Friday, January 20, 2006

யவன ராணி

"எது எது எப்போ நடக்கனுமோ அது அப்போ தான் நடக்கும்" - ரஜினி பட டயலாக் மாதிரி இருந்தாலும் இது கொஞ்சம் உண்மையோன்னு தோனுது. சாண்டில்யனின் யவன ராணி புத்தகத்தை நான் ஊரில் லைப்ரரியில் குடியிருந்த போது பார்த்திருக்கிறேன். இங்கே லண்டனிலும் லைப்ரரியில் அவ்வப் போது பார்த்திருக்கிறேன். என்னவோ எடுக்கவே தோன்றவில்லை. கடல் புறா ஒரு பாகம் மட்டும் படித்து முடித்து அதுபற்றி எழுதிய பிறகு இந்தப் புத்தகத்தைப் பற்றிய உண்மையான அறிமுகம் கிடைத்தது. பிரேமலதா பாலன் தம்பதியினர் படிப்பதற்கு இந்த புத்தகத்தை தந்து உதவினர். அவர்களுக்கு மிகப் பெரும் நன்றி.

இந்தப் புத்தகத்தை இவ்வளவு நாளாகப் படிக்காமல் இருந்தற்காக வருத்தப் படுகிறேன். அவ்வளவு அருமையான புத்தகம். சாண்டில்யனுக்கு விழா எடுக்கலாம் இந்தப் புத்தகத்திற்காக. ஆனால் ஒன்று, புத்தகத்தின் முன்னுரையிலேயே முடிவைச் சொல்லி சொதப்பி விட்டார் மனுஷன். அதனால் புத்தகத்தை படிக்கும் போது முன்னுரையைப் படிக்காதீர்கள்.

பயங்கர விறுவிறுப்புடன் கதையை கொண்டு சென்றிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சஸ்பென்ஸ் இருக்கும். காதல் ரசம் சொட்டச் சொட்டச் எழுத சாண்டில்யனை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது என்று நினைக்கிறேன். யாராவது இருந்தால் சொல்லுங்கள் படிக்கிறேன். கதையில் வேலைக்காரியைக் கூட அவ்வளவு அழகாக விவரித்திருக்கிறார். டைபரிஸ், இளஞ்செழியனின் புத்தி கூர்மை அசர வைத்தால் அதற்கு ஆசிரியரின் கடின உழைப்புத் தான் காரணம். ஒரு நாவல் எழுதுவதற்க்கு எவ்வளவு க்ரவுண்ட் ஒர்க் செய்யவேண்டும் என்பதை சாண்டில்யனிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

யவன ராணியைப் பற்றி தனி போஸ்டே போடலாம். ஹாரி பாட்டர் முதல் படத்தைப் பார்த்துவிட்டு இன்னமும் தினமும் பேடிங்க்டன் ஸ்டேஷனில் ட்ரெயின் ஏறுவதற்கு முன்னால் ஒன்பதே முக்காலாவது ப்ளாட்பாரம் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதே மாதிரி இந்த புத்தகத்தைப் படிக்க அரம்பிததிலிருந்தே ரோட்டில், ட்ரெயினில் என்று எல்லா இடத்திலும் யவன ராணியைத் தேடிக் கொண்டிருக்கிறேன். (சும்மா ஹலோ சொல்வதற்குத் தான் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை). "யவன ராணி...என்றுமே ராணி" என்று சன் டிவி டாப் டென் மாதிரி அப்பப்போ உளறல் வேறு ஆரம்பிச்சாச்சு. "வூட்டுக்கு வா நீ"ன்னு வேப்பிலை ட்ரீட்மெண்ட்டில் தான் போய் முடியும் என்று நினைக்கிறேன்.

