சின்ன வயதில் நிறைய சந்தேகம் வரும் எனக்கு. விளக்கில் ஏன் விளகெண்ணையை ஊற்றாமல் நல்லெண்ணையை ஊற்றுகிறார்கள், ஆரஞ்சுப் பழக் கொட்டையை முழுங்கி விட்டால் வயற்றிலிருந்து செடி வளருமா, பசுஞ் சாணியில் மின்னல் இறங்கினால் தங்கமாக மாறுமாமே எப்படி என்று ஏகப்பட்ட சந்தேகங்கள். இவற்றில் தலையாயதாக இந்தது 'மாதவிடாய்' என்றால் என்ன என்பது தான். வீட்டில் அக்காக்களுடன் பிறந்தவனாகையால் இந்த பெண்கள் சமாச்சாரம் நிறையவே அடிபடும். ஆனால் பரிபாஷையில் குசுகுசுவென்று பேசிக்கொள்ளப்படும் இந்த விஷயத்தை டீகோட் செய்வதற்கு நிறைய பிரயத்தனப் படவேண்டியிருக்கும். வீட்டுக்கு விலக்கு, தீட்டு என்று தமிழிலும், அவுட் ஆஃப் டோர், ப்ரீயட்ஸ் என்று ஸ்டைலாக ஆங்கிலத்திலும் சொல்லப்படும் அந்த மூன்று நாட்கள் எங்க ஏரியாவில் "தூரம்" என்று வழங்கப்பட்டு வந்தது. ஒரு தரம் ட்யூப் லைட்ன்னா என்ன? அது எப்படி வேலை செய்யுது? சாதா ப்ல்புக்கும் ட்யூப் லைட்டுக்கும் என்ன வித்தியாசம்"ன்னு எங்க தெரு டீச்சரிடம் கேட்க அவர்கள் அவர்களுக்கும் விடைதெரியாது என்பதை "வெரி குட் இப்படித் தான் தெரியலைன்னா பெரியவங்களிடம் கேள்வி கேட்டு புரிஞ்சிக்கனும்"ன்னு முதுகில் தட்டிக் சொல்லிக் கொடுத்த தெம்பில், நாலு விருந்தினர்கள் வீட்டுக்கு வந்திருக்கும் போது அப்பாவிடம் பொதுவில் "தூரம்ன்னா என்னாப்பா...எப்படி ஆவாங்க?"ன்னு எல்லார் முன்னாடியும் நம்ப சந்தேகத்தைக் கேட்டேன். அவரும் பையன் ஐன்ஸ்டீன் மாதிரி கேள்வியெல்லாம் கேக்கிறானே என்று ரொம்ப பெருமைப் பட்டு முதுகில் தட்டிக் கொடுப்பார்ன்னு பார்த்தா கோபம் வந்து நான் என்னம்மோ எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கின மாதிரி முதுகில் ரொம்ப பலமாக தட்டிக் கொடுத்து காதைத் திருகிவிட்டார்.
