Friday, December 30, 2005

2005

இந்த வருடத்தின் கடைசிப் பதிவு இது. 2005-ல் ஏகப்பட்ட இயற்கைச் சீரழிவுகளைப் பார்த்தாயிற்று. 2006 நல்ல படியாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

நேற்று பி.பி.ஸியில் டாம்ப் ரைய்டர் பார்த்தேன். ஏஞ்சலினா அம்பாள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார். மனதில் ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தியாயிற்று. என்னம்மா நடிச்சிருக்கா குழந்தை. இங்கே ப்ளாகில் ஒரு ஓரமாய் நான் மட்டும் பார்க்கிற மாதிரி போடுவதற்கு அன்னாரின் நல்ல படம் இருந்தால் அனுப்பி வையுங்கோ. நன்றி ஹை.

யாரோ சென்னையிலிருந்து(203.101.40.10) மனோ என்ற புண்ணியவான் முப்பதிலிருந்து நாற்பது வரை உள்ள பெண்கள் வேண்டும் என்று சைடில் இருக்கும் Current Crisis செக்க்ஷனில் கேட்டுள்ளார். எண்ணிக்கையைச் சொல்கிறாரா இல்லை வயதைச் சொல்லுகிறாரா என்று தெரியவில்லை. இன்னும் இது ஒன்னு தான் பாக்கி. நல்லாயிருடா ராசா...ஏற்கனவே நிறைய பேர் சரோஜாதேவி புஸ்தகங்களைத் தேடி வருகிறார்கள் அதோட இது வேறயா...ஹூம்

நிற்க முன்னமே சொல்லவேண்டும் என்று நினைத்தேன். donthecat கேன்ஸர் நோய் விழிப்புணர்வுக்காக ஒரு ப்ளாக் போட்டி நடத்தி வருகிறார். மிக நல்ல விஷயம். ஆர்வமிருப்பவர்கள் பங்கு பெற்று வெல்ல வாழ்த்துக்கள். பங்கு பெறாவிட்டாலும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இதைப் பற்றிச் சொல்லலாம். அதறகான சுட்டி இங்கே...

நம்ம பஸ்பாஸ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை சேகரிக்கும் ஒரு தானியங்கி வலைப் பதிவு தளத்தை நடத்தி வருகிறார். அதன் சுட்டி இங்கே..
(பஸ்பாஸ் - நம்ம டுபுக்கு பதிவு மட்டும் எப்போதும் மேலே டாப்பில வர்ற மாதிரி எதாவது செய்யமுடியுமா? :P )

பொங்கல் பார்ட்டி ஜனவரி 15ம் தேதி என்று முடிவாகி வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. இடம் மிலடன் கீய்ன்ஸ். ஆர்வம் இருப்பவர்கள் தெரியப் படுத்தவும். மேலும் விபரங்களைத் தருகிறேன். தலைக்கு பத்து பவுண்டு நுழைவு கட்டணம்.(பெரியவர்களுக்கு).

மற்றபடி 2006 அமைதியையும், சந்தோஷத்தையும், எல்லா வளங்களையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கொண்டு வர வாழ்த்துக்கள்.

29 comments:

பழூர் கார்த்தி said...

டுபுக்கு அண்ணே, புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் !!! இந்த வருசத்திலயாவது ஒழுங்கா எழுதுங்கண்ணே :-) ஏஞ்சலினா அம்பாள் படம் வேணுமான்னே ?? அண்ணிக்கு தெரியுமா நீங்க கேட்டது ??? புதுவருசம் அதுவுமா பூஜை போட்றப் போறாங்க.. பாத்து
:-)
******
உங்கள் சொந்த கதை - ஜொள்ளு - காமெடி பதிவுகளை தொடரவும் - மிகவும் அருமை (உண்மையில்தான்) !!!
*****
புத்தாண்டு வாழ்த்துகள் !!!

மதுமிதா said...

புத்தாண்டு வாழ்த்துகள் டுபுக்கு

ஞானவெட்டியான் said...

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும்

இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

Anonymous said...

:)) Aiyo paavam ipdi avaru peru ooru IP address ellaam pottu maanatha vaangiteengale :)) 2006la ungalukku neraya Angelina padam kidaikka vaazhthukkaL. Nera Kodumai dhaan idhellam.

Uma

Boston Bala said...

2006 greetings :-)

Anonymous said...

Duvangum (Thanks = Danksu. Duvangum = Tuvangum)
Buthhaandu
Kuraivinrirukkattum.

Happy NY2K6 Dubukku.

PS:
Yedhu? Angelina Ambaalukku manasula kumbaabishehaamaaa :-) Aaahaaa. Kelamittaangaiyyaaa Kelambittaingaaa..

Kadal pala kadanthu ponaalum Kushpoo kku koil kattina payakkam maarave illa baaa.

Vaazhha Naveena POOSALAARE! :-)

With Warm Greetings,
TMMaal

Mookku Sundar said...

டுபுக்ஸ்,

என்ன செண்டி ஆயிட்டிங்க.

அடுத்த வருடமும் ஜொள்ளோத்ஸவம் தொடரட்டும். :-)

Anonymous said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் டுபுக்கு

Madhumitha said...

நன்று டுபுக்கு
போஸ்ட் செய்து விட்டேன்

நம்ம பேரையும் பஸ்பாஸுக்கு சொல்லுங்க டுபுக்கு

Narayanan Venkitu said...

Angelina Jolie padam...lakshak kanakkula irukku internetla..oru chinna padathai eduthu pohdunga.!! Kanavukkanni Angelina vazhga.!!! Andha udhadugal...adhu meyya poyya???