ஏஞ்சலினா அம்பாளை பிரசவத்துக்கு அனுப்பி விட்டு யவன ராணி இதயத்தில் முடி சூடி விட்டாள்.(அதனால் இன்றிலிருந்து அம்பாள் அபீஷியலாக அபீட்டு) அப்பிடி ஒரு பிடிப்பை ஏற்படுத்தி விடுகிறார் சாண்டில்யன். இந்தப் புத்தகத்தை தனது சிறந்த படைப்பாக சாண்டில்யன் சொல்லியிருக்கிறார். கிடைத்தல் மிஸ் பண்ணாமல் படித்துப் பாருங்கள். என்னை மாதிரி கிறுக்குப் பிடித்து கொஞ்ச நாள் அலைவீர்கள். நான் எதற்கும் இருக்கட்டுமென்று கிரேக்க பாஷையெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன், யவன ராணிக்கு தமிழ் தெரியும்..இருந்தாலும் கனவில் கிரேக்க பாஷையில் சம்சாரித்தால் ராணி ஒருவேளை இம்ப்ரெஸ் ஆகலாம் பாருங்கள்...

15 comments:

Balaji S Rajan said...

அப்படீன்னு சொல்லறீங்களா? ஒ கே...அஞ்ஜலினா லீவ் முடிஞ்சு வர்ற வரைக்கும்...யவன ராணிக்கு ஜே.. யவன ராணி மாதிரி வருமா? ஒரு ட்ரிப் கிரெக்க நாட்டுக்கு வேண்டுமானாலும் போயிட்டு வரலாம்... இவங்களுக்கு எந்த மாசம் விரதம் இருக்கணும் கேட்டு சொல்லுங்க... இருந்தா போறது...சரி ..சனியான்னு டென்னிஸ் வீராங்கனை பேரு கேட்ட உடனே ..... வாயிலே.... அது இப்ப பரவாயில்லையா......?

Anonymous said...

is there any place where we can read this book online?
ok.. kanavulaye yavana raaniyaiyum prasavaththukku anupidaatheenga.. ;-)
subbu,

இலவசக்கொத்தனார் said...

சாண்டில்யனையும் கல்கியையும் படித்தபின் மற்றவர்களின் வரலாற்று பின்னணியுடைய புதினங்களை (நாவலை ஏன் இப்படியெல்லாம் சொல்ல வைக்கிறாங்க) ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்.

ஏஞ்சலினா சப்ஸ்டிட்யூஷன் தேர்தலிலே கை விட்டதனாலா அல்லது அம்மா பிரமோஷனினாலா? :D

Anonymous said...

"ஹாரி பாட்டர் முதல் படத்தைப் பார்த்துவிட்டு இன்னமும் தினமும் பேடிங்க்டன் ஸ்டேஷனில் ட்ரெயின் ஏறுவதற்கு முன்னால் ஒன்பதே முக்காலாவது ப்ளாட்பாரம் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். "

Naan 5 varusham munnadi first time Harry Potter padichen. Innum eppa railway station ponalum, 9 3/4 platform thaan mudhalla nyabagathukku varudhu. :)

Unknown said...

hmmm yavana raani yoda paadhipaa? Kings Crossle ille 9 3/4 platform? Read Yavana Raani a few years ago, aanalum Kalki's books are better I think

TJ said...

appo inime http://greekdubukku.blogspot.com la post padikkalamnu sollunga!

BTW Ambaal ungalkku ishta deivam listla irundhaaga pola, adhnaala dhaan Parasthanam pannitteil. Enakku Ambal kuladeivam list la serndhuttanga, so no Parasthaanam.

Usha said...

kudumiyum, panchakachamuma RKM schhol le teacher oritharai kamichu ivarthaan Sandilyan gra perle kadai ellam ezhuduvarnu enga anna sonnan. Avar ezhidinadoda badippa ippadee??..adada avarai innum konjam nanna pathiruppene?
So mothathil veetil payai ellam eduthu olichu vekka solluga. pirandara naal innum doorathil illainu thonradu...( "PI"thyam pidika poradu)
Thoroughly enjoyed the post.

Anonymous said...

