Friday, March 14, 2008

ஒரு டுபுக்கு டைரக்டராகிறார் - 3

எடுக்கப் போகிற படம் இன்னது என்று ஒரு சிறுகுறிப்பு வரைந்து காட்சியமைப்புகளை மனதில் இருத்திக்கொண்டு "ஓ.கே யூனிட் நாம இன்னிக்கு படம் எடுக்க போறோம்"ன்னு அறிக்கை விட்டாச்சு. அடக்கம் அமரருள் உய்க்கும்ன்னு திருவள்ளுவர் சொன்னது "அடக்கம்னா அமரர் ஊர்தில இஸ்திகினு போவாங்க"ன்னு என்று தான் எனக்கு அர்த்தமாகியிருக்கிறது என்பதால்
"இந்த ப்ளானிங் இருக்கு பார்த்தியா அது தான் முக்கியம். எல்லாத்தையும் கரெக்ட்டா ப்ளான் பண்ணிட்டோம்ன்னு வை...அப்புறம் அசால்ட்டா இடது கையால பத்தே நிமிஷத்துல படத்த முடிச்சிரலாம்"ன்னு நான் அடக்கமா சொல்லும் போது மணி எட்டு.

செல்லப் பெண்கள் இருவரும் காஸ்டியூம் சேஞ்சுக்குப் போயாச்சு. எல்லாத்துலையும் தான் மூக்கை நுழைப்போமே. காமிராக்கு என்ன கலர் பிடிக்கும்ன்னு தெரியாவிட்டாலும் சும்மா இது அடிக்க வர்ற மாதிரி இருக்கும் இந்த கலர் ஒத்து வராதுன்னு அங்கேயே கொஞ்சம் பெண்டு நிமிர்ந்துவிட்டது.

லைட்டிங் பற்றி நிறையபேர் கேட்டிருப்பதால் சொல்லிவிடுகிறேன். உண்மையாக லைட்டிங் தான் நான் ரொம்ப மெனெக்கெட்டது. முதலில் ஃப்ளட் லைட் ஒன்று வாங்கி அதன் மேல் மெல்லிய துண்டை போட்டு (ஷார்ப்பாக இல்லாமல் கொஞ்சம் சாப்ட் ஆக்குவதற்க்கு) உபயோகிக்கலாமா என்று யோசித்தேன் ஆனால் ஃப்ளட் லைட் எல்லாம் ஆயிரம் வாட்ஸ். அது கக்குகிற சூட்டுக்கு துண்டை அதற்கு மேல் போட்டு தீபற்றி விட்டால் அப்புறம் தலையில் தான் துண்டை போடவேண்டும் என்பதால் ஐடியா மெகா பட்ஜெட் படத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இருந்த ப்ளோர் லேம்ப்பில் நூறைம்பது வாட்ஸ் பல்பைப் பொறுத்தி இது போக இன்னொரு மேஜை விளைக்கை ஆங்கிளில் வைத்தேன். இவை எதுவும் கேமிரா ஆங்கிளில் ரிப்ளக்க்ஷனில் வந்துவிடக்கூடாதே என்று இரண்டு மூன்று தடவை பார்த்துக்கொண்டேன். இருந்தாலும் ஒரே ஒரு ஷாட்டில் லைட்டிங் கிச்சன் சுவர் டைல்ஸில் ரிப்ளக்க்ஷன் இருக்கும். அந்த ஷாட்டில் மகளின் முகபாவனை பிடித்துப் போனதால் இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன்.

முதல் சீன் அடுக்களையில் சாப்பிடுவது மாதிரி. இருவருக்கும் சாப்பாடு நேரமாதாலால் பசி வேறு. முதல் கொஞ்ச நேரம் கேமிராவை ட்ரைபாடில் வைத்துவிட்டு ஆன் செய்யாமலே காமிரா பழகட்டுமே என்று எடுப்பது மாதிரி நடித்தேன். கேமிராவை பார்க்காதீர்கள் என்பதைத் தவிர ஏதும் சொல்லாமல் விட்டுவிட்டேன். மூத்த மகள் சின்னதை மேய்ப்பதில் வெகு சாமர்த்தியமாக செயல்பட்டார். சின்ன மகளிடம் ரியலாக ஸ்கூலில் நடந்ததைப் பற்றி உரையாட ஆரம்பித்துவிட்டாள். ஓ.கே டேக்குக்கு போகலாம் என்று கேமிராவை ஆன் செய்ய எத்தனித்த போது பார்த்தால் அவர்கள் தட்டிலிருந்த பிரெட் காலியாகியிருந்தது. வீட்டில் வேறு ப்ரெட் இல்லை.

