Monday, December 05, 2005

Alma மேட்டர்

இதுவும் வழக்கம்போல "அம்ம பாட்டுத்தேன்ங்...".(தேவர் மகன் சிவாஜி பாணியில் வாசிக்கவும்)
Alma Mater என்றால் ஸ்கூல் காலேஜ் யுனிவேர்ஸ்டி என்று எல்லாம் அடங்கும். அதைக் கொஞ்சம் விஸ்தீரணப் படுத்தி சொல்லிக் குடுத்த போதிமரங்கள் எல்லாவற்றையும், கற்றுக்கொண்ட அத்தனைப் பாடங்களையும் ஒரு தலைப்பில் கொண்டுவரும் முயற்சி தான் இந்தத் தொடர் (ஆஹா இதுவல்லவோ ஜல்லியடித்தல் ...அப்போதானே நீங்க தலைப்புக்கும் எழுதறதுக்கும் சம்பந்தம் இல்லையேன்னு சொல்லமுடியாது :) ). அல்மா மேட்டர் நான் முன்னால் எழுதிய தாமிரபரணித் தென்றல், நாமதேவரும் கைப்பிடி சுண்டலும், மற்றும் ஜொள்ளித் திரிந்ததொரு காலம் ஆகியவற்றைப் போல் ஒரு கிளைக் கதை.

என் மகள் இரண்டு வயதில் காக்கா கதை சொல்லுவாள். அது வேண்டாம் என்று வேறு கதை கேட்டால் சரி என்று தலையை ஆட்டிவிட்டு இது இன்னொரு காக்கா என்று அதே கதையைச் சொல்லுவாள். இதுவும் அதே மாதிரி தான். தலைப்பு தான் வேறயே தவிர இதுவும் அவற்றைப் போல் "என் சோகக் கதையக் கேளு" ரகம் தான்.

மொத்தத்தில் எல்லாவற்றையும் சேர்த்துப் படித்தால் நேரா வந்து என் சட்டைக் காலரைப் பிடித்து விடலாம். சமீபத்தில் ஜொள்ளித் திரிந்த காலம் தொடரைப் படித்து விட்டு சிகாகோ தமிழ் சங்க பிரசிடென்ட் தொடர்பு கொண்டார். நான் எதோ என் கதையைப் படித்து விட்டு ப்ரீயா அமெரிக்காவுக்கு டிக்கெட் எடுத்துக் குடுத்து சிகாகோ தமிழ் சங்கத்தில் பிரசங்கம் பண்ணத் தான் கூப்பிடுகிறாரோ என்று வீட்டில் மன்னார் அண்ட் கம்பேனி தங்கவேலு மாதிரி பந்தா விட்டுக் கொண்டிருந்தேன். மெதுவாக நீங்க எந்த ஊர் நானும் அதே ஊர், நீங்க எந்த ஸ்கூல் நானும் அதே ஸ்கூல், நீங்க எந்தத் தெரு நானும் அதே தெரு, நீங்க எந்த வீடு...அடப்பாவி நீயா...என்று கடைசியில் முடிந்தது. இவருக்கு என் மனைவி வீட்டில் ஒரு முக்கியமான நபரைத் தெரியும் ரொம்ப வாலாட்டினா போட்டுக் குடுத்திருவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். மனுஷனுக்கு எத்தனைக் கவலை பாருங்கள். நேற்று ஒருவர் எனது கடல் புறா பதிவில் ஸ்கூலைப் பற்றியெல்லம் கமெண்ட் விட்டிருக்கிறார். அனேகமாக என்கூட என் க்ளாசில் குப்பைக் கொட்டிய பேர்வழியாக இருக்கலாம்.(அதே பேரில் ஒருவர் இருக்கிறார்) கேட்டிருக்கிறேன்...தெரியவில்லை. இந்தத் தொடரையெல்லாம் எழுதி விட்டு ஊர் பக்கம் போனால் நல்ல செமையாக கிடைக்கப் போகிறது எனக்கு.

அப்புறம் இன்னும் ஒன்று ...புகழந்து பின்னூட்டம் விடுபவர்கள் தயவு கூர்ந்து பெயரை மட்டுமாவது சொல்லுங்களய்யா...வீட்டுலே நானே அனானிமஸாக அடிக்கிறேன் என்று நக்கல் தாங்க முடியலை. (ஹாலேஸ்கானில் ஐ.பியாவது இருக்கும் ப்ளாகரில் அந்த வசதி இல்லை)

உங்களில் நிறைய பேர் நான் முன்பு எழுதிய தாமிரபரணித் தென்றல் மற்றும் நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் ஆகியவற்றைப் படித்திருக்கலாம். படிக்காதவர்கள் படித்து விடுங்கள். அப்புறம் கேள்வி கேட்கும் போது முழித்தீர்களானால் பெஞ்ச் மேல் ஏற்றி விடுவேன். முன்னாடியே படித்தவர்களும் இன்னொரு தரம் படிங்கப்பூ (இல்லாட்டா எங்களுக்கு எப்பிடி ஹிட் கவுண்ட் எகிறுமாம்?)

