Thursday, April 05, 2007

வியர்டு

இந்த வியர்டு பதிவுல என்னையும் இழுத்துவுட்டுட்டு போடுறயா இல்லையான்னு கொத்ஸ் தொல்லை தாங்கமுடியலை. தீக்க்ஷன்யா முன்னாடி ஒரு சங்கிலி பதிவுக்கு கூப்பிடிருந்தாங்க...அவுக நல்லவக.. நான் போடாட்டாலும் பெருந்தன்மையா மன்னிச்சுவிட்டுட்டாங்க (அப்படித் தானே? தப்பா எடுத்துகாதீங்க மேடம் உண்மையிலேயே அப்பிடியே விட்டுப் போச்சு).

இந்த வியர்ட்டு பதிவு ரொம்பவே கஷ்டமாயிருந்தது. ஏதாவது ஒன்னு ரெண்டு கேனத்தனமா செய்யிற பார்ட்டியா இருந்தா டக்குன்னு போட்டிருலாம். எல்லாமே கேனத்தனமா செய்யும் போது..என்னன்னு போடறது?

சின்ன வயசுலேர்ந்தே வீட்டுல தெருவில ரொம்ப மரியாதை சொல்லிக் கொடுத்து ஒரு பழக்கம் உண்டு. யாரையாவது தெரியாம காலால மிதிச்சுட்டோம்னா உடனே தொட்டு கும்பிடனும். இநத பழக்கம் எனக்கு ரொம்பவே பத்திக்கிச்சு...எவ்வளவுதூரத்துக்குன்னா...நான் மிதிச்சேன்னா மட்டும் இல்ல யாராவது என்ன தெரியாம மிதிச்சுட்டாலும் நான் அவங்கள தொட்டு கும்பிடுவேன். இந்த பழக்கம் அப்பிடியே டாப் கியருல போய்..யாராவது என்ன மிதிச்சுட்டு நான் அவங்கள தொட்டு கும்பிடாட்டா கஞ்சா கிடைக்காம கை காலெல்லாம் விலுக்கு விலுக்குன்னு இழுத்துக்கிற மாதிரி ஆகி விடும். எப்பேற்பட்டாவது மிதித்தவர்களை தொட்டு கும்பிடனும்ன்னு உள்ள ஒரு வெறி வந்துவிடும். அவங்கள எப்பிடியாவது தொட்டுட்டு அந்த கைய எங்கயும் டச் பண்ணாம யாரும் பார்க்காத போது(பார்த்தா கேலி பண்ணுவாங்களேன்னு) அப்பிடியே கண்ணுல ஒத்திக்குவேன்.

ஒரு தரம் எங்க ஊர் திருவிழா கூட்டதுல போகிற அவசரத்துல ஒரு பொண்ணு ஒன்னு கால மிதிச்சிடுச்சு. (ரொம்ப கற்பனை பண்ணாதீங்க..அப்போ எனக்கு பத்து வயசு தான் இருக்கும்) மிதிச்சதோடு அல்லாம கூட்டத்தோடு கூட்டமா அவங்க அப்பா அம்மாவோட அந்தப் பொண்ணு போய்கிட்டு இருக்கு. எனக்கு கடமையுணர்ச்சி மேலிட எப்பிடியாவது அந்த பொண்ண தொட்டு கும்பிடனும்னு சாமி வந்து விட்டது. கூட இருக்கிற நாசமா போகிற பயபுள்ளைகளெல்லாம் "விடாதடா நமக்கு நம்ம லட்சியம் தான் முக்கியம்ன்னு" ஏத்தின் ஏத்துல எப்படியாவது தொட்டு கும்பிட்டுவிடவேண்டும்ன்னு கூட்டத்துல விடாம ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். அந்த பொண்ணு அடிக்கடி திரும்பி வேற பார்த்துவிட்டது. ஒரு சர்பத் கடையில் அவங்க அப்பா அம்மோவோடு ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கும் போது இதான் சமயம்ன்னு நானும் கடைக்கு பக்கதுல போக, நம்ம நல்லெண்ணம் தெரியாம அந்தப் பொண்ணு தேமேன்னு ஜூஸ் குடிக்கிறத விட்டுட்டு அவங்க அப்பாக்கிட்ட போட்டுக் கொடுத்துவிட்டது. அது தான் சின்னப் பொண்ணு எதோ தெரியாம பண்ணிருச்சுண்ணா அவங்க அப்பாக்கும் அறிவில்லை...அவரு முறைச்சிக்கிடே என்னை நோக்கிவர...விடுவேனா நான்?..நிக்கலையே... ஒரே ஒட்டம் தான். அவங்க அப்பாவும் என்ன மாதிரி தொட்டு கும்பிடற பாலிஸி வைச்சிருந்தார் போல...கொஞ்ச நேரம் தொடர்ந்து தொரத்திக்கிட்டு வந்தார். ஆனா அவரு பாலிஸி நம்மள மாதிரி ஸ்ட்ராங்கா இல்லாததுனால அப்புறம் திரும்ப ஜூஸ் குடிக்கப் போயிட்டார். நல்லவேளை அதுக்கப்பறம் தொட்டு கும்பிடுகிற பழக்கம் படிப்படியா குறைஞ்சு டீனேஜ் வர்றதுக்குள்ள போயே போயிடிச்சு.

