேட்காமல் ஏத்திவிட்டு விட்டார்கள். கிளம்பிய மூன்றாவது நிமிடத்தில் வயிற்றைப் புரட்டி, புளிச்சென்று தேமேன்னு உட்கார்ந்திருந்த எதிர்த்த சீட் அம்மமணி மேல் வாந்தி எடுத்துவிட, அப்புறம் செயின் எஃபெக்ட்டில் அவரும் வாந்தி எடுக்க ஆரம்பித்து ஒருவர் பாக்கி இல்லாமல் எடுத்து களேபரமாகிவிட்டது.


ஆனால் ஜேம்ஸ்பாண்டு படம் பார்த்த பிறகு ஜிவ்வென ஆகி ஓக்கே சமாளிக்கலாம் என்று விசாரிக்க ஆரம்பித்தேன். மெட்ராஸ் ப்ளையிங் க்ளப் சுத்த மோசம். ஜேம்ஸ்பாண்டு மாதிரி ரஷ்ய அழகியை பார்படாஸிலிருந்து விமானத்திலேயே அந்தர் பல்டி அடித்து பிக்கப் செய்து கொண்டுவருமளவுக்கு ட்ரெயினிங் குடுக்க அவர்கள் கேட்ட தொகை யந்திரன் படத்தில் அத்தனை ரஜினி ரோபோக்களுக்கும் பேண்டுக்கு மேல் போடும் இரும்பு ஜெட்டி வாங்கின செலவுக்கு ரெண்டு ரூபாய் குறைவு அவ்வளவு தான்.

"டேய் விமானத்தோட தொகைய கழிச்சுட்டு சொல்லுங்கடா...நான் ஏற்கனவே கன்னுக்குட்டி கணேசன் சித்தப்பா பையன் கிட்ட பவுண்டேஷன் டெரெயினிங் எடுத்திருக்கேண்டா" என்று சொல்லியும் தொகையை குறைக்க மறுத்துவிட்டார்கள். சரி என்னோட இடத்தை அப்படியே பிடிச்சு வைச்சுக்கோங்க..யாருக்கும் குடுத்துடாதீங்க...ரெண்டே நிமிஷத்துல சில்லறை மாத்திட்டு வந்துடறேன்னு ஓடி வந்துவிட்டேன்.

இங்கே லண்டனில், பக்கத்தில் ஒரு இடத்தில் க்ளைடர் ப்ளைட் இருக்கிறது. அது அத்தனை தலை சுத்தாது, ஒரு பத்து இருபது இரும்பு ஜெட்டி பட்ஜெட்டுல ஓரளவுக்கு கற்றுக்கொள்ளலாம்  என்று சொல்கிறார்கள். ஒரு தரம் சென்று வரவேண்டும். ரஷ்ய அழகிக்கு எப்போ குடுத்து வைத்திருக்கிறதோ....எல்லாத்துக்கும் ஒரு வேளை வரவேண்டாமா....சொல்லுங்க....ஹூம்

44 comments:

RVS said...

சூப்பரோ சூப்பர்!!!
ப்ளைட் ட்ரெயினிங்கில் வால் பக்கம் உட்கார்ந்தால் பள்ளம் மேடு ஏறி எறங்கற ஒத்தை மாட்டு வண்டி மாதிரி ஏன் குலுங்கறது அப்படின்னு கேட்டீங்களா? ட்ரைனர் என்ன சொன்னார்? பதில் தெரிய ஆவலா இருக்கு. சாப்படறத்துக்கு கக்கா மிட்டாய் எல்லாம் கொடுப்பாளே அவாள பத்தி எல்லாம் எழுதலையா? ;-) ;-)

ஜிகர்தண்டா Karthik said...

ஃப்ளைட்ல ஹெட் லைட் டிப்- டிம் இருக்குமா?

துளசி கோபால் said...

ஹைய்யோ:-)))))))))))))))))))


குறிப்பா எதைச்சொல்வது எதை விடுவது....

