Wednesday, March 12, 2008

எனது முதல் குறும்படம் இதோ

ஒரு சராசரி படைப்பாளிக்கு இருக்கும் படபடப்போடும், ஆர்வத்தோடும் இதோ எனது முதல் குறும்பட முயற்சியை உங்களுக்கு முன் வைக்கிறேன். எந்த பயிற்சியும் அனுபவுமும் இல்லாமல் எனது கேள்வி/பார்வை ஞானத்தில் விளைந்த முதல் முயற்சி என்பதால் நிறைய குறைகள் தென்படலாம். "என்னய்யா படம் எடுத்திருக்க வெங்காயம் என்பது உள்பட உங்கள் மனதில் தோன்றுவதை தாராளமாக நீங்கள் சொல்லலாம். சொன்னால் அடுத்த முயற்சியின் போது அவற்றை கவனத்தில் கொள்ள வசதியாக இருக்கும். சரி ரொம்ப வளவளன்னு பேசாமல் இதோ.

யூ டியூப் சைட்டில் நேராக பார்ப்பதற்க்கு - http://www.youtube.com/watch?v=CKYASKoOCB8

வளவள வம்படி வழக்கம் போல் நாளையிலிருந்து தொடரும். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் குடுக்கப்போகும் ஃபீட்பேக்குக்கு ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.

Update - சத்யப்ரியன் வேண்டுகோளுக்கிணங்க - இசை - மனு ராமேசன் படம் - பிடிச்சிருக்கு

பார்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள - வீடியோ கம்ப்ரெஷன் மிகவும் திணறிவிட்டேன். யூ டியூபில் இந்த குறும்படம் பெரிதாக்கினால் கொஞ்சம் பிசிறடிக்கிறது -

76 comments:

SathyaPriyan said...

இசை, ஒளியமைப்பு, எடிட்டிங் மூன்றும் அட்டகாசம்.
குறிப்பாக இசை. இசையமைப்பளர் பெயர் credits ல் தெளிவாக இல்லை. பதிவில் சேர்க்க முடியுமா?

குழந்தைகளின் நடிப்பு மிக அருமை. முதல் காட்சியில் நடை பெரும் உரையாடலில் இருந்து கடைசியில் அவர்கள் கொட்டாவி விட்டு தூங்குவது வரை அனைத்தும் மிக இயல்பாக இருந்தன. செயற்கையாகவே இல்லை. அவர்கள் உங்கள் குழந்தைகளா?

கடைசியில் உள்ள "Director's Director" அக்மார்க் டுபுக்கு டச்.

Thamiz Priyan said...

நடிப்பு:
இயற்கையாக அழகாக இருந்தது. குழந்தைகள் முக அசைவுகள் சிறப்பாக இருந்தது.
இசை:
நன்று. ஆனால் காட்சி மாறும் போதும், தூங்கிய பிறகும் கொஞ்சம் அதில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் இன்னும் மெருகேறி இருக்கும்.
எடிட்டிங்:
பரவாயில்லை. ஆனால் தூங்கத்தான் போகிறார்கள் என்பது முன்பே தெரிந்து விடுகிறது.
நெறியாளுகை (டைரக்டசன்):
சூரிய ஒளியுடன் காலையில் விழித்தெழுவது போல இருந்தால் கடைசியில் நன்றாக இருந்திருக்கும் போல இருக்கிறது. ஆனாலும் குழந்தைகளால் தப்பி விட்டார்.
ஒளிப்பதிவு :
அசத்தலாக இருந்தது.
மொத்தத்தில் டுபுக்குவின் முதல் முயற்சி சிறப்பால அமைந்து விட்டது.

Thamiz Priyan said...

மொத்தத்தில் டுபுக்குவின் முதல் முயற்சி சிறப்பாக அமைந்து விட்டது.

நந்து f/o நிலா said...

வீ ஆர் சாரி திஸ் வீடியோ நோ லாங்கர் அவைலபிள் ன்னு வருது :(

Dubukku said...

சத்யப்ரியன் - போஸ்ட போட்டுட்டு பரபரன்னு நின்னேன்...உங்க விரிவான பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க்க்க்க்க நன்றி. இசை விபரங்களை பதிவில் சேர்த்திருக்கிறேன். ஆமாம் அவர்கள் இருவரும் எங்கள் செல்ல மகள்கள்.

தமிழ் ப்ரியன் - உங்களுக்கும் எப்படி நன்றி சொல்ல்வதென்று தெரியவில்லை. உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் அறிவுரைகளையும் அடுத்த முறை எடுக்கும் போது கருத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி.

நந்து - இப்ப ட்ரை பண்ணிப் பாருங்க. ஏன் என்று தெரியவில்லை ஆனால் இப்போது தெரிகிறது என்று எல்லாரும் சொன்னார்கள்.

Anonymous said...

Simply Superb....

Going to forward this to my Manager.

சிறில் அலெக்ஸ் said...

படம் சூப்பர்.

The door could have been shown prominently.. a shot with a clock in the background showing an odd time (1AM) would have driven home the point better.

I would have ended the movie with just the sound of the doorbell when the message is displayed.

but very very nicely conceived and executed. Great.

It is amazing what we could do in blogs. You have showcased that with very little effort (I assume) a decent shortfilm can be made. Great! release more soon.

May be we should organize a competition for web shortfilms.

சிறில் அலெக்ஸ் said...

was the music composed for this movie??

adds the needed feeling to the film.

very nice.. on second viewing I could appreciate the lighting better, something we miss out in home movies.

மலைநாடான் said...

நண்பரே!

மிக நல்ல கருவொன்றை அழகாகப் படமாக்கியிருக்கின்றீர்கள். குழந்தைகள் முதல் அனைத்தும் இயல்பாகவே இணைக்கப்பட்டிருக்கிறது. முதல் முயற்சி நிறைவாகவே வந்திருக்கிறது.
மேலும் தொடருங்கள். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

மாதங்கி said...

