Tuesday, November 06, 2007

காய்ச்சல்

எந்த நேரத்தில் போன பதிவில் காய்ச்சலைப் பற்றி எழுதினேனோ தெரியவில்லை ஒரு வாரமாய் உடம்பு சரியில்லை. காய்ச்சல் அண்ட் ஜலதோஷம். அதான் சொன்ன மாதிரி பதிவு போடமுடியலை. அஜீஸ் டாக்டர் ஆஸ்பத்ரியை நினைத்தாலே காய்ச்சல் வந்துவிடும் போல இருக்கிறது. இப்பொழுது காய்ச்சல் விட்டாயிற்று ஜலதோஷம் மண்டையில் உட்கார்ந்து கொண்டு ஒரே தலைவலி. கம்ப்யூட்டர் மானிட்டரைக் கூட பார்க்கமுடியவில்லை. இந்த மாதிரி தலைவலிக்கெல்லாம் விக்ஸைத் தடவிக்கொண்டு டி.வி.யில் குருவி பாட்டு பாடிக்கொண்டு ஆடும் அண்ணாச்சி நகைக் கடை டேன்ஸ் விளம்பரங்களைப் பார்த்தால் சொஸ்தமாகிவிடும் என்று டி.நகர் ராஜூ டாக்டர் சொன்னாரே என்று பார்த்ததில் தலைவலி கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. (கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு பார்க்கச் சொன்னாரா என்று மறந்து போய்விட்டது)

எல்லாம் வாசிம் கான் வேலையாகத் தான் இருக்கும். வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கா வந்து இப்போது கடைசியில் என்னோட முறை. இதுவே எங்க ஊராக இருந்தால் "டாக்டர்ர்ர்ர்ர் எனக்கு காய்ச்சல் மூனு வேளையும் சாப்பிட ரோஸ் கலர் மாத்திரையும், பிட்டியில் பி.12ஒ..பென்சிலினோ போட்டு அனுப்புங்க சார்" என்றால் வாயில் தெர்மாமிட்டரை சொருகி, உட்காரவைத்து, கழுதை வயசுக்கெல்லாம் கைல போட்டா போதும்ன்னு ஒரு குத்து குத்தி வீட்டுக்க அனுப்பிவிடுவார். ஊசி போடாமல் அனுப்பிவிட்டால் மாமா இரண்டு நாள் தான் பொறுப்பார்..அப்புறமும் காய்ச்சல் குறையாவிட்டால் "ஒரு பென்சிலின் போட்ருங்கோ அப்போதான் கேக்கும்" என்று டாக்டருக்கு ப்ராக்ஸி குடுத்து ROI பார்த்துவிடுவார். பீ.12-ஓ வேற எதுவோ ஒரு ஊசி மட்டும் பயங்கரமாக கடுக்கும். அதை மட்டும் இடுப்பில் தான் போடுவார்கள். இது தெரியாமல் பதினோரு வயது பாலகனாய் இருந்தபோது நர்ஸ் நக்க்லடிப்பாரே என்று சட்டையைக் கழட்டி ஓம்க்குச்சி ஸ்வாஸ்னீகர் ஆர்ம்ஸ் காட்டி "எல்லாம் இங்க போட்டா போதும்"ன்னு அடம் பிடிக்க...நர்ஸ் இது எலும்புலலாம் போட முடியாது...கொஞ்சமாவது சதைப் பற்று இருக்கனும்ன்னு அதோட இது வலிக்கும்ன்னு அக்கறையா சொல்ல...அவர் என்னமோ விஜய் மாதிரியும் நான் என்னவோ ரம்பா மாதிரியும் என் இடுப்பிலிருக்கும் மச்சத்தை பார்த்துவிடுவாரோன்னு ஓவராய் அடம் பிடித்து கையில் போட்டுக் கொண்டு....அப்புறம் பிதாமகன் விக்ரம் மாதிரி பல்லைக் கடித்துக்கொண்டு முக்கிக் கொண்டே கர்ஜிக்கிறமாதிரி சவுண்டு விட்டதில் "குழந்தை தேரடியில் எதையோ பார்த்து பயந்திருக்கான்...அதான்..." என்று மாமி முத்தம்மாவைக் கொண்டு வீபூதி போடச்சொல்லி, முத்தம்மா பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ ஆஃபரில் விபூதி போட்டோதோடு நில்லாமல் ஒரு சொம்பில் தண்ணி வாங்கி மந்திரித்து என் மூஞ்சியில் பொளிச் பொளிச்சென்று ரெண்டு அப்பு அப்பிவிட்டார். அப்புறம் என்னைப் பர்த்தாலே "என்ன அம்பி இந்த தரமும் கைலயே போட்டுருவோமா " என்று நக்கல் விடும் நர்ஸைப் பார்க்கும் போதெல்லாம் முத்தம்மாவுக்கு காசு குடுத்து இவள் முகத்துலையும் ரெண்டு அப்பு அப்பச் சொல்லவேண்டும் என்று வைராக்கியம் பிறக்கும்.

