Wednesday, August 30, 2006

பம்பாய்

பம்பாய் என்றால் எனக்கு காலேஜ் படிக்கும் காலத்தில் மனீஷா கொய்ராலா தான் நியாபகத்துக்கு வருவார். அப்புறம் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்ததபோது (பம்பாயை) பயம், ஆச்சரியம், திகைப்பு, குதூகலம் எல்லாம் கலந்த கலவையான உணர்ச்சி தான் வந்தது. பம்பாய் இன்னமும் அதே மாயா லோகமாகத் தான் இருக்கிறது. நம் ஊர்களில் கக்கூஸ் கட்டக் கூட போதுமா என்று யோசிக்கும் இடத்தில், அட்டாச்ட் பாத்ரூமுடன் ஹால் கட்டி குடித்தனம் போய், கையை தட்டிக்கொண்டு பஜனை செய்து தீபாராதனை காட்டி பிரசாதம் குடுக்கிறார்கள். என்ன தான் விண்ணை முட்டும் கட்டிடங்கள், சிக்கனமாக உடையணிந்த பெண்கள், சீட்டுக் கட்டு மாதிரி பணம் புரளும் இடமாயிருந்தாலும் ஓரமாய் சாக்கடையும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

பம்பாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாய் இருக்கிறது. பள பளவென்று எந்த நாட்டிலும் பார்க்காத சர்வீஸுட்ன் பட்டயக் கிளப்புகிறார்கள். இமிகிரேஷன் கவுண்டரில் நிற்கும் போதே எங்கேயிருக்கிறது என்று தெரியாத கேமிராவால் படம் பிடித்துவிடுகிறார்கள். எனக்கு பயங்கர பெருமிதம். பின்னால் நின்று கொண்டிருந்த வெள்ளக்கார மொட்டைய தலையில் தட்டி "டேய் மொட்டை பார்த்தியா எங்க ஊர?" என்று சொல்லவேண்டும் போல இருந்தது. "சூப்பர் சர்வீஸ்..கலக்குறீங்க " என்று ஆபிஸர்களிடம் பாராட்டிவிட்டு வந்தேன்.

தங்கமணி முன்னால் ஆட்டோகாரரிடம் தெரிந்த அரைகுறை ஹிந்தியை வைத்துக் கொண்டு பந்தா விட்டதில் கடுப்பாகிவிட்டார் மனுஷன். கடைசியில் எவ்வளவாச்சு என்று சூப்பர் பந்தாவாக கேட்க இருபத்தெட்டு ரூபாய்க்கு ஹிந்தியில் ஏதோ சொன்னார். எனக்கு படிக்கும் போது ஹிந்தி மாமி சொல்லிக்கொடுத்ததெல்லாம் மறந்து போய், மாதுரி தீட்ஷித் "ஏக் தோ தீன்" பாட்டில் சொல்லிக்கொடுத்த பதிமூன்று வரை தான் மண்டையில் நின்றது. அப்புறம் கேவலமாக சமாளித்து அதுவும் வழக்கம் போல் ப்ளாப் ஆகி ஹிந்தியில் "அற்பப் பதரே" எப்படி சொல்வாரகள் என்று தெரிந்து கொண்டுவந்தேன்.

அக்கா பையன் "ஞாயிற்றுக் கிழமைகளில் ட்ரெயினில் கூட்டமே இருக்காது படுத்துக் கொண்டு போகலாம்" என்று சொன்னதை நம்பி ஏமாந்து எலெக்ட்ரிக் ட்ரெயினில் சி.எஸ்.டி போய் ரோட்டுக் கடைகளைப் பார்த்து வந்தேன். ட்ரெயினில் வடநாட்டு கதாநாயகி மாதிரி என்னை கசக்கி பிழிந்துவிட்டார்கள். அரைகுறை ஹிந்தியில் ரோட்டோர டி.வி.டி கடைகளில் வாங்கிய அனுபவம் அலாதியானது. முக்கால் வாசி கடையில் பர்மா பஜார் மாதிரி 'அத வாங்கிக்கோ இத வாங்கிக்கோ என்று ஒரே படுத்தல். ஒரு கடையில் மிக்கி மவுஸ் கலெக்க்ஷனை வாங்கி செல்லும் படி ரொம்பப் படுத்த "இந்தக் கலெக்க்ஷன் எங்க வீட்டுல நிறைய இருக்கு " என்று அக்கா பையன் அழகாக சமாளித்துவிட்டான். நான் தான் கற்பூரமாச்சே உடனே அதே டெக்னிக்கைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நமக்கு என்று வந்து சேர்வார்களே..அடுத்த கடையில் ஒரு மூதேவி என்னைப் பார்த்து என்ன நினைத்தானோ தெரியவில்லை குசுகுசுவென்று அதுவேண்டுமா இது வேண்டுமா என்று புரியாத ஸ்லாங்கில் கேட்டான். நானும் மிக்கி மவுஸ் தான் என்று நினைத்துக் கொண்டு வழக்கம் போல "அந்த கலெக்க்ஷன் எல்லாம் நிறைய இருக்குப்பா..பார்த்துப் பார்த்து போர் அடிச்சாச்சு" என்று மானே தேனே போட்டு சொல்ல...கடைக்காரனும் அக்கா பையனும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த மூதேவி உடையில்லாமல் நடிக்கும் முழு நீல வண்ணப்படம் வேண்டுமா என்று கேட்டானாம். "போங்கடா நீங்களும் உங்க ஹிந்தியும்" என்று வந்துவிடேன்.