முதல் முயற்சிக்கு நன்றாகவே வந்திருக்கிறது டுபுக்கு

Unknown said...

நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

sriram said...

ஹே ராம்
எல்லாரும் ரொம்பவே புகழ்து விட்டார்கள், நான் என்னத்த சொல்ல??
படத்துக்கு விளக்க உரை கோனார் நோட்ஸ் அடுத்த பதிவில் போடுவாயா??
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்

துளசி கோபால் said...

படத்தை(நிஜமாவே) பார்த்துட்டேன்.

சின்னதோட முகபாவனை அட்டகாசம்.

ம்யூசிக் அருமை. ஆனா தூங்கும் சீனில் கொஞ்சம் இன்னும் மைல்டா வரணும்.

பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும்.

ஜெயிச்சுட்டேப்பா...ஜெயிச்சுட்டே.

Vino said...

Excellent short film and those little angels are really awesome.. You better be fulltime professional :)

இன்பா (Inbaa) said...

படம் கலக்கலா வந்திருக்கு ... கடைசியில் எழுத்துப் போட்டு சொல்லியதை காட்சியின் ஊடகமாகவே சொல்ல முயற்சித்திருக்கலாம். டுபுக்கு படத்தொகுப்புக்கு என்ன மென்பொருள் உபயோகப்படுத்தியுள்ளீர்கள்?

ரா.சு said...

நல்லா இருந்துச்சு...சின்னவங்க ஒரு சில இடங்களில் கேமராவை பார்க்கிறாங்க..ஆனா சட்டென பார்வை மாறுது...அது கொஞ்சம் சரி பண்ணிட்டிங்கனா...தூள்!

Anonymous said...

I read your blogs regularly, but have never commented. This movie being your debut was very well done. As one of them here mentioned, the doorbell or the clock in the backgroud would have nailed it better.Very well done, good choice of music.Best of luck for all your future directorial ventures.

Unknown said...

ஆமாம் அவர்கள் இருவரும் எங்கள் செல்ல மகள்கள்.

இருவரும்..மிக இயல்பாக நடித்திருந்தனர்....

அனைத்து பாராட்டுகளும் இயக்குனருக்கே...

(குழந்தைகளை இயக்குவது மிக கடினம்...)


இளையவரின் முக பாவம் மிக அருமை..

அவங்க பேர் என்ன சார்..?

Ramya Ramani said...

Dubukku(Director) Sir,

Film Romba nanna vandirukku.First attemptlaye Dubukku as usual pinniteenga...
Children have acted rather i put it behaved naturally.Adhuvum advika was damn cute.
Konjam innum effectiveah concept sollirukkalam

Ramya Ramani said...

Forgot to mention Director's Director needs special applause as she wud have been the first person to give her valid comments!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

everything is perfect.. super ..

Anonymous said...

Director's Director
Mrs. Dubukku

Congratulations

Yes you're right.You work for your family and your Manager works for his/her who knows Manager might also in the same situation.

As we all know,We've to loose something to gain something.

இளைய கவி said...

மிக நன்றாக வந்துள்ளது ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிமாறும் போது கொஞ்சம் கவனம் செலுத்தாலாம் என்பது எனது தாழ்மையான கருத்து. முதல் முயற்ச்சியிலேயே பட்டைய கிளப்பி விட்டீர்கள்....

Anonymous said...

முதல் முயற்சி மாதிரி தெரியவில்லை. அவ்வளவு அழகாக வந்திருக்கு. இரண்டு பேரும் கலக்கிட்டாங்க. சின்ன மகள் சில சமயம் கேமராவைப் பார்த்தாலும், cuteness மூலமாக make-up பண்ணிட்டாங்க.

அற்புதம். கலக்கிட்டேங்க (தங்கமணிக்கும் சேர்த்து).

IT company-லே வேலை பார்க்கிறவங்களுக்கு இந்த படம் ஒரு பாடம் (awareness createப் பண்ணும் என நம்புகிறேன்)

-அரசு

Anonymous said...

dubukku sir,
wonderful work,romba technical aspects ennala solla mudiyala.but liked it.you were to the point.message was clear.you have it in you.niraya kurumpadangal edukkalam.kudos to kids.thangamani madam,director"s director enna sonnanga??.keep going and vazhtukkal.
nivi.

Anonymous said...

I started reading your blogspot like a month ago.Almost completed every topic you wrote. Ungal narration nalla iruku .
Intha padam , sharpa iruku. valakam pola Jollya irukunu nenachuthan parthen. But message sollitinga...
Kids nalla nadichirugangana athuku ungala pola talented director than karanam.
nice work - Murali

இலவசக்கொத்தனார் said...

டுபுக்கு ப்ரொடக்ஷன் அப்படின்னு போட்டதுக்குக் காரணம் புரிஞ்சு போச்சு! ஆனா அவங்க பேசறது எதுவும் கேட்கல. சவுண்ட் சரி இல்லைன்னு நினைக்கறேன். :))

(எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்களே...)

மணியன் said...

கன்னி முயற்சியிலேயே கலக்கிட்டீங்க, வாழ்த்துகள் !!
கொஞ்சம் slideshow போல இருந்தது. குழந்தைகளை வைத்து எடுப்பது அனுபவமிக்கவர்களே கடினம் என்று கூறக் கேட்டிருக்கிறேன். நன்றாக நடித்துள்ளார்கள். கண்ணேறு கழிக்கவும் :)
உங்கள் குடும்பக் கூட்டணிக்கு வாழ்த்துகள் !

Sivakumar said...

டுபுக்கு சார்,

படத்தின் கரு இன்றைய சூழலில் மிக மிக அவசியமான ஒன்று. அற்புதமாக இருந்தது. குழந்தைகளின் முகத்தில் ஏக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். தினமும் அப்பா அம்மா லேட்டா வந்து அது பழகிபோன முகத்தோடு இருக்கிறார்கள் குழந்தைகள். லைட்டிங் அழகாக உள்ளது. எடிட்டிங் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கலாம். உட்கார்ந்து படுத்திருந்த குழந்தைகள் திடீரென்று பெட்சீட் போட்டுக் கொண்டு தூங்கிவிட்டன. சின்ன சின்ன விஷயங்கள் தான். மொத்தத்தில் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

anantha-krishnan said...