நோ ச்சான்ஸ்:-)

sriram said...

அட்டகாசம் வாத்யார். கலக்கலா எழுதியிருக்கீங்க.
இப்படி தொபக்கட்டீர்ன்னு களத்தில குதிச்சு கலக்க என்ன காரணம் வாத்யார்??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

அட பாவிங்களா? ரஷ்ய அழகி கேக்குதா? யாரு சார் அங்கே. டுப்புக்கோட தங்கமணி ஃபோன் நம்பர் வாங்கி கொடுங்க.போட்டுக்கொடுக்கத்தேன்.

Anonymous said...

creativity, creativity nu pesarangale, avangalai vittu steel chairin innovative usesnu oru pol vecha neenga thaan win pannuveenga .. flight simulation, train appappa enna creativity .. :) Paavai

DaddyAppa said...

என் அறிவு பசியையும் கொஞ்சம் தீர்த்து வெய்யிங்கோ

1 . flight ல ஏன் டிக்கெட் முன்னாடியே எடுக்கணும்? கண்டக்டர் சம்பளம் மிச்சப்படுத்தவா?

2 சாப்பாட்டுக்கு வண்டி எங்க நிக்கும்-ன்னு சொல்லறதில்லையே. ஏன் ?

3 ஸ்டெப்னி எங்க இருக்கும் ? நோ நோ ...நான் tyre பத்தி தான் கேட்டேன்

4 எப்பவுமே indicator , head -லைட் ஏன் போட்டே ஓட்டறாங்க...பகல்ல கூட.

5 'கரம் சிரம் புறம் நீட்டக்கூடாது,', 'ஆண்கள்', 'பெண்கள்' 'முதியோர்' பற்றிய அறிவிப்பு பலகைகள் எங்கும் இல்லையே .ஏன்?

பாக்கி என் சக நண்பர்கள் கேப்பாங்க :-)

Chitra said...

அருமையான எழுத்து நடையில் கலக்கி இருக்கீங்க! சூப்பர்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொண்டு இந்த மாதிரி ஷோ ஆஃப் செய்ததில்லை//


ஆஹா போட்டாரு பாருங்க ஒரு பதிவே...இதுக்குன்னு...

தன்னடக்கம்னா இதுதான்..:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

Tamirabarani//

அதானே பார்த்தேன்.:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))))

சாந்தி மாரியப்பன் said...

உங்க ட்ரெயினிங்க்ல ஓடற வண்டியில இருந்து இறங்கற வித்தையெல்லாம் சொல்லிக்கொடுப்பதுண்டா..

யோசிப்பவர் said...

மூனு டவுட்டு,

1) ஃப்ளைட் லெஃப்ட் ஹாண்ட் ட்ரைவிங்கா, ரைட் ஹாண்ட் ட்ரைவிங்கா?

2) வலது/இடது ஃப்ளைட்டை திருப்பும் போது ட்ரைவர்(?!) கைகாட்டி சிக்னல் செய்யனுமா?

3) சடன் ப்ரேக் போடுவது எப்படி?

(இதெல்லாம் ரொம்ப அட்வான்ஸ்ட் சிலபஸோ?!)

தக்குடு said...

டுபுக்கு அண்ணாச்சி! சிரிப்பை அடக்க முடியாம நான் பட்டபாடு என் எதிரிக்கு கூட வரக்கூடாது. இனிமே எந்த காரணத்தை கொண்டும் ஆபிஸ்ல வெச்சு உங்க ப்ளாக்கை தொறக்க மாட்டேன் சாமி!..:)

பத்மநாபன் said...

நானும் பொது இடத்தில் சிரிக்ககூடாதுன்னு அடக்கிட்டே வந்தேன் ...//யந்திரன் படத்தில் அத்தனை ரஜினி ரோபோக்களுக்கும் பேண்டுக்கு மேல் போடும் இரும்பு ஜெட்டி வாங்கின செலவுக்கு ரெண்டு ரூபாய் குறைவு அவ்வளவு தான்// இந்த இடத்தில் ராட்டனாம் தூரி சமாச்சரம் மாதிரி குபுக் ன்னு அடக்கின சிரிப்பெல்லாம் வெளிய வந்திருச்சு...
இனி தமிழ்பட பட்ஜெட்டெல்லாம் இரும்பு ஜட்டி கரன்சிக்கு போயிரும் போல....