இதுக்குத் தான் ப்ளான் பண்ணி வீட்டுக்குப் பக்கத்தில் கடை இருக்கிற மாதிரி பார்த்துக்கொண்டேன் என்று ஓடிப்போய் ப்ரெட்வாங்கி வந்தாயிற்று. வழக்கமாய் ஏதாவது சேட்டை பண்ணுவீர்களே இன்னிக்கு எதாவது சேட்டை பண்ணுங்கள் என்று கேமிராக்கு பின்னாலிருந்து குரல் குடுத்தால் "லூஸாப்பா நீயி..." என்று ஒரு லுக்கு விட்டு சின்னப் பெண் "சேட்டை பண்ணுவது நல்ல பழக்கம் இல்லை " என்று நமக்கே பாடம் போதித்தாள். இல்லைடா செல்லம் இன்னிக்கு எதாவது குறும்பு பண்ணு என்று கெஞ்ச வேண்டியதாகிவிட்டது. அப்புறம் "இதெல்லாம் சரி பண்ணி வைக்கிறதில்லையா"ன்னு அசிஸ்டன்ட் டைரக்டரிம் சொல்லி கரெக்ட் செய்தோம்.

"இந்த லைட்டிங் இருக்கு பார்த்தியா இத இப்படி வைச்சா சூப்பரா இருக்கும்"ன்னு சொல்லி வைத்துவிட்டு திரும்பும் போது எங்கிருந்தோ வயர் தானாக வந்து காலில் சுருட்டிக் கொண்டு டேபிள் லாம்ப்பையும் சேர்த்து இழுத்து கிளிங்கிவிட்டது. டேபிள் லாம்ப்பின் கண்ணாடி முழுவதும் சுக்குநூறாகவில்லை என்பதால் உடைந்த பக்கத்திலிருந்து ஒரு மாதிரியும் உடையாத பக்கத்திலிருந்து ஒருமாதிரியும் வெளிச்சம் வந்து அதுவும் நன்றாகத் தான் இருந்தது. "இங்க இன்னும் கொஞ்சம் லேசா உடைஞ்சிருக்கனும் அப்பத் தான் லைட்டிங் நான் எதிர்பார்த்த மாதிரி வரும். அதுக்குத் தான் எய்ம் பண்ணி தட்டிவிட்டேன்...இங்க உடையாம சொதப்பிடிச்சு இட்ஸ் ஒக்கே போஸ்ட் பொரெடக்க்ஷன்ல டச்சிங்கல சரி பண்ணிடலாம்" என்று உதாரிவிட்டு திரும்பினால் தங்கமணி இந்த இம்சைக்கு சீரியல் இம்சையே பெட்டர் என்று எஸ்ஸாகியிருந்தார்.

அப்புறம் ஒரு வழியாக மிச்சத்தையும் முடிப்பதற்க்குள் குழந்தைகளுக்கு உண்மையிலேயே தூக்கம் வந்துவிட்டது. டைரக்டர் அதுக்குத் தானே ப்ளான் பண்ணியிருந்தார். ஒரு மூன்று நாள் இரவு கண்முழித்து எடிட்டிங் மிக்ஸிங் எல்லாம் முடிந்தது. படத்துக்கு பெயர் வைப்பதற்க்கு தான் கொஞ்சம் முட்டிவிட்டது. என்னடா வழின்னு யோசிச்சு எல்லாருக்கும் வாசல் தான் வழின்னு என்ற டயலாக் நியாபகார்த்தமாக "தி டோர்" என்று பெயர் சூட்டி இங்கே ரிலீஸும் பண்ணியாச்சு.

இங்கே நான் மிக மிக முக்கியமாக நன்றி சொல்லவேண்டியது - அம்மணிக்கு. அவர்கள் ஒரு மென்டராக இருந்து நிறைய உதவி செய்தார்கள். அவரக்ளுக்கு எனது மனமார்ந்த நன்றி.

