Thursday, June 24, 2010

பில்லியர்ட்ஸ்

லாங் லாங் அகோ சோ லாங அகோ என்று அழைக்கப்படுகிற சுமார் ஒன்பது பத்து வருடங்களுக்கு முன்னால் இங்கே இங்கிலாந்தில் ஒரு நண்பர் வீட்டில் சாப்பாட்டுக்கு அழைத்திருந்தார்கள். சும்மா கூப்பிட்டால் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு போவோம், அவர்கள் சாப்பாட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டதால, முந்தின நாளே பட்டினியாய் இருந்து வெற்றிவேல் வீரவேல்ன்னு குடும்பத்தோடு போய்வந்தோம். அவர்கள் வீட்டில் நண்பருடைய மாமனார் மாமியார் ஊரில் இருந்து வந்திருந்தார்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பஸ்தர்க்ள் வீட்டில் சம்மரில் பெரும்பாலும் ஊரில் இருந்து மாமனார் மாமியார் வந்திருப்பது சகஜம். முதல் தரமாய் வந்திருந்தால் - பாவம் முதல் இரண்டு வாரங்கள் வித்தியாசமாய் இருக்கும் ஊர், தட்ப வெப்பம், ஊரளவு இருக்கும் மால்கள், பிரஷ்ஷாய் கிடைக்கும் தக்காளி, கள்ளி சொட்டாய் கிடைக்கும் திக் பால், உட்கார்ந்து இலை போட்டு சாப்பிடும் அளவு சுத்தமாய் இருக்கும் ரோடுகள், சன்னம்மாய் துணியணிந்தாலும் துளியும் குளிராமல் உலவும் மாதர்கள் என்று வியந்து வியந்தே முதல் மூன்று வாரங்கள் அவர்களுக்கு பொழுது போய்விடும். அதற்கப்புறம் அவர்கள் ரொம்பவே பாவம். "ஊராய் இருந்தால் காலாற நடந்து கோயிலுக்கு போய் வரலாம் இங்க அடுத்த தெருவுக்கு போறதுக்கே அவன் ஆபீஸ்லேர்ந்து வர வேண்டியதாய் இருக்கு..எவ்வளவு நேரம் தான் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருப்பது" என்று ஆயாசம் வந்துவிடும். இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு யாராவது ஏஷியன்ஸைப் பார்த்தாலே "எங்களுக்கு மாயவரம் உங்களுக்கு...?" என்றளவுக்கு காய்ச்சல் வந்துவிடும்.

கூப்பிட்ட நண்பர்...நண்பர் என்றால் நெருங்கிய நண்பர் கிடையாது கொஞ்சம் தான் பழக்கம். எனவே ரொம்ப ஃபார்மலாய் "ஹௌ ஆர் யூ" கேட்டுவிட்டு தான் "சாப்பாடு ரெடியா"ன்னு டீஜென்டாய் படம் விட வேண்டியிருந்தது. பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு தண்ணி குடிக்கப் போவது மாதிரி "நைஸ் கிச்சன்" என்று சமையல் ஆகிவிட்டதா என்று நோட்டம் விட நழுவினேன். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மேலே மாட்டிக்கொண்டிருந்த பலூனை எடுத்து தரும் படி கேட்க, பக்கத்தில் இருந்த குச்சியை வைத்து பலூனை இழுத்து எடுத்துக் குடுக்கவேண்டியிருந்தது. அப்பொழுது அந்தப் பக்கம் வந்த நண்பரின் மாமனார் "அப்பவே உங்கள பார்க்கும் போதே நினைச்சேன்..நீங்களும் பூல் விளையாடுவீங்கன்னு" என்று குஷியாய் பிடித்துக் கொண்டார்.

எனக்கு மாமா எதைப்பற்றி சொல்கிறார் என்று புரியாவிட்டாலும், வெள்ளைக்காரர்கள் வழவழ கொள கொள ஜோக் மாதிரி புரியாமலே "ஹீ ஹீ ஆமா ஆமா..." என்று நடுவாந்திரமாய் சிரித்து வத்தேன். அடுத்த ஐந்து நிமிடங்கள் மாமா குஷியாய் பேசிக்கொண்டே "வாங்க கீழ மாப்பிள்ளை பூல் டேபிள் போட்டிருக்கிறார் ஒரு கேம் போடுவோம்" என்று கையை பிடித்து கூட்டிக்கொண்டு போய்விட்டார்.