Anonymous said...

daddyappa potta commentukku siriyo sirinnu sirichen. mathapadi dubuks vazhakkampola romba humorous.... vazhga vazhga.suga.

dondu(#11168674346665545885) said...

//சாப்பாட்டுக்கு வண்டி எங்க நிக்கும்-ன்னு சொல்லறதில்லையே. ஏன் ?//
சுங்குவார் சத்திரத்துல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

D. Chandramouli said...

What a humorous piece! I wouldn't like to miss any of your postings. Very 'janaranjagamana' enjoyable writing. Keep it up.

sriram said...

//"டுபுக்கு அத்தனை உசரத்தில் இருந்து குதித்து ரொம்ப் நேரம் பாராசூட்டை விரிக்காமல் ஃப்ரீ பாலிங் போது வயிற்றில் ஒரு பந்து உருளும் பாரு...வாழ்க்கையில் கண்டிப்பாய் இந்த த்ரில்லை எல்லாம் அனுபவிக்கனுமைய்யா"//

தல, Sky Dive ஒரு தடவை பண்ணிப் பாருங்க, செம எக்ஸ்பீரியன்ஸ். ஃப்ரீ பாலிங் போது மணிக்கு 40 செகண்டுகள் 120 மைல் வேகத்தில் பூமிக்கு மேலே 2 மைல் உயரத்திலிருந்து விழும் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. இது ஒரு வகை என்றால் பாராசூட் திறந்தபுறம் சில நிமிடங்கள் மேலேயிருந்து வேடிககைப் பார்த்துக் கொண்டே சிறகைப் போல மிதந்து வந்து தரையைத் தொடும் சுகம் இன்னோரு வகை.

வாய்ப்பு கிடைத்தால் ஸ்கைடைவ் போங்க, Kam Se Kam எங்களுக்கு ஒரு சூப்பர் போஸ்ட் கிடைக்கும்.
கொஞ்சம் விலை அதிகம் (எங்க ஊர்ல வீடியோவுடன் சேர்த்து 350 $ ஆகும்) ஆனா It is worth it.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

ரஷ்யா தானே.. கவலையே வேண்டாம் தங்கு ச்சும்மா இன்னும் ஒரு 10 ஃப்ரீ க்ளாஸ் எடுத்தா ஆச்சு. இந்த மாதிரி வரிக்கு வரி குபீர் சிரிப்பு போஸ்டெல்லாம் போடறது ரொம்ப‌ சட்ட விரோதம்.

தக்குடு said...

//உயரத்திலிருந்து விழும் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. இது ஒரு வகை என்றால் பாராசூட் திறந்தபுறம் சில நிமிடங்கள் மேலேயிருந்து வேடிககைப் பார்த்துக் கொண்டே சிறகைப் போல மிதந்து வந்து தரையைத் தொடும் சுகம் இன்னோரு வகை// அப்போ நம்ப பாஸ்டன் நாட்டாமை ஸ்கை டைவிங் எல்லாம் பண்ணியிருக்கார்!!..:)

//எங்க ஊர்ல வீடியோவுடன் சேர்த்து 350 $ ஆகும்// டுபுக்கு அண்ணாச்சியோட இரும்பு ஜட்டி கணக்கு படி இதுல எத்தனை இருப்பு ஜட்டி வாங்கலாம் ?னு தெரியலையே!! ..:)

Shubashini said...

