Saturday, November 23, 2013

இரண்டாம் உலகம்

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் இந்த மாதிரி மேக்கிங்கை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது

அனுஷ்கா ரசிகர்களுக்கும் ஆர்யா ரசிகைகளுக்கும் இந்த படத்தைப் பார்த்த பிறகு அவர்களைப் பிடிக்காமல் போவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கிறது. இரண்டாம் உலகில் ஆர்யாவிற்கு  ஷேவிங் செய்த காட்டுக் குரங்கு மாதிரி மேக்கப் வேறு -  சகிக்கலை.

இடைவேளையில் இடைவேளை என்று போடாமல் இரண்டாம் உலகம் என்று போடுகிறார்கள். இங்கே ஆங்கிலப் படங்களுக்கு இண்டர்வெல் கான்சப்ட் கிடையாது என்பதால் படம் அவ்வளவு தான் முடிந்துவிட்டது என்று நிறைய பேர்கள் குழம்பி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கனவான் தியேட்டர் சிப்பந்திகளிடமே கன்பேர்ம் செய்து கொண்ட பிறகே குடும்பத்திற்கு பாப்கார்ன் வாங்கி வரப் போனார்.

அனுஷ்கா படம் முழுக்க வியாபித்திருக்கிறார். கொஞ்சம் சதை போட்டிருக்கோமோ என்று மனக் கவலையில் இருக்கும் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அனுஷ்கா தொப்பை அடிக்கடி படத்தில் காட்டப் படுகிறது. யோகா செய்து திரும்ப வராமல் இருந்தால் அனுஷ்கா ஆண்ட்டியாய் அப்கிரேட் ஆகிவிட்டார் என்றே தோன்றுகிறது.

படம் ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் திரும்பவும் இந்த மாதிரி மேக்கிங்கை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது

படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் "சீக்கிரம் படத்த போடுங்கய்யா..." என்று கூவத் தொடங்குகிறோம். இடைவேளைக்கு அப்புறம் "சீக்கிரம் படத்த முடிங்கைய்யா..." என்று கூவுவதை மாற்றிக் கொள்கிறோம்.

அடிக்கடி காதல் என்றால் என்ன, எப்படி ஃபீல் பண்ணவேண்டும் என்று யாராவது ஒரு கதாபாத்திரம் விளக்கம் கொடுக்கிறார்கள். ஆஹா இந்த மாதிரி நிறைய ஃபாரின் ஆட்களை பஸ் ஸ்டாப்பில் முத்தம் குடுக்கவைத்து காதலை கே.டி.குஞ்சுமோன் டைரக்டர்கள் அல்ரெடி அக்கு வேறு ஆணி வேறாய் நிறைய பிரித்து மேய்ந்திருக்கிறார்களே என்று அப்போது தான் பல்பு  எரிந்தது.

"விந்தை உலகில்,....வேடிக்கை மனிதனின் அட்டகாசம்" என்று டீ.வியில் கட்டைக் குரலில் "இந்திய தொலைக்காட்சிகளில்..."  விளம்பரத்தில் வரும் டப்பிங் ஹாலிவுட் பட எஃபெக்ட் நிறையவே கிடைக்கிறது. இந்த படம் டீ.வியில் வரும் போது முக்காலே சதவீதம் கண்டிப்பாய் நீங்கள் டப்பிங் படம் என்று நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

வசனங்கள் எல்லாம் படு திராபை. படத்தின் மிகப் பெரிய பலவீனமே ஸ்க்ரீன் ப்ளேயும் வசனங்களும் தான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நிறைய இடங்களில் மக்கள் பொறுமையிழந்து "ஷப்பா...டேய்...டேய் .....போதும்டா சொறியாதடா" என்று சவுண்டு விட ஆரம்பித்துவிட்டார்கள். வசனம் மட்டும் இல்லாவிட்டால் இசைக்கு அந்த திராபை பட்டத்தை அளித்திருக்கலாம்.

A film by Selvaraavan என்று கார்டு போடும் போது காதல் கொண்டேன் செல்வராகவனா இது என்று கண்டிப்பாகத் தோன்றும். செல்வராகவன் ஃபாலோயர்ஸுக்கு இப்படம் மிகப் பெரிய ஏமாற்றமாய் இருக்கும்.

லாஜிக் மேஜிக் எல்லாம் விடுங்கள், எந்த ஒரு களமாய் இருந்தாலும் முக்கியமான விஷயம் நம்பகத்தன்மையை கொண்டு வருவது. அதில் கில்லாடியான செல்வராகவன் இந்த படத்தில் கோட்டை விட்டிருக்கிறார்.

அந்த முக்கியமான அம்மா கேரக்டர் ஃபாரின் அம்மணி ஸ்ப்ப்ப்பா.... படத்திற்கு பெயர் இரண்டாம் கிரகம் என்று வைத்திருக்கலாம்.

உங்கள் வீட்டில் சின்னப் பசங்கள் இருந்தால் ட்ரைலரில் வரும் சிங்கத்தைப் பார்த்து படத்துக்கு கூட்டிப் போங்கள் என்று நச்சரிக்கலாம். படத்தில் பத்து நிமிஷம் தான் அவை வருகின்றன. மற்ற நேரங்களில் உங்களை அவர்கள் நச்சரித்துவிடுவார்கள் ஜாக்கிரதை.

இந்த ப்ரொடெக்‌ஷன் க்வாலிட்டி மிகப் பாராட்டப் படவேண்டிய ஒன்று ஆனால் திரைக்கதையும் மற்ற விஷயங்களும்  அதை விரயமாக்கிவிட்டன....ஹூம்ம் ஒன்னும் சொல்வதற்கில்லை. நார்னியாவை படு லோக்கலாய் எடுத்த மாதிரி இருக்கிறது.

