Wednesday, May 13, 2009

அன்புள்ள தங்கமணிக்கு...

வாவ்...இந்தப் புடவை எப்போ எடுத்தோம்...இதுல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா...அப்படியே ஜன்னல் பக்கத்துல வானத்துல காக்காய பார்க்கற மாதிரி கன்னத்துல கைய வெச்சிண்டு ஒரு போஸ் குடு...டக்குன்னு கேமிரால பிடிச்சுடறேன்...என் அடுத்த படத்துக்கு இந்த மாதிரி ஒரு ப்யூட்டிய தான் தேடிண்டு இருந்தேன்....

தேங்ஸ் பட் நோ தேங்க்ஸ்..தெளிவாவே சொல்லிடறேன்...கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி என்னால சப்பாத்தியும் சன்னா மசாலாவும் பண்ணவே முடியாது...!!!!!!

சே மனுஷன் சன்னா மசாலாவுக்கெல்லாம் பொய் சொல்லி பிச்சை எடுக்க வேண்டியதாப் போச்சு...சனியன் நானும் அத எவ்வளவு வருஷமா பண்ணிப் பார்க்கறேன் ஒரு தரமாவது நல்லா வந்து தொலைய மாட்டேங்குது...நீயும் அடுக்களையில எவ்வளவு தான் கஷ்டப்படற...இதுக்கு தான் ஒரு வெள்ளக்காரிய வீட்டோடு கொண்டு வந்துடறேன்னு சொல்றேன்...அவளும் கூட மாட ஹெல்ப் பண்றதோட அக்கா அக்கான்னு உங்கிட்ட ஆசையா இருப்பா...நீ தான் கேக்க மாட்டேங்கிற

ஏன் அதுக்கு பதிலா நான் ஒரு ஆள கூட்டிண்டு வரேனே ...அவன் கூட தான் உங்கள அண்ணா அண்ணான்னு கூப்பிடறதோட உங்களுக்கும் ஒத்தாசையா இருப்பார்...நம்ம அடுத்த தெரு ஆப்பிரிக்க நண்பர் எப்படி வசதி...?

அடிப்பாவி அந்த ஆள் "கேய்"ன்னு தெரிஞ்சு பழிவாங்குறியா...அவன் ஆள் இருக்கிற சைஸ்சுக்கு...உனக்குள்ள இப்படி ஒரு சொர்னாக்கா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை....

என்னடி கெக்கபிக்கன்னு பார்த்துண்டு இருக்க...ஹோம்வொர்க்க எடுத்துண்டு வா. டி.வி.யப் பார்க்காம அந்த சோபால என்ன பார்த்து இப்படி திரும்பி உட்காரு...கான்சென்ட்ரேஷன் இம்ப்ரூவ் ஆகும். இந்தா இந்த டி.வி ரீமோட்ட பக்கத்துல வைச்சிக்கோ...மாடிலேர்ந்து அம்மா கீழ இறங்கி வர்ற சத்தம் கேட்டா டி.விய டக்குன்னு ஆஃப் பண்ணிட்டு ரிமோட்ட உன் பக்கத்துலேயே வெச்சிக்கோ. இல்லைன்னா அப்புறம் டீ.விய பார்த்துண்டே ஹோம்வொர்க் பண்றன்னு உன்ன தான் சத்தம் போடுவா...

அம்மா....டீ.வில பில்லா போடறான்...அப்பா நயன் தாரா பார்க்கறார்....

தாயைப் போல் பிள்ளைன்னு சும்மாவா சொன்னான்...ஒரு மட்டு மரியாதையே தெரியல உனக்கு.....இப்படியா நயன் தாரான்னு மண்டைல அடிச்ச மாதிரி சொல்றது...சித்தின்னு அழகா சொல்லுடா...சரி சரி உக்காரு...உடனே எழுந்து போய் மாடில உங்கம்மா கிட்ட ஊத வேண்டாம்..இன்னிக்கு கோட்டா அல்ரெடி ஓவர்...நாளைக்குப் பார்த்துக்கலாம்...ஹூம்...சோபால பூனைய வைச்சிண்டு சகுனம் பார்த்தேன் பாரு என்ன சொல்லனும்...

