Wednesday, October 10, 2012

ஜில்பான்ஸ் - 101012

ரொம்ப நாள் கழித்து ஜில்பான்ஸ் எழுதுகிறேன்.

சமீபத்திய சினிமா பர்ஃபி, சுந்தரபாண்டியன் என்று சகட்டு மேனிக்கு எவ்வளவோ படங்கள் பார்த்தாலும் சில படங்கள் மட்டுமே இதை எப்படியாவது நியாபகம் வைத்து ப்ளாகில் போட்டால்,நம்மையும் ரவுடி என்று ஊர் ஒத்துக்கொள்ள உத்தரவாதம் அளிக்கும். அந்த வரிசையில் இங்கே வீடு காலி செய்து ஊருக்கு கிளம்பிய நண்பரிடம் ஆட்டையைப் போட்டு பார்த்த படம் தான் "Valkyrie". இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்களே அவரை போட்டுத் தள்ளப் பார்த்து தோல்வியில் முடிந்த ஒரு நிகழ்வைப் பற்றிய படம். ஹிட்லரை, இத்தோடு சேர்த்து அவர் ஆட்களே மொத்தம் பதினைந்து முறை போட்டுத் தள்ள முயற்சி செய்திருக்கிறார்கள். அவற்றில் இதுவே கடைசி முயற்சி. நிகழ்வு உண்மையென்பதாலும், படத்தில் தடாலடி திருப்பங்களுக்காக மசாலா ரொம்ப சேர்க்காமல் குடுத்திருந்ததாலும் இந்தப் படம் ரொம்பவே பிடித்திருந்தது. டாம் க்ரூய்ஸ் பாத்திரமாகவே மாறிவிட்டார், கரண்டியாகவே மாறிவிட்டார் என்று விமர்சன ஜல்லியடிக்குமளவிற்கு குடுத்த காசுக்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார். அதை விட சுவாரசியமான ஒரு விஷயம் அவர் நடித்த அந்த கலோனல் Claus von Stauffenberg  - ஒரிஜினலாகவே சைட் போஸில் டாம் க்ரூஸ் மாதிரி தான் இருக்கிறார். இதற்காகவே டாம் க்ரூஸ் இந்த வேஷம் கட்ட ஒத்துக்கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள். ஹாலிவுட்டில் சோபாவில் இழுத்துப் போட்டு திகட்ட திகட்ட ஆகிருதியை காட்டும் காட்சிகள் இல்லாமல் ஒரு நிஜ நிகழ்வை படமாக்கும் போது ஆவணப் படமாய் உணர்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளம். அதையும் தாண்டி படத்தை விறுவிறுப்பாக்கும் விஷயத்தைத் தான் "குட் ஸ்க்ரீன்ப்ளே" என்று வெள்ளைக்காரன் விளிக்கிறான். அந்த குட் ஸ்க்ரீன் ப்ளே இந்தப் படத்தில் கலையோடு கூட்டணி போட்டு நம்பகத்தன்மையை வெகுவாய் கூட்டி நம்மை ஜெர்மனியில் ஹிட்லரோடு பிரயாணிக்க வைக்கிறது. உலகை கலக்கிய ஒரு சர்வாதிகாரிக்கு எவ்வளவு பாதுகாப்பு இருந்திருக்கும், அவரை போட்டுத் தள்ளி ஆட்சியைப் பிடிப்பதென்பதற்கு எவ்வளவு மெனெக்கெட வேண்டும். அந்த நுணுக்கங்களையெல்லாம் அழகாக படம் எடுத்துக் காட்டுகிறது. சொல்வதற்கு நம்மால் முயற்சி கூட எடுக்க முடியாத அளவுக்கு பெயரில் ஸ்பெல்லிங் உடைவர்கள் எல்லோரும் ஹிட்லரை கொல்ல செய்யும் இந்த ஆப்பரேஷன் "Valkyrie" தோல்வியாகி முயன்றவர்கள் எல்லாரும் போட்டுத் தள்ளப்படுகிறார்கள். இதில் பெரிய சோகம் என்னவென்றால் அடுத்த பதினோராவது மாதத்தில் ஹிட்லர் அவரே தூக்கு போட்டு சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார். "(ஹிட்லரை கொல்ல முயற்சித்ததின் மூலம்) நீங்கள் அவமானத்தைக் கொண்டு வரவில்லை, (சர்வாதிகாரத்தை) எதிர்த்து உங்கள் உயிரைக் குடுத்து சுதந்திரத்திற்கும், நீதிக்கும் ஒரு அடையாளத்தை கொண்டு வந்தீர்கள்" என்று நச்சென்று படம் முடியும். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள் இந்த வரலாற்று த்ரில்லர் உங்களுக்கும் பிடிக்கும்.