பாவ் பாஜி, பேல் பூரி, ரகடா பேட்டிஸ், சிக்கு மில்க் ஷேக் என்று சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்கியதில் கார்க் புடுங்கிக் கொள்ளும் படலம் பம்பாயிலிருந்து ஆரம்பித்தது. மழைவேறு. பம்பாயே மிதக்கிற மாதிரி இருந்தது. அதிலும் "சலோ பாய், சலோ பாய்" என்று மும்பைகர்கள் ஓடத் தான் செய்கிறார்கள். வேகமாக ஹிந்தி பேசுகிறார்கள். "ஹிந்தி தெரியாது" என்றால் இன்னும் அதிவேகமாக ஹிந்தியில் பேசுகிறார்கள். பம்பாயில் விலைவாசி எகிறிவிட்டது என்று தோன்றியது. ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கு வாழ்நாளில் இதுவரை குடித்திராத அருமையான டீ கொடுத்தார்கள்.

வரும் போது இரண்டு நாள் ஹோட்டல் வாசம். வேளா வேளைக்கு ஏசியைப் போட்டுக்கொண்டு தூங்குவது. சாப்பாடு, டிபன் என்று மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்வது. இருக்கிற இடத்தை விட்டு நகராமல் சாப்பிடுவது, போர் அடித்தால் ஊர் சுற்றுவது என்று திவ்யமாக நேரம் போனதே தெரியவில்லை. வழக்கமாய் அங்காலாய்க்கும் "பேசாமல் நல்ல ஏரோப்பிளேன் கம்பெனி முதலாளி பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்கலாம்" என்ற டயலாக்கில் ஏரோப்பிளேன் காரனை தூக்கி விட்டு ஹோட்டல்காரன் பொண்ணுக்கு மாறிவிட்டேன். தங்கமணியும் " கடவுளே அடுத்த ஜென்மத்தில் ஏரோப்ப்ளேன்காரன் பொண்ணா மட்டும் பிறக்கக் கூடாது" என்ற டயலாக்கை ஹோட்டல்காரனுக்கு மாற்றிவிட்டார்.

39 comments:

Karthikeyan said...

:)

இலவசக்கொத்தனார் said...

// தங்கமணியும் " கடவுளே அடுத்த ஜென்மத்தில் ஏரோப்ப்ளேன்காரன் பொண்ணா மட்டும் பிறக்கக் கூடாது" என்ற டயலாக்கை ஹோட்டல்காரனுக்கு மாற்றிவிட்டார்.//

விடறதா இல்லை! :D

ambi said...

//நம் ஊர்களில் கக்கூஸ் கட்டக் கூட போதுமா என்று யோசிக்கும் இடத்தில், அட்டாச்ட் பாத்ரூமுடன் ஹால் கட்டி குடித்தனம் போய், கையை தட்டிக்கொண்டு பஜனை செய்து தீபாராதனை காட்டி பிரசாதம் குடுக்கிறார்கள்.//
ஹி, ஹி, ஒரு டவுட்டு! ககூஸ்ல எதுக்கு பிரசாதம் குடுக்கறா?
//முப்பது ரூபாய்க்கு வாழ்நாளில் இதுவரை குடித்திராத அருமையான டீ கொடுத்தார்கள்.

மன்னி, Pls note the point your honor! நான் வாங்கி குடுத்த பூரி கட்டை வேலை செய்யுதா?னு செக் செய்யவும்.

Udhayakumar said...

தமிழ்மணத்துல உங்களை முதல் முறையா பார்க்கிறேன்.

