Monday, March 10, 2008

ஸ்டாராமில்ல..

உங்களுக்கு இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணனை நியாபகம் இருக்கிறதா? டிசம்பர் மாத கர்நாடக கச்சேரி மேடைகளில் இருப்பார், டி.நகரில் புடவை கடை திறந்து வைப்பார், தூர்தர்ஷன் நிகழ்ச்சி மேடைகளில் இருப்பார், அப்புறம் பெரம்பூரில் காயலான் கடை திறந்துவைத்துவிட்டு நேஷனல் ஹாக்கி போட்டிகளில் கோப்பை வழங்குவார். தூர்தர்ஷன் செய்திகளில் காட்டும் வீடியோ க்ளிப்புகளில் எப்படியாவது இவரைப் பார்க்கலாம். சம்பந்தமே இல்லாமல் இந்த ஆளு எல்லா இடத்துலையும் தலைய காட்டுராறென்னு நிறைய யோசித்திருக்கிறேன்.

இந்த வாரம்/மாதம் எனக்கும் (ஊழல்/சிறை தவிர்தலாக) கோபாலகிருஷ்ணன் வாரம். இது வரை எந்த வலைப்போடிகளிலுமே பரிசு வாங்கியிராத நான் பல இடங்களில் நடுவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறேன். சங்கமம் விருதுகளில் நடுவாராக போட்டார்கள், வ.வா சங்க நகைச்சுவை புகைப்பட போட்டிக்கும் நடுவராகப் போட்டார்கள் இதெல்லாம் போக தமிழ்மணத்தில் முதல் முறையாக ஸ்டாராக வெற ஆகியிருக்கிறேன்(10 மார்ச் முதல் 16 மார்ச் வரை). முன்னால் இருந்த நட்சத்திரங்கள் போட்ட பதிவுகளின் தரத்தை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. கைப்புள்ளை அடித்து விளையாடியா ஆட்டத்துக்கெல்லாம் ஈ.டு குடுக்க முடியும் என்றெல்லாம் நம்பிக்கை இல்லை. நிதமும் ஒரு பதிவாவது போடவேண்டுமாம். என் சோம்பேறித்தனத்துக்கு வைத்த ஆப்பு. முயற்சிக்கிறேன். அடிக்கடி போஸ்ட் போடுன்னு அன்பாக மிரட்டிக் கொண்டிருந்த அன்பு உள்ளங்கள் எல்லாம் ஒழுங்காக அட்டெண்டன்ஸ் போட்டுருங்க...(நிவி, இஸ்திரி பொட்டி,பாஸ்டன் ஸ்ரீராம், ராமச்சந்திரன் மற்றும் நண்பர்கள் எல்லாரும் கவனிக்க).

நம்பள் கீ இந்த ஒரு வார இம்சைக்கு பாராட்ட நினைக்கிறான் எல்லாம் நம்பள்யும், திட்ட நினைக்கிறான் எல்லாம் தமிழ்மணத்தையும் கான்டாக்ட் செய்றான். அரே உங்கள அந்த பகவான் தான் காப்பத்தனும் !!
ஓ.கே டெக்னிக்கலா நாளைக்குத் தான் ஸ்டார் வாரம் ஆரம்பிக்குது அதுனால நாளைக்கு சந்திக்கிறேன்.

41 comments:

துளசி கோபால் said...

நல்வரவு & நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

டுபுக் டுபுக் னு காணாமப்போனா இப்படித்தான் இருக்கும்:-))))))

வினையூக்கி said...

நல்வரவு & நட்சத்திர வாழ்த்துகள்.

CVR said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :-D

இந்த வாரம் ROFL வாரம்னு சொல்லுங்க!! :-)

ஜி said...

வாழ்த்துக்கள்.... பட்டாசு கெளப்புங்க.... ;)))

கைப்புள்ள said...

//நம்பள் கீ இந்த ஒரு வார இம்சைக்கு பாராட்ட நினைக்கிறான் எல்லாம் நம்பள்யும், திட்ட நினைக்கிறான் எல்லாம் தமிழ்மணத்தையும் கான்டாக்ட் செய்றான்//

டுபுக்கு டச்சோட செம ஓபனிங். அசத்தல். நட்சத்திர வாழ்த்துகள்.

ILA (a) இளா said...

innum panthiye podale, athukkulleeva? * Vaazthukkal..

Thamiz Priyan said...

நல்வரவு & நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

இலவசக்கொத்தனார் said...

