Tuesday, July 14, 2009

அவன்

சிகரெட் வாடை மூக்கைத் தாக்கிய போது தான் அவன் பஸ் ஸ்டாப்பில் என் பின்னால் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவன் எப்போது வந்தான், திரும்பி லேசாக அவனைப் பார்த்த போது எனக்கு கலவரமாகியது. நல்ல பரட்டையாய் தலை, நாலு நாள் சவரம் செய்யாத தாடி, ஒழுங்கு படுத்தாமல் கொஞ்சம் தாறுமாறாக வளர்ந்த மீசை. லுங்கி அணிந்திருந்தான். சட்டையில் மேல் பட்டன் போடாமல் முழுக் கையை மடக்கிவிட்டிருந்தான். தலை முடி அழுந்த வார முயற்சித்து தோற்றுப் போயிருந்தது தெரிந்தது.

பேங்கிலிருந்து லட்ச ரூபாயை இப்படி ஹாட் கேஷாக எடுத்துப் போக தனியாளாக வந்திருக்க கூடாது. சேகரையாவது துணைக்கு கூட்டி வந்திருக்க வேண்டும். இப்படி சினிமாவில் வருவது மாதிரி வானம் தீடீரென்று இருட்டி இந்த ஒதுக்குப் புற பஸ்ஸடாப்பில் தனியாக நிற்பேன் என்று சத்தியமாக கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. இப்படியா ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் பேங்கை திறப்பார்கள். "ஆட்டோல மட்டும் ஏறிடாத...இந்த மாதிரி நிறைய கேஷ் எடுக்கும் போது உள்ளையே ஒருத்தன் நோட்டம் பார்த்து தகவல் குடுத்திருப்பான்...இவன் சும்மா ஆட்டோல வர்ற மாதிரி வந்து ..தெரு முக்குல இன்னொருத்தன் முன்னாடி ஏறிப்பான்...அப்புறம் சவுக்குத் தோப்புல உன்னை கட்டிப் போட்டுட்டு பெட்டியோட அவங்க கம்பி நீட்டிடுவாங்க" - அவசரமாய் பணம் எடுக்க போகிறேன் என்று பக்கத்து வீட்டுக்காரார்கள் குடுத்த இலவச அட்வைஸில், வந்த ஒரு ஆட்டோவையும் வேண்டாமென்று சொல்லிவிட்டு இப்படி அம்போவென்று பஸ்ஸுக்கு நின்று கொண்டிருக்கிறேன்.

சிகரெட்டை பீடி மாதிரி பிடித்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவன் என்னையே முறைத்துக் கொண்டிருந்தது எனக்கு முதுகில் ஊறியது. அவன் முகம் எங்கேயோ பார்த்தது மாதிரி வேறு இருந்தது. போன வார தினமலரில் எச்சரிக்கை விளம்பரத்தில் எதிலாவது பார்த்தேனா என்று யோசிக்க ஆரம்பித்தேன். இல்லை அன்று ஆபீஸுக்கு பக்கத்தில் நடந்த சண்டையில் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தானே அவனா...-ம்கூம்...வேறு எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

"டைம் என்னா சார்" - அவன் கேட்ட போது எனக்கு உதறல் கூட ஆரம்பித்தது. பாழாய் போன பஸ் வந்து தொலைய மாடேங்கிறதே என்றிருந்தது.

அவனும் என்னுடன் வந்து நிற்க ஆரம்பித்த போது எனக்கு டென்ஷன் அதிகமாக ஆரம்பித்தது. சைட் வாக்கில் பஸ்ஸை நோட்டம் விடுவது போல் பார்த்தில் மூளையில் மின்னல் மாதிரி வெட்டியது. எங்கே பார்த்தேன் என்று நியாபகம் வந்து விட்டது.

திரும்பவும் பார்த்ததில் அவனுடைய சைட் போஸ் ஊர்ஜிதப்படுத்தியது. அடப்பாவி அவனா இவன்..சந்தேகமேயில்லை அவனே தான். யாரு என்று தெரிந்ததற்கப்புறம் கேட்டுவிட எனக்கு நாக்கு பரபரத்தது.

