Sunday, September 09, 2007

ஹாலிடே

நானெல்லாம் ஸ்கூல் படிக்கும் போது லீவுவிட்டா ஊரிலிருக்கும் காத்தாடுகிற கிருஷ்ணா தியேட்டரில் எங்க தாத்தா பார்த்து ஜொள்ளுவிட்ட அஞ்சலி தேவி படம் போடுவான் (மூதேவி ஹாஃப் இயர்லி எக்ஸாம் போதுதான் புத்தம் புதிய ரிலீஸ்லாம் போடுவான்). அதுக்கு கெஞ்சிக் கூத்தாடி பிரெண்ட்ஸோடு போறோம்ன்னு சொல்லி ரெண்டு பேர் போவோம். அதுக்கு கூட புது ட்ராயர்லாம் போட்டுக்கொள்ள முடியாது. நாங்கள் வழக்கமாக போகிற சிமிண்ட் பென்ச் டிக்கெட்டில் தேய்த்து தேய்த்து ட்ராயர் கிழிந்துவிடும் என்று மாமி ஆட்சேபிப்பார் என்பதால் குலேபகாவல்லி டிராயர் மட்டும் தான் அனுமதி. அது டிராயரா பாவாடையா என்று பார்ப்பவர் சந்தேகம் தீருமுன் கூட்டமில்லாத பெண்கள் வரிசையையில் புகுந்து டிக்கெட் வாங்கி, முதல் வரிசையில் முன்னாடி சாய்ந்து கொள்ள வச்சதியாக திண்டு இருக்கும் இடமாக பார்த்து இடம் பிடித்துவிடுவோம். இருபத்தைந்து பைசாவுக்கு ஒரு நீளமான மைசூர்பாகு கிடைக்கும் அதை வாங்கி, எழுத்து போடும் போது உறிஞ்ச ஆரம்பித்தோமானால் அஞ்சலி தேவி இரண்டாவது டேன்ஸ் பாட்டு ஆரம்பித்து முடிப்பதற்க்குள் காணாமல் போயிருக்கும். அதற்கப்புறம் ஜெயம் குண்டு சாம்பார் பருப்பு போட்டு மூனு வேளையும் கட்டு கட்டும் ஜெயமாலினி கையில் திராட்சைப் பழ கொத்தை வைத்துக் கொண்டு ஜிகுஜிகு வென்று பெல்லி டான்ஸ் ஆடும் போது முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கில் கேப் விட்டு பாட்டுமுடிந்துவிட்டதா என்று பார்த்து, அப்புறம் டொய்ங் என்று பி.ஜி.எம்ல்லி அஞ்சலி தேவி அழும் போது திண்டில் சாய்ந்தால் அப்பிடி ஒரு கிறக்கத்துடன் கண்ணைச் சுழற்றும், அழுகையெல்லாம் முடிந்து ஜெமினி கணேசனுக்கு வீரம் வரும் போது "இனிமே டேன்ஸ் கிடையாதுபா வெறும் சண்டை தான் " என்று பக்கதிலிருக்கும் பெரிசு அங்காலாய்த்து எழுப்பிவிடும். இந்த சமயத்தில் கருப்பு உள்பாவாடை ஸ்லிவ்லெஸ் சோளி தாடி மந்திரவாதி, மந்திரக்கோல், பாம்பு, உம்மாச்சி என்று கதை பட்டயக் கிளப்பும். அப்பிடியே மயிற்கூச்செரியும் முடிவை பார்த்து விட்டு பத்து நாளைக்கு அந்த படத்தை பற்றி பார்க்காதவர்களிடம் பேசி அதற்க்குள் படத்தை தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டால் இல்லாத ரெண்டு மூன்று காட்சியை வேறு சேர்த்துக்கொண்டு இப்படியே ஹாலிடே போய்விடும்.