தற்போதைய பயம்
இந்த இண்டர்நெட் யுகத்தில் "உலகம் ரொம்பவே சின்னதுங்க" என்று கலிலியோ மாதிரி நிறைய பேர் ஸ்டேட்மெண்ட் விட்டுக் கேட்டிருக்கிறேன். நானும் "wow world is so small " என்று நிறையவே தோளைக் குலுக்கியிருக்கிறேன். சரி மேட்டருக்கு வருகிறேன்.
ஒரு நாளைக்கு நீங்க கண்டிப்பா மூன்று வேளையும் சாப்பாடுக்கு முன்னால் பேஸ்புக் பார்க்கணும், இல்லாட்டா பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும் என்று டாக்டர் சொல்லியிருப்பதால் அடிக்கடி பேஸ்புக்கில் உலக அமைதிக்கு என்னாலான பிரார்த்தனைகளைச்  செய்வேன். என் சேவையை பாராட்டி பேஸ்புக்கும் இவரை உனக்குத் தெரியுமா பாரு என்று என் மனைவி ப்ரொபலை பிரெண்ட் சஜெசன் என்று காட்டும். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்து நானும் அதை டிஸ்மிஸ் செய்வேன். பேஸ்புக்குக்கே போரடித்துவிட்டது போல, சமீபத்தில் வேறொரு பெண்ணுடைய ப்ரொஃபைலை காட்டியது . பெயர் எங்கயோ கேள்விப் பட்டது மாதிரி இருக்கே என்று க்ளிக் செய்து ஃபோட்டோவைப் பார்த்தால்...ஆத்தாடீ.... நான் ஜொள்ளித் திரிந்த காலத்தில் எழுதிய  "குத்துவிளக்கு"  . தலை தெறிக்க ஓடியே வந்துவிட்டேன். கொஞ்ச நாள் முன்னாடி தான் "எங்களப் பத்தி ப்ளாக்ல போஸ்டாடா போடுற"ன்னு ஒரு கும்பல் தொரத்தித் தொரத்தி அடிப்பது மாதிரி கனாக் கண்டேன். நிறைவேறுகிற நாள் ரொம்ப தொலைவில் இல்ல போல.


