Monday, July 20, 2009

அராகிஸ் ஹைப்பொகியா

"லீட்ஸ் போகும் ட்ரெயின் போய்விட்டதா...?"

"இன்னும் இல்லை ஆனால் நீ போய் பிடிப்பதற்க்குள் கிளம்பினாலும் கிளம்பிவிடும், அன்டர்வேரில பாம் கட்டி தொங்கவிட்ட மாதிரி நீ ஓடினால் ஒழிய ட்ரெயினை பிடிப்பதற்கு சான்ஸே இல்லை. ஒருவேளை பிடித்துவிட்டாயானால் லீட்ஸில் இறங்கும் போது உனக்கு ஒரு கோப்பை குடுக்க செய்தி அனுப்புகிறேன்"

"உன் எடை அனேகமாக தொன்னூற்றி இரண்டு கிலோ இருக்குமே..."

"...?"

"இல்லை உனக்கு இருக்கும் கொழுப்பை வைத்து உன் எடையை ஒரு அனுமானம் செய்தேன்..." சொல்லிவிட்டு அந்த ரயில்வே சிப்பந்தியை திரும்பிப் பார்க்காமலேயே பாம் வைத்தது மாதிரி ஓடியதில் ட்ரெயினை பிடித்தேவிட்டேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி உட்கார்ந்திருந்த இருபத்தி சொற்ப எண்ணிக்கைக்கு இன்னும் கொஞ்சம் நேரம் நின்று கூட்டத்தை ஏற்றிப் போனால் ரயில்வே நஷ்டத்தை குறைக்கலாம் என்று தோன்றியது.

கிடைத்த ஒரே ஒரு ஜன்னலோர இருக்கைக்கு எதிரே பை மட்டும் இருந்தது ஆளை காணோம். ரொம்ப தள்ளி இரண்டு இந்தியப் பெண்மணிகள் எதிரும் புதிருமாய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. என்னை மாதிரி நீங்களும் மூளையை ரொம்பவே கசக்கி யோசித்திர்களானால் கண்டுபிடித்துவிடுவீர்கள். பிரபுதேவா படங்களில் அவர் நடனமமைத்த பாட்டுகளில் கதாநாயகனுக்கு இடமும் வலமுமாக இரண்டு பெண்கள் இடுப்பில் வட்டமாக கொட்டு வைத்துக்கொண்டு குலுக்கல் குத்தாட்டம் போடுவார்கள். ஒருவர் கொஞ்சம் வஞ்சனையில்லாமல் திடகாத்திரமாக இருப்பார்...இன்னொரு பெண்மணி ஒடிசலாய் மாடலிங் கச்சிதமாய் இருப்பார். பத்துக்கு ஆறு படங்களில் விஜய் இவர்களுக்கு நடுவில் கழுத்தில் கர்சீப் சகிதம் நட்பைப் பற்றியோ, உலகத்தைப் பற்றியோ நீயும் நானும் என்று உங்களைப் பார்த்து தத்துவ வரிகள் பாடிக்கொண்டிருப்பார். இவர்களும் சளைக்காமல் சுத்தி சுத்தி ஆடுவார்கள். அவர்கள் இருவரும் டேன்ஸ் பெண்மணிகள் மாதிரியே இருந்தார்கள்.

ஆனால் அவர்கள் நம் கதைக்கு உப்புப் பெறமாட்டார்கள். நீங்கள் அந்தப் பெண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த கொண்டிருந்த போது என் எதிரே வந்து உட்கார்ந்த காக்கேசிய (வெள்ளைக்கார) பதுமையை தவறவிட்டுவிட்டீர்கள். கண்கள் நாலாப் பக்கமும் இருக்கனும்..இல்லாட்டா இந்தக் காலத்துல தூக்கி சாப்பிடுவாங்க. நம் பதுமை மிக அழகாய் இருந்தாள். கருப்புக்கும் பிரவுனுக்கு நடுக் கலரில் இருந்த தலை முடி அவளை பளிச்சென்று காட்டியது. கல்யாணமாகாத என்னை மாதிரி இருபத்தைந்து வயது இளைஞர்களை சோதிப்பதற்காகவே கடவுள் அனுப்பி வைத்த மாதிரி இருந்தது. பெத்தாய்ங்களா செய்ஞ்சாங்களான்னு டவுட்டே வரவில்லை ...கண்டிப்பாக செய்திருப்பார்கள்.