Romba nalla irundudu.. entha madiri nalla karuthoda kurum padam edukkanum nu than aasai, adarkana muyarchigala eduthukutu irukkom (gokul nu ennaoda nanbanoda) aana namma modala edutha padam ennikume romba special thaan.. engaloda mudhal kurumpadam.. (comedy padam)

http://www.youtube.com/watch?v=vrD_GUl8QW8

engalukku romba piduchadu..

http://www.youtube.com/watch?v=-xhlyWFaua0

Girl of Destiny said...

முதல் முயற்சியா? அருமை!
ஒரு சின்ன கருத்து... படத்தோட வேகத்தை கொஞ்சம் கூட்டினால் இன்னும் நல்லா இருக்கும்! அதாவது... இன்னும் கொஞ்சம் காட்சி மாற்றங்கள் சேர்த்து இருக்கலாம்...

credits in the last line are super!

வல்லிசிம்ஹன் said...

முதல் படம் போலத் . தெரிய வில்லை.
மிக நன்றாக வந்து இருக்கிரது.இயற்கையாகவும்....

கோபிநாத் said...

கலக்கிட்டிங்க தல ;))

அருமையாக இருக்கு....நல்ல முயற்சி...வாழ்த்துக்கள் ;)

D said...

நான் சொல்லணும்னு நெனச்ச எல்லாத்தயும் மக்களே சொல்லிட்டாங்க....இதுல இருந்து என்ன தெரியுது...நல்ல விசயங்களை சீக்கிரமா பாத்துரணும்....இருந்தாலும் நான் வியந்த விசயம்...ஒளி....நல்லா வந்திருக்கு....வாழ்த்துகள்....ஒங்க ரெண்டு பொண்ணுங்களையும் விசாரிச்சதா சொல்லுங்க ஐயா....

Lakshman said...

Excellent!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அண்ணாச்சி கலக்கல்!
இசை அருமை! தூங்கும் போது சவுண்ட் இயலபாக் கொறைச்சி இருக்கலாமோ?
வீட்டுக்குள் லைட்டிங் எப்படி மேனேஜ் பண்ணீங்க-ன்னு ஒரு குறிப்பு கொடுத்தாக் கொறைஞ்சாப் போயிடுவீங்க? :-)

மங்களூர் சிவா said...

முதலில் பாராட்டுக்கள். குறும்படம் அருமை.

குழந்தைகளின் பெர்ஃபார்மென்ஸ் சூப்பர். பின்னனியும் அருமை.

சொல்ல வந்த கருத்து ஒத்த புள்ளைய பெத்துகிட்டா ஏங்கி போயிடும் குறைந்தது ரெண்டு பிள்ளைங்க பெத்துக்கணும்ங்கிறது அருமையோ அருமை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குழந்தைகள் நடிச்சா மாதிரியே தெரியலை! அவ்வளவு இயல்பா வந்திருக்கு!
Hats off! (போனாப் போட்டும்...உங்களுக்கும் தான் :-)

Annachi, oru chinna suggestion.
Frame maarum pothu actors should not follow the frame. Athai adutha murai chari pannidunga! Ease of frame change makes the movie more natural.

FunScribbler said...

நல்ல முயற்சி பா!! வாழ்த்துகள். இந்த படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட், இசை தான்! ரொம்ப நல்லா வந்து இருக்கு. இன்னும் குழந்தைகள் பல நடவடிக்கைகள் செய்வது போலவும், இன்னும் பல முக பாவங்கள் காட்டி காட்சிகளுக்கு அழுத்தம் சேர்த்து இருக்கலாம். மூத்தவள் நடிப்பு அட்டகாசம். இளையவள் அப்பப்போ காமிராவை பார்ப்பது நன்றாகவே தெரியுது. அதை தவிர்த்து இருக்கலாம். பரவாயில்ல.. குழந்தை தானே!! இருப்பினும் இருவரும் தூள் கிளப்பி உள்ளனர். கடைசி 'you work for ur family' என்ற வரி அருமை! நச். வாழ்த்துகள்!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்பதிவைக் கில்லியில் இணைத்துள்ளேன்!

Sundar Padmanaban said...

டுபுக்கு,

குட்டீஸ்க்கு திருஷ்டி சுத்திப் போடுங்க மொதல்ல.

குறும்படம் நல்லா வந்திருக்கு. வாழ்த்துகள். அப்படியே என்னனென்ன கருவிகள் உபயோகிச்சீங்க (software / hardware :))ங்கறதயும் முடிஞ்சா குறிப்பிடுங்க. குறும்படம் எடுக்க நினைப்பவர்களுக்கு உபயோகமா இருக்கும்!

BTW, welcome to the Father of Daughters Club! (assuming you don't have a 3rd child - a boy!) :-))

நந்து f/o நிலா said...

ஒரு இதமானா கவிதை போல் இருந்தது உங்கள் குறும்படமும் குழந்தைகளும்.

இங்கு பலர் சொன்னது போல் கேமராவை குழந்தை பார்ப்பது போண்ற மிகச்சிறிய தவறுகள்தான் இந்த படத்தை மிக அந்நியோன்னியமாக உணரவைத்ததாக கருதுகிறேன்.

நந்து f/o நிலா said...

சுந்தர் என்னையும் க்ளப் ல சேத்துகோங்க

Anonymous said...

nice. very nice.

Dubukku said...