நானும் மூனு சீட்டாய் இருக்குமோ என்று குழம்பிக் கொண்டே போன பிறகு தான் அவர் பில்லியர்ட்ஸ் பற்றிப் பேசுகிறார் என்றும் நான் பலூன் எடுக்க பயன்படுத்திய குச்சியை தான் மாம க்யூ என்றழைக்கிறார் என்றும் புரிந்தது.  இநத ஊரில் பூல் என்று விளிக்கிறதை எங்க ஊர் பஜனைமடத்தில் நானும் கன்னுக்குட்டி கணேசனும் பில்லியன்ஸ் என்று தான் சொல்லுவோம். சீனாதானா மாமா வந்து பில்லியர்ட்ஸ் என்று திருத்தி, ஞாயிற்றுக் கிழமை "குலமகள் ராதை" டி.டி சினிமாவுக்கு முன்னால் தேவுடு காக்கும் போது சில சமயம் டெல்லி தூர்தர்ஷனில் இந்த இழவை பார்த்துத் தொலையவேண்டியிருக்கும். "என்னடா பெரிய கேம்...இதோ இருக்கிற ஓட்டைகுள்ள பந்த அடிக்கிறதுக்கு அவ்வளவு பெரிய குச்சி...அத அந்த ஆள் குனிஞ்சு குனிஞ்சு வேற ஆங்கிள் பார்க்கிறான்...தூ ஒத்தயடி  அடிச்சா பந்து தானா போய் விழப்போறது...என்னம்மோ போ ஒரு சேலேஞ்சும் இல்ல..இந்த இழவுக்கு கோட் சூட் வேற...இந்த கேம் ரொம்ப ஈஸிடா எங்க வீட்டுல மடையில சத்தை அடைச்சி தண்ணி போகலைன்னா இத மாதிரி ஒரு குச்சிய வைச்சு என்னா குத்து குத்தியிருக்கேன் தெரியுமா...பார்க்கிறதுக்கு தான் கஷ்டமா இருக்கு ஆனா இந்த கேம் ரொம்ப ஈஸி தான்
"- கன்னுக்குட்டி கணேசனுக்கு இந்த விளையாட்டு கைவந்த கலை.

எனக்கும் இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஹம் ஆப் கே ஹைன் கௌன் ஹிந்திப் படத்தில் மாதுரி தீட்சித் புடவையை அந்தப்பக்கமாய் கட்டிக் கொண்டு மாடியிலிருந்து வரும் போது சல்மான் கான், கவிதை சொல்லி இந்த க்யு குச்சியை வைத்துக் கொண்டு லெப்ட் ரைட் சென்டர்ன்னு போட்டுத் தாக்கி மாதுரிக்கு ப்ராக்கெட் போடுவார். சுத்தி இருப்பவர்கள் எல்லோரும் "வரே வா வா" என்று புகழ்வார்கள்.......ஹூம்ம்ம்ம்ம்ம்.

மாமா வேற ஸ்னூக்கர் விளையாடனுமா இல்லை பில்லியர்ட்ஸான்னு ஜார்கனெல்லாம் போட்டு தாக்கிக் கொண்டிருந்தார். "நீங்க முதல்ல சொன்னேளே அந்த விளையாட்டு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்"ன்னு குத்துமதிப்பாய் சொல்லி வைத்தேன். நாம பார்க்காத விளையாட்டா என்று குச்சிய வாங்கி கிட்டிபுல் மாதிரி ஒரு போடு போட்டதில்  க்ரிக்கெட்டாய் இருந்தால் சிக்ஸர் குடுத்திருப்பார்கள். பந்து டேபிளை விட்டு எகிறிவிட்டது. அப்புறம் மாமா சல்மான் கான் மாதிரி லெவல் காட்ட நான் சிக்ஸர் சிக்ஸராய் அடித்து தாக்க...தங்கமணி அன்ட் கோ வேடிக்கைப் பார்க்க வந்துவிட்டது.

