Wednesday, July 18, 2012

புலம்பல்கள்

கடந்த சில மாதங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் நிறைய. நிறைய அடி பட்டு, பார்க்கிறவர்களை எல்லாம் நம்பிக் கொண்டு எவ்வளவு ஏமாளியாய் இருந்திருக்கிறேன் எனபதை புரிந்து கொண்டிருக்கிறேன். சமீபத்திய அனுபவங்களில் பலனாய் சக மனித நம்பிக்கை என்பது அடிபட்டு போய்க் கொண்டிருக்கிறது. இங்கே எழுதாததிற்கு இந்த மன உளைச்சல்கள் தான் முக்கிய காரணம். சொல்லாமல் கொள்ளாமல் நான் இப்படி லீவு போடுவதென்பது உங்களுக்கு புதிதொன்றுமில்லை என்றாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பின்னூட்டத்திலும், மெயிலும் விசாரித்தவர்களுக்கு மனதார நன்றி. குழப்பங்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை என்றாலும் நம்ம கையில் ஒன்றும் இல்லை, எல்லாம் இஷ்ட தெய்வம் கத்ரீனா விட்ட வழி என்று மனம் ஒருமுகப் பட்டிருக்கிறது. விடுங்க பாஸ் பொழப்ப கவனிப்போம்


லண்டன்- ஒலிம்பிக்ஸினால் அதகளப் பட்டுக்கொண்டிருக்கிறது. போன வாரம் எங்க வீட்டுக் கொல்லைப்பக்கத்தில் நாலைந்து ஜாவலின் குச்சிகள் விழுந்து கிடந்தன. யாரோ ஸ்டேடியத்தில் ப்ராக்டீஸ் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.(ஹீ..ஹீ அதாவது யுவர் ஆனர் எங்கவூடு ஸ்டேடியத்திற்கு ரொம்ப பக்கம்ன்னு தாக்கல் செய்யுறோங்கோவ்). நண்பர் குழாமில் பல பேர்கள் ஒப்பனிங் செரிமனி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். இன்னும் சில பல நண்பர்கள் வாலன்டியர்களாய் நிர்வாகத்தில் பங்கு கொள்கிறார்கள். 100 மீட்டர் ஓட்டப்பந்தய ஃபைனல்ஸில் எனக்கு வைல்ட் கார்ட் எண்ட்ரி தராத காரணத்தினால் நான் வூட்டிலிருந்தபடி பக்கோடாவும் டீயும் குடித்துக் கொண்டே நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சலசலபிற்கு குறைவில்லை. பாதுகாப்பு காண்டிராக்ட் எடுத்த G4S கம்பெனி போதுமான செக்யூரிட்டி ஆட்களை சப்ளை செய்ய முடியாது  என்று அமளி துமளி ஆகி பாதுகாப்பு என்னாவதுன்னு ராணுவத்தினரை கொண்டு வந்திருக்கிறார்கள். எதுக்கும் சேஃப்டிக்கு இருக்கட்டும் என்று மிஸைல் லாஞ்சரை ஒரு வீட்டு மொட்டை மாடியில் வைத்திருக்கிறார்கள். "என்னா விளையாடுறீங்களா...கம்ப்யூட்டர் மிஸ்டேக்ல ராக்கெட் திரி பத்திக்கிட்டு அதுபாட்டுக்கு லாஞ்ச் ஆகிடிச்சின்னா அப்புறம் எங்க ஐயாக்கு யாரு பதில் சொல்றதுன்னு" என்று ஒரு கூட்டம் அலம்பிக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வேணும் ஆனா செக்யூரிட்டி வேண்டாமா என்னடா தெளிவா குழப்புறீங்கன்னு அதிகாரிகள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். எல்லா நல்லவைய்ங்களும் இங்கே இருப்பது மாதிரி மழை வேறு கொட்டு கொட்டுவென்று இன்னும் கொட்டிக் கொண்டிருக்கிறது. வருகிற கூட்டத்தினால் லண்டனே ஸ்தம்பிக்கப் போகிறது என்று பேப்பர்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் நடுவில் மக்களுக்கு நடுவில் உற்சாகம் என்னவோ கரைபுரண்டு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ஸ்டேடியத்தை ஓட்டி ஐரோப்பாவின் மிகப் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றை சமீபத்தில் திறந்துவிட்டார்கள். ஒன்னுமே வாங்காமல் கடை கடையாய் சுத்திப் பார்ப்பதற்கே ஒரு நாள் பிடிக்கும்.பாதாள ரயில் ஸ்டேஷனிலிர்ந்து இந்த மால் வழியாக ஸ்டேடியம் செல்ல வழியமைத்து ஸ்பெஷல் தரைகள் மூலம் மக்கள் நடப்பதிலிருந்தே மின்சாரம் உற்பத்தி செய்ய விவரமாய் டெக்னாலஜியை உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.ஆக மொத்தம் இன்னும் ஆட்டம் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் விறு விறுப்பாய் இருக்கிறது.