இராமச்சந்திரன் - டேங்க்ஸ் அண்ணே...பண்ணுங்க பண்ணுங்க அதுக்குத்ட் தானே படமெடுத்தது :))

சிறில் அலெக்ஸ் - உங்கள் விரிவான பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி. டோர் பெல் ஐடியா நல்ல ஐடியா ஆனால் குழந்தைகள் தனியாக தூங்கிவிட்டார்கள் என்பதால் பெற்றோர் தானே சாவி வைத்து திறந்துவருவதாகத் இருக்குமில்ல. லாஜிக் இடிக்கும் என்றாலும் இந்த டோர்பெல் ஐடியாவை வேறு களத்தில் உபயோகப்படுத்தலாம் மிக்க நன்றி. ஆமாம் நீங்கள் சொல்வது போல் ப்ளாகில் நிறைய செய்யலாம். லைட்டிங் கரெக்டாய் சொன்னீங்க அடுத்த பதிவில் சொல்லியிருக்கேன் பாருங்க அதில் ரொம்ப மெனெக்கட்டது.

மலைநாடான் - மிக்க நன்றி நண்பரே உங்கள் ஊக்கமான பின்னூட்டதிற்க்கு. மிகவும் ஊக்கமாக இருக்கிறது.

மாதங்கி - மிக்க நன்றி மேடம். மிக ஊக்கமாக இருக்கிறது.

உமையணன் - மிக்க நன்றி. மிக ஊக்கமாக இருக்கிறது.

ஸ்ரீராம் - ரொம்ப டேங்க்ஸ். போட்டாச்சு பாருங்க :)

துளசி - டீச்சர் நீங்கள் சொல்வதை தங்கமணியும் சொன்னார்...அடுத்த தரம் கவனம் கொள்கிறேன். அப்பாடா ஜெயிச்சிட்டேனா :)))

வினோ - மிக மிக ஊக்கமாக இருக்கிறது உங்கள் பின்னூட்டம். மிக்க நன்றி

இன்பா - நீங்கள் சொல்வதோடு 100% ஒத்துப் போகிறேன். அது தான் என் எண்ணமாகவும் இருந்தது. டெக்ஸ்டில் மெசேஜ் சொல்வதில் அத்தனை ஈடுபாடு இல்லை. ஆனால் காட்சியமைப்பை எப்படி அமைப்பது என்பதில் சிக்கலிருந்தது. இது போக இதைச் சொல்ல நான் எடுத்த காட்சிகள் சரியாய் அமையவில்லை. அதனால் அதை நீக்கி விட்டு டெக்ஸ்டை சொருகிவிட்டேன். மென்பொருள் விபரங்கள் பதிந்துள்ளேன்.

ரா.சு - அவங்க பொதுவாவே கொஞ்சம் எக்ஸ்பிரஷன்சோட நல்ல சுத்தி சுத்தி கண்ணை உருட்டிக்கிடே பேசுவாங்க அதில் கேமிராவின் கோணம் நடுவில் வந்துவிட்டது. இருந்தாலும் அந்த எக்ஸ்பிரெஷனுக்காக அவற்றை வைத்துக்கொண்டேன். அடுத்த முறை இவற்றை மேலும் கவனத்தில் கொள்வேன்.

அனானி - மிக்க நன்றி உங்கள் ஊக்கமான பின்னூட்டத்திற்கு. அடுத்த முறை இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் சொல்வதற்க்கு முயல்கிறேன். நன்றி.

பேரரசன் - மிக்க நன்றி நண்பரே உங்க பாராட்டுக்கு. அவங்க பெயர் அத்விகா. குழந்தைகள் ஒத்துழைப்புக்கு மூத்த மகளே காரணம் அவள் தான் இளையவளையும் இயக்கிக் கொன்டிருந்தார்.

ரம்யா - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு. ஆமாம் நீங்கள் சொல்வது போல் இன்னும் அழுத்தமாய் சொல்வதற்க்கு முயற்சி எடுக்கிறேன். நன்றி. தங்கமணிக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கயல்விழி - மிக்க நன்றி மேடம் உங்கள் பாராட்டுக்கு

அனானி - ஆமாங்க ரொம்ப சரி. மேனேஜருக்கும் ஒரு மேனேஜர் இருப்பாரே அவர் கிட்ட போட்டுக் காட்டச் சொல்லவேண்டியது தான் :))

இளையகவி - மிக்க நன்றி நண்பரே. ஆமாம் அதில் அடுத்த முறை இன்னும் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்.

அரசு - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. ஆமாம் இந்தியாவில் ஆபிஸ் வேலையில் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் குடும்பத்துக்கும் முக்கியத்துவம் குடுப்பதே இல்லை. வெளிநாடுகளில் இது மிக மிக முக்கியம். நம் நாட்டில் இதை மாற்ற வேண்டும் அதற்க்கே இதில் மெசேஜ்.

Dubukku said...

நிவி - மிக்க நன்றி மேடம் மேலும் எடுப்பதற்க்கு ரொம்ப ஊக்கமாக இருக்கிறது. தங்கமணியும் இதில் ஆர்வமாய் கலந்துக்கிட்டாங்க.

முரளி - மிக்க நன்றி நண்பரே உங்கள் பாராட்டுக்கு. மூத்த மகள் தான் இளையவளை இயக்கினாள் அவளுக்கு பெரும் பங்கு இதில் சேரும். உங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

கொத்ஸ் - ஹீ ஹீ யோவ் ஆனாலும் நீரும் சீனியரா லட்சணமா ஒரு வார்த்தை சொல்லலாம்ல

மணியன் - மிக்க நன்றி உங்கள் பாராட்டுகளுக்கு. நீங்கள் சொன்ன பிறகு எனக்கும் ஸ்லைட் ஷோ எபெக்ட் தோன்றுகிறது. அதுக்கு என்ன காரணம் என்பதும் புலப்படுகிறது. அடுத்த முறை கவனம் கொள்கிறேன். மிக்க நன்றி.

அப்பு சிவா - மிக்க நன்றி உங்கள் விரிவான பின்னூட்டதிற்க்கு. நீங்கள் சொன்ன அந்த ஏக்கம் பர்றி கவனம் கொள்கிறேன். எடிட்டிங் முதல் முறை என்பதால் கொஞ்சம் பிசிறியிருக்கலாம். அடுத்த முறை இன்னும் கவனம் கொள்கிறேன்.

