Wednesday, September 26, 2012

மீசை

தாவணி பாவனாவா இல்லை புடவை ஸ்னேகாவா என்ற வயதுக்கு வந்த பெண்களுக்கு குழப்பமான கெட்டப் தருணம் ஒன்று இருப்பது போல், ஆரம்பகால அரவிந்த்சாமியா இல்லை தற்கால ஹிரிதிக் ரோஷனா என்று வயதுக்கு வந்துகொண்டிருக்கும் எல்லா ஆண்களுக்கும் ஒரு மிக முக்கியமான குழம்பேஸ்வரா மீசை தருணம் கண்டிப்பாக உண்டு.

சமூகத்தில் பெண்களுக்கு ஓலை கட்டி சடங்கு செய்வது போல் இல்லாமல், மீசை மட்டுமே ஆணகள் வயசுக்கு வந்துவிட்டதற்கான அறிகுறியாய் இருப்பது பெரிய இம்சை. "ம்ம்ம்..அரும்பு மீசை.. என்னடா வயசுக்கு வந்தாச்சு போல " என்று பக்கத்து வீட்டு அக்கா நண்பனின் கன்னத்தைக் செல்லமாய் கிள்ளும் போது, எனக்கு மட்டும் ஏன் இன்னும் பாலிஷ் போட்ட மொசைக் மாதிரி மழுமழுவென்று இருக்கு என்று சுரண்டிப் பார்த்திருகிறேன். "கட்டிங் மட்டுமா, இல்ல ஷேவிங்குமா தம்பி" என்று நண்பனை மட்டும் நாவிதர் கேட்கும் போது, தினத்தந்திக்குப் பின்னால் "லா லா லா" என்று விக்ரமன் பட நாயகி மாதிரி உருகியிருக்கிறேன். "இங்க பாரு எனக்கு மீசை இல்லாட்டியும் பரு வந்திருச்சு" என்றாலும் உதாசீனப் படுத்தும் சமூகத்தை எண்ணி வெட்கப் பட்டிருக்கிறேன். மயிர் வளம் கொழிக்கும் கேசவர்த்தினி கூட மகசூலைப் பெருக்கவில்லை என்பதை நினைத்து வேதனைப்பட்டிருக்கிறேன்.

"உம்மேல ஆசை வைச்சேன் ; வேறெதுக்கு மீசை வைச்சேன்" என்று சங்க இலக்கியங்களாகட்டும், "நீ மட்டும் மீசை வைச்ச ஆம்பிளையா இருந்தா.." என்று தொடை தட்டி ராஜ்கிரண், விஜய்குமார் சமஸ்தானங்கள் விடும் உதாராகட்டும் - இந்த இழவெடுத்த ஆண்மைக்கும் மீசைக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. இதில் வயசுப் பையன்களுக்கு மீசை இல்லாவிட்டால் ஆயிரத்தெட்டு சங்கடங்கள் வேறு. தே.சீனா நடிகரும் "ந"ன்னா நடிகையும் நடித்த மேட்டர் படம் தான் இதுவரை வந்த நீலக்காவியங்களிலேயே சிறந்தது என்று தெருவில் யாரோ பார்த்ததாக புருடா விடும் அறிவுப்புரட்சி விவாதங்களுக்கு எண்ட்ரி டிக்கெட்டே மீசை தான். இல்லா விட்டால் "யாராவது இந்தப் பக்கம் வந்தா சொல்லு" என்று கபடி போட்டி சப்ஸ்ட்டியூட் மாதிரி வெளியே உட்கார வைத்துவிடுவார்கள். லேசாகவாவது வளர்வது வரைக்கும் "இன்னும் மொளச்சு நாலு இலை விடலை அதுக்குள்ள" என்று போவோர் வருவோர் உள்ளிட்ட சமுதாய அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டே ஆகவேண்டும்.