சமீபத்திய வருத்தம்
இன்னும் என்னால இந்த வருத்தத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. இப்ப கொஞ்ச நாள் முன்னாடி சில பல பிரச்சனை என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அந்த சமயத்தில் நடந்தது இது. இங்கே லண்டனில் ஒரு தோழி இருக்கிறார். தோழி என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று தொணிக்குமளவுக்கு இசைத் திறமை வாய்ந்த ஒரு வி.ஐ.பி. ஐரோப்பாவில் பல பெரிய பெரிய உலக நிகழ்ச்சிகளிலெல்லாம் பெர்பார்மென்ஸ் குடுப்பவர். இவருக்கு நம்ம இசைஞானி இளையராஜா மிக நெருக்கும். "நீ தானே என் பொன்வசந்தம்" இசைக்கு இங்கே லண்டன் வந்திருந்த போது தோழி தான் கூடவே இருந்து இசையமைப்பில் உதவிகள் செய்து வந்தார். ராஜா சாரும் தோழியும் சேர்ந்து ஒரு வித்தியாசமான இசை நிகழ்ச்சி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. "எப்படியாவது ஒரு நாள் மீட் பண்ணணும் ஏதோ பார்த்து செய்யுங்க" என்று பிட்டைப் போட்டுவைத்திருந்தேன். "உங்களுக்கில்லாமலா, கவலையே படாதீர்கள் என்று சொல்லி வைத்திருந்தார். பார்க்கும் போதெல்லாம் நீ.தா.என்.போ.வ இசையமைப்பில் நடந்த விவரங்களையெல்லாம் சொல்லுவார் (ஃபோனில் ஒரு பாட்டின் ரெக்கார்டிங்கையும் கூட பார்த்தேன்). ஒரு அசுபயோக தினத்தில், எனக்கிருந்த ஆயிரத்தெட்டு பிரச்சனையில் ஒரு பிரச்சனையின் உச்சகட்டம். இதன் காரணமாக ஆபிஸில் காலை லீவு சொல்லி எல்லா மீட்டிங்களையும் மதியத்திற்கு தள்ளிப் போட்டு வைத்திருந்தேன். மதியம் சரியாய் மீட்டிங்கிற்கு உள்ளே போகப் போகும் போது தோழியிடம் இருந்து ஃபோன். "டுபுக்கு அப்படியே கிளம்பி வாங்க, ராஜா சார், கவுதம் மேனன் எல்லாரும் இங்க இருக்கோம். ராஜா சாருக்கு லண்டன்ல ஷாப்பிங் போனுமாம், என்னைக் கூட்டிப் போகச் சொல்லுகிறார், நீங்க வந்தீங்கண்ணா இன்னிக்கு முழுவதும் எங்க கூட சேர்ந்து இருக்கலாம்னு" அழைப்பு. எனக்கோ உள்ளே மீட்டிங் ரூமில் ஆட்களை வைத்துக் கொண்டு போகவே முடியாத சூழ்நிலை. அப்புறம் தோழியே அவருடைய காரை எடுத்துக்கொண்டு போய் வந்து அன்று நடந்த கதையெல்லாம் சொல்லி ...விடுங்க வயத்தெரிச்சல் இன்னும் தாங்கல. நம்மளுக்குன்னு வந்து சேருமே. பார்ப்போம் அடுத்த வருஷமாவது அதிர்ஷ்டம் இருக்கான்னு.

இந்த வார கேள்வி

sh... கும்கி என்றால் என்ன என்ற ஒரு அருமையான கேள்வியை மயிருலு பதிவில் கேட்டார். "வெரி குட் கொஸ்டின்.. உங்க ஆர்வத்த நான் பாராட்டுறேன்" என்று நைஸாக வாய்தா வாங்கிக்கொண்டு தேடிப் பார்த்ததில் - காட்டு யானைகளை வேலை வாங்கும் போதோ பழக்கப் படுத்தும் போதோ, இல்லை அவை மனித குடியிருப்பு பகுதிகளில் வந்துவிட்டால் அவற்றை எல்லாம் அடக்க /வழிகாட்ட ஒரு பழகிய யானை வைத்திருப்பார்கள். அந்த யானைக்குப் பெயர் தான் கும்கி. இப்படி கேள்வி கேட்டு நானும் விஷய்ம் அறிந்து கொள்ள உதவிய sh...க்கு மிக்க நன்றிங்கோவ்.

19 comments:

sriram said...

super
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

ஹை, மீ த ஃபர்ஸ்ட்டூ

துளசி கோபால் said...

//பேஸ்புக்கும் இவரை உனக்குத் தெரியுமா பாரு என்று என் மனைவி ப்ரொபலை பிரெண்ட் சஜெசன் என்று காட்டும். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்து நானும் அதை டிஸ்மிஸ் செய்வேன்//

:-))))))))))))))))))))))))

Anonymous said...