அனந்த கிருஷ்ணன் - உங்களுடைய முதல் வேட்டையாடு விளையாடு படத்தை பார்த்து உங்கள் ப்ளாகில் பின்னுட்டம் போட்டிருக்கிறேன். இரண்டாவது படம் மிக நன்றாக இருந்தது. அந்த டெட்டி பேர் கான்செப்ட் ரொம்ப நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

கேர்ல் ஆப் டெஸ்டினி - வேகம் ரொம்ப ஸ்லோவாக இருநததோ? சில சமயம் ரொம்ப ஓவரா திணிச்சி சொல்ல வந்தது தெளிவில்லம போயிடுமோன்னு பயந்தேன் அதான். அடுத்த தரம் இந்தை கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன் - மிக்க நன்றிம்மா உங்க பாராட்டுக்கு ரொம்ப ஊக்கமா இருக்கு.

கோபிநாத் - மிக்க நன்றி தல. மோட்டிவேட்டிங்கா இருக்கு.

யோஜிம்போ - இருந்தாலும் நீங்களும் சொல்லலாம். மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. ஒலி தான் ரொம்ப மெனெக்கெட்டேன் :)) உங்கள் விசாரிப்பையும் பாராட்டையும் மகள்களிடம் சொன்னேன். அவர்களின் நன்றி உங்களுக்கு

லக்க்ஷ்மண் - மிக்க நன்றி நண்பரே

கே,ஆர்,எஸ் - அதத் தான் இங்க தங்கமணியும் சொன்னாங்க...அடுத்த தரம் கவனத்தில் கொள்கிறேன். குறிப்பென்ன பதிவே போட்டாச்சு :)) உங்க பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் கில்லி இணைப்புக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி தல. நீங்க சொன்ன மேட்டர அடுத்த தரம் எடுக்கும் போது கவனத்துல வைச்சிக்கிறேன்.

மங்களூர் சிவா - ரொம்ப நன்றி தல. இசை பிடிச்சிருக்கு படத்துலேர்ந்து எடுத்தது.
//சொல்ல வந்த கருத்து ஒத்த புள்ளைய பெத்துகிட்டா ஏங்கி போயிடும் குறைந்தது ரெண்டு பிள்ளைங்க பெத்துக்கணும்ங்கிறது அருமையோ அருமை.// - நக்கலு ஆங் :))))))

தமிழ்மாகனி- மன்னிக்கவும் பெயர சரியா சொல்லியிருக்கேனா தெரியலை. இல்லையென்றால் திருத்தவும். உங்க பாராட்டுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. நிறைய காட்சி மாற்றம் மூனு நிமிஷ படத்துக்கும் சோர்வ சேர்த்திருமோன்னு பயமா இருந்தது அதான் அடுத்த தரம் கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி.

வற்றாயிருப்பு சுந்தர் - மிக்க நன்றி தல உங்க பாராட்டுக்கு. அடுத்த பதிவுல இந்த விபரங்கள் போட்டிருக்கேன். ஆமாம் ரெண்டு பொண்ணு தான் ..ஜோதில ஐக்கியமாகிட வேண்டி தான் :))

நந்து - மீண்டு முயற்சி எடுத்து பார்த்து பின்னூட்டம் போட்டதற்க்கு மிக்க நன்றி. ஆமாம் நீங்கள் சொன்ன காரனங்களுக்காக தான் நானும் அவற்றை இருக்கட்டும் என்று வைத்தேன். மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்க்கு. வாங்க நாம் போய் க்ளப்ல சேர்ந்துக்கலாம் :))

குரு - மிக்க நன்றி உங்கள் பாராடுக்கு நண்பரே.

CVR said...

Awesome effort!!!

The kids are really cute!!
Rock on!!! B-)

Unknown said...

arputham dubukku..! Padam edukka poreannu sonnathai naan "thamasukkunu" ninaichean..!! Aana nijama eduthu, athuvum nallavum eduthuteenga..!! Great!!
Please do continue!


-Anand

Kuzhambi said...

Good debut. What an irony?... I am reading this after starting work at 6:00 AM in the morning. Look forward to your next short film... cheers

Unknown said...

டுபுக்கு என்னத்த பெருசா எடுத்து தம்பட்டம் அடிச்சுகிட்டு இருக்கார்ன்னு பாக்க வந்தேன்...

அய்யா... கவிதை அய்யா...கவிதை!
சுட்டிகள் இரண்டும் அழகு. முன்பே ஓரளவு கணிக்க முடிகிறது என்றாலும், இந்த காலத்துக்கு மிகத் தேவையான (குறிப்பா, டேமேஜர்கள், டைரக்டர்களுக்கு) செய்தி!

கலக்கீட்டீங்க.... மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

SurveySan said...

nice editing work, but seemed too long.

Camera paakkaama irukkanum. aanaa, with kids, its kashtam.

very nice try.

Anonymous said...

Adhu eppadi unga kitta ivvalvu thiramai kotti kidakku... ezhuthuladaan kalakareengannu partha visual media layum konnuteenga.. i dont know much about the technique of movie making, from a lay person's perspective, this is amazing.

Paavai

இரா. வசந்த குமார். said...

அண்ணாச்சி... அட்டகாசம்.. நல்லாவே வந்திருக்கு உங்க கூட்டணியோட குறும்படம். குடும்பப் படங்கறாங்களே.. அது இது தானோ.. விஜய டி.ஆருக்கு அப்புறமா நீங்க தான் குடும்பப் படம் குடுத்திருக்கீங்க..

நாம வலைப்பதிவு எழுத நீங்களும் ஒரு தூண்டுகோலா இருந்திருக்கீங்க. இப்போ காமிரா வழி கதை சொல்வதற்கும், உங்க படைப்பு ஒரு தூண்டுதலா இருகும்னு நினைக்கிறேன்.