அக்காக்களிடம் கேட்டால் நைன்டி சிக்ஸ் டிவைட்டட் பை சிக்ஸ் என்னவென்று எதிர் கேள்வி கேட்டு இம்போசிஷன் எழுதச் சொல்லி கையை ஒடித்துவிடுவார்கள் என்பதால் மெதுவாக அம்மாவிடம் போய் கேட்டேன். எங்கம்மா நான் என்னம்மோ வயசுக்கு மீறின கேள்விகளை கேட்ட மாதிரி பதறிப் போய்விட்டார்கள். "யாருடா உனக்கு இந்தமாதிரி கேக்க சொல்லிக் குடுத்தாங்க?"ன்னு கேட்க..நான் ரொம்ப பெருமையா ட்யூப் லைட் மேட்டர சொல்லி...சரி போ நீ சொல்லாட்டா நான் அந்த டீச்சர் கிட்டயே போய் கேட்டுக்கிறேன்னு சொல்ல, ஈன்ற பொழுதில் பெரிதுவத்த என் தாய்..." அடப்பாவி இதையெல்லாம் எல்லார்கிட்டயும் கேட்காதடான்னு சொல்லி "அது வந்து கடவுள் ஒரு கல்லை மிதிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்கார் அதை தெரியாமல் மிதித்துவிட்டால் அது தான் தூரம் அப்புறம் மூன்று நாட்களுக்கு யாரையும் தொடக்கூடாது வீட்டில் தனியாக இருக்கவேண்டும் என்று உம்மாச்சி (சாமி) கட்டுப்பாடு வைத்திருக்கிறார். ஆனால் இது தேவரகசியம்.. இதப் பத்தி யாருகிட்ட்யும் கேட்க்கவோ சொல்லவோ கூடாது ரகசியமா வெச்சிக்கோன்னு" என்று பதமாக சொல்ல. எனக்கு மேலும் கேள்விகள். அதெப்படி நம்ம வீட்டு பாத்ரூமில தான் கல்லே இல்லீயே அப்புறும் எப்படின்னு எதிர் கேள்வி கேட்க, எங்கம்மா மோர் கடையும் மத்தை திருப்பி பிடித்து தேவரகசியத்தின் பொறுமையின் எல்லை இதுதான்னு ரெண்டு காட்டு காட்ட...அப்புறம் தேவரகசிய சந்தேகங்களை கொஞ்ச நாள் ஒத்திப்போட்டுவிட்டேன்.
ஆனால் ஒருநாள் அவசரமாய் டாய்லெட்டுக்கு கடமையாற்ற சென்று கொண்டிருந்த போது ஓட்டிலிருந்த விழுந்திருந்த கல்லை மிதித்து விட்டேன். "ஐய்யைய்யோ நான் தூரம் ஆகிட்டேன்"ன்னு வீட்டுக்கு வந்து பொதுஅறிக்கைவிட, எங்கம்மா என்ன சொல்வதென்றே தெரியாமல் தலையிலடித்துக் கொண்டு பெருமைப்பட, எங்கப்பா நான் என்னம்மோ அசின் கூட ஓடிப் போகப்போறென்னு சொன்ன மாதிரி கோபப்பட ஆரம்பித்துவிட்டார். சின்ன வயதில் எனக்கு கொஞ்சம் எந்த்தூ ரொம்பவே ஜாஸ்த்தி. வீட்டில் தேள் வந்தாலோ, இல்லை புது சட்டை போட்டாலோ சின்னத்தம்பி பைத்தியம் மாதிரி "எனக்கு கலியாணம் எனக்கு கலியாணம்"ன்னு தெருவில் சந்தோஷமாக அறைகூவல் விடுவேன். அன்றைக்கும், நான் தூரமான மேட்டரை தெருவெல்லாம் அறைகூவல் விட யத்தம் கட்ட, எங்கப்பாவுக்கு தேரடி சுடலைமாடசாமி உடம்பிலேறிவிட்டது. வீட்டு வாசலை நான் எட்டுவதற்குள் எங்கிருந்தோ வந்து ஒரே அமுக்காக அமுக்கி போட்டு, இந்த அறிவு ஜீவியை எப்படி சமாளிக்கிறது என்று அம்மாவும் அப்பாவும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் கவலையோடு பார்க்க மீண்டும் சாம தான பேத தண்ட முறைகள் பரீட்சிக்கப்பட்டன.
