Wednesday, October 24, 2007

ஹாலிடே-3

முதல் நாள் பீச் பீச்சாக சுற்றினோம் என்று சொன்னேன் அல்லவா, சாப்பாடு பற்றி சொல்லவே இல்லையே. முதல் நாள் கிளம்புவதற்கு முன்னாலே தங்கமணி வீட்டில் பாவ் பாஜி செய்து டப்பாவில் எடுத்துக் கொண்டுவிட்டதால் வழியிலேயே சர்வீஸ் ஸ்டேஷன்களில் நிப்பாட்டி சாப்பிட்டோம் . "என்ன தான் சொல்லு உன் கையால சமைச்ச சாப்பாட்டுக்குப் பக்கத்துல இந்த பர்கர் கிங்லாம் பிச்சை தான் எடுக்கனும்"ன்னு ஏத்திவிட்டு கூட கொஞ்சம் பாவ்பாஜியை நொக்கிவிட்டதில் காரில் ஏறி உட்கார்ந்ததும் சொக்கிவிட்டது.

"நாளைக்கு டிபனுக்கு பேசாம சன்னா மசாலாவும் சப்பாத்தியும் செஞ்சிக்கலாம் கையிலயும் எடுத்துட்டு போனா இதே மாதிரி அங்கங்க நொக்கறதுக்கு வசதியா இருக்கும்"ன்னு சொல்லுவதற்க்குள் தங்கமணி உண்ட மயக்கத்தில் தொண்டி ஆகியிருந்தார். அன்று நாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே அழகான விளையாடும் இடம் இருந்ததால் அதில் எல்லாரும் விளையாடிக் களைத்து அடுத்த நாள் வழக்கம் போல எட்டு மணிக்கு எழுந்து அரக்கப் பரக்கக் கிளம்பினோம்.

அடுத்த நாள் சப்பாத்தி, சன்னா மசாலா நினைப்பில் வேல்ஸ் மண் விழுந்தது. எதற்க்கும் இருக்கட்டும் என்று எடுத்து வந்திருந்த கார்ன் ப்ளேக்ஸ் பாலுடன் பெப்பரபேன்னு முழித்துக் கொண்டிருந்தது. "இன்னாது கார்ன் ப்ளேக்ஸா...இதுக்குத் தான் கடுகு, மஞ்சப் பொடி, சன்னான்னு டின்னு கட்டினியா...அப்போ அதெல்லாம் வேஸ்டா..." என்று மனு போட..."வேண்டாம் வேஸ்டாப் போக வேண்டாம் அந்த கார்ன் ப்ளேக்ஸ குடுங்க...அதிலயே தாளிச்சிக் கொட்டி சன்னாமசாலவையும் போட்டுத் தரேன் சாப்பிடுங்க"ன்னு அந்தக்கால வில்லன் மாதிரி தங்கமணி மிரட்ட ஆரம்பித்துவிட்டார். " ஐயய்யோ அதுக்கு எங்க மாமியார் செய்யற ரசத்தையே குடிச்சிரலாம்.. சரி சரி சமாதானம்..இதுக்குத் தான் நான் முதல்லயே கடுகு மஞ்சப் பொடியெல்லாம் எடுத்துட்டு வர வேண்டாம் வெறும் கார்ன் ப்ளேக்ஸ், மெக்டோனால்ட்ஸ்ன்னு மேனேஜ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன்"- என் டயலாகின் முதல் பகுதி தங்கமணி காதில் விழாததால் வேறு எந்த பிரச்சனையுமில்லாமல் ஊர் சுத்த கிளம்பிவிட்டோம்.

