மை டியர் டார்லிங் என்று மல்லிகா அன்பாய் கூப்பிடும் சனிக்கிழமை அதிகாலை ஒன்பது மணி (மிட்நைட்) தூக்கத்தில் கண்ணை மூடி தேமேன்னு படுத்துக் கிடவாமல், “ஐயையோ...இன்னிக்கு வீட்டைக் க்ளீன் பண்ணனுமே” என்று ஜெர்க் ஆகி எழுந்தால் அன்றைக்கு வீட்டிற்கு யாரோ விருந்துக்கு வருகிறார்கள் என்று அர்த்தம். “வைச்சது வைச்ச இடத்தில் கலையாம நீட்டா இருக்கிறதுக்கு இதென்ன மியூசியமா? குடியிருக்கிற வீடு அப்பிடி இப்பிடி தான் இருக்கும்” என்ற பார்த்திபன் கனவு டயலாகை மேற்கோள் காட்டி ஹால் கதவை திறந்தால் வீடு மியூசியத்துக்கு வெகுதூரத்தில் சாக்கிசான் சண்டைக் காட்சி நடந்த லொக்கேஷன் மாதிரி கந்த கோளமாய் இருக்கும்.
“அலாவுதீனும் அற்புத விளக்கும்” கதையில் வரும் “ஆலம்பனா” பூதத்தை வீட்டு வைலைக்கு வைக்கலாமா என்று நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, தங்கமணி ஒரு டீ ஒன்றை போட்டு குடுத்து விட்டு “தம்பி டீயை குடிச்சிட்டு தீயா வேலை செய்யணும். கம்பேனி உன்கிட்டேர்ந்து நிறைய எதிர்பார்க்குது”ன்னு ‘ஆலம்பனா’ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை என் கையில் குடுத்துவிடுவார். முதல்வன் அர்ஜூன் மாதிரி வீட்டோடு எல்லோருக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் ரெடியாக வைத்திருப்பார். கிச்சனும் கிச்சன் சார்ந்த இடங்களும் தங்கமணி அண்ட் கோவிற்கும், டாய்லெட்டும் டாய்லெட் சார்ந்த இடங்களும் எனக்கும் என்று நியாய பாகப்பிரிவினை எல்லாம் முதலிலேயே அரங்கேறிவிடும்.
சினிமாவில்/விளம்பரங்களில் இளம் கதாநாயகிகள் அழகாக குளித்துவிட்டு தலைமுடியை முன்னால் லேசாக கலைத்து விட்டுக் கொண்டு இன்னும் கொஞ்சம் அழகாய் காட்டன் புடவையை இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். வீடும் சமத்தாய் பாஸ்ட் ஃபார்வேட் மோடில் பதினாறு வினாடிகளில் பள பளவென்று ஆகிவிடும். நாயகியும் சுடச் சுட காப்பி போட்டு குடித்துவிட்டு ஜன்னல் கர்டன்களை விலக்கி விடுவார். ஆனால் இந்த நிஜம் இருக்கிறதே நிஜம், ஸ்ப்ப்பா நொங்கெடுத்து நோக வைத்துவிடும். இருக்க வேண்டியது இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது இல்லாதது இருக்கவே இருக்காது.கோப்பில் எடுத்து வைக்காத கடுதாசிகள் 5E பஸ் மாதிரி லெட்டர் ஹோல்டரில் புட்ஃபோர்டில் தொங்கிக் கொண்டிருக்கும்.
“இதான் அன்னன்னிக்கு வந்த லெட்டர அப்பவே எடுத்து வைச்சிருந்தா இப்போ இப்படி முழிக்க வேண்டாம். சொன்னதக் கேட்டா தானே எல்லாம் நான் பார்த்துக்குறேன் நான் பார்த்துக்கிறேன்னு. யாரு வேண்டாம்னா..நல்லா நிறுத்தி நிதானமா பாருங்க” - தங்கமணி தீவிரமான ராஜ்கிரண் ரசிகர். சமயம் பார்த்து ஆர்பாட்டம் இல்லாமல் அடிக்கிற அடியில் ‘களுக்’ன்னு எலும்பு முறியும் சத்தம் மட்டும் தான் வரும் மிச்சமெல்லாம் இண்டர்னல் ப்ளீடிங் தான்.