"Fifty Shades of Grey" என்கிற புத்தகத்தைப் பற்றி உங்களில் நிறைய பேர் கேள்விப் பட்டிருக்கலாம். செக்ஸ் கண்டெண்ட் அதிகம் உள்ள  - பெண்களுக்கான மேட்டர் புத்தகம் என்று பெண்களால் ஓகோன்னு கொண்டாடப் படுகிறது. இல்லை இல்லை இது அவ்வளவு எரோட்டிகாய் இல்ல..கொஞ்சம் ராவாய் இருக்கிறது என்று ஒரு கூட்டம் புலம்புகிறது. ஆனாலும் 4 மில்லியன் காப்பிகள் வித்து தீர்ந்து தற்போது சினிமாவாக ஆக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் தற்போது இந்த டாப்பிக் பயங்கர ட்ரெண்டாகி எல்லா இடங்களிலும் பெண்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. “உங்க வீட்டுல இன்னிக்கு என்ன சமையல்” என்பது போய் “பிஃப்டி ஷேட்ஸ் படிச்சியா அதுல நாலாவது சேப்டர் மூனாவது பக்கத்துல..” என்று சௌஜன்யமாகிக் கொண்டிருக்கிறது. காலங்கார்த்தால ட்ரெயினில் நிறைய பெண்கள் இந்தப் புத்தகத்தை படிப்பதைக் கண்கூடாக காண முடிகிறது. “நல்லாத்தேங் இருக்கு ஆனா இத விட மேட்டர் புஸ்தகமெல்லாம் படிச்சிருக்கேன், அதுனால இது தான் சூப்பர்ன்னு இத்தோட நின்னுடாதீங்கோவ்”ன்னு லண்டன் மெட்ரோ பேப்பர் SMS செக்‌ஷனில் பெண்கள் கலாசிக் கொண்டிருக்கிறார்கள். ங்கொய்யால நானெல்லாம் காலேஜ் ரெக்கார்ட் நோட்ல மறைச்சு வைச்சு படிக்க எவ்ளோ கஷ்டப் பட்டிருக்கேன்..எங்கடா போனீங்க அப்போல்லாம்...? ..ஹூம்

21 comments:

Vaasagan said...

Ayyo, Dubukku blogla naan first commentaa...

Vaasagan said...

Vidunga boss.. Enna panrathu. Most people go through it at some point in life.
Wish you better things in future. Your artciles were definitely missed in our household..

CS. Mohan Kumar said...

Welcome back. What happened? Take care.

மனம் திறந்து... (மதி) said...

What a coincidence! This post starts with a "few more shades of life and people" you have seen recently and ends with the "fifty shades of grey".
Time is the greatest healer... and you WILL be all right!

Anonymous said...

Enna dhan blog poattalum,4 maasam sollama kollama odi poanadhai,marakkavo,mannikkavo mudiyadhu.
Innum Kobaththudan,
Vikram Balaji

Akhila said...

Javelin- neenga ennamo unga veetai pathi sonna maadhiriye theriyalaiye...enakku vadivelu+23 am pulikesi vaadai illa veesudhu?

"Fifty shades of Grey"...My Gawd!!! Gross to say the least... amaam ungalukku edhukku ladies matter ellam? But the book has been around for a year I think so..illa?

Porkodi (பொற்கொடி) said...