தங்கமணி நம்ம கேப்டன் விஜயகாந்த் படத்துல எதிர் கட்சி ட்ரெயினிங் எடுத்தவர். திறந்தவெளி ஜீப்பில் ஏன் எதுக்குன்னு எதைப் பற்றியும் கவலைப் படாமல் வெங்காயத்தை கடித்து வீசுகிற மாதிரி போகிற போக்கில் அலேக்காய் வெடிகுண்டை வீசி என் மானத்தை எக்ஸ்போர்ட் லைசென்ஸ் வாங்கி கப்பலேற்றும் விற்பன்னர்..


 "நான் என்னிக்கும் வயசுக்கும் பாரம்பரியத்துக்கும் மரியாதை குடுக்கிறவன்னு அதான் முழு திறமைய இன்னும் காட்டல"ன்னு சமாளித்தாலும்... தங்கமணி கருணை காட்டவில்லை. குஷியாய் "இவருக்கு கோல்ப் பந்தையும் பில்லியர்ட்ஸ் பந்தையும் கலந்து வைச்சா வித்தியாசமே தெரியாது இதுல இவர எதுக்கு இந்த விளையாட்டுக்கு சேர்த்தீங்க"ன்னு கரெக்ட்டாய் நம்ம பெருமையை எடுத்து விட ஆரம்பித்துவிட்டார். ஒருதரம் செகண்ட் ஹாண்டில் இந்த குச்சியை ஒரு சீமான் தள்ளுபடி விலையில் போட்டிருக்க, "பீரோக்கு அடியில எதாவது போச்சுன்னா எடுக்க வசதியா இருக்கும் வாங்கிப்போடுங்க"ன்னு அவர் சொல்லி "மொட்டைக் கம்புக்கு இத்தனை விலையா...எல்லாம் ஒன் பவுண்ட் ஷாப்பில பார்த்துக்கலாம் அங்க துடைக்கறதுக்கு துணியும் அட்டாச் பண்ணி தருவான்"னு நான் அந்தக் குச்சியை வாங்க ஒத்திவைப்பு தீர்மானம்  போட்ட கோபம் அவருக்கு.

"இல்ல மாமா எனக்கு இங்க லைட்டிங் கரெக்டா இல்ல, எல்லா லைட்டையும் அணைச்சுட்டு சினிமால வர்ற மாதிரி ஒரே ஒரு நாப்பது வாட்ஸ் பல்ப ஷேடோட நடுவுல கீழ வரைக்கும் தொங்கவிட்டா தான் எனக்கு ஆங்கிள் பார்த்து விளையாட வரும்னு அப்புறம் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகிவிட்டேன்.

சமீபத்தில் ஒரு கார் பூட் சேலில் மொத்தமாய் இந்த செட் வைத்திருந்தார்கள். டேபிள் இல்லாவிட்டாலும் ஷோகேஸில்  சும்மா ஒரு பந்தாவாய் இருக்குமேன்னு வாங்கிப் போடலமான்னு ஒரே சபலம் எனக்கு. பக்கத்திலேயே வேறு ஒரு சீமான் கோல்ப் மட்டை வைத்திருந்தார். குணம் நாடி குற்றம் நாடி...கோல்ப் மட்டை நல்ல காத்திரமாய் இருக்கு..எலியோ திருடனோ வந்தா அடிக்க உபயோகப் படும் என்று அதை அடுத்த தரம் வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

43 comments:

Porkodi (பொற்கொடி) said...

first thundu potukaren!

Porkodi (பொற்கொடி) said...

ஹைய்யோ ஹைய்யோ! தேடி போய் வாங்கிக்கறீங்களே குருதேவா.. :) எப்படியோ தங்கமன்னி சந்தோசமா இருந்தா சரிதேன்! :P

ஆக‌ என்ன‌ சொல்ல‌ வ‌ந்தீங்க‌, இந்த‌ அப்பா அம்மா ம‌த்த‌வ‌ங்க‌ மாதிரி அலுத்துக்காம‌ ஒரே என்சாய் ப‌ண்ணாங்க‌ன்னா? (ஆமா ஒரு கார் பூட் சேல்ல‌ இந்த‌ செட்டை பாத்த‌துக்கு இவ்ளோ ப‌ழைய‌ கொசுவ‌த்தியா?!! என்ன‌வோ இடிக்குதே..)

அபி அப்பா said...