இரண்டாம் நாள் குழந்தைகளுக்காக டயனோசர் பார்க், கேம்ஸ் பார்க் என்று சுத்தி விட்டு மூன்றாம் நாள் மீண்டும் காடு மலைன்னு கண்ணன் தேவன் டீ வாங்கப் போன மாதிரி சுத்தினோம். அன்றைக்கு கற்காலத்துக்கு பிறகு வந்த இரும்புக் காலத்தில் மக்கள் வாழ்ந்த மாதிரி செட் செய்திருந்த ஒரு இடத்துக்குப் போனோம். இன்றைய நவீன யதிரங்களோ ஆயுதங்களோ எதுவும் உபயோகப்படுத்தாமல் அந்தக் காலத்தில் எப்படி வாழ்ந்திருப்பார்களோ, அவர்களுக்கு என்ன ஆயுதங்கள் இருந்திருக்குமோ அதைக் கொண்டு அந்த இடத்தையும் வீடுகளையும் மீண்டும் உயிர்பித்திருந்தார்கள். வந்திருந்த வெள்ளைக்கார மாமாக்களும் மாமிக்களும் வாயைப் பொளந்து கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு நம்மூர் கிராமங்களை திரும்ப பார்த்த மாதிரி இருந்தது. இன்னும் நம்மூர் கிராமங்கள் அந்தக் காலத்து வசதிகளுடனே இருப்பதை எண்ணும் போது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

பிறகு அடுத்த நாள் ஸகந்தவேல் கோவிலுக்குப் போனோம். எனக்கு சாமியைப் பார்க்கும் ஆர்வத்தை விட அங்கேயே முழுக்க முழுக்க இருக்கும் மந்திரம் சொல்லும் வெள்ளைக்காரர்களைப் பார்ப்பதற்கே ஆர்வமாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டமே தெரியாத ஒரு காட்டு வழியாகப் பயணம். ஒரு ஒத்தயடிப் பாதையில் தான் காரே போகவேண்டும். வழியிலேயே போலீஸ் காரை நிப்பாட்டிவிட்டது. "ஐயையோ நான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துவதைத் தவிர எந்தத் தப்பும் செய்யலையே" என்ற எனது உதறலைக் கண்டுகொள்ளாமல் ஃபூட் அன்ட் மவுத் நோயினால் அந்தக் கோவிலில் மேலும் இரண்டு மாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று அவற்றைக் கொன்(ண்)று போக வந்திருந்தார்கள். இதற்க்கு முன் சம்பூ என்று மாடு நோயுற்று அது பெரிய பிரச்சனையாகிவிட்டதால் இந்த முறை அவற்றை நீக்கும் வரை யாரையும் கோவில் பக்கமே அனுமதிக்கவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு அனுமதித்தார்கள்.

எங்களை மாதிரியே கார்டிஃப்லிருந்து கோயிலுக்கு ஏழு பேர் கொண்ட தமிழ் கூட்டம் வந்திருந்தது. அதில் எல்லோரும் நர்ஸாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். பார்த்தவுடனேயே நட்பாகி ஜாலியாகப் பேசிப் பழக ஆரம்பித்துவிட்டதால் காத்திருப்பு போரடிக்காமல் இருந்தது.

நோய்க்குப் பலியான மாடுகளுக்காக அன்று பூஜை நடைபெறவில்லையாதலால் வெள்ளைக்காரன் "ஓம் சுவாகா" மந்திரம் சொல்லுவதைக் காணக் கிடைக்கவில்லை. ஆனால் கோயிலில் வேறு ஒரு அங்கியணிந்த பூசாரி அம்பாளின் மகிமையைப் பற்றியும், ஜனனம் மரணம் பற்றிய தத்துவங்களையும் எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருந்தார். பொதுவாகவே இந்த மாதிரி சமாச்சாரங்களுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் அதிகம். இருந்தாலும் ப்ளாக்க்கு எதாவது மேட்டர் தேறுமான்னு கவனமாகக் கேட்டும் ஒன்றும் புரியவில்லை.