அண்ணா எதை சொல்றது எதை விடறதுன்னு தெரியல. ஒரு முடிவோட தான் இருக்காய் போல இருக்கு. நடத்து ராஜா ஆபீஸ் லே என்னை பயித்தியம் னு நினைச்சுண்டு இருப்பா எல்லாரும். அப்படி சிரிச்சுண்டு இருக்கேன்...:))
இப்படிக்கு
சுபா - (சங்கத்தில் சேர்ந்துருக்கும் அப்ப்ரசெண்டி)

Anonymous said...

ஏற்கனவே கன்னுக்குட்டி ரசிகர் மன்றம் இருக்கு.
இப்ப கன்னுகுட்டி சித்தப்பா பையனுக்கு வேற தனிய மன்றம் வெக்கிறதா இல்ல கன்னுகுட்டி அண்ட் சித்தப்பா பையன் மன்றம் அப்படின்னு சேர்க்கிறதானு பெரிய குழப்பத்தில் எங்கள உட்டுட்ட தல.

அப்பால, நீங்களாவது என்ன மாதிரி அறியாத பசங்க குறுக்கால டபால்ன்னு வந்துட்டா "சாவுகிராக்கி" "ஊட்ல சொல்ட்டு வந்தியா" அப்படிலாம் அறிவுரை சொல்லாம நல்லபடியா ஒட்டி கன்னுகுட்டி சித்தப்பா பையன் பெற காப்பத்தணும்.

By
Haji
Dubai

sriram said...

//சுபா - (சங்கத்தில் சேர்ந்துருக்கும் அப்ப்ரசெண்டி)
Welcome to the Sangam subha.

பொற்கேடி, அடப்பாவி தங்கமணி மாதிரி சீனியர் அல்லது தக்குடு மாதிரி அப்ப்ரசண்டி கழகக் கண்மணிகளிடம் சங்கத்து ரூல்ஸ் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சிக்கோங்க.

சீக்கிரமா ஏதாவது போஸ்ட் போட்டுத்தர்றேன்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நிரந்தரத் தலைவர்
டுபுக்கு ரசிகர் கழகம்
தலைமையகம் : பாஸ்டன்

sriram said...

////எங்க ஊர்ல வீடியோவுடன் சேர்த்து 350 $ ஆகும்// டுபுக்கு அண்ணாச்சியோட இரும்பு ஜட்டி கணக்கு படி இதுல எத்தனை இருப்பு ஜட்டி வாங்கலாம் ?னு தெரியலையே!! ..:) //

தக்குடு
இந்த மாதிரி ஏதாவது வம்பு பண்ணவேண்டியது, அப்புறம் வாத்யார் திட்டினா கண்ணை கசக்கிகிட்டு நிக்க வேண்டியது. நான் போனாப் போகுதுன்னு
வாத்யார் கிட்ட ரெகமண்டு பண்ணால் எனக்கு நாட்டாமை பட்டம் தரவேண்டியது. வர வர ஒன்னோட சேட்டை தாங்கல. இரு இரு இந்த முறை வாத்யார் பெஞ்சு மேல நிக்க வைக்கப் போறார். நான் சப்போட்டுக்கு வர மாட்டேனே...

தக்குடு said...

@ பாஸ்டன் நாட்டாமை - அவசரத்துல "என்றும் அன்புடன்" போட மறந்துட்டீங்க போலருக்கு!! கமண்டே போட மறந்தாலும் "என்றும் அன்புடன்" போட மறக்க மாட்டீங்களே? நீங்க இப்படி எல்லாம் பண்ணர்துனால தான் தமிழ் நாட்டுல கூட்டணிக்குள்ள விரிசல் எல்லாம் விழுது!!..;PP

என்றும் வம்புடன்.
தக்குடு
கொள்கைபரப்புச் செயலாளர்
தோஹா வட்டம்

Anonymous said...

நன்றிங்க நாட்டாமை. கேடி ரொம்ப பிஸி லேடி. போஸ்டே ஆடிக்கு ஒண்ணு அமாவாசைக்கு ஒண்ணு தான் போடறாங்க. நாம்ப தக்குடு தம்பி ரொம்ப பொறுமை. ஆனா நக்கலும் நையாண்டியும் ரொம்ப ஜாஸ்தி...:)) அம்பி ஆளே காணோம். உங்க போஸ்டுக்கு வைடிங்கு...))
கேடிய இன்னும் friend புடிக்கலை... இனிமே தான்.........