ஊர்ப் பெருமை தாங்க முடியலை.... திருநெல்வேலி, அம்பா சமுத்திரம் தானே அடுத்தது???

வெளிகண்ட நாதர் said...

உங்கள் பம்பாய் அனுபவம் படிக்க சுவையா இருக்கு!

//பம்பாயில் விலைவாசி எகிறிவிட்டது என்று தோன்றியது. ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கு வாழ்நாளில் இதுவரை குடித்திராத அருமையான டீ கொடுத்தார்கள்.//நானும் அப்படித்தான் நினைத்தேன் இம்முறை டில்லி சென்றபொழுது, சாகர் ரத்னா, நம்ம ஊரு ரத்னா கபே மாதிரி தான், ஆனா, ரவா தோசை என்ன யானை விலையால இருக்கு!

Anonymous said...

aha na free aga chennai to bombay pona madiri iruku,ana prasadam kodutha matter engo idikarathu
chennaimami

kuttichuvaru said...

வழக்கம் போல பட்டையை கிளப்பி இருக்கீங்க!! நகைச்சுவை பதிவு முழுவதும் அருமையா இருக்கு!!

Anonymous said...

:)

Anonymous said...

aha.. besh besh romba nannairukku.. neenga cd kadaila asadu vazhinjada paarka mudiyalaye saami, oru velai idhuku peer than "DUBUKU" vo?

கைப்புள்ள said...

நேத்து தாங்க மும்பையிலிருந்து வந்தேன். அங்க இருந்த மூணு வாரமும் செமை மழை. இன்னும் விட்டபாடில்லை.

//"ஹிந்தி தெரியாது" என்றால் இன்னும் அதிவேகமாக ஹிந்தியில் பேசுகிறார்கள்.//
அது என்னமோ வாஸ்தவம் தாங்க. நமக்குத் தான் ஓரளவுக்கு இந்தி தெரியுமேன்னு பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்த ஒருத்தன் கிட்ட "மாதுங்காக்கு போக என்ன நம்பர் பஸ்"னு இந்தில கேட்டேன். அதுக்கு அந்த ஆளு "குட்டே" அப்படின்னு மராட்டில பதில் கேள்வி கேக்குறான். அதுனால இந்தி தெரிஞ்சாலும் ஆப்பு வக்கிறதுக்கு கரெக்டா அங்கங்கே ஆளு இருக்காங்கோ. உங்களுக்குப் புரியாத மொழியில பேசனும்னு அங்கே ரூல் இருக்கோ என்னவோ? மத்தபடி உங்க வர்ணனை எல்லாம் அருமை. மும்பை டொமெஸ்டிக் ஏர்போர்ட்டைப் பாத்தீங்களா...அதுவும் வெள்ளைக்கார மொட்டைங்களுக்குக் காட்டி பெருமை படற அளவுக்கு வந்துட்டிருக்கு.
:)

கைப்புள்ள said...

//தங்கமணியும் " கடவுளே அடுத்த ஜென்மத்தில் ஏரோப்ப்ளேன்காரன் பொண்ணா மட்டும் பிறக்கக் கூடாது" என்ற டயலாக்கை ஹோட்டல்காரனுக்கு மாற்றிவிட்டார்.//

சான்சே இல்லீங்க. உங்க நகைச்சுவை உணர்வு அவங்களையும் தாக்கிடுச்சு போல.
:))))

Anonymous said...

antha moolu neela padatha vngineengala elliya :)

Deekshanya said...

Thangamani -fan club arambikalamnu ninaikirain nan! Chancey illa -avanga ungaluku kodukura reaction... You've got that knack of writing blogs filled with humour! Nice! keep writing!

நெல்லைக் கிறுக்கன் said...

மனீசா கொய்ராலா, மாதுரி தீட்சித்துன்னு எல்லா பாட்டிகளயும் இன்னும் மறக்காம இருக்கீரே.

பம்பாய் ஏர்போட்ட பத்தி நீரு சொல்லுதப்போ கொஞ்சம் பெங்களுர் ஏர்போட்ட நெனச்சுப் பாத்தேன்.. படு கேவலமா இருக்கு. தப்பித் தவறிக் கூட பெங்களுர் இண்டர்நேசனல் ஏர்போட்டுக்கு வந்திராதீரும் வே வாழ்க்கய வெறுத்துருவிரு...

Syam said...

ஏங்க மனீசா கொய்ராலாவ பத்தி எழுதுவீங்க்ன்னு பார்த்தா இப்பிடி ஏமாத்திட்டீங்களே.... :-)

Anonymous said...

