மு.கு- இதுவரை நாடக பாணியில் எதுவும் எழுதியதே இல்லை. போன வருடம் இந்தியா வந்திருந்த போது அண்ணன் அப்துல்லா ஏற்பாடு செஞ்ச பிரியாணி மீட் மற்றும் பதிவர் சந்திப்பில் "தல" பாலபாரதி புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒரு நையாண்டி கான்செப்ட் இருக்கு நீங்க ஏன் எழுத ட்ரை பண்ணக் கூடாதுன்னு கேட்க, ஏனோ தானோன்னு போன வருடம் எழுதி குடுத்து, "தூ"ன்னு காறித் துப்பாமல் பால பாரதி "சாரி பாஸ்"ன்னு டீசெண்ட்டாய் ரிஜெக்ட் செய்த குறு நாடகம் தான் இந்த பதிவு. சும்மாத் தானே இருக்குன்னு நீங்களும் காறித் துப்ப எதுவாய் இங்கே பதிந்திருக்கிறேன். நாடகம் மாதிரி என்பதால் அண்ணன் உ.தான்னா பதிவு ரேஞ்சுக்கு இருக்கும். வேற வழியேஇல்லை துப்புவதற்கு உங்களுக்கு கொஞ்சம் டயம் எடுக்கும் :)
கதா பாத்திரங்கள்
மன்னார் – எப்போதாவது வரும் ஒரு கதா பாத்திரம்.(இந்த எப்பிசோடில் இல்லை) வயது 55 - சாப்டுவேரில் எல்லோரும் கோடி கோடியாய் கொட்டுகிறார்கள் என்று மளிகை கடையை நைட்டோடு நைட்டாக சாப்ட்டுவேர் கம்பேனியாக மாற்றிவிட்டு முதல் போணிக்கு நம்பிகையோடு காத்திருக்கும் வியாபாரக் காந்தம்.
“சித்தப்பு” சிதம்பரேசன் - வயது 45. மன்னாரின் மைத்துனர். மளிகைக் கடையில் கல்லாவைப் பார்த்துக் கொண்ட அனுபவத்தில் இப்போது புதுக் கம்பேனியில் ப்ராஜெக்ட் மேனேஜராய் ப்ரமோஷன் வாங்கியவர்.
ச.ரோசா - வயது 35. செவ்வாய் தோஷத்தால் கல்யாணமாகாத முதிர் கன்னி. இந்தியாவிலேயே சாப்ட்வேர் கம்பேனியில் டைப்ரைட்டரில் டைப் அடிக்கும் ஒரே டைப்பிஸ்ட்.
சொர்ணா - வயது 28. கம்பேனியில் சாப்ட்வேர் பற்றி ஏதோ கொஞ்சமூண்டு தெரிந்த ஒரே ”அய்யோபாவம்” ப்ரோக்ராமர்.
“சௌகார்பேட்” சீனு – வயது 30. கம்பெனி மளிகைக் கடையாய் இருந்த போது கணக்கெழுத வந்து தற்போது கம்பெனி மாற்றத்தில் அப்ரசண்டி ப்ரோக்ராமராய் புது அப்பாயிண்ட்மெண்ட் பெற்றவர்.
அழகுராஜா - முன்னாள் மளிகைக் கடையில் பொட்டலம் கட்டி தற்போது ஆபிஸ் பாய். ஆபீஸில் இவர் தான் "ஆல் இன் ஆல்" அழகுராஜா.
காட்சி – 1
ஆபீஸ் உட்புறம்
பகல்
(ஒரு சின்ன அறையில் சித்தப்பு நடுவாந்திரமாக சீட்டில் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் மன்னார் அன்ட் கம்பேனி - தி சாப்பாடுவேர் ஸ்பெஷலிஸ்ட் - கம்பெனி போர்டு தென்படுகிறது. சித்தப்பூ ஆவேசமாய் சர்குலரில் கையெழுத்துப் போட்டு டேபிளில் இருக்கும் மணியடிக்கிறார். அவருக்கு இரண்டு அடி தள்ளி ஸ்டூலில் எதிர்பக்கம் உடகார்ந்திருக்கும் அழகுராஜா மணியடித்தவுடன் திரும்பி சித்தப்புவை நோக்கி உட்கார்ந்து தலையிலடித்துக் கொள்கிறான்)
அழகுராஜா –அழகுன்னு அழகா கூப்பிட்டா திரும்பப்போறேன். இதுக்கு எதுக்கு பெரிய திஹார் ஜெயில் மாதிரி மணியடிச்சு கூப்பிடுறீங்க?