"சும்மாவாச்சும்...அடிக்கடி ஒரு தரம் ஷேவ் பண்ணுடா அப்போ தான் வளரும்" என்பது இரண்டும் கெட்டான் பருவத்தின் ஆணித்தரமான ஐதீகம். மாமாவின் ஷேவிங் செட்டை ஆட்டையைப் போட்டு அகல உழாமல் ஆழ உழுது முதல் சவரம் ரத்தம் பார்த்து, ப்ளாஸ்திரி போட்டதாலோ என்னவோ மூக்குக்கு கீழே ரொம்ப நாள் வானம் பார்த்த பூமியாகவே இருந்தது. "கவலப் படாத மச்சி ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள்...உனக்கும்" என்று சக ஐ.ஏஸ்.எஸ்கள் அட்வைஸ் கொடுக்கும் போது, நல்லதங்காள் ஏன் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்தார் என்பது நன்றாகப் புரியும். ஒரு சுபயோக சுபதினத்தில் மூக்குக்கு கீழே முதல் பூனை முடியைப் பார்த்தது வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள். அதற்கப்புறம் தினமும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாலும், தாய்மாமா யாரும் வண்டி பூட்டி நான் வயசுக்கு வந்ததை பாட்டு பாடி கொண்டாததால், மீசை முழுதாக வந்த சரித்திர நாளை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

அரவிந்சாமி, அஜீத், போன்றவர்களைத் தானே பொண்ணுங்களுக்கு பிடிக்கிறது என்று மீசை வளர்வதற்கு முன் செய்த முதல் சவரமே கடைசி சவரமாய் முடிந்து, அதற்கப்புறம் இன்று வரையிலும் மீசையை எடுத்ததே இல்லை. ஆரம்பத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடு மாதிரி நடுவில் மட்டும் ஒரு சின்ன gap இருந்தது . இரண்டு பக்க மீசைக்கும் நடுவில் இடைவெளி இருக்கிறதே இதனால் பின்னாடி தாம்பத்யத்தில் ஏதாவது பிரச்சினை வருமா என்று "அன்புள்ள சினேகிதனே"க்கு எழுதிப் போடுவதற்குள் அதுவே வளர்ந்துவிட்டது. என்னுடைய வாழ்க்கை இலட்சியத்தைப் போலவே நெல்லை எக்ஸ்பிரஸ் ஸ்டையில், கரடியாண்டி ஸ்டைல் என்று காலத்திற்கேற்ப மீசை பல்வேறு வடிவங்களைப் பார்த்திருக்கிறது.

ஆனால் இந்த மீசையின் அருமை பெருமை அறியாமல் இதை மேற்கத்தியர்களைப் போல் யாரும் பழிக்க முடியாது. சேரிட்டிக்கு பணம் பிரிப்பவர்கள் அதை சுவாரசியமாக்க பல கோமாளித்தனம் செய்வார்கள். அதில் தலையாயது மீசை வளர்க்கிறேன் பேர்வழி என்று வளர்த்துக்கொள்வார்கள். போகட்டும்,. ஆனால் அதற்காக மீசை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் சாக்ஸ் மட்டும் அணிந்து கொண்டு நடிக்கும் நீலப் பட நடிகர்கள் என சித்தரிப்பதை என்னவென்று சொல்வது. அதிலும் ஆபிஸில் எல்லா பெண்களும் இவர்களிடம் இதையே "யூ லுக் லைக் அ போர்ன் ஸ்டார்" என்று கொஞ்சிக் கொஞ்சி சொல்வது இன்னமும் கொடுமை. ஒருவன் என்னிடம் வந்து "நீ வருடம் பூராவும் மீசை வைத்துக்கொண்டிருக்கிறாயே" என்று ஆரம்பித்தான். "அது ஒன்று தான் பாக்கி, இன்னமும் கொடுப்பினை இல்லை, நடிச்சு ரிலீசானா சொல்றேன், போயிட்டு வா ராசா" என்று அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கலாய்க்கிறாராமாம்.