டாட் ...ஷீ இஸ் புல்லியிங் மீ....நான் தானே உங்க கடைசிப் பொண்ணு....ஷீ சேஸ் ஷி இஸ் தெ ஒன்

அவ சொன்னா சொல்லட்டும்...கண்டுக்காத...அதெல்லாம் இருக்கட்டும்...இங்க பாருடா செல்லம்...நான் உன்கிட்ட முன்னாடியே நிறைய தரம் சொல்லி இருக்கேன்...நீ என்னோட ரெண்டாவது பொண்ணுன்னு சொல்லிக்கோ ஆனா நீதான் கடைசிப் பொண்ணா இல்லியான்னு நானும் உங்க அம்மாவும் தான் பேசி ஒரு முடிவெடுக்கனும் ஓ.கேவா...

குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.

நீங்க வாழ்க்கையில எடுத்த ரெண்டாவது கரெக்ட் முடிவு காமிராக்கு பின்னாடி நிக்கனும்ன்னு எடுத்த முடிவு தான்....

என்ன இருந்தாலும் நீ செம ஷார்ப்டி...பயங்கர புத்திசாலி....உன்னளவுக்கு நான் போறாது...

என்னாச்சு இன்னிக்கு உண்மையெல்லாம் பயங்கரமா ஒத்துக்கறீங்க...?

ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...நீ என்ன செலெக்ட் பண்ணின நான் உன்ன செலக்ட் பண்ணினேன்...இப்பவும் சொல்றேன் நீ பயங்கர ஷார்ப்மா...

அன்புள்ள தங்கமணிக்கு...தந்தை மகளுக்கு எழுதிய கடிதம், மகள் தந்தைக்கு எழுதிய கடிதம் வரிசையில் புருஷன் பெண்டாட்டிக்கு எழுதிய கடிதமாக இந்நேரம் இநத பதிவு மூலம் சரித்திரத்தில் இடம் பிடித்திருப்போம் (ஹீ ஹீ) . நம் மணவாழ்க்கையில் அஃபீஷியலாக பத்து வருடம் ஓடியே விட்டது. திரும்பிப் பார்க்கிறேன், ஓரமாய் நின்று பார்க்கிறேன் ஒன்றரைக் கண் விட்டுப் பார்க்கிறேன் என்று போரடிக்காமல் நேர விஷயத்திற்கு வருகிறேன். எத்தனையோ தரம் நீ சொல்லி நான் மறுத்திருந்தாலும்.....தஙகமணியில்லையேல் டுபுக்கில்லை என்று இன்று ஒத்துக்கிறேன். எனது வாழ்வில் நகைச்சுவையை மேம்படுத்தியது நீ தான் என்று ஒத்துக்கொள்கிறேன். எதைச் சொல்வேன் கண்மணி...தெள்ளிய நீரோடையில் வெள்ளியென..என்று ப்ளாக் கிடைத்ததே என்று ஓவராய் ஃபிலிம் காட்டாமல் "காக்க காக்க" ஜோதிகா மாதிரி (நினைப்பில்) நீ நம் வீட்டு கர்டன்களை திறந்துவிட்டு என்னைப் பார்த்து பேசும் டயலாக்கிற்கு அதில் என்றும் ஒரு சிறப்பிடம் என்ற ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

சொந்தக் கவிதை எழுதி டார்ச்சர் பண்ணாமல்...சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, நமக்கு மிகவும் பொருந்தும் சினிமா பாட்டையே போட்டுவிடுகிறேன்

நீ கோபப் பட்டால்...நானும் கோபப்படுவேன்
நீ பார்க்காவிட்டால்...நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால்...நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால்...நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால்...நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்....உயிரை விடுவேன் (சும்மா உல்லாகட்டிக்கு)
நீ கேக்காமல் போனாலும்...கத்தி சொல்லுவேன்...பேபி ஐ...லவ்..யூ (பேபி யாருன்னு கேக்கப்பிடாது சொல்லிட்டேன் ஆமா)

எனக்குத் தெரியும் என்ன தான் வில்லு படத்திலேர்ந்து பாட்டெல்லாம் சுட்டுப் போட்டாலும் நீ சென்டி ஆக மாட்ட....அதே தான் கரெக்ட்...இந்த வாரம் சப்பாத்தி சன்னா மசாலா...அதே தான்...ப்ளீஸ்...சினிமாலேர்ந்து பாட்டெல்லாம் மேற்கோள் காட்டி போட்டிருக்கேன்....ஏதோ பார்த்து செய்யுங்க மேடம்...

54 comments:

அது ஒரு கனாக் காலம் said...

பிச்சுட்டேள் போங்கோ, ரொம்ம்ப நன்னா இருக்கு.