ஆஹா!! ஜூப்பர்!! இந்த வாரம் சிரிப்பு வாரமா!! சூப்பரோ சூப்பர்.

cheena (சீனா) said...

நட்சத்திரமானதற்கு நல் வாழ்துகளுடன் கூடிய நல்வரவேற்பும்.

சும்மா தூள் கெளப்புங்க

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள்

காட்டாறு said...

இந்த வாரம் வெடி சிரிப்பு தானா? இல்லை வெரைட்டி கிடைக்குமா? எதுனாலும் எனக்கு ஓகேப்பா.... நட்சத்திர வாழ்த்துக்கள்!

சிவமுருகன் said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

naanga attentence podurom,neenga pathiva podunga.daily oru posta?olunga podunga, illa koodi vandhu kummi adichu,koolu oothiruvanga makkal.pera kappathikonga.:))))
-isthri potti

Kannabiran, Ravi Shankar (KRS) said...

டுபுக்கு அண்ணாச்சி
நட்சத்திர வாழ்த்துக்கள்!
சிரிப்போ சிரிப்பு தான்!
பட்டைய கெளப்புங்க! :-)

தினமும் ரெண்டு மூனு போஸ்ட் எல்லாம் கெடையாதா?
திங் டேங்க்-ல மெட்ரோ வாட்டர் ஊத்தினா வரும் அண்ணாச்சி!
Give it a shot! :-))

மெளலி (மதுரையம்பதி) said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.....

ஆயில்யன் said...

//டிசம்பர் மாத கர்நாடக கச்சேரி மேடைகளில் இருப்பார், டி.நகரில் புடவை கடை திறந்து வைப்பார், தூர்தர்ஷன் நிகழ்ச்சி மேடைகளில் இருப்பார், அப்புறம் பெரம்பூரில் காயலான் கடை திறந்துவைத்துவிட்டு நேஷனல் ஹாக்கி போட்டிகளில் கோப்பை வழங்குவார். தூர்தர்ஷன் செய்திகளில் காட்டும் வீடியோ க்ளிப்புகளில் எப்படியாவது இவரைப் பார்க்கலாம்.//

எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருப்பாரு ! (இது மிஸ்ஸிங் :))

நட்சத்திர(த்திற்கு) வாழ்த்துக்கள்

Anonymous said...

five star rangekku kallakunga.dubukku sir,you are already a star writer.YOU ARE GOING TO ROCK!!!!!!!!!.ALL THE BEST.
NIVI.

கருப்பன் (A) Sundar said...

வாழ்த்துக்கள்... திரு. டுபுக்கு!

SP.VR. SUBBIAH said...

நட்சத்திர வாழ்த்துக்கள் டுபுக்கு!

அதென்ன சாமி டுபுக்கு?
விளக்கம் சொல்லுங்கள்!

siva gnanamji(#18100882083107547329) said...

டுபுக்கு
எப்.பி.அய் லெ இருக்காறா? இல்லே
எப்.பி.அய் பிடியில இருக்காறா?
ஏன் தன்னைப்பற்றி சொல்லாம
மறைக்கிறார்?
அறிமுகம் போடும்வே....

Unknown said...

வாங்க.... வாங்க..


நட்சத்திர வாழ்த்துக்கள்...

கதிர் said...

வாங்க தல!
பட்டய கெளப்புங்க. :)

கோபிநாத் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தல ;))

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

நல்வரவு & நட்சத்திர வாழ்த்துகள்.

மங்களூர் சிவா said...

//

இந்த வாரம்/மாதம் எனக்கும் கோபாலகிருஷ்ணன் வாரம்.

(ஊழல்/சிறை தவிர்தலாக)
//

நல்ல வேளை குறிப்பிட்டீங்க!!!!!!

வாங்க கலக்குங்க.

சென்ஷி said...

வாழ்த்துக்கள் டுபுக்கண்ணே :))

சென்ஷி

Dubukku said...