டாப் ஐந்தில் அடுத்து வருவது...நம்ம கூச்ச சுபாவம். அது என்னமோ தெரியலை வெளிப் பெண்கள் முன் பனியன் மட்டும் அணிந்து கொண்டிருந்தால் கொஞ்சம் அதிகமாகவே கூச்சப்படுவேன். கையில்லா முண்டா பனியன் தான் போடுவேன். சில சமயம் கோவில்களில் எல்லார் முன்னும் சட்டையில்லாமல் கூட இருந்திருக்கிறேன் ஆனால் பனியன் அணிந்துவிட்டால் உடனே சட்டை அணியவேண்டும். அதாகப்பட்டது வெற்றுடம்போடு இருப்பதை விட பனியோடு இருந்தா கூச்சம் ஜாஸ்தியாகிவிடும். "ரொம்ப வெட்கமா இருந்தா பேசாம பனியனை கழட்டிவிடு"ன்னு வீட்டில் தங்கமணீயும் கசின்களும் நிறைய ஓட்டியிருக்கிறார்கள். ஒரு வேளை நமக்கு ஆர்னால்ட் பாடி (உடம்பைச் சொன்னேன்யா) என்பதால் இருக்கலாம். இப்போ கொஞ்சம் அந்தக் கூச்சம் போய்வருகிறது. இன்னும் முழுவதும் இல்லை. இந்த வாரம் இதற்கு ஒரு பரீட்சை இருக்கிறது பார்ப்போம்.

இது போல் சின்னவயதிலிருந்து ஒட்டிக் கொண்ட ஒரு விஷயம் பாயசத்தில் சேமியா போட்டால் சுத்தமாய் பிடிக்காது. தொடவே மாட்டேன். சின்ன வயதில் நான் புழு சாப்பிடுவேன் தெரியுமான்னு சேமியா பாயாசத்தை உதட்டில் வழிய சாப்பிட்டுக் காட்டிய நண்பன் ஒருவன் விட்ட புருடாவில் அந்த வெறுப்பு அப்பிடியே தங்கிவிட்டது. இன்னும் கண்டினியூ ஆகிக் கொண்டிருக்கிறது. அதுவும் சேமியா நிறைய போட்டு கெட்டியக இருந்தால் கேடகவே வேண்டாம். அது என்னம்மோ தெரியவில்லை ஹோட்டல் அளவு சாப்பாடிலிருந்து ஊரில் விருந்துக்கு கூப்பிடும் சொந்தக்காரர்கள்/தெரிந்தவர்கள் வீடு வரை அனைவரும் இந்த சேமியா பாயசம் தான் வைக்கிறார்கள். தஙகமணி உறவுக்கார வீட்டில் "இது அணில் சேமியா" என்று என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார்கள். அணிலாவது ஆட்டுக்குட்டியாவது...வாயில வைக்க முடியலை. வயிறெரிந்து கொண்டு தங்கமணி அன்ட் கோ சப்புக்கொட்டி சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

வியர்ட்டு இப்போதைக்கு அம்புட்டுத்தேன்...

