உங்கள் வருங்கால சந்ததியினருக்கு எந்த தமிழ் சினிமா படங்களைப் பார்க்கும் படி சிபாரிசு செய்வீர்கள் என்று ஒரு தொடர் பதிவை சாம்பார் வடை ஆரம்பித்து நம்மையும் இழுத்து போட்டுவிட்டார்.
ஏற்கனவே என் மகள்கள் பார்க்கவேண்டும் என்று நான் விரும்பும் ஒரு கலக்க்ஷனை வைத்திருக்கிறேன்.இந்த லிஸ்ட்டில் இருக்கும் சில படங்களை இன்னும் தேத்திக் கொண்டிருக்கிறேன்.இதில் சில படங்கள் என் மூத்த மகளுக்கும் பிடிக்கும்.
நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இந்த மாதிரி கலெக்க்ஷன் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எனது ஆர்வத்தை தூண்டிய படம் ஆங்கிலப் படம் "லார்ட் ஆஃப் த ரிங்ஸ்". அதுவரை நல்ல படங்களை பார்த்து சிலாகித்தாலும் துட்டு குடுத்து வாங்கி அலமாரியில் பூட்டி வைத்துக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் தோன்றியதே இல்லை. இந்தப் படத்தைப் பற்றி சில நெருங்கிய வட்டத்தில் மணிக்கணக்கில் ஃபோனில் ப்ளேடு போட்டிருக்கிறேன். சாம்பார்வடை தமிழ் படங்கள் என்று கறாராய் சொல்லிவிட்டதால் எனது லிஸ்டில் இருக்கும் இந்த ஒரே ஆங்கிலப் படத்தை சேர்த்துக் கொள்ளவில்லை.
1. "உன்னால் முடியும் தம்பி" - இந்தப் படம் மசாலா படமாய் இருக்கலாம், லொட்டு லொசுக்கு என்று குற்றங்கள் இருக்கலாம், எல்லாவற்றையும் தாண்டி "உதயமூர்த்தி" பார்த்த மாத்திரத்தில் நாடி நரம்புகளில் ஜிவ்வென்று ஏறிவிட்டார். அதற்கு படமெடுத்த /கதை சொன்ன விதமும் காரணமாய் இருக்கலாம். "உன்னால் முடியும் தம்பி" எனக்குப் பிடித்த தாரக மந்திரமாகிவிட்டது. கமல் ரசிகனாய் ஆனதிற்கு மிக முக்கியமான காரணங்களில் இந்தப் படமும் ஒன்று. இந்தக் படத்தின் கதை எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று.
2. "சலங்கை ஒலி" - ஒரு மிகச்சிறந்த படம் என்ற காரணத்துக்காக நான் கலக்க்ஷணில் வைத்துக்கொண்டிருந்தாலும், அதெல்லாம் சும்மா சால்ஜாப்பு, ஜெயப்பிரதாவுக்காகத் தான் கலெக்க்ஷனில் இருக்கிறது என்று தங்கமணி ஆணித்தரமாக நம்புகிறார்.(இருக்கலாம் :) ) ஒரு படம் எப்படி எடுக்கவேண்டும் என்று நிறைய காட்சிகளில் இந்தப் படத்தில் பாடம் இருப்பதாக நான் நம்புகிறேன். பிண்ணனி இசை என்பது ஒரு படத்திற்கு எவ்வளவு பலம் என்பது இந்தப் படத்தில் பார்க்கலாம். இளையராஜா புகுந்து விளையாடி இருப்பார். கமல் அகில இந்திய விழாவில் ஆடப் போகிறார் என்பதை அவருக்கும் தெரிவிக்கும் காட்சி ஒன்று போதும் இந்த படத்திற்கு! கமல், ஜெயப்பிரதா, இளையராஜா, கே.விஷ்வநாத் நாலு பேரையும் ஒருபோல நிறக வைத்து காலில் விழலாம். நாத விநோதங்கள் பாட்டுக்கு ஆடுவதற்கு நானும் நாலு வருஷமாய் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன், வீட்டில் அம்மாவும் பெண்களும் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