"எக்ஸ்யூஸ்மீ... நீங்க இப்போ சமீபத்துல வந்த "ஒரு கமர்கட்டும் நாலு கடலை மிட்டாயும்" படத்துல நடிச்ச ஹீரோ தானே?"

அவன் முகத்தில் ஒரு ஆச்சரியம். ஆனால் தீனமாய் மறுத்தான்.

"இல்லீங்க அது நான் இல்லை"

"ஓ..சாரி படப் பெயரைக் குழப்பிட்டேன்...நீங்க "நேத்து வைச்ச கஞ்சி" அந்த ஹீரோ தானே உங்கள சைட் போஸில பார்த்த அப்புறம் தான் ஸ்ட்ரைக் ஆச்சு "

"இல்லீங்க...நீங்க வேறங்க...நான் அந்த படத்துக்கு ஹீரோவா செலெக்ட் ஆகி இருப்பேன்...நீங்க சொன்ன அதே சைட் போஸில நான் கொஞ்சம் படிச்சவன் கணக்கா டீசென்டா இருக்கேனாம்..அதுனால வேண்டாம்ன்னுட்டாங்க..இப்போ மூக்கின்னு ஒரு படத்துக்கு அனேகமா செலெக்ட் ஆகிடுவேன்னு நினைக்கிறேன் ஸ்க்ரீன் டெஸ்டெல்லாம் நேத்து தான் முடிஞ்சிது...உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கனும்"

24 comments:

Anonymous said...

oh naan dhan first aaa? padichutten... vazhakkam pola supre.. mani enna 12:42 aa anga? kalakkunga ponga! :)

டவுசர் பாண்டி said...

தலீவரே !! இப்பதான் மொத தபா உன் ஊட்டாண்ட வர்றேன் , சொம்மா !!! பச்ச மொளக்கா
கட்சா மேரி கீதுபா !! மேட்டரு, ( ரூம்பு போட்டு யோசிப்பாங்களோ ). சூப்பர் பா !!

குப்பன்.யாஹூ said...

nice short story

rapp said...

உங்களுக்கு விருது கொடுத்திருக்கேன். நீங்களும் தொடருங்களேன்.

ரவி said...

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது...

வாழ்த்துக்கள்........!!!!!!

குப்பன்.யாஹூ said...

u r getting award is like Kamalhaasan getting filmfare awards,

Senthazal Ravi- how to give all awards at one click, Let me give all awards (various names, swarasyam, buterfly, top1..) to Dubukku.

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

Mahesh said...

ஐ.. நல்ல ட்விஸ்ட்...

அறிவிலி said...

படத்தோட பேரெல்லாம் சூப்பரா இருக்கு. ஃப்லிம் சேம்பர்ல ரிஜிஸ்டர் பண்ணி வெச்சிருங்க.

பாசகி said...

உங்களமாதிரி அழகான ஆசாமியை விட்டுட்டு மொக்கை பசங்களையெல்லாம் ஹீரோவா போடற தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சரியான சவுக்கடி :)

(என்னோட வலைப்பதிவுக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்கண்ணா. உங்க பதிவெல்லாம் படிச்சு impress ஆகித்தான் blog ஆரம்பிச்சேன். நீங்க வந்தது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, thanks again.)

Girl of Destiny said...

Enjoyable read and nice digs at the present day 'heroes' and movies :-)

priyamanaval said...

nice one...

Anonymous said...

unga blog romba naala follow pannaren romba nalla ezhudhaeenga.. unga movies are also very good :)...

i came to know that u r residing in UK... can u please guide me in one important decision...

London city la engineering college lecturer job ku 34000 GBP la i have got an offer... indha salary london la irukaradhuku decent salaryaa nu konjam solla mudiyuma... can i live with my wife in this salary inlondon... also can u tell me what is the average pay package for software engineers in London... please help me with this information will be of great help... romba helpfulla irukum.. konjam help pannunga...
Regards

Murthi

sriram said...

இதன் மூலம் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பிரதி மாதம் 14 ம் தேதி அண்ணன் டுபுக்கார் இடுகை இடுவார், அதுவும் யாருக்கும் புரியாது.
எனவே வீணாக தினமும் எட்டிப்பார்த்து என்னைப்போல் நோக வேண்டாம்.