விருப்பமுள்ள அனைவருக்கும் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

28 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விடுவேனா நான் ..நிக்கலையே

பயங்கர காமெடிங்க..

அப்புறம்...\\கொத்ஸ் தொல்லை தாங்கமுடியலை. தீக்க்ஷன்யா முன்னாடி ஒரு சங்கிலி பதிவுக்கு கூப்பிடிருந்தாங்க...அவுக நல்லவக..//

கொத்ஸ் ?/

B o o said...

நான் சிரிச்ச சிரிப்ப பார்த்து, என் பொண்ணு பயந்து போய் முழிக்க, எனக்கு இன்னும் சிரிப்ப அடக்கமுடியலை. அட்டகாச போஸ்ட்!
அது சரி, நூடுல்ஸ் சாப்பிடுவீங்களா? ;)

Balaji S Rajan said...

"அப்பிடியே டாப் கியருல போய்..யாராவது என்ன மிதிச்சுட்டு நான் அவங்கள தொட்டு கும்பிடாட்டா கஞ்சா கிடைக்காம கை காலெல்லாம் விலுக்கு விலுக்குன்னு இழுத்துக்கிற மாதிரி ஆகி விடும்...."

Renga... LOL O LOL... Oh... god imagined the scene. How it would have been if someone like Vadivelu had acted the scene. My goodness... I never take the risk of reading your post during office hours. The reason being is the sound I make out of laugh.. Today being the day before Easter holidays.. with a thin attendance I took the risk and the lonely gentleman opposite to my cubicle started looking at me... on seeing my shoulder shaking laugh after reading your post... that too the above lines made me to laugh so... this is a quite Weird thing... also if you happen to travel by electric train in Madras, you can see many slapping their cheek when the train passes some temple... Ha..ha... I cannot control my laughter on seeing such people especially when the train passes Pallavanthangal station people will do that at 2 or 3 places..

DesiGirl said...

ROFL!

இலவசக்கொத்தனார் said...

வாய்யா வா, வியர்டு எல்லாம் முடிஞ்சு அடுத்தது அழகு ஆரம்பிச்சாச்சி. இப்போ வந்து ஆற அமர போட்டா எப்படி? ஆனா போடவே போடாத பெனாத்தலுக்கு நீ பெட்டர்.

அது என்ன நான் படுத்தறேன் ஆனா தீக்ஷண்யா நல்லவங்க. இப்படி மகளிர் ஓட்டு வாங்கியே வாழ்க்கையை ஓட்டு.

சரி போட்டதுதான் போட்ட அது என்ன 5 போடாம மூணே மூணு? ரொம்ப வியர்டான ஆளய்யா நீரு.

சின்ன வயதில் எனக்கும் சேமியாப் பாயாசம் பிடிக்காது. ஆனா ஒரு ஸ்டேஜில் அதெல்லாம் தாண்டி வந்துட்டோமில்ல. இப்போ எல்லாம் கொஞ்சமாக் குடுத்தாதான் பிடிக்காது. கத்திரிக்காயைப் பார்த்தா மீன் மாதிரி இருக்குன்னு சாப்பிட அடம் பிடிச்சி இருப்பீரே. நானும் அப்படித்தான். ஹிஹி. அகெய்ன் அது அந்தக் காலம்.

அப்புறம் தொடணும் என்ற ஒரு காரணத்துக்காகவே காலை மிதித்த அம்மணிகள் பத்தி சொல்லவே இல்லையே. :)

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ் ?//

சொல்லுங்க முத்துலெட்சுமி. வாட் இஸ் தி பிராப்பளம்?

kuttichuvaru said...

soober appu!!

/ஒரு வேளை நமக்கு ஆர்னால்ட் பாடி (உடம்பைச் சொன்னேன்யா) என்பதால் இருக்கலாம்./

ithu thaan toppu!! ungalaala mattum thaan sir ipdi ezhutha mudiyum!!