3.காதலிக்க நேரமில்லை - வீட்டில் எதாவது விசேஷத்திற்கு ஊரில் இருந்து எல்லாரும் வந்திருப்பார்கள். விஷேசம் முடிந்த அன்று வேலை செய்து களைப்பாக இருப்பார்கள். ராத்திரி சாப்பாடு, அரட்டைக் கச்சேரி முடிந்த பிறகு சேர்ந்து உட்கார்ந்து டீ.வியில் பார்ப்பதற்க்கு சூப்பர் படம். இந்தப் படத்திலிருந்து பாலைய்யாவின் காமெடிக்கு பெரும் ரசிகனாக ஆகிவிட்டேன். (அவர் பார்ப்பதற்கு எங்க தாத்தா ஜாடையில் வேறு இருப்பார்) மனுஷன் என்னம்மா கலக்குவார். படத்தில் அந்தக்கால தொய்வுகள் சில இருக்கும் என்றாலும் அதையெல்லாம் தாண்டி கண ஜோராய் இருக்கும். இந்தப் படம் பார்க்கும் போது இந்தக் காலத்தில் நாமும் இருந்திருக்க மாட்டோமா என்று ஒரு ஏக்கம் வரும். ரவிச்சந்திரன் செம ஸ்மார்ட்டாக இருப்பார்.
4.திருவிளையாடல் - ஏ.பி.நாகராஜனுக்கு நிறைய கடமைப் பட்டிருக்கிறோம். இந்த மாதிரி கதைகள் இருப்பதால் சில புராணக் கதைகளை சொல்ல மிக எளிதாக இருக்கிறது. இந்தப் படம் அதற்க்காக மட்டுமில்லை- எனக்கு சின்ன வயதிலும் இப்போதும் மிகவும் பிடிக்கும் படம். இப்பொது டெக்னாலஜி வந்ததற்கப்புறம் சில விஷயங்கள் அல்பமாக தோன்றினாலும் இந்தப் படம் நான் சின்னவயதில் பார்த்த போது, பிரம்மாண்டத்தில் மிரண்டு போயிருக்கிறேன். எத்தனையோ உம்மாச்சி படங்கள் வந்தாலும் இந்தப் படம் தான் அவற்றில் எல்லாம் டாப். இந்தப் படத்தின் ஆடியோ கேசட்டைக் கூட எங்காவது கல்யாணமண்டபத்தில் ஸ்பீக்கரில் ஒலிபரப்ப்பிக் கொண்டிருந்தாலும் வெட்கமே படாமல் நின்று கேட்டிருக்கிறேன். "டுர்ர்ரிங்ங்ங்ங்ங்" என்று காட்சி மாறுவதை குறிக்கும் இசையுடன் ஆடியோ கேசட் சூப்பராய் இருக்கும். பாடல்கள் எல்லாம் பட்டையைக் கிளப்பும் ரகம். வீட்டில் இந்தப் படமும், சரஸ்வதி சபதமும் மகள்களுக்காக நிறையதடவை போட்டிருக்கிறோம். இந்த வயதில் வசனங்கள் புரியாமல் பெரும்பாலும் பாதியிலேயே தூங்கிவிடுவார்கள், நான் மட்டும் முழு படத்தையும் உட்கார்ந்து பார்ப்பேன். தங்கமணி தொந்தரவில்லாமல் கம்ப்யூட்டர் பார்ககவேண்டுமானால் இந்தப் படத்தை போட்டு என்னை உட்காரவைத்துவிட்டு நைஸாக நழுவிவிடுவார்.
5.தில்லுமுல்லு - ரஜினியின் சிறந்த படம் என்று நான் நினைப்பது. கலக்கி எடுத்திருப்பார். பாலசந்தரின் சில இம்சைகளை தவிர்த்து பார்த்தோம் என்றால் சிரித்து மகிழ அற்புதமான படம். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் கலக்கலாய் இருக்கும். ரஜினியின் அலட்டில்லாத நடிப்பு பார்க்கும் போது மனுஷனை இமேஜ் வலையில் பூட்டி அற்புதமான நடிகனை சாகடிச்சிட்டாங்களோன்னு வருத்தமாய் இருக்கும்.