இங்கே மகளுக்கு ஸ்கூல் விடுமுறை விட்ட அடுத்த நாளே "வேர் ஆர் வி கோயிங்" ஆரம்பித்துவிட்டது. கலெக்க்ஷனில் இருக்கும் "மணாளனே மங்கையின் பாக்கியம்" போட்டாலே காத தூரம் ஓடுகிறாள். தங்கமணிக்கு " நான் உழைத்து உழைத்து ஓடாய் போகிறேன்" என்று கவலை வேறு. அவர்களுக்குப் பிடித்த இடமாய் எங்காவது ஹாலிடே போய் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வாங்கிக் கொடுத்தால் என் மன உளைச்சலெல்லாம் சொஸ்தமாகும் என்று வேல்ஸ் போகலாம் என்று ஏகமனதாய் தீர்மாணமாகியது. ஊரிலிருந்து மாமியார் வேறு வந்திருக்கிறார்கள் என்பதால் நமக்கு கொஞ்சம் சப்போர்ட், தங்கமணி பக்கம் ஓவரால் மெஜாரிட்டி கிடையாது இருந்தாலும் நானும் வழிமொழிய ஓகே ஆனது. அடர்ந்த காட்டுக்கும் நடுவில் காட்டேஜும் புக் செய்து பிரயாண யத்தம் களை கட்ட ஆரம்பித்தது.

"நாலு நாளுக்கு தானே போறோம் இதுக்கு எதுக்கு ஆயிரெத்தெட்டு பேக்? "

"எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான்"

"என்ன எல்லாத்துக்கும் சும்மா சேஃப்டிக்கு..சேஃப்டிக்குன்னு சால்ஜாப்பு"

"இதோ பாரு ஆனானாப்பட்ட சுப்பர்மேனே என்ன தான் பேண்ட்க்கு மேல ஜெட்டி போட்டாலும் அதையும் ஒரு சேஃப்டிக்கு பெல்ட் போட்டு இறுக்கிகட்டியிருப்பார்...சுப்பர்மேனுக்கே அப்பிடின்னா..நாமெல்லாம் எம்மாத்திரம்" நான் அடித்த ஜோக்குக்கு என் மாமியார் வெட்கப்பட ஆரம்பித்துவிட்டார்.

அப்புறம் ஆனானப்பட்ட சுப்பர்மேன் ஷூ போட்டுக்கொண்டு இருக்கிறார், வாட்ச் கட்டிக்கொண்டிருக்கிறார் என்று ஆளாளுக்கு அடுக்க, எடுத்துக்கொண்டு போக வேண்டிய சாமான்கள் அபாய நிலையை அடைந்தது. "இந்த லெவலில் போச்சுன்னா இதையெல்லாம் நிரப்பி வெறும் காரை மட்டும் ஹாலிடெக்கு அனுப்ப முடியும்" என்று நான் திட்டவட்டமாக சொல்லிவிட, தங்கமணி பயந்து போய் குட்டி எலுமிச்சம்பழத்தை எடுத்து வெளியில் வைத்துவிட, "அது...தலையப் பார்த்து அந்த பயமிருக்கட்டும்.." என்று அஜீத் மாதிரி சவுண்ட் விட எதுவாக இருந்தது. செல்ப் கேட்டரிங் காட்டேஜ் என்பதால் சமையல் சாமான்கள் வேறு எடுத்துப் போக முடிவு செய்திருந்தோம். நாலு நாள் மளிகை சாமான் பட்ஜெட் மாச பட்ஜெட்டை தாண்டியிருந்தது. மாமியார் சப்போர்ட் இருந்ததால் சில முக்கய மேட்டர்களில் சீனியர் மெம்பர் வீட்டோ உபயோகப்படுத்த முடிந்தது. ஆனால் அதையும் "எட்டு வருஷமா மாப்பிளைக்கு அடிச்ச ஜால்ரா போதும் ரொம்ப ஓவரா ஜிங்கிச்சா போடாதே" என்று தங்கமணி அவர் வீட்டோவையும் ஓவர் ரூல் செய்துவிட்டார்.