அப்புறம், புள்ளைங்களுக்கு திருஷ்டி சுத்திப் போட்டிடுங்க... !!!

ilavanji said...

டுபுக்ஸ்,

முதல்முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

எல்லாத்தையும் மக்களே சொல்லிட்டாங்க.... மீஜிக்கு, எடிட்டிங் எல்லாம் அருமை... சின்னவள் கேமராவை பார்க்கறதும் எனக்கு இயல்பாகவே தெரிந்தது. கடைசில சொன்ன மெசேஜை காட்சிப்படுத்தியிருக்க முடியாதா?!

எனக்கு தோனினது..

கடைசில நீங்க டயர்டான முகத்தில் தேக்கி வைத்த புன்னகையுடன் கையில் 3 எரியும் மெழுகுவர்த்திகளுடனான பிறந்தநாள் கேக்குடன் எண்ட்ட்ரி ஆகறீங்க... கடைசி ஷாட்டா பாப்பாங்க மீண்டும் தூங்கறதை ஒருதடவை காட்டறோம்...

இன்னும் அழுத்தமான முடிவுன்னா....

டோரை காட்டறீங்க.. அடுத்து பாப்பாங்க மீண்டும் தூங்கறதை ஒருதடவை காட்டறோம்... கடைசியா கேமரா அப்படியே கீழ போகுது... அங்க ஏற்றப்படாத 8 மெழுகுபத்திகளுடன் "Happy Anniversary Mom & Dad"..

எப்படி? (எப்படிடா இப்படின்னு நீங்க திட்டறதுக்கு முன்னாடி எஸ்கேப்பு! :) )


இளவஞ்சி...

Jeevan said...

Excellently captured buddy!! Very affectionate sisters, so sweet expressions on the young ones face. Let the doors open :) after long time being here, hope u all are doing well.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நீங்கள் பிடித்த குறும்படம் பிடித்தது.

Anonymous said...

I do not know that what we record our children play is called short flim. Now I can post a lot of childrens recordingss with some background music and call it as my short flim. Thanks for the teaching


Venu

சிறில் அலெக்ஸ் said...

உங்க படத்துக்கு எதிர் படம் இங்கே போயி பாருங்க

Premalatha said...

Congrats on delivering your first baby. I know this is nothing less than the pregnancy and labour and certainly no less than seeing your first baby. I know the feeling. So, Congrats.
first impressions are,
1. well done.
2. நிசம்மாவேனு களத்தில இறங்குவீங்கன்னு நினைக்கல. so I was amazed. consider few pats for doing it.
3. So, you do know taking and making videos! I didn't know that before ;-) :-)
4. many well dones for many techies, which many have told already.
5. when this night shyamalan no.2 goes live (like software going "live") hope some of your "friends" get ஓசி டிக்கெட். ;-)

Well done again.

Anonymous said...

Awesome video. Dont know why but the music and the scenes just brought tears in my eyes. Great Show!

-Arun.

Aani Pidunganum said...

Dubuks

Kalakiteer oye,
Unga mudhal padam excellent, music was damn good and gives some sort of calm feeling.
Congrats oye, innum niraiyah edhirpaarkiroam ummakitta, bcoz mudhal padameh kalakiteer .

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் இயக்குநரே. நல்ல மெசேஜ். குட்டி நடிகைகள் சூப்பராகச் செய்திருந்தனர்.

Anonymous said...

ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாரும் சொன்ன மாதிரி lighting அருமை! இன்னும் மேலும் மேலும் நிறைய குறும்படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்.

ஒரு சின்ன concern. குழந்தைகள் photo/video ஒரு பொதுவான வலை தளத்துல போடறது யோசிக்க வேண்டிய விஷயம். இந்த விஷயத்துல protective-ஆ இருக்கறது நல்லது.

PRINCENRSAMA said...

மிகச் சிறப்பாக இருக்கிறது இயக்குநரே! வாழ்த்துகள்

Dubukku said...

சி.வி.ஆர் - என்ன தல இப்படி சிம்பிளா சொல்லிட்டீங்க...லைட்டிங் நான் எதோ கொஞ்சம் இண்ட்ரஸ்ட் காட்டியிருந்தாலும் அது கரெக்டா வந்திருக்கா இல்லை எதாவது குறைகள் இருக்கான்னு உங்க எக்ஸ்பேர்ட் ஒபீனியன் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன். தனி ஈ,.மெயில்லயாவ்து சொல்லுங்கப்பு ப்ளீஸ்.

ஆனந்த் குமார் - ஹீ ஹீ இதுல மட்டும் டமாசு பண்ணலைங்கோவ்...உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி

குழம்பி - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. நீங்கல்லாம் ஏத்திவிட்டு அடுத்த படத்துக்கு கை பர பரங்குது :)) காலைல ஆறு மணிக்குப் படிச்சீங்களா..நாள் நல்லபடியாக இருந்திருக்கும்ன்னு நம்புறேன்...:))

தஞ்சாவூரான் - அண்ணே மிக்க நன்றி.. முதல் படம்கிறதால் கொஞ்சம் தம்பட்டமாகிடிச்சுன்னு நிணைக்கிறேன் அடுட்த்க தரம் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

சர்வேசன் - அந்த கிச்சன் காட்சிகள் கொஞ்சம் அயர்வைத் தந்திடிச்சோ?? அடுத்த தரம் கவனம் செலுத்தறேன். உங்க கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி

பாவை - வாங்க மேடம் எப்படி இருக்கீங்க ரொம்ப நாள நம்ம பேட்டை பக்கம் காண்வே இல்லை. ஐயைய்யோ திறமையெல்லாம் சொல்லாதீங்க கூசுது :) அட நீங்க வேற எனக்கும் விஷயமெல்லாம் தெரியாதுங்க. விமர்சனம் பண்ண ஒரே முக்கிய தகுதி போது அத பார்த்திருக்கணும் அவ்வளவு தான் :)) உங்க தொடர்ந்த பாராட்டு என்க்கு மிக ஊக்கமா இருக்கு