அன்புடன் சுபா

sriram said...

//தக்குடு
கொள்கைபரப்புச் செயலாளர்
தோஹா வட்டம் //
தக்குடு நமக்கு இருக்கும் ஒரே கொள்கை வாத்யார் பதிவுல கும்மி அடிக்கறது மட்டுமே. இதுக்கு எதுக்கு ஒரு பரப்புச் செயலாளர்??

சுபா, என் பேர் ஸ்ரீராம், நாட்டாமை இல்லை. இந்த கேடியும் தக்குடுவும் கழகக் கண்மணிகள் எல்லாரையும் ரொம்பக் கெடுத்து வச்சிருக்காங்க. கழக விரோத நடவடிக்கைகளுக்காக அவங்க மேல ஆக்‌ஷன் எடுக்கப் போறேன்.
//உங்க போஸ்டுக்கு வைடிங்கு...// அடுத்த வாரம் கலக்கிடலாம் வெயிட் பண்ணுங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

அலாவ் நான் பாட்டுக்கு சிவனேன்னு ஒரே ஒரு கமெண்ட போட்டுட்டு வாய் மேல விரல வெச்சு உக்காந்துட்டு இருக்கேன், இப்படி எல்லாம் பழி போட்டு எனக்குள்ள இருக்கற சிங்கத்த சொரிஞ்சு விட வேணாம் பாஸூ தாங்க மாட்டீங்க..!

டுபுக்கு இந்நேரம் தலையை பிச்சுக்கிட்டு இருப்பாரு, என்னடா நாமளே டெட்லைன் எல்லாம் வெச்சு பதிவு போடறோம் அதுல இதுங்க எல்லாம் வந்து கோஷ்டி கானம் பாடுதுங்களே, யாரானும் 'குழு மனப்பாண்மை'னு பட்டம் குடுத்துருவாங்களோன்னு.. நீங்க கவலப் படாதீங்க தல, சங்கத்துல சேர மாட்டேன்னு எவனாவது வாய தொறக்கட்டும், வெச்சு தெச்சுப்புடுவோம்.. :P

சுபா, யாரு சொன்னா பதிவு போடலேன்னு?! ஆமா உங்களுக்கு 35 வயசா? இல்ல நாட்டாமை தன்னோட வயசை ம(றை)றக்க தான் என்னை எல்லாம் அக்கான்னு கூப்புட்டுக்கிடு இருக்கார். பாத்து சூதானமா இருந்துக்குங்க..

Porkodi (பொற்கொடி) said...

//அவசரத்துல "என்றும் அன்புடன்" போட மறந்துட்டீங்க போலருக்கு!! கமண்டே போட மறந்தாலும் "என்றும் அன்புடன்" போட மறக்க மாட்டீங்களே?//

ஹைய்யோ ஹைய்யோ பாஸு உங்க நிலைமை இப்படி ஆகிடுச்சே.. வி.வி.சி!! ஆனா நீங்க உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க இந்த பையனை கொண்டு போய் சரத் குமார் கிட்ட வுட்டுட்டு வர்றேன்!!

sriram said...

//நீங்க உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க இந்த பையனை கொண்டு போய் சரத் குமார் கிட்ட வுட்டுட்டு வர்றேன்!! //

உம்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Subhashini said...

yelai kodi. nama yellam athukum melay vayasana vattam. yenna vayasana yenna. namakku kummiyedikarathu thaan mukiamnu thalivaray sollitaru. hmm. start the mujic....:))
anubudan subha
veetuku vanthapuram poruppa comment poturukkane...:))

Subhashini said...

naatamai boston sriram thambi (neenga romba chinnavaru, he he vayasulay..:))
namba kazhga kanmanigal yellam romba nallavanga, vallavanga, yenna konjam vaai thaan jasthi.. namai polaway....:))
andudan
subha
p.s. unga yella postum inimay thaan padikanum

balutanjore said...

dear dubukku

padivile ippothan soodu pidichirukku.

kummi ellam ethanai super parthela?

neengalum vazhakkam pol pukundu vilayadi vitteerkal. vaazhthukkal.

balu vellore

Kavitha said...