Anonymous said...

Excellent dubukku..
I liked it very much.

CTS

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அது என்ன நான் படுத்தறேன் ஆனா தீக்ஷண்யா நல்லவங்க//

இதத்தான் கேட்டேன் :) சும்மா.

Anonymous said...

hehehe rotfl! enakku cauli flower paathale pidikkadhu! appo noodles sapida maatingla?? :)

-porkodi

sriram said...

Pretty Good Post Dubuks, Lahe Raho weird stuff Kab Ayega? (part II)
Arnold Body ???? - Srilankan Cricket Russel Arnold madhiri thane? Arnold Swaznegar madhirinnu sollalannu ninaikkiren......
Endrum Anbudan...Sriram

Syam said...

//நான் மிதிச்சேன்னா மட்டும் இல்ல யாராவது என்ன தெரியாம மிதிச்சுட்டாலும் நான் அவங்கள தொட்டு கும்பிடுவேன்//

ஏம்ப்பு இம்புட்டு நல்லவனா நீங்க....

மீதி ரெண்டு கொஸ்டின சாய்ஸ்ல விட்டுட்டீகளா....:-)

Anonymous said...

anna, en room la irukkravanga ellarum enna paithiyamnu sonnaanga na......


appram avangalayum padikka Sonnaen....
Pakkathu veetukaaranga ellarum ooadi vanthuttanga......

kalidasan
Nellai

Chakra said...

சூப்பர் போஸ்ட்.

உன்னோட வியர்ட்னஸ் பத்தி என் கிட்ட கேட்டிருந்தா நான் நிறைய சொல்லி இருப்பேனே! :-))

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

ஆமா, நன்ன் கூட இந்த வியர்டு பத்தி ரொம்ப யோசிச்சேன். அப்பறமா ஏதோ ஒரு வழியா முடிச்சுட்டேன்ல..

ஆஹா, இனிமே இந்த புழு சே ... சேமியா பாயசம் பண்ணினா உங்களத் தான் நினைச்சுப்பேன். எனக்கு கூட இந்த மேனியா ரவைல உண்டு. ஒரு தடவை ரவைல புழுவப் பாத்துட்டு அதிலருந்து ரவை உப்புமா னாலே ஒரு அலர்ஜி.. தொடவே மாட்டேன்.

அது சரி மீதி 2 சாய்ஸ் என்னாச்சு?

ambi said...

//"ரொம்ப வெட்கமா இருந்தா பேசாம பனியனை கழட்டிவிடு"ன்னு வீட்டில் தங்கமணீயும் கசின்களும் நிறைய ஓட்டியிருக்கிறார்கள். ஒரு வேளை நமக்கு ஆர்னால்ட் பாடி (உடம்பைச் சொன்னேன்யா) என்பதால் இருக்கலாம்.//

ROTFL :) நாங்க ஓட்டினத நினைச்சு பார்த்தேன்! சிரிப்பு அடக்க முடியலை. கலாசல் பதிவு.

Anonymous said...

சின்ன வயசுல (இப்ப மட்டும் என்னவாம்..!) கிரிக்கெட் விளையாடும் போது ஒவர் முடிஞ்சி ரெண்டு பேட்ஸ்மென்னும் பிட்ச்சுல கிராஸ் பன்னும் போது பேட்டால 'டங்'னு தட்டிப்போம். இன்னிக்கும் அது எதனாலன்னு தெரியாது. போன வருஷம் ஊருக்குப் போன போது பார்த்தா நம்ம பாசக்கார பொடிப் பயலுக இன்னமும் அதே மாதிரி 'டங்'னு பேட்டால தட்டிகிறாங்க. கேட்டா..பாரம்பரியத்த விடாம கட்டிக் காக்கிறாங்கலாம்...எதனாலங்ண்ணா அப்படி செய்றாங்க?

Ms Congeniality said...

Adhenna label chain thirutu?
ROTFL at the post :D
semiya paayasam pudikaama neriyaa per paathurken and adhuku oru flashback vera..hee hee hee
same doubt I too have as porkodi..noodles pudikuma?