"ஹலோ..எப்படி இருக்கிறீர்கள்" கூச்சமே இல்லாமல் அராகிஸ் ஹைப்பொகியா சாகுபடியை ஆரம்பித்தேன்(அதாங்க கடலை). இந்த ஒரு விஷயத்திற்காகவே வெள்ளைக்காரர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். யாரிடம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.

"நான் நலம் நீங்கள்..?" கண்டிப்பாய் திரும்ப கேட்பாள் என்று தெரியும்.


"உங்களை பார்க்கும் வரை நன்றாகத் தான் இருந்தேன்..." "..." அவள் மணிரத்னம் படம் பார்த்ததே இல்லை என்று அப்பட்டமாக தெரிந்தது.

"நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்"

"நன்றி.." நீங்களும் அழகாக இருக்கிறீர்கள் என்று அவள் திரும்பச் சொல்லுவாள் என்று எதிர்பார்த்தது என் தப்பு. கீதையில் கிச்சு சொன்னதை நியாபகப் படுத்திக்கொண்டேன்.

"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது எனக்கு..." யோசிக்க கூட இல்லாமல் அவள் உதட்டில் கசிந்த புன்னகை ஆயிரம் நக்கல் செய்தது. சே அழகாய் இருக்கிறாள் என்று சொன்னதற்கு முன்பு சொல்லி இருக்கவேண்டும். எனக்கு ஏன் அழகான பெண்களை எல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று தெரியவில்லை. வெள்ளை தோலுக்கு அம்சமான கலரில் உடையணிந்திருந்தாள். சீசனுக்கு பூக்கும் பூக்களுக்கு ஏத்த மாதிரி உடையை தேர்ந்தெடுப்பாள் போலும். உறுத்தாத கலரில் மேட்ச்சிங்காய் நெயில் பாலீஷ்.

"நீங்கள் மங்கையர் மலர் படிப்பீர்களா...?"

"..மங்கேயெ....???" அவள் இதழ் பெயரை எசகுபிசகாய் இழுத்த போதே தெரிந்து விட்டது கண்டிப்பாக படித்திருக்க மாட்டாள்.

"இல்லை...டெய்லி பன்னீரில் ரோஜா பூவைப் போட்டு ரெண்டு மணி நேரம் அழுக்கு துணியை ஊறவைப்பது போல கையை ஊற வைத்தால் கைகள் இந்த மாதிரி பட்டு போல இருக்கும் என்று எங்க ஊர் மங்கையர் மலரில் கீரனூர் பாக்யலட்சுமி டிப்ஸ் குடுத்திருந்தார்..ஒருவேளை படித்துவிட்டு ட்ரை செய்திருப்பீர்களோ என்று கேட்டேன்..." இந்த முறை அவளின் பலமான புன்னகை நான் ஜொள்ளு விடுவதாக அனர்த்தம் செய்து கொண்டதை பறை சாற்றியது. தலைக்கு மேலே போன பின் ஜானென்ன பீட்டரென்ன என்று நானும் முக்காடை தூக்கிவிட்டேன்.

வெள்ளைக்கார பெண்மணிகளின் வயதை கண்டுபிடிப்பது மட்டும் மிக கடினமான விஷயம். நிறைய முப்பத்தி சொச்சத்தை எல்லாம் இருபத்தி சொச்சம் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கேன். பார்க்க அவ்வளவு இளமையாக இருப்பார்கள். இவளுக்கு அனேகமாய் என்னை விட இரண்டு வயது கூட இருக்கலாம் ஆனால் இருபது மாதிரி தான் தெரிந்தாள். டெண்டுல்கரை ரோல் மாடலாய் தத்து எடுத்துக் கொண்டு சாகுபடியை தொடர்ந்தேன்.