அந்த தரம் 'தண்ட' முறை மட்டும் கொஞ்சம் பலமாக பிரயோகிக்கப் பட்டதில் உண்மையாகவே அந்த தேவ ரகசியம் பற்றி அப்புறம் ஆர்வக் கோளாறு கொஞ்ச நாள் அடங்கியிருந்தது. இருந்தாலும் like minded peer group knowledge dissemination செசன்ஷில் இது பற்றி விவாதித்தும் எங்கள் அறிவுஜீவித்தனத்திற்கு அப்பாற்பட்டதாக இந்த மேட்டர் இருந்தது. அப்புறம் டீ.வி வந்த காலத்தில் கேர்ஃப்ரீகாரர்கள் புண்யத்தில் கேர்ஃபிரீக்கும் தேவரகசியத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று கண்டுபிடித்தோம். இருந்தாலும் அந்த விளம்பரத்தில் வரும் அம்மாக்களெல்லாம் ப்ரில் இங்க் ஏன் யூஸ் பண்ணுகிறார்கள்? எங்க வீட்டிலாவது ப்ரில் இங்க் வாங்குவார்கள், கண்ணுக்குட்டி கணேசன் வீட்டில் இங்கே வாங்கமாட்டார்களே..இவங்களுக்கெல்லாம் பாத்ரூமில் ப்ரில் இங்க் எப்படி கிடைக்கிறது என்று பலவிதமான சந்தேகங்கள். அப்புறம் இந்த மாதிரி விளம்பரங்களில் பரதநாட்டியம், டேன்ஸ், ஊஞ்சலில் ஆடுவது, ரோட்டில் ஆடுவது என்று குழப்பி எடுத்துவிட்டார்கள். இந்த 'விஸ்பர்'காரர்கள் மட்டும் ஒரு பாப் வெட்டிக் கொண்ட பீட்டர் ஆண்டியைப் போடுவார்கள். அந்த ஆண்டியும் ஐந்து நிமிஷம் கட கடவென இங்கிலிபிஸில் பேசிவிட்டு, கடைசியில் அதுவும் பிரில் இங்க்கை கொட்டிவிட்டுப் போகும். இருந்தாலும் ரகசியம் புலப்படவில்லை. அதிலும் பெண்களின் சுதந்திரத்தை வேறு லிங்க் செய்ய ஆரம்பித்தவுடன் கொஞ்ச நஞ்ச புரிதலும் போயே போச்சு.
அப்புறம் பின்னாளில் இந்த ரகசியம் எப்படியோ தெரிந்தது(எப்படி தெரிந்து கொண்டேன் என்று நானும் யோசித்துப் பார்க்கிறேன் நியாபகத்துக்கு வரமாட்டேங்கிறது). இந்த லட்சணத்தில் தான் சினிமாக்கள் சொல்லிக் கொடுத்த மாதிரி கீழே கவுத்தி கையைக் கோர்த்துக் கொண்டு கசக்கினால் குழந்தை பிறந்துவிடுமென்று ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை அந்த டவுட்டையெல்லாம் யாரிடமும் கேட்கவில்லை.
Thursday, June 07, 2007
Subscribe to:
Post Comments (Atom)
56 comments:
though this is a sensitive subject,
you have handled this very well :))))
like everyone, i also had this doubt amma kittae ketta pothu
"vayatha valikum appo theriyumnu" sonnanga.
appuram konja naal enaku vayathai valichalae naanum thooramno ninachukuvaen.
Engae sonna nammalaiyum veetu moolaiyila utkara vechu rathiri veetai suthi poga solluvangalo bayanthu pesama irupaen.
Ippo ninacha siripa iruku.
Good One Again - PK Sivakumar
hmmmmmm. actually this is not a matter at all, if u really wish to know rite? (since u were under age!)
//எங்கப்பா நான் என்னம்மோ அசின் கூட ஓடிப் போகப்போறென்னு சொன்ன மாதிரி கோபப்பட ஆரம்பித்துவிட்டார்//
இதுக்கு பெருமையில்ல படனும்?