“அப்பா நீங்க ரொம்ப நாளா தேடின டார்ச் லைட் இங்க வாஷிங் மெஷின் பின்னாடி விழுந்து இருக்கு” என்று மகள் வேறு சமய சந்தர்ப்பம் தெரியாமல் எடுத்துக் குடுப்பார். “தெரியும்டா செல்லம் ஆத்திரம் அவசரம்னா எடுக்கறதுக்கு வசதியா இருக்குமேன்னு நான் தான் வாஷிங் மிஷின் பின்னாடி பத்திரமா வைச்சிருக்கேன்”- ஒரு மனுஷன் ஒரே நேரத்துல எவ்வளவு பேரைத் தான் சமாளிப்பான்?
“நீ வாங்கி வைச்சிருக்கிற அந்த ப்ளூ பிரஷ் அவ்வளவு போறலை. என்ன பிரஷ் வாங்கியிருக்க..அத வைச்சு எவ்வளவு தேய்ச்சாலும் பாத்ரூம க்ளீனே ஆக மாட்டேங்குது. உன்னை கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான்னு நினைக்கிறேன்”
“என்னது ப்ளூவா...ஓ மை காட் அது பெடிக்க்யூர் பிரஷ்...அது காலுக்கு வாங்கி வைச்சது..அத வைச்சா பாத்ரூம க்ளின் செஞ்சீங்க”ன்னு தங்கமணி பதறிக் கொண்டு வரும் போது “அதானே பார்த்தேன் இதப் பார்த்தா பாத்ரூம் பிரஷ் மாதிரி இல்லையேன்னு எனக்கு அப்பவே டவுட்டு. நல்ல வேளை யூஸ் பண்றதுக்கு முன்னாடியே உன் கிட்ட கேட்டேன்..நான் காட் ப்ராமிஸா இத வைச்சு க்ளீன் செய்யலமா” உபயோகித்த சுவடே தெரியாமல் ப்ரஷ் இருந்த இடத்திற்கு போய்விடும்.
எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருவதென்றால் சில பல கண்டிஷன்கள் உண்டு. விருந்தினர் அதை உணராமல் செயல்படுத்த கம்பெனி எல்லாவிதமான முயற்சிகளும் எடுக்கும் . வருவதற்கு ஒரு வாரம் முன்னமே எங்களுக்கு தகவல் சொல்லி விட வேண்டும். “கண்டிப்பா நம்ம வீட்டுக்கு நீங்க வரணும். ஆனா முந்தின வாரமே சொல்லிட்டு வாங்க, ஏன்னா முக்கால்வாசி வாரக் கடைசி நாங்க வீட்டுலயே இருக்க மாட்டோம்.எங்கேயாவது போய் விடுவோம். நீங்க வந்து அப்புறம் நாங்க இல்லாம கதவ தட்டிக்கிட்டு நின்னீங்கன்னா எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும் பாருங்க அதான்”
நடுவில் ஒரு வாரக் கடைசி இருப்பது நலம் பயக்கும். “ஓ..நாளைக்கா...அடடா ரொம்ப சாரிங்க அனுஷ்கா வூட்டுல அவல் சாப்பிட வரச் சொல்லி ஒரே அடம், நீங்க அதுகடுத்த வாரம் கண்டிப்பா வரனும் ப்ளீஸ், இல்லைன்னா நாங்க வேணா அனுஷ்கா வூட்டு அப்பாயிண்மெண்ட கேன்சல் பண்ணிடறோம்”ன்னு ஒரு பிட்ட போட்டால் “சேச்சே...அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை நாங்க அடுத்த வாரம் வரோம், நீங்க அனுஷ்கா வூட்டுல அவல் சாப்பிட்டுவிட்ட வாங்க”ன்னு நீங்களே கண்டிஷனுக்கு டிக் போட்டு விடுவீர்கள்.