I agree with you regarding Bombay airport The service is good.

I too had similar experiences during my 2 years stay in Mumbai.

U and ur Thangamani have a good sense of Humor. Funny Blog sirichu sirichu vairu valikuthu pa :)))

Dubukku said...

Karthik- :)

இலவசக்கொத்தனார்- ஹுகும்..இல்லை :)

ambi - தம்பியுடையான் ....நம்ப கேஸ் ...ஹும்...

Udhayakumar - //தமிழ்மணத்துல உங்களை முதல் முறையா பார்க்கிறேன்//

இதென்ன கூத்து ...பழைய தமிழ்மணம் தொட்டு இருக்கிறேன் ஐய்யா...

அடுத்து ஆமா அதான் வேறென்ன... :))

Dubukku said...

வெளிகண்ட நாதர் - நன்றி. அட ஆமாங்க...ஒரு ஊத்தப்பத்துக்கு நூறு ரூபாய்க்கு மேல கேக்கறாங்க

Chennaimami - ada vanga vanga...(aama neenga enakku therinja maamiya? . Prasadam kudutha matter idikaratha?? yen??

kuttichuvaru - நன்றிங்க. உங்க பின்னூட்டம் ஊக்கமளிப்பதாக இருக்கிறது. நன்றி.

WA - :) (ippidiyellam op adikka koodathu commentla)

Dubukku said...

sumathi - hehe asadellam vazhiyala...(ippidi than sollikarathu) . yenga ippidi varareenga? :)

கைப்புள்ள- அப்போ ஹிந்தி பிச்சு உதறுவீங்கன்னு சொல்லுங்க..டொமெஸ்டிக்கும் நல்லா இருக்கு. ஓகோ இன்னமும் மழை விட்ட பாடில்லையா? அப்போ ஹிந்தி பிச்சு உதறுவீங்கன்னு சொல்லுங்க..டொமெஸ்டிக்கும் நல்லா இருக்கு. ஓகோ இன்னமும் மழை விட்ட பாடில்லையா? தங்கமணி நன்றி சொன்னாங்க...(இந்த தெம்புலயே என்ன இனிமே ரொம்ப ஓட்ட ஆரம்பிச்சிடுவாங்க)

Dubukku said...

anonymous - ada correcta pointla nikkireengale... illanga...vangala (unmaiyanga)

Deekshanya - வாங்க வாங்க...உங்க கமெண்ட பார்த்ததுலேர்ந்து நேத்திக்கு பூராவும் தங்கமணி வீட்டுல பூஸ்டே குடிக்கல...அவ்வளவு ஸ்ட்ராங்க இருந்தது உங்க கமெண்ட்...நன்றி சொல்லச் சொன்னாங்க:)

நெல்லைகிறுக்கன் - வயசானவங்களை கவுரவப் படுத்தறது தானே நம்மள மாதிரி இளவட்டங்களுக்கு நல்லது, அதான்.இது வரைக்கும் பெங்களூர் போனதே இல்லீங்க...

Dubukku said...

Syam - மணீஷா பாட்டிய மேல அவ்வளவு பாசமா உங்களுக்கு?? :P ச்சோ...ச்சோ...

Arvind - danks a lot from me and thangamani :). Your comments are very encouraging.

Guru Prasath said...

Back to form.

Anonymous said...

You have a superb sense of humour. I have read through some of your previous posts. I believe it is in the blood... wit comes naturally to people from TNV side. I don't read Tamil that fast... have to yezhuthu kootti kootti read... but have enjoyed immensely. Thank you. Warm regards.

தி. ரா. ச.(T.R.C.) said...

இப்போதானே புரியுது அம்பிக்கு எப்படி இந்த அளவுக்காவது நகைச்சுவை உணர்ச்சி இருக்குது.எல்லாம் அண்ணன் காட்டிய வழி.பம்பாய் பதிவு அருமை.

Mouli said...

தலைவா டுபுக்கு! உங்கள் ப்ளாக் சூப்பர். கலக்குறீங்க. நான் சமீபமாகத்தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். என் தமிழ்ப் பதிவுகளை இங்கு படிக்கலாம்.

Prasanna Parameswaran said...

தங்கள் பதிவு முழுவதும் நகைச்சுவை இழைந்தோடுகிறது! தொடர்ந்து உளருங்கள் மன்னிக்கனும் எழுதுங்கள்! :)

நாமக்கல் சிபி said...

I dont have access to Orkut From office...

U can search for Communities that u wish to join. There will be communities for each and everything (say for eg Thirunelveli...)