காலையில் இந்த மீசையை ஒரு தேர்ந்த சிற்பியைப் போல் செதுக்குவதற்கு இதுவரை என் வாழ்நாளில் செலவழித்த நேரத்தைக் கணக்கிட்டால்... நடித்து பல ஆஸ்கர்கள் வாங்கியிருக்கலாம். ஆனால் இந்த பெண்கள் இருக்கிறார்களே பெண்கள் இவர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. "ஒரு மீசை வளர்பதற்கு அடேய் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்" யோசித்துப் பார்க்கிறார்களா? அஜீத்தை பிடிக்கிறவர்கள் திடீரென்று மேடி, சித்தார்த், என்று மீசையில்லா பக்கமாய் சரிந்துவிடுகிறார்கள். கூட இருக்கும் சக ஐ.ஏ.எஸ்களும் கன்வேர்ட்டட் மேடியாய் மாறிவிடுகிறார்கள். என்னை மாதிரி இதுவரை ஒரு முறை கூட ஷேவ் செய்யாத வெர்ஜின் மீசைக்காரர்கள் மட்டும் பழைய பாக்யராஜ் பட நாயகி மாதிரி "மீசை எடுத்தா என்னமோ மாதிரி இருக்கு" என்று நிலம் பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் என்னை மாதிரி வெர்ஜின் மீசை நணபன் ஒருவனுடைய மீசை திடீரென்று ஒரு நாள் காணோம். என்ன ஏதென்று பதறிப் போய் கேட்டால், "இல்ல மச்சி, மீசை இருந்தா மதிக்க மாட்டேங்கிறாய்ங்க. பெரிய போஸ்டுக்கெல்லாம் போகனும்னா மீசையை எடுத்தா தான் கன்சிடரே பண்ணுவாங்களாம்" என்ற போது ங்கொய்யால வீரப்பன இப்படி அநியாயமா சுட்டுக் கொண்ணுட்டீங்களேடா என்று வருத்தப் பட்டேன். திடீரென்று ஏதாவது கம்பேனி சி.ஈ.ஓ ஆகவேண்டிய கட்டாயம் வந்தால் என்று, ஃபோட்டோ ஷாப்பில் மீசையை எடுத்துப் பார்த்தேன். தங்கமணி ப்ளாக் அண்ட் வொயிட் பட கதாநாயகி மாதிரி புறங்கையை கடித்துக் கொண்டு வீல்ல்ல்ல்ல் என்று அலறி ஓட்டம் எடுத்துவிட்டார். சே...அப்பவே மீசையை எடுத்து ஹிரிதிக் ரோஷனா அப்கிரேட் ஆகியிருக்கணும். "என்னத்துக்கு இதைப் போய் வளர்த்து..பேசாம மழிச்சிடேன்" என்று அப்பா சொன்னபோது கேக்கலை, ஹும்ம்ம்ம்ம் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

சும்மா ஒரு ரெபரென்ஸுக்கு :)

23 comments:

எல் கே said...

பாஸ் நீங்க நம்ம கட்சி.. நானம் விர்ஜின் மீசைக்காரன்தான் அப்ப அப்ப ட்ரிம் மட்டுமே

//இந்த மீசையின் அருமை பெருமை அறியாமல் இதை மேற்கத்தியர்களைப் போல் யாரும் பழிக்க முடியாது.//

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை மாதிரிதான் பாஸ் இதெல்லாம்...

எல் கே said...

//பெரிய போஸ்டுக்கெல்லாம் போகனும்னா மீசையை எடுத்தா தான் கன்சிடரே பண்ணுவாங்களாம்" //

மீசை வளர்போருக்கு இடஒதுக்கீடு கேட்டு போராடுவோமா ??

பினாத்தல் சுரேஷ் said...

பதிவை விடுங்க.. இன்னொரு உலகமகா டவுட்டு..

