Sunday, March 04, 2012

பாலிவுட் டான்ஸ்


பாலிவுட் டான்ஸ் என்றால் “டான்ஸ் ஆடறதுக்கு எதுக்கு பால விடணும்” என்று கேட்கக் கூடிய பத்மா சுப்ரமண்யம் சொசைட்டியில் வளர்ந்த பச்சை மண்ணு நான். எங்கள் டேன்ஸ் சொசைட்டியில் டேன்ஸ் இரண்டே வகைப்படும். ஒன்று தலையில் ராக்குடியும் நெத்திச்சூடியும் அணிந்து  நட்டுவாங்கம் ஜால்ரா சத்தோடு ஆடக் கூடிய பரதநாட்டியம், இன்னொன்று பத்து டார்ச் லைட்டை வெவ்வேறு ஆங்கிளில் வைத்து போட்டு போட்டு அணைத்து ஆடும் “டிஸ்கோ”.

சட்டை கொஞ்சம் பளபளவென்று சில்வர் லைனிங்கோடு இருந்தால் அது டிஸ்கோ சட்டை. இப்பேற்பட்ட சட்டை கிடைப்பதற்கு தவமாய் தவம் இருக்க வேண்டும். ஏகப்பட்ட இக்குகளுக்குப் பிறகு “பரவாயில்லை சார் அம்பி ராத்திரி இருட்டுல ட்யூஷன்லாம் போயிட்டு வரும் போது  லாரிகாரன் லைட்டு வெளிச்சத்துல சட்டை பளபளன்னு தெரியும், வாங்கிக்குடுங்கோ ஒரு சேஃப்டியா இருக்கும்”ன்னு கடைக்காரர் சட்டையின் பாதுகாப்பு பலன்களை விவரித்து ரெக்கமெண்டேஷன் செய்யும் போது அத்திப் பூத்தாற்ப்போல பள பள டிஸ்கோ சட்டை கிடைக்கும். அதை போட்டுக் கொள்ளும் நன்னாளில் ரொம்ப காத்திருந்து, லேசாய் இருட்டிக் கொண்டு வரும் ஆறு ஏழு மணிக்கு படக்கென்று எல்லா லைட்டை அணைத்துவிட்டு கண்ணாடியை பார்த்துக் கொண்டே டார்ச் லைட்டை மினுக்கி “ஐ ஆம் அ டிஸ்கோ டான்சர்” என்று  ஒரு ஆட்டம் போட்டால் “விளக்கேத்துற நேரத்துல லைட்ட அணைக்கிறது பாரு பிரம்மஹத்தி” என்று நட்டுவாங்கம் ஆட்டமேட்டிக்காய் வரும்.

பக்கத்து வீட்டில் குண்டு டீச்சர் பரதநாடியம் சொல்லிக்குடுப்பதை பார்த்த எஃபெக்டோ இல்லை டிஸ்கோ டான்சில் தான் ஜோடியோடு ஆடமுடியும் என்ற கூட்டுறவு தத்துவத்தினாலோ பரதநாட்டியத்தை விட டிஸ்கோ தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். மிருதங்கம் வாசிக்கிற எல்லா பாட்டும் பரதநாட்டியப் பாட்டு, மற்றவை எல்லாம் டிஸ்கோ பாட்டு என்ற எளிமையான கோட்பாடு எங்கள் டேன்ஸ் சொசைட்டியில். ஹிந்தி பாடலாயிருந்தால் ஷெனாய் தான் க்ரைட்டீரியா. ஷெனாய் வாசிக்காத பாடல்கள் டிஸ்கோ ரகத்தில் அடங்கும். குர்பானி படத்தில் வரும் லைலா ஓ லைலா பாட்டெல்லாம் top of the range பாடல். தெரு முக்கு டீ கடையில் இந்தப் பாட்டு போட்டால் நாபிக் கமலத்திலேர்ந்து ஒரு டேன்ஸ் வந்து குலுக் குலுக் குலுக்ன்னு மீசிக் குடுத்துக் கொண்டு வீட்டில் லைட்டை போட்டு போட்டு அணைத்து, பீஸ் போய் தெருவில் நிறைய வீட்டில் அன்றைக்கு வாரந்திர மின்சார விடுமுறை நாளாகிவிடும். இந்த வயதில் இங்கிலீஷ் பாட்டு ரொம்ப கேட்டதில்லை. ஏதாவது குண்ஸா இங்கிலீஸ் பாட்டு இருக்காண்ணேன்னு ஆடியோ கடையில் கேட்டால் “ஏண்டா ஏ படம் பார்க்கிற வயசாடா இது....வீட்டுல சொல்லட்டுமாடா”என்று பாட்டு இல்லை என்பதை விவரமாய் சமாளிப்பார்கள். இருந்தாலும் சின்ன வயதில் தெருவில் ஒருமுறை ஒரு பெண்ணுடன் ஜோடி சேர்ந்து ஆடி டிஸ்கோ டான்ஸராய் அரேங்கேற்றம் ஆகியிருக்கிறது.ஆனால் அதுவே முதலும் கடைசியுமாய் ஆகிவிட்டது என்பது தான் எனது தீராத சோகம்.