You can explore it yourself easily...

With Regards,
Balaji

Paavai said...

eppadithaan varudhu inda madiri karpanai - mudal sentence leye - oru ettu parthuttu vanden ... sirichu sirichu vayiru valikkudu

Jeevan said...

Sireppu varuthu Sireppu varuthu dubukku bloga padikka padikka Sireppu varuthu.....

Mumbaina ippa neyapagam varathu vedigundum mazhaium thaan. மொட்டைய தலையில் தட்டி "டேய் மொட்டை பார்த்தியா எங்க ஊர?" :)) nee mattum thatti irukanuma appa tharium mumbai Airport police addi:)) unnodaiya shopping super O super.

நாமக்கல் சிபி said...

தலைவா,
உங்க அடுத்த பதிவுக்காக வெயிட்டீங் ;)

அப்படியே ஒரு லிப்ட் கதை ரெடி பண்றது...

(வேணும்னா சொல்லுங்க கள்ள ஓட்டுக்கு ஆள் ரெடி பண்ணிடலாம் ;))

Anonymous said...

I think everyone have encountered the language miscommunication(theriyama olaradhu) comedies..Goood one :)
Your site become master entertainer...whenever I feel dull, I'll come and have laugh at site. Onga thambi iruthar inga movie reviews potrukar paarunga..http://www.lolluexpress.com/

Anonymous said...

தல மாத்து தல

Deekshanya said...

Eagerly waiting for your next post.. wake up!

EarthlyTraveler said...

your post has brought out our "malarum ninaivugal".your sense of humour is too good.Unga Thangamanikum.:D eppdi ippdi yellam thonudhu?dhool!

Annan,Thambi potti pottu kalakureenga.Avar vangi kodutha poori kattai avarukke manni use pannida poranga.

Enjoyed reading.--SKM

Dubukku said...

Guru prasath - danks :)

Suresh - danks very much. hehe ennamo solreenga ketukaren. TNV pathi arumaiya solli irukeenga athukke oru Ohhh podalam :))

T.R.C - மிக்க நன்றி. பெரியவங்களெல்லாம் வந்து போறது மகிழ்ச்சியாக இருக்கிறது :)
(தம்பி...நம்ம கான்டிரிபியூஷன் ஒன்னும் இல்லீங்க...எல்லாம் அவன் திறமை தான் :))

mouli - மிக்க நன்றி.கூடிய சீக்கிரம் வந்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

Dubukku said...

Guru prasath - danks :)

Suresh - danks very much. hehe ennamo solreenga ketukaren. TNV pathi arumaiya solli irukeenga athukke oru Ohhh podalam :))

T.R.C - மிக்க நன்றி. பெரியவங்களெல்லாம் வந்து போறது மகிழ்ச்சியாக இருக்கிறது :)
(தம்பி...நம்ம கான்டிரிபியூஷன் ஒன்னும் இல்லீங்க...எல்லாம் அவன் திறமை தான் :))

mouli - மிக்க நன்றி.கூடிய சீக்கிரம் வந்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

Dubukku said...

Indianangel - நன்றி. தொடர்ந்து உளறுகிறேன் :)

UmaKrishna - ohhh ippo poi parunga soopera irukku. Mumbai poi hotel - athu oru periya kathai will update you in person

வெட்டிப்பயல்- ரொம்ப டேங்க்ஸ்...முதல்ல "உன்னால் முடியும் தம்பி" கம்யூனிட்டில சேர்ந்துட்டோம்ல :)))))

Paavai - danks. appideengreenga? seri seri ketukkaren :))

Jeevan - hehe danks mate. Ama baashai theriyama vasama maatikkitten

Dubukku said...

வெட்டிப்பயல் - ஆபிஸில் பெண்ட நிமித்திட்டாங்க...அங்க இங்க நகர முடியல..அதான். சாரி தல. தேன்கூடு - அடபோங்க..நமக்கு அங்க வொட்டே தேறமாட்டேங்குது :))

Anonymous1 - danks for the encouraging comments. Lolluexpress (thambiyaa??) :))

anonymous2 - சாரி தல ஆபிஸில் பெண்ட நிமித்திட்டாங்க...அதான் ...இப்போ மாத்தியாச்சு :)

Dubukku said...

Deekshanya - danks. Just posted. Was very hectic on the office and personal front athan.

Sandai Kozhi - danks for dropping by. Unga perla irukkara padam enakku romba special.
Ambi - amamaa...oru naal naane andha poori kattaiya use panna poren..vaanga poran :))

Post a Comment

Related Posts