"உங்களுக்கு லீட்ஸா..."

"இல்லை நியூகாஸில்..லீட்ஸில் ட்ரெயின் மாறவேண்டும் "

"லண்டனுக்கு அடிக்கடி வருவீர்களா....?"

"ஆம் வேலை விஷயமாக வருவேன்..நீங்கள்..?"

"எனக்கு லண்டன்...வேலை விஷயமாய் எடின்பரோ போகிறேன்..." எண்பது பெர்சண்ட் எங்களுக்குள் ஒற்றுமை இருந்தது எனக்கு ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது. அவளுக்கு புடவை உடுத்திக் கொள்ளச் சொல்லிக்குடுக்கவேண்டும்...புடவையில் கொள்ளையழகாக இருப்பாள்.

"உங்களுக்கு கல்யாணமாகிவிட்டதா...?"

"எக்ஸ்க்யூஸ்மீ...??" அவள் பார்வையில் அத்தனை சினேகமும் பட்டென வடிந்திருந்தது. எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கேட்டிருக்க கூடாது. சுபஸ்ய சீக்கிரம்ன்னு ஓவராய் எக்சைட்டட் ஆகிவிட்டேன். இன்னும் மூனு மணி நேர பிரயாணம் இருக்கிறது ஒரு வேளை அவள் எடுத்த ஸ்டேஷனில் இறங்குவதாய் இருந்தாலும் கூட ஒரு மணி நேரம் இருக்கிறது. கடலையை பதமாய் வறுத்திருக்கவேண்டும்

அதற்கப்புறம் அவள் ஒரு புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். நானும் லேப்டாபை திறந்து ஆபிஸ் வேலை பர்ப்பது மாதிரி கதை படிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் கதையில் ஒன்றிப் போயிருந்த அடுத்த பதினைந்து நிமிடத்தில் "ஆர் யூ சிங்கிள் ...." என்று அவள் கேட்ட போது எனக்கு பல்லெல்லாம் வாயாயிருந்தது.இவளுக்கு முதலில் மணமாய் வத்தகுழம்பு வைக்க சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்புறம் முட்டைக்கோஸ் பருப்பு உசிலி.

அப்புறம் பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம். அவளும் எக்சைட் ஆகி சளைக்காமல் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தாள். என் ஆபீஸைப் பற்றி கேட்டாள் டிப்பார்ட்மென்ட் ஹெட் பற்றிக் கேட்டாள்...சில பேரோடு இமெயில் கேட்டாள் பல பேரோடு எக்ஸ்டென்ஷன் நம்பரெல்லாம் கேட்டாள்..வயசுப் பையனிடம் பேசும் போது ஏதோ பேச்சை வளர்கனுமே என்று இந்த டாப்பிக் தான் என்று இல்லாமல் இன்னமும் என் கம்பெனி பற்றி ஏதேதோ கேட்டாள். ஆனால் நான் ரொம்ப உஷாராக தேவை இல்லாதையெல்லாம் கேட்காமல் அவள் எங்கே நெயில் பாலீஷ் வாங்கினாள், டேவிட் பெக்காம் பெண்டாட்டி விக்டோரியா பெக்காம் பற்றி என்ன நினைக்கிறாள் என்று அவளே அறியாமல் அவளைப் பற்றிய விஷயங்களை கறந்துகொண்டிருந்தேன். அவளும் பெக்க பெக்கவென்று விஷயங்களை உளறிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன், பான்ட்ரீ காரிலிருந்து ஹாட் சாக்லேட் வாங்கிக் கொடுத்தாள். கண்டிப்பாய் இவளுக்கு வசந்த பவனில் பில்டர் காப்பி வாங்கிக்கொடுக்கவேண்டும். சொக்கிப் போய்விடுவாள். அப்புறமும் லீட்ஸ் வரை ஏகத்துக்கு பேசிக்கொண்டே வந்தோம். இறங்குவதற்க்கு முன் அவளோட போன் நம்பர் கேட்டேன். என்னை ரொம்ப பிடித்ததால் அவளுடைய பிஸினஸ் கார்டு குடுத்தாள்.