இந்த டேன்ஸ் இருக்கே டேன்ஸ், அது இதயம் பட முரளியோட காதல் மாதிரி. மனசுக்குள் தலைவிரித்து தாண்டவமாடும். ஆனால் ஆடும் போது இந்த ஸ்டெப்பு இருக்கே ஸ்டெப்பு அது தான் பல்லுக்கிடையில் மாட்டிக் கொண்ட பக்கோடா தூள் மாதிரி கொஞ்சம் வராது. அதையும் தாண்டி வரும் ஒன்னே முக்கால் ஸ்டெப்பும் மைக்கேல் ஜாக்சன் ரேஞ்சுக்கு ஆடுவதாய் நமக்கு மமதையைக் குடுக்கும்.இந்த மாயையில் சிக்கி சில பேர் தெருவில் ஆடி, அதைப் பார்த்து தெருவே ஆடி,அமுக்கிப் போட்டு சாவிக் கொத்தை கையில் கொடுத்து காக்காவலிப்பு டிரீட்மெண்ட் நடந்த கதையும் உண்டு என்பதால் எனது முதல் டிஸ்கோ அரங்கேற்றத்துக்குப் பிறகு நான் வெறும் பாத்ரூம் டான்சராகவே செட்டில் ஆகிவிட்டேன். இருந்தாலும் “என்னடா டேன்ஸ் ஆடற...  டிஸ்கோன்னா எப்படி ஆடனும்... நல்ல கைய கால ஒடிடா இடுப்ப வெட்டுடா”ன்னு சண்டியர் மாதிரி சவுண்டு விட்டதிற்கு குறைச்சலே இல்லை. விட்ட சவுண்டில் என்னை காலேஜில் மைக்கேல் ஜாக்சன் மைத்துனர் பையன் என்று நினைத்து, பஸ் டே அன்றைக்கு எங்க ஊரில் முக்கியமான ஒரு இடத்தில் பஸ்ஸை நிப்பாட்டி என்னை ஆட வைத்து, “உங்க பையன் காலேஜில ஓகோன்னு படிக்கிறான்”ன்னு வீட்டுக்கு ரிப்போர்ட் போய் - விடுங்க  “மயிலப் பிடிச்சி காலை உடைச்சி ஆடச் சொல்லுகிற உலகம்”ன்னு சின்னத்தம்பில பிரபு சும்மாவா ஃபீலிங்க்ஸாய் பாடி இருக்கிறார்.

ஆனாலும் இந்த டேன்ஸ் தாகம் எனக்கு ஒயவே இல்லை. யாருமே இல்லா மலை முகடுகளைக்குப் பார்க்கும் போதெல்லாம் கண்ணை உருட்டிக் கொண்டு தலயின் “நாத விநோதங்கள்” சலங்கை ஒலி பாட்டுக்கு ஆடியிருக்கலாமே, குண்டலமும், சிகப்பு கலர் ட்ரெஸும், ஜெயப்பிரதாவும் இல்லையே என்று வருத்தம் மேலோங்கும். சில சமயம் வீட்டிற்கு வரும் கல்யாணப் பத்திரிகையை ஓப்பன் பண்ணும் போதெல்லாம் சலங்கை ஒலி டேன்ஸ் இன்விடேஷன் சீன் இளையராஜா பி.ஜி.எம் கேட்கும். இருக்கட்டும்டா சுனா பானா ஒரு நாள் தெறமையக் காட்டுவோம்டான்னு நினைத்துக் கொள்வேன். சமீபத்தில் இங்கே யூ.கேவில் மேடையில் டேன்ஸ் ஆடும் வாய்ப்பு ஒன்று வாசல் வழியாக போக, கப்புன்னு பிடித்துக் கொண்டு மேடையேறி தெறமையைக் காட்டியதில் “அடேங்கப்பா அடி குடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்ன்னா..” என்று ஊர் ஏற்றிவிட்டுவிட்டது. போன வாரம் பனி பெய்த பொழுதில் ஒதுங்கிய இடத்தில் “டேன்ஸ் அக்காடமி” என்று போர்ட் போட்டிருந்தார்கள். அக்காடமின்னா ஹீட்டர் போட்டிருப்பார்களே என்று உள்ளே போனதில் ஜோடி ஜோடியாய் டேன்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். டேன்ஸ் ஆடினால் உடம்பிற்கும் மனதிற்கும் ரொம்ப நல்லது என்று கொப்பெல்லோ என்ற இத்தாலியக் கலைஞர் சொல்லியிருப்பதாய் அங்கே இருந்த அழகான அம்மணி எடுத்துச் சொன்னதால் எனக்குள் இருந்த மைக்கேல் ஜாக்சன் மீண்டும் முழித்துக் கொண்டு  “பேசாம ஜிம்முக்கு பதிலா இனிமே நான் டேன்ஸ் சேரலாம்னு இருக்கேன் உடம்புக்கும் மனதுக்கும் ரொம்ப நல்லதாம் ஆனந்த விகடன்லயும் சொல்லியிருக்காங்களாம்”ன்னு வீட்டில் அப்ளிகேஷன் போட்டிருக்கிறேன். காதில் போட்டுக் கொள்ள கடுக்கனும் கையில் போட்டுக் கொள்ள நல்ல கிளவுசும் வாங்க வேண்டும். ஓம் மைக்கேல் ஜாக்சனாய நமக.