பலநூறு கிலோமீட்டர் கடந்து உங்க ஊர்லேயும் அதே தே.சீ + ந வதந்தி உலாவியதா? நெருப்பில்லாமல் இவ்வளவு கிலோமீட்டர் புகையுமா? யாராச்சும் கன்ஃபர்ம் பண்ணுங்களேன்.

Katz said...

மிக ரசித்தேன்.

CS. Mohan Kumar said...

ஆமா கடைசியிலே ஒரு ஹீரோ போட்டோ போட்டிருக்கீங்க. அவர் பேரு சொல்லலை :))

Unknown said...

தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே

Anonymous said...

வராதா வராதாவென்று முதலிலும்
வந்த பின் கறுப்பாகாதா என்றும்
பின் ட்ரிம் செய்வதில் அலுப்புண்டாகிப் பின்
என்ன தொல்லைடா இது என்று முழுதாக மழிக்கலாமென்றால் ஏதோ கவச குண்டலமில்லாக் கர்ணனைப் போல ஒரு ஃபீலிங் வந்துவிடும். பத்தாவதில் ஹுவாங் சுவாங் என்று பெயரிட்டார்கள் எனக்கு. சரித்திர, பூகோள அறிவை மெச்சுகிறார்கள் போல என்று நினைத்தால் மீசைக்கு நடுவில சைனாக்காரன் மாதிரி கேப்பு, அதான் என்று மானத்தை வாங்கி விட்டார்கள்.

maithriim said...

இன்னும் வெள்ளை முடி வந்த பிறகு அது ஒரு டார்ச்சர் :-) தலை முடி வெளுக்கும் முன் முக முடி வெளுத்து விடும். நல்ல நகைச்சுவையான பதிவு :-)

amas32

அமுதா கிருஷ்ணா said...

அட பாவமே. இந்த மீசை கெட்ட கேடு இத்தனை பாடு படுத்துதா என்ன? லாஸ்ட்டா ஒரு தம்பி இருக்காரே அவர் யாரு? மீசை இல்லாட்டாலும் நல்லாதான் இருக்கும் அந்த தம்பி.

Anonymous said...

மீசைக்கு ஒரு பூசையே போட்டிருக்கீங்க :)

நாங்கூட முந்தி மீசை வெச்சிருந்தேன். மீசையிருந்தாதான் முகம் பாக்கும்படி இருக்கும்னு நெனச்சுதான். பெங்களூர்ல மீசையில்லாம ரொம்பப் பேரு இருக்குறதப் பாத்து ஒரு நாள் மீசையெடுத்தேன். முதல்ல வித்யாசமா இருந்த மாதிரி இருந்தாலும் அப்புறம் அதே பழகிருச்சு.

KSB said...

"காலையில் இந்த மீசையை ஒரு தேர்ந்த சிற்பியைப் போல் செதுக்குவதற்கு இதுவரை என் வாழ்நாளில் செலவழித்த நேரத்தைக் கணக்கிட்டால்... நடித்து பல ஆஸ்கர்கள் வாங்கியிருக்கலாம்."


Oh my god...

Madhuram said...

Ennoda rangamaniyum ungala madhiri virgin meesaikaarar dhaan. Ippa onnu rendu vella mudi varudha, so eppa paarthalum meesaiya eduthudava nu kettukitte irukkaru. Naanum kitta thatta unga thangamani reaction thaan kuduthen. Neenga solra maadhiri andha meesaiya trim panna aambalainga selavu panra nerathula naanga deepavalikku 10 set dress select pannalam. Inimel Pothy's, Saravana stores vaasal la wait pannum bodhu gents avanga meesaiya trim pannaangana ladies pudava select panna romba neram eduthukaraanga nu complaint pannave maattanga. Rendu perukkum time poradhe theriyadhu.

Nat Sriram said...