6. பைவ் ஸ்டார் - படம் மிகப் பிரமாதமான படமாய் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இந்த படத்தில் வரும் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். என்ன படமென்றே தெரியாமல் பார்த்து ரொம்ப பிடித்த படம். கல்யாணமான பிறகும் நட்பு தொடர்கிறது அதுவும் மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள் காம்பினேஷன் கலக்கலாய் இருக்கும். இதில் அவர்களுடைய கணவர்களும் மனைவிகளும் சேர்ந்து கொள்வது அற்புதமாய் இருக்கும். ஒரு ஃபீல் குட் ரக படம்.
7. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்துப் போன தோசைமாவில் ரெண்டு தேக்கரண்டி வினீகர் விட்டு, சோடா உப்பு போட்டு, முட்டைக்கோசு வெந்த தண்ணீர் விட்டு கலந்து, வென்னிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து உப்பு போட்டாமல் போண்டா போட்டால் எப்படி கேவலமாய் வரும் என்பதை செய்யாமல், சாமான்களை வேஸ்ட் செய்யாமல் தெரிந்துகொள்ளவேண்டுமானால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.
மனதில் சட்டென்று தோன்றியவற்றை பதிந்திருக்கிறேன். நான் ரொம்ப விரும்பும் சில படங்கள் விட்டுப் போயிருக்கலாம்...நினைவு வந்தால் பின்னூட்டத்தில் சேர்க்கிறேன்.
உங்களுக்கும் இந்த லிஸ்ட் போட ஆசையாயிருந்தால் பிடியுங்கள் என் அழைப்பை...பதியுங்கள் படிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.
Tuesday, November 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
unga post rangekku illiye
:-(((((
Evlavoo padangal irukke !
Naan thojam katti kondu, 146 thadavai paartha padangal ivai !
Micheal mathana kaamarajan !
Server sundaram !
Pushbak (a) pesum padam !
Anbe sivam !
Ninaithaley inikum !
Aaan pavam
Antha ezhu natkal
Moondram pirai (Except Climax)
Porum..mathavangalukkum chance tharanum. :)
Unga blog ISO 9001 vanginatha !! ivlo ethir parkiranga :)
அவ்வை சண்முகி
கலகலப்பான படம்.
சந்திரலேகா
பிரமாண்டமான படம். எடுத்த காலத்தை நினைத்தால் இன்னும் பிரமிப்பு அதிகமாகும்.
அரசு
சூப்பர் செலக்ஷன். நமக்கு பிடிச்ச படங்களும் பல அதில் இருக்கு.
டெம்பிளேட் மெய்யாலுமே ஷோக்கீதுமே!
அப்படியே இந்த பின்னூட்டம் பொட்டி தனி பக்கமாக வருவதை தவிர்க்கலாமே!
எவ்வளவோ பண்ணுறீங்க.. இதை பண்ண மாட்டீங்களா?
enakum piditha padangal thaan.. aanal anbe sivam and pancha thanthiram vitu ponathu varuthama iruku.. enga thillana mohanambala vituteenga??
template sokkakeethe...
//அவர் பார்ப்பதற்கு எங்க தாத்தா ஜாடையில் வேறு இருப்பார்//
LOL :)
ஹிஹி, உண்மை, நானும் இதயே தான் பீல் பண்ணி இருக்கேன். ஜாடை மட்டுமா? :))
மைக்கேல் மதன காமராசன், தில்லானா விட்டுடீங்களே?
pudhu template asathhhal.pleasentaa irukku.neenga sonna listla ella padamum ennoda favourites kooda.anbe sivam,bama vijayam,pammal sambandham,first one for the lovely storyline and latter for the comedy-the best sollalam,niraya irukku.sollikitte pogalam.
nivi.
thillu mullu paarkumpothellam rajinioda andha timing.neenga solradhu correct.avaroda talenta imagennra perula adakkittanga.are we not missing something???nnu thonum.manal kayirunnu oru movie.shantikrishnaoda innocent face.appuram sila sharp vasanam.salangai olila jayapradavukkaga oru10,kamalkkaga oru10,vishvanathado master strokkaga oru patthu ,i have forgotten how many times i have seen it.still i love to watch every time it is telecast.
nivi.