:)
very well written :))))
"ஐய்யைய்யோ நான் தூரம் ஆகிட்டேன்"ன்னு வீட்டுக்கு வந்து பொதுஅறிக்கைவிட//
;) ;)
டுபுக்கு நல்ல சுவாரஸ்யமா எழுதியிருகீங்க.....இதில என்னனா பசங்களுக்கு மட்டும் இல்ல பொண்ணுங்களுக்கும் இது புரியாத புதிராதான் இருக்கும்..ஆனா என்ன புதிருக்கு விடை பொண்ணுங்களுக்கு சீக்கரமே கிடைச்சுரும் அவ்வளோதான்.....எங்க க்லாசுல கொஞ்சம் பெரிய பொண்ணுங்க இதெல்லாம் பத்தி, ஏய் அவளுக்கு இதுவாம்பா....டீச்சர்ட்ட போணூம் அப்படின்னு குசுகுசுன்னு பேசிக்குவாங்க...நாங்க பக்கத்துல போனா ஏய் நீ போ உனக்கு இதெல்லாம் புரியாது அப்படின்னு அதட்டி விரட்டுவாங்க...அவமானமா இருக்கும்!!! வேடிக்கைதான் போங்க.....
http://www.amazon.com/Taking-Charge-Your-Fertility-Anniversary/dp/0060881909/ref=pd_bbs_sr_1/002-7837826-6202464?ie=UTF8&s=books&qid=1181266266&sr=8-1
:D ROTFL
ரொம்ப நாளைக்குப் பிறகு வாய் விட்டுச் சிரிக்க வைத்த ஒரு பதிவு. உங்கள் பதிவுகளை அதிகம் படித்ததில்லை. ஆனால் இனி தொடர்ந்து படிப்பது என்று முடிவு செய்து விட்டேன். நிறைய எழுதவும் நண்பரே.
இந்த மாதிரி சிரிச்சு ரொம்ப நாளாச்சு.
பயத்தோடதான் படிக்க ஆரம்பித்தேன்.
படு சாமர்த்தியமா
ஹாண்டில் பண்ணிட்டீங்க.
எதை எடுத்துச் சொல்றது எதை விடறது. எல்லா வரிகளும் அருமை.:-0))))))))))))
டுபுக்கு நல்ல சுவாரஸ்யமா எழுதியிருகீங்க.....இதில என்னனா பசங்களுக்கு மட்டும் இல்ல பொண்ணுங்களுக்கும் இது புரியாத புதிராதான் இருக்கும்..ஆனா என்ன புதிருக்கு விடை பொண்ணுங்களுக்கு சீக்கரமே கிடைச்சுரும் அவ்வளோதான்.....எங்க க்லாசுல கொஞ்சம் பெரிய பொண்ணுங்க இதெல்லாம் பத்தி, ஏய் அவளுக்கு இதுவாம்பா....டீச்சர்ட்ட போணூம் அப்படின்னு குசுகுசுன்னு பேசிக்குவாங்க...நாங்க பக்கத்துல போனா ஏய் நீ போ உனக்கு இதெல்லாம் புரியாது அப்படின்னு அதட்டி விரட்டுவாங்க...அவமானமா இருக்கும்!!! வேடிக்கைதான் போங்க..... //
இதுவும் சூப்பர்.ராதா..
அறிவை வளர்க்க என்னவெல்லாம் பாடுபட வேண்டியிருக்கு பாரு
- சக்ரா.
(பிளாகர் பாஸ்வொர்ட் மறந்து தொலைச்சிட்டேன்)
ore comedy dhan.. As Radha said, this one stirs curiousity amongst girls as well. Good one, Dubukku.
Oh yeah.. and I guess our kids will learn it faster and without asking us, the internet way :-)
S.J. Suryah padam etavthu patheengala..en theedernu epdi oru post :)
Everyone come across this question...
Schoolla thaan 10th-la idhuellam terinjukamudinjudhu....Bcoz enna vida periya thilla langadi ellam irundhaanga...
:)) good ones
very well written Dubukku sir..... last paragraph-la unga usual punch kaattitteenga.... antha doubt ketturunthaa innum mosamaa poirukkum!!