நிற்க. படம் எடுக்க உபயோகப்படுத்திய உபகரணங்கள் விபரங்கள் நிறைய பேர் கேட்டிருந்தார்கள். வீடியோ கேமிரா - கேனான் எம்.வி.730ஐ (இப்போ இது கொஞ்சம் பழைய மாடல் தான்). ப்ளோர் லாம்ப் - 2, டேபிள் லாம்ப் - 1 ( கண்ணாடியில் ஈசானி மூலையில் அரைக்கு முக்கால் இஞ்ச் உடைத்துக் கொள்ளவேண்டும் அப்போ தான் நான் எடுத்த எஃபெக்ட் கிடக்கும் :) ) நிறைய இடமிருக்கும் ஹார்ட் டிஸ்க்குடன் கூடிய கம்ப்யூட்டர். மென்பொருள் - அடோபி மற்றும் விண்டோஸ் மூவி மேக்கர்.

16 comments:

ILA (a) இளா said...

படத்தின் தலைப்பு தமிழில் ஏன் இல்லை?

Ramya Ramani said...

Nalla dhan samalichirukkenga..sila nerangalil sila vichayangal nama edir parkama thana amajirum ade madiri than unga light odanjadhu kooda..Good Attempt! Congrats again to the Whole Team!

BTW how can I type in Tamil?

Anonymous said...

படம் நன்றாக வந்து இருக்கிறது.
ஒன்று அல்லது இரண்டு முறை கதவின் பக்கம் நின்று குழந்தைகள் கொஞ்சம் ஏங்குவதாகாக் கூட காண்பித்து இருந்திருக்கலாம். ((ஏதாவது சொல்ல வேண்டும் என்று கூறினேன்!))
தமிழில் பெயர் வைத்து இருந்தால் உங்களுக்கு வரி விலக்கு கிடைத்து இருக்கும்.!!
தியாகராஜன்

Anonymous said...

அது ஒண்ணுமில்லிங்க.. டுபுக்கு அண்ணாச்சி software engineer இல்லிங்களா! Windows நெனப்பிலேயெ The Door ன்னு பேர் வெச்சிட்டாரு. அடுத்த பட தலைப்பு இவைகளாக இருக்கலாம்.

Ventillator
Staircase
பரண்
திண்ணை

டைரக்டர் பேரை கூட numerology படி சல் பேட்ஸ் ன்னு மாத்திக்கலாமே!

let me be serious now

டுபுக்கு முதல் படைப்பிலேயே தூள் கிளப்பி விட்டீர்கள். அடுத்த பட outdoor song sequencekku அமெரிக்கா வருகிறீர்களா! இது எனது இரண்டாவது அழைப்பு.

சொல்ல முடியாது. நாளைக்கே டுபுக்கு manoj shyamalan போல வந்தாக்க.. இப்பயே கைக்குள்ள போட்டுக்கறதுதான் நல்லது

வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடுத்த பட தலைப்பு இவைகளாக இருக்கலாம்.
Ventillator
Staircase
பரண்
திண்ணை//

வேணாங்க! திண்ணை தளத்துல இருந்து காப்பிரைட் பிரச்சனை வந்துச்சுனா? :-))

அப்புறம்
ஆடியோ மிக்சிங் பத்தி எல்லாம் சொல்லவே இல்லியே!

அண்ணாத்த
The Making of The Door! - awesome!!

Unknown said...

படத்துக்கு பெயர் வைப்பதற்க்கு தான் கொஞ்சம் முட்டிவிட்டது.

enna door-a?!!

Super narration Dubukku!

Anand

பினாத்தல் சுரேஷ் said...

குறும்படம் நல்லா வந்திருக்கு டுபுக்காரே. ஆக்சுவலா, படத்துடைய வெற்றிக்கு இயக்குநரைவிட ஸ்டார்ஸ்தான் காரணம் என்பதைப் பதிய விழைகிறேன் :-)

Unknown said...

வழக்கமாய் ஏதாவது சேட்டை பண்ணுவீர்களே இன்னிக்கு எதாவது சேட்டை பண்ணுங்கள் என்று கேமிராக்கு பின்னாலிருந்து குரல் குடுத்தால் "லூஸாப்பா நீயி..." என்று ஒரு லுக்கு விட்டு சின்னப் பெண் "சேட்டை பண்ணுவது நல்ல பழக்கம் இல்லை " என்று நமக்கே பாடம் போதித்தாள். இல்லைடா செல்லம் இன்னிக்கு எதாவது குறும்பு பண்ணு என்று கெஞ்ச வேண்டியதாகிவிட்டது. அப்புறம் "இதெல்லாம் சரி பண்ணி வைக்கிறதில்லையா"ன்னு அசிஸ்டன்ட் டைரக்டரிடம் சொல்லி கரெக்ட் செய்தோம்.