சம்பவ நாள் அன்றைக்கு காலையில் பத்து மணி வாக்கில் சுமார் எத்தனை மணிக்கு வந்து சேர்வீர்கள் என்று ஸ்கெட்சு போடுவோம். “சும்மா குட்மார்னிங் சொல்ல தான் ஃபோன் பண்ணினேன்..குட்டீஸ்லாம் எழுந்தாச்சா..இன்னும் இல்லையா, நோ ப்ராபளம் சின்னப் ‘பூ’ங்க அது ... எழுப்பிடாதீங்க. மெதுவா எந்திரிக்கட்டும் நம்ம வீடு தானே எப்போ வேணா வரலாம் ஒன்னும் பிரச்சனையே இல்லை”
“அதிதி தேவோ பவ” என்ற கோட்பாடின் படி உங்களை முதலமைச்சர் ரேஞ்சுக்கு மரியாதையாய் நடத்துவோம். “நீங்க அங்க உங்க வீட்டுலேர்ந்து கிளம்பும் போது கால் பண்ணுங்க ப்ளீஸ். ஏன்னா இங்க வீட்டுக்கு முன்னாடி பார்க்கிங் பிஸியாய் இருக்கும் நாங்க இடத்த ரிசர்வ் செஞ்சு வைச்சிடுவோம் அதுக்குத் தான் பாருங்க. அவங்க கிளம்பியாச்சு, கவலபடாத இன்னும் 30 நிமிஷம் இருக்கு அதுக்குள்ள எல்லாத்தையும் க்ளியர் பண்ணிடறேன்”
நீங்கள் வந்து கொண்டிருக்கும் போது போதும் இன்னொரு ஃபாலோஅப். “எங்க இருக்கீங்க..இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவீங்களா..இல்ல இங்க ஏ30ல ஒரே ட்ராபிக்குன்னு பக்கத்து வீட்டு வெள்ளக்கார மாமா சொன்னார் அதான் உங்கள உஷார் படுத்தலாமேன்னு. என்னது ட்ராபிக்கே இல்லையா ஓ அப்ப அவர் சொன்னது போன வாரமா இருக்கும்”
“ஒரு துணியை ஒருவர் மடித்து வைக்க இரண்டு நிமிடம்,அப்போ இருபது துணியை இரண்டு பேர் மடித்து வைக்க இன்ன நேரம் ஆகும், கண்டின்ஜென்சிக்கு அதை விட ஒன்றரை மடங்கு நேரம், சோ என்னோட துணிமணியெல்லாம் நானே மடிச்சு வைச்சிக்கிறேன், யாரும் தொட வேண்டாம், நாளை காலை பத்துலேர்ந்து பத்தேகாலுக்குள்ள எல்லாத்தையும் அயர்ன் செய்து மடிச்சு வைச்சிடுவேன்” - ஆபிஸில் கற்றுவந்த ப்ராஜெக்ட் ப்ளானிங்க கோட்பாடுகள் எல்லாம் ஏனோ எனக்கு மட்டும் வீட்டில் வொர்க் அவுட்டே ஆகாது. வீட்டில் எல்லார் துணிமணிகளும் ஒழுங்காய் மடித்து வைக்கப்பட்டிருக்க, என்னுடைய சட்டைகளுக்கு கண்டின்ஜென்சி என்னவோ போர்வையை விரித்து எல்லா துணியையும் அதில் போட்டு இருமுடி மாதிரி கட்டி பீரோவில் அடைத்து பூட்டி வைப்பதாய் தான் இருக்கும்.
"Expect the unexpected" என்று எந்த நாதாரி திருவாய் மலர்ந்தாரோ தெரியாது ஆனால் கரெக்ட்டாய் நடக்கும். தங்கமணி வாங்கி வர சொன்ன சமையல் லிஸ்டில் ஏதாவது முக்கியமாய் விட்டுப் போயிருக்கும். “என்னம்மா எந்த காலத்துல இருக்க, முட்டை இல்லாம ஆம்லெட்டே செய்யறாங்க, புளி இல்லாம புளியோதரை செய்ய முடியாதா? ” போன்ற அதிகப்பிரச்ங்கித்தனத்துக்கெல்லாம் அது வேளையில்லை. “ஓகோ...வருவாங்க.. நீங்க தான் சர்கரைக் கட்டியாய் பேசிப் பேசியே வாயால பாயாசம் விடுவீங்களே, வுடுங்க” என்று ஆபத்தில் முடிந்துவிடும்.
என்னடா சோத்த போட்டுட்டு முகம் அனிச்ச மலர் மாதிரி பூத்திருக்கா வாடியிருக்கான்னு விருந்தோம்பல் விதிகளை கடை பிடிக்காம இப்படி கண்ட மேனிக்கு கண்டிஷன் போடுகிறார்களே என்று நினையாதீர்கள். டென்ஷன் எல்லாம் நீங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் தாங்க. அதுக்கப்புறம் கலகல வென்று ஆகிவிடும். நாம் பேசிக் கொண்டிருப்போம், கேம்ஸ் விளையாடுவோம்,சினிமா பார்ப்போம், அப்புறம் முக்கியமாய் தங்கமணி செய்து வைத்திருக்கும் ருசியான சாப்பாடு சாப்பிடுவோம். நீங்களும் “எப்படிங்க வீட்ட இவ்வளவு சுத்தமா அழகா வைச்சிருக்கீங்க”ன்னு கேட்பீங்க, அப்புறம் “இந்த வெங்காய சாம்பார் ரொம்ப சூப்பர்ங்க கொஞ்சம் ரெசிபி சொல்லுங்களேன்”ன்னு கேட்பீங்க. “அட அது ரொம்ப ஈசிங்க சும்மா அசால்டா செய்யலாம்”ன்னு வாங்கி வந்த மளிகை சாமான் லிஸ்டை வைத்தே நான் ஒரு ரெசிப்பி சொல்லுவேன், அப்போ தங்கமணி கண்ணால் லேசர் விடு தூது ஒன்னு விடுவாங்க, விடுங்க பாஸூ வீரனோட வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம் பாஸு :)

45 comments:
Unga pettai side mahalakshmi ammavai paarka varumbodhu unga veettukku varalamnu irukkomungo.... Indha post ellam engalai onnum bayamuruthadhu....