Wow dubukku,
Thodarattum ungal sevai.
Natpudan,
Vikram Balaji

Unknown said...

அட ! நேத்து ராத்திரி பாத்து, இன்னிக்கி கார்த்தால இங்க வந்தா ஒரு பதிவு ! டுபுக்கு, உங்களுக்கு நெசமாவே ஒடம்பு கிடம்பு சரி இல்லையோன்னு கவலையா இருக்கு. சொம்மா உல்லல்லாகாட்டிக்கு :-) நீங்க இப்புடியேஏஏஏஏஏ அழகா அம்சமா அடிக்கடி பதிவு போட்டுண்டே இருங்க, நாங்களும் சமத்தா படிச்சு பின்னூட்டம் போடறோம் என்ன ? குட் பாய்.

இளையராஜா அவர்களை மிஸ் பண்ணினது பெரிய இழப்பு தான். எனக்கே மனசு பதறுதே ! கவுதம் மேனன் உங்கள அடுத்த படத்துல ஹீரோவா போடலாமான்னு ஸ்கிரீன் டெஸ்டுக்குத்தான் கூப்டாராம், உங்க தோழி சொன்னாங்க. சரி விடுங்க, அந்த டாம் க்ரூஸ் பட டைரக்டர் தன் அடுத்த படத்துக்கு உங்கள கூப்பிடலாம்.

குத்துவிளக்க பாத்து ஜுரம் வந்துடுத்தா ? இதுக்குத் தான் அடிக்கடி FB பக்கம் போகக்கூடாதுங்கறது :-)

Good post. I am not a great movie buff, but enjoyed your writing. Well done. Lakshmi

எல் கே said...

//sh... கும்கி என்றால் என்ன என்ற ஒரு அருமையான கேள்வியை மயிருலு பதிவில் கேட்டார்.//

முன்னாள் பதிவர் . இப்போதைக்கு கூகிள் ப்ளஸ்ஸில் காலம் தள்ளுபவர்...

//இவரை உனக்குத் தெரியுமா பாரு என்று என் மனைவி ப்ரொபலை பிரெண்ட் சஜெசன் என்று காட்டும். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்து நானும் அதை டிஸ்மிஸ் செய்வேன். /

க்கும் மேலிடத்துக்கு இது தெரியுமா

தினபதிவு said...

மிக அருமை
வணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது


தினபதிவு திரட்டி

Unknown said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜில்பான்ஸ் ஆ?? பாத்திரமாகவே! கரண்டியாகவே பிட் மிகவும் அருமை

அமுதா கிருஷ்ணா said...

குத்துவிளக்கு ஒரு நாள் குத்தாமல் விடாது. கும்கி விளக்கம் அருமை.

Anonymous said...

மீட்டிங்கிற்குப் போய் அடுத்த மீட்டிங் டேட்டும் அங்கே என்ன கொறிக்கலாம் என்று டிஸ்கஸ் செய்வதைத்தானே அய்யா எல்லாரும் செய்வார்கள். அதை ஒரு நாளைக்கு ஒதுக்கி வைத்து விட்டு, 3 இடியட்ஸில் மாதவன் விழறாப்போலே மயங்கி விழுந்து விட்டு, நானே ஆஸ்பத்திரிக்குப் போயிக்கறேன் இப்படி மயக்கமாவே என்றெல்லாம் சொல்லி.....அட ராமா....இப்படி ஒரு வாய்ப்பை வுட்டதோட இல்லாம அந்த சோகத்தை எங்க மேலையும் ஏத்தி விட்டீங்களே, நியாயமா இது?

ஹிட்லர் கொலை முயற்சி பற்றிய டாகுமெண்டரியை டிஸ்கவரியில் பார்த்திருக்கிறேன். அவர் துப்பாக்கியால் அல்லவா சுட்டுக் கொண்டார்?