கலக்கிப்புட்டீங்க..ஞானும் உங்க ஜாதி தான். பக்‌ஷே ஞான் என்ன செஞ்சு, ஃப்ர்ரெஞ்ச்சி வெச்சு..அதை ஏத்துக்கிறாங்க..இங்க மீசை வைக்க ஒரே வழி ஃப்ரென்ச்சி தான்..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| சும்மா ஒரு ரெபரென்ஸுக்கு :)||

அப்ப க்ளீன் வே' க்கு ஐடியா இருக்கு !?

அதெல்லாஞ் சரி, இப்பவும் கொஞ்சம் மூக்குக்கு நேர் கீழ கொஞ்சம் இடைவெளி தெரியுதே, இதுக்கு எதுவும் லேகியம், குளிகை ஐடியா?

சிரிப்பான்களுக்கிடையில்..
கொஞ்சம் நெட்டு மூஞ்சிக் காரர்களுக்கு மீசையை மழித்தால் சிறிது அழகாகவே இருக்கும்.

உருண்டை மூஞ்சிக் காரர்கள், பெட்டர் கீப் இட் ஃஸேப் !

()

மக்கா, எதெல்லாம் பதிவுக்கு தேத்துறீங்க !!! கத்துக்கனும்டே..

()

இதல இன்னொரு சைகாலஜியும் மண்டபத்தில சொல்றாங்க..ஆஃப்டர் 1985 பார்ன் லேடீஸ் லைக்ஸ், நோ மீசை மக்கள்ஸ்.பிஃபோர் 1985 பார்ன் லேடிஸ் லைக்ஸ் மீசை மக்கள்ஸ்..

அகில உலக வருத்தப்படா வாலிபர் சங்க டேட்டா பேஸில் இருந்து!

Ramachandran Krishnamurthy said...

Vaa. Voo Si. TKC. Maa. Po. Si. The world will forget them but not their moush. I didnt say Thalaivar had said this! Even GBShaw, einsteen had moush they were all public figures only in top most position in the universe. Even lord vishnu in his incarnation as lord parthasarathy still has the moush. Pls visit his temple in thillakeni in chennai. To be a CEO or top most position u need a vision to think or a brain only. They dont bother if u have moush or not! Live for u and ur wife. Not for somebody else. - Ramachandran Krishnamurthy. (its more than two years to comment ur post. I didnt have any choice than kaari thupping - yappa i will sleep peacefuly tonight :D)

Anonymous said...

vayasula superaana itema irunthirupeenganu ninaikkiren....

Unknown said...

kalakkal. oru meesaiya pathi ivlo ezutha mudiyuma ! vaay vittu sirichen ! romba surusuruppa agiteenga pola irukku, adikadi post podareenga ! good antha bayam irukatum :)
Lakshmi

Anonymous said...

. Engadget vegetal meesaiya Edith's veetuke varathanu pasangalum, wifem Anna sollitanga.:(

Anonymous said...

தல,
இப்ப டைட்டில்ல இருக்கிற படத்துக்குப் பதிலா, இந்த ரெபரென்ஸ் படத்த போடலாம்ல!! வாய திறந்துகிட்டிருக்கிற நம்ம அண்ணாச்சியாவது கோவப்படாம இருப்பாருல!!

Venkat

roses said...

Interesting…
Rosesandgifts.com

Dubukku said...

எல்.கே - அட நீங்களும் வெர்ஜின் மீசைக்காரரா :)) சங்கம் ஆரம்பிச்சிரவேண்டி தான் போல

பினாத்தலார் - ஆஹா இந்த புரளி உங்க ஊர்லயும் உண்டா...எங்க ஜில்லா மட்டும் தான்னு நினைச்சேன். ஆனா பாருங்க எல்லாரும் என்னோட பிரண்டு பார்த்தான்னு தான் சொல்லுவான் //யாராச்சும் கன்ஃபர்ம் பண்ணுங்களேன். // - பண்ணுங்கப்பா கேக்குறார்ல

katz - மிக்க நன்றி நண்பரே

மோகன்குமார் - ஹி ஹி போங்க சார் கூச்சமா இருக்கு :)