I will not vote, I will not vote, I will not vote. Sotha thanama irukku all your 5 ideas. Pona pottumnu, ARR vena othuppen. Naan thirundha matten. But michamellam no way. Neeye kalla vottu pottukko. :)
And as for good tamil movies there are a lot of movies. And you have chosen 6 from my list. No wonder we are friends :) 5 Star super illai. I was surprised too, seeing that one. Namma thamizh padam dhana appdeenu. The slots differ, but the first 6 movies are in my all time list too :)
manal kairu,bama vijayam,simla special,dhinandorum(ponnu vallanthathum)how u r answering to ur daughter"s ?s apart from school lessons
நிழல் நிஜமாகிறது மற்றும் வறுமையின் நிறம் சிவப்பு இரண்டுமே அருமையான படங்கள் .உன்னால் முடியும் தம்பி பிடித்தவருக்கு கண்டிப்பாக இதுவும் பிடிக்கும்.கமல் கேரக்டர்ரைஷேன் வெகு ஜோர்.
//7. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்துப் போன தோசைமாவில் ரெண்டு தேக்கரண்டி வினீகர் விட்டு, சோடா உப்பு போட்டு, முட்டைக்கோசு வெந்த தண்ணீர் விட்டு கலந்து, வென்னிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து உப்பு போட்டாமல் போண்டா போட்டால் எப்படி கேவலமாய் வரும் என்பதை செய்யாமல், சாமான்களை வேஸ்ட் செய்யாமல் தெரிந்துகொள்ளவேண்டுமானால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.
//
Dubukareh,
Kalakkal point. Guna, Se(d)thu, Nandha idhuellam vitutingalohnu thonudhu. Guna, Sethu ellam list panninadhu paarthu edhavadhu ninaikadhinga.
By the way, blog template, superaah iruku.
oh! a very nostalgic post! all your choices are good.
simple-a all kamal movies nu potrukkalaam. michael madhana kama rajan, thenali, avargal, manmadha leelai........... you shd see nizhal nijamaagiradhu - kamal will be so smart in that... anbe sivam enna madhiri padam...
sari kamal lerndhu vilagi, most of mani rathnam movies special mention - mouna ragam, nayagan, guru. Guru - what a movie? mani rathnam thavira andha documentary padatha ivalavu super-a yaaralayum edukka mudiyadhu...
otherwise, definitely 5 star is good, but I'm proud that we have a friends circle like that. padam pathadhum engaloda life-a thirumbi patha maadhiri irundhuchu...
-umakrishna
I too great fan of Thillu Mullu film.. I have seen that film more than 50 times.
U have rightly stated "ரஜினியின் அலட்டில்லாத நடிப்பு பார்க்கும் போது மனுஷனை இமேஜ் வலையில் பூட்டி அற்புதமான நடிகனை சாகடிச்சிட்டாங்களோன்னு வருத்தமாய் இருக்கும்."
I even felt the same.. Old rajini films are too gud than the current ones..
As many ppl pointed out "Anbe sivam" u missed out.. :)
Dubukku,
thanks a lot for your listing. I thought the no. of movies may be more.
thanks anyway.
நல்ல கலெக்ஷன்.
//. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்துப் போன தோசைமாவில் ரெண்டு தேக்கரண்டி வினீகர் விட்டு, சோடா உப்பு போட்டு, முட்டைக்கோசு வெந்த தண்ணீர் விட்டு கலந்து, வென்னிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து உப்பு போட்டாமல் போண்டா போட்டால் எப்படி கேவலமாய் வரும் என்பதை செய்யாமல், சாமான்களை வேஸ்ட் செய்யாமல் தெரிந்துகொள்ளவேண்டுமானால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.
//
விழுந்து விழுந்து சிரிச்சேன். ஸேம் ப்ளட்!
நல்ல கலெக்ஷன்.
//. வேல் / அழகிய தமிழ் மகன் - புளித்துப் போன தோசைமாவில் ரெண்டு தேக்கரண்டி வினீகர் விட்டு, சோடா உப்பு போட்டு, முட்டைக்கோசு வெந்த தண்ணீர் விட்டு கலந்து, வென்னிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து உப்பு போட்டாமல் போண்டா போட்டால் எப்படி கேவலமாய் வரும் என்பதை செய்யாமல், சாமான்களை வேஸ்ட் செய்யாமல் தெரிந்துகொள்ளவேண்டுமானால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்.
//
விழுந்து விழுந்து சிரிச்சேன். ஸேம் ப்ளட்!
மங்களூர் சிவா - பாருங்க என்ன ரேஞ்சு பெரிய ஐ.எஸ்.ஸோ ரேஞ்சுன்னு கேக்கிறாங்க பாருங்க :))
சௌம்யா - உங்க லிஸ்டுல உள்ளதுல அன்பே சிவம் கண்டிப்பா விட்டுப் போச்சு. ஐ.எஸ்.ஸோ - கலாசுறீங்க...வாங்கிக்கிறேன் :))
அரசு - ஆமாங்க சந்திரலேகா பயங்கர பிரம்மாண்டமான படம் இல்ல...
நாகை சிவா - அப்பாடா டெம்ப்ளேட் பத்தி ஒருத்தருமே ஒன்னும் சொல்லலையேன்னு பார்த்தேன். நன்றிங்க..பின்னூட்டப் பெட்டி...சௌகரியமா இருக்குங்க அதான் :))
டுபுக்குடிசைப்பிள் - அன்பே சிவம் விட்டுப்போச்சு. தில்லானா மோகனாம்பாள் எனக்கும் பிடிக்கும் ஆனா முழு படமும் பிடிக்காது :)) டெம்ப்ளேட் - நன்றி ஹை.
அம்பி - //ஜாடை மட்டுமா// ஹீ ஹீ...
நிவி - நன்றிங்க.. இதெல்லாம் எனக்கும் பிடிக்கும். பாமா விஜயம் கலெக்க்ஷன்ல இருக்கு :) மணல் கயிறு நல்ல படம்
வித்யா - திருந்தாத அப்டியே இரு :) ம்ம்ம் பைவ் ஸ்டார் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
அனானி - தினந்தோறும் அந்த க்ளோசிங் ஷாட் டச் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க கேட்ட கேள்வி புரியலை
லதா - வறுமையின் நிறம் சிவப்பு - ஆமாங்க ரொம்ப பிடிக்கும் ஆனா லிஸ்ட்ல பத்துக்கு எட்டுப் படங்கள் அப்புறம் கமல் படமாகிடுமேன்னு தான் விட்டுட்டேன். நிழல் நிஜமாகிறது இன்னும் பார்க்கலை..எடுக்க வேண்டிய படங்களில் சேர்த்துக்கறேன். நன்றி
ஆணி - குணா எனக்கும் பிடிக்கும். சேதுவும் ரொம்ப பிடிக்கும். :)) - டெம்ப்ளேட் நன்றி
உமா - அட ஆமாங்க கமல் படங்கள்ன்னு போட்டிருக்கலாம். ஆனா அந்த மும்பாய் எக்ஸ்பிரஸ் மட்டும் சேர்த்துக்கவே மாட்டேன் :)). குரு எனக்கும் படமாக்கப்பட்ட விதம் ரொம்ப பிடிச்சுது. அட அப்பிடியா பைவ் ஸ்டார் மாதிரி இருக்கீங்களா பரவாயில்லையே :)
வி.ஜி - ஆமாங்க அன்பே சிவம் விட்டுப்போச்சு.. செம படம் இல்ல..