கும்கி விளக்கம் அருமை, ரொம்ப நன்றி, ஃபேஸ்புக் சிகரெட், மது இதெல்லாத்தையும் விட மோசமாம். அதனால அந்தப் பக்கம் ரொம்ப தலை வைக்கறதில்லை, அதும்பாட்டு அனுமார் வால் மாதிரி நீண்டுகிட்டே போகுது!

நன்றி, ramdaus.wordpress.com

Madhuram said...

So bad that you missed meeting Maestro. Anne ungalukkum en raasi dhaan pola irukku, kaiku ettinadhu vaaiku ettama pogaradhula. Namma raasi namakku munnadi poi nikkudhu. Enatha solla!

Sh... said...

உண்மையா சொல்லணும்னா, இந்த பதிவு, முந்தைய இரு பதிவுகளை விட நன்றாக இருக்கிறது.

// ஒரு நாளைக்கு நீங்க கண்டிப்பா மூன்று வேளையும் சாப்பாடுக்கு முன்னால் பேஸ்புக் பார்க்கணும், இல்லாட்டா பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும் என்று டாக்டர் சொல்லியிருப்பதால் அடிக்கடி பேஸ்புக்கில் உலக அமைதிக்கு என்னாலான பிரார்த்தனைகளைச் செய்வேன் // -- ரொம்ப ரசித்தேன்.

கும்கி விளக்கம் சூப்பர். உங்க முயற்சிக்கு நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

குத்து விளக்கை இன்னும் கொஞ்சம் விளக்கியிருந்தால், நாங்களும் சொல்ல வேண்டிய இடங்களில் சொல்லி எங்களால் முடிந்த தொண்டை ஆற்றியிருப்போம்..சான்ஸ் மிஸ்ட்..:(

வால்க்யைரி(?) படம் எனக்கும் ரொம்பவும் பிடித்தது..திட்டம் தோல்வியுரும் கட்டங்களில் டாம் சூப்பராக நடித்திருப்பார்.

ராசாவைத் தொலைத்தது மிகவும் வருந்த வேண்டிய நிகழ்வே..தொலைக்காதிருந்திருந்தால், நாங்களும் சில காலம் கழித்து, என்னுடைய நண்பர் ஒருவர்,!@#$% ன் இசையமைப்பாளர், அப்போது லண்டனில் இருந்தார்' னு ஆரம்பித்து கொசுவத்தி சுத்த வசதியா இருந்திருக்குமே!

|| உயிரைக் குடுத்து ||
பேச்சு வழக்கில் எழுதியிருக்கலாமோ என்பதால் மாப்பு விடப்படுகிறது.! :))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

தோல்வியுறும்-தட்டச்சுப் பிழை

Paavai said...

குத்து விளக்கு மூஞ்சி எல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் மறந்து இருக்கணுமே ... என்ன நடக்குது???? தங்கமணி கேளுங்க ப்ளீஸ் . .....நாராயண நாராயண

Anonymous said...

Downfall (Der Untergang (original title)) படத்தை பாருங்க. நிச்சயம் பிடிக்கும்.

Venkat

Anonymous said...

"ஹிட்லர் அவரே தூக்கு போட்டு இறந்துவிட்டார்." - கவுத்திடீங்களே !! ஹிட்லர் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Venkat

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா...நச்சுனு விமர்சனம். தற்போதய பயம் தெளிய நானும் பேஸ்புக் ஆண்டவரை பிராதிச்சுக்கிறேன்...:) சரி விடுங்க நீங்க டைரக்ட் பண்ணும் போது ராஜா சார் கூட வொர்க் பண்ணாமலா போக போறீங்க.

Dubukku said...

ஸ்ரீராம்- :)) தல ஊருக்கு பத்திரமா வந்து சேர்ந்தீங்களா.

