தங்கமணியின் கடுகு எடுத்து வைச்சாச்சா என்ற சந்தேகம் வலுத்துக் கொண்டே போனது. "இதோ பாரு பெட்ரோல் விக்கிற விலைக்கு கடுகு மேட்டருக்கெல்லாம் காரைத் திருப்பமுடியாது" என்று டயலாக் விட வாயைத் திறக்கும் போது சேட் நேவ்வின் ரிமோட் மற்றும் மொபைல் போன்கள் இருக்கும் பையை வீட்டிலேயே வைத்து விட்டது நியாபகம் வந்தது.
"எலே மண்டைன்னா பொடுகில்லாம இருக்க முடியாது, சமையல்ன்னா கடுகில்லாம இருக்கமுடியாது நம்ம பாட்டன் முப்பாட்டன் காலத்துலேர்ந்து சுத்துப்பட்டு பதினெட்டு கிராமத்துலயும் யாராவது கடுகில்லாம சமைச்சிருக்காங்களான்னா பொறந்து குழந்தை கூட 'இல்லை'ன்னு பத்து லாங்குவேஜ்ல சொல்லும்டா.. என்னடா பர்த்துட்டிடுருக்க...சண்முகம் வண்டிய வூட்டுப் பக்கம் திருப்புலான்னு" விஜயக்குமார் மாதிரி டயலாக்வுட்டு சமாளிச்சு வீட்டுக்குப் போய் பார்த்தா கடுகைத் தவிர இன்னும் இரண்டு மூன்று முக்கியமான பைகளையும் வைத்துவிட்டு வந்திருந்தது தெரிந்தது.
எல்லாத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு திரும்ப பயணத்தை ஆரம்பித்தோம். இரண்டு மணி நேரம் கழித்து வழியிலிருந்த சர்வீஸ் ஸ்டேஷனில் நிப்பாட்டும் போது "தயிரை பிரிஜிட்லிருந்து எடுத்து வெளியே வைச்சிருக்கேன் கிளம்பறதுக்கு முன்னாடி நியாபகப் படுத்துங்க"ன்னு தங்கமணி நியாபகப் படுத்தச் சொன்னது நியாபகத்துக்கு வர "மண்டைன்னா மயிரில்லாம இருக்காது சாப்பாடுன்னா தயிரில்லாம இருக்காது"ன்னு மீண்டும் விஜய்குமார் டயலாக் விட்டால் வேல்ஸை வீட்டிலிருந்து பைனாகுலர் வழியாத்தான் பார்க்கவேண்டும் என்பதால் ராஜ்கிரண் மாதிரி ஃபீலிங்கா "ஏன்யா நாமென்ன பொறக்கும் போதேவா தயிரோட பொறந்தோம்..ஒவ்வொரு ஊரு தயிருக்கும் ஒரு மணம் இருக்கும் ஒரு குணம் இருக்கும் ஒரு ருசியிருக்கும், அந்தந்த மண்ணோட வாசத்த போய் பழகித் தான் தெரிஞ்சிக்கிருவோமே"ன்னு தயிரிருந்த திசைக்கு கும்பிடு போட்டுவிட்டு பயணத்தை தொடந்தோம்.
"வெள்ளைக்காரனும் தான் ஹாலிடே போறான். முந்தின நாள் மத்தியானம் போட்ட பணியனைக் கூட மாத்தாம ஒரு செருப்பைப் போட்டுக்கொண்டு காரை எடுக்கிறான்...போற வழியில ஒரு ஃபிகர பிக்கப் பண்றான், போனமா ஜாலியா இருந்தமான்னு சூப்பரா ரிலாக்ஸாகி வந்திடறான்...நாமும் போறோமே...போற இடத்துல நூறு பேருக்கு சமைச்சு அன்னதானம் கொடுக்கப் போற மாதிரி கடுகு, மஞ்சப் பொடி, தயிரு...சே..." என் புலம்பலை தங்கமணி கண்டுக்கவே இல்லை. "இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோட வைச்சுக்கோங்க..."ன்னு புத்திமதி சொல்லிவிட்டு தெம்பாக தூங்கிவிட்டார்.