சித்தப்பூ – வாயக் கழுவு.. அபசகுனமா பேசாத. ஏற்கனவே அங்க நம்மூர் பாப்புலேஷன் ஜாஸ்தியாகி புல்லாகிட்டிருக்கு. இதுல நீ வேற. இந்த சர்குலர எல்லார் கிட்டயும் காட்டு.
அழ்குராஜா – என்னாது சரக்கு லெட்டரா..ஏ எல்லோரும் திரும்புங்கப்பா சித்தப்பூ ஏதோ சரக்கு லெட்டர் வைச்சிருக்காராம்
(எல்லோரும் வட்டமாய் அவரவர் சீட்டில் திரும்பி உட்கார அதுவே ஒரு மீட்டிங் வட்டமாகுகிறது)
சித்தப்பு – (அழகுவை நோக்கி) மூதேவி...நான் என்ன உங்க சித்தியவா கல்யாணம் பண்ணிருக்கேன்...என்ன சித்தப்பூன்னு கூப்பிடாதேன்னு எத்தனை தரம் சொல்றது ஒழுங்கா மரியாதையா மேனேஜர் சார்ன்னு கூப்பிடு.
சீனு – (நக்கலாய்) குட்மாரினிங் சித்தப்பூ
(சித்தப்பு எரிச்சலோடு சீனுவை திரும்பிப் பார்க்கிறார்)
அழகுராஜா – நீங்க என்ன அவன் சித்தியவா கல்யாணம் பண்ணியிருக்கீங்க அவன் மட்டும் சித்தப்பூன்னு கூப்பிடறான்?
சித்தப்பூ – சிதம்பரேசன்ங்கிற என் பெயர ஏண்டா சம்பந்தமே இல்லாம சித்த்ப்பூன்னு சுருக்கி உசிர வாங்குறீங்க...
சீனு – அப்போ ரேஷன் ரேஷன்னு சுருக்கி கூப்புடட்டுமா...இலவச அரிசி போடறாங்கன்னு கும்மிருவாஙக பரவாயில்லையா? இன்வெஸ்மெண்ட்டே கடனாகுது இந்த காலத்துல...சிதம்பு சித்தப்பு ஆகக்கூடாதா?
சித்தப்பு – நக்கலு...ஆங்...சரி எல்லோரும் நல்லா கவனிங்க. எங்க மச்சான் பெரிய வியாபாரக் காந்தம். தீர்க்கதரிசி. இந்தியாக்காரன் சாப்ஃட்வேருக்கு அமெரிக்காகாரன் குடுக்கிற மதிப்ப பார்த்து ராவாடு ராவா மளிகைக் கடைய சாப்ட்டுவேர் கடையா மாத்தி என்ன மேனேஜரா போட்டிருகார்னா சும்மாயில்ல. நாம என்ன பண்ணுவோமோ ஏது பண்ணுவோமோ எனக்குத் தெரியாது ரெண்டே மாசத்துல ஆர்டர் வரணும் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டணும்.
சீனு – இதே மாதிரி போர்டு வைச்சா வளைகாப்பு, காது குத்து கல்யாணம்ன்னு சாப்பாடு ஆர்டர் தான் கொட்டும் சாப்ட்டுவேருக்கு பதிலா சாம்பார் வாளியத்தான் தூக்கனும். சாப்ட்வேர் ஸ்பெஷலிஸ்ட்ன்னு போர்டு வைக்க சொன்னா சாப்பாடுவேர் ஸ்பெஷலிஸ்டாம் அழகு இது உன் ஐடியா தானே? கம்பேனி ஓஹோன்னு உருப்பட்ரும்.