Lak
அட்டகாசம்.......... வழக்கம் போலவே.
//அப்போ தங்கமணி கண்ணால் லேசர் விடு தூது ஒன்னு விடுவாங்க, /
இதெல்லாம் நமக்கு புதுசா என்ன ?
ஆஹா ஒரிஜினல் டுபுக்கு கடை அல்வா பதிவு ... Another RIOT of a blog ... totally true in my "cleaning the house for guest" experience too ...
ஸ்கெட்ச் போடுவீங்களா... தெய்வமே.. தப்பித் தவறி கூட வந்துடக்கூடாது போலயே..
//ஆபிஸில் கற்றுவந்த ப்ராஜெக்ட் ப்ளானிங்க கோட்பாடுகள் எல்லாம் ஏனோ எனக்கு மட்டும் வீட்டில் வொர்க் அவுட்டே ஆகாது//
-- அது எப்பவுமே அப்படித்தான்.. வீட்டுக்குன்னு தனி பிளானிங் உண்டு.. எப்பவும் முழிபிதுங்கிவிடுவதே அது..
// என்னது ட்ராபிக்கே இல்லையா ஓ அப்ப அவர் சொன்னது போன வாரமா இருக்கும்//
-- அடேயப்பா... என்ன்னா... விவரமா update தர்றீங்க..
சிரிக்கவைக்கும் நல்லதோர் பதிவு..
எங்க வீட்டு கதைய அப்படியே இன்னொருத்தர் சொல்லி கேட்டது போல இருந்தது. படிக்க ஆரமிச்ச உடனே முடிவு பண்ணினேன்...இரண்டாவது பத்தியை வெச்சு ஒரு பின்னூட்டம் போடணும்னு...ஆனா அதை விட அடுத்த பத்தி இன்னும் நல்லா இருந்தது. சரி அடுத்ததை வெச்சு ஏதாவது சொல்லலாம்னு பாத்தா அதைவிட அதுக்கு அடுத்த பத்தி நல்லா இருந்தது. கடைசியில இது தான் ஹைலைட்டு அப்படின்னு எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியலை. மொத்த பதிவும் சூப்பர். மொத்ததில நல்லா வாய் விட்டு சிரிச்சேன். ரொம்ப நன்றி....
//ஆபிஸில் கற்றுவந்த ப்ராஜெக்ட் ப்ளானிங்க கோட்பாடுகள் எல்லாம் ஏனோ எனக்கு மட்டும் வீட்டில் வொர்க் அவுட்டே ஆகாது//
உங்களுக்காவது இதெல்லாம் வீட்லதான் உதவலை. எனக்கு ஆபீஸ்லயும் உதவ மாட்டேன்னு ஒரே புடிவாதம். எல்லாம் ஏட்டுச் சுரைக்காய். என்ன பன்றதின்னே தெரியல!
வீட்டுக்கு வீடு வாசப்படி. Hilarious post, Dubukku.
Boo stole my comment!! She had the time difference advantage! Hmpf! By the way, Dubukku, do you have a secret camera installed in my house. It sounded exactly like our house, but very hilarious!!
/ ஆத்திரம் அவசரம்னா எடுக்கறதுக்கு வசதியா இருக்குமேன்னு நான் தான் வாஷிங் மிஷின் பின்னாடி பத்திரமா வைச்சிருக்கேன்/
நான் மட்டும்தான் இப்படி விஞ்ஞான முறைப்படி சாமான்களை பத்திரமாக வைப்பேன் என்று இறுமாந்திருந்தேன்!
kalakkal, madhu ramanujam's comment too
ramji yahoo
நீ கலக்குண்ணே.. செம செம
அட! எல்லாம் அப்படியே ஒண்ணு விடாம சொல்லிட்டீங்க!. இங்க ஒரே ஒரு விஷயம் தான் வித்தியாசம் - இங்க ரங்கமணி ஒரு 'சுத்த' பைத்தியம். (சரியா படிக்கணும், தப்பு தப்பா படிச்சுட்டு என்ன திட்டக் கூடாது) அதனால நம்ப ஏரியா மட்டும் தான் க்ளீன் பண்ண வேண்டியிருக்கும். அதையும் ரங்கமணியே பண்ணிவிடுவார் (அவ்வளவு நம்பிக்கை என் மேல) ஒரே ஒரு டிப் - நான் கடைப்பிடிக்கறது - அந்த நேரத்தில அவர் என்ன சொன்னாலும் அப்படியே எடுத்துப்பேன் - No arguements!!