கோவிலில் கார்டிப் நர்ஸ் நண்பர்களுடன் எல்லா இடங்களுக்கும் போனோம். பேச்சுவாக்கில் "நீங்க இண்டர்நெட்டில் ப்ளாக்லாம் படிப்பீர்களா...நான் கூட "டுபுக்கு"ங்கிற பெயரில் ஒரு ப்ளாக் வைத்திருக்கிறேன்" என்று ஒரு நண்பரிடம் பிட்டைப் போட ஆரம்பிப்பதற்குள் நண்பர் இடைவெட்டினார்.. "எங்கங்க....அதெல்லாம் ஒரு காலம்...கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி நான் கூட "நைஸ் கை"ங்கிற பெயரில் ராத்திரி பகல்ன்னு பாராம ஃபிகருங்க கிட்ட சேட்டில் நிறைய கடலை போட்டிருக்கேன்..இப்போ அதுக்கெல்லாம் ரொம்ப நேரமில்லைங்க" என்று நண்பர் பதில் சொல்லி "கல்யாணமாகியும் இன்னமுமா இதையெல்லாம் கண்டினியூ பண்றன்றீங்கன்னு ஒரு லுக்கு விட்டார் பாருங்கள். தஙகமணிக்கு என்ன்னோட தன்னடக்கம் ப்ளாப்பானது சிரிப்பான சிரிப்பு. அப்புறம் நண்பரிடம் "ஐய்யைய்யோ இது அந்த மாதிரி மேட்டரில்லைங்க வேறங்க..இது ப்ளாக்குன்னு..." ஒரு மாதிரி அசடு வழிந்துகொண்டே சமாளித்தேன். ஆனாலும் அவர்களெல்லாம் மிக இனிமையான நண்பர்களாகி இப்பவும் அப்பப்போ ஃபோன் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறாக வேல்ஸ் ட்ரிப் இனிதே நிறைவடைந்தது.

முதல் நாள் கார்ன் ப்ளேக்ஸுக்குப் பிறகு தங்கமணி அதற்கடுத்த நாட்களில் சப்பாத்தி, சன்னாமசாலா, மற்றும் புளியோதரை செய்தார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு விடுகிறேன் (ஆங்..அப்புறம் வாங்கிக் கட்டுறது யரு?)




22 comments:

ILA (a) இளா said...

நல்லா இருக்கே இந்த ஊரு. கண்ணன் தேவன் மேட்டர் சூப்பரு

நாகை சிவா said...

கண்ணன் தேவன் டீ இன்னும் வருதா?

நைஸ் பையன் நைசா உங்கள நோஸ் கட் பண்ணிட்டானே.... :)

மங்களூர் சிவா said...

//
முதல் நாள் கார்ன் ப்ளேக்ஸுக்குப் பிறகு தங்கமணி அதற்கடுத்த நாட்களில் சப்பாத்தி, சன்னாமசாலா, மற்றும் புளியோதரை செய்தார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டு விடுகிறேன் (ஆங்..அப்புறம் வாங்கிக் கட்டுறது யரு?)

//
அந்த பயம் எப்பவும் இருக்கட்டும்.
:-))))))))))

இலவசக்கொத்தனார் said...

சாப்பாட்டை படம் போடலையா? வெள்ளைக்காரன் செஞ்சு வெச்சு இருக்கிறதைப் படம் எடுத்த நீங்கள், தமிழச்சி (யோவ் அவங்க இல்லைய்யா, இது தமிழ்ப் பெண் என்ற பொருளில்) செஞ்ச பதார்த்தங்களை படமெடுக்காதது ஏன்?

இலவசக்கொத்தனார் said...

அப்புறம் நம்ம ஊரில் எல்லாம் சேச்சி நர்ஸ்கள் அந்த ஊரில் என்னடான்னா நம்ம ஊர் நர்ஸுங்களா? சரிதான்!!

அபி அப்பா said...

என்ன கேரளம் தமிழ் நாட்டோட சேர்ந்திடுச்சா சொல்லவேயில்ல!:-)))

பினாத்தல் சுரேஷ் said...

//(ஆங்..அப்புறம் வாங்கிக் கட்டுறது யரு?)//

அப்ப தங்கமணிய ப்ளாக் படிக்க எல்லாம் விடுவீங்களா? வீரரய்யா நீர்!

sriram said...

இது எங்க "தல" போஸ்ட். டிபிகல் டுபுக்கு கல்க்கல்.

எதை எடுப்பது எதை விடுவது என்று மைலாப்பூர் துணி கடை மாதிரி விழிக்கிறேன்.
(எனக்கும் பழைய விளம்பரம் ஞாபகத்தில் இருக்கிறது).முழு பதிவும் அமர்க்களம்.

"அதுக்கு எங்க மாமியார் செய்யற ரசத்தையே குடிச்சிரலாம்" + "ஐயையோ நான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துவதைத் தவிர எந்தத் தப்பும் செய்யலையே" இந்த 2 டயலாக் க்கு அப்புறமும் வீட்டில் இடமும்,சாப்பாடும் கிடைக்கிறதா?