வசந்த குமார் - ஆஹா என்ன தலை ட்.ஆர் மாதிரி குடும்பப் படம்ன்னு சொல்லிட்டீங்க :)))))) இந்தப் படம் தூண்டுதலா இருக்குன்கிறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எடுங்க. உங்க உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

இளவஞ்சி - வாங்க தல. மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு. அந்த கேக் ஐடியா நல்லா இருக்கு அதையே (குழந்த்தைகளின் வயதைக் கணக்கில் கொண்டு) குழந்தைகளுக்கு பிறந்தநாள் அப்பாவோ அம்மாவோ லேட்டாக வாங்கிவருவது போலிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
நான் ஒரிஜினலாக கடைசிக் காட்சியில் அப்பா வந்து (முகத்தைக் காட்டாமல்) குழந்தைகளின் தலையை வாஞ்சையோடு கோதிவிடுவது மாதிரி. ஆனால் அது படமாக்கப்பட்ட விதம் நினைத்த அழுத்தத்தை ( எத்தனை த) தராதால் எடிட்டிங்கில் நீக்கிவிட்டேன். பின்னாடி வேற படத்துக்கு உங்க ஐடியாவ யூஸ் பண்ணிக்கிறேன்.

ஜீவன் - வாங்க ஜீவன். எப்படி இருக்கீங்க. எல்லாரும் நலம். அன்கேயும் அப்படியே என நம்புகிறேன். கலக்கிட்டீங்க...உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

யோகன் பாரிஸ் -வாங்க யோகன். உங்களுக்கு பிடித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

வேணுகொபால் - உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. குறும்படத்திற்க்கு எனக்குத் தெரிந்து வரைமுறை கிடையாது எதைப் பற்றியும் எப்படியும் எடுக்கலாம். உங்கள் புரிதல் வேறுபட்டிருந்தால் கேட்பதற்க்கும் படங்கள் எதாவது இருந்தால் பார்த்து கற்பதற்கும் ஆர்வமாய் இருக்கிறேன். மனதில் பட்டதை அப்பிடியே சொன்னதற்க்கு மிக்க நன்றி.

சிறில் - ரொம்ப ரசித்தேன் :)))) மிச்ச கமென்ட் அங்க ))


பிரேமலதா - வாங்க.நல்லா இருக்கீங்களா. குழந்தை நல்லா இருக்காங்களா? You summed it all perfectly.
நீங்க சொன்ன மாதிரி பிரசவ டென்ஷன் தான் இங்க :))

//So, you do know taking and making videos! I didn't know that before//
:))>
ஷ்யாமளன்2 லாம் ரெம்ம்ம்ம்ம்ம்ப ஒவர்கிறது எனக்கு தெளிவா தெரிஞ்சாலும் குஜால்சா தான் இருக்கு கேக்கிறதுக்கு :))) அப்பிடியெல்லாம் ஒரு வேளை ஆகிட்டா ப்ரீ டிக்கெட்டா ஒரு ஸ்பெஷல் ப்ரிவியூ ஷோவே ஏற்பாடு செஞ்சிரமாட்டோம்?
மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கிறது.

அருண் - வாங்க மிக்க நன்றி உங்க கருத்துக்கு. ஒருவேளை உங்கள் அனுபவத்துக்கு இசை காரணமாக இருக்கலாம். மிகவும் மனதை தொடும் விததில் இருந்தது. இசையமைப்பாளர் கலக்கி இருந்தார்.

ஆனி - - வாங்கைய்யா மிக்க நன்றி. ரொம்ப ஊக்கமாய் இருக்கிறது உங்கள் பாராட்டு :))சேதுக்கரசி - வாங்க மேடம். ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு ஆமா அவங்க தான் படத்தை காபாத்தி இருக்காங்க :))

கிருத்திகா - ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கும் பாராட்டுக்கும். லைட்டிங் நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் மெனெக்கெட்டேன். நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் யோசிச்சேன்(ரொம்ப நாள் முன்னாடி) ஆனால் இங்க யூ.கேயில் இது பற்றிய சாட்டங்கள் மிகத் தெளிவாக இருக்கிறது. ஸ்காட்லண்ட் யார்ட் இந்த விஷயத்தில் தீவிரமாகவும் இருக்கிறது அதனால் எதாவது பிரச்சனை வந்தால் எந்த லெவெல்லானாலும் போய்ப் பார்த்துவிட்டுவது என்று முடிவோடு தான் இருக்கிறேன். மேலும் எத்தனை நாள் தான் இந்த மாதிரி புழு பூச்சிகளுக்கெல்லாம் பயந்து நம கூட்டுக்கு உள்ளயே வாழ்வது. இவர்களை எல்லாம் என்டர்டெயினே பண்ணக்கூடாது மோதி மிதித்துவிடுவது என்று தீர்மாணமாக இருக்கிறேன்.

princenrsama - மிக்க நன்றி நண்பரே உங்கள் வாழ்த்து மிக்க ஊக்கமாக இருக்கிறது :)

Anonymous said...

டுபுக்கர்

லேட்டஸ்டா வர்றதா இருந்தாலும் லேட்டாத்தான் வருவேன் போலிருக்கு.