Hilarious!!! Awesome!! Do they have the special steel chairs in UK? You MUST start writing a longer version of ur blog - something like Washigtonil Thirumanam...Rajesh Kumar used to write such wonderfully funny stories before he got side tracked with his later ones. You have a BRIGHT future if u try writing:) Atleast all of us here on this comment page will buy ur books :)

Dubukku said...

ஆர்விஎஸ் - மிக்க நன்றி சாரே. அதான் சொன்னேனே அதெல்லாம் அட்வான்ஸ்ட் செலெபஸாம்...பவுண்டேஷன் பாஸ் பண்ணனுமாம் :)))

ஜிகர்தண்டா - இருக்கும்ன்னு தான் நினைக்கறேன். கேட்டுப் பார்க்கறேன் :P

துளசி - அக்கா வாங்க எப்படி இருக்கீங்க. மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. கோபால் சார் நலமா?

ஸ்ரீராம் - உஷ்ஷ்ஷ் கிட்ட வாங்க ஏன்னு ஒரு ரகசியம் சொல்றேன். நான் அரசியல்ல குதிக்கப் போறேன் :)))))

அனாமிகா - ஐய்யோ ஐயோ...இருங்க இருங்க அவசரப்படாதீங்க எனக்கு ரஷ்யா எங்க இருக்குன்னே தெரியாதுங்க :)

பாவை - வாங்க நலமா. மிக்க நன்றிங்க ஆனா ஹையோ நீங்க ரொம்ப புகழறீங்க கூச்சமா இருக்குங்க. (நான் சும்மா விளையாடுக்கு சொன்னென்னு மட்டும் கால வாரிடாதீங்க ப்ளீஸ்) :))

டாடிஅப்பா - பின்னிட்டீங்க போங்க இவ்ளோ அறிவுப் பசியா உங்களுக்கு:)) நீங்க என்கூட க்ளாசுக்கு வந்திருக்கவேண்டியவர்ங்க


சித்ரா - உங்க ஊக்கமான வரிகளுக்கு மிக்க நன்றி மேடம்.

பயணமும் எண்ணங்களும் - வாங்க. தன்னடக்கம் எனக்கு ரொம்ப பிடிக்கும் :)) தாமிரபரணி - ஹீ ஹீ நீங்களும் அந்தப் பக்கமா?

முத்துலெட்சுமி - மிக்க நன்றி மேடம்

அமைதிசாரல் - சொல்லிக்குடுப்பாங்க ஆனா அதுக்கு சைக்கிள் ஒட்டத் தெரிஞ்சிருக்கனும்

யோசிப்பவர் - நீங்க கேட்டதுல ஒன்னு மட்டும் பேசிக்குல கவர் ஆகும். ப்ளைட் சென்டர் ஹான்ட் ட்ரைவிங். மத்தது ரெண்டும் அட்வான்ஸ்ட் செலபஸ்

தக்குடு - மிக்க நன்றி சாரே. ஷேக்கு ஒன்னும் சொல்லியிருக்க மாட்டார்ன்னு நம்புறேன் :))

பத்மநாபன் - ஆமாங்க எவ்ளோ இரும்பு ஜெட்டி பார்த்தீங்களா படத்துல...பாட்டுல வர்றவங்களுக்கெல்லாம் வேற ...யெப்பாஅ

சுகா - மிக்க நன்றி நண்பரே பாராட்டுக்கு

டோண்டு - ஓ இந்த விஷயம் எனக்கு தெரியாதே இப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன் :))

சந்திரமௌலி - மிக்க நன்றி சார் உங்கள் ஊக்கமான பின்னூட்டதிற்கு.