"“இதான் அன்னன்னிக்கு வந்த லெட்டர அப்பவே எடுத்து வைச்சிருந்தா இப்போ இப்படி முழிக்க வேண்டாம். சொன்னதக் கேட்டா தானே"_ enga veetula adikkadi nan en husband-kitta vidra dialogue. :) nice post
This is exactly what happens in my house too ! manasu romba nimathiya ayiduthu ! I thought I am the only one who has to contend with brush behind washing machine and mootai thuni in his cupboard. Athu epadi men elarum ipdiye irukeenga ? Very hilarious as always !
Lakshmi
Dubikkuji - how do you do this? Double sweet sappita madiri irunthadhu. Romba naalaikappuram unga blog thiranthal... ada rendu post!!
We have all gone thru this but you make it so hilarious!! Enga viitila ellam talaikeez. Engathu Mamathan laser parvai viduvaar. Hmm!! Unnai solli kutramillai, ennai solli kutramillai (bgm pottukollavum).
Revolver Rita
gud one.. after a really long time..
worth waiting ..:-)..
-Raji
thirumba oru varusham wait p anna vechudatheenga.. appo appo ponst panunga
gud luck.
//சினிமாவில்/விளம்பரங்களில் இளம் கதாநாயகிகள் அழகாக குளித்துவிட்டு தலைமுடியை முன்னால் லேசாக கலைத்து விட்டுக் கொண்டு இன்னும் கொஞ்சம் அழகாய் காட்டன் புடவையை இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். வீடும் சமத்தாய் பாஸ்ட் ஃபார்வேட் மோடில் பதினாறு வினாடிகளில் பள பளவென்று ஆகிவிடும்.// :)))
//நல்ல வேளை யூஸ் பண்றதுக்கு முன்னாடியே உன் கிட்ட கேட்டேன்..நான் காட் ப்ராமிஸா இத வைச்சு க்ளீன் செய்யலமா” உபயோகித்த சுவடே தெரியாமல் ப்ரஷ் இருந்த இடத்திற்கு போய்விடும்.// :)))
//...வீட்டில் எல்லார் துணிமணிகளும் ஒழுங்காய் மடித்து வைக்கப்பட்டிருக்க, என்னுடைய சட்டைகளுக்கு கண்டின்ஜென்சி என்னவோ போர்வையை விரித்து எல்லா துணியையும் அதில் போட்டு இருமுடி மாதிரி கட்டி பீரோவில் அடைத்து பூட்டி வைப்பதாய் தான் இருக்கும்.// :)))
இந்தப் பதிவு வழக்கம் போல இவ்ளோ நல்ல இருக்கறதைப் பார்த்தா ஒண்ணே ஒண்ணு தான் தோணுது எனக்கு..... இந்த சிரிப்பலை அடங்க ஆறு மாசமாவது ஆகும்.... அதையே சாக்காக வைத்துக்கொண்டு "தல" கூலா அம்பேல் ஆயிடுவார்... அடுத்த பதிவு தீபாவளிக்கு சற்று முன் வரலாம்! :)))
இந்தப் பதிவு வழக்கம் போல இவ்ளோ நல்லா இருக்கறதைப் பார்த்தா ஒண்ணே ஒண்ணு தான் தோணுது எனக்கு.....
Lovely…
bangalorewithlove.com
LOL!!!!!!!!!!! "Udarpayrchi" kku apporam naan migavum rasicha adutha post idhu dhan. Semma korvaiya vandhirukku... endha emotion la ezhudhineenga? :P
Akhila
I thought you were writing about my house. Only change is that Rangamani will be throwing agni arrows at my direction, during cleaning process.
And once the visitors leave, he will be full of lovvu!
Paavam, the guests, they do not know how much internal tensions are created.