Anonymous said...

அசத்தல்..

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

//ஏன் அதுக்கு பதிலா நான் ஒரு ஆள கூட்டிண்டு வரேனே ...அவன் கூட தான் உங்கள அண்ணா அண்ணான்னு கூப்பிடறதோட உங்களுக்கும் ஒத்தாசையா இருப்பார்...//
ஹாஹாஹாஹாஅ....... சூஊஊஊஊஉப்பர், சம ஷார்ப் இதான்.

//உனக்குள்ள இப்படி ஒரு சொர்னாக்கா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை....//

பரவாயில்லை நீங்க கூட ஏதோ ட்ரைப் பண்ணறீங்க..

//என்ன இருந்தாலும் நீ செம ஷார்ப்டி...பயங்கரபுத்திசாலி....
உன்னளவுக்கு நான் போறாது...//

ஆஹா, இது தெரிஞ்சுக்க இவ்ளோ நாள் ஆச்சா? ஷார்ப் பத்தாது.

சூப்பர், நல்லாவே இருக்கு. தெஒடருட்டம் உங்கள் அடுத்த கடிதம்.

ஆயில்யன் said...

//சோபால பூனைய வைச்சிண்டு சகுனம் பார்த்தேன் பாரு என்ன சொல்லனும்...///

:)))))))

Anonymous said...

டுபுக்கு - தங்கள் சித்தம் என் பாக்யம், தங்கள் கருத்து உடனடியாக செயல்படுத்தபட்டுள்ளது. தொடர்ந்து எனது மொக்கையான பதிவுகளை (எப்படியாவது) படித்து தங்களது கருத்துகளை கூறி நிறுவன வளர்ச்சிக்கு(!!) வித்திடுங்கள். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

அண்ணா மசாலா பத்தலை. வசனங்களுக்கு மேற்க்கோள்குறி இடவும் படிப்பதற்கு சிரமமாக உள்ளது.

Unknown said...

எந்திரனும் இந்த கதையும் ஒண்ணா....கே.ஆர்.எஸ் அப்படியா.... மெய்யாவா....

உங்கப் பதிவு இன்னும் நல்ல விரிவான கொசுவத்தி பதிவு ரசித்துப் படித்தேன் ....வாழ்க தங்கை குலம்... :-)

Munimma said...

neenga 10na, naanga 15 illai.

best wishes - channa masalavum rotiyum pol needodi vaazhveergalaaga!

ICANAVENUE said...

Wish you many more happy returns of the day! Kalakkal post as usual

சென்ஷி said...

//குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.//

:-))))))))))))))

ILA (a) இளா said...

:))

Kavitha said...

Happy Anniversary!

வீணாபோனவன் said...

யாரோட கதை இது?. நல்லாவே இருக்குங்க.

-வீணாபோனவன்.

அரசு said...

திருமண நாள் வாழ்த்துக்கள்.

ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு வில்லு பாட்டை டெடிக்கேட் பண்ணி சன்னா மசாலா கேட்டதற்கு

தங்கமணிக்கு விஜய் பிடுக்கும்???

10 வருஷமா உங்களை சமாளித்து வாழ்க்கையை நடத்தும் தங்கமணிக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

-அரசு

Vijay said...

அட பத்து வருஷங்கள் ஆயிடுத்தா?? வாழ்த்துக்கள் ;-)

Hilarious :-)

vetti said...

Dubukku Sir....Many more happy returns of the day!

வாழவந்தான் said...

வாழ்த்துக்கள்!!
சப்பாத்தி அன் சன்னா மசாலா கிடைத்ததா இல்லை வழக்கம் போல் உதை தானா?

Bhaskar said...

Wishing you and Mrs Thangamani on your marriage anniversary.Congragulations on completing 10 long years !!

So you got married during kathri veyyil season? That itself deserves a separate post !!. Loooking forward to that.

JustATravellingSoldier said...

மேலும் பல வருடங்கள் சன்னா தேட வாழ்த்துக்கள் அண்ணா.
பிக்கடில்லி Woodlands ஆ ??

குப்பன்.யாஹூ said...

எழுத்துக்களில் நல்ல பிடி (grip) தெரிகிறது. நாளுக்கு நாள் மெருகு ஏறி கொண்டே செல்கிறது. (பதிவுலக சுஜாதா என்று கூட விளிக்கலாம் போல)

நகைச்சுவை கலந்து இறுதியில் அன்பில் முடித்து அருமையாக பதிவு இட்டுளீர்கள்.