காலை ஆறு மணிக்கு கிளம்புவதாக ப்ளான். எடுத்துப் போகவேண்டிய சாமான் செட்டுகளையெல்லாம் அடுக்கிவைத்து கிளம்புவதற்கு ஏழு மணியாகிவிட்டது. ஆபிஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்த அடுத்த வீட்டுக்காரர் "என்ன சார் சொல்லாம கொள்ளாம வீட்டைக் காலிபண்றீங்கன்னு வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார். தெரு திரும்பியதும் வரும் வழக்கமான "வீட்டைப் பூட்டியாச்சா சந்தேகத்துக்குப் பதிலாக தங்கமணிக்கு "கடுகு எடுத்து வைச்சேனா " சந்தேகம் வந்துவிட்டது.

- நீளமாகிடுச்சு அடுத்த பதிவில் முடிக்கிறேன்

29 comments:

இலவசக்கொத்தனார் said...

எப்படியும் காரில்தான் குடித்தனம், வீட்டை விட காரில்தான் சாமான் ஜாஸ்தி என்றெல்லாம் சொன்னீரே, அப்புறம் தனியா என்ன எடுத்து வைக்கலாட்டும்?

ILA (a) இளா said...

ஓஹ்,காட்டுக்கு நடுவுல தனிக்குடித்தனம் பண்ணப்போறீங்க தானே. அங்கே போயி பதிவெல்லாம் போட முடியுமா?

sriram said...

வாய்யா டுபுக்கு, இது பதிவு. இது காமடி, இனிமேலும் மொக்கை பதிவுகள் அனுமதிக்க முடியாது

ஜெயம் குண்டு சாம்பார் பருப்பு போட்டு மூனு வேளையும் கட்டு கட்டும் ஜெயமாலினி கையில் திராட்சைப் பழ கொத்தை வைத்துக் கொண்டு ஜிகுஜிகு வென்று பெல்லி டான்ஸ் ஆடும் போது முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கில் கேப் விட்டு பாட்டுமுடிந்துவிட்டதா என்று பார்த்து,---- இந்த டுபாக்கூர் வேலை தானே வேணாங்கறது.
அப்புறம் வேல்ஸ் ட்ரிப் எப்படி இருந்தது, எத்தனை தடவை ரூட் மிஸ் பண்ணீங்க. காட்டுக்குள்ள போனப்புறம் Feel at Home மாதிரி இருந்ததா? சீக்கிறம் எழுதவும்.
என்றும் அன்புடன்
Sriram

PPattian said...

//ஆபிஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்த அடுத்த வீட்டுக்காரர் "என்ன சார் சொல்லாம கொள்ளாம வீட்டைக் காலிபண்றீங்கன்னு வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார்.//

:))))))))))

Girl of Destiny said...

"இதோ பாரு ஆனானாப்பட்ட சுப்பர்மேனே என்ன தான் பேண்ட்க்கு மேல ஜெட்டி போட்டாலும் அதையும் ஒரு சேஃப்டிக்கு பெல்ட் போட்டு இறுக்கிகட்டியிருப்பார்...சுப்பர்மேனுக்கே அப்பிடின்னா..நாமெல்லாம் எம்மாத்திரம்" நான் அடித்த ஜோக்குக்கு என் மாமியார் வெட்கப்பட ஆரம்பித்துவிட்டார்.


Super!! LOL
:-)

Anonymous said...

//ஆபிஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்த அடுத்த வீட்டுக்காரர் "என்ன சார் சொல்லாம கொள்ளாம வீட்டைக் காலிபண்றீங்கன்னு வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார்// - super! aanalum ungalukku lollu dhan? 4 naal trip-la verum sandwich-m burger-m thinnunga nu vitrukkanum, paavam thangamani ungalukku appa kooda epdi anba samaichu podaren nu things eduthu vechirukkanga, nakkal pannuveengale? its very true Renga trip nu kelambinaale car boot rombi vazhiyum. seat la laamum things, kaal vekka kooda edam illama. pakkathu veetukkaarar correct-a dhan ketrukkar.

apram seekiram wales trip epdi irundhadhu nu post podunga. - umakrishna

Anonymous said...

I can understand. went for a two day trip to Northumberland from Glasgow and we carried 4 bags !. One with rice cooker and pressure cooker, one with utensils (self caterning.la irukkara utensil.la mutton samachirpaalaam !!) and one with maligai saaman. even bagasuran or gadothgajan could not have eaten if all the items we had taken was cooked !!

அபி அப்பா said...

இது இது பதிவுன்னா காமடி பதிவுன்னா நம்ம குருநாதர் பதிவு மாதிரி தான் இருக்கனும். அடுத்த பகுதி சீக்கிரம் தலைவா! வழக்கம் போல 1 மாசம் கழிச்சு போடாதீங்க!

லக்ஷ்மி said...

//தங்கமணி பயந்து போய் குட்டி எலுமிச்சம்பழத்தை எடுத்து வெளியில் வைத்துவிட, "அது...தலையப் பார்த்து அந்த பயமிருக்கட்டும்.." என்று அஜீத் மாதிரி சவுண்ட் விட எதுவாக இருந்தது.// டிப்பிக்கல் டுபுக்கு ஸ்டைல். கலக்கறீங்க...

SLN said...

:)) Back to full form. "Jayamaalini kattiya Jeyam gundu sambar" was top class. Seekiram next part podunga.

Cheers
SLN

Sowmya said...

hellooo dubuks,

kathaiku panjam nu sollikaranga kollywood la ! inge illama yen ange poye utkanthiteenga !

santhadi saakkula, anjali devi padam parkara mathiri solli, jollu vitta kathaiya thirumba rewind pannikiteenga :P

ithellam aangalal mattume mudium :P

INJEY! said...

"இதோ பாரு ஆனானாப்பட்ட சுப்பர்மேனே என்ன தான் பேண்ட்க்கு மேல ஜெட்டி போட்டாலும் அதையும் ஒரு சேஃப்டிக்கு பெல்ட் போட்டு இறுக்கிகட்டியிருப்பார்...

How can your brain think like these...... chanceless!!!

ambi said...

ஹஹா, எவ்ளோ நாள் ஆச்சு இப்படி ஒரு பதிவை படிச்சு!

ஒரு தடவை நினைவு இருக்கா? என்னையும், விவேக்கையும் ஒரு பாடாவதி மந்திரவாதி படத்துக்கு கிருஷ்ணா தியேட்டருக்கு கூட்டிட்டு போனீங்களே? :p

நம்ப நேரம், அதுல ஒரு ஜெயமாலினி பாட்டு கூட இல்லை. :))

Ms Congeniality said...

ROTFL at the first paragraph!!!
Approm kadugu kaaga thirupi poneengala illa continue panneengala journey a?
Anyway waiting to know how was the trip :)

Anonymous said...

asathittenga,appuram trip rendam paagam eppo? chinna trippanalum nammala moota thookama irukka mudiyathu.how true!!!!!!
nivi.

Anonymous said...

அதென்னமோ தெரியல நான் comment போட்ட மூணாவது நாளே post போட்டுடறீங்க...இந்த தடவையும் இது workout ஆகுதான்னு பாப்போம்


இப்படிக்கு
உங்கள் அன்பு தங்கச்சி (தங்கச்சியே தான்)
THE K

rv said...

:))))))

ஆடுமாடு said...