16 comments:

கவிதா | Kavitha said...

//இரண்டாம் உலகில் ஆர்யாவிற்கு ஷேவிங் செய்த காட்டுக் குரங்கு மாதிரி மேக்கப் வேறு// wow...I liked this.. :) எனக்கு எல்லாப்படத்திலுமே சாதாரணமாவே அவரு அப்படித்தான் தெரியாரு.. :ஆவ்வ்..

Ananya Mahadevan said...

அப்படியா சங்கதி!!! ஏதோ சொல்லிட்டீங்க, நாங்க தப்பிச்சிட்டோம் தலைவா!

Unknown said...

nalla velai kapathineenga.. friends ellarum en purse ah kali panna plan pottundu irukka.. thapichen..

அமுதா கிருஷ்ணா said...

ஆர்யாக்கு எல்லாம் நேரம் தான் இத்தனை படங்கள் புக் ஆகிறது. என்ன நடிக்கிறார் அவர். கலரா மட்டும் இருந்தால் நடிகனாகி விடலாம் என்று வந்தவர் போல்.செல்வராகவனை இளைய தலைமுறை கொண்டாடுகிறது. கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர் போல எனக்கு தோன்றும்.

H. Riaz Ahmed Saleem said...

I saw the movie yesterday in Abu Dhabi with high hopes. Usually im not a person watching all the movies, but this movie had given high hopes, the interviews and the trailer made me to watch it. One request to all, please do not kill your time by watching this movie, its a waste of time and money. This will be the worst of Selvaragavan movies, ofcourse he is a great director but failed to prove it in Irandam Ulagam.
Thanks.

K Sivaranjini said...

Appo intha padatha "Indhya tholaikatchikaliley muthan murayaga" podumbothu pathukalamnu solrenga. Ok.

சுசி said...

செல்வராகவனின் முந்தய படங்களே அவ்வளவு ஒன்றும் நன்றாக இருந்ததில்லை என்பது என் கருத்து. I agree with Ms.Amutha Krishna.

MohanRaj Chinnusamy said...

பசங்களோட போனதால தப்பிச்சோம் ..
தனியா மட்டும் போயிருந்தா "ஜாலியன் வாலாபாக்" தான்..

Anonymous said...

All films of Selvaraghavan has only psycho characters, and he is trying make viewers also phsycho

Madhu Ramanujam said...

ஏய்....இப்ப நீங்க என்ன சொல்லுதீக? புரிஞ்சமாதிரியும் இருக்கு ஆனா புரியவுமில்ல. இந்தப் படத்த பாக்கலாமா வேணாமா?

Anonymous said...

Ungala blog elutha vaikra alavukku intha padam bathichirukku na evlo kodumaya irunthirukku nu puriyuthu!!!

deepa

Cable சங்கர் said...

:)

Pathy said...


பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்த மாதிரி என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். முடிவில் பிள்ளையாரும் இல்லாமல் குரங்கும் இல்லாமல் போனது என்னவோ உண்மை..

Madhuram said...

But I'm going to thank Selvaraghavan for making this movie. Adhanala dhaane ippa neenga post potteenga. Ella kettadhulayum oru nalladhu irukku. So waiting for more mokka movies.

Dubukku said...

கவிதா / அமுதா  - ஹஹா ஆர்யாவை இப்படிகாலாக்கிற பெணகளை முதன் முதலில் பார்க்கிறேன்:)))

 

சாரதா / அனன்யா - மக்கள் சேவையே மகேசன்சேவைங்கிறத கொள்கையாக கடைப்பிடிப்பவன் நான்:)))

 

அமுதா / தானைத் தலைவி - ஆஹா :))) எனக்குஅவரோட சில படங்கள் பிடித்திருந்தது. கொஞ்சம்raw-வா இருக்கும் சில காட்சிகள். அவைபெண்களுக்கு பிடிக்காமல் போக நிறையவாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறேன்.

 

Riaz Ahmed - :))) எனக்கும் இந்தப் படம் நீங்கள்சொன்ன மாதிரி தான் தெரிந்தது. செல்வா படமாஇதுன்னு இருந்தது மறுக்க முடியாத உண்மை

 

சிவரஞ்சனி - ஆமாங்க...கண்டிப்பா சீக்கிரமேவந்திரும்.

 

மோகன்ராஜ் - :))) ஏன் பசங்கள அடிக்கடி வெளிலகூட்டிடுப் போய்டீங்களா.

 

அனானி - அட இவ்ளோ கோபமா அவரு மேல :)))

 

மது - யோவ் இதுகப்புறமும் படத்துக்கு போலாமாபோகவேணாமான்னு கேக்கிறீங்க பாருங்க...நீங்கதெய்வம் சார் :)).

 

 

கேபிள் - வாட் அ சர்ப்ரைஸ் :)))

 

பதி - ரொம்ப சரிங்க...எனக்கு என்ன டவுட்டுன்னாஅவரு பிள்ளையாரத் தான் பிடிச்சாராங்கிறதே

 

மதுரம் - :)) கரெக்ட்டுத்தானுங்க...ரொம்ப அதீதமாஒரு படத்தின் மேல் ஆர்வம் இருந்து அது பார்த்தபிறகு விருப்பாகவோ வெறுப்பாகவோ மாறும் போதுராத்திரி ஒரு மணியானாலும் எழுதி விடுகிறேன் :)

Anonymous said...

Very funny

Post a Comment

Related Posts