ஸ்ரீராம் - ஹூம்ம்ம்ம்ம் ஆசை தான் ஆனா கொஞ்சம் அலர்ஜியா இருக்கு சீக்கிரம் ட்ரை பண்ணனும் :))

பொற்கொடி - ரஷ்யா எந்தப் பக்கம் இருக்கு? :P பாராட்டுக்கு நன்றி ஹை

சுபாஷினி - மாமி, நீங்க என்ன அண்ணான்னு கூப்பிடறது ரொம்ம்ம்ம்ம்ம்ப ஓவர் சொல்லிட்டேன். உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. தன்யனானேன்.

ஹாஜி - ஹாஹா வாங்க சாரே. சரி தல நீங்க சொன்ன அட்வைஸ மனசுல வெச்சு நல்ல பெயர் எடுக்க ட்ரை பண்ணுறேன் :))

ஸ்ரீரம் / தக்குடு/ பொற்கொடி/சுபா மாமி - ஏதாவது உண்டியல் கலெக்க்ஷன் செஞ்சா எனக்கும் எதாவது பங்கு தருவீங்களா? :PP

பாலு - வாங்க தல. ...இந்த ரசிகர் மன்றம்லாம் சும்மா என்ன கலாசறாங்க....நீங்களும் கும்மில ஐக்கியமாகிடுங்க..ஸ்ரீராம் அண்ணாச்சிய விளையாட்டுக்கு சேர்த்துக்கோங்கப்பா

பொயட்ரீ - மிக்க நன்றி உங்க ஊக்கமான பாராட்டுக்கு. ஒரு வேளை புக்கு எதுனாச்சும் போட்டா உங்களுக்கு ஒரு டீலர்ஷிப் குடுத்துடறேன் வித்து குடுக்கறதுக்கு :)))) பட் சீரியஸ்லீ அதெல்லாம் ரொம்ப தூரம்ங்க :))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எல்லாம் கத்ரீனா கைஃப் - தங்கமணி கூட்டணியில நிறைய பார்த்தாச்சுண்ணே //
தங்கமணி சரி... அதென்ன கத்ரீனா கைப்... (நாராயண நாராயண...)

//அடிஷனல் க்ளாசாக கம்பு சுத்துவதும் சொல்லிக் குடுப்பார்//
அட அட அட...என்ன முன் யோசனை? அதாவது ஹைஜாக் எதுனா ஆனா பயனிகள காப்பாத்த தானே... அவர கன்சல்டிங் போக சொல்லுங்க.. சூப்பர்...

//எதுத்தாப்புல ஏரோப்ப்ளேன் வந்து ஹாரன் அடிச்சா காது செவிடாகிடும்ல//
ROFTL

//அது அத்தனை தலை சுத்தாது//
எனக்கும் ஒரு டவுட்...அத்தனை தலைனா எத்தனை... ரெண்டு மூணு தலை மட்டும் தான் சுத்துமா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Boston sriram said //இரு இரு இந்த முறை வாத்யார் பெஞ்சு மேல நிக்க வைக்கப் போறார்.//

ஐயயோ...மறுபடி மொதல்ல இருந்தா? (ஹா ஹா அஹ)


வாங்க வாங்க சுபா... கலக ஜோதில வந்து ஐக்கியம் ஆய்டுங்க... (பாஸ்...ச்சே... ஆர்யா படம் பாத்த எபக்ட்... நாட்டாமை சார்... ராக்கிங் எல்லாம் பெர்மிசன் உண்டா... சும்மா கேட்டேன்...)


//இந்த கேடியும் தக்குடுவும் கழகக் கண்மணிகள் எல்லாரையும் ரொம்பக் கெடுத்து வச்சிருக்காங்க//

கரெக்டா சொன்னீங்க... நான் அப்பாவின்னு நீங்க மறைமுக அறிக்கை விட்டதுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேனோ...