[ 'b u s p a s s' ] said...

மீதி ரெண்டு ஐயிட்டத்த சக்ரா'கிட்ட கேக்கனும் போல...

//வெளிப் பெண்கள் முன் பனியன் மட்டும் அணிந்து கொண்டிருந்தால் //

பனியன் மட்டுமா? வில்லங்கமான ஆளா இருக்கீங்களே!

Anonymous said...

:-))

கார்த்திக்,
சிங்கை.

dubukudisciple said...

guruve!!
super padivu as usual
kalakunga

MSV Muthu said...

//அவங்க அப்பாவும் என்ன மாதிரி தொட்டு கும்பிடற பாலிஸி வைச்சிருந்தார் போல...கொஞ்ச நேரம் தொடர்ந்து தொரத்திக்கிட்டு வந்தார். ஆனா அவரு பாலிஸி நம்மள மாதிரி ஸ்ட்ராங்கா இல்லாததுனால அப்புறம் திரும்ப ஜூஸ் குடிக்கப் போயிட்டார்
//

LOL!! :) :)

Unknown said...

Yov Thaikulathukku indha matter theriyuma?? London pooravume...ponnunga baniyan pottikinu thaan suthumame... appo office ellam poga matteenga.. koochathoda veetliye iruppeenga..adha naanga nambanum...Thangamani akka.. andha oorla nalla thodapakatta kadaikkellenna sollunga I will send it across..

(Thala... Tamizhla oru chinna vaarthaya vittutaalum adhu meaninga totally maathidum..

but if it were "Veli pengalIN mun baniyan mattum anindhu kondirundhaal konjam adhigamagave koochapaduven" pengal pakkthula oru IN podadhadhala eppadi meaning maarudhu paathiya thala..

enakkennova neeru intentionalaa thaan potturukeerunnu nenaikken...

Thala Semiya payasam kooda oralavukku sethukkalaam but k.. noodles thaan adha thathroobama kaattum...puzhu...

Unknown said...

missed comments added :-))

Adhu eppadi??

Veli pengal mun baniyan mattum anindhu kondirundhaal konjam adhigamagave koochapaduven"
Idhellam romba over L(J)ollu aama...veli Ponnunga mun baniyan potta ungalukku koochamayidum..appadithaane....

Yov Thaikulathukku indha matter theriyuma?? London pooravume...ponnunga baniyan pottikinu thaan suthumame... appo office ellam poga matteenga.. koochathoda veetliye iruppeenga..adha naanga nambanum...Thangamani akka.. andha oorla nalla thodapakatta kadaikkellenna sollunga I will send it across..

(Thala... Tamizhla oru chinna vaarthaya vittutaalum adhu meaninga totally maathidum..

but if it were "Veli pengalIN mun baniyan mattum anindhu kondirundhaal konjam adhigamagave koochapaduven" pengal pakkthula oru IN podadhadhala eppadi meaning maarudhu paathiya thala..

enakkennova neeru intentionalaa thaan potturukeerunnu nenaikken...

Thala Semiya payasam kooda oralavukku sethukkalaam but .. noodles thaan adha thathroobama kaattum...puzhukooda konjam azhaga irukkum

Dubukku said...

முத்துலெட்டுமி - நன்றிங்க. கொத்ஸப் பற்றி நான் சொல்லனுமா இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே? :P

Boo - நன்றிங்க. ஹி ஹீ நூடுல்ஸும் ஆரம்பத்துல சாப்பிடாம இருந்தேன். மேக்கி, சிங்கப்பூர் நூடுல்ஸ் சாப்பிட்டு இப்போ பழக்கமாயிடிச்சு.

Balaji - வாங்க பாலாஜி. எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளா கால் பண்ணனும்ன்னு நினைச்சிக்கிட்டே இருக்கேன். ரொம்ப நன்றிங்க உங்க ஊக்கத்துக்கு. ஆமாங்க நானும் பார்த்திருக்கேன்..எனக்கும் இந்தப் பழக்கம் சின்ன வயசுல இருந்திருக்கு :))

DesiGirl - வாங்க மேடம். ரொம்ப நன்றி.