கம்பி மேல நடக்கற மாதிரி ஒரு ஸப்ஜெக்ட் எடுத்து, நல்லா கையாண்டிருக்கீங்க. பாலன்ஸ் தவறவில்லை. நானும் இந்த சந்தேகங்களுடன் திரிந்ததுண்டு. ஆனால் வீட்டில் கேட்டதில்லை (தும்மல் போட்டாலே ஏன் வாயை மூடிண்டு போடலைன்னு முதுகுல பெரியவா முத்திரை குத்தின காலம்...வீட்டில் கடைக்குட்டி வேற அதுனால எல்லாருமே பெரியவங்க...எல்லாருக்கும் அடிக்க ரைட்ஸ்).
பின் ஒருநாள் இரண்டு அம்மணிக்க்ளுக்கிடையிலான (குழாயடி) சண்டையில் க்ளூ கிடைத்தது. என் அப்பாவின் கஸின் (ஈகோ...பார்க்காத பெரியவர்....ஆஸ்பத்திரியில் வேலை)...ஓரளவு விளக்க புரிந்து கொண்டேன்.
Dubukku,
I started reading your blog few weeks ago and I must say I like it very much. You have inspired me to start my own blog. Good work keep it up.
டுபுக்குக்கரே! எனக்கு இதே மாதிரி ஒரு போஸ்ட் போட ஆசை இருந்துச்சு. இதே சப்ஜெக்ட். ஆனா எழுதி பார்த்தப்போ கம்பி மேல நடக்கும் வஷயத்தில் நான் பேலன்ஸ் தவறி விட்டேன். ஆனா நீங்க சூப்பரா பேலன்ஸ் பண்ணீட்டீங்க! சூப்பர்:-)))
Andha Naal Gnabagam Nenjile Vandathe Nanbane!!!!!
Inda post 100% ennoda kadai madiriye irukku, except for appavidam solli adi vangurathu...
Indha post is about period, adutha post ennavo????
adults.dubukku.blogspot arambikka idu munnottamma????
Endrum Anbudan....
//அந்த ஆண்டியும் ஐந்து நிமிஷம் கட கடவென இங்கிலிபிஸில் பேசிவிட்டு, கடைசியில் அதுவும் பிரில் இங்க்கை கொட்டிவிட்டுப் போகும்//
இந்த வரியைப் படிச்சு.. சிரிப்பு தாங்கல :D
'90s முதல், பத்திரிகை விளம்பரங்களில் கொஞ்சம் தெளிவா எழுத ஆரம்பிச்சிட்டாங்க. தொலைக்காட்சி விளம்பரத்தில் பிரில் இங்கைக் கொட்டும் நிறுவனங்கள், அச்சில் மட்டும் என்னவோ.. உண்மையைச் சொல்ல ஆரம்பித்தன (அச்சு விளம்பரம்னா பசங்கல்லாம் படிக்கமாட்டீங்கன்னு தைரியத்துனாலயோ? :))
ராதா ஸ்ரீராம் சொன்னது உண்மை. பெண்களுக்கும் தான் டோஸ் விழும் இந்தக் கேள்வி கேட்கும்போது. 5ம் வகுப்பில் படிக்கும்போது ஒரு க்ளூ கிடைச்சுது ஆனா வீட்டில் யாருமே தெளிவுபடுத்தலை ரொம்ப நாளைக்கு. அப்புறம் ஒருமுறை அபார்ஷன்னா என்னம்மான்னு கேட்டு நல்லா வாங்கிக்கட்டிக்கிட்டேன்!!
Man u rock..
FANTASTIC
HAD A GOOD LAUGH AFTER A LONG LONG GAP
FANTASTIC
HAD A GOOD LAUGH AFTER A LONG LONG GAP
/// Dubukku is one of those slang words in Tamil world which does not have any strict meaning. ///
இந்த வார்த்தைக்கு அர்த்தம் இருக்கிறது. இது ஒரு கெட்ட வார்த்தை, கோபத்தில், சண்டையில் பேசப்படும் வார்த்தை.