சாம்பார் வடை - நிறைய படம் சொல்லலாம்னு நினைச்சேன் அவசரமா போட்டுட்டேன் :)) சில தொடர் பதிவுகல் உடனே போடத் தூன்டும் இல்லையா உங்க தொடரும் ரொம்ப தூண்டிடிச்சு அழைப்புக்கு நன்றி.
சர்வேசன் - ஓஒ அங்கயும் அதே தானா. ரொம்ப எதிர்பார்த்தேங்க..அதுனாலயோ என்னம்மோ. மண்னெண்ணை விளைகெண்ணைன்னு டயலாக் வந்தவுடனேயே சப்புன்னு ஆயிடிச்சு .
லதா - வறுமையின் நிறம் சிவப்பு - ஆமாங்க ரொம்ப பிடிக்கும் ஆனா லிஸ்ட்ல பத்துக்கு எட்டுப் படங்கள் அப்புறம் கமல் படமாகிடுமேன்னு தான் விட்டுட்டேன். நிழல் நிஜமாகிறது இன்னும் பார்க்கலை..எடுக்க வேண்டிய படங்களில் சேர்த்துக்கறேன். நன்றி
ஆணி - குணா எனக்கும் பிடிக்கும். சேதுவும் ரொம்ப பிடிக்கும். :)) - டெம்ப்ளேட் நன்றி
உமா - அட ஆமாங்க கமல் படங்கள்ன்னு போட்டிருக்கலாம். ஆனா அந்த மும்பாய் எக்ஸ்பிரஸ் மட்டும் சேர்த்துக்கவே மாட்டேன் :)). குரு எனக்கும் படமாக்கப்பட்ட விதம் ரொம்ப பிடிச்சுது. அட அப்பிடியா பைவ் ஸ்டார் மாதிரி இருக்கீங்களா பரவாயில்லையே :)
வி.ஜி - ஆமாங்க அன்பே சிவம் விட்டுப்போச்சு.. செம படம் இல்ல..
சாம்பார் வடை - நிறைய படம் சொல்லலாம்னு நினைச்சேன் அவசரமா போட்டுட்டேன் :)) சில தொடர் பதிவுகல் உடனே போடத் தூன்டும் இல்லையா உங்க தொடரும் ரொம்ப தூண்டிடிச்சு அழைப்புக்கு நன்றி.
சர்வேசன் - ஓஒ அங்கயும் அதே தானா. ரொம்ப எதிர்பார்த்தேங்க..அதுனாலயோ என்னம்மோ. மண்னெண்ணை விளைகெண்ணைன்னு டயலாக் வந்தவுடனேயே சப்புன்னு ஆயிடிச்சு .
like this
crow malaila nananjakuda ean roof pottu nest kattala?
crow eppadi ammava kandupidikum?
veetla eli iruku.athuku sapadu kudutha, athu kitchenla ragalai pannathullama?
ennkadavethan thambiyum vaithula irundana ,naan pakkalaye?
I thought this will be useful for many of Tamil People living Abroad.
You can watch Tamil Tv Online at a Broadcast qualtiy @ www.ChannelLive.tv
8 Tamil Channels for Just $9.99
Kalaignar, Isai Aruvi,
Jaya Tv, Raj Tv
Makkal Tv etc..
visit www.channelLive.tv
Regards
Lawrence
7th pointa thirumbi thirumbi padikkaren. I can't stop laughing. I felt Vel was 1000 times better than ATM. At least Surya showed some difference between 2 characters and acted.
Dubukku, why don't you have a "random post" plug-in? Nalla interestinga/entertaininga irukkum, unga pazhaya post ellam padikaradhukku.
// பாலசந்தரின் சில இம்சைகளை தவிர்த்து பார்த்தோம் என்றால் // absolutely correct!!!
Post a Comment