இலவசக்கொத்தனார் - அது!! கத்திரிக்காய் இங்கயும் சேம் ப்ளட். என்னாது தொடனும்னு நினைச்சு காலை மிதிச்சேனா...உம்ம புத்திய சொல்லனும்...உமக்கும் தெரிஞ்சு போச்சா ஹி ஹி

kuttichuvaru - வாங்க சார். ரொம்ப நன்றி. இன்னமுமா நம்பள ஊர்ல நம்பிக்கிட்டு திரியறானுக?? :))

Dubukku said...

CTS - ரொம்ப நன்றி

Porkodi - நூடுல்ஸ் இப்போ பழக்கம் ஆகிடிச்சு. காலிப்ளவர் சில மாதிரி பண்ணினா பிடிக்காது...ட்ரை ப்ரை மட்டும் தான் பிடிக்கும் :))

Sriram -நன்றி தல.ஆமாம் அவரே தான் இருந்தாலும் ரொம்ப ஓவர் குசும்பு...உங்களுக்கு :)

Syam - வாங்க நாட்டமை. நமபள நீங்க மட்டும் தான் புரிஞ்சிகிட்டு இருகீங்க..
ஆமா மீதி ரெண்டும் சாய்ஸ்ல விட்டாச்சி. எல்லா கொஸ்டினுக்கும் பதில் தெரிஞ்சிருந்தா தான் இன்னிக்கு ஜனாதிபதி ஆகியிருப்பேன்ல...என்னா நான் சொல்றது

Kalidasan - ஏங்க உண்மையாத் தான் சொல்றீங்களா?.. ரொம்ப நன்றிங்க

Chakra - டேங்க்ஸ் மேட். சரி சரி அடக்கி வாசி :)

Dubukku said...

Sumathi - ஹீ ஹீ ரொம்ப நன்றிங்க. ஆனா பழிவாங்கிடாதீங்க. ரவை எனக்கு பிடிக்கும் பிரச்சனையில்ல. ஒருதரம் பச்சை அரிசில புழு பார்த்துட்டு ஒரு காலத்துல சாதத்தை நோண்டி நோண்டி பார்த்திகிட்டு இருந்தேன். :)

Ambi - அந்த சோப்பு மேட்டர வைச்சு உண்ண கொஞ்ச நாள் மிரட்டலாம்னு இருந்தேன். ஆனா நீயே போட்டுட்டியே சே...

dagulmama - ரொம்ப கரெக்ட்...நானும் இதப் செஞ்சிருக்கேன். இதுல செண்டிலாம் வேற...தட்டலேன்னா அவுட் ஆகிடுவோம்ன்னு :)

Ms.C - சும்மா தான் செயின் திருட்டு. நன்றி ஹை. நூடுல்ஸ்..ஓகே...எம்மா பழிவாங்கிராதீங்க..சேமியா பாயசம் வைச்சு..

Buspass - யோவ் வரிக்கு நடுவுல படிக்காதீங்கைய்யா...நான் ரெம்ப நல்லவன்யா :))

Dubukku said...

கார்த்திக் - :))

DubukkuDisciple - வாங்க..நன்றி

Muthu - :)) வாங்க..வருகைக்கு நன்றி.

Ramachandran - வாய்யா ராம்ஸ்...கண்ணுல எண்ணைய ஊத்திக்கிட்டு படிப்பீங்களா?? இமேஜ்ஜ டேமேஜ் செய்யறதுக்கினே கிளம்பியிருகாங்கய்யா...இதுல குடும்பத்துல குழப்பத்த வேற உண்டு பண்றாங்க...ரொம்ப நன்றி ஹை :)))


Uma - ஒருதரம் தெரியாம ஒரு வெள்ளைக்காரன தொட்டு கும்பிட்டுட்டேன்..அவன் என்னன்னு கேட்க ஒரு வழியா சமாளிச்சுட்டேன். :))

Post a Comment

Related Posts