துளசி - :))

விக்ரம் பாலாஜி - நீங்க சேவைன்னு போஸ்ட் போடற ஃபிரீக்வென்சிய சொன்னீங்களான்னு தெரியல..:)) ,மிக்க நன்றி

ல‌ஷ்மி - :))) பாருங்க நீங்க கவலபடறீங்கன்னு போஸ்ட் ஃபிரீக்வென்சிய குறைச்சிட்டேன் :) ஆனாலும் ஓவர் லொள்ளுங்க என்ன கவுதம் மேனன் கூப்பிட்டாராமாம்? :)))

எல்.கே - //க்கும் மேலிடத்துக்கு இது தெரியுமா// - அது ஒரு பெரிய சோகக் கதை. ஒரு போஸ்ட்ல சொல்றேன்

தினபதிவு - மிக்க நன்றிங்கோவ்

Avis Namar - மிக்க நன்றிங்கோவ்

அமுதா - இந்த கமெண்டுக்கும் இன்னொரு பதிவில் போட்ட கமெண்ட்டிற்கும் மிக்க நன்றிங்க. பழைய பதிவுகளைத் தேடிப் படிப்பது பற்றி நீங்கள் சொன்னது ரொம்ப ஊக்கமாய் இருந்தது, மிக்க நன்றி.

ராமதாஸ் - நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் ஆனா அன்னிக்கு அத மாதிரி செய்ய முடியவில்லை. அந்த மீட்டிங்க்ல எதுலயுமே கவனம் செலுத்த முடியல..ரொம்ப வயத்தெரிச்சலாய் இருந்தது.அடடா ஆமாம் சே தப்பா அடிச்சிட்டேன் :))) சுட்டுக்கிட்டு இல்ல செத்துட்டார். திருத்தியதற்கு மிக்க நன்றி.

மதுரம் - -ஹூம்ம்ம்ம் ஆமாங்க ஆனா அடுத்த வருஷம் இளையராஜா இங்க வருவார் அப்ப கண்டிப்பா எப்படியும் மீட் பண்ணிடுவேன்னு தீர்மானமா இருக்கேன் பார்ப்போம் :)))

ஷ்- :)) மிக்க நன்றிங்க. மிச்ச ரெண்டு போஸ்டும் சுமாரா இருக்குன்னு அழகா சொல்லியிருக்கீங்க

அறிவன் - ஆஹா என்ன ஒரு உதவி மனப்பான்மைங்க உங்களுக்கு. அண்ணாச்சி ஆமாம் அது பேச்சு வழக்குக்காக அப்படி எழுதப்பட்டது. இருந்தாலும் எங்கயாவது தப்பு விட்டா கண்ண்டிப்பா சொல்லுங்க ப்ளீஸ்.

பாவை - கேட்கவே வேண்டாம் அடிக்கடி அவங்ககிட்ட தான் நம்ம சூர தீர பராக்கிரமங்களைப் பற்றி சொல்லுவேன் :)))

சாம்ராஜ்ய ப்ரியன் - :))

வெங்கட் - மிக்க நன்றிங்க உங்க பரிந்துரைக்கு. மேலும் இத மாதிரி படங்கள் இருந்தால் கண்டிப்பாக முடிந்த போது சொல்லுங்க.

அனானி - அடடா ஆமாம் சே தப்பா அடிச்சிட்டேன் :))) சுட்டுக்கிட்டு இல்ல செத்துட்டார். திருத்தியதற்கு மிக்க நன்றி.


அப்பாவி - //ரி விடுங்க நீங்க டைரக்ட் பண்ணும் போது ராஜா சார் கூட வொர்க் பண்ணாமலா போக போறீங்க. // ஹி ஹி நீங்க விளையாட்டுக்குச் சொல்லியிருந்தாலும் ஜில்லுன்னு இருந்ததுங்க. மிக்க நன்றிங்கோவ்

Related Posts