ஆக அந்த மாயவரம் மாமாகிட்டே தோத்தாச்சுன்னு சுருக்கமா 97 வரில சொல்லிட்டீங்க:-)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கோல்ப் மட்டை நல்ல காத்திரமாய் இருக்கு..//

எதுக்கும் கீழ உக்காரும்போது பார்த்து உக்காருங்க...ஹா.ஹா..
கலக்கிப்புட்டீங்க அப்பு...

sriram said...

டுபுக்கு, எங்கய்யா உக்காந்து யோசிக்கறீங்க - இந்த மாதிரியெல்லாம் எழுத - சிரிச்சு மாளலை போங்க..
Client agreement பாக்கணும்னு தங்க்ஸ்கிட்ட சொல்லிட்டு படிச்சேன் - சிரிச்சு சிரிச்சு மாட்டிக்கிட்டேன்..
அடிக்கடி எழுது வாத்யார்...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ராம்ஜி_யாஹூ said...

Porkodi- me the 1stt aa

CS. Mohan Kumar said...

கன்னுக்குட்டி கணேசன் பார்ட் செம சிரிப்பு

Anonymous said...

Rumba naal kazhichu ethuthareenga..... itz gud.. Enjoyed..

BTW, howz ur movie project going on..? Unga padathula nadikka oru chance vangithaa nu yen husband ore thollai pannitu irukka.. :-)

-SweetVoice

பாலராஜன்கீதா said...

//அடிக்க உபயோகப் படும் என்று அதை அடுத்த தரம் வாங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்//
சொ.செ.சூ. ?
:-)

Bharath said...

தெய்வமே எங்கயோ போய்டீங்க.. அப்படியே கால்ப்க்கும் ஒரு கொசுவர்த்தி சுத்தினீங்க்னா நல்லாயிருக்கும்..

sekar said...

//முந்தின நாளே பட்டினியாய் இருந்து வெற்றிவேல் வீரவேல்ன்னு குடும்பத்தோடு போய்வந்தோம்.//

when I read this I literally had a burst of laugh.. couple of colleagues looked at me different (vellaikaranunga thaan)... Actaully I read imagining sivaji ganesan in Kandhan Karunai ... that explains it :)

sriram said...

ஏதோ படம் புடிக்கறேன்னு சொன்னியே - அது என்ன ஆச்சு வாத்யார்???

என்னிக்கும் அன்போட
பாஸ்டன் ஸ்ரீராம்

கைப்புள்ள said...

தெய்வமே! என்ன சொல்றதுன்னே தெரியலை போங்க. கொஞ்சம் காலை காட்டுங்க...சிரிச்சிக்கிட்டே தொட்டு கும்பிட்டுக்கறேன். டாப் டக்கர்ன்னேன்.
:)

Guna said...

Super nga, after a long time.

Kadaisi varaikkum, neenga vilayandathu Billiards-a, snooker-a nnu sollave illaye... :P

Porkodi (பொற்கொடி) said...

//Kadaisi varaikkum, neenga vilayandathu Billiards-a, snooker-a nnu sollave illaye... :P //

enna enna kostin idhu rascals!! avaruku therinja solla matara? naan sans! (neenga dont worry thala!)

Arun Prakash said...

ஹா ஹா ஹா... ரொம்ப நாளைக்கு அப்பறம் நல்ல காமெடி.

பத்மநாபன் said...

வெற்றிவேல் வீரவேல்ன்னு ஆரம்பிச்ச நகைச்சுவை நடை, மாயவரமெல்லாம் தாண்டி , கன்னுக்குட்டி கணேசனோடு மடையில அடப்பு எடுத்து, ஜுப்பர் சாத்து.

//நீங்க முதல்ல சொன்னேளே அந்த விளையாட்டு தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்// செந்தில் சொன்னமாதிரி , பூ வ பூ ன்னும் சொல்லலாம்,புய்ப்பம் ன்னும் சொல்லலாம் இல்ல நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம் (புஷ்பம் ) நகைச்சுவை ஞாபகம் வந்தது..சில சொற்கள் சுட்டு போட்டாலும் நுழைவதில்லை..நுழைந்தாலும் நிற்பதில்லை..

Porkodi (பொற்கொடி) said...

ama, Rams nu oruthar inga varuvare, where is he these days??

ராம்ஜி_யாஹூ said...