Had a hearty laugh.Thanks.
wonderful...veetukku veedu vasalpadi...irundhalum..engaveetu rangamani shirt edukaarennu solli mathi mathi izhutthuvachi kalachi podradhu...pennarasi padikkara table thavira veetile ella idathulaiyum books pena podrathu idhai ellam orunall pola clean pannra enakkku...virundhinar vandha ....ketkave venam...bp egirum...idhelllam yaar kitta sir sollradhu...help panrennu sollitu ennoda anbu rangamani aadhi gallathu cricket matchaa porumaiya paarparu..kodumai!!!
nivi.
dubukku sir....keep writing like this...thanks for the enjoyable post...nivi.
Dubukku .... pls keep writing ....
dubukku sir
arumai arumai
evvalavu santhoshama sirichen theriyuma
thankyou so much
balu vellore
இவ்ளோ நாளும் நாம்மட்டுந்தான் வீரன்னு எகத்தாளமா இருந்தேன், நடு மண்டையில நங்குனு குட்டிட்டிங்க!
விடுங்க பாஸ் நாங்கள்லாம் எவ்ளோ பெரிய வீரய்ங்க தெரியுமான்னு ஆளாலுக்கு அளப்பரையக் கெளப்ப வச்சுட்டீங்க. அட்டகாசம்! படிக்கும்போது பல்லு சுளுக்குற அளவுக்கு சிரிச்சேன், நன்றி
பாஸ்! -அசன்
hilarious post:))when the guest come we use to follow the irumudi technic and it will go into the ironing cupboard.we have a nick name for this. IE "window cleaning" my two daughters are experts in it! very memorable post! sasikala sugavanam
நிறைய தடவை உங்கள் சைட்டுக்கு வந்து ஏமாந்துபோனபின் கொஞ்ஜம் கோபத்துடன் நீண்ட நாட்களாக ஒதுக்கி வைத்துவிட்டேன். அப்புறம் மனசு தாங்காமல் இன்று வந்தேன்! என்ன ட்ரீட்! இப்படி ப்ளாக் எழுதுவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வருவது போல் தான் வீட்டிலும் துணி மடிப்பதை, லெட்டர் ஃபைல் செய்வதை தள்ளிப் போடுகிறீர்கள்!
இந்த அநுபவங்களோடு இன்னும் கொஞ்ஜம்: 2, 3 மாசத்திற்குள் 10,15 வீட்டுக்கு சாப்பிடப் போய் விட்டு அவர்களையும் இன்னும் கொஞ்ஜம் பேரையும் (அப்பத்தாங்க அவங்க நம்மளைக் கூப்பிடுவாங்கன்னு) அழைத்தபிதான், ஹாலில் 15 பேர் தான் உட்காரமுடியும் என்று தெரியும்! (ஒவ்வொரு முறையும்!) வேறு வழியில்லாமல் பெட் ரூம்களை சரிசெய்து இடம் பண்ணவேண்டும், பக்கத்து வீடுகளில் நாற்காலி வாங்கிவர வேண்டும் (அவற்றில் இருக்கும் கறையையும் நாம் தான் சுத்தம் பண்ண வேண்டும்!). முக்கியமாக இந்த மெனு அக்ரீமென்ட் ரொம்ப கஷ்டம்! உருளைகிழங்கு கறி, சென்னா, அவியல், புளியோதரை (ஐயங்கார் வீடு) நிரந்தரம்! 2, 3 ஐட்டெம் வெளியில் வாங்கலாம் என்று சொன்னால் கூடவே கூடாது, எல்லொரையும் என் சமையிலினால் தான் படுத்துவே...ஊப்ஸ், சந்தோஷப் படுத்துவேன் என்று காலையிலிருந்தே (சில சமயம் முதல் நாளிலிருந்தே) சமைக்க ஆரம்பித்து விடுவாள். அப்படியும் சில அதீத நண்பர்கள் 8 மணி அழைப்புக்கு 7 மணிக்கே வந்து கால்லிங் பெல்லை அமுக்கும்போது, தங்கமணி பாத்ரூம் ஓடி, மேக்கப்பை ஆரம்பிப்பதும் நடக்கும். அடுத்த நாளிலிருந்து, முதுகு வலி, கால் வலி, கை வலி எல்லாவற்றையும் பார்த்து ஏதாவது நாம் சொன்னால் கண்ணில் தளுக் என்று கண்ணீர் ததும்பும். மிச்சம் மீதி இருப்பது 2 நாள் தாங்கும்!
உங்களைப் போல் கோர்வையாக எழுதமுடியவில்லை. ஆனால் இதுவும் ஓர் அநுபவமே!
-ஜெ.
ஆபீசில் உட்கார்ந்து சத்தம் போட்டு சிரிக்க முடியாமல் சிரிச்சேன்!