திருமண நாள் வாழ்த்துக்கள்.

இன்று போல என்றும் தாங்கள், மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகவும் மன நிறைவோடும் வாழ்வதற்கு எனது வாழ்த்துக்கள். இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

வாழ்த்துக்கள் மற்றும் தோழமையுடன்

குப்பன்_யாஹூ\

Madhu Ramanujam said...

திருமண நாள் வாழ்த்துக்கள் :) எப்பவும் போல நல்ல நகைச்சுவை.

Anonymous said...

neenga ippdi laam pathivu podratha paartha, enakku ungala love pannanum pola irukku.

Anonymous said...

Happy Anniversary .. Paavai

Unknown said...

நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா....

semma hottu thala. ULTIMATE ONE....KEEP GOING.

பாலராஜன்கீதா said...

உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த மண நாள் வாழ்த்துகள்

Sriram said...

அன்புள்ள டுபுக்கு அவர்களுக்கும், தங்(கை)கமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம்.

Sriram said...

அன்புள்ள டுபுக்கு அவர்களுக்கும், தங்(கை)கமணி அவர்களுக்கும் என் மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம்.

Bharath said...

அண்ணன் back to form.. கலக்கலோ கலக்கல்..

many happy returns of the day..

Naradhar said...

Dubukku

Congrats. You are gaining courage after 10 years. Paaththu! romba 'dirty linen' ai public la wash pannadel. Appuram vanavaasam tham

Anonymous said...

திருமண நாள் வாழ்த்துக்கள்.

:-))

அன்புடன்
கார்த்திக்

Veera said...

Dubukku is back..... கலக்கிட்டீங்க போங்க...
/*சோபால பூனைய வைச்சிண்டு சகுனம் பார்த்தேன் பாரு என்ன சொல்லனும்... */
/*பேபி ஐ...லவ்..யூ (பேபி யாருன்னு கேக்கப்பிடாது சொல்லிட்டேன் ஆமா)*/
:))))))))))))

[ 'b u s p a s s' ] said...

:) வாழ்த்துக்கள்.

dubukudisciple said...

:)))) vaazhthukal guruve....

vetti said...

Dubukku Sir...enna idhu...May maasam mudiya innum 1 vaaram dhaan irukku...indha maasathukku oru padhivu mattum dhaana??!! maasathukku rendu padhivaavadhu podunga annaathey....naanga ethini dhaba vandhu check pannrom??

Ramya Ramani said...

Wedding Anniversary wishes to Dubukku Anna and Manni :)

Anonymous said...

dubukku sir and thangamani,

wishing you many more happy returns of your wedding day.you are back to form.thangamani,edharkum andha"baby"neengal thaana enru chapathi channa masala sathiyamaga kettu vidavam.idhil mattum thaan avar poisolla maatar enru ninaikiren.channa masala saapittu vittu ellam "ullakattikku"nnu sollidaporaru!!!!
lovely post sir,keep it up.
nivi.

வல்லிசிம்ஹன் said...

ஒரு சன்னா மசாலாவுக்கா இவ்வளவு பாடு!!!

இவ்வளவு பாடின பிறகும் விட்டுக் கொடுக்காம சமர்த்தா இருக்கும் தங்கமணிக்கும் ,விடாமல் தவம் கிடக்கும் உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள். இதே ஊடல், கூடலுடன் நீடித்து வாழ வாழ்த்துகிறேன்.:))0

KCDesi said...

உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்

Vg said...

First..
Belated Anniversary wishes..

Superb write-up.. Surely ur wife would love. :)

"ஆனா நீதான் கடைசிப் பொண்ணா இல்லியான்னு நானும் உங்க அம்மாவும் தான் பேசி ஒரு முடிவெடுக்கனும் " - Extraordinary comedy.. :) Loved reading it..

Hv a blessed life.. Long live ur married life.. :)

Unknown said...

dear , i was in shangai for the past one month. i couldnt access yr dubukku. missed u alot. why dont u come to madurai once. i'll take u to our women enterpreuner forrum & make u deliver a speech. we need such a jolly good fellow in our seminars. welcome to our place.

Unknown said...

Enna Thala?? Match Paakka Ticket ellam eduthachum.. konjam poto pudchu anuppu thala.. naangalum emma neram thaan TV la pakkardhu??? TV la Kannukku oru virundhum illai :-))

malgova.mango said...

ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...நீ என்ன செலெக்ட் பண்ணின நான் உன்ன செலக்ட் பண்ணினேன்...இப்பவும் சொல்றேன் நீ பயங்கர ஷார்ப்மா...

Nacchu Pathil adi.... super sharp thala..

ennathan erunthalum thala, thala than...

Krishnan said...

Belated congratulations Dubukku. Your distinct humor is unrivaled in my humble opinion. Keep Rocking.

Krishnan said...

Belated congratulations Dubukku. Your distinct humor is unrivaled in my humble opinion. Keep Rocking.

Dubukku said...

சுந்தரராமன் - வாங்க சார். மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

புகழினி - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

சுமதி - வாங்க மேடம். மிக்க நன்றி. நீங்க தங்கமணிக்கு சப்போர்ட் பண்றீங்களா இல்ல எனக்கா.. ? :))

ஆயில்யன் - நிறைய தரம் வீட்டுல இந்தப் பிரச்சனை தான் :)))

ராசுக்கண்ணு - வாங்க. சாரி நடுவில கொஞ்சம் நாள் எந்த ப்ளாக் பக்கமும் வர முடியாமல் ஆகிவிட்டது. சந்தர்ப்பம் கிடைக்கும் பொதெல்லம் கண்டிப்பாய் வருகிறேன். உங்கள் கருத்துக்கும் நன்றி நானும் செயல்படுத்த முயற்சிக்கிறேன்.

தேவ் - வாங்க சார். மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு :)))

முனிம்மா - வாங்க மேடம்..மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு, ஓ நீங்க சீனியர் 15 ஆஅ

ஐகேன்வென்யூ - மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு. தன்யனானேன்

சென்ஷி - அட்டென்டென்ஸ் மார்க்ட் :)))))

இளா - அட்டென்டென்ஸ் மார்க்ட் :))

பொயட்ரீ - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

வீணாபோனவன் - அக்மார்க் சொந்தக் கதை தானுங்கோவ் :))

அரசு - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. அந்தப் படத்துல பாட்டெல்லாம் எனக்கு பிடிச்சிருந்துங்க அதுவும் இந்தப் பாட்டின் வரிகள் மிகப் பிடித்திருந்தது. தங்கமணிக்கு விஜய் ஃபேன் இல்லை ...ஆனால் அதுக்காக குடும்பத்தோடு அவெர்ஷனும் கிடையாது. படத்தை மட்டுமே பிடிக்கும் பிடிக்காது...பார்ப்போம் மத்தபடி ஃபேன் வேறொரு நபருக்கு.

விஜய் - ஆமாம்...வருடங்கள் ஓடியே போச்சு...மிக்க நன்றி வாழ்த்துக்கு

நர்மதா - வாங்க மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு. இந்த சார் வேண்டாமே...

வாழவந்தான் - சன்னா மசாலா கிடைத்தது...வழக்கம் போல் உதையும். வாழ்த்துக்கு மிக்க நன்றி.

பாஸ்கர் - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு ஆமாங்க கத்தரி வெயில்ல கல்யாணம் நல்ல வேளை அந்த தடவை ஊர்ல சீசன் கொஞம் சீக்கிரம் ஆரம்பிச்சிருச்சு...அதுனால தப்பிச்சோம்

ஜஸ்ட் அ டாவலிங் சோல்ஜர் - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு...இல்லீங்கண்ணா..அன்னிக்கு சத்யம்ஸ்...:))

குப்பன் யாஹு - வாங்க நண்பரே மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு. உங்கள் எழுத்து பற்றிய பாராட்டுக்கும் மிக்க நன்றி. எல்லாம் உங்களை மாதிரி ஆட்களின் ஊக்குவிப்பு தான் முழுக் காரணம்.

மதுசூதணன் - மிக்க நன்றி தல உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்

அனானி - ஹா ஹா நீங்க நம்பள வைச்சு சூப்பர் காமெடி பண்றீங்க...இங்க தங்கமணி எப்படி விழுந்தேன்னு இன்னமும் யோசிச்சிக்கிட்டு இருக்காங்க..

பாவை - மிக்க நன்றி மேடம். எப்படி இருக்கீங்க...

ராமசந்திரன் - :))) உண்மைதானுங்களே?? :))

பாலராஜன்கீதா - வாங்க சார் மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு.

ஸ்ரீராம் - வாங்க மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு. சங்கீததுல லெவல் காட்டுறீங்க...