ஹலோ உங்க ஊர் கல்யாணி தியேட்டர்ல ஒரு டப்பா பொறிகடலையை ரெண்டு டவுசர் பாக்கெட்லயும் போட்டுக்கிட்டு மலைக்கள்ளன் பார்த்த ஞாபகமெல்லாம் கண்ணீரா வருது. நல்ல வேளை பூங்கோதையான பானுமதி, அஞ்சலிதேவி லெவல்லலாம் டான்ஸ் போடலை. அப்புறம் டிரிப் முடிஞ்சதும் சந்திப்போம்.
ஆடுமாடு

Anonymous said...

LOL!

Romba naaLaa aasai - Wales poNumnu. Engalukkum kaalam varum....

Deekshanya said...

தலை மாதிரி போஸ்ட் போட இந்த ப்ளாக் உலகில் வேற யாரும் கிடையாது!! காமெடி, செண்டிமெண்ட்,அடிதடி (அவரே வாங்கியது) இதுபோல பல அதிரடி விஷயங்களுக்கு பஞ்சமே இருக்காது உங்க போஸ்ட்ல! This post is another feather to your cap! Good going தலை!

பாரதி தம்பி said...

பின்றீங்க பாஸூ

praveen said...

vanakkam thala...palasa ellam padichipathen...nallathan irukku...enga puthusa onnuthayum kanom...bloga vittae ooditeengala... :D

Aani Pidunganum said...

Hi Dubuks,

Wales-la endha placenu sonna innum nalla irukum, naangalum vandikatikitu povoamla....

Aani Pidunganum said...

//அதற்கப்புறம் ஜெயம் குண்டு சாம்பார் பருப்பு போட்டு மூனு வேளையும் கட்டு கட்டும் ஜெயமாலினி கையில் திராட்சைப் பழ கொத்தை வைத்துக் கொண்டு ஜிகுஜிகு வென்று பெல்லி டான்ஸ் ஆடும் போது முகத்தை மூடிக் கொண்டு விரலிடுக்கில் கேப் விட்டு பாட்டுமுடிந்துவிட்டதா என்று பார்த்து//
Enga veetla innum koncham ushaar, edho childra coins vizhundhuruthu, irukaahnu paarunu solliduvaanga, Indha tubelightku rombha naal puriyalai, kizha paarthundurupaen, apparam thaan vishyam purinjudhu, purinjadhum unga technique thaaan mudinjuruchaahnu paarkavendiyadhuthaan.

Dubukku said...

கொத்ஸ் - சிங்கிள் பெட்ரூம பேமிலி ஹோம்மா மாத்தனும்ன்னா சும்மாவா :))

இளா - ஏங்க அது போயிட்டு வந்து ஒரு மாசமாச்சு...அதான் பதிவு போடலை :P


ஸ்ரீராம் - அதான் இல்லியே ரூட் மிஸ்பண்ணவே இல்லீயே :) யோவ் உண்மையிலேயே எனக்கு ஜெயமாலினியை பிடிக்காதுய்யா நம்புங்க

புபட்டியன் - ஹீ ஹீ ஆமா அவ்வளவு சாமான்கள்

Girl of destiny - வாங்க வாங்க முத முறையா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். :)

உமா - உண்மையிலேயே பயரங்கர லோடிங் இந்த தரம்...ஏகப்பட்ட சாமான்கள்

பாஸ்கர்- ஆமாங்க இந்த ரைஸ் குக்கர விடாம இருக்கவே முடியாது நம்ளால...அது வேற இடத்த அடைச்சுக்கும் ஹூம்

அபி அப்பா - அட நீங்க வேற....நீங்க நிறைய பேர் கலக்கிட்டிருக்கீங்க...இதுல குருநாதர்லாம் சொல்லாதீங்க :) மன்னிச்சிக்கோங்க வேலை நிறைய ஆகிடுச்சு

லஷ்மி- ஹீ ஹீ உண்மைதாங்க...அங்க எப்பிடி :P

எஸ்.எல்.என் - மன்னிச்சிக்க தல உங்களுக்க்த் தான் தெரியுமே நம்ம பார்ட்டி மேட்டர் வேற சேர்ந்திக்கிச்சு :)