காய்ச்சல் வேளைகளில் மாமவின் மேற்பார்வையில் வயிராற சாப்பிடுவதற்கு மூன்று வேளையும் கடுங்காப்பி தவிர சுத்தமான வெந்நீர் மட்டுமே கிடைக்கும். அவர் குளிக்கப் போயிருக்கும் வேளையில் மாமி நைசாக வெந்நீரில் ஒரு ஸ்பூன் ஹார்லிக்ஸ் போட்டு தருவார். அதையும் குடித்து கொஞ்ச நேரத்தில் வயிற்றைப் புரட்டி வாயிலெடுக்கும் போது மாமா கண்டுபிடித்துவிடுவார். அதனால் தான் காய்ச்சல் குறையவில்லை என்று மாமி அப்புறம் அதையும் நிப்பாட்டி விடுவார். அப்புறம் தெருவில் இருக்கும் கல்யாணி பாட்டி எம்.டி, டி.சி.ஹெச் - துளசி, தூதுவளை இத்யாதிகளைப் போட்டு ஒரு கஷாயம் பிரிஷ்கிர்ப்ஷன் கொடுப்பார். அதையும் குடித்து வாயிலெடுத்தால் மாமாவின் ஆப்த நண்பர் சீனாதானா மாமா வந்து "என்ன ஓய் என்ன மாத்திரைக் கொடுத்திருக்கிறார் டாக்டர்? காட்டும் பார்க்கட்டும்"ன்னு மிரட்டுவார். சீனாதானா மாமாவிடம் மூனாவது வரை படித்த ஒரு பையன் அப்புறம் தேறி டாக்டராகிவிட்டதால் அவருக்கு மெடிகல் காலேஜ் டீன் என்று நினைப்பு. "இந்த மருந்தெல்லாம் சின்னப் பிள்ளைகளுக்கு குடுக்கவே கூடாது தெரியுமா...? எருமைமாட்டுக்கு குடுத்தா கூட ரெண்டே நாள்ல சுருண்டு படுத்துரும்...நான் சொல்றதக் கேளும்..." என்று அவர் ஒரு பிரிஸ்கிர்ப்ஷன் குடுப்பார். இதெல்லாம் கேட்கவில்லையானால் மாமா "லங்கணம் பரம ஔஷதம்"ன்னு கடுங்காப்பிக்கும் ஆப்பு வைப்பார். இதற்க்குள் காய்ச்சலே ஐய்யோ பாவம்ன்னு ஓடி போயிடும். அப்புறம் வெறும் இட்லியிலிருந்து ஆரம்பித்து..தயிர் சேர்ப்பதற்குள் இரண்டு வாரம் ஓடிவிடும்.

ஹூம் இப்போல்லாம் காய்ச்சல் வந்தா சப்பாட்டில் கைவைப்பதே இல்லை. என் மகள்கள் என்னடாவென்றால் காய்ச்சல் போது தான் தினுசு தினுசாக கொறிப்பதற்கு கேட்கிறார்கள்..சரி எதாவது வயத்துக்குள் போச்சுன்னா சரின்னு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

18 comments:

துளசி கோபால் said...

அடடா.....தீவுளி சமயத்துலே காய்ச்சலா? த்சொ த்சொ த்சொ.....

நம்மூர்லே,ஆளுங்களுக்கு அடிக்கடிக் காய்ச்சல் வந்துருமுல்லெ?' கோபால் கேட்டதுக்கு என் பதில்,
'ஆமாம். இங்கெல்லாம் காய்ச்சல் வர்றதில்லை வெறும் ஃபீவர்'மட்டும்தான்.'

உடம்பைப் பார்த்துக்குங்க.

தீபாவளி வாழ்த்து(க்)கள்.

sriram said...

ஹாய் ராம்,
இந்த தடவையாவது, Me the First சொல்லலாம் என்று பார்த்தால், துளசி அக்கா வந்துட்டாங்க.

தீபாவளிக்கு முன்னமே குணமடைய வாழ்த்துக்கள்.

நல்ல காமடியான பதிவு. இந்த ஊரில்(பாஸ்டன்) ஜுரம்,சளி என்று டாக்டரிடம் போனால், ஐந்து நாட்கள் கழித்து இருந்தால் மருந்து தருகிறேன் என்கிறார்கள். ஜுரமா, Patientஆ என்று தெரியவில்லை.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்.

இலவசக்கொத்தனார் said...