லீட்ஸில் அவள் இறங்கியபின் யோசித்ததில் அவளை இதற்கு முன் எங்கே பார்த்திருக்கிறேன் என்று நியாபகம் வந்துவிட்டது. அவள் கம்பெனியின் ப்ராடெக்டை எங்கள் கம்பெனிக்கு விற்பதற்காக ப்ராடெக்ட் டெமோவுக்கு வந்திருந்தாள். எங்கள் கம்பெனி பெரிய கம்பெனி என்பதால் பெரிய ஆர்டருக்கு இன்னமும் பிரம்மப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவள் மட்டும் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் நான் கதை படிப்பது மாதிரி பாவலா காட்டிய போது என் லேப்டாப்பில் இருக்கும் எங்கள் கம்பெனி ஸ்டிக்கரை நோட் செய்து நூல் விட்டு அவள் ப்ராடெக்ட் விற்பனைக்கு சம்பந்தமான கேள்விகள் கேட்டிருக்கலாம்...என்னைப் பார்த்ததில் கொஞ்சம் ஓவர் எக்சைட் ஆகிவிட்டாள் அவ்வளவு தான். கண்கள் நாலுபக்கமும் இருக்கவேண்டாமா..இல்லாவிட்டால் இந்தக் காலத்தில் தூக்கி சாப்பிட்டுவிட மாட்டார்களா...இருந்தாலும் அந்த நெயில் பாலிஷ் அவளுக்கு ஏகத்துக்கு எடுப்பாய் இருந்தது. மல்லிகைப்பூ வைத்து பின்னிக் கொள்ளச் சொல்லிக் குடுக்கவேண்டும்.

அடுத்த ஸ்டேஷனில் அவளிடத்தில் வந்து உட்கார்ந்த அடுத்த காக்கேசியப் பெண்மணி அவளை விட அழகாக இருந்தாள். எனக்கு இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.

"நீங்கள் மங்கையர் மலர் படிப்பீர்களா"

25 comments:

Victor said...

Back to form!

டவுசர் பாண்டி said...

இன்னா மேரி கத வாஜாரே !! சோக்கா தான் கீது, எனுக்கு இன்னாவோ நீ வெள்ளைக்கார குஜிளிங்கோ கிட்ட ரொம்ப தான் வழியிரெ,
நம்பல மேரி சொம்மா பட்டிக் காட்டன் முட்டாய்கடைய பாத்தா மேரி , ( ? ) இருக்கத தேவேலியா !!! இன்னா தான் சொல்லு கருப்பு தான் நமக்கு புட்ச கலரு .

குடுகுடுப்பை said...

எப்படிங்க இவ்வளவு சுவராஸ்யமா எழுதமுடியுது.??

சூப்பர்........

சீமாச்சு.. said...

ரொம்ப நல்லாக் கடலை வறுத்திருக்கீங்க.. பாராட்டுக்கள்!!

Mahesh said...

யப்பா... அட்டகாசம்!!

//பல்லெல்லாம் வாயாயிருந்தது// மிக ரசித்தேன்...

இலவசக்கொத்தனார் said...

எப்படி இருந்த நீ....... :(

அரசு said...

படித்தப் பின் அவ்வை சண்முகி மணிவண்ணன் ஞாபகத்திற்கு வந்தார்,
'ஓட்டை வாய்டா முதலி'...

ரொம்ப நாளைக்கப்புறம், அருமை அருமை...

-அரசு

நிகழ்காலத்தில்... said...

கடலை, கதாகலேட்சபத்தைவிட சூப்பர்

வாழ்த்துக்கள்

அறிவிலி said...