சௌம்யா - ஹலோ மேடம் அஞ்சலி தேவி எங்க தாத்தா...கதயக் கெடுத்தீங்க போங்க...நான் அசின், மீரா ஜாஸ்மின் சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க வேற,... :))

எல்லாம் ரூம்பு போட்டு யோசிக்கிறது தான் :)) மிக்க நன்றி :))

அம்பி - ரொம்ப குறை :)) அத விட உங்க ரெண்டு பேரையும் வைச்சு ஃபிர்ட்ஜ் செஞ்சேனே அது தான் சொல்லி சொல்லி சிரிப்பேன் இங்க :))

மிஸ்ஸியம்மா - அடுத்த பதிவு போட்டிருக்கேன் பாருங்க :))

நிவி - அது தாங்க மேட்டரே..எவ்வளவு சின்ன டிரிப்னாலும் பத்து பையாவது வேணும். :))

தி.கே - தங்கச்சியா தம்பியான்னு தெரியாமத் தான் கேட்டேன். மன்னிச்சிக்கோங்க இந்த தரமும் லேட் ஆகிருச்சு

இராமநாதன் - அண்ணே வாங்க :)))

ஆடுமாடு - நீங்க கல்யாணி தியேட்டரா நமக்கு பஸ் ஸ்டாண்டு பக்கம் அதான் கிருஷ்ணா தான் பக்கம் :)) கண்டிப்பா சந்திப்போம்


தேசிகேர்ல் - போயிட்டு வாங்க ரொம்ப நல்லா இருக்கு

தீக்க்ஷண்யா - ஐய்யைய்யோ நீங்க வேற தலை கிலைன்னு சவுண்டு விடாதீங்க...சின்னப் பையன்ங்க நான். இருந்தாலும் உங்க அன்புக்கு ரொம்பப்ப்ப்ப்ப நன்றி :))

ஆழியூரான் - நன்றி ஹை

ப்ரவீண் - ஓடலைங்கோவ்...கொஞ்சம் வேலை ஜாஸ்தியாயிருச்சு

ஆணி - ஆஹா உங்க வீட்டுல பாக்யராஜ் டெக்னிக்கா...நல்லவேளை நான் நல்ல பையன்ன்னு எங்க வீட்டுல தெரியும்.

Vidya said...

//"இதோ பாரு ஆனானாப்பட்ட சுப்பர்மேனே என்ன தான் பேண்ட்க்கு மேல ஜெட்டி போட்டாலும் அதையும் ஒரு சேஃப்டிக்கு பெல்ட் போட்டு இறுக்கிகட்டியிருப்பார்...சுப்பர்மேனுக்கே அப்பிடின்னா..நாமெல்லாம் எம்மாத்திரம்" நான் அடித்த ஜோக்குக்கு என் மாமியார் வெட்கப்பட ஆரம்பித்துவிட்டார்.// -- Loved it. :D

Girl of Destiny said...

வரவேற்பு நல்லா இருக்கு! :-)நன்றி! comment தான் முதல் முற..படிக்கிறது ரொம்ப நாளாவே தொடர்ந்துட்டு இருக்கு...'டைப்பு டைப்பு'-ல ஆரம்பிச்சது!

வல்லிசிம்ஹன் said...

அஞ்சலி தேவி, பானுமதி மலைக்கள்ளனா????/
என்ன நடக்கிறது இங்கே.
இப்படி எல்லாம் படம் வந்ததா:))

ஒரே வயசானவங்க கூட்டம் போலிருக்கே!!!!
அங்க என்ன சமையல் ஆச்சு. என்ன சாப்பிட முடிந்தது இதெல்லாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்:))

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/06/blog-post_6.html?showComment=1402066899274#c3308107344037492304

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

Related Posts