யோவ் உமக்கு ரீவி பார்க்கவும், க்விஸ் போட்டிக்கு ஏன்யா வரலைன்னு நான் கேட்காமல் இருக்கவும்தான் காய்ச்சல் ட்ராமா போடறீரா? இருக்கட்டும் வந்து கவனிச்சுக்கறேன்.

ambi said...

//பிதாமகன் விக்ரம் மாதிரி பல்லைக் கடித்துக்கொண்டு முக்கிக் கொண்டே கர்ஜிக்கிறமாதிரி சவுண்டு விட்டதில் //

ஹா ஹா! ஸ்ரீதேவி விளம்பரம் பாருங்க! காய்ச்சல் ஓடி விடும்.

@கொத்ஸ், குயிஜு ரெம்ப கஷ்டமா இருந்ததுனு நைசா தலைல முக்காடு போட்டு உங்க கடை பின் வாசல் வரை வந்து திரும்பிட்டோம். :p

Anonymous said...

kaichalai pathi kooda ivalavu suvaiya ezhudhareengale sabaash. ungalukkum kaichala? enakkum :-) pona varam full-m manasaa office-ku mattam pottachu. - umakrishna

நாகை சிவா said...

அந்த ஊரில் எல்லாம் ஒரு ஊசில காய்ச்சலை முடிக்காமல் உலகத்தில் இருக்கும் அனைத்து டெஸ்ட்டையும் எடுத்துட்டு இரண்டு மாத்திரைய கொடுத்து அனுப்புவாங்களே.. ஏண்டா இந்த மாத்திரைக்கு இம்புட்டு டெஸ்ட்னு வாய் வரைக்கும் வரும், ஆனா கேட்காம வந்துடுவோம்...

உடம்ப பாத்துக்கோங்க அண்ணாத்த, தீபாவளி நல்வாழ்த்துக்கள் ள்)

Selvan said...
This comment has been removed by the author.
Vidya said...

//இதெல்லாம் கேட்கவில்லையானால் மாமா "லங்கணம் பரம ஔஷதம்"ன்னு கடுங்காப்பிக்கும் ஆப்பு வைப்பார். //

Thats exactly what my dad used to recommend and force upon us when we end up with fever as kids. But luckily granny knew better. Don't know who taught them such ideas.

She would give us some nice milagu-jeeraga rasam saatham, made almost like kanji and it used to be really heaven drinking/eating that. And ofcourse we did have a concoction given by our local doctor in some color or a powder to be had with honey and anyways, it used to so bitter so bitter that the minute it touches the tongue, you are bound to vomit. A huge battle will ensue, to push the medicine down your throat again, with dad, mom and granny all around you. I am famous for throwing up medicine. Some how my brother can swallow it not matter how bitter it turns out to me. :)

Sometimes, when I get high on cold and feel a bit feverish here at times during the allergy season, I make the rasam and it's a major hit with R too.

You take care man.

Unknown said...

here comes a cool URL and a boon for all commenters who writes tamil in english(inlcuding me) ;-)

http://www.google.com/transliterate/indic/Tamil

Type any Malayalam/Tamil/regional language word in English (same way as we pronounce it) and press "SPACE bar"...

It gets translated to that regional language.

ஆடுமாடு said...

டுபுக்கு உங்களுக்குமா? காய்ச்சல் போய் சளி, ஜலதோஷம் இம்சையில் நொந்து நூடுஸாகி, அம்மா கொடுத்த ஐடியாபடி கொதிகொதித்த தண்ணீரில் போர்வையால் முகத்தை மூடி ஆவி பிடித்ததில் இப்ப பரவாயில்லை. அச்!
பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஒரு பாய் டாக்டர் இருப்பாரே...அவரைத்தானே நீங்க சொல்றீங்க... சின்ன வயசுல என் டவுசரை கழட்டின பார்ட்டி அது.பிட்டியில அப்ப போட்ட ஊசி இப்பவரைக்கும் வலிக்குதுன்னா பாருங்களேன்! அதையெல்லாம் நினைச்சா ஊர் ஞாபகம் வந்து அழுவாச்சியா இருக்கு டுபுக்கு. அங்...!

Sridhar said...

டுபுக்கு கண்ணு

காலத்துக்கு ஏற்ப மாறனும் தெர்ர்..தா.டாலர் மதிப்பு எறங்கி அவனவன் யூரோ.. யூரோ ன்னு அலையறான். இன்னமும் 'அம்மா தாயே $ போடுங்கன்னு' போர்டு வைக்கறியே. மாத்து..மாத்து

Anonymous said...

take care of your health dubukku sir.deepavali legiyam sapidunnnga micha socha fever edhavathu irundha sollama kolllama poidum.thangamani kaiyalla milagu rasam vachu sapidunnga.you'll be fine and o.k, ready to taste thangamani's diwali sweets.
nivi.