சேட்நாவ் புண்யத்தில் பயணம் எந்த குழப்பமோ, சண்டையோ இல்லாமல் சப்பென்றிருந்ததால் குழந்தைகளும் போரடித்து நன்றாகத் தூங்கிவிட்டார்கள். ஐந்தரை மணி நேரத்துக்கப்புறம் வேல்ஸ் எல்லையை தாண்டி உள்ளே போகும் போது வேல்ஸின் அழகு மனதைக் கொள்ளை கொண்டது. மலையில் அடர்ந்த காட்டுக்கு நடுவே காட்டாறைப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டுவது மிக ரம்யமாக இருந்தது. என்னைத் தவிர எல்லாரும் தூங்கி எழுந்து தெளிவாக இருந்தார்கள்.
தங்கப் போகும் இடத்தை பார்த்ததும் மனம் குதூகலித்தது. அடர்ந்த மரங்களுக்கு நடுவே மிக அழகான மரவீடு. இறங்கி கொண்டு வந்த சாமான்களை எடுத்து வைக்கவே ஒரு மணி நேரம் பிடித்தது. அடுத்த நாள் பீச் பீச்சாக சுத்தினோம். இதற்கு முன் ஏப்பிரலில் நண்பர்களோடு ஐல் ஆஃப் வொய்ட் போயிருந்தோம். வாழ்நாளில் மறக்க முடியாத இனிமையான பயணம் அது. மிக மிக குதூகலமாக காலேஜ் வாழ்கை மாதிரி ஜாலியாக இருந்த பயணம். எனக்கு ஒரு நீண்ட நாளைய ஆசை ஒன்று உண்டு. "தீப் பிடிக்க தீப் பிடிக்க" பாட்டில் ஆர்யா போட்டுக் கொண்டு வருவது மாதிரியான முண்டா பனியனைப் போட்டுக்கொண்டு பீச் ஓரத்தில் மணலில் ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரவேண்டும் அதை படமாக்கிக் கொள்ளவேண்டும் என்று. தங்கமணியிடம் எப்படி கேமிரா ஆங்கிள் முதற்கொண்டு எல்லாத்தையும் விளக்கு விளக்கு என்று முன்பே விளக்கியிருந்தேன். கிடைத்த சந்தர்பத்தை கோட்டை விடாமல் காறித் துப்பிவிட்டு ஒருவழியாக சம்மதித்திருந்தார். பீச்சுக்கு போன பிறகு லொக்கேஷன் ஃபைனலைஸ் பண்ணிவிட்டு அம்மணியைத் தேடினால் காணோம். தனது தோழியோடு ஜாலியா செல் போனை வேறு ஆஃப் செய்துவிட்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். பீச்சில் ஒரு நீளமான குட்டைச் சுவர் இருந்தது. நான் அதற்க்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறேன் நீ லாங் ஷாட்டில் ரெடி சொன்னவுடன் குட்டைச் சுவற்றில் ஏறி குதித்து ஹீரோ மாதிரி ஓடி வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். நன்றாகத் தலையை ஆட்டிவிட்டு அரட்டைக் கச்சேரியில் மூழ்கி விட்டார்.
இது தெரியாமல் நான் குட்டைச் சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இப்போ ரெடி சொல்வார் அப்போ ரெடி சொல்வார் என்று பார்த்தால்...வழியக் காணும். இதற்குள் நண்பர்கள் என்ற பெயரில் கூட வந்த வானரக் கூட்டம் எடுத்த படம் தான் கீழே.(க்ளிக்கியவரும் பிரபல ப்ளாகர் தான்)
ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு அன்னிக்குப் பூராவும் எனக்கு வயத்தெரிச்சல் தாங்கவில்லை.
Monday, September 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
உம்மை குறையே சொல்ல முடியாத மாதிரி செஞ்சுட்டியேய்யா. சபாஷ்! சபாஷ்!!
(பின்ன கருப்பு கடுகுக்காக வண்டிய திருப்பின நீயி வெள்ளைத் தயிருக்கு திருப்ப மாட்டேன்னு சொன்ன உடனே நீ யாரு, உம்ம வரலாறு என்ன எல்லாம் தெரிஞ்சு போச்சுல்லடே!)
ஹாய் ராம்,
நல்ல பதிவு. ரூட் தவறாமல் சென்றதற்கு வாழ்த்துக்கள். எடுத்து சென்ற கடுகு உபயோகப்பட்டதா?
இந்த வயசில எதுக்கு இந்த போட்டோ ஆசை?
அடுத்த பாகம் எப்போது?