பிரமாதம்...வரிக்கு வரி ரசிக்கும்படி இருந்தது.

Unknown said...

it seems to be ur real life experience!!! will ask manni abt dat.

குப்பன்.யாஹூ said...

Back to form.

Your writing skill is untold.

if Mani ratnam or shankar reads your blog immediately they will take u to kolywood.

Superb writing.

Thanks a lot.

குப்பன்.யாஹூ said...

arkis hypokiya- great, to my knowledge no one has introduced this term to Tamilnadu.

I think aani pudunga veenaam will go soon and this word will become popular.

I want your contribution to these 2 links:
http://en.wikipedia.org/wiki/Madras_bashai
http://en.wikipedia.org/wiki/Nellai_Tamil

JustATravellingSoldier said...

/*அவள் கம்பெனியின் ப்ராடெக்டை எங்கள் கம்பெனிக்கு விற்பதற்காக ப்ராடெக்ட் டெமோவுக்கு வந்திருந்தாள். எங்கள் கம்பெனி பெரிய கம்பெனி என்பதால் பெரிய ஆர்டருக்கு இன்னமும் பிரம்மப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவள் மட்டும் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் நான் கதை படிப்பது மாதிரி பாவலா காட்டிய போது என் லேப்டாப்பில் இருக்கும் எங்கள் கம்பெனி ஸ்டிக்கரை நோட் செய்து நூல் விட்டு அவள் ப்ராடெக்ட் விற்பனைக்கு சம்பந்தமான கேள்விகள் கேட்டிருக்கலாம்*/

athana pathaen.....summa varuvala sugumarinnu...

sriram said...

ஹாய் ரங்கா
Man, what a post.... Just cannot stop laughing.. simply superb and I cannot find workds to praise.
எதை சொல்ல எதை விட. கடலை, கொழுப்பு, நடன பெண்மணிகள், வெள்ளைக்கார பெண்மணி, மணிரத்னம் பட வசனம், மங்கையர் மலர் மேட்டர், டெண்டுல்கர் மாட்டார் எல்லாம் சூப்பர்.

இதை எழுதலாமா வேண்டாமா என்று பல முறை யோசித்து எழுதுகிறேன்.
போன வாரம் தமிழ்மணத்தில் நடந்தவற்றை கண்டு மிகவும் வருந்தினேன், இந்த மாதிரி பத்து போஸ்ட் போட்டால் போதும், தானாகவே பிரபல பதிவர் பட்டம் தேடி வரும், இதை அனைவரும் அறிந்து கொண்டால் நலம்
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

குப்பன்.யாஹூ said...

sriram Boston USA, u r 200% correct. I endorse your view.

Niraikudam (Dubukku) endrum tadumbaathu.

பாசகி said...

சிரிச்சுக்கிட்டே இருக்கேண்ணா, சூப்பரோ சூப்பர் :)))))))

அந்த அறிவாளி பையன் நீங்கதான?

பொண்ணுககிட்ட ஏமாந்தாலும் சுகமாத்தான் இருக்குது(பெரும்பாலும்) :)

smiley said...

kuppan, intha katha[i]nayagan namma

crs22 va irukkalamo???

Anonymous said...

Hi... Really too gud....Experiance illame ippadi ellam ezhutha mudiyaathu....Nalla jollu experiance pola...

ambi said...

அப்படியே சென்னா மசாலா வைக்க தெரியுமான்னும் கேட்டு இருக்கலாம். :))

@மன்னி, புது செருப்பு, வாரியல் எல்லாம் வாங்கி ரொம்ப நாளாச்சு போல. :))

ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பழைய டச் வெளிவந்து இருக்கு. மனம் லேசா இருந்தா தான், தானா வார்த்தைகள் வந்து விழும் இல்ல.

Dubukku said...