என்னதான் பதிவின் திரைக்கதை சூப்பராக இருந்தாலும், எங்கள் தல கன்னுக்குட்டி கணேசன் பதிவின் உள்ளே கௌரவ வேடத்தில் வந்த பிறகுதான் பதிவு சூடு பிடித்தது என்பதை மட்டற்ற மகிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.

கன்னுக்குட்டி கணேசன் ரசிகர் மன்றம்
சிவந்தி புரம்
பதிவு என் 488/81

அது ஒரு கனாக் காலம் said...

டேய் சுனா பானா, நீ கில்லாடிடா ... டுபுக்கு இப்ப தான் குச்சியை வாங்க நினைக்கிது, நீ சாம்பியன் டா ... உன்னை யாரும் அசச்சுக்க முடியாதுடா

- சுனா பானா

தக்குடு said...

டுபுக்கு அண்ணாச்சி! கலக்கல் பதிவு தலைவா!
//வெற்றிவேல் வீரவேல்ன்னு குடும்பத்தோடு போய்வந்தோம்//ஆமா சாப்பாடு!னு ஒரு பேச்சுக்கு சொல்லிட்டா போதுமே திண்ணைலையே ஒக்காந்து வெயிட் பண்ணி வளைச்சு கட்டர குரூப்பாச்சே நம்ப.....;)இந்த மாதிரி சான்ஸ் கிடைச்சா விடுவோமா!!.....:)

Kavitha said...

Pool? Swimming pool??? Ayyo neechal theiriyathennu oda vendiyathu thane?

Mahesh said...

நானும் என் ஃப்ரெண்டைக் கூப்பிட்டபோது சொன்னான்... "டேய்... இது காவா அடப்பு எடுக்கற மாதிரி இருக்கே... கார்ப்பரேஷன் வேலைக்கு அப்ளை பண்றயா?"

Rams said...

Porkodi..I am back..Solla mudiyaadha sila sondha prachanaigalaal inge adikkadi vara mudiyavilai...thaangadha mana ulaichal (dubukku style)...now things are a bit better..thanks for remembering me..

Rams said...

BTW..Dubukku..Hilarious post..Had a good laugh after a long time..

லங்கினி said...

Kalakkal...

அறிவிலி said...

நீங்க பில்லியர்ட்ஸ் குச்சி, கால்ஃப் மட்டைன்னு வாங்கி வைக்கிறீங்க.ஒர்த்தரு போன வாரம் "காட்டா பெல்ட்" வாங்கி வூட்ல செவுத்துல மாட்டி வெச்சசிருக்காரு.இத்தனைக்கும் இந்த ஊர்ல ஓணான் கூட இல்ல.

emohansydney said...

கடைசி வரை அன்னைக்கு என்ன சாப்பாடுன்னு சொல்லவேயில்லியே?

Anonymous said...

மிக அருமை . தொடர்ந்து எழுதுங்கள்.

Subramanian V
Bangalore

Anonymous said...

First time here...Hilarious!!! ..thought it would culminate in the food getting over, but a nice twist at the end..

balutanjore said...

dear dubuks

ha ha ha ha

please continue

balu vellore

Anonymous said...

:-)


anbudan,
Karthik.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//லாங் லாங் அகோ சோ லாங அகோ என்று அழைக்கப்படுகிற சுமார் ஒன்பது பத்து வருடங்களுக்கு முன்னால் இங்கே இங்கிலாந்தில் ஒரு நண்பர் வீட்டில் சாப்பாட்டுக்கு அழைத்திருந்தார்கள்//
ஐயோ பாவம்... அதுக்கு அப்புறம் யாருமே கூப்பிடலையா என்ன? அவ்ளோ ரகளை பண்ணிட்டீங்களோ.... (ஹி ஹி ஹி)

//நானும் கன்னுக்குட்டி கணேசனும் பில்லியன்ஸ் என்று தான் சொல்லுவோம்//
அவ்ளோ ப்ரில்லியன்ட்ஆ நீங்க....good good...