நம்ம வீட்டிலும் டிட்டோ இதே நிலைமை தான்.
Cleaning the house is something that can be done in 15 mins - over 2 days, varying in extent of cleaning ofcouse..no matter how much we plan, we too always clean in the last min before the guests arrive!
The other day, just 10 mins left for his friends to arrive. I asked my husband to make the bed, change pillow covers etc and went to take shower only to find that he had just laid the pillow covers on top of pillows and the bed was made as though someone was sleeping inside with a big blob in the middle! :)
As a murphy's law, guests always call 30 mins before arriving in my case or on their way...
Hilarious post! I could see every inch of my house in the way you explained it especially the "clothes irumudi"..:) - Chella nilaa
adhan oru maasam aayache,
oru post podunga dubukku...
urimayudan,
vikram balaji
wonderful, wonderful, excellent, after a long time i had a hearty laugh.. ..keep writing more. Pappu
This is really interesting…
chennaiflowerplaza.com
awesome post! typical your style, hmm now I know the preludes that run before we have come to your home for dinner! Super post, keep posting. Lots of love to thangamani and mini-manis ;)
Regards
Deeksh
adhan rendu maasam aayache,
oru post podunga dubukku...
urimayudan,
vikram balaji
ஹலோ,
ஏதோ வெளிநாட்டில இருக்கரதால தப்பிச்சீங்க, எங்க ஊர்ல இருந்திருந்தா வந்து 'நல்லா' விசாரிச்சிருப்பேன். ஒரு பதிவை போட்டா அதோட அவ்வளவுதானா? வாரம் ஒன்னு போட முடியலைனாலும் அட்லீஸ்ட் ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை, இல்ல மாசத்துக்கு ஒரு தடவை ஒரு பதிவு போட்டா என்ன கொறஞ்சு போயிடும். நீங்க செய்யரது நல்லா இல்லை, அம்புட்டுதான்.
அன்புடன்,
முரளி.
Awesome…
puneonnet.com
அலாவ்...
semma.
aadi poranthachu sir,
thallupadi post yethavathu podunga
Gopal
காணவில்லை!
திரு. டுபுக்கு அவர்களை காணவில்லை
கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நசுங்காத சொம்பு ஒன்று பரிசாக கொடுக்கப்படும்.
by
Haji
Dubai
லக்ஷ்மி - “கண்டிப்பா நம்ம வீட்டுக்கு நீங்க வரணும். ஆனா முந்தின வாரமே சொல்லிட்டு வாங்க, ஏன்னா முக்கால்வாசி வாரக் கடைசி நாங்க வீட்டுலயே இருக்க மாட்டோம்.எங்கேயாவது போய் விடுவோம். நீங்க வந்து அப்புறம் நாங்க இல்லாம கதவ தட்டிக்கிட்டு நின்னீங்கன்னா எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும் பாருங்க அதான்” :))))
சத்ய பிரியன் - மிக்க நன்றி நண்பரே
எல்கே - அதானெ :P
Kookaburra - மிக்க நன்றிங்கோவ் :))
ஸ்வர்ண்ரரேக்கா- மிக்க நன்றி பயப்படாதீங்க தெகிரியமா வரலாம் :)
மது - மிக்க நன்றி நண்பரே :))
Boo - மிக்க நன்றி மேடம்.