விகடர் - அப்பீடீங்கிறீங்க...மிக்க நன்றி ஹை

டவுசர் பாண்டி - //எனுக்கு இன்னாவோ நீ வெள்ளைக்கார குஜிளிங்கோ கிட்ட ரொம்ப தான் வழியிரெ// ஐயைய்யோ இது கத வாத்தியாரே...சும்மா உல்லாளுயிக்கு

குடுகுடுப்பை - மிக்க நன்றிங்க...உங்களுக்கு பிடித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி

சீமாச்சு - வாங்க....ஐய்யோ இது கதை சார்,.. வாழ்த்துக்கு நன்றி :)

மகேஷ்- வாங்க மிக்க நன்றி ஹை..:))

இலவசம் - பிரியலையே...நல்லால்லியா....??

அரசு - மிக்க நன்றி தல. ஹா ஹா அதுல மணிவண்ணன்..சும்மா புகுந்து விளையாடியிருப்பார்...இல்ல...

நிகழ்காலத்தில் - மிக்க நன்றிங்க உங்க பாராட்டுக்கு

அறிவிலி - மிக்க நன்றி ஹை தலை

காயத்ரி -என்னம்மா ஒரே தெருக்காரங்க...என்ன நம்ம மாட்டேங்கிறியே :))

முத்துலெட்சுமி - வாங்க :))

குப்பன் - சாரே உங்கள் அன்புக்கு ரொம்பவே கடமைப் பட்டிருக்கேன்.......சங்கர் மணிரத்னம் - எனக்கும் ஆசை தான்...:)))) ஆனா அவங்க எங்கங்க இங்க வரப் போறாங்க :)) கண்டிப்பா அந்த விக்கிக்கு என்னால் முடிந்ததை பங்களிக்கிறேன். நீங்க சொல்லியிருக்கீங்க....செய்யாமலா...

ஜஸ்ட் அ ட்ராவலிங்க் சோல்ட்ஜர் - ஹீ ஹீ சொல்றதப் பார்த்த நீங்களும் இந்த ஊர்ல நிறைய வெள்ளக்கார சுகுமாரிங்ககிட்ட இன்பர்மேசன் .கிவிங்...?


ஸ்ரீராம் - மிக்க நன்றி தல. அப்பாடா உங்களுக்கு பிடிச்சது பத்தி ரொம்ப சந்தோஷம் :)). பிரபலம் - ஐய்யோ நீங்க வேற நான் சின்னப் பையன்ங்கோவ்..

குப்பன் - ஐய்யோ வாத்யாரே நீங்க வேற...ரொம்பவே கூச்சமா இருக்கு தல...:))

பாசகி - நன்றிகண்ணா...நீங்க வேற அது கற்பனை கதைங்க...:))

ஸ்மைலீ - ஆஹா யாரோ ஒரு சிஆரெஸ்22 மண்டைய உருட்டறீங்க போல இருக்கே :))

அனானி - மிக்க நன்றி...//.எக்ஸ்பீரியன்ஸ் இல்லம இப்படி எழுத முடியாது நல்ல ஜொள்ளு எக்ஸ்பீரியன்ஸ் போல.// வாங்க சாப்டாச்சா....இங்க இனிமே தான் :))

அம்பி - ஓ அந்த கதையில் அந்த கதாநாயகன் அப்பிடி கேட்டிருக்கலாம்ன்னு சொல்ற அதானே...இருக்கலாம்...அடுத்த தரம் உன்னை நேர்ல பார்க்கும் போது இருக்குடி உனக்கு :))

Asir said...

Ji,

Your Email ID ?

balutanjore said...

keep going junior suthaja

vetti said...

Appaada....moonu vaaram naayi maadhiri velai pannittu oru vaaram leave eduthuttomey...ippo enna panna porom-nu theriyaama irundhen....unga punniyathula I will recover well...Thank you for the posts...

Anonymous said...

that was fantastic.romba romba rasichen.dubukku sir,you rock.....innaiyoda unga channa masala aasaikku mangalam paada vendiyathu dhhan ninaikiren.
nivi.

MyFriend said...

அருமை.. :-)

Post a Comment

Related Posts