//சுத்தி இருப்பவர்கள் எல்லோரும் "வரே வா வா" என்று புகழ்வார்கள்.......ஹூம்ம்ம்ம்ம்ம்//
அதானா மேட்டர்... இதை டைரக்ட்ஆவே சொல்லி இருக்கலாமே டைரக்டர் சாப்

//இவருக்கு கோல்ப் பந்தையும் பில்லியர்ட்ஸ் பந்தையும் கலந்து வைச்சா வித்தியாசமே தெரியாது இதுல இவர எதுக்கு இந்த விளையாட்டுக்கு சேர்த்தீங்க"ன்னு கரெக்ட்டாய் நம்ம பெருமையை எடுத்து விட.//
"உங்களை தங்கமணி அன்றி யார் அறிவார்"

//ஒருதரம் செகண்ட் ஹாண்டில் இந்த குச்சியை ஒரு சீமான் தள்ளுபடி விலையில் போட்டிருக்க//
யாரு நம்ம டைரக்டர் சீமானா? இல்ல சும்மா கேட்டேன்...(நோ டென்ஷன் நோ டென்ஷன்)

//எல்லா லைட்டையும் அணைச்சுட்டு சினிமால வர்ற மாதிரி ஒரே ஒரு நாப்பது வாட்ஸ் பல்ப ஷேடோட நடுவுல கீழ வரைக்கும் தொங்கவிட்டா//
அதாவது இருட்டுல யாரும் பாக்காத நேரமா பாத்து பந்தை கைல எடுத்து அப்படியே குழில தள்ளிடலாம்னு பிளான்... கரெக்ட் தானே? (ஹா ஹா ஹா)

பினாத்தல் சுரேஷ் said...

டப்பா கேமுங்க இது. கத்துக்கறது ரொம்ப சுலபம். குச்சியால பந்தை ஓக்கி அடிக்கணும். துணிவலைக்குள்ள நுழைஞ்சா சிக்ஸர். இல்லையா, குழியில விழுந்துடுச்சா, அதை கோல்னு சொல்லுவாங்க. எதிர்ல விளையாடற ஃபிகர்கள் நன்மை கருதி அந்த பால்லேயே நம்பரை எழுதியும் வச்சிருப்பாங்க சில பணக்காரங்க.

என்னை மாதிரி நாலும் அறிஞ்சவன்கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கங்க.

Dubukku said...

பொற்கொடி - ஏங்க நானே ஏதோ கொசுவத்தி சுத்தறேன்...இதுல போய் காரண காரியம் தேடிக்கிட்டு :))) ஹைய்யோ ஹைய்யோ

அபி அப்பா - அதே அதே :)))

பட்டாபட்டி - நன்றி ஹை அது சரி

ஸ்ரீராம் - இது பாஸ்டன் அண்ணாச்சி தானே சந்தேகமா இருக்கே..:))) மிக்க நன்றி தல

ராம்ஜி - முதல் முறையா பதிவு பத்தி சொல்லாம போய்ட்டீங்க..பரவால்லா பர்ஸ்ட் டைம்ங்க்ரதால பெஞ்ச் மேல நிக்கவேண்டாம் அடுத்ததரம் கவனமா இருக்க்னும் என்ன அப்படீன்னு சொல்ல வந்தேன் நல்ல வேளை அப்புறமா வந்து கமெண்ட போட்டுட்டீங்க

மோகன் குமார் - மிக்க நன்றி

ஸ்வீட்வாய்ஸ் - சில பல வேலைகள்ல மாட்டிக்கிட்டு இருகேங்க அதான் எழுத முடியல...

பாலராஜன்கீதா - உங்க கமெண்ட் பார்த்த உடனேயே அந்த எண்ணத்த மாத்திக்கிட்டேனே :)))

பரத் - ஓ அது கால்பா மாத்திட்டாய்களா :P

சேகர் - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு...கந்தன் கருணை :)))))

ஸ்ரீராம் - இன்னும் ப்ளானிங் ஸ்டேஜ் தான் ஊருக்கு போய்ட்டு வந்து இன்னும் சுருக்கா களத்துல இறங்கனும்

கைப்புள்ள - அண்ணாச்சி நலமா...என்னங்க இப்படி ஊக்கமா கமெண்டு போட்டதுக்கு நான்ல உங்க கால காட்ட சொல்லனும்

குணா - மிக்க நன்றி ஹை...அதுவந்து ரொம்ப நாளாச்சா அதான் என்ன விளையாண்டேன்னு எனக்கே நியாபகம் இல்ல..ஆனா அது ரெண்டுல ஒன்னுங்கிறது மட்டும் நியாபகம் இருக்கு :P

