Tuesday, February 14, 2006

அன்புள்ள காதலிக்கு

அன்புள்ள காதலிக்கு,
இன்றைக்கு காதலர் தினம். வருடத்தில் இந்த நாளுக்காத் தானே நான் காத்திருந்தேன். எல்லா நாட்களும் பொங்கல் வைத்தாலும் பொங்கல் அன்று வைக்கும் பொங்கலுக்கு தனிச் சுவை அல்லவா? எல்லா நாட்களுமே உன் நினைவு தான் என்றாலும் இன்று காதலைச் சொல்லுவதில் காதலுக்கே தனி சுகம் அல்லவா? நம் காதல் காலத்தால் அழியாதது, சரித்திரங்கள் அறியாதது. மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே கரும்பே தேனே - இளங்கோ முந்திக்கொண்டான், காவியம் படைத்திருப்பேன் இந்நாளில். இருந்தாலும் காவியமெல்லாம் கால் காசு பெறுமோ உன் கடைக்கண் பார்வைக்கு?

காதலராய் ஆவதற்கே மண்ணில் மாதவம் செய்திட வேண்டுமென்றால் அதுவும் நம்மைப் போன்ற காதலாரய் ஆவதற்க்கு கேட்கவும் வேண்டுமோ? என்ன பரிசு தருவேனடி உனக்கு. பெண்ணே பொன்னைத் தருவேனா..மண்ணைத் தருவேனா...இல்லை என்னைத் தருவேனா...ஓ நானே என்வசம் இல்லையடி...ஒருவேளை உனக்கே உன்னைத் தருவேனா...எதைத் தருவேனடி அன்பே எதைத் தருவேன்...

(அன்பே, இந்த முறை வேலன்டைன்ஸ் டே வாழ்த்து அனுப்ப கொஞ்சம் லேட்டாகிவிட்டது. நீ கோவித்துக் கொள்ளக் கூடாதே என்று இந்த லெட்டரை பாதியில் அனுப்புகிறேன்...காண்டினுக்க்கு லேட்டாகிவிட்டது. ரொம்ப லேட்டாப் போனால் வறண்ட இட்லி தான் கிடைக்கும் கெட்டி சட்னி கிடைக்காது அப்புறம் எனக்கு இன்றைக்கெல்லாம் பேஜாராகி விடும் அதனால் வந்து மிச்சத்தைப் பூர்த்தி செய்கிறேன்)

- உனக்காக எதையும் கொடுக்குத் தயாராக இருக்கும் உன் ஆருயிர்க் காதலன்

19 comments:

யாத்ரீகன் said...

ஹாஹாஹா :-))) பூவுக்கே பூக்களானு நான் இன்னைக்கு ஜீட் விட்ட மாதிரி இருக்குது, கலக்கிட்டீங்க டுபுக்ஸ்..

பி.கு: எல்லாம் சரி, இன்னைக்கு வீட்ல சொல்லீட்டு வந்துட்டீங்களா ? இது வெறும் டமாசுனு ;-) பாத்துங்க, அப்புறம் வறண்ட இட்லி கூட கிடைக்காது...

sonypsp said...

Yenna Mr. Dubukkku,

Is this you wrote today or written some years back when you are a bachelor ?

By the way, whoz the 'Kaathali'? or somethink like 'Autograph' type...

I leave it to you...

I don't want you to get 'Poori Kaati' special from Thangamani

:)
Raam Kumar

[ 'b u s p a s s' ] said...

"இளங்கோ முந்திக்கொண்டான்... "

யாரிவரு? Blog படிக்கிறவரா?

பாத்துங்க... டமில் குடிதாங்கி கட்சியில டின்னு கட்டியிற போறாங்க..

ஆனாலும் லெட்டர டப்பா அடிச்சி வச்சிகிறேன்... பின்னாடி உதவும்!!

Anonymous said...

maruthuvar tamil kudithaangi payam illama pochu...
subbu,

இராமச்சந்திரன் said...

என்னவொரு ஆச்சரியம். ரெண்டு பேரும் ஒன்னு போல அச்சுல வார்த்த மாதிரி லெட்டர் (மடல்) தயாரிச்சு வெச்சிருக்கோம் (ofcourse வேற வேற ஆளுக்குதான்). நீங்க போஸ்ட் பண்ணீட்டீங்க. நான் பண்ணலை (ஹீ...ஹீ... ப்ளாக்-ல தான்).