யதாயதா - மிக்க நன்றி. ஹீ ஹீ எல்லார் வீட்டிலயும் இதே வாசப்படி என்பது ஆறுதலாய் இருக்கிறது
பினாத்தலார் - விஞ்ஞானிகளை இந்த சமூகம் எப்படி மதிக்கிறதுன்னு பார்த்தீங்களா
ராம்ஜி - மிக்க நன்றி நண்பரே
கார்க்கி - நண்றியண்ணே
ஷ்ஷ் - //இங்க ரங்கமணி ஒரு 'சுத்த' பைத்தியம்.// :))) கால காட்டுங்க :)) உங்க டிப் தான் எங்கவூட்டுல வொர்க்கவுட் ஆகாத ஒரு விஷயம் :))
உத்தரா - ஹா ஹா எல்லா குடும்பத்துலயும் யாராவது இந்த மாதிரி டயலாக் விடுவாங்க போல
லக்ஷ்மி - உங்களுக்கும் மட்டும் இல்லீங்க எனக்கும் ரொம்ப நிம்மதியாயிடுச்சு. ஸ்ஸப்பா ஒவ்வொரு தரமும் இந்த நாடகம் நடத்தும் போதும் நுரை தள்ளிடுதுங்க
ரிவால்வரக்கா - வாங்கக்கா எப்பிடியிருக்கீங்க :)) வீட்டுக்கு ஒரு லேசர் தான் இல்லைன்னா வாணவேடிக்கையாகிடும்ல :))
ராஜி - உங்களுக்கு கருநாக்கா :))) சாரிங்க டிலே ஆகிடிச்சு :))) மன்னிச்சிக்கோங்க
மதி - //அதையே சாக்காக வைத்துக்கொண்டு "தல" கூலா அம்பேல் ஆயிடுவார்... அடுத்த பதிவு தீபாவளிக்கு சற்று முன் வரலாம்!// அண்ணே காலக் காட்டுண்ணே...நீங்க தீர்க்கதரிசிண்ணே
Akhila - மிக்க நன்றிங்கோவ்...ஏதோ சொல்றீங்க
வெற்றிமகள் - அதே அதே கரீக்ட்டா சொன்னீங்க உள்ளே நடக்கும் அலம்பல் அவங்களுக்குத் தெரியாது :)))
நிவி - என் பொண்ணுங்க எவ்ளோ ஆர்ட் வொர்க் பண்ணியிருக்காங்கன்னு எங்களுக்கும் அன்னிக்குத் தான் தெரியும் அவ்ளோ அள்ள் அள்ள ஆர்ட் வொர்க் வரும் பாருங்க :))
முருகன் - மிக்க நன்றி நண்பரே
பாலு - போஸ்ட் பிடித்தது பற்றி மிக்க சந்தோஷம். நன்றி நண்பரே
அசன் - வாங்க வீரரே. பராட்டுக்கு மிக்க நன்றி
சசிகலா - விண்டோ க்ளீனிங் ஹா ஹா நல்ல பெயர். கலக்கறீங்க.
ஜெகன்நாதன் - கலக்கிட்டீங்க..உங்க அனுபவத்தை ரொம்ப ரசித்தேன். அருமையா எழுதியிருக்கீங்க உங்க பக்கத்தில இதையே இன்னும் எக்டெண்ட் பண்ணி ஒரு பதிவா போடலாமே :))) சாரிங்க...உங்களை பதிவெழுதாமல் ஏமாற்றியதற்கு
செல்ல நிலா - :))) நீங்க சொன்ன அந்த பதினைந்து நிமிஷம் தாங்க எங்கேயோ காணாம போயிடுது. அதத் தான் தேடிக்கிட்டு இருக்கேன் :)))
விக்ரம் பாலாஜி - மன்னியுங்கள் நண்பரே தாமதமாகிவிடடது.நீங்க உரிமையோடு கேட்பதற்கு மிகுந்த சந்தோஷம்
பப்பு - ஊக்கத்திற்கு மிக்க நன்றி
தீக்ஷன்யா - மிக்க நன்றி மேடம்
முரளி - மன்னிச்சிக்கோங்க இந்த தரம் ரொம்பவே டிலே ஆகிடிச்சு. மனதளவில் சோர்ந்திருந்தேன் அதான் காரணம்.
பொற்கொடி - அலோவ் :))
கேபிள் சங்கர் - மிக்க நன்றி நண்பரே
கோபால் - -ஹி ஹி போட்டாச்சு சார்
ஹாஜி - சாரிங்க இதோ வந்துட்டேன் :))
hi dubukku.. first time in ur blog and couldnt control my laugh. love the way you write. being new to writing, i should learn alot from u. looking forward to have more laughs. kudos.
Super!!!
டுபுக்ஸ்...
என்னா வில்லத்தனம் !
எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செஞ்சுட்டு, உங்களுக்கு சமைச்சும் போட்டுட்டு, குழந்தைங்களையும் பாத்துக்கிட்டு, விருந்தோம்பலையும் கவனிக்கறவங்களுக்கு இண்டு இணுக்கு மரியாதை இல்லாம, ஒரு மேசையைத் துடைச்சதையும், பாத்ரூமை தெற்கயும் வடக்கயுமா க்ளீன் பண்ணதையும், இப்படி நீட்டி முழக்கிறீர்..
ஹீம்...ம்! (உறுமல்)
(அடிக்கடி கேட்கும் டயலாக் என்பதால் ஃப்ளோவில் வந்து விட்டது..)
:))
(தங்கமணிகள்-உங்களதும் என்னதும்-படிக்காதிருக்க எம்பெருமான் அருள்புரிவானாக)
மிஸ்டர் மனம் திறந்து மதி..டுபுக்கைக் கேள்வி கேட்க உமக்க என்ன யோக்யதை இருக்கிறது ஓய்..?
:)
Post a Comment