சமத்து ,,,,?

நான் உங்க குட்டி பொண்ணு அத்விகாவை சொன்னேனுங்க ...!


படத்துடைய வெற்றிக்கு இயக்குநரைவிட ஸ்டார்ஸ்தான் காரணம் என்பதை ஆமோதிக்கிறேன்

மங்களூர் சிவா said...

//

பினாத்தல் சுரேஷ் said...
குறும்படம் நல்லா வந்திருக்கு டுபுக்காரே. ஆக்சுவலா, படத்துடைய வெற்றிக்கு இயக்குநரைவிட ஸ்டார்ஸ்தான் காரணம் என்பதைப் பதிய விழைகிறேன் :-)

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்

Girl of Destiny said...

உங்க படமும் சூப்பர் ... படமெடுத்த கதையும் சூப்பர்!
படம் - drama
அதோட கதை - நகைச்சுவை!

எல்லா genre-லயும் கலக்குரீங்க! :-)

Anonymous said...

/* காமிராக்கு என்ன கலர் பிடிக்கும்ன்னு தெரியாவிட்டாலும்......

அது கக்குகிற சூட்டுக்கு துண்டை அதற்கு மேல் போட்டு தீபற்றி விட்டால் அப்புறம் தலையில் தான் துண்டை போடவேண்டும்...

இன்னிக்கு எதாவது சேட்டை பண்ணுங்கள் என்று கேமிராக்கு பின்னாலிருந்து குரல் குடுத்தால் "லூஸாப்பா நீயி..." என்று ஒரு லுக்கு .......

இங்க இன்னும் கொஞ்சம் லேசா உடைஞ்சிருக்கனும் அப்பத் தான் லைட்டிங் நான் எதிர்பார்த்த மாதிரி வரும்.....

என்னடா வழின்னு யோசிச்சு எல்லாருக்கும் வாசல் தான் வழின்னு என்ற டயலாக் நியாபகார்த்தமாக "தி டோர்" என்று பெயர் சூட்டி....*/ - வழக்கமான் "டுபுக்கு..டச்..".

அடுத்ததா..."மேக்கிங் ஆஃப் தி டோர்" வீடியோ-வா வரும்னு நெனச்சா...போஸ்ட் போட்டே ஒப்பேத்திட்டீங்க...இட்ஸ் ஓகே...

சீக்கிரம் ஹார்ட்-டிஸ்க் கேம்கார்டர் வாங்கிடுங்க...டேப் டூ ஸிஸ்டம் ட்ரான்ஸ்பர் டைம் மிச்சமாகும்...

மொத்தத்தில் அருமை...குழந்தைகளுக்கு சுற்றி போடவும்...

Munimma said...

double repeatu :-)

director dubukkin first padam the door (tax exemption illai), paarka inimai. padathil nadithirukkum 2 kutti stargalum migavum arumai. padathin vetrikku avargal thaan pakka balam. pinnisaiyil pinni vittar. kathai, editing ethilum salaikkavillai dubukkuji (as in kamalji fan). kurai - nalla nadana amaippugalodu (athaampa, bada gaana) 2 paatu potirukkalam. mothathil the door, arumai.

Dubukku said...

படம் ஹாலிவுட் படம்ங்க...அதான் :)) (இங்க எல்லாரையும் ரீச் பண்ணனுங்கிறதுக்காக)

ரம்யா - ஹீ ஹீ லைட் உடைஞ்சது என்னம்மோ உண்மை ஆனா அது ஸ்பெஷல் எபெஃக்ட் லாம் குடுக்கலை நான் சும்மா சமாளிச்சது அது :) நான் க்ட்ட்ப்://ந்ந்ந்.ஜffனலிப்ரர்ய்.cஒம்/டோல்ச்/ஊனிcஒடெ.க்ட்ம்
பயன்படுத்துகிறேன். மிகவும் எளிமையாக இருக்கும் ட்ரை பண்ணிப் பாருங்கள்.