எளிமை - இனிமை

வஞ்சி அண்ணாச்சி சொன்னது போலவோ சிறில் அண்ணாச்சி சொன்னது போலவோ அந்தக் கதவை இன்னும் நாலஞ்சு தடவை காட்டியிருக்கலாம். குழந்தைகள் அந்தக் கதவை கொஞ்ச்ம ஏக்கமாப் பார்க்குற மாதிரியோ ஜன்னல் திரைச்சீலையை விலக்கி எட்டிப் பார்க்குற மாதிரியோ செஞ்சிருந்தா இன்னமும் 'கதவு'க்கு ஒரு அழுத்தம் கிடைச்சிருக்கும். ரொம்ப அழுத்துனா கதவு உடைஞ்சிடப் போவுதேன்னு விட்டுட்டீங்களாக்கும் :-)))

ரொம்ப நல்லா இருக்குய்யா. வேறென்னத்தச் சொல்ல?!. புள்ளைங்கன்னா இப்படி சமர்த்தா இருக்கணும். நல்லா இயல்பா இருக்காங்கய்யா ஒன்றிரண்டு காட்சி சட்டங்கள் (ஃப்ரேம் சாமி!) தவிர :-))

முதல் முயற்சியோட விட்டுடாம தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருக்க எல்லாம் வல்ல இறைவனும் இயக்குனரின் இயக்குனரும் நல்லாசி புரிவார்களாக :-)

சாத்தான்குளத்தான்

Blogeswari said...

ஃபர்ஸ்ட் டைம் டைரக்டர்னே சொல்லமுடியலை. நல்லா படம்பிடிச்சிருக்கீங்க! வாழ்த்துக்கள் டுபுக்கு! உங்க பசங்களும் இயல்பா நடிச்சிருக்காங்க

PS: Sorry for the delay.மறுபடியும் தமிழ் ஃபாண்ட்ஸ், தமிழ் ஃப்ளாக்கிங் டூல்ஸ் இன்ஸ்டால் பண்ணறதுல செம தாமதம்.

ஆ.கோகுலன் said...

பிள்ளைகளின் இயல்பான நடிப்பை வெளிக்காட்டுவதில் பின்னணி இசையும் உதவியிருக்கிறது. குறும்படம் பற்றிய முன்னுரை உங்களின் 'அவையடக்கமே'!.
கதவைக்காட்டும்போது timeing ஐ கொஞ்சம் கூட்டியிருக்கலாம். ஒளியமைப்பும் இயல்பாக இருந்தது.
ஆமா.. உங்க வீட்லயும் இப்படியா..? ஏன்னா.. குழந்தைங்க நடிச்சமாதிரியே தெரியலியே..!!
வாழ்த்துக்கள்.. Mr.Dubukku.

Anonymous said...

super!!!!

Uma said...

i liked ur maiden attempt
i ve a 8 month old baby.my huuby comes home after 11pm just when the baby has tosleep...but seeing him he starts playing with him.and we all go to bed by 12midnight.as i work got to to get up by 6pm..they keep sleeping
it ithe lady at home who suffers the most
uma

Anonymous said...

Dear Mr.Dubukku,

Fantastic.

Christo

Illatharasi said...

மிகவும் அருமை! குழந்தைகள் மிக சிறப்பாக நடித்துவுள்ளனர்.

Wonderful concept!!!! Good Job!!!

Dubukku said...

ஆசிப் - அண்ணாச்சி தன்யனானேன் உங்க பாராட்டைப் பெற. அதே அதே கொஞ்சம் செயற்கையாக இருக்குமோன்னு தான் அந்த ஏக்கப் பார்வையை தவிர்தேன். அடுத்த தரம் வேற முயற்சி செஞ்சு பாக்கேன்

ப்ளாகேஸ்வரி - மிக்க நன்றி மேடம். சிரமம் எடுத்து வந்து கருத்து சொன்னதுக்கு இன்னுமொரு நன்றி.

கோகுலன் - ஹீ ஹீ வீட்டுல இப்படி கிடையாதுங்க...கொஞ்சம் பொறுமையா அவங்க இயல்புக்கு வந்ததுக்கு அப்புறம் எடுக்க ஆரம்பிச்சேன் அவ்வளவு தான். உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி மிக்க ஊக்கமாக இருக்கிறது.

அனானி - மிக்க நன்றி

உமாகுமார் - மிக்க நன்றி மேடம். ஆமாங்க வேலைக்கு போகிற பெண்மணிகளின் கஷ்டம் சொல்லி மாளாது. இந்தியாவில் வேலை இடத்தில் குடும்பம் என்பது இரண்டாம் பட்சமாக இருப்பது மிகவும் வருத்ததுக்குரிய விஷயம். Hope it all gets better soon

கிறிஸ்டோ - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு மிக்க ஊக்கமாக இருக்கிறது.

இல்லத்தரசி - மிக்க நன்றி மேடம் உங்க பாராட்டுக்கு. இந்த கருத்து தான் முதலில் தோன்றியது படமெடுக்க. குழந்தைகளிடம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்

Thevathasan said...

இது போன்ற கருத்துள்ள படங்கள் பலவற்றை எடுக்க வாழ்த்துக்கள்.

முடிந்தால் நண்பர்கள் வட்டம் மூலம் பல அலுவலகங்களுக்கு அனுப்புங்கள்.

உருப்படியான ரசனைக்கும் சிந்தனைக்கும் மக்கள் திரும்புவார்கள்.

அறிவிலி said...

உங்களின் இந்த படத்திற்கு தமிழ்மணம்
விருது கிடைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.
முதல் முயற்சி போலவே மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ரங்கா,
ஏதோ பழஞ்சரக்கு தேடும் போது இந்த காட்சிப்படத்தில் வந்து நின்றேன்..

அருமை..அதுவும் வாரிசுகளின் நடிப்பு,அருமை.

திரைப்பட இயக்கம் அளவில் வரும் போது கையோடு நடிகைகளையும் வைத்திருக்கும் ஏற்பாடு தெரிகிறது! :))

இயக்குனரை இயக்கியவர் நன்றாக செயல்பட்டிருப்பது குழந்தைகளைப் பார்க்கையில் தெரிகிறது.

ஃப்ரேம் மாறுவது இன்னும் சிறிது விரைவாக இருந்திருக்கலாம் என்று படுகிறது.

இசைக்கோர்வை அருமை !

மூத்தது உங்களைப் போலவே இருக்கிறார்ப் போல இருக்கிறது..

உங்களது மின்மடல் தவறிப் போய்விட்டது. nanbann@gmail.com க்கு ஒரு மடல் தட்டி விடவும்.

Post a Comment

Related Posts