டீச்சர் - வாங்க முதல் வாழ்த்து உங்ககிட்டேயிருந்தா...தன்யனானேன்

வினையூக்கி - நன்றி. நீங்களும் கலக்கிபூட்டீங்க போங்க உங்க வாரத்துல

சி.வி.ஆர் - நன்றிங்கோவ்...சும்மா ஏத்திவிடாதீங்க அண்ணாச்சி :))

ஜீ, கைப்புள்ள , இளா, தமிழ் ப்ரியன், கொத்ஸ்,சீனா, பாசமலர், காட்டாறு, சிவமுருகன், இஸ்திரி பொட்டி, கே.ஆர்.எஸ், மதுரையம்பதி, ஆயில்யன், நிவி, சுபைய்யா அண்ணாச்சி, சிவஞானம்ஜி, பேரரசன்,தம்பி, கோபிநாத்,வள்ளி,மங்களூர் சிவா, சென்ஷி

எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி சாமியோவ்...இத்தை ஆதரவை பாக்கும் போது பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது

rv said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துகள்!

//நிதமும் ஒரு பதிவாவது போடவேண்டுமாம்.//
தினம் போய் நிதம்னு ரூல்ஸ மாத்திட்டாங்களா..

இந்த வாரமாவது எஸ்ஸாகாம டெயிலி ஒரு பதிவு போடுங்க.

sriram said...

ஹே ராம்
வாழ்த்துக்கள், இந்த வாரம் ஸ்டார் ஆனதில் உன்னை விட எனக்கு மகிழ்ச்சி அதிகம்.
இந்த வாரம் தமிழ் மணம் அதிரணும்,Wish you good luck
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்

வல்லிசிம்ஹன் said...

ஆஹா வாழ்க வளர்க,.
பேரைக் கேட்டதில்இருந்தே சிரிப்பு வந்தாச்சு.
நாங்க ரெடி.
வாழ்த்துக்கள் டுபுக்கு.

Anonymous said...

இன்னா..பண்ணணும்னு வெலாவாரியா...சொல்லீப்பூடு....அத்தொட்டு கைமேல கவ்னீ...இன்னா சொல்றே ?

அதிரடிக்காரன்...மச்சான்...மச்சான்....மச்சானே.... - ப்ளாக் உலக ஸூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

//ஸ்டாராமில்ல..//
இன்னிக்கு காலையிலேருந்து இலண்டன்ல அடைமழை, பேய்க்காற்று முதலான தீய நிமித்தங்கள் தோன்றும்போதே நெனச்சேன். இன்னிக்கு எதோ பலான்து பலான்து நடந்திருக்குன்னு. அது இதானா?

சேதுக்கரசி said...

//ஸ்டாராமில்ல..//

வாழ்த்துக்கள். அப்ப இந்த வாரம் வாழ்க்கைக் கல்வில்லாம் உண்டுன்னு சொல்லுங்க ;-))

காயத்ரி சித்தார்த் said...

ஆஹா! இந்த வாரம் நீங்களா?/ நட்சத்திர வாழ்த்துக்கள்!!

Divya said...

நட்சத்திர வாழ்த்துக்கள் டுபுக்கு!!

அபி அப்பா said...

நான் கொஞ்சம் லேட்டா வந்திட்டேனா டுபுக்கு சார். வாழ்த்துக்கள். இந்த வாரம் நகைச்சுவைக்கு மரியாதை வாரம்!! மீண்டும் வாழ்த்துக்கள்!!

Girl of Destiny said...

உங்களோட association of ideas பிரமாதம்!! எப்படி கோபாலகிருஷ்ணன்-ல இருந்து டுபுக்கு வரைக்கும் கொண்டு வந்துட்டிங்க!!
உங்களை எல்லாம் இப்டி மாட்டி விட்டாதான் பதிவு வரும்!!!

நெல்லைக் கிறுக்கன் said...

அண்ணாச்சி,
ரொம்ப நாளைக்கு அப்புறமா தமிழமணம் பக்கம் வந்தா நட்சத்திரமா உம்ம பேரு இருக்கு. ரொம்ப சந்தோசம்.

உம்ம பாத்து பதிவு போட ஆரம்பிச்ச என்ன மாதிரி ஆளுகளுக்கெல்லாம் ரொம்ப நாளா இருந்த மனக்குறை இப்பத்தான் தீந்துச்சு. எப்பவோ கெடச்சிருக்க வேண்டிய அங்கீகாரம்...!!!

பரவாயில்ல லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கீரு... வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

Anonymous said...

In a movie named " ARTHUR " . In the climax after a meeting with the King Arthur , Villan will say " Finally a Man worth killing "
like that all the blogs wriiten by u are worth reading.
Bz iam a very lazzy fellow ..I wont get and impressed by most of the things but i dont know what made me to read all u blogsss..
Ur Jlooi thirintha kalam.. about ur story discussion... excellent...

Post a Comment

Related Posts