அந்த வார்த்தையின் முதல் இரண்டு எழுத்துக்களை முன்னும், பின்னுமாக மாற்றினால் உங்களுக்கும் தெரியும்.
வடிவேலு தான் இந்த வார்த்தையை பிரபலப்படுத்தினார்.
Mr.சிரிப்பானந்தா 2007,
இப்படியா எழுதுறது. சே, திட்ட கூட வழியில்லை. எப்படிங்க இப்படி? ஷ்ஹ் தனியா டூசன் வெச்சுதான் கத்துக்கனும். எங்கயாவது மாட்டுனா கலாய்ச்சுரலாம்னு பார்த்தா கலக்கிபுட்டீங்களே!
சரி உங்களுக்கு சிரிப்பானந்தான்னு பட்டத்த சரியாத்தான் குடுத்து இருக்காங்க வ.வா.சங்கத்துக்காரங்க
Very funny. virasamillamal decent-a dharma sangadamana matter pathi solli irukkeenga.
I have also gone thru this phase. enakkum eppo correct knowledge vandhadhunnu theriyalai. :)
orey mixings thaan! paravayillai, dubukks, mosamadna subject-a kooda nalla ezhuthareenga!
aana onnu theriyuthu, porakkum bothey bayangara arivoda poranthirukeenga polarukku!
ada..neengala dubbukku...!!
(padikaravangala dubbukku pannama iruntha sari :P)
ungaloda ennattra pathivugal padithu silakithu than ponen.
Arumai...athuvum orkut patriya unga post arputham..ha..ha..
nagaichuvaiyeaa ezhuthi irukinga..nalla irukku...
Annaathe! We are pleased to inform that you have been awarded the Thinking Blogger Award by Boo and please do us the honor by kindly accepting the award from here: http://boosbabytalk.blogspot.com/2007/06/and-awards-go-to.html
Edho Ezhaiku etha ellu urunda! ;)
hey..hilarious post..been there ..done that...inspite of being a girl...very funny...
Good one.. Nalla handle panniteenga.
Aduthu yenna ?? The last paragraph in this post scares me....Sorry just kidding. When I read the thalaippu felt little uncomfortable then the way u handled it was very nice. As a girl even i had gone thro such times..
இந்தப்பெரிய நாட்டிலை இது தெரியாமலா வளந்தீங்க. சிரிக்கிறதா அழுகிறதா என்றே புரியேலை. அப்பிடி என்னதான் பரமரகசியம் இதிலை இருக்கென்று மறைத்தார்களோ? எனது மகனுக்கு 7 வயது இருக்கும் போது மெதுவாக இது பற்றி சொன்னேன். ஆழமாக இல்லை மேலோட்டமாக. அதனால் மாதவிடாய்க்காலங்களில் எனது பிள்ளைகள் என்னை தொல்லைப்படுத்தமாட்டார்கள். இயலாமல் நான் படுத்தால் தாமே தம்மை தயார்ப்படுத்துவதோடு எனக்கும் ரீ எல்லாம் போட்டு தருவார்கள்.
anony -ஆமாங்க எழுதும் போதே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ரொம்ப நன்றி !!
anony - அட பொண்ணுங்களுக்கும் இந்தப் பிரச்சனை இருந்ததா?? ஆச்சரியமா இருக்கே. வீட்டைச் சுத்திப் போகச் சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர் :)). எங்க வீட்டிலயும் இந்தது. ஆன கொஞ்ச நாள் தான் அப்புறம் எல்லாம் மாறிடிச்சு...இப்ப எல்லா இடங்களிலும் மாறிக்கிட்டு வருது இல்ல?
PKS - மிக்க நன்றி உங்கள் தொடர்ந்த ஊக்கத்துக்கு !!