என்னது மறுப‌டியும் வந்தாச்சா!!!!! நான் முதல் 3 கூட இல்லையா!! (ரைட்டு அப்போ இனிமே "டுபுக்கே எழுதலை! நீ எல்லாம் எதுக்கு எழுதணும்னு நினைக்கிறே" அப்படின்னு மைண்ட்வாய்ஸ் கேக்க முடியாது!!! :P)

ஜாவலின் விழுந்து கெடந்துதா! கிகிகிகி.. நான் அவங்க தெறமைய தான் பாராட்டுறீங்க நினைச்சுட்டேன் தல.. ஆமா உங்க‌ capacity ability flexibility எல்லாம் ந‌ம்ம ஆகச்சிறந்த சப்வே ஸ்டெப்பிங் மூவில‌ பார்த்துமா உங்களை வைல்ட் கார்ட்லே எடுக்கலை? எலேய் சம்முவம்!!!!!னு ஒரு ஆர்டர் ஒரே ஒரு ஆர்டர் மட்டும் போடுங்க, தொண்டரடி பொடி சங்கம் உடனே கெளம்பி வந்துருவோம்..

எல்லாம் ஓகே. அந்த புக் பத்தி தங்கமன்னியின் திருவாய்மொழி என்ன.. உங்க கருத்து யாருக்கு வேணும்!

நீங்க வழக்கம் போல மன்னிப்பு கேட்டா மாதிரி, நானும் வழக்கம் போல "தயவு பண்ணி தொடர்ந்து எழுதவும்." சங்கச் செயலாளர் மதிக்கு ஹாய்!

மனம் திறந்து... (மதி) said...

@ பொற்கொடி:ஹாய்! //இனிமே "டுபுக்கே எழுதலை! நீ எல்லாம் எதுக்கு எழுதணும்னு நினைக்கிறே" அப்படின்னு மைண்ட்வாய்ஸ் கேக்க முடியாது!!! :P)//

Anonymous said...

கற்றது கல் அளவு கல்லாதாது கத்ரீனா அளவுன்னு போங்க தல

Anonymous said...

யாராரோ நண்பன் என்று.........
விடுங்க பாஸ்....
by
Haji
Dubai

Thamizh_Thendral said...

என்னது மனசு சரியில்லையா?

கப்புன்னு உலகநாயகன் மாதிரி பாட்டு போட்டு, கவிதை எழுதி, பேட்டி கொடுத்து சரி செஞ்சிடலாமே? அவரே இருக்கர ப்ரச்சனைக்கு நடுவுல கும்கி பாட்டு ரிலீஸ்லாம் போய் ரிலாக்ஸ் ஆவுராரு. ஒலிம்பிக்ஸ் ஊர்ல உங்களுக்கு இல்லாத வழியா?

சுருக்கமா இருந்தாலும் இந்தப் பதிவு, உங்க டச் கொஞ்சம் கொறைச்சலா இருந்தாலும், அசத்தல்.

அன்புடன்,
முரளி.

Anonymous said...

VERY BORING AS USUAL

balutanjore said...

dont worry dubuks
everythin will be allright
keep going
best wishes

balu vellore

Kavitha said...

Life moves on, even if we don't :)

mohan kumar said...

Welcome back...

Unknown said...

Welcome back..

தோழர் அவர்களை "பாதை தேடும் பயணம்" என்கிற பதிவில் கருத்துரைக்க அன்புடன் வரவேற்கிறேன்...

Paavai said...

இப்போ தான் ஒலிம்பிக்ஸ் எல்லாம் முடிஞ்சாச்சே .. அடுத்த போஸ்ட் போடுங்க

Anonymous said...

this too shall pass..neenga pattukku ezhudhunga...olympics post asathal..cheerup sir...
nivi.

Unknown said...