அழகு – தோ பாரு சீனு நான் வெறும் அம்பு தான், சித்தப்பூ தான் போர்டு மெம்பர். இதெல்லாம் சித்தப்பூ ஏற்பாடு
சித்தப்பூ – (போர்டை திரும்பப் பார்க்கிறார்) அடப்பாவி ஆரம்பமே மிஸ்டேக்காயி போச்சா... சரி சரி இத முதல் ஆர்டர் வந்தோடன சரி பண்ணிக்கலாம். இப்போ அத விட முக்கியமா நாம விவாதிக்க வேண்டிய ஒரு பிரச்சனை இருக்கு. கம்பெனிய வளர்க்க என்ன செய்யலாம் எல்லோரும் உங்க அபிப்ராயத்தை சொல்லுங்க. சரோசா நீ முதல்ல ஆரம்பிமா
ச.ரோசா – சார் என் பேர் எஸ்.ரோஜா..தமிழ் படுத்தறேன் பேர்வழின்னு இனிஷியலோட சேர்த்து சரோசாவாக்கிறத முதல்ல நிப்பாட்டுங்க. அப்புறம் இந்த டைப்ரைட்டர ஒழிச்சிட்டு நல்ல தெளிவா சினிமா பார்க்கிற மாதிரி ஒரு கம்ப்யூட்டர் வாங்கிப் போடுங்க...என் ஃபிரெண்டு ”ச.மோ.சா” சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்கிறா. தினமும் புது ரிலீஸ் படமா டவுண்லோட் பண்ணிப் பார்க்குறா.. நானும் இருக்கேனே... இந்தியாவுலேயே சாஃப்ட்வேர் கம்பெனில டைப்ரைட்டர்ல டைப் அடிக்கிற ஒரே எம்ப்ளாயியா நான் ஒருத்தி தான் இருப்பேன் போல
சீனு – சரோசா அதுக்கு நீ இன்னும் ஆறு மாசம் பொறுக்கணும். முதல்ல நாம ஆர்டர் பிடிக்கணும். அப்புறம் தப்பு தப்பா ப்ரோக்ராம் எழுதணும் அப்புறம் பண்ணின தப்ப பக் பிக்ஸ் பண்ணணும் அதுக்கும் சேர்த்து மீட்டர் மேல பில்லிங் போடனும். அப்புறம் கம்பெனி எம்ப்ளாயிஸ் ஆஃப் சைட் போறோம்னு கேரளாவுக்கு பஸ் பிடிச்சு போய் ஃபோட்டொ எடுத்து வைப்சைட்டுல போடணும். அதுக்கப்புறம் தான் அத பார்த்து இன்னும் சில ஈன்னா வாயனுங்க ஆர்டர் குடுப்பாங்க..அப்போ நாம புதுசு புதுசா கம்ப்யூட்டர் வாங்கலாம்.
சொர்ணா – உனக்கு கரெக்டாத் தாண்டா பேரு வைச்சிருக்காங்க scene-ன்னு
சீனு – எக்கா சொர்ணாக்கா டேங்கஸ்கா..
சித்தப்பு – இந்தாம்மா சொர்ணாக்கா உங்கிட்ட எதாவது ஐடியா இருந்தா எடுத்து விடறது
சொர்ணா – இந்தியாவிலயே சென்னைல தான் இப்போ பல சாப்ட்வேர் கம்பெனிங்க ஓஹோன்னு வருது. இதுல ஒன்னு கூர்ந்து கவனிச்சா தெரியும். தொன்னூறு சதவீத கம்பெனிங்க மூணெழுத்து சுருக்கெழுத்து கம்பெனிங்க தான். அதுலயும் முக்கால் வாசி கம்பெனிங்க எஸ்ன்னு தான் முடியுது. அதுனால நாம மன்னார் அண்ட் கம்பெனிங்கிற நம்ம கம்பெனி பெயர முதல்ல எம்.ஏ.எஸ்-ன்னு மாத்தனும்.