PuthaNdu vazhthukkaL

Usha said...

Ungalukkum ungal kudumbathinarukkum iniya puthandu vaazhthukkal.
Varum varudam shubhamagavum, santhoshamagavum, shanthimikkadagavum irukkattum.
Ungaladu ezhuthuppani innum sirandu valarattum. Innum pala nooru vasagargal unagal ezhuthukkalai padithu ungalai vaazhthattum. ( analum anda medaile engalukellam daan munmurai sariya???)
Very best wishes to you and your family dubukku!

Karthikeyan said...

புத்தாண்டு வாழ்த்துகள் !!!

Anonymous said...

Angelina AmbaL???????? Is it a part of new year resolution?

TJ said...

Wish you a very happy and prosperous new year!!

Dubukku said...

சோம்பேறி பையன் - "புதுவருசம் அதுவுமா பூஜை போட்றப் போறாங்க.. பாத்து "
நல்லா எடுத்துக் குடுக்கிறீங்கய்யா... :))
புத்தாண்டு வாழ்த்துகள் !!!

Madhumita - நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!!

ஞானவெட்டியான் (1838358) - மிக்க நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!!

Dubukku said...

Uma - name and shame is not the main aim.But neenga sonna appuram thaan puriyuthu. But I guess that defnlty wud be a fake id. :)

Boston Bala - danks and wish you a very happy new year :)

TMMaal - ada kalakareenga. Poosalar - ahaa schoolla tamil nalla padichirukeenga pola. Manak koyil konda poosalar correcta nyabagam vecchu irukeenga.

Mooku Sundar - செண்டியெல்லாம் இல்லை
ஜொள்ளில்லாமலா.. :) (ஆனாலும் இப்படி ஜொள்ளோட அம்பாசிடர் ஆக்கிடீங்களே)

Chidambaram /Karthik/ TJ- நன்றி உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Madhumita - buspass kitta sollidivom :)

Narayanan - amaam ippo than konjam parthen :) Happy new year !!

Usha - Many thanks. And wish you and your family a very happy and prosperous new year.

Krithika - resolution laam illa...:) Ippo thaan Tomb Raider parthen andha effect ;)

expertdabbler said...

Wish ua very happy and prosperous new yr.

may all your searches come true..(anjelina ambal daan solren:))

Visithra said...

Happy new year ;)

[ 'b u s p a s s' ] said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உங்க பதிவு எப்பவும் top'ல தான் இருக்கு. என் favorites'ல. :) Madhumita' வுக்கும் அப்படியே செஞ்சுருவோம்...

Anonymous said...

Naan solla vandhadhu ennana, "Jigidi" poi "AmbaL" vandhadhai pathi.

Paavai said...

Happy New Year to you and your family Dubukku

Yaaro oruthar unarchi vasapattu - "merry new year"nu wish panninaar innnikku - nalla kalam naan correcta type pannitten :)-

Anonymous said...

உங்கள் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் எல்லோருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு&பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்த வர்ஷத்துல டுபுக்கு..நீங்க நெரிய ஜொள்ள வேண்டும்.
எங்கள ஏமாத்தி விடாதீங்க டுபுக்கு...
இப்படிக்கு..புது டில்லியிலிருந்து
ராமகிருஷ்ணன்

Kumari said...

Iniya Puthandu Nal Vazhthukkal :)!
Appuram seekiram Puthandu malar onnu distribute pannunga :D

Vidya said...

"--ohhh I thought you will easily figure me out if you read my "About me" section? okie dokie tirunelveli ambasamudram - does that sound familiar? :))
(ithukappuramum kandu pidika mudiyalanu sonna avalavu than :P )"

Heyy Ranga ?!!! Ithu neeyaa ???!! It is a freaking small world !! Can I blog roll you ?

Dubukku said...

PK - danks and wish you the same (happy and prosperous alone not ambal part :P )

Visithra - danks and wish you the same. Hope you didn't come up with any pranks for the new year :P

buspass - HNY!! hehe danks

Krithika - Nope there is one and only Ambaal ;)

Paavai - danks and wish you a happy and propserous new year :)

Susubala - danks and yes I wish this year is calamity free

Dubukku said...

Raj - danks. Ungalukkum ungal kudumbatharukkum enagalathu vaazhthukkal

Ramakrishnan - danks and wish you the same. romba sandhoshama irukku naan neraya Jollanumnu neenga wish pannum pothu :)


Kumari - danks mam. Ennathu puthaandu malara nakkalukku oru alave illayaa :P

Vidya - yess its me Renga (spelling kooda marandhuttiya :P)
Was equally surprised when I landed in yours.
blog roll - ithellam kekanuma enna enjoy :))

Anonymous said...

whats dumukku then?
I was of the opinion thats a slang too...

k

Anonymous said...

Hi,

As you are aware, the Results of the Blog your Thots Contest has been posted on the Connexions site and are accessible from this URL http://connexionsonline.biz/conxw/ican/

All posts have been inspiring and motivational in their own way. As we had mentioned earlier, the Contest may have ended, but the initiative continues. We request you to post information in your blog about the contest results so visitors may get to read the entries, in case they missed it earlier. This would also ensure that the initiative is kept alive and the posts continue to spread the message that CANcer CAN be Conquered.

Warmth & Regards

Murali
On behalf of the CCC team

Anonymous said...

vab банк
vab банк
[url=http://globalist.org.ua/?p=19244]vab банк[/url]
http://globalist.org.ua/?p=19244 - vab банк

Post a Comment

Related Posts