//ஆமா உங்களுக்கு 35 வயசா? இல்ல நாட்டாமை தன்னோட வயசை ம(றை)றக்க தான் என்னை எல்லாம் அக்கான்னு கூப்புட்டுக்கிடு இருக்கார்//

உங்கள அக்கானு கூப்டா பரவாஇல்ல பொற்கொடி அக்கா... என்னை எல்லாம் அக்கானு சொல்றார்... என்ன கொடுமை இது? (கைம்மாறு செய்ய உடனே வாய்பளித்த கொடி அக்காவுக்கு உளமார்ந்த நன்றி...)

// ஆனா நீங்க உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க இந்த பையனை கொண்டு போய் சரத் குமார் கிட்ட வுட்டுட்டு வர்றேன்//

இவ்ளோ பெரிய கொடுமைக்கு சரத்குமார் பண்ணின தப்பென்ன

கமெண்ட் போடறப்ப தோணற பஞ்ச் எல்லாம் போஸ்ட் எழுதறப்ப ஏன் தான் வர்ரதில்லையோ...ஹும்... என் பிரச்சன எனக்கு...

Me escape... (கலக்சன்ல எனக்கும் பங்கு வரணும் இப்பவே சொல்லிட்டேன்...)

இப்படிக்கு,
கழக உறுப்பினர்... (இளையோர் பிரிவு)

Kavitha said...

Oh sure! Vikkareno illayo - ella librarykkum ore free copy kuduthuduven :)!! But its within ur reach now!

Lakshmi said...

Idhukku part 2 unda??? Hilarious!!! Naduvil katrina kaif eppadi?

Romba arivupoorvamana padhivu:-))). Ippo flying pathi engalukkum naalu vishaham theriyume!!!!

Dubukku said...

அப்பாவி தங்கமணி - //அதென்ன கத்ரீனா கைப்////எனக்கும் ஒரு டவுட்...அத்தனை தலைனா எத்தனை... ரெண்டு மூணு தலை மட்டும் தான் சுத்துமா? // அடப்பாவி தங்கமணின்னு உங்க பெயர திருத்தினதுல தப்பே இல்லீங்க :)))))

பொயட்ரீ - நீங்க ரொம்ப நல்லவங்க..போல .ஹீ ஹீ இதெல்லாம் நடக்காதுன்னு தெரியாம வாக்கு குடுக்குறீங்க...ஒரு நாள் புஸ்தக கட்டோட வந்து வீட்டு கதவ தட்டப்போறேன் பார்த்துக்கோங்க :P

லக்ஷ்மி - மிக்க நன்றிங்க. இந்த மாதிரி அறிவுப்பூர்மா யோசிக்கிறதால தானே திங்க் டாங்க்ன்னு டேக் லைன் வைச்சிருக்கேன் :)) சரி சரி நாலு விஷயம் தெரிஞ்சிக்கிட்டதுக்கு குரு தட்சிணையா உண்டியல்ல காச ஒழுங்கா போட்டுறுங்க...:))

Arun Prakash said...

Giant wheel-ல வாந்தி wheel ஆக்கி வித்தை காட்டி இருக்கீங்க!
பேஷ் பேஷ்...!

கைப்புள்ள said...

c

கைப்புள்ள said...

//ஜேம்ஸ்பாண்டு மாதிரி ரஷ்ய அழகியை பார்படாஸிலிருந்து விமானத்திலேயே அந்தர் பல்டி அடித்து பிக்கப் செய்து கொண்டுவருமளவுக்கு ட்ரெயினிங் குடுக்க அவர்கள் கேட்ட தொகை யந்திரன் படத்தில் அத்தனை ரஜினி ரோபோக்களுக்கும் பேண்டுக்கு மேல் போடும் இரும்பு ஜெட்டி வாங்கின செலவுக்கு ரெண்டு ரூபாய் குறைவு அவ்வளவு தான். ///

பதிவு முழுவதுமே டுபுக்கு டச்...கலக்கல் :)

Post a Comment

Related Posts