28 comments:

துளசி கோபால் said...

நல்லா ஆடுங்க.அப்புறம் அந்த 'அக்காட(ம்)மி' ஹால் கோணல்ன்னு சொல்லப்டாது:-))))))))))

கார்க்கிபவா said...

ஃப்ளூட்டோ, கிட்டாரோ க‌த்துக்க‌ போற‌ மாதிரி ஒரு ப‌திவு எழுதினீங்க‌ளே!! அதே சாய‌ல்ல‌ இருக்கு.. அதே மேட்ட‌ர்ன்னு கூட‌ சொல்ல‌லாம். அடிக்க‌டி எழுதாத‌தால‌ ம‌ன்னிச்சு விடுறோம் :)

Anonymous said...

eppdi varushathukku 3 post than podanumnu ethavathu venduthala.:(

Regulara(atleast monthly once)eluh\thunga

Isthri potti

Vidhya Chandrasekaran said...

:))

கூட யார் ஆடுவாங்கன்னு வீட்டம்மணி கேக்கலையா:))

ramachandranusha(உஷா) said...

தலைக்கு கலரு, ஜெல்லு இதை எல்லாம் விட்டு விட்டீங்களே :-)

கார்க்கிபவா said...

நான் மட்டும்தான் பையன் போலிருக்கே இங்கே.. தப்பான இடத்துக்கு வந்துட்டியேடா கார்க்கி

balutanjore said...

enna dubukku sir
naalu masam aache sir(better late than never)
at least maasa maasam ezhudungalen

Anonymous said...

Pleasant surprise to see a new post. Good one, as always :-) 'நட்டுவாங்கம் ஆட்டமேட்டிக்காய் வரும்' :-) Please write more often
Lakshmi

சேலம் தேவா said...

மைக்கேல்ஜாக்ஸன் இல்லாத குறையை தீர்க்கப்போகும் நடன "தானே" புயலே வருக.. வருக... :)

Lakshmi Narasimhan said...

பீ கேர்புல் .... என்னச் சொன்னேன் ;) ;)

Lakshmi Narasimhan said...

பீ கேர்புல் .... என்னச் சொன்னேன் ;) ;)

Anonymous said...

Welcome back Dubukku!!
Late aha vandhalum latest aha dhan vandhirukkel !!
Vaazhthukkal!!
Vikram balaji

Subhashini said...

ஆஹா ஒரு வழியா பதிவு போட்டுட்டாரு நம்ப தலை... கழக கண்மணிகளை காணோமே... ஒரு வேளை சங்கத்தை கலைசிட்டாங்களா...

Kavitha said...

Veettil dance aadinaangala illa anumathi kidachudha?

Anonymous said...

I hope you dance
I hope you dance

I hope you never fear those mountains in the distance
Never settle for the path of least resistance
I hope you dance
I hope you dance

I hope you never fear those mountains in the distance
Never settle for the path of least resistance

...
Promise me that you'll give faith a fighting chance
And when you get the choice to sit it out or dance
...
I hope you dance
I hope you dance

Lyrics from Lee Ann Womack

Take your wife to the dance class. I and Prax went for it at 32 and 35. Its never late. We are very happy we took the chance! Now that you have daughters stop calling it a "புனைவியல்" and make it real! I really hope you already attended your first class in first class fashion!

Ambika Rajesh said...

Me and my husband really enjoyed it.

Keep up your good work

BW
Ambika

uthra said...

"தெறமையைக் காட்டியதில் “அடேங்கப்பா அடி குடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்ன்னா..” என்று ஊர் ஏற்றிவிட்டுவிட்டது."
ungaloda blog padikkarathula enakku nalla vaai vittu sirichi mnasu lesa aayidrathu. thanks and adikkadi eluthungo!

Dubukku said...