யோவ் டுபுக்கு, நீ எடுக்குற படம்தான் யாருக்கும் புரியாதுன்னா, கதையும் அப்படியே இருக்கு, கூடவே ஒரு கோனார் நோட்ஸ் போடவும்.

அப்புறம், Lecturer க்கே அட்வைஸ் பண்ற அளவுக்கு தில்லாலங்கடியா நீ?
(just kidding, Murthi - r_ramn@yahoo.com is Ranga's email ID, write to him personally and need not share your sensitive information in a public forum)

என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

Unknown said...

interesting story..d ending was too good

Karthik K Rajaraman said...

Good one!
:)
Have dubukku blogpost in igoogle homepage & get udpates.

டகிள் பாட்சா said...

டுபுக்கு

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி மண்டையிலே ஏதாவது அடி பட்டிருச்சா. நீங்க் எழுதறதெல்லாம் ரொம்ப கொழப்பமாகவே இருக்கு. நல்ல டாக்டரா பாத்து Brain scan செஞ்சுக்கறது நல்லது அப்பு.

EdieTeddy said...

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு :D

ச.சங்கர் said...

சினிமாவெல்லாம் டைரக்ட் பண்ணுற ரேன்ஞ்சுக்கு யோசிப்பீங்கன்னு பாத்தா , குமுதத்துக்கு ஒரு பக்கக் கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களே ( இல்லை சினிமாவுக்கு இப்படித்தான் யோசிக்கணுமா) :)

Dubukku said...

அனானி - வாங்க. மிக்க நன்றி ஹை. ஆமாம் ராத்திரி போட்டது. 12:42க்கு கண் முழிச்சு படிச்ச உங்க புனைப் பெயரையாவது போட்டிருக்கலாமே?

டவுசர் பாண்டி - வாங்க பாண்டியண்ணே...சலாம் வெச்சிக்கறேன்பா...ரெம்ப டாங்கஸ்ண்ணே...உங்க வூட்டாண்டையும் இதோ வந்துகினே இருக்கேம்பா...

குப்பன் - நன்றி குப்பன் அண்ணே...உங்க தொடர்ந்த ஆதரவு மிக்க சந்தோஷமா இருக்கு. ஆஹா அந்த அவார்டு...ஹி ஹீ என்ன தவம் செய்தனை...மிக்க நன்றி சாரே.

ராப் - ஆஹா மிக்க நன்றி மேடம் என்ன தவம் செய்தனை...கண்டிப்பா தொடறேன்..ஏற்கனவே பூ அவர்கள் குடுத்ததும் ஜெய்ஸ்ரீ மேடம் குடுத்ததும் பெண்டிங் இருக்கு...எல்லாட்தையும் சேர்த்து தொடர்ந்திடுவோம்.

செதழல் ரவி - வாங்க ரவி. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு.

குப்பன் - தலைவரோடு கம்பேர் பண்றதெலாம் என்னகே ஓவரா இருக்குங்க :))) ஆனாலும் உங்க அன்புக்கு மிக்க நன்றி.

ஆப்பு - வாங்க ஆப்பு சார்...பஞ்ச் லைன் சூப்பரா இருக்கு...நடத்துங்க... :))

மகேஷ் - நன்றி ஹை

அறிவிலி - அப்பிடீங்கிறீங்க....செஞ்சிருவோம் :)))

பாசகி - பார்த்தீங்களா நீங்க என்ன வைச்சு காமெடி பண்றீங்க...நான் சும்ம கலாசிகினு இருக்கேன். ஒரு காலத்துல அரவிந்த் சாமின்னு ஆரம்பிச்சு...சூர்யா வரை நம்பள ஆட்டதுக்கே சேர்த்துக்க மாட்டேன்னுட்டாங்க. இப்போ தங்கமணியே நீங்க பேசாம டைரக்டரா போகறதுக்கு பதிலா ஹீரோவுக்கு வேணா ட்ரை பண்ணுங்களேன் ஈசியா இருக்கும் மாதிரி தெரியுதுன்னு நக்கல் விடுது வீட்டுல :))

கேர்ல் ஆஃப் டெஸ்டினி - வாங்க...சும்மா டமாசு பண்ணினேன் அவ்வளவு தான் ஹீ நன்றி மேடம்.