சீனு – எம்.ஏ.எஸ்ன்னா மாஸ்...இது யோசிக்க வேண்டிய மேட்டர் தான். நான் இந்த ஐடியாவை வழி மொழிகிறேன்.
சித்தப்பூ – ஐடியால்லாம் ஓக்கே ஆனா ஆர்டருக்கு வழி என்னப்பா?
சீனு – (திருவிளையாடல் விநாயகர் பாணியில்) சித்தப்பூ ஆர்டர் என்றால் என்ன? வருமானம் என்றால் என்ன..
சித்தப்பூ – அழகு என்னடா சாப்ட்வேர்காரன்லாம் கஸ்டமரத் தான் குழப்புவான்னு கேள்விப் பட்டிருக்கேன்..இவன் என்னடா மேனேஜரையே குழப்புறான்
சீனு – சித்தப்பூ...நான் சொல்றது என்னான்னா முதல்ல நாம கம்பெனி வருமானத்த பெருக்கனும் அப்புறமா ஆர்டர பெருக்கலாம்....
அழகு – சித்தப்பூ இவன் நமமள குழப்பி குழப்பி கடைசில தெருவ பெருக்கவிட்ருவான் சாக்கிரதை
சித்தப்பூ – டேய் சீனு என்னடா சொல்லவர?
சீனு – சித்தப்பூ நாம சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கிறத விட முதல்ல ஒரு சாஃப்ட்வேர் பார்க் ஆரம்பிக்கலாம்.
எல்லோரும் – சாஃப்ட்வேர் பார்க்கா...??
சீனு – ஆமா இன்னிக்கு சென்னைல ரியல் எஸ்டேட் கொடி கட்டிப் பறக்குத்துன்னா சும்மாவா. திண்டிவனம் தாண்டி தெக்கால 20கிலோமீட்டர்ல சுடுகாடு ஒன்னு இருக்குதாம், நம்ம கண்ணம்மா பேட்டை ப்ரோக்கர் ஒருத்தர் சொன்னார். சல்லிசா அத முதல்ல வாங்குவோம். அப்புறம் அதையும் மெட்ராஸ் அவுட்ஸ்கர்ட்ஸ்ல சேர்த்து, அதுக்கு அமெரிக்கன் சாஃப்ட்வேர் பார்க்குன்னு பேரு வைப்போம். பக்கத்துலயே ஒரு “புஸ்வானம்”ன்னு ஒரு டவுண்ஷிப் ஒன்னு ஆரம்பிப்போம். ரெண்டு மூணு சினிமாகாரங்கள கூட்டிட்டுப் போய் ஃபோட்டோ எடுப்போம். வேற நல்ல சின்ன நியாயமான சாஃப்ட்வேர் கம்பெனிட்ட சொன்னா “Natural Tranquil location, 24 hour Electric facility, Pure Air, Devine, Rest in Peace” ன்னு அழகா கண்ணம்மா பேட்டையவே ஆங்கிலத்துல விவரிச்சு ஃபாரின் பொண்ணுங்க குழந்தைய வண்டில தள்ளிட்டு வாக்கிங் போற மாதிரி போட்டோல்லாம் போட்டு ஒரு வைப் சைட் போட்டுக் குடுப்பாங்க.
சரோசா – இப்போல்லாம் இந்த மாதிரி டவுண்ஷிப்புல உள்ளயே ஸ்கூல், சினிமா தியேட்டர், பாங்க், ஜிம் எல்லாம் இருக்காம்.
சீனு – ஆமா கரெக்ட். மக்கள் எதுக்குமே நூறடிக்கு மேல நடக்கத் தயாரில்லை. அதுனால நாம் அத்தோட நிக்கக்கூடாது. அதுக்கும் ஒரு படி மேல போய் உள்ளயே எலெக்ட்ரிக் சுடுகாடு ஒன்னும் ஆரம்பிக்கனும். வாஸ்து படி எரிக்கிறோம்...வேதப்படி எரிக்கிறோம், தேவையானவங்க அவங்களே போய் படுத்துக்கலாம்ன்னு சொன்னா சேல்ஸ் பிச்சிக்கும்.