Sivaji - The Boss- இல்லீங்க...இப்பவேணா இதெல்லாம் சாதரணமா இருக்கலாம் அப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் தெரிஞ்சிக்க வேண்டி இருந்தது :))
Anony - உங்களுக்கு தெரியுது எங்கப்பாக்கு தெரியவேண்டாமா?
நாமக்கல் சிபி- வாங்கண்ணே :))
L-L-D-a-s-u - ஆமாங்க அதெல்லாம் ஒரு காலம் :))
Radha Sriram - பொண்ணுங்களுக்கும் இந்தப் விஷயத்தில் பிரச்சனை என்பது கொஞ்சம் ஆச்சரியமா இருந்தது. ஆனா நீங்க சொல்ற மாதிரி எல்லாருக்குமே இத சீக்கிரெட்ட மெயின்டெயின் பண்ரதுல ஒரு அல்ப சந்தோஷம் :))
இளா - நன்றி மெயில் அனுப்பியிருக்கேன்
Sun - நன்றி நண்பரே
மதுசூதனன் - மிக்க நன்றி. அடிக்கடி வந்து போங்க :))
வல்லிசிம்ஹன் - வாங்கம்மா நானும் பயத்தோடு தான் எழுத ஆரம்பிச்சேன் :)) மிக்க நன்றி :)
சக்ரா - அதே அதே :))
Gyathri- ஆமாங்க உங்களுக்கு இந்த கஷ்டங்கள் இருக்குன்னு நினைக்கவே இல்லை :)) நன்றி. ஆமாம் காலம் மாறிகிட்டு வருது அவங்க இவ்வளவு கஷ்டப் பட மாட்டாங்க :))
Anony- அட நீங்க வேற ..சும்மாத்தேன் :)
Aani Pidunganum - ஆமாங்க பசங்க எல்லாரும் இந்த கஷ்டம் பட்டிருப்பாங்க :))))
Santhosh - மிக்க நன்றி நண்பரே.
Kuttichuvaru - வாங்க சார். ஆமாங்க அதக் கேட்டிருந்தா அடி பின்னியிருப்பாங்க ஆனா உஷாரா கேக்கலை :))
இராமச்சந்திரன் - அட வாங்க தலை. உங்களுக்கு இருந்த மாதிரி எனக்கு எந்தப் பெரியவரும் இல்லை அதான் கஷ்டமாயிடுச்சி :P
விஜய் - மிக்க நன்றி. அடிக்கடி வாங்க..
அபி அப்பா- மிக்க நன்றி தல...உங்க போஸ்டையும் போடுங்க...:)
Sriram - நன்றி தல. அதுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் போல தான் தெரியுது :P
சேதுக்கரசி - அட அப்பிடியா...அச்சுல ரொம்ப படிச்சதில்லை. பெண்கள் பாடும் கஷ்டம்ன்னு தெரியும் போது ஆச்சரியமா இருந்தது.
Analyzt - மிக்க நன்றி ஹை :)) **Ahem ahem ****
Gomathi மிக்க நன்றி. அடிக்கடி வாங்க
Anony - வாங்க. திருப்தியா? சாப்பாடு ஆச்சா? இங்க இனிமே தான் :P
இளா - வாங்க அண்ணே. ரொம்ப நன்றி. ரொம்ப பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க கேடுக்கறேன்.
Seenivasan - ஆமாங்க எழுதும் போது ரெண்டு மூனு தரம் திரும்ப படிக்கவேண்டியிருந்தது
Munimma - நீங்க தாங்க கரெக்டா பாயிண்ட பிடிச்சிருக்கீங்க...நம்ப அறிவைப் பத்தி. நமக்கு இருக்கிற அறிவுக்கு....ஹூம்ம்ம் ஏங்க அந்த சோகதையெல்லாம் கிளறிக்கிட்டு :)))
Sowmya - வாங்க மேடம். உங்க பதிவெல்லாம் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு. உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.