துளசி - யெக்கோவ் என்ன இப்படி சொல்லீட்டீங்க :)))

கார்க்கி - ஆமாங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி மன்னிசிடுங்க. எழுத்து டச் விட்டுப் போச்சில்லையா. //ப்பான இடத்துக்கு வந்துட்டியேடா கார்க்கி // ..யோவ் உங்க குஜ்ஜு தோழி நலமா? :

இஸ்திரி பொட்டி - அப்பிடி இல்லீங்கோவ் நடுவுல ஏதாவது சிக்கல் வந்துடுது:)) கண்டிப்பா அடிக்கடி எழுத முயற்சி செய்யறேங்க

வித்யா - கேக்கவே இல்லீங்க அவங்களே வந்து ஆடிட்டாங்க :)

ரா.உஷா - ஹூம் அதெல்லாம் அடுத்த டான்சுக்கு போட்டுக்கலாம்னு ப்ளான் :P

பாலு - வாங்க கண்டிப்பா அடிக்கடி எழுத முயற்சி செய்யறேங்க

லக்‌ஷ்மி - மிக்க நன்றி.கண்டிப்பா அடிக்கடி எழுத முயற்சி செய்யறேங்க

சேலம் தேவா - நீங்க தாங்க கரெக்டா வரவேற்பு குடுக்கறீங்க நன்றிண்ணே :)

லக்‌ஷ்மி நரசிம்மன் - சரிதான் கரெக்டா தான் சொல்லியிருக்கீங்க

விக்ரம் பாலாஜி - மிக்க நன்றி நண்பரே உங்கள் ஊக்குதலுக்கு

சுபாஷினி - ஹா ஹா என்னாது சங்கமா அப்டீன்னா?

பொயட்ரீ - ஒரு நடனக் கலைஞன் ஆடறத பார்த்தா அவங்களுக்கும் ஆட்டம் தானா வரும் தானே ...ஹி ஹீ அவங்களும் கூட ஆடினாங்க

Kookaburra - இங்க்லிபீஸ் கவிதையெல்லாம் கலக்கறீங்க போங்க. இதெல்லாம் அப்படியே வர்றது தான் இல்ல. வூட்டுல பரதநாட்டியம் அல்ரெடி ஆடுவாங்க. But seriously I am considering this bollywood dance class. I know it would be fun (either for me or for the ones who watch me :P )

அம்பிகா - உங்களுக்கும் ராஜேஷ்க்கும் மிக்க நன்றிங்கோவ் உங்க கமெண்டுக்கு

உத்தரா - very glad that you enjoyed reading the post. மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

Anonymous said...

Andha dance superappu ... Thattu thattu thattu nu thattinome ... Neenga kooda payment ellam correcta .... Andha dance link podalaya?????

Jokes apart, that was a very good performance you guys pa!!!!

Lak

Anonymous said...

அய்யோ Lee Ann Womack ஆட்டோவுல ஆள் அனுப்பி அடிச்சிரப் போறாங்க என்னைய ... அவங்க கவிதை - நான் சும்மா situationக்கு எடுத்து விட்டேன் :) Glad to know you will be dancing for sure! :)

Madhu Ramanujam said...

உங்க குறும்படத்தை போலவே உங்க டான்சையும் ஒரு படம் புடிச்சு யு டியுபில் போடுங்க. நாங்களும் கொஞ்சம் பாது சந்தொஷப்படுறோம். உங்க பதிவை படிச்ச உடனேயே மனசுக்குள்ள தமிழ் சினிமாவுக்கு அடுத்த பிரபுதேவா கிடைச்சிட்ட மாதிரி ஒரு தெம்பு வருது....உங்க ஆட்டத்தை பாக்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே நண்பா...ஆடு நண்பா ஆடு..

Ashwin said...

Appo neenga than aduththa prabudeva-va :P - Ipo avar edam gaaliya irukaame?

Anonymous said...

Haiya!! Evvlo nalaacchu unga post parthu. Adhuvum Bollywood dance patthi.... Sema ragalai pongo!! Jokes apart dance is a great way of excercising. Pesama Thangamaniya azhaicchindu poi Jodi dance - tango mathiri - aada vendiyathuthan. Ini MGR paatai ippadi padalam: 2aada piranthane aadi va...."
Revolver Rita

Vetirmagal said...

laugh riot! :-)))))))))))))

Anonymous said...

very nice! i was reminded of our banglore days where during vinaga chathurthi day is celebrated with stage, mike set, then as u ve mentioned colour " disco " lights.the people who dance for a popular bolly wood number become the instant hero of the locality. very nice post! sasikala sugavanam.

Anonymous said...

Pls post a video of your performance..evvalo thiramai ungalukulle olinjirukku!!

Raj said...

Nice. keep up the good work.

Saraswathi said...

Hahaha ROFL
Adi kudutha kai pullaike line was ultimate

Post a Comment

Related Posts