பொற்கொடி - அதே தான் எனக்கு மறந்து போச்சு :))))) (ஏங்க ராஸ்கல்ஸ்ன்னு கோவப் படுறீங்க...சாந்தம் சாந்தம்)

அருண் - மிக்க நன்றி தல

பத்மநாபன் - வாங்க மிக்க நன்றி. ஆமாமாமா...அத்தோட அவரு எதப் பத்தி சொல்றார்ன்னு தெரியனும்ல ::))

பொற்கொடி - நோட்டிஸ் ஒட்டின காசு உண்டியல்ல போட்டாச்சா?

ராம்ஜி - அதானே என்னாடா நீங்க பதிவ பத்தி ஒன்னும் சொல்லாம போய்டீங்களேன்னு பார்த்தேன்.

சுந்தர் - சார்...அடெ அடெ அடெ..நீங்க அல்ரெடி வாங்கியாச்சா கலக்குறீங்க போங்க

தக்குடு - நன்றி ஹை ...ஆமா ஆமா தொழில்ன்னு வந்துட்டா சீரியாயிடுவோம்ல

மஹேஷ் - ஹா ஹா கரெக்டா தான் சொல்லியிருக்கார் உங்க நண்பர்

ராம்ஸ் - எல்லம் நல்லபடியாய் சரியாகி சீக்கிரம் வாங்க இங்க பாருங்க கவுத்தறதுக்கு ஒரு ஆள் இல்லாம பாஸ்டன் அண்ணாச்சி திக்குமுக்காடுகிறார் :P

லங்கினி - மிக்க நன்றி ஹை மேடம்

அறிவிலி - அவர இந்த காய்ச்சு காய்சுறீங்களே எப்படி தான் சமாளிக்கிறார் :))))

மோகன் தாஸ் - நீங்க தாங்க கரெக்ட்டா கேட்டீங்க,...சுமாரான சாப்பாடுதாங்க...முதல்லயே தெரிஞ்சிருந்தா ரிட்டயர்ட் ஹர்ட் ஆகியிருப்பேன்...

Dubukku said...

சுப்ரமணியன் - மிக்க நன்றி ஹை

பாலு - மிக்க நன்றி ஹை

கார்த்திக் - :)) மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி - ஏங்க வரி வரியா கோட் பண்ணியிருக்கறதப் பார்த்து ஏமாந்துட்டேன்...நீங்க வரி வரியா போட்டு எங்க வீட்டு தங்கமணி ரேஞ்சுக்கு என்ன பொட்டு கலாசியிருக்கீங்க...இது நோ டென்ஷன் நோ டென்ஷன் ஹா ஹா ந்னு ஃபில்லேர்ஸ் வேற பொட்டு நல்ல ச்மாளிச்சிருக்கீங்க நடத்துங்க :))))

ராம்சுரேஷ் - அண்ணா இதன நாளா நீங்க இல்லியே பக்கதுல....:))) அந்த நம்பர் இதுக்கு தானா :))) கலாசுறீங்க போங்க

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நல்ல சரளமான நகைச்கசுவை நடை.

Ramya said...

konja naladhan unga blog padikkaren. enna supera ezhudhareenga neenga! thamizhla paddikardhu oru thani suvai.

CS. Mohan Kumar said...

உங்களின் இந்த பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_17.html

Jackason said...

Enna thaan Saapitinga.....!

---------------------------
@Jackson

Outsourcing data entry

Dubukku said...

ஆட்டையாம்பட்டி அம்பி - மிக்க நன்றி ஹை உங்க பாராட்டுக்கு

ரம்யா - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. மிக ஊக்கமாக இருக்கிறது உங்க பாராட்டு

மோகன் குமார் - மிக்க நன்றி தல. எழுதாமல் இருப்பவர்ன்னு குட்டியிருக்கீங்க. ஒத்துக்கொண்டு மகிழ்சியோடு குனிந்து வாங்கிக் கொள்கிறேன். :))

Anonymous said...

aaaaaaaaaaaaaaaaapppppppppppppppppppppppappppppppppppa!!!! what a writing!!!! you are GREAT.laughed after a long long time. no words to thank you

Post a Comment

Related Posts