இந்த சால்ஜாப்பெல்லாம் வேணாம். நீங்க போஸ்ட் போட்டிருக்கீங்களான்னு மாசக்கணக்கா இங்க வந்து பாத்து பாத்து, mouseஏ தேஞ்சு போச்சு. பிராயச்சித்தமா சீக்கிரமா அடுத்த போஸ்ட் போடுங்க, உங்களை மன்னிக்க சான்ஸ் இருக்கு. ஒலிம்பிக்ஸ் பத்தின பதிவு உங்கள் வழக்கமான பாணியில் - ஏமாற்றவில்லை. Reg your problems, it is all part of growing up ! It means you are still young and dont have enough exposure :-) look at it that way (positively) and keep going. We have to become wiser for the experiences in life, that is all :-) Best wishes. Lakshmi

Dubukku said...

வாசகன் - மிக்க நன்றி உங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு. ஆமாங்க பாடமாய் தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

மோகன் குமார் - மிக்க நன்றி. கொஞ்சம் வாழ்க்கைப் பாடம் கத்துக்கிட்டேன் :)

மதி - Many thanks for your kind words. Yes sort of back now.



Vikram Balaji -ஹீ ஹீ கோபப்படாதீங்க சாரே. எனக்கும் திரும்ப அடிக்கடி எழுதணும்ன்னு ஆசை தான் ஆனால் எனக்கே நான் எழுதுவது சக்கிக்கவில்லை அதையெல்லாம் பப்ளிஷ் பண்ணினா உங்க நிலமைய நினைச்சு பாருங்க :)



அகிலா - என்னங்க இது லேடிஸ் மேட்டரா...பொது அறிவுங்க :)

பொற்கொடி - //டுபுக்கே எழுதலை! நீ எல்லாம் எதுக்கு எழுதணும்னு நினைக்கிறே// - ஓகோ இதெல்லாம் வேறயா. என்னப் பார்த்து நீங்க ஏங்க கெட்டுப் போறீங்க. அந்த புக்க தங்கமணி வுழுந்து வுழுந்து படிக்கிறாய்ங்க இரண்டாம் பாகம் முடிக்கப் போறாங்க:)))



அனானி - சுருங்கச் சொன்னாலும் நச்சுன்னு சொல்லீட்டீங்க போங்க :)))

ஹாஜி - :)) கரீக்ட்டா பாடறீங்க. மிக்க நன்றி நண்பரே உங்கள் ஆறுதலுக்கு


முரளி - கரெக்ட்டு தான் அதான் இங்க கொஞ்ச நாள் லீவு. மிக்க நன்று உங்கள் அன்பிற்கு. இனிமே அடிக்கடி வருவேன்னு நினைக்கிறேன்

அனானி - /VERY BORING AS USUAL // தாரளமா இத நீங்க உங்க பெயரிலேயே சொல்லலாம். இங்க காறித் துப்ப எல்லாம் எல்லாருக்கும் சர்வ சுதந்திரம் உண்டு :)

பாலு - மிக்க நன்றி சாரே உங்கள் அன்பிற்கு

பொயட்ரீ - கரீக்ட்டு தான் :))

மோகன் குமார் - மிக்க நன்றி நண்பரே

ஆயிஷா - ரொம்ப சாரி தோழரே. அந்த லிங்க் கிடைக்குமா? கூகிளில் தேடிப் பார்த்தேன் சிக்கலையே?

பாவை - பாரா ஒலிம்பிக்ஸ்...ஆரம்பிச்சாச்சே ஆனாலும் போஸ்ட் போட்டாச்சே :P

நிவி - மிக்க நன்றி உங்கள் ஆறுதலான வார்த்தைக்கு. இதோ பதிவு போட்டாச்சு

லக்‌ஷ்மி - மிக்க நன்றி உங்கள் ஆறுதலுக்கும் அன்பிற்கும். நீங்கள் சொல்வது மிகச் சரி.பாடமாய் தான் நானும் எடுத்துக் கொள்கிறேன் நீங்கள் சொல்வது போல் இன்னும் நான் வளரவில்லை ஆனால் இப்படி அடிப்பட்டால் தான் வளர முடியும் போல இருக்கிறது (வாழ்க்கையில எவ்வளவு அடிபட்டு வந்திருக்கிறேன்னு பெரியவங்க சொல்வதற்குண்டான அர்த்தம் இப்போது நன்றாக புரிகிறது)

Mahesh said...

Johnny English said "You are not young anymore. With age comes wisdom !" :))))

Post a Comment