சித்தப்பூ - ஐடியா நல்லாத் தான் இருக்கு ஆனா கட்டடம் கட்ட காசு வேண்டாமா?
சீனு – தேவையே இல்லை. ஸ்கூல், பாங்க், ஜிம் எல்லாத்தையும் நல்ல அழகான பொண்ணுங்க ஃபோட்டோவோட வரைபடத்துல போட்டுக் காமிப்போம். அதுக்கே பாதி விக்கும். பாதி வித்த அப்புறம் மிச்சத்த பார்த்துப்போம்
அழகு – ஆங்...பாதி விக்க வேண்டாமா...அது எப்படி விக்கும்?
சீனு – முதல்ல குறைச்ச விலைக்கு Phase 1 ன்னு சொல்லி பத்து ப்ளாட்ட நாமளே பங்கு போட்டு எடுத்துகிட்டு Phase 1 அல்ரெடி சோல்ட் அவுட்ன்னு சொல்லிடுவோம். அப்புறம் பாருங்க இந்த சாஃப்ட்வேர் காரனுங்க வர்ற வரத்தை...Phase 2-வ போட்ட அரை மணி நேரத்துல ஏதவாது ஒரு சாஃப்ட்வேர் dude வாங்குவான். அப்புறம் அவன் மத்த Dudeகளுக்கெல்லாம் “I own a piece of chennai"ன்னு பேஸ்புக் டிவிட்டர் கூகிள் ப்ளஸ்ன்ன் கூவி, மிச்ச சொச்ச ரியல் எஸ்டேட் விலையையும் ஏத்துற ஏத்துல ஊர்ல எவனும் சுடுகாட்டுல கூட வீடு வாங்க முடியாத அளவுக்கு விலைய கொண்டு விட்ருவானுங்க. கம்பெனிக்கும் லாபம் நமக்கும் லாபம், நாட்டுக்கு வளர்ச்சி.
சொர்ணா – எல்லாம் சரி கடைசீல சாஃப்ட்வேர் பார்க் எங்கடான்னான்னா?
சீனு – சுடுகாட்டுக்கு நடுவுல வேலி போட்டு நடேசன் பார்க்கு மாதிரி பத்து மரக்கண்ண நட்டு அதுக்கு அமெரிக்கன் சாஃப்ட்வேர் பார்க்குன்னு பெயர வைச்சிருவோம்.. சி.பி.ஐயே கேள்வி கேக்க முடியாது. நீங்க வேற சித்தப்பு...முத ஃபேஸுக்கு அப்புறம் அவனுங்களே எல்லாருக்கும் வித்துருவானுங்க அதாவது நாம பார்க்க - பார்க்கே பார்க்க வளர்த்துக்கும்.
சித்தப்பு – இந்த ஐடியா நல்லா இருப்பதால் நான் மன்னார் மச்சான் கிட்ட பேசி பார்க்கிறேன். அது வரைக்கும் எல்லாரும் திரும்ப அவங்க இடத்துக்கு போய் படம் பார்க்கிறத கண்டினியூ பண்ணுங்க...
ச.ரோசா – சார் எனக்கு படம் பார்க்க அந்த கம்ப்யூட்டர்...
Wednesday, September 12, 2012
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
கொத்ஸ் - வாத்தியார் இருக்கும் போது பொடிசுங்க ஆடக்கூடாதுன்னு ஸ்பெல்லிங் செக் பண்ணல :)
முதல்ல துப்பிட்டு அப்பாலிக்கா படிக்கறேன் ஒகே
துப்பற அளவுக்கு இல்லைங்க...சாப்ட்வேர் கம்பெனி,ரியல் எஸ்டேட்ன்னு பல தகவல்களை உங்க காமெடி நடையில் சொல்லியிருக்கீங்க...
பூந்து விளையாடி இருக்கீங்க...