என்றும் அன்புடன்
Sriram
Looks like you need some kind of navigation when writing too. You started with something and ended with something else.
But hilarious as usual. Enjoyed reading it.
//"வெள்ளைக்காரனும் தான் ஹாலிடே போறான். முந்தின நாள் மத்தியானம் போட்ட பணியனைக் கூட மாத்தாம ஒரு செருப்பைப் போட்டுக்கொண்டு காரை எடுக்கிறான்...போற வழியில ஒரு ஃபிகர பிக்கப் பண்றான், போனமா ஜாலியா இருந்தமான்னு சூப்பரா ரிலாக்ஸாகி வந்திடறான்...நாமும் போறோமே...போற இடத்துல நூறு பேருக்கு சமைச்சு அன்னதானம் கொடுக்கப் போற மாதிரி கடுகு, மஞ்சப் பொடி, தயிரு...சே..." என் புலம்பலை தங்கமணி கண்டுக்கவே இல்லை. "இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோட வைச்சுக்கோங்க..."ன்னு புத்திமதி சொல்லிவிட்டு தெம்பாக தூங்கிவிட்டார்.//
Excellent question from you and and an even more excellent reaction from Thangamani.
@ Thangamani -- SUPER MA!
@ Dubukku -- hehehe, couldn't help it, mannichudu pls.
//ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு அன்னிக்குப் பூராவும் எனக்கு வயத்தெரிச்சல் தாங்கவில்லை.//
Ayyooo ayooo orey nakaichuvaiyaa irukku :-)
//ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு அன்னிக்குப் பூராவும் எனக்கு வயத்தெரிச்சல் தாங்கவில்லை.//
:))))))))
//"வெள்ளைக்காரனும் தான் ஹாலிடே போறான். முந்தின நாள் மத்தியானம் போட்ட பணியனைக் கூட மாத்தாம ஒரு செருப்பைப் போட்டுக்கொண்டு காரை எடுக்கிறான்...போற வழியில ஒரு ஃபிகர பிக்கப் பண்றான், போனமா ஜாலியா இருந்தமான்னு சூப்பரா ரிலாக்ஸாகி வந்திடறான்...நாமும் போறோமே...//
ஆமாம் தல.. சரியா சொன்னீங்க.. ஆனா நாம் இன்னும் திருந்தாம தானே இருக்கோம்... :(
இ.கொ... எதுக்கோ அடிபோடுற மாதிரி இருக்கே...
//ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன //
ரங்கீலா, அந்தப் பாட்டுல ஜாக்கி ஷெராஃப் போட்டுருக்கிறத யாரு பார்த்தாங்க? ஊர்மிளா போட்டுகிட்டு இருந்த முண்டா பனியன்தானே எங்களுக்கு ஞாபகம் இருக்கு,
as usual another awesome post!!!
Rock on!! :-D
//வேல்ஸை வீட்டிலிருந்து பைனாகுலர் வழியாத்தான் பார்க்கவேண்டும் //
உண்மையாகவே நீங்க நல்லாவே டுபுக்குகணக்கா யோசிக்கறீங்க..
அடுத்த பாகம் வரும் வரைக்கும் இந்த பாகத்தை மனனம் செஞ்சிகிட்டிருகோம்.. கலக்கறீங்க..!
unga thangamani time paarthu sixer adikiranga pola iruku...ammam edo rasichu rasichu vandi otinennu sonna edatha konjam photo eduthu engalukum poda koodatha
ஹாய் டுபுக்கு,
"இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோட வைச்சுக்கோங்க..."ன்னு புத்திமதி சொல்லிவிட்டு தெம்பாக தூங்கிவிட்டார்.//
ஹா ஹா ஹா ஹா..ஆக தங்கமணியும் ப்ளாக் படிக்கறாங்களா?
//அழகான மரவீடு// இதையும் கொஞ்சம் படம் பிடிச்சுருக்கலாம்ல...
//ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு//
ஹா ஹா ஹா ஹா...இது சூப்ப்ப்பர்,
தங்கமணி சமயம் பாத்து பழி வாங்கிட்டாங்க....மொத்தத்துல சூப்பர் எண்ஜாய்மெண்ட் போங்க.....