I think I'm the only one kind who doesn't read books at all. Really, I can't. I'm way too inquisitive so much so that after reading the 1st chapter in any book, I'll flip over to the last chapter and end it once and for all. I can't sit and read a book. Can't doing it standing or lying down either. No way. Give me magazines... anytime!

Ps: Your girls are sooo lovely! And your wife too! Hey, you really look like some actor ya'know. Okay, I think I better stop before I make a fool outta myself. Anyways, nice little family.

The Doodler said...

Naanum 'Yavana Rani' padichu romba asandhu ponen..I liked 'Kadal pura' better. Aana, oru mistake panniten. I had read Kalki's Ponniyin Selvan first. Adhukkapram, edhu padichaalum, oru step kuraichala dhaan therinjadhu..:(
But anyways, have you read 'rajathilagam' also?

Dubukku said...

Balaji - இவங்களுக்கு எந்த மாசம் விரதம் இருக்கறதுன்னு உங்க வீட்டுல் சொல்லி இருக்கேன். உங தங்கமணிக்கிட்ட கேளுங்க..விவரமா சொல்லுவாங்க... :P

(டென்னிஸ் வீராங்கனை விவரமெல்லாம் எங்க வீட்டுல தெரியும்..அதான் பார்டில பார்த்தீங்கல்ல...அவங்களே எடுத்துக் குடுத்தாங்க...பாருங்க)

Subbu - theriyaliye..irunga konjam thedi sollaren

இலவசக்கொத்தனார்- ரொம்ப சரி. இவங்க ரெண்டு பேருமே...கலக்கறாங்க..
ஏன்ஞ்சலீனா போனது...
அதனாலல்லாம் இல்லீங்க...பழையன கழிதலும் புதியன புகுதலும்....போகி வந்துச்சு பாருங்க... அதான்

Dubukku said...

Krithika - Yes adhee thaan ingaiyum daily Paddington stationla andha walls parkum pothu ithukkulla irukumonu nenaipen :)

WA - Was that Kings Cross? I thought paddington hmmm. Sandilyan very much equal to Kalki to me :)

TJ - GreekDubukku - aaa ithu kooda nalla irukke...Aaama Angelina Ishta theivam thaan..:)

Usha - You saw Sandilyan....ooo that was so great.hehe regarding paithiyam en wife enna solluvanganu enakku theriyum
"Manushanukku oru tharam thaan paithiyam pidikkum adhuvum gunamahatha pothu thirumba pidikathu " :))

And thanks very much for the previous post comment on me..Neenga ingaiye atha solli irukalam..hmmm ellarum parthirupanga :)

Dubukku said...

the woman - I was like that when I started but once you get into that its addictive :)

Wooowwww danks a lot for your comments on me. I am flattered :) Some actor nu solli evanavathu commediana solli kavuthiratheenga please...Kamal rangekky enakku NTPK pothum ippothaikku :)
NTPK = nenaipu than pozhaippa kedukkum

Subha - Kadl pura I am waiting for the second part. My personal opinion is Sandilyan's writing are nothing less than ponniyin selvan (atleast yavana Rani and Kadal Pura)

Nope haven't read Rajathilagam yet.Will grab it when I see it next. danks for dropping by. Your blogs are very nice. I will better comment there :)

Chenthil said...

Greek Lesson -

Kalimera - Good Morning
Kalinihta - Good Night
Ellinitha = Greek woman

Most of the Greek Ladies I deal with are 50 year old shipping purchasers :-(

Anonymous said...

"kadalpura"-vukkaka oru group yahoola irukku theriyuma chinna pasangala?

naagaaas said...

'kadal pura'- kaalathal azhiyatha oru kaadal kaaviyam. yenna oru pirachinai, romba porumai venum. innum namma shankar's, manirathnam's yaarum try pannave illai.nitchayam cinemla varum.
ponniyin selvanai kooda kalaignar tv'la try pandraanga.

Post a Comment

Related Posts