சீனு- மிக்க நன்றி நண்பரே
B o o - யெக்கோவ் தன்யனானேன். மிக்க நன்றி. அண்ணாவா....டமாசு பண்றீங்களே...அக்காக்களை எல்லாம் தங்கச்சியாக கொண்டுள்ள ஒரே அண்ணன் நானாகத் தான் இருக்க முடியும் :P
Anony - ரொம்ப நன்றி மேடம். உங்களுக்குமா :))
லங்கிணி - வாங்க மேடம். கவலைப் படாதீங்க அதெயெல்லாம் எழுதமாட்டேன் :)) நன்றி.
நளாயினி - வாங்க மேடம். மேல கமெண்ட படிச்சு பாருங்க. ஆம்பிளங்களுக்கு மட்டுமில்லாமல் பெண்களுக்கும் இந்தப் பிரச்சனை இருந்திருக்கு :)). ஆனா நீங்க சொல்ற மாதிரி இப்போ காலம் மாறிகிட்டு வருது அதனால அவ்வளவு கஷ்டப் படவேண்டியதில்லை. நீங்க உங்கள் பிள்ளங்களை நல்ல வளக்கறீங்கன்னு தெரியுது
romba romba sensitive subject aana you have handled it very well and with ease.idhu unga strong point,sensitive subject with humour is a very tough job. well done sir.
nivi.
Very Well written.....
U have handled the subject in a very correct way...
Renga,
Laughed and Laughed. As usual I keep your post in balance to read it for all with expressions. My god! Today we all laughed and laughed over it. Half way through I could not read it and there was only laughter. I never take the risk of reading your post at public place and at work for the fear of laughing and attracting others. I have developed this disease now. While travelling if I think about your post I may burst into laughter and others may think I am mad. Ippadi yengalai yellam paithiyam Aakiteengaley!!! Good one. Keep it up man!
'bayangara' arivu, catch my point? ;-P
குலுங்கி குலுங்கி சிரிச்சேனுங்க! ஆபீசுல்ல பக்கத்து சீட் காரர் ஒரு மாதிரியா பார்த்து என்னனு கேட்டுட்டார்... இதுக்குத்தான் செக்ஸ் கல்வி அவசியமுன்னு சொல்றாங்களோ?
Hi, First time i read your page its very funny, i like your humor sense. A very sensitive matter you handled in very humorus and clean way.
Thanks for the Laugh (LOL)
Raj
rombha nalku aparam intha mari sirikaren nice post
ur prasavam post to super ur posts inspired me a lot
குலுங்கி குலுங்கி சிரிச்சேனுங்க! ஆபீசுல்ல பக்கத்து சீட் Fat kuwaiti. ஒரு மாதிரியா பார்த்து என்னனு கேட்டுட்டார்.
உங்கள் பதிவுகளை அதிகம் படித்ததில்லை. ஆனால் இனி தொடர்ந்து படிப்பது என்று முடிவு செய்து விட்டேன். நிறைய எழுதவும் நண்பரே.
S.Ravi
kuwait
Seriously... Havnt laughed like this for so long... Thanks frnd:-)- Karthik
itha pathiyellaam pesappadaathunnu solli arivai 5varusam thalli therijikitten...
அந்த காலத்து அம்மாக்கள் பரம ரகசியமாய் வைத்து இருந்ததை இந்த காலத்தில் மீடியாக்கள் வெளிச்சம் போட்டு விடுகின்றன. பாத்ரூமில் இங்க் எப்படி கிடைக்கிறது என்பது நியாயமான சந்தேகம்.அப்பாவியாய் யோசித்து இருக்கீங்க.சிரித்து முடியலை.
enakum irunthathu ! 11.8.2013 RANI weekly magazine la kannanchandran oru writer ithaip pathi alaka oru sirukathai eluthiyirukkaaru! padichu paarunga superb
i laughed to my hearts content...
yes it was a natural question....which the parents never tried to answer to their sons...
Too good 😊😊😊 love your narration 😊
Post a Comment