//போற வழியில ஒரு ஃபிகர பிக்கப் பண்றான், போனமா ஜாலியா இருந்தமான்னு சூப்பரா ரிலாக்ஸாகி வந்திடறான்...//
ROTFL :) itdhu, idhu matter. :)
டுபுக்கு அங்கேயும் போய் இப்படி போலீஸ், திருடன் விளையாட்டுத்தான் விளையாடணுமா..? உம்மைவிட படம் எடுத்த ப்ரெண்ட் நிறைய அள்ளிட்டாாரு..
LOL all through!!!
பின்னிட்டீங்க!
antha rajkiran dialogue super.
nalla velai kakka kakka la vara mathiri duet padanum nu ellam asai varala :)
Anna,
LOL!!Onga thangamani kittendhu naan neriyaa kathuka vendiyadhu iruku :D
fantastic,LOL,adheppadi thangamani kuri thappama adikirranga!!!! jackee vidunga photova paartha avanga adikku bayandhukittu odi olinja madhiri illa irukku.ungallukku edhukku vellakaran asai ellam.edho wifekitta appappo vangi kattnoma,samallichoma nnu irunga.bye the bye neenga pona edathulla niraya urmila irundhangala!!!!!!!!!!
nivi.
Anna,
LOL:) satthama serichathula pakkathula irruntha chappathi figure kyahai srinivas, appadinnu chairra ellutthundu vanthuruthu, chanceea illa anna........muuuuuudiyala.
Regards,
Ganeshan
Anna,
Muuuuuudiyala..:)satthama serichathula pakkathula irruntha chappathi figure kyahai srinivas,appadinnu vanthurutthu,LOL
Regards,
Ganeshan
ஐயோ ஐயோ ஒரே காமெடிதான் போங்க. நம்மூர்ல இருந்து பத்து பதினைஞ்சு கொடுக்காபுளி, அவிச்ச புளியங்கொட்டை, அரிசிப் பொறி, ஒரு பாக்கெட் தேன்முட்டாய்ன்னு கொண்டு போயி...அழுக்கு வொயிட் பார்ட்டிகளுக்கு கொடுத்திருந்தா...நம்மூர் பெருமை இன்னும் கஜக்பிஜக்குனு ஆயிருக்குமே...
sorkutram illai.. but porul kutram irukke...
in ur earlier blog, u've mentioned that u'll be shy to wear sleeve less munda baniyan and all.. then, how did u wear munda baniyan now?? as this post has a photo proof, is the earlier one a poi??
nenju porukkuthillaye intha nilai ketta manitharkalai ninainthu vittal ;-)
subbu,
"இந்தப் புலம்பலை எல்லாம் உங்க ப்ளாகோட வைச்சுக்கோங்க..."ன்னு புத்திமதி சொல்லிவிட்டு தெம்பாக தூங்கிவிட்டார்.//
Angaiyumah,
//ராஜ்கிரண் மாதிரி ஃபீலிங்கா "ஏன்யா நாமென்ன பொறக்கும் போதேவா தயிரோட பொறந்தோம்..ஒவ்வொரு ஊரு தயிருக்கும் ஒரு மணம் இருக்கும் ஒரு குணம் இருக்கும் ஒரு ருசியிருக்கும், அந்தந்த மண்ணோட வாசத்த போய் பழகித் தான் தெரிஞ்சிக்கிருவோமே"ன்னு தயிரிருந்த திசைக்கு கும்பிடு போட்டுவிட்டு பயணத்தை தொடந்தோம்.
//
hahahaha, excellent quote like rajkiran , adra adra adra, adichu dhool kilapiteenga.....
Walesla endha idamnu sollaveh ellaiyeh thalaivareh...
டுபுக்ஸ்,
// ரங்கீலா ஜாக்கி ஷெராஃப் மாதிரி ஓடி வரணும்ன்னு இருதவன இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு அன்னிக்குப் பூராவும் எனக்கு வயத்தெரிச்சல் தாங்கவில்லை //
இந்த போட்டோக்கு பின்னாடி இப்படி ஒரு சோககதை இருக்குதா?! இதுக்கே இப்படின்னா அப்ப அந்த பீச்சுல நீங்க தலைய கவுத்துக்கிட்டு தனிமைல "இனிமை" காணற போட்டோவ எடுத்துவிட்டா என்னன்னு தோணுது! :)
ilavanji vanjithu vittare ippadi !!
plan panni kaai nagathuratha ithu :P
//நாமும் போறோமே...போற இடத்துல நூறு பேருக்கு சமைச்சு அன்னதானம் கொடுக்கப் போற மாதிரி கடுகு, மஞ்சப் பொடி, தயிரு...சே..." என் புலம்பலை//
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்..:-)
இதைத் தான் ஆங்கிலத்தில் 'insufficient time' என்று கூறுவார்களோ??