தமிழ்நத்தம் - மன்னிச்சிக்கோங்க உங்க பின்னூட்டம் புரியல

ராமதாஸ் - நீங்கள் சொன்னது மிகச் சரி உங்க பெயர் ஹுவாங் சுவாங்கா சூப்பர்:))

amas - இன்னும் வரல வந்தா நீங்க சொல்ற பிரச்சனை இருக்கு அவ்வ்வ்வ்வ்

அமுதா கிருஷ்ணா - ஆமாங்க ரொம்ப பாடுங்க இது. அந்தத் தம்பிக்கு நல்லா இருக்குங்கிறீங்க நோட் பண்ணிக்கிறேன் :)))

ராகவன் - அதே அதே அந்த முதல் தரம் எடுக்கிறது தான் கஷ்டம் அப்புறம் ஒன்னுமே இல்ல

கே.எஸ்.பி - :))) சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேங்க கரீக்டா அத நோட் பண்ணிட்டீங்களே

மதுரம் - ஓ உங்க ரங்கமணியும் வெர்ஜின் மீசைக்காரரா. ஆமாங்க வெள்ளை முடி வந்துச்சுனா கஷ்டம் நல்லவேளை எனக்கு இன்னும் இல்ல :)) ஹை புடவை கடை ஆசை தோசை

நடராஜ் - அதுல பாருங்க முதலாளி ப்ரெஞ்சில ஒரு பிரச்சனை. தாடில வெள்ளை முடி வந்திரிச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்


அறிவன் - யோவ் நல்லா பாருங்கய்யா கேப்லாம் இல்லை...நல்லாக் கிளப்புறாய்ங்கய்யா பீதிய. ஆனாலும் நீங்க சொன்ன 1985 ஸ்டாட்ஸ்டிக்ஸ் கொஞ்சம் ஆறுதலா இருக்கு :))

ராமசந்திரன் - காறிதுப்பியாச்சா? நிம்மதியாச்சா...:))) நீங்க குடுத்த மீசைக்காரர்கள் பட்டியல் அசத்தல். நான் சும்மா சர்காஸ்டிக்கா தான் எழுதியிருக்கேன் சீரியஸா எடுத்துக்காதீங்க (அவ்வ்வ் என்னையும் ஒரு ஆளா மதிச்சு...நீங்க தெய்வம்ண்ணே)

அனானி - அடாடா முத்தான கருத்த சொல்லிட்டு பெயர போடாம போயிட்டீங்களே... :))) அவ்வ்வ் ஆனாலும் என்ன அயிட்டம்ன்னு சொல்லீட்டீங்களே யு மீன் ஹாண்ட்ஸம் அயிட்டம் ? :P

லக்‌ஷ்மி - மிக்க நன்றி. சொன்ன மாதிரி அடிக்கடி எழுத முயற்சி பண்ணுகிறேன்

அனானி - ஆஹா உங்களுக்கும் மீசை எடுக்க தடாவா :)))

வெங்கட் - :))) இப்ப இருக்கிற வாய் திறந்த அண்ணாச்சி படம் மாதிரி வருமா :)) லவ் தேட் போட்டோ

ரோசஸ் - அடிக்கடி வாங்க

Anonymous said...

ஒத்தக்கையால தள்ளியே மரத்த சாச்சிபுட்டியே தல

Haji
Dubai

Mahesh said...

//தங்கமணி ப்ளாக் அண்ட் வொயிட் பட கதாநாயகி மாதிரி புறங்கையை கடித்துக் கொண்டு வீல்ல்ல்ல்ல் என்று அலறி ஓட்டம் எடுத்துவிட்டார்// அந்த சத்தம் கேட்டுத்தான் என்னமோ ஏதோன்னு ப்ளாக் பக்கம் வந்தேன்.

Post a Comment

Related Posts