Sunday, February 12, 2006

சண்டைக் கோழி

பத்தோடு பதினொன்னாத் தான் இருக்கும் என்று நினைத்தேன். பரவாயில்லை என்னம்மோ மனதில் நின்று விட்டது. கதை ரொம்ப ஒன்னும் வித்தியாசமான கதையாக இல்லாவிட்டாலும் களத்தை வித்தியாசப் படுத்த மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் சில இடங்களில் தேவர்மகன் பாதிப்பு இருக்கிற மாதிரி தெரிகிறது. (முதல் இருபது நிமிடத்தைத் தவிர)விறு விறுப்பாக கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

கதாநாயகன் நல்ல தேர்வு. பாந்தமாக இருக்கிறார். நான் படித்த காலத்தில் எங்க காலேஜிலும் இது மாதிரி சில சண்டியர் வீட்டுப் பிள்ளைகளும் படித்திருக்கிறார்கள் என்பதால் ஊரில் கூடப் படித்தவர் மாதிரி ஒரு ஃபீலிங் வந்தது. குடுத்து வைத்த மகராசன் மாமா மாமா என்று சுத்தி வர இரண்டு முறைப்பெண்கள் வேறு. சரி இதற்கு மேல் காலம் தாழ்த்த முடியாது..மேட்டருக்கு வருகிறேன்...தாவணி போட்ட தீபாவளி மீரா ஜாஸ்மின் மனசெல்லாம் மத்தாப்பாக மலர்கிறார். படத்தை சும்மா ஒரு தரமும் ஜாஸ்மினுக்காக இன்னும் மூன்று தரமும் பர்க்கலாம். அவ்வளவு அட்டகாசமாக நடித்திருக்கிறார். இயக்குனர் சில இடங்களில் சீக்வன்ஸை தப்ப விட்டிருக்கிறார். கதாநாயகன் மீரா ஜாஸ்மினை முறைப் பெண்களுக்கு அறிமுகப் படுத்தும் காட்சியில் மீரா ஜாஸ்மின் சோக்கர் செட் போட்டுக் கொண்டிருக்கிறார். அனால் அடுத்தக் காட்சியில் அது காணாமல் போய்விடுகிறது. வீட்டில் படம் பார்க்கும் போது இந்த அப்ஸர்வேஷன் தொண்டை வரை வந்துவிட்டது. அப்புறம் "எவருரா..நா .ஒதலவா"ன்னு சந்திரமுகி பிட் ஓடுமேன்னு கம்முன்னு இருந்துவிட்டேன்.தீபாவளி புராணம் போதுமென்று நினைக்கிறேன் அப்புறம் வீட்டுல எனக்கு பொங்கல் தான்.

ராஜ்கிரண் இந்தப் படத்திலும் நன்றாகச் நடித்திருக்கிறார். மதுரை வட்டாரப் பேச்சு அவர் பேசும் போது காதில் தேனாகப் பாய்கிறது. அட்சர சுத்தமாக பேசுகிறார். பின்னணி இசை மிக அருமை. படத்திற்கு தேவையான டெம்போவை அள்ளி வழங்குகிறது. ராஜ்கிரண் அறிமுகப் பாடல் மிக மிக அருமை. "ஏக் காவ் மேன் ஏக் கிசான் ரகு தாத்தா" -பாக்யராஜ் படத்தில் வரும் ஹிந்தி வாத்தியார் இந்தப் படத்திலும் வாத்தியார். மீரா ஜாஸ்மினின் அப்பாவாக நடித்திருக்கிறார். இன்னமும் பாடம் சொல்லிக் குடுக்கும் போது அடிக்கிறார்.

மவனே மீரா ஜாஸ்மினுக்கு மட்டும் அவார்ட் குடுக்கலை அண்ணா சாலையில் உண்ணாவிரதம் தான். எண்ட மலையாள பகவதீ...

19 comments:

Muthu said...

///"ஏக் காவ் மேன் ஏக் கிசான் ரகு தாத்தா" -பாக்யராஜ் படத்தில் வரும் ஹிந்தி வாத்தியார் இந்தப் படத்திலும் வாத்தியார். மீரா ஜாஸ்மினின் அப்பாவாக நடித்திருக்கிறார். இன்னமும் பாடம் சொல்லிக் குடுக்கும் போது அடிக்கிறார்.////
அதானே பாத்தேன். இந்த வாத்தியாரை எங்கையோ பாத்துருக்கோமென்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன். "இன்று போய் நாளை வா" ஹிந்தி வாத்தியாரா இவர்..!

Boston Bala said...

காதலா காதலா-வில் வாட்ச்மேனாக வந்தவரும் இவர்தானா?

Anonymous said...

Oh... this post was about some movie huh. *rolls eyes*

யாத்ரீகன் said...

ஹீம்.. ஆமா டுபுக்கு, தமிழ் சினிமாவில் ரொம்ப நாளைக்கப்புறம் கஜனி அசின், இப்போ அடுத்து இவ்ளோ குறும்பான இயல்பான கதாநாயகி இப்போதுதான் பாக்குறேன்... இன்னும் படம் பார்க்கலை, ஆனால் பார்த்த சில காட்சிகளும் சரி, பாடல் காட்சிகளும் சரி.. மீரா கலக்கியிருக்காங்க...

Udhayakumar said...