தியாகராஜன் - உங்கள் பாராடுக்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்னதும் யோசித்தேன் ஆனால் அது கொஞ்சம் ரொம்ப ட்ரமேட்டிக்காக இருக்குமோ என்று செய்யவில்லை. படம் ஹாலிவுட் படமென்பதால் தமிழில் பெயர் வைக்கவில்லை :))))))))


திரிஸங்கு - வாங்க அண்ணாச்சி நல்லா இருக்கீங்களா. நக்கலை நன்றாகவே ரசித்தேன் :)) அமெரிக்கா கண்டிப்பாக வருகிற ப்ளான் இருக்கு எப்போ என்று தான் முடிவு செய்யவில்லை :) ஸ்யாமளன்லாம் ரொம்ப ஓவர்ங்க இருந்தாலும் குஜால்சா தான் இருக்கு கேக்கிறதுக்கு. உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.


கே.ஆர்.எஸ் - ஆடியோ மிக்ஸிங் இந்த படத்துக்கு ஒன்னும் ஸ்பெஷலா பண்ணவே இல்லை. அதான். வால்யூமை கூட பட முடிவில் கம்மி பண்ணவில்லை. உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

ஆனந்த் - ஆமா ஆனந்த் :)) நன்றி

பினாத்தலார் - வாங்கய்யா வந்து குட்டைய குழப்பிட்டீங்களா..இத் உஎன்ன ரெஜிஸ்டர் ஆபிஸா பதியறதுக்கு. சாப்பாடு ஆச்சா? இங்க இனிமே தான் :)) ஏதோ ரெண்டு பேரு ஸ்யாமளன்னு சொன்னா பொறுக்காதே அங்க :)))

பேரரசன் - நீங்களுமா :))) சரி சரி பதிஞ்சதுக்கு பீஸ குடுத்துட்டு போங்க :)))

மங்களூர் சிவா - //சரி சரி பதிஞ்சதுக்கு பீஸ குடுத்துட்டு போங்க :)))// - நானும் ரிப்பீட்டேய் :))

கேர்ல் ஆப் டெஸ்டினி- ஹீஹீ நீங்க என்ன வைச்சு நல்லாவே காமெடி பண்றீங்க. பட் சீரியஸ்லி உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி இதெல்லாம் தான் எதாவது கைய பரபரக்க வைக்குது. மிக்க நன்றி.

இராமச்சந்திரன் - யோவ் இவ்வளவு நல்லா படமெடுத்திருக்கிற எனக்கு சுத்தி போடவேண்டாமா அதப் பத்தி நீங்களாவது சொல்லுவீங்கன்னு பார்த்த கவுத்திட்டீங்களேயா ...சே வாட் அ பிட்டி வாட் அ பிட்டி :)))


முனிம்மா - வாங்க மேடம் நல்லா இருக்கீங்களா. ஆஹா சன் டிவி டாப் டென் ரேஞ்சுக்கு விமர்சனம் சொல்லீட்டீங்க. மிக்க நன்றி. ஐயிட்டம் சாங் அடுத்த தரம் ட்ரை பண்ணறேன் :))) உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. தன்யனானேன்.

CVR said...

படம் எடுக்கும் போது அப்பப்போ டைரகடர் வேலை செய்வது எல்லாம் கூட எடுத்திருந்தால்,unedited shots எல்லாம் வைத்து bloopers அல்லது making of the "The door" செய்து வெளியே விட்டிருக்கலாம்!!

நல்ல முயற்சி!!
வாழ்த்துக்கள்!! :-)

Subhashree said...

Loved it. Music supera irukku, nalla choice padathukku.

Kids have grown up from the last time I saw them. Naturally, its been over two years now.

Nisha, Guruprasad's wife

Anonymous said...

டைரக்டர் டுபுக்கின் முதல் படம் தெ டோர் (டாக்ஸ் எக்செம்ப்ஷ்ன் இல்லை), பார்க்க இனிமை. படத்தில் நடித்திருக்கும் 2 குட்டி ஸ்டார்களும் மிகவும் அருமை. படத்தின் வெற்றிக்கு அவர்கள் தான் பக்க பலம். பின்னிசையில் பின்னி விட்டர். கதை, எடிட்டிங் எதிலும் சளைக்கவில்லை. பாட்டு போட்டிருக்கலம். மொத்தத்தில் தெ டோர், அருமை

சங்கர்லால்55

Post a Comment

Related Posts