Itz me!!! said...
This comment has been removed by the author.
Itz me!!! said...

hi Ranga,
Hope you are fine now..had a nice laugh reading your post!!!

Sowmya said...

கக்கத்துல வெங்காயத்தை இடுக்கிண்டா, ஜொரம் வந்துடும், இப்படியெல்லாம் ப்ளான் பண்ணி ஸ்கூலுக்கு மட்ட்ம் போட்டா, தயிர் சாதம் சாப்பிட, இரண்டு வாரம் தான் ஆகும். உம்மாச்சி பாத்துண்டே இருக்கே.

இந்த காலத்துல கொழ்ந்தேள்,

Mom..I dont feel good.let me write a leave letter.

இந்த ரேஞ்சுல இருக்கே..

தெளிவு ஓய்..தெளிவு!

ஏடா கூடமா, பண்ணி மாட்டிண்டு, முழிக்கத் தெரியுமோ, இந்த கால சிறுசுகளுக்கு. பண்ணற தப்பையும், தப்பில்லாம பண்ணறதுகள்.

ரசிக்க கத்துக்கும் ஓய்!எல்லாத்துக்கும் ஒரு அங்கலாய்ப்பு !

Dubukku said...

ஹீ ஹீ ஆமாங்க இங்க ஃபீவர் மட்டும் தான் இல்ல :)) நன்றி இப்போ பரவாயில்லை தேறிவிட்டேன்.

ஸ்ரீராம் - இங்கயும் அதே அதே இங்க நண்பன் காய்ச்சல் என்று டாக்டரிம் போனால் "அதுக்கு...?"ன்னு கேள்வி கேட்டாராம். பாராசிடமாலை நீயே போட்டுக்கவேண்டி தானேன்னு சொல்லாம சொன்னாராம் எப்படியிருக்கு.

கொத்ஸ் - அண்ன்ணே உண்மையிலேயே அதான் காரணம்ன்ணே :))

அம்பி - அது என்னடா ஸ்ரீதேவி விளம்பரம்??

உமா - அடடா உங்களுக்குமா?...ஹீ ஹீ சேம் பிஞ்ச் :) எனக்கு லீவு கூட ரொம்ப போடமுடியல..வீட்டுலேர்ந்து (உண்மையா) வேலை பார்த்தேன்


நாகைசிவா - அட நீங்க வேற காய்சலுக்கெல்லாம் வராதீங்கன்னு தான் சொல்றாங்க. டெஸ்ட்லாம் பத்து நாள் காத்திருக்கனும். காய்ச்சலுக்கு அப்பாயின்ட்மென்ட் நாலு நாள் ஆகும்.


வித்யா - எங்கம்மாவும் மிளகு ரசம் தான் சொன்னா. கஞ்சி ஊர்ல இருக்கும் போது குருணை அல்லது ஜவ்வரிசி கஞ்சி குடுப்பாங்க அப்பளமுடன் தேவாமிர்தமாக இருக்கும் ஹூம்

ராமச்சந்திரன் - தகவலுக்கு ரொம்ப நண்றியண்ணே

ஆடுமாடு - ஆமாம் ஆமாம் அவரே தான் :))) உங்களுக்கும் காய்ச்சலா உடம்பப் பார்த்துக்கோங்கண்ணே

ஸ்ரீதர்- ஹீ ஹீ இப்படி பிச்சையெடுத்ததுக்கே அஞ்சு பைசா பேறவில்லை...அதையே தூக்கிடலாம்ன்னு யோசீகறேன்....நீங்கவேற :))

Dubukku said...

Project71- அட்வர்டைஸ்மென்ட்லாம் கரெக்ட்டாத் தான் பண்ணுறீங்க...காசத் தான் கண்ணுல காட்ட மாட்டேங்கிறீங்க


நிவி - தேங்க்ஸ் மேடம். இப்போ பரவாயில்லை. தங்கமணி மைசூர்பாகு செஞ்சிருந்தாங்க...சூப்பரா சாப்பிட்டோம்ல...அங்க எப்பிடி?

இட்ஸ்மீ - நன்றி மேடம். ஆமாம் இப்போ பரவாயில்லை.

சௌம்யா - ஆமாம் இந்தக் காலத்து கொழ்ந்தேள் பயங்கர ஸ்மார்ட் தான் இல்லைங்கலையே...ஹூம்.....என்ன நாமெல்லாம் இவ்வளவு சமர்த்தா இல்லையேன்னு தான் ஒரு வருத்தம் :)))

Anonymous said...

Dear Dubukku,

Ungaluku oru vilambaram.

Indha post padikumbodu Sri Rangathu kathaigal nyabagam varudu.

Cheers
Christo

Post a Comment

Related Posts