Wednesday, March 12, 2008

தடங்கலுக்கு..

மன்னிக்கவும். நேற்று இரவு இரண்டு மணி வரை முழித்து அடுத்த பதிவுக்காக அப்லோடு செய்துகொண்டிருந்த போது இன்டர்நெட் கனெக்க்ஷன் அறுந்து விட்டது. நான் வழக்கமாய் செய்யும் சில முட்டாள்தனங்களால் சேமித்து வைக்காமல் நேற்று செய்த வேலையை தொலைத்துவிட்டேன். சில நாட்களாகவே எனது ப்ராட்பாண்ட்டில் பிரச்சனை இருக்கின்றது. இரண்டு மணிக்கு திரும்பவும் கஷ்டமர் சர்வீஸைக் கூப்பிட்டு சாமியாடியதில் அவர்கள் கம்பெனி புலிக்கு புண்ணாக்கும் தண்ணியும் வைக்கவில்லை அதனால் நான் பச்சைக் கலர் டவுசர் போட்டுக்கொள்ள முடியாது என்றும் மேற்கூறிய காரணங்களால் இன்றைக்கு மழை வராது என்றும் அதற்காக அவர்கள் மிகவும் வருந்துகிறார்கள் எனவும் தெரிவித்தார்கள். இதெயெல்லாம் என்ன மாதிரி இளிச்சவாயன்கள் தான் நம்புவார்கள் ஸ்டார் வாரத்தில் தமிழ்மண சமூகம் என்னைப் பின்னிப் பெடலெடுத்துவிடும் "நீவீர் கம்பெனி குலம் வாழ்க உங்க சீ.இ.ஓ தலையில் இடி விழட்டும், உங்கள் கமெபெனி கான்டீன் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்" என்று வாழ்த்துப் பா பாடி போனை வைத்தேன். இப்பொழுது திரும்ப கனெக்க்ஷன் வந்துவிட்டது என்று ஓலை அனுப்பியிருக்கிறார்கள்.

ஆதலினால் படிக்கும் நீங்கள் கொஞ்சம் பொருத்தருள வேண்டும் இன்னும் 8 மணி நேரத்தில் நான் எடுத்த குறும்படத்தை இங்கே வேர்ல்ட் ரிலிஸ் செய்துவிடுகிறேன் :)). படத்தைப் பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை சொல்லி தயை புரியவேண்டும்.

12 comments:

sriram said...

Hiya, Me the first, for the first time. will come back for a detailsed pinnoottam.
endrum anbudan
sriram

யாத்ரீகன் said...

>>> புலிக்கு புண்ணாக்கும் தண்ணியும் வைக்கவில்லை அதனால் நான் பச்சைக் கலர் டவுசர் போட்டுக்கொள்ள முடியாது என்றும் மேற்கூரிய காரணங்களால் இன்றைக்கு மழை வராது என்றும் அதற்காக அவர்கள் மிகவும் வருந்துகிறார்கள் எனவும் தெரிவித்தார்கள் <<<<

:-)))))))) dubuks touch..

sriram said...

ஆரம்பிச்சிடன்யா ஆரம்பிச்சிடன்யா, ஹே டுபுக்கு இந்த டகால்டி காரணம் எல்லாம் தமிழ்மனத்திலேயும் சொல்ல ஆரம்பிச்சிட்டியா?? நாளைக்கு "S" ஆகாம படம் ரிலீஸ் ஆகணும்
முதல் Comment அபிஅப்பா மாதிரி படிக்காமலே போட்டது, இரண்டாவது படித்த (நொந்த) பின் போட்டது.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்

Anonymous said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு.. UKலேயும் இப்படித்தானா ? எதோ நம்மூருலதான் இந்த மாறி சர்வீஸ்னு நினைச்சிட்டிருந்தேன் :)))

ILA (a) இளா said...

இடி மின்னல் எல்லாத்தையும் தாண்டி வாங்க.. ஹைஜம்பா,, லாங் ஜம்பா?

மங்களூர் சிவா said...

//

Blogger sriram said...

ஆரம்பிச்சிடன்யா ஆரம்பிச்சிடன்யா, ஹே டுபுக்கு இந்த டகால்டி காரணம் எல்லாம் தமிழ்மனத்திலேயும் சொல்ல ஆரம்பிச்சிட்டியா?? நாளைக்கு "S" ஆகாம படம் ரிலீஸ் ஆகணும்
//

:)))))))))))))))

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

பினாத்தல் சுரேஷ் said...

துபாயில் பொன்னி பச்சரிசி கிலோ 3 திர்ஹாமாக இரூப்பதாலும், ஆஸ்திரேலியா கங்காருகள் பலவற்றுக்கு ஜலதோஷமாக இருப்பதாலும், நான் கருப்பு நிற சட்டை அணிந்திருப்பதாலும்..

உங்கள் சால்ஜாப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Anonymous said...

/* சேமித்து வைக்காமல் நேற்று செய்த வேலையை தொலைத்துவிட்டேன்.

சில நாட்களாகவே எனது ப்ராட்பாண்ட்டில் பிரச்சனை இருக்கின்றது

படிக்கும் நீங்கள் கொஞ்சம் பொருத்தருள வேண்டும் */

இதெல்லாம்...அப்படியே தன்னால வரதுதான் இல்ல....(ஏய் நீ கேளேன்.....)....

/* இதெயெல்லாம் என்ன மாதிரி இளிச்சவாயன்கள் தான் நம்புவார்கள் */ - இது ஜாடை...மாடையா...எங்களுக்கு நீங்க சொல்றாப்ல இருக்கே ?

டகால்டியெல்லாம் பண்ணாம...(ப்ராஜக்ட் ட்யூ டேட் மாதிரி இல்லாம)...8 மணி நேரத்துக்குள்ள வந்துரணும்...சொல்லிப்புட்டேன்...ஆமா..

Ramya Ramani said...

Ada Dubukku sir unga Sadanaikku vandha sodhanai parunga!! Analum vidama Vikramadithan pola neenga edukara muyarchikku paratukkal!!

siva gnanamji(#18100882083107547329) said...

தடங்களுக்கு மகிழ்கிறேன்....
இந்த கேப்லதான்
ஜொள்ளித்திரிந்த காலம்
படித்து முடித்தேன்

Anonymous said...

dubukku sir,addathu mazhai peinnjalum vidama post pottrunga sir,illana .....illana enna marupadiyum anbu miratallgal thodarum.
solla marandhuthetene ,bajji kidachuta!!thangamanikku marupadiyum bajji sojji ellam seidhu thara solli marupaddiyum recommend seiyyum ippadikku
nivi.

வல்லிசிம்ஹன் said...

நீங்களும் சேமிக்க மாட்டீங்களா:)

அடடா.

ஆனா அதனாலத்தான் இந்தப் பதிவு கிடைத்தது.
ஸோ நோ வொரீஸ்.

Post a Comment

Related Posts