// வேல்ஸை வீட்டிலிருந்து பைனாகுலர் வழியாத்தான் பார்க்கவேண்டும் //
:)
//
இப்படி அவசரத்துக்கு ஓரமா ஒதுங்கினவன ஆக்கிட்டீங்களடான்னு
//
ஓரமா ஒதுங்கினா மாதிரி இருந்தாலும் பரவாயில்லை... ஓரமா ஒதுங்கினவன் கிட்ட இருந்து பயந்து ஒதுங்கின மாதிரி இருக்கு...
பதிவு இனிதாக இருந்தது :)
Dubukks,
As usual super. I liked Rajkiran dialogue and your pose for the picture. Thangamani would have done purposely. How do you get such thoughts? Only dubukku can write like this. Ha..ha...
Dubbuku,
Unga post ellam rombavey rasikum padiya irruku...tamil la irukkirathala innum brings it closer to the heart when reading. Your sense of humor should be mentioned and appreciated. Your spouse Thangamani is a good complement to your life and blog. Keep it up.
Shobana
http://mybabynaren.blogspot.com/
Visit me sometime and if ok can I blog roll u and can u do the same for me. TIA.
ஹலே நன்பா எப்படி இருக்குரிங்க?
அட நான் என்ன சொல்ல, ராக்கேட்டுக்கு ஒரு அப்துல்
கலாம் மாதிரி காமடிக்கு நம்ப டுபுக்கு தான்னு நிருபிச்சிகிட்டெ
இருக்குரிங்க. பஞ்ச் டயலாக் எல்லாம் சூப்பர் டுப்பர். ஒரு இதமான
விடுமுறைகொண்டாட்டம் தான் போங்க.
Wish happiness always with u :)
"ஜாக்கி ஷெராஃப்" லெவல்-ல போட்டோ எடுக்கணும்னு ப்ளான் பண்ணி....கடைசில ஜாக்கி போட்டு தூக்கற லெவல்ல உட்காந்துட்டீங்களே..(அது சரி மறைவா ஒக்காந்திருக்கறத பாத்தா...வேற மாதிரியும் இருக்குங்க...).
யோவ் பு.. sorry டுபுக்கு
நல்லாத்தான் இருக்கு ஆனா கொஞ்ஜம் வீரியம் கொறஞ்சாப்பல இருக்கு. நல்லா mood கொஞ்சம் ஏத்திகிட்டு எழுது அப்பு
கொத்ஸ் - அண்ணே ஏதோ உள்குத்து இருக்குன்னு தெரியுது ஆனா என்னான்னு பிரியலையே??
ஸ்ரீராம் - என்னாது இந்த வயசிலயா...ஓ இந்த சின்ன வயசில எதுக்கு இந்த ஆசைன்னு கேக்கறீங்களா.....ஃபோட்டோ பார்த்தீங்கள்ல...
வித்யா - வாம்மா எங்க ப்ளாக் பக்கமெல்லாம் வழி தெரிஞ்சிதா உனக்கு...நன்றி ஹை தங்கமணி சப்போர்டா...யாரு உனக்கு ஃபிரெண்ட் நானா தங்கமணியா :))
அப்பாவி - ஆமாங்க ரொமாண்டிக் ஹீரோ கணக்கா ஓட்வர இருந்தவன வைச்சி காமெடி பண்ணிட்டாய்ங்க
நாகை சிவா - இருக்கும்யா உங்களுக்கு சிரிப்பாத்தேன் இருக்கும். எத்தன தரம் சொல்லியும் என்ன திருந்தவே மாட்டோம் நாம
இளா - யோவ் நல்லா படிங்கைய்யா...நான் தீப்பிடிக்க ஆர்யா மாதிரி பனியன் போட்டுக்கிட்டு ஜாக்கி ஷெராப் மாதிரி வரணும்ன்னு சொன்னேன். ஊர்மிளா நோ அப்ஜெக்க்ஷன் ;)
சி.வி.ஆர் - நன்றி ஹை :)
மடல்காரந் வாங்க வாங்க பெரியவங்க ஏதோ சொல்றீங்க கேடுக்கிறேன் நன்றி.