பரத் - வாங்க தல.. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

நாரதர் - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு. ஆமாம் இப்போ தான் தைரியம் வந்த மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கேன் :)))

கார்த்திக் - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

வீரா - நீங்க முன்ன சொன்ன மாதிரி நடுவுல சில பல காரணங்களால் சுத்தமா எழுதவே முடியலை. எழுதினதெல்லாம் எனக்கே பிடிக்காமல் போஸ்ட் பண்ணவே இல்லை. இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாய் திரும்ப பழைய மாதிரி எழுத முயற்சி பண்றேன்.

பஸ்பாஸ் - மிக்க நன்றி தல உங்கள் வாழ்த்துக்கு

டுபுக்குடிசைப்பிள் - வாங்க மேடம் மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

நர்மதா - மன்னிச்சிக்கோங்க...கொஞ்ச நாளா பலவித மன அழுத்தங்களால் ஒழுங்காவே எழுத முடியல...எழுத முயசித்ததும் என்னக்கே நல்லவே இல்லை அதான் அதையெல்லம் போஸ்டெ பண்ணவில்லை. திரும்ப இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா வந்துகிட்டு இருக்கேன். தொடர்ந்து வந்து பார்த்து உங்களை ஏமாறவைத்ததுக்கு வருந்துகிறேன்....ஆனால் ஏனோ தானோன்னு போடறதுக்கு போஸ்ட் போடாமலே இருக்கலாம் இல்லையா

ரம்யா ரமணி - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

நிவி - வாங்க மேடம்.மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு வாழ்த்து சொன்ன கையோட இப்படி வாருறீங்களே நியாயமா?

வல்லிசிம்ஹன் - வாங்கம்மா..உங்க ஆசிர்வாதம் கிடைக்க என்ன தவம் செய்தனை மிக்க நன்றி

கேசிதேசி - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

விகி - வாங்க மிக்க நன்றி உங்க பாரட்டுக்கும் வாழ்த்துக்கும்

ழு - வாங்க திருநெல்வேலிலேர்ந்து தடுக்கி விழுந்தா மதுரை தானே ஒரு தரம் வந்தா போச்சு..ஆனா சும்மா அரட்டைக்கு வேணா வரேன்...நீங்க சொல்ற இடமெல்லாம் பெரிய இடமய் இருக்கு :)) அங்க வந்து நம்ம ரேஞ்க்கு ஜொள்ளு விடறதப் பத்தி பேசினா டிபன் குடுக்காம டின்னு கட்டிடுவீங்க :))

ராமச்சந்திரன் - அதுக்கெல்லாம் ஆஸ்திரேலியால மேட்ச் நடத்தனுங்க...இங்கையும் ரொம்ப சிறப்ப இருக்கும்ன்னு தோணலை

மல்கோவா - ஆஹா இன்னிக்கு தங்கமணி கோட்டாவுக்கு உங்க கமெண்டா....நடத்துங்க... இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பு ரண.....

கிருஷ்ணன் - வாங்க மிக்க நன்றி உங்க ஊக்கமான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்.

dear waiting to see u in madurai. not like other place where yr women fans got vanished for arrattai. i'm eager to welcome u to our place.

ivingobi said...

//குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.//

நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்

நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்
Repeat panni padichen sirichen.....

Mathan said...

hai,

i am Mathan, Sudan. recently i read our blogs. Really really good.
i felt sujatha is not passed away, he is in you.
keep going my bro.....
Congrates! URL added in my Favorites.

Mathan said...

hai,

i am Mathan from Sudan. recently i read your blogs. Really really good.
i felt sujatha is not passed away, he is in your letters.
keep going my bro.....
Congrates! URL is added in my Favorites.

மங்களூர் சிவா said...

//ஏன் அதுக்கு பதிலா நான் ஒரு ஆள கூட்டிண்டு வரேனே ...அவன் கூட தான் உங்கள அண்ணா அண்ணான்னு கூப்பிடறதோட உங்களுக்கும் ஒத்தாசையா இருப்பார்...//
ஹாஹாஹாஹாஅ....... சூஊஊஊஊஉப்பர், சம ஷார்ப் இதான்.

//உனக்குள்ள இப்படி ஒரு சொர்னாக்கா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை....//
:))))))))))))))

மங்களூர் சிவா said...

//குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.//

ROTFL
:)))

சர்ணா said...

சார்..முடியல..!
ஹையோ...ஹ...

Post a Comment

Related Posts