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - Part1 Part2 Part3 Part4 Part5

தாமிரபரணித் தென்றல் - Part1 Part2 Part3


-தொடரும்

23 comments:

[ 'b u s p a s s' ] said...

first "gilma matter" (atha jolli thirintha kaalam) ..ippo "alma mater"a

besh besh..

Balaji S Rajan said...

Idho...Idho..Yellam moochu vidam padichudarane. Ungalakku yenna kallakalla yethaivathu yezhuthidareenga... Naan jollu vittu padikarathunala... pasangalai gavanikirathu illainnu veetula complaint.... Blog addict ayiducham...... Aiyo thanga mudiyalai sami..... Ippo yellam thoongina appuram... thirutuu thanama padichindu irukane.... Morning irukkudhu ... Neenga yennadanna... summa part part ah... kalakareenga...... Kalakungo... sami.....

Paavai said...

Naamdevarum, kaipidi sundalum - hitla 75% mela ennodadudan. It is my favorite by far,others are great too, but this one - strikes a chord.

Jeevan said...

kandippa ellathaium padichi vaikerran, apparam question kakum bothuu muttai vankka kudatthula.

Alma matter padikka arvamai irekerom.

Usha said...

Ithanai naal idellam enge olichu vechirundu ippo vellam maadiri thorandu viteenga. Enna photographic memory - anaal inda maadiri oru swarasyamana past irunda eppadi marakka mudiyum?
Very interesting incidents - adai neenga arpudama solreenga. Ennamo thamirabgarani karalai thenral kaathule jilu jilunnu ukkandundu kadai kekara anubhavam.
Great!!!

Premalatha said...

பாலரஜன் கீதா,

"கடல்புறா" -ல பதில் போட்டிருக்கேன்:)

அப்புறம்,

உங்களேட ரெண்டு pointமே நான் படிக்கல. கொஞ்சம் காட்டிக்கொடுப்பீங்களா?

Dubukks,

I have to read all those previous ones, as Balaji has said, I have to read them in one go.. then I will get back:)

Anonymous said...

Dubukks pugazh ulagamellam paravudhu :) Enjoy pannunga

Premalatha said...

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - Part 1 super!!!

உங்களோட styleனா இதுதான்.

Premalatha said...

"அது தெரியும். அதனால தான் நான் சுண்டல் போடற கரண்டிய சின்னதா வெச்சிருக்கேன். ரெண்டு மூனு தரம் போட்டாலும் நிறைய விழாது அதே சமயம் நிறைய போட்ட மாதிரியும் இருக்கும் பசங்களும் நிறைய போட்டாச்சுன்னு நகர்ந்து போய்டுவாங்க.." - வாயை பொளந்து கொண்டு மேனேஜ்மென்ட் பாடம் கற்றேன்.


Class!!!

Premalatha said...
This comment has been removed by a blog administrator.
Premalatha said...

"ஏன்டா ஓசில கிடைச்சா பினாயில கூட ஒன்றரை லிட்டர் குடிச்சுறுவேளோ?" - மாமிகளுக்கெல்லாம் ஏக கொண்டாட்டம்.

"ஏன் நீங்களெல்லாம் ஓசில வடை கிடைச்சா நேக்கொன்னு நாத்னாருக்கு ஒன்னுன்னு வாங்கிக்கலையா அத மாதிரி தான்" சூடாக திருப்பி குடுத்தான்கள் பையன்கள்

ROFLMAO

Anonymous said...

Dubukku one small question..

Thirunalveli Aruval kku famous la?
Eppo orku poringa?

Kavya

Balaji S Rajan said...

Hello.... sorry I could not read yesterday. There was problem in the net. I read Namathevarum sundalum part 1... Aiyo vendam sami... yenna orey mathiri experience... Sundal kudukkara mama kannula padanummnu othunki gentle ah...yellarkum vazhikudupom. Andha mama parthutu andha paiyan paaru...samatha oramai nikkarannutu innum niraiya poduvaru....... Hmmmmmmmm UK la yaaru Sundal kudupanga... I am sure my kids are missing all these.

பாலராஜன்கீதா said...

அன்புள்ள ப்ரேமலதா,

நானும் கடல்புறாவில் தங்களுக்குப் பதில் எழுதி உள்ளேன்.

என் மின்னஞ்சல் முகவரிக்கு மடல் எழுதினால், stiletto பற்றி பாலகுமாரன் எழுதியதை அப்படியே தட்டச்சி அனுப்புகிறேன். (மேலும் மெர்க்குரிப்பூக்களில் எங்களுக்குப் பிடித்தமான வரிகளைத் தட்டச்சி இலவச இணைப்பாகவும் அனுப்புகிறேன்)

என்றென்றும் அன்புடன் பாலராஜன்கீதா
balarajangeetha@yahoo.com

பாலராஜன்கீதா said...