இதை எந்த டிவியும் போடமாட்டான். இந்த மாதிரி ரியல் எஸ்டேட் கம்பெனிதான் அவனுக்கு வருமானம். வேணும்னா குறும்படம் எடுக்கலாம். ஹீரோவா நடிக்க நான் ரெடி
நடைமுறையை அழகாக படம் பிடித்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
சுடுகாட்டுக்கு இங்க்லீஷ் டெஃபனிஷன் சூப்பர். மேல்மருவத்தூர் சென்னை அவுட்டர். திருச்சி ல ஃப்ளாட் வித்தா சென்னையிலிருந்து முன்னூறே கி. மீ தொலைவில் னு போடுவானுங்க போலருக்கு
aiyiyo Guruji what is this so many posts??? naan eppo padichu eppo bhajanai panradhu??
-porkodi
ஹா ஹா ஹா... அருமை!
எங்கேயாவது இது நிஜம்மா நடந்து இருந்தாலும் இருக்கும்... செல்ல பேர் எல்லாம் பிரமாதம்
அண்ணாத்தை அடிச்சு ஆட ஆரம்பிச்ட்டார். கழக கண்மணிகளே வந்து கும்மியை ஆரம்பியுங்க... ஒன்லி கேடி அக்கா தான் பிரசண்டு......
அன்புடன்
சுபா
ஆஹா! அருமை.
Sokka sonnabaa.. Ellam apadiye varadhuthan illa..
Pls Condinewwww.
Anne, coma la irundhu eppa ezhundhu vandheenga? Oru vela naan dhaan ivalavu naala coma la irundhena? Varisiya ivvalavu post pottirukeenga? Enakku thala kaal puriyala. Irunga ovovoru posta padichittu varen. Thanks for coming back. Missed your posts and comments kacheri very much.
Lovely…
Gujaratonnet.com
எல்.கே - மிக்க நன்றி சாரே. நீங்க சொன்னதென்னவோ உண்மை எல்லா டீவிலயும் இந்த செங்கல்பட்டு மனைகள் தான் ஓடிக்கிட்டு இருக்கு :)
சேலம் தேவா - மிக்க நன்றி நண்பரே
இராஜராஜேஸ்வரி - மிக்க நன்றி மேடம் உங்கள் பாராட்டுக்கு
Avis Namar - :))) திருச்சி பத்தி சொன்னீங்களே...ரொம்ப நாளாகாது அதுக்கு :)
பொற்கொடி - ஹீ ஹீ இந்த டபாய்க்கறது தானே வேணாங்கிறது அப்படியே ஓடி போயாச்சு :))
அருண் - மிக்க நன்றி நண்பரே
பாவை - :))) நடந்துகிட்டே இருக்கே விதம் தான் வேற
சுபாஷினி - ஹைய்யோ ஹைய்யோ நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கீங்க :)) அவங்கள்ல்லாம் அப்பவே எஸ்கேப்பு :)
ஷ்ஷ் - மிக்க நன்றி மேடம்
விட்டி வியர்ட்டோ - மிக்க நன்றி நண்பரே. தொடர முயற்சிக்கிறேன்
மதுரம் - அக்கா எப்படியிருக்கீங்க. நூறு வயசு உங்க கிட்ட ஒரு மேட்டர் கேக்கணும்ன்னு இருந்தேன் நீங்களே கரெக்ட்டா வந்துட்டீங்க :) தனி மெயில்ல கேக்கிறேன். ஹி ஹி கோமாலாம் இல்ல இனிமேலாவது கொஞ்சம் அடிக்கடி எழுதணும்ன்னு எண்ணம் பார்ப்போம் எவ்வளவு நாளைக்குன்னு :)
”நாம பார்க்க - பார்க்கே பார்க்க வளர்த்துக்கும்’’
கொன்னுட்டீங்க..
I'm doing great. Enkitta kekka "cake" than irukku. Parcel pannidava? Shoot me the mail to pv_madhuram(at)hotmail(dot)com.
Post a Comment