டுபுக்குடிசைப்பிள் - மேடம் நீங்க கேட்டு போடாமலா...போட்ருவோம்...கொஞ்சம் டைம் குடுங்க
சுமதி - அவங்க ரெகுலரா வந்திருக்கிற கமெண்ட் முதல் எல்லாம் படிப்பாங்க....அதான் எனக்கு வம்பே
அம்பி - பார்த்துடா உங்க வீட்டிலயும் இந்த கமெண்ட படிப்பாங்க :)
உண்மைத் தமிழன் - க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....இளவஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சிசிசிசீ.....
வாங்க மேடம் நன்றி ஹை
ஜினோ - அட நான் காரோட்டும் போதெல்லாம் எனக்கு அப்பிடித் தான் தோனும். தங்கமணிகிட்ட நீயும் பரவால்ல ஜோதிகா மாதிரிதான் இருக்க அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறென்ன்னா கோவம் வந்திரும்
மிஸ்ஸியம்ம - ஆமா ஆமா...அதானே அதெப்படி அம்பி மட்டும் ஜாலியா இருக்கலாம்?
நிவி - என்னங்க எல்லாரும் தங்கமணிக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க. அந்த சோகத்த ஏன் கேக்கறீங்க ஒரு ஊர்மிளா கூட கண்ணுல தட்டுப்படவே இல்லீங்க...
போலி சாமியார் - ஆஹா என் ப்ளாக் போஸ்ட வெச்சு இன்னிக்கு கடலை கோட்டாவ முடிச்சிட்டியா...இனிமே அடிக்கடி சத்தம் போட்டு சிரிப்பியே? :))
ஆடுமாடு - ஆமாங்க ஆனா அதுக்கெல்லாம் இங்க எங்க போகறது :))
சுப்பு - வாய்யா நாட்டாமை அநியாயத்த தட்டி கேட்க வந்துட்டாருபா...நல்ல படிச்சுப்பாருங்கய்யா...அதுலயே சொல்லி இருப்பேன் ஆனா இப்பொ இப்பொ இந்த கூச்சம் காணம போயிகிட்டு இருக்குன்னு
ஆணி புடுங்கணும் - ஆமாங்க இங்கயும் தான் :) அதான் உங்க நிலமையையும் பார்த்தோமே :)) இடம் - பெம்ப்ரோக்ஷைர், கர்மார்த்தன் ஷைர்
இளவஞ்சி - வாய்யா நினைச்சேன் நீரு இந்த கதய எடுத்துவிடுவீர்ன்னு...நம்மகிட்டயும் உம்ம கத ஒன்னு சிக்கிருக்கில்லா...:))
சௌம்யா - ஆமாங்க...டைம் பார்த்து கவுத்திட்டாரு
மதுரையம்பதி - ஆமா ஆமா எல்லாத்தையும் எடுத்து வைக்கிறதுக்குள்ள உசிரு போயிருச்சில்ல
தேசி கேர்ல்- இன்னா சொல்லிறீங்கண்ணு பிரியலையே ????
பஸ்பாஸ் - அண்ணே வாங்க நல்லா இருக்கீங்களா :)) உங்க கிட்ட நிறைய மன்னிப்பு கேக்கனும்.
பாலாஜி - ஓவரா புகழறீங்க அக்கவுண்ட்ல வைச்சிக்கறேன் :))
ஷோபனா - வாங்க மேடம் உங்க புகழ்ச்சிக்கு மிக்க நன்றி :)) உங்க ப்ளாகும் நன்றாக் இருக்கிறது.
ஜேவன் - அட என்னங்க ஜீவன் நீங்களும் என்ன கலாச ஆரம்பிச்சிட்டீங்க
இராமசந்திரன் - யோவ் நல்ல புத்தி குடுன்னு சாமிய வேண்டிக்கோங்க சரியா போயிடும்...வேற மாதிரியும் இருக்காம்:))
அனானி - ட்ரை செய்யறேங்க...(உங்க பாஷை கொஞ்சம் எடக்கு மடக்கா இருக்கே :)) இருந்க்டாலும் நான் நல்ல மாதிரியே புரிஞ்சிக்கிறேன்)
Post a Comment