// இவருக்கு என் மனைவி வீட்டில் ஒரு முக்கியமான நபரைத் தெரியும் ரொம்ப வாலாட்டினா போட்டுக் குடுத்திருவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். மனுஷனுக்கு எத்தனைக் கவலை பாருங்கள். //

அன்புள்ள டுபுக்ஸ் இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். இருக்கவே இருக்கிறது சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் சரணாகதி அடைவது :-)))

Dubukku said...

yow...gilma matteraaaaa venum venum enakku nalla venum :)

Balaji- Etho ungala maadhiri periyavanga aasirvatham thaan
thanks for the interest

Raj - அது கார்த்திகைக்கு...வீட்டுல நிறைய விளக்கெல்லம் ஏத்தி பட்டுப் புடவையெல்லாம் உடுத்தி..அவளுக்கு நெக்லஸெல்லாம் போட்டவுடனே...என் மகளுக்கு ரொம்ப சந்தேகம் வந்து கண்ணை அகல விரித்து..."எனக்கு இன்னிக்கு கல்யாணமான்னு " கேட்டத இன்னிக்கும் நாங்க சொல்லி சொல்லி சிரிப்போம்.. :)
புஸ்தகமா...ரொம்ப ஏத்திவிடாதீங்க சாமி...(போட்டாலும் நான் விசிடிங் கார்ட் மாதிரி நான் தான் எல்லாருக்கும் சும்மா குடுக்கனும் :)


paavai - yes I too like this very much. lovely memories :)

Jeevan - kavala padatheenga ungala pass panniruvom :) alma matter koodiya seekiram post pannaren. thanks for the interest.


Usha - olichu ellam veikala. I posted those in 2004. Thanks to Blogs I am just venting my memories and writing interest :)

Premalatha - Glad that you enjoyed them.

Dubukku said...

Uma - unga blogla nakkal adichathukku nalla pazhivangareenga :)


Kavya - aiyooo atha yeen nyagap paduthareenga...anegama athoda thaan wait pannikitu irupaanga makkal

Balaji - ungalukku indha maathiri experiences irukkunu nenaicha santhoshama irukku :)

Balarajan - பாலகுமாரனையும் கரைச்சு குடிச்சிருக்கீங்க போல?
ஆமா சண்டைக்காரன தான் கைக்குள்ள போட்டு வைச்சிறுக்கேன்..இருந்தாலும் ...:)

Karthikeyan said...

//உங்களில் நிறைய பேர் நான் முன்பு எழுதிய தாமிரபரணித் தென்றல் மற்றும் நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் ஆகியவற்றைப் படித்திருக்கலாம். படிக்காதவர்கள் படித்து விடுங்கள். அப்புறம் கேள்வி கேட்கும் போது முழித்தீர்களானால் பெஞ்ச் மேல் ஏற்றி விடுவேன்.//

டூபுக்கு சார்,
உங்கள் எல்லா பதிவையும் நான் படிச்சிருகேன் என்னை பெஞ்ச் மேல் ஏற்றி விடாதிங்க.உங்களுக்கு லஞ்சமா "+" வேனா குத்திடுறேன்.

capriciously_me said...

came here from desipundit...someone is becoming extremely popular...engala maadiri chinna pasangala marandhudaadheenga gurumurthy annen!

Unknown said...

Capri, naan nenechen you telling. Annaathey rombha famousaa aaitaaru!

Dubukku said...

Minnal WA - Unga rendu peraiyum marakka mudiyuma? danks :)

Uma - anma mega serial maadhiri intro kuduthee oru post ottiten...just was busy here and couldn't post the next one. Will do shortly.

Dubukku said...

karthik - ரொம்ப டேங்க்ஸ்...அந்த வோடிங் இன்னும் இங்க போடல...will do shortly :)

Anonymous said...

Place: Vaanavar Vulaham
Participants: All Divine People.
Discussing about: Penance of TMmaal.

Atlast the Leader of the Divinity appeared before TMmaal.

D: Bagthane, Dhavathai Mechinen. Yenna ELLAM vendum. Kel!Tharuhiren.

TMmaal:
Adutha piravi nu onnu irunthaa naan Dubukku voda kooda LOLLU panni Kalaaikiraa maathiri Frienda porakkanum.

D: Yen?

T:
1) Jaalra moolamaaha Jileer Ilampraaya Gilmaakkal.
2) MiRuthangam moolam PalaThangam cover panniyathu....

D: Idhilenna Vishesham?

T: Mudhalil Sundal, Pirahu Kadalai.

D: Verenna Vendum?

T: Appadi friend aa padaikka mudiyavillayenil Dubukku vin Mother Language Yenakkum Mother Language aahattum. SO, Bloggai Padikkalaaam.....

D:
Adada... Naane Maranthu Vittennn...
Indru Dubukku Antha "ALMAA MATTER" ii podarathaa SOllirunaathareee...
Naan innum blogg ii check pannale... I want to browse immediately... So, Bye Bagthaaa....

TMmaal: (to self).. Indha Dubukku voda lollu Jeyadevar, Raamar lenthu Yella Saamikkum therinjaaachaaa.... Avangalum Bloggaa paakka poyittangappu.... pOyittaangaa...

Sari... Sari..... Atleast nammalum konjam Njoy maaduvom.....

Post a Comment

Related Posts