என்றும் அன்புடன்
ஸ்ரீராம் (Boston)

கடந்த சில பதிவுகளாகவே தமிழில் பின்னோட்டம் இடுகிறேன்.

முத்துலட்சுமி / ராம் : நன்றி. நான் tamil.net ல் டைப் செய்கிறேன், அதில் நீங்கள் சொன்னது போல் இல்லை. தேடி கண்டு பிடித்தது - srI =ஸ்ரீ

இலவசக்கொத்தனார் said...

//அப்ப தங்கமணிய ப்ளாக் படிக்க எல்லாம் விடுவீங்களா? வீரரய்யா நீர்!//

யோவ் பெனாத்தல் இதெல்லாம் உமக்கே ஓவராத் தெரியலை?

Shobana said...

edho..kadaiceelaiavathu channa, chappathi ellam kannula kaatinangaleynu santhoshapadunga...vera entha solla...as usual kalakeetinga.

Shobana

CVR said...

நல்லா எழுதியிருக்கீங்க தல!!
இதை நீ சொல்லி தாஅன் எனக்கு தொரியனுமாங்கறீங்களா???
என்ன பண்ணுறது வந்ததுக்கு பின்னூட்டம் போடாம போக முடியுமா???
அதுக்குதான் இப்படி!!
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!! :-)

Anonymous said...

kalakkal post. andha bayam irukattum thangamani kitta.enga jackie rangeela madhirinnu photo edhukaara asai niraverichha illaya?thankyou for a nice humorous one.please keep writing.kannan devan was superb.
nivi.

ambi said...

//ஐயய்யோ அதுக்கு எங்க மாமியார் செய்யற ரசத்தையே குடிச்சிரலாம்//

ROTFL :)
அடுத்த தடவ ஊருக்கு போகும் போது இந்த பதிவின் ஒரு பிரிண்ட் அவுட்டோட போறேன். :p

வேல்ஸ் படம் அருமை. :)

Itz me!!! said...

hi Ranga...

You have a great style of writing!!!.Your post on pregnancy was fantabulous!!!

keep writing,
Dharshana Sharath Kumar.
http://dharshak.blogspot.com

Vidya said...

Oh yeah! I dont visit you is it? I had been disappointed so many times visiting this space of yours I was thinking of mailing you. Tell me something, when was the last time you visited my space. Anyways, marapom mannipom. And its because you are my friend, I pity thangamani more, the way you pity R for you know me really well. ;)

seri seri.. kochukkadhey... Thangamani, enna... en friend-a galatta pannara velaiyellam venam okay... Dubukku paavam.. (podhuma?)

//"நாளைக்கு டிபனுக்கு பேசாம சன்னா மசாலாவும் சப்பாத்தியும் செஞ்சிக்கலாம் கையிலயும் எடுத்துட்டு போனா இதே மாதிரி அங்கங்க நொக்கறதுக்கு வசதியா இருக்கும்"ன்னு சொல்லுவதற்க்குள் தங்கமணி உண்ட மயக்கத்தில் தொண்டி ஆகியிருந்தார்.//

I liked that.. especially.. "உண்ட மயக்கத்தில் தொண்டி ஆகியிருந்தார்" hearing it for the first time.

This was good too..

//"ஐயையோ நான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துவதைத் தவிர எந்தத் தப்பும் செய்யலையே" //

Vidya said...

Oh I missed this... ozhunga post podu modhalla... idhula imposition vera.. adhai ozhunga oru 50 times cut/paste panniniya.. adhum illai. :)

Aani Pidunganum said...

"அதுக்கு எங்க மாமியார் செய்யற ரசத்தையே குடிச்சிரலாம்"

Idhuapparamum ungaluku rasam kidaikumnu nambikkai iruka!?

Thala, Impositiona, cut & paste pannapadadhu...

eppavumpola kalakitinga.......nerla sandhichadhula mikka magizhchi...

Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

Dubukku said...