தீபாவளி கொஞ்சம் கொடுத்த காசுக்கு மேல நடிச்சிரிக்குன்னு ஒரு பேச்சு ஊரில் இருக்கே, அது உண்மையா?

Paavai said...

angelina amballendhu - bhagavatheekku katchi mariteengala - ambal kittaye poi solren :)-

Usha said...

Paavaiku vanda doubte daan enakkum. adenna namma ooru politician kanakkule katchi marareenga?
Ummachi vishayam - risk vendam. pesame angelina ambalukke maridunga.

Random Access said...

Nice... deepavali and pongal connection soopero sooper! Nakkalukku korachal illa ;)

Appo appo reference kodutha unga veetla chumma uttruvaangala? Ivaru tactic idhaan maami, asaraadheenga!

Random Access
The search has just begun !!!

expertdabbler said...

>>தாவணி போட்ட தீபாவளி

ayaa , neenga dhaana indha arasiyal vadhi pasangalukku ellam

"thamizhagathin tharudhalaye, kalai ulagin kandraviye" nu ellam vidyasama eludhi kudukaradhu?

naan mattum periya aala a irundhana inneram asin, jasmine ku ellam inneram half dozen oscar award kuduthiruppen...just la miss ayiruchu.

avanga DNA la apdi enna irukku nu therila thalai, eduna kandupidichu unga blog la podunga, ungalukkaaga naan london vandhu salvai podaren - manjal thundu venuma? vendaama? unga pagutharivu josier a kettu sollavum:D

capriciously_me said...

1930's-la ellarum college poneengala? ennala nambave mudiyala ;)

Anonymous said...

thalaivar padam 'saravana' vimarsanam please....
subbu,

Peelamedu_bulls said...

எதோ ஒரு review-வில் படித்த நியாபகம். "படம் நன்றாக உள்ளது.பாடள்கள் நன்றாக உள்ளன.மீரா ஜாஸ்மின் அழகாக நடித்து உள்ளார். ஆனால் ஒன்று, படம் நெடுக ஒரு கறுப்பு ஒருவம் உலா வருகிறது. தேவை இல்லாமல் சண்டை போடுகிறது. ஏன் என்று தெரியவில்லை. பின்னர் தான் தெரி ந்தது, அது படதின் hero என்று. மற்றபடி படம் நன்றாகவே உள்ளது"

Jeevan said...

Happy Valetines Day thalaiva.

Karthikeyan said...

//"ஏக் காவ் மேன் ஏக் கிசான் ரகு தாத்தா" -பாக்யராஜ் படத்தில் வரும் ஹிந்தி வாத்தியார் இந்தப் படத்திலும் வாத்தியார். மீரா ஜாஸ்மினின் அப்பாவாக நடித்திருக்கிறார். இன்னமும் பாடம் சொல்லிக் குடுக்கும் போது அடிக்கிறார்.//


:-))))))))))))))

Karthikeyan said...

அப்புறம் சொல்ல மறந்துடேன் ஜொல்லூ தலைவருக்கு
" Happy Valetines Day "

Dubukku said...

Muthu - ஆமாம் அவரேத் தான் இவர் :))

Bostan Bala - சரியாத் தெரியல ஆனா தொப்பு போட்டிருக்கதால இவர மாதிரி அவர் இருக்கார்ன்னு நினைக்கிறேன். (இல்லை என்று தான் பெரும்பாலும் நினைக்கிறேன்)

Raj - என்னா ராஜ் இது தெரியாதா? கண்ணாடிய தூள் தூளா உடைச்சு கோந்துல ஒட்டின மாதிரி ஒரு நெக்லெஸ் போட்டுவாங்களே அது தான்...வூட்டுல கேளுங்க...தெளிவா சொல்லுவாங்க :)

thewoman - you watch only englibis movies isit? :P

Yathirigan - யோவ் அசினோட எல்லாம் கம்பேர் பண்ணாதீங்க தல...நான் இதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன் மீரா கிட்ட நிக்கமுடியுமா அவங்க

Udhayakumar - இதெல்லாம் எதிர் கட்சி வேலையா இருக்கும் நம்பாதீங்க

Dubukku said...

paavai - Katchi lam maarala kovilla innoru ambal sannithanam thurandhitten avalo thaan :P

Usha - Paavai ku sonna athe reply than just one another additional sannithanam :P

Random Access - Veetu pakkam vadhiratheenga Maaminu koopitathukku irukku ungalukku :)))


PK - haiyooo adhu ennoda term illa Kavigargal karpanai vandhathu...Asin - see my reply to yaathirigan :) Vara vara neegna romba DNA athu idhu nu medical terms pesa arambichuteenga:)

Dubukku said...

capri - ennama minnal enna sollreenga naan 1930's porakkave illaye

Subbu - innum padam parkalai saar...parkama vimarsanam pannanumnalum naan ready :P release aayaacha enna?

Peelamedu - adhellam romba overnga...hero nalla thaan nadichirukkar atleast I like it :)

Jeevan - ohh danks and same to you thalaivaa

Karthik - danks and wish you the same. (Jollu thalaivar ---etho mudivoda thaan irukeenga enna kavuthanumnu hmmm)

Anonymous said...

Levitra (Vardenafil HCL) is the third treatment in the same class as Viagra and Cialis – all being medicines prescribed to men with erectile dysfunction.

Related Posts