Anonymous said...

Mushyyy...

Ps: I watch tamil movies also but I'm always backdated. This year latest releases I watch two years later... sigh.

Usha said...

aha touch panniteenga. Ippo purinjadu - amara kadal na ennanu!!

Anonymous said...

:))))))) sooper

Kumari said...

Wow!
But the best was the irony at the end....ellam kudukka ready-a irukkara kaadhalan, ketti chutney-a vittu kudukkala? :D

Hope you and Thangamani had a nice day :)

expertdabbler said...

the clincher was the last lines
ROTFL:))

expertdabbler said...

dubukku, solla marandhutten.. unga alva matter err. alma matter foto parthen. nijamave cho chweet.

adu seri chinna vayasile avlo azhaga irundhuttu ippo mattum yen....?
:))

Ananthoo said...

hi dubuks!seeing all ur lollu in alma matter and this valentine's post..am tempted to imagine the foll dialog in that karakara old man's voice of vivek:
"yaaruppa..antha dubukka? silapathigarathai ellam karaichi kudichu pala piecungala antha kaalathuleye valaicha dubukka pathiya kekara? aiyoo adanga matteneypa.."

Dubukku said...

Yaathrigan - டாங்க்ஸ்...அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டங்க...நீங்க வேற எதையாவது கிளப்பாதீங்க... :)

sonypsp- அய்யா...இது எதோ ஒரு காதலன் எதோ ஒரு காதலிக்கு எழுதற மடல்...வம்புல மாட்டி வுட்டுறாதீங்க சாமி....அய்யோ பாவம் நான்...

buspass - கம்பன் எமாந்தான்னு சொல்றதில்லையா அதமாதிரி ஃப்ரீயா வுடுங்க...
டப்பா அடிச்சாச்சா? அப்பிடியே அக்கௌண்டுக்கு மணி காணிக்கை ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க...:P

subbu - அய்யா..நீங்க சொன்னா கேட்டுக்கறேன்...இதுக்கு எதுக்கு குடிதாங்கிய எல்லாம் கூப்பிடுறீங்க....

Dubukku said...

Ramachandran - அப்போ இதுக்கப்புறம் வீட்டுல கிடைச்சிருக்குமே...அத சபைல சொல்லதீங்க...அப்புறமா கேட்டுக்கறேன் :P (என்னையா உங்க ப்ளாக் லிங்க் ஒர்க் பண்ணமாட்டேங்குது?)

thewoman - haiyooo ithu pada dialogue illeengo ennoda sontha sarakku ...udane padingo...

Raj - டாங்க்ஸ் தல

Usha - hehe... :)

WA - thangska...:P

Dubukku said...

kumari - yess that was the objective :) hope you and Mr had a great too :)


PK - danks. Neenga enna solla vareenganu puriyuthu..chinna vayasula avalvu azhaga irundhutu ippo eppidi ...innum athigamana azhagoda irukeenganu kekavareenga..
ithellam adhuvaa varathu PK...namma kaila onnume illai..:P

Ananthoo - yoww piecungala laam valaikalayaa...romba samathu paiyan naan...ippidi en mela pazhi podarathukku vivek kural veraya :P
(but nice one)

Anonymous said...

Tooooooooooo late, naan dhaan oorukku munaadi rombha naalaa ungala annathennu koopidurene, too late to start this akka business to reduce your age now :))

Balaji S Rajan said...

ஐயா... லெட்டர் எழுதி உங்க பாக்கெட்டுலய போட்டுபீங்களா? நல்ல பையனுக்கு அது தான் அடையாளம்...

Paavai said...

oru roja, wine glass,candle nu valentine's dayku podaama, varanda idly getti chatni - tooooooo bad :)-

Dubukku said...

WA - serikka anaalum neenga ennamo chinna pulla maathiri pesarathu etha muchkka?

Balaji - haiyooo naan appiyellam kidayathunga...romba nalla samathu paiyanga...


paavai - tch tch enna pannarathunga...etho ezhaiku etha ellurundai...

Uma Krishna - romba naalacha inga vandhu too bad...kavithai ellam romba thooramga enakku..danks hope you had a great day too

Post a Comment

Related Posts