இளா - ஆமாங்க ஊரு நல்லா இருந்தது. நன்றி :)

நாகை சிவா - இப்போ வருதா தெரியாது ஆனா நினைவில் அப்படியே இருக்கு :) விடுங்க விடுஙக் நம்பளுக்கு இதெல்லாம் புதுசா :)))

மங்களூர் சிவா - சந்தோசமா...திருப்தியா..ஆஹா நான் பயப்படற மாதிரி நடிக்கிறது எத்தன பேருக்கு சந்தோசமா இருக்கு :))

இலவசம் - இப்படி உள்குத்து குத்தியே பாக்சிங் சாம்பியன் ஆகிடுவீங்க போல இருக்கே :))) (ஏதோ நம்பளால முடிஞ்சது :) )

அபி அப்பா - தொடச்சிக்கோங்க....இவங்களெல்லாம் நர்ஸ்...அதாவது ரங்கமணிங்க தான் நர்சுங்க...

இலவசம் - நீங்களும் தொடச்சிக்கிட்டு அபி அப்பாக்கு போட்டிருக்கிற ரிப்ளைய படிங்க :))

பினாத்தல் - நீங்க வேற இங்க வூட்டுல தங்கமணி பார்க்கிறவங்க கிட்டயெல்லாம் நான் தான் ப்ளாக் அடிக்கிறேன் இவரு வெறும் பினாமின்னு சொல்லிட்டு திரியறாங்க :))

ஸ்ரீராம் - நன்றி ஹை. ஹூம் தங்கமணி கரெக்டா அந்த வரிய மாமியார் கிட்ட போட்டுக்குடுத்தாச்சு ..சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடிச்சு.

இலவசம் - அதானே..

ஷோபனா - அத மறப்பேனா...அதான் கரெக்டா அதையும் போட்டுட்டோம்ல :)

சி.வி.ஆர்- என்னங்க இப்படி சொல்லிட்டீங்க...உங்க கருத்து கண்டிப்பா தேவைங்க...நல்லா இல்லைன்னாலும் தயக்கமே இல்லாம காறித்துப்புங்க...திருத்திக்க உதவும். இதுக்காகலாம் பின்னூட்டம் போடறத நிப்பாட்டிடாதீங்க :)))

Dubukku said...

நிவி - எங்கங்க...அந்த பனியன போட்டாலே இங்க காறித்..சரி விடுங்க...ஒரு காலம் வராமலா போயிடும்... :))

அம்பி - அதானே கரெக்டா அதப் பிடிச்சிடுவியே...தேவையே இல்லை...இங்க தான் இருக்காங்க..இங்க ஏற்கனவே பத்தவைச்சாச்சு ...நல்லா இருடா :)) முதல் படம் தவிர மத்தது எல்லாம் தங்கமணி எடுத்தது

தர்ஷனா - ரொம்ப நன்றி ஹை உங்க பாராட்டுக்கு...:) தலைவரும் அன்னிக்கு அப்பிடி என்ன கிழிச்சுட்ட அந்த போஸ்ட்லன்னு மெயிலடிச்சு கேட்டார் :)

வித்யா - சரி சரி டென்ஷனாகாத..உங்கிட்ட கேட்டு கேட்டு திட்டு வாங்கறேன் பாரு....நீ தான் துரோகின்னு நாம சேர்ந்து வேலையில இருந்த கடைசி நாளே தெரியுமே :)) நோ டென்சன்..தங்கமணி நீ மிரட்டின உடனே ரொம்ப பயந்துட்டா :)).

ஆணி - பார்க்கமாட்டாங்கன்னு நினைச்சேன்...தங்கமணி கரெக்ட்டா கூப்பிட்டு படிக்கச் சொல்லி போட்டுக் கொடுத்தாச்சு ...:)) உங்களையும் நேர்ல சந்திச்சது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.

கிரண்- அண்ணே(ணி) ...உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா...சொல்லவே இல்லை :))

Anonymous said...

// " ஐயய்யோ அதுக்கு எங்க மாமியார் செய்யற ரசத்தையே குடிச்சிரலாம்..

ஏன்...நீங்க முன்னாடி பண்ணின "சென்னா மஸாலா" - வ சொல்ல வேண்டியதுதான... சும்மா எதுக்கு ஸிஸ்டரோட அம்மா-வலாம் இழுக்கறீங்க ? (இது போக போன் போட்டு பத்த வைக்கிறேன்...உங்க வூட்ல..)

Jeevan said...

Little humor, but good narration about the trip. Nice pics, the huts are very different and beautiful landscape.

Wish you a HAPPY DEEPAVALI Friend :) have wonderful time with your family and kids.

Post a Comment

Related Posts