ப்ரியமானவள் - மிக்க நன்றி மேடம்
மூர்த்தி - பளாக் பற்றிய பாராட்டுக்கு மிக்க நன்றி. மெயில் விபரங்கள் உதவியாய் இருந்தது பற்றி சந்தோஷம்.

ஸ்ரீராம் - வாங்க சார்...நீங்க கேட்டு போடாலமா.. அதாவது இந்த கதையின் உட் பொருள் தற்கால தமிழ் பட ட்ரெண்டு. இந்தக் கதையில் கதாசிரியர், தொடர்ந்து வரும் தற்கால தமிழ் படங்களில் மில்கி சாக்லேட்டி ஹீரோக்கள் போய் ஒரே பரட்டை தலை, தாடி மீசையுடன் வரும் கிராமத்து வேஷ ஹீரோக்களை சுட்டிக் காட்டுகிறார். அரவிந்த் சாமி முதல் சஞ்சய் ராமசாமி வரை கட்டிக் காத்த தமிழ் கூறும் சினிமா உலக ட்ரெண்ட் உடைந்து போய்விட்டதை ஆசிரியர் அங்கதம் புரிகிறார்.
ஆபீஸர்....நீங்க தமிழ் படமெல்லாம் பார்த்து மாமாங்கம் ஆகிவிட்டதுன்னு நினைக்கிறேன்...அதான் பிரியலை. கொஞ்சம் அப்பப்போ டமீல் படங்கள் பாருங்க சார்...

காய்த்ரீ - டேங்க்ஸ் மேடம்

தேஜாவைஸ் - மிக்க நன்றி. ஓ கூகிள் ரீடரும் டரை செய்யலாம்... :)

டகிள் பாட்சா- ஆபீஸர்....நீங்களும் தமிழ் படமெல்லாம் பார்த்து மாமாங்கம் ஆகிவிட்டதுன்னு நினைக்கிறேன்...அதான் பிரியலை. ஸ்ரீராமுக்கு குடுத்திருக்கும் கோனார் நோட்ஸை கொஞ்சம் காப்பி அடிச்சிக்கோங்க ப்ளீஸ். கொஞ்சம் அப்பப்போ டமீல் படங்கள் பாருங்க சார்...மற்றபடி நீங்க சொன்னீங்கன்னு டாக்டர் கிட்ட ஸ்கேன் எடுத்தேன்...கன்பர்ம் பண்ணிட்டார் மூளை மாதிரி ஏதோ இருக்குன்னு :)))

எடி டெடி - வாங்க முதல் முறை கமெண்டியிருக்கீங்க மிக்க நன்றி.

சங்கர் - இல்லீங்க...ஒரு வரை முறையே (அதாவது ...வட்டம் சதுரம்ன்னு பவுண்ட்ரீ :)) ) இல்லாம எழுதனும்ன்னு இங்கே கிறுக்கிகிட்டு இருக்கேன்...:)) மத்தபடி டைரக்ட் பண்ணின்னா அது உங்க தலைஎழுத்து அவ்வளவு தான் :))) உங்க ப்ரொபைல் பார்க்க முடியலீங்களே...(உங்க ப்ளாக் லிங்க்க்குகாக பார்த்தேன் சுட்டி கிடைக்குமா?)

Cable சங்கர் said...

நைஸ்...

ச.சங்கர் said...

///உங்க ப்ரொபைல் பார்க்க முடியலீங்களே...(உங்க ப்ளாக் லிங்க்க்குகாக பார்த்தேன் சுட்டி கிடைக்குமா?)///

dhanyanaanen :)

http://ssankar.blogspot.com/

மங்களூர் சிவா said...

/
"ஒரு கமர்கட்டும் நாலு கடலை மிட்டாயும்"
/
/
"நேத்து வைச்ச கஞ்சி"
/
/
மூக்கி
/


:)))

Anonymous said...

"Katrathum Petrathum" il Vijaiடம Sujatha Vanki Katti Kondathu than